இஸ்லாம்
 முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி!
 இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் 
சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த 
செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம்
 வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் 
பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.
முஸ்லிம்
 நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் 
அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் இயக்கங்கள், 
அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து
 கிடக்கிறார்கள்.
அறிஞர்களிடையே 
நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் 
பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன. தங்கள் தங்கள் அணிகளை 
ஒவ்வொருவரும் வளர்ப்பதால் சர்வதேச அளவில் முஸ்லிம்களை ஒன்றினைக்க யாரும் 
முனைப்போடு முற்படவில்லை. இதை யாரும் இன்றளவும் உரத்து ஒலிக்கவில்லை. 
அல்குர்ஆனோடு ஐக்கியமாவதே உண்மை 
ஒற்றுமை! மாறாக
 வேண்டும்போது கூடுவதும் வேண்டாதபோது கலைவதும் உண்மை ஒற்றுமையல்ல. இதை 
குர்ஆன் ஹதீஸ் வழி நிற்போர் மற்றவர்களுக்கு உணர்த்தக் 
கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்களும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றும் 
தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். 
இஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் 
உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் 
கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.
தவ்ஹீத் குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு 
இல்லாத வெற்று வேதாந்தம் என்று மாயத்தோற்றம் தமிழகத்தில் எப்படியோ
 தோற்றுவிக்கப்பட்டு
 விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பர தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் 
கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று 
தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை 
குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இஸ்லாமிய 
தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாய
 முழுமைக்கும் எல்லாக் காலங்களிலும் பொதுவுடமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை 
நெறியாகும் என்பதை மிக அழுத்தமாக கோடிட்டு காட்ட விழைகிறோம்.
தவ்ஹீத்
 இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய 
பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு 
கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி
 பிரித்துக்காட்ட இட்டுக்கொள்ளும் பிரிவுப்பெயருமல்ல. சீரிய 
சிந்தைனயாளர்கள் கூட தங்களை மற்றவர்களிடமிருந்து தங்களை தவ்ஹீத்வாதிகள் 
என்றே இனம் பிரித்து
 காட்டினார்கள்.
தங்களை அஹ்லுஸ்ஸுன்னத்
 வல் ஜமாஅத்தார்களிடமிருந்து பிரித்துக்காட்ட தவ்ஹீத ஜமாஅத், தவ்ஹீத் 
இயக்கம் என்று பெயர் பொறித்துக்கொண்டார்கள். அதில் பெருமை பட்டும் 
கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று இவர்கள் பங்கிற்கு 
இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவை தோற்றுவித்து விட்டார்கள்.
பத்து நூறு, ஆயிரம்
 என்றோ, பத்தாயிரம் என்றோ அதைவிட கூடுதலாகவோ கூட்டம் கூடியவுடன் 
குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ இயக்கங்கள் காணவோ
 அமைப்புகள் ஏற்படுத்தவோ தவ்ஹீத் கொள்கை அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. 
மாறாக ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித 
சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்; ஒன்றுபடுத்தவும் வேண்டும்
 என்ற உன்னத உயர் இலட்சியத்திற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடையே 
ஓரிறைக் கொள்கை.
பல தெய்வ வழிகேடுகளை வழிபாடாகவும், ஒழுக்க கேடுகள் அனைத்தையும் உயர் 
நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதை பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்கள், 
குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக்கொண்டும் அனைத்து அநாகரிங்களையும் 
நன்மைகளாகவும் புண்ணியங்களாகவும் விலங்கினும் கீழாய் ஒழுங்கீனங்களில் 
வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய
 வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை!
இவ்வற்புதம்
 இறுதி வேதம் யாருக்கருளப்பட்டதோ அந்த இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 
காலத்தில் 23 ஆண்டுகளில் அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் நிகழ்வு 
ஏறத்தாழ கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்தப் பேருண்மை இன்றைய 
பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு
 அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே
 நேரத்தில் ஜீரணிப்பதும் மிக
 கஷ்டமாயிருக்கிறது ஏன்?
பிரிந்து 
வாழ்வதிலும், பிளவு படுவதிலும் இன்புறும் இன்றைய பெயர்தாங்கி 
முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை 
மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை 
மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் 
மலைப்பாயிருக்கிறது.
தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதேனும் 
விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறுமுன் அல்லது 
நிறைவுற்றதும் பிரிந்துவிடுவதும் ஒற்றுமையாகுமா? இஸ்லாலிய அடிப்படையில் 
எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா? 
ஒருக்காலும் ஏற்க முடியாது.
பிரிவுகளும் பிளவுபட்ட குரூப்பிஸ போக்குகளும் எப்படி ஒற்றுமையாக
 முடியும்? ஒருக்காலும் ஒற்றுமாயாகாது. 
எனவே
 அன்புச் சகோதர சகோதரிகள் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் 
கண்ணோட்டத்துடன் சிந்தித்து பிரிவினை அணி, குழு மனப்பான்மையிலிருந்து 
தங்களை விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் 
ஈடுபட்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய
 சமுதாயம் மலர ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 
அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.
A.N.K
A.N.K
- kauser salaudeen kauser 
 
