Sunday, July 21, 2019

ஹோர்முஸ் நீரிணையில் போர் மேகங்கள்

by 

  • படைப்பல ஆற்றலை பரீட்சிக்கும் அமெரிக்காவும் ஈரானும்
  • எரிபொருள் விநியோகம் பற்றிய கரிசனையில் உலக நாடுகள்
Tanker Attacked.jpeg
ஏதோவொரு மூலையில் போர் மேகங்கள் சூழுமாயின், உலகம் முழுவதும் அச்சம் ஏற்படுவது சமகால அரசியல், பொருளாதார உலகின் துரதிருஷ்டம் எனலாம்.
இன்று ஓமானையும், ஈரானையும் அண்டிய ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக சூழும் போர் மேகங்களால், உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் முடங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலகின் பல பாகங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் எண்ணெய்த் தாங்கிகள் கடந்து செல்லும் கடற்பரப்பு. அங்கு தாங்கிகள் தாக்கப்படுவதும், ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் வழமையான விடயமாக மாறியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வல்லரசு நாடுகளின் இராணுவ ஆற்றல்களை சோதிக்கும் பலப்பரீட்சைக் களமாக மாறியது, இன்று நேற்றல்ல. அதன் வரலாறு ஈரானிய, ஈராக்கிய யுத்தம் வரை நீள்கிறது.
கடந்த மே மாதம் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. ஜூன் மாதம் இரு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, பிரச்சனைகள் தீவிரம் பெற்றிருந்தன.
இன்று தமது போர்க்கப்பலை ஈரான் தடுத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது. அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரானும், ஈரானின் உளவு விமானத்தை அமெரிக்காவும் சுட்டுவீழ்த்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையையும், ஈரானிய வான்பரப்பையும் தாண்டி, ஊடக பிரசார யுத்தமாகப் பரிணமித்துள்ள நெருக்கடி. இதன் ஆழத்தில் மறைந்துள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு கடந்த காலம் பற்றிய புரிந்துணர்வு அவசியம்.
Straight-of-Hormuz
ஹோர்முஸ் நீரிணை: பட உதவி பீபீசி
உன் எதிரியிடம் தோல்வி கண்டாயா, எதிரியைக் குற்றவாளியாக சித்தரித்து விடு என்ற அரசியல் கோட்பாட்டை ஹேர்முஸ் நீரிணைப் பிரச்சனையில் பொருத்திப் பார்க்க முடியும்;. இது ஈரான் – ஈராக் போர்க் காலத்தில் இருந்து தொடரும் கதை.
1980களில் இரு நாடுகளும் கடும்போரில் ஈடுபட்டிருந்த சமயம், ஈரானின் கை மேலோங்கியிருந்தது. இதன்போது, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களைத் தாக்குவதைத் தவிர, ஈராக்கிற்கு வேறு வழியிருக்கவில்லை.
ஏவுகணைகள் மூலம் ஈரானிய கப்பல்களை ஈராக் தாக்கிய சமயத்தில், ஈரான் பதிலடி கொடுத்தது. இந்த யுத்தத்தில் அயல்நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் தப்பவில்லை. அயல்நாடுகளை பிரச்சனைக்குள் ஈர்ப்பதே ஈராக்கின் தேவையாக இருந்தது.
ஹோர்முஸ் நீரிணை போர்க்களமாக மாறியதால், அங்கு பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கரிசனை எழுந்தது. இதனைக் காரணம் காட்டி, அமெரிக்கா வளைகுடா கடலுக்கு போர்க் கப்பல்களை அனுப்பியது.
1987ஆம் ஆண்டு மே மாதம். அமெரிக்காவிற்கு சொந்தமான USS Stark என்ற போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியது. இந்தத் தாக்குதல் சூட்சுமமானது. இதனை நடத்தியது ஈரான் அல்ல. ஈராக் தான். ஈரான் மீது பழியைப் போடுவது ஈராக்கின் நோக்கம்.
USS Stark
1987ஆம் ஆண்டு ரகசிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட USS Stark கப்பல்
ஈரான் மீது பழி விழுந்ததோ இல்லையோ, தமது கப்பல் தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்கள் அனுப்பியது. அங்கு படைகள் குவிக்கப்பட்டன. ஈரானிய – அமெரிக்க முறுகல் நிலை தீவிரம் பெற்றது.
ஒரு கட்டத்தில், மேற்குலக சக்திகள் அமெரிக்காவிற்கு வலுவான முறையில் துணை நிற்க, படைவலுச் சமநிலை மாற்றம் கண்டது. தனித்து விடப்பட்ட ஈரான் பின்வாங்கியது. இதன் காரணமாக,  தாங்கிகளின் யுத்தம் தவிர்க்கப்பட்டது.
அன்று ஈராக் செய்ததை இன்று அமெரிக்கா செய்கிறது. ஹோர்முஸ் கடலில் நிகழும் தாங்கிகளின் சண்டையில் ஈரானை வில்லனாக சித்தரித்து, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறுவது அமெரிக்காவின் நோக்கம்.
இதற்குரிய காரணம் வேறொன்றும் அல்ல. உலகின் பலம்பொருந்திய நாடுகள் ஒன்றுகூடி உருவாக்கிய உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகியதால் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப டொனல்ட் ட்ரம்ப் எண்ணுகிறார்.
இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி ஆற்றலுடன் தொடர்புடையதாகும். இந்நாடு அணுவாயுதங்களை உருவாக்குகிறது என்று டொனல்ட் ட்ரம்ப் பூச்சாண்டி காட்டியதால், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஆறு நாடுகள் உடன்படிககையை எட்டியிருந்தன.
இதில் அமெரிக்கா, ஈரான் தவிர,  சீனா,  பிரான்ஸ்,  ரஷ்யா,  பிரிட்டன்,  ஜெர்மன் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கை கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இதன் பிரகாரம், ஈரான் யுரேனிய செறிவாக்கலை மட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பதிலாக, உலக நாடுகள் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்த வேண்டும் என்பது உடன்படிக்கையின் பிரதான ஏற்பாடு.
அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அளவிற்கு அல்லாமல், நாட்டுக்குத் தேவையான மின்வலுவை உற்பத்தி செய்யும் அளவிற்கு மாத்திரம் யுரேனியத்தை செறிவாக்க ஈரான் இணங்கியது. அத்துடன்,  இணக்கப்பாட்டை மதித்து நடந்தது.
பராக் ஒபாமா கஷ்டப்பட்டு உருவாக்கிய உடன்படிக்கையில் இருந்து டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். இந்த உடன்படிக்கை மிகவும் மோசமானது என்பதைத் தவிர வேறொரு விளக்கத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.
tirandeal-s
டொனல்ட் ட்ரம்பின் தீர்மானத்தை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நட்பு நாடுகள் வலுவாக ஆட்சேபித்தன. உலக நாடுகள் கண்டித்தன. இது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் உரிய பதிலை அளிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்தது. உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதலான யுரேனியத்தை செறிவாக்கியதாக ஈரானிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ராஜதந்திர தோல்வி.
இன்று ஹோர்முஸ் நீரிணையில் பதற்றநிலையை ஏற்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முடக்கப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கி, இதற்கு ஈரான் மீது பழிபோடுவது தான் அமெரிக்காவின் ராஜதந்திரம்.
இந்த மூலோபாயம் பிரச்சனைக்குரியது. அன்று அமெரிக்க போர்க் கப்பலை ஈராக் தாக்கியபோது, ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் அவ்வளவு படைப்பல ஆற்றல்கள் இருக்கவில்லை.
ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கையில் நிலைமை அபாயகரமானதாக உள்ளது. இரு தரப்புக்களும் படைப்பல ஆற்றல்களை வலுப்படுத்தியுள்ளன. கண்ணிவெடிகளையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் பயன்படுத்த முடியும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இது தவிர, இந்த நெருக்கடி கடலைத் தாண்டி ஆகாயம் நோக்கி விஸ்தாரம் பெற்றிருப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளும் கூறுவதை அவதானிக்க முடியும்.
ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருள் தாங்கிக் கப்பல்களின் பயணத்திற்கு ஆபத்து என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என்றால், அந்த நோக்கம் நிறைவேறி வருவதை கள நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இங்கு பிரிட்டனுக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. ஏனைய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்குகிறது.
இந்தப் பிரச்சனைக்குள் பிரிட்டனும் ஈர்க்கப்பட்டுள்ளது. கிப்ரல்டார் நீரிணையில் ஈரானுக்கு சொந்தமான கப்பலொன்றை வழிமறித்துத் தடுத்து வைத்துள்ளதாக இம்மாத முற்பகுதியில் பிரிட்டன் அறிவித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் என்ற தாங்கிக் கப்பலை கையகப்படுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், கப்பலுக்கு நேர்ந்த கதி தெளிவாகத் தெரியவில்லை.
இருந்தபோதிலும், தனது முயற்சியில் இருந்து ஈரான் பின்வாங்க வேண்டும் என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை நோக்கி மூன்றாவது போர்க் கப்பலையும் அனுப்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.
பிரச்சனையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஊடகங்கள் வாயிலாக வார்த்தைப் போரை முன்னெடுத்துச் சென்றபோதிலும்,  பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய தெளிவான முயற்சிகள் எதுவும் தெரிவதாக இல்லை.
இருந்தாலும், இந்த வார்த்தைப் போர் தாங்கிகளின் யுத்தமாக பரிணமிக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருக்கிறது. ஈரானை ஓரங்கட்ட வேண்டுமென டொனல்ட் ட்ரம்ப் நினைத்தாலும், ஹோர்முஸ் நீரிணை போர்க்களமாவதை சர்வதேசம் விரும்பாது.
கடந்த காலத்தில், பெரும் கூட்டணி அமைத்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகளைத் திசை திருப்பி விடுவதில் அமெரிக்கா வெற்றி கண்டதென்னவோ உண்மையே. இன்று அதனை முற்றுமுழுதாக சாத்தியப்படுத்துவதில் ட்ரம்ப்பிற்கு தோல்வியே.
இதற்கு காரணங்கள். இந்த மனிதர் கூட்டாளி நாடுகளை சரியாக மதிப்பதில்லை என்பதும்  சர்வதேச சமூகத்தின் விருப்பத்திற்கு புறம்பாக ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அவர் விலகியதும் முதன்மைக் காரணங்கள்.
இது தவிர, தற்போதைய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்பதை நேட்டோ அறியும். இதன்மூலம், அமெரிக்காவிற்கு அன்றி ஏனைய நாடுகளுக்கு நஷ்டம் என்பதும் நேட்டோவிற்குத் தெரியும்.
எனவே, ஹோர்முஸ் நீரிணையில் போர் மேகங்கள் சூழ்வது போன்ற தோற்றம் தெரிந்தாலும், போரின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்களும் அறிந்தே வைத்திருக்கின்றன.
இத்தகைய பின்புலத்தில், போர் நிகழ்வதற்குரிய சகல வாய்ப்புக்களும் உள்ளபோதிலும், நிகழும் என்று நிச்சயமாகக் கூற முடியாதொரு நிலைமையே இருக்கிறது எனலாம்.
(2019ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரையின் இணைய வடிவம்)

Saturday, June 22, 2019

ஈரானை இலக்கு வைத்தல் : பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை


ஓமான் வளைகுடா. உலகம் முழுவதும் எரிபொருளை விநியோகிக்கும் கடற்பாதை. அங்குள்ளகுறுகலான நீரிணை. இரு கப்பல்களில் திடீரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்பல்கள்தீப்பற்றி எரிகின்றன.
ஒரு கப்பலில் 75,000 தொன் எரிபொருள். மற்றைய கப்பலில் 25,000 தொன் எரிபொருள். கடற்கலங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் மாலுமிகள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஒருகப்பல் கைவிடப்படுகிறது.
கடந்த வியாழனன்று இடம்பெற்ற சம்பவம். இது தனியொரு சம்பவம் அல்ல. கடந்த மே மாதம்12ஆம் திகதி நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சி.
அன்றைய தினம் நான்கு கப்பல்கள் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச்சம்பவங்களால் கப்பல்கள் பெரும் சேதம் அடைந்திருந்தன.
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கின் பாதுகாப்பு பற்றி கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ மோதல்கள் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதற்குக் காரணம் உண்டு. பிந்திய தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்காசாடுவதும், அதனை ஈரான் மறுப்பதும் முதன்மைக் காரணம்.
கப்பல்கள் தாக்கப்பட்டிருந்தால், தாக்கியது யார் என்பதை ஆராய வேண்டும். தீர்க்கமானஆதாரங்களின் அடிப்படையில் தாக்கியவரை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, ஈரானே கப்பல்களை நாசமாக்கியது என்பதை புலனாய்வுத் தகவல்கள்உறுதிப்படுத்தியிருப்பதாக  அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோசெய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப், அமெரிக்காவின்கற்பனைக்கு அமைய சந்தேகம் கூட எழ மாட்டாதெனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், பதிலளிப்புகளுக்கும் காரணமாக சம்பவங்கள் இருவிடயங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகம் முழுவதற்குமான எரிபொருள் விநியோகம் என்பது முதல் விடயம். ஈரான் மீதுஅமெரிக்கா கொண்டுள்ள பகைமை என்பது இரண்டாவது விடயம்.
பாரசீக வளைகுடா என்பது உலகில் ஆகக்கூடுதலான எரிபொருட்கள் கப்பலில் ஏற்றிச்செல்லப்படும் கடற்பாதையொன்றிற்கு அருகில் உள்ளதாகும்.
Map
ஓமான் வளைகுடாவும், Hormuz நீரிணையும் (பட உதவி:BBC)
இந்தக் கடற்பாதையானது அரசியல் அடிப்படையில் மத்திய கிழக்கை இரண்டாக பிளவுபடுத்தும்கோடாகவும் திகழ்கிறது.
ஒருபுறத்தில் ஈரான் இருக்கிறது. மறுபுறத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகள் காணப்படுகின்றன.
இரு தரப்புக்களும் தமக்கு சார்பான படைகளைப் பயன்படுத்தி, லெபனான், ஈராக், சிரியா, பஹ்ரேன் முதலான நாடுகளில் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன.
யெமனில் ஈரானுக்கு சார்பான குழுவொன்றை தோற்கடிப்பதற்காக சவூதி அரேபியப்படைகளும், எமிரேட்ஸ் படைகளும் நான்காண்டுகளாக நேரடியாக களத்தில் போரிடுகின்றன.
இந்த சண்டைக்கு மத்தியில், மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகஅமெரிக்காவும் படைகளைக் குவித்திருக்கிறது.
எனவே, வேறு நாடுகளது கொடிகள்பறக்கும் கப்பல்களை ஈரானே தாக்கியதாக அமெரிக்காமேலோட்டமாகக் கூறுவதன் தாத்பர்யத்தை ஆராய வேண்டும்.
மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்பது அமெரிக்காவின் அவா. ஆதற்காகஈரானை ஓரங்கட்டுதல் என்ற மூலோபாயத்தை அமெரிக்கா அனுசரிக்கிறது.
அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கைகள் சகல விதங்களிலும் தோல்வி கண்டுள்ளன. இந்தத் தோல்வியைப் பல வடிவங்களில் வெளிப்படையாகக் காணலாம்.
இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சனையில் தீர்வு என்பது எட்டாக்கனி. இன்று இஸ்ரேலில்வலுவான அரசாங்கத்தை அமைப்பது கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது.
சிரியாவில் சிவில் யுத்தம். யெமனில் பெரும் மனிதப் பேரவலம். ஈராக்கில் குழுக்களுக்குஇடையிலான சண்டை. புpராந்தியம் முழுவதும் ஐஎஸ் முதலான இயக்கங்களின் ஆதிக்கம்.
இத்தகைய சூழ்நிலையில், ஈரானை வம்புக்கு இழுத்து, அதனை ஓரங்கட்டுவதன் மூலம், தாம்வெற்றி பெற்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது அமெரிக்காவின் மூலோபாயமாகக்காணப்படுகிறது.
இந்த நடைமுறையில், ஈரானிய அரசாங்கத்தை எப்படியாவது ஆட்சிபீடத்தில் இருந்து கவிழ்த்துவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி திட்டம் போட்டார்.
இது மூன்று அம்சங்களைக் கொண்டது.
  1. ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்துவிலகுதல்,
  2. பொருளாதாரத் தடைகளை விதித்தல்,
  3. ஈரானுக்கு எதிரான கூட்டணியைஉருவாக்குதல்.
அணு உடன்படிக்கை முக்கியமானது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளன.
Iran Nuclear Deal
ஈரானிய அணு உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட நாடுகள்

இதன் கீழ், ஈரான் சர்ச்சைக்குரிய அணு உற்பத்தி செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பதிலுக்குஉலக நாடுகள் ஈரான் மீதான தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். .
இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு டொனல்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தையும் அறிவித்தார்.
அணுவாயுதங்கள் என்ற அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அமெரிக்காவை எவரும் பணயக்கைதியாக்க முடியாது என்பது ட்ரம்பின் விளக்கமாக இருந்தது.
உலக வல்லரசுகள் ஒன்றுகூடி உருவாக்கிய உடன்படிக்கை. அதில் இருந்து விலகுவதற்குஅமெரிக்க ஜனாதிபதியால் தர்க்க ரீதியான காரணமொன்றைக் கூற முடியவில்லை.
இதன்மூலம், சர்வதேச அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்துவது அமெரிக்க ஜனாதிபதியின்நோக்கம். தனிமைப்படுத்தினால் ஈரானுக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படும். ஆட்சியைக்கவிழ்க்கலாமென அவர் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், அவரது கணக்கு தப்புக் கணக்காகியது. அணு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவிலகியதால் ஈரான் அஞ்சவில்லை. உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் அதனைக்கைவிட விரும்பவில்லை.
அணு உடன்படிக்கையைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகள் கோரின. ஈரானுடன் பிரச்சனை இருந்தால், அதனைஅமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறு கோரின. இவற்றில் நான்கு நாடுகள்பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தவர்கள்.
மறுபுறத்தில், அணு உடன்படிக்கையை மதித்தன் மூலம் சர்வதேச கடப்பாடுகள் மீதானவிசவாசத்தை ஈரான் வெளிப்படுத்தியது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றி, அதில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் வெற்றி பெற்றது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால், ஈரானியபொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஏனைய நாடுகள் தொடர்ந்து ஈரானுடன்வர்த்தகம் செய்தன. ஈரானின் எரிபொருளை காசு கொடுத்து வாங்கின.
ஈரானுக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது அமெரிக்காவிற்கு சிரமமானதாகஇருக்கவில்லை. ஈரானிய மக்கள் பெரும்பாலும் ஷியா கோட்பாடுகளை அனுசரிப்பவர்கள். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகளின் எதேச்சாதிகார அதிகாரிகள்சுன்னத்துல் ஜமாஅத் பிரிவினர்.
சவூதி, எமிரேட்ஸ் கூட்டணியுடன் இஸ்லாமிய நாடுகளின் ஸ்தாபனத்தை இணைத்துஈரானுக்கு எதிராக திருப்ப முனைந்தார், ட்ரம்ப். இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தையும்இணைத்துக் கொள்ளும் வகையில் காய்களை நகர்த்தினார்.
இந்த நகர்வுகளால் ஈரானிய மக்களை அச்சுறுத்த முடியவில்லை. மாறாக, இறைமையுள்ளபாரசீக தேசத்தவர்களாக ஈரானிய மக்கள் ஒன்றுபட்டார்கள். அயல்நாடுகளில் இருந்துவிடுக்கப்படும் அச்சுறுத்தல் ஈரானிய மக்கள் மத்தியிலான பிளவுகளையும் நீக்கியது எனலாம்.
பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளதாகக் கூறிக்கொண்டு, 2003ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள்ஈராக்கை ஊடுருவியதன் விளைவுகளை ஈரானிய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, அந்நிய ஆக்கிரமிப்பிற்கு இடமளிக்கக்கூடாது என்ற எண்ணம் ஈரானியர்கள் மத்தியில்மேலோங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி இன்னொரு காரியத்தையும் செய்தார். தமது மக்களவையின் எதிர்ப்பைமீறி, சவூதி அரேபியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் நவீன ரக ஆயுதங்களைபெருமளவில் விற்பனை செய்தார். யெமன் யுத்தத்தில் ஈரானை தோல்வி காணச் செய்தல்அவரது தந்திரோபாயம்.
யெமனில், ஹவுத்தி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஈரானியப் படைகள்; உதவுகின்றன. சவூதி, எமிரேட்ஸ் படைகள் இணைந்து நடத்தும் தாக்குதலில், ஈரானின் மூக்கு உடைபட வேண்டும். இதன் மூலம், தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என ட்ரம்ப் நினைத்தார்.
ஆனால் நடந்தது வேறு. சுவூதி, எமிரேட்ஸ் படைகளுக்கு கிடைத்த ஆயுதங்கள் மூலம்கூடுதலாக பொது மக்களே கொல்லப்பட்டார்கள். யெமன் போர்க்களமாக மாறி, அங்கு பசியும்பட்டினியும் தாண்டவமாடும் நிலை தோன்றியது. இதற்கு அமெரிக்காவே காரணம் என்றஎண்ணம் வலுப்பெற்றது.
A Picture and its Story: Girl survives air strike that killed her family
யெமன் தலைநகரில் சவூதி படைகளின் தாக்குதலால் விளைந்த பேரழிவுகள்

ஈரானிக்கு எதிரான துப்பாக்கி ராஜதந்திரத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்காஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. எனவே, இன்னொரு வழியில் ஈரானைத்தனிமைப்படுத்தக்கூடிய வழியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்பிற்கு எழுந்திருக்கலாம்.
இந்த நிர்ப்பந்தமே கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது பழிபோடும் படலமாகமாறியிருக்கிறது. ஈரானைக் குற்றவாளியாக நிரூபித்து விட்டால், உலக அளவிலானஎரிபொருள் விநியோகத்தை முடக்கிய தேசமாக முத்திரை குத்தி விடலாம் என்பது ட்ரம்பின்எண்ணம்.
இந்தக் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டுமாயின் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில்பயனில்லை. மாறாக தகுந்த ஆதாரங்களுடன் ஈரான் குற்றவாளி என்பதை அமெரிக்க ஜனாதிபதிநிரூபிக்க வேண்டும்.
எப்படியென்றால், பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கருதி ஈராக்கிய மண்ணைஆக்கிரமித்த பின்னர், அங்கு எந்தவொரு ஆயுதத்ததையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப்போல. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் மத்தியில் தார்மீக குற்றவாளியாக நின்றதைப்போலவேனும் நிரூபிக்கலாம்.
(2019ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரையின் இணைய வடிவம்)

Wednesday, March 27, 2019

වසන්තයේ උදාව සමරන පර්සියානු නව වසර නව්රුස්

NAWRUZ 
Celebrating the Spring


පසුගිය මාර්තු 21 වැනි දා සුපුරුදු ලෙස පාර්සි ජාතිකයෝ ඔවුන්ගේ නව වසර උත්සවශ්‍රීයෙන් සැමරුවා. පාර්සි භාෂාව කතාකරන සහ පාර්සි සංස්කෘතියට සම්බන්ධ ජන කොටස් ජීවත්වන සෑම ප්‍රදේශයකම මෙම සාම්ප්‍රදායික උත්සවය ජන ජීවිතයට සතුට සහ සිනහව එකතු කළා.

ඉරානය, ඇෆ්ගනිස්ථානය, තාජිකිස්තානය, අසර්බයිජාන්, තුර්කමනිස්තාන්, කිර්කසිස්තාන්, උස්බකිස්තාන්, තුර්කිය, පාකිස්තානය, ඉන්දියාව වැනි රටවල මෙන්ම ලෝකයේ අනෙක් රටවලත් මෙම නව වසර උදාව සනිහුටන් කරමින් උත්සව පැවැත්වෙනවා.

පර්සියානු දින දර්ශනය ඍතු සතරකට බෙදී තිබෙනවා. සෑම රිතුවක්ම මාස තුනකින් සමන්විතයි. මාර්තු 21 වසන්තයේ උදාව සටහන් වුණා. එදින සිට මාස තුනක් වසන්ත සමයයි. සුන්දරම ඍතුව මෙයයි. සොභා දහමේ විශිෂ්ට ආශ්චර්යයන් මිහිමත විහිදී යන කාල වකවානුවයි.

අනතුරුව පැමිණෙන්නේ ගිම්හානයයි. ඇතැම් විට දරා ගැනීමට පවා නොහැකි තරමට අධික උෂ්ණත්වය පවතිනවා. පාසැල්, සරසවි වාගේ ස්ථාන මෙ කාලයට නිවාඩුයි. දිවා කාලය දිගයි. රාත්‍රිය කෙටියි.

ගිම්හානයේ මාස තුනෙන් පස්සේ උදාවෙන්නේ සරත් ඍතුව. මේ කාලෙට ගස්වලින් කොළ වැටෙනවා. වැහි බර කාලගුණයක් පවතිනවා. වාතය ටිකින් ටික සීතල වෙනවා. සරත් ඍතුව මාස තුනක් පවතිනවා.

ඉන් පසු උදාවෙන්නේ ශීත ඍතුව. සම හිම පතිතවී මුළු ප්‍රදේශයම සුදු වස්ත්‍රයෙන් පොරවා ගත අන්දමට දිස්වෙනවා . චමත්කාරයි. මේ  කාලෙට රාත්‍රිය දිගයි. දවල් කොටයි.

වසන්තය උදාවෙන්නේ සීත ඍතුව පහවී යනවාත් සමග මල් පිපිලා, ගස් දළු දාලා. ජීවිතය නැවත උදාවෙනවා වාගේ. සීතල නිසා සීමාවුණු ජන ජීවිතය නිදහසේ ගලා යන්න පටන් ගන්නවා.


නව්රුස්  නමැති සම්ප්‍රදාය වසර දෙදහස් පන්සීයකට වඩා පැරණි කාලයේ සිටම පවතින දෙයක්. සොරොස්ත්‍රීයානු පසුබිමක් සහිත මෙම උත්සව මාලාව කලින් කලට ඔප්වෙමින් දැනට පවතින ඉහල සංස්කෘතික ලක්ෂණයන් සහිතව වැජඹෙනවා.

ඉස්ලාමයේ ව්‍යාප්තියෙන් පසුවද මෙම සම්ප්‍රදායය කිසිදු වෙනස්වීමකින් හෝ විකෘතිවීමකින් තොරව පැවැත්වෙනවා.



අවුරුදු උදාව සිදු වන ශුභ මොහොත මෙම සම්ප්‍රදායයේ වැදගත් අංගයක්. ආහාර වර්ග ගණනාවකින් යුත් තුරුනක් හෝ මේසයක් සකස් කරනු ලබනවා. පාර්සි භාෂාවෙන් ස අකුරෙන් පටන්ගන්නා නම් සහිත භාණ්ඩ හතක් එම මේසයේ ප්‍රදර්ශනය කෙරෙනවා. ඊට අමතරව ශුද්ධ කොරානයේ පිටපතක්, කන්නාඩියක් මෙන්ම ජීවමාන බව සංඛේතවත් කරමින් මාළුවක් සහිත ජාල බඳුනක් ද එකතු කරනවා.

පවුලේ අය එම තුරුන වටේ එකතු වී අවුරුදු උදාවට ආවේනික ආගමික වතාවත් ඉටු කිරීම, සුභ පැතුම් සහ තෑගි බෝග බෙදාගැනීම, වැඩිහිටියන්ට ගරු බුහුමන් දැක්වීම වැනි වතාවත් ඉටු කරනවා.

අවුරුදු උදාවට දවස් කීපයකට පෙර ගේ දොර අස්පස්කර ශුද්ධ පවිත්‍ර කිරීම නව වසරට සූදානම් වීමේ එක්තරා වැදගත් අංගයක්. මෙය සෑම ගෙදරකම සිදුවෙනවා. ගෙදරින් පිටකරනු ලබන අනවශ්‍ය පරණ බුමුතුරුණු, බඩුමුට්ටු, ඇඳුම් ආයිත්තම් සියල්ල එකතු කර රාත්‍රියක දී ගිනි තිබෙන සිරිතක් පැරණි කාලයේ පැවතුණා. දැන් එය සමරනු ලබන්නේ ගිනිමැලයක් මොලවා ඒ වටා රැස්වී විනෝද වීමෙන්. විශේෂයෙන්ම මෙම වසර අවසන් විනෝදවීම සිදුවන්නේ වසරේ අන්තිම බදාදා රාත්‍රියේ. මෙම චාරිත්‍රය ‘චහාර් ශන්බේ සූරී’ ලෙස හඳුන්වනු ලබනවා. එහි තේරුම ‘බදාදා රාත්‍රී ගිනි මෙලවීම’ යන්නයි. මෙහි තිබෙන අනතුරු සලකමින් බොහෝ අය මීට සම්බන්ධ වෙන්නේ නෑ.


වසර උදාව සමගම නෑදෑ හිතමිතුරන් බැහැ දැකීම, ගමන් බිම යාම, සංචාරය කිරීම, ක්‍රීඩා සහ විනෝද උත්සව පැවැත්වීම යනාදිය සති දෙකක පමණ කාලයක් සිදුවෙනවා. නව වසරෙන් දහතුන් වන දවස උත්සව සමය අවසන් කරන දවසයි.

දහතුන්වන දවස සොභා දහම සමග ජීවත්වෙන දවසයි. එදා සැවොම එළිමහනේ, උද්‍යාන වල සොභා දහම සමග ගත කරමින් සවස නිවසට ආපසු එනවා. ඒ සමගින් නව වසර සැමරුම් උළෙල අවසන් වෙනවා. පසු දින සිට නැවත සුපුරුතු දෛනික කටයුතුවල සැවොම නිරතවෙනවා.



Tuesday, February 12, 2019

40 වසරක ජයග්‍රාහී ගමන ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවය



ඉරාන ඉස්ලාමීය විප්ලවයේ 40 වැනි සංවත්සරය සැමරීම සඳහා, වසර 2019 පෙබරවාරි මස 11 වැනි දින, ඉරානය පුරාම කෝටි සංඛ්‍යාත ජනයා වීදි බැස පෙළපාලි ගියා. විප්ලවය ජයග්‍රහණය කළ 1979 සිට වසරක් පාසාම මෙදින ඉරානය පුරාම උත්සවශ්‍රීයෙන් සමරනු ලබනවා. 
සෑම නගරයක්, ගම්මානයක් පාසාම මහාමාර්ග දිගේ පවත්වනු ලබන රැස්වීම්, සැණකිලි, සංදර්ශන සමගින් මෙම දිනය වර්ණවත් වෙනවා.
ඇත්තෙන්ම ඔවුන්ට සමරන්න දෙයක් තිබෙනවා. එය ඔවුන්ට පමණක් නොව, ලෝකයේ ස්වාධීනත්වය අගයන සියලු දෙනාම සමරන්න වටිනා සංවත්සරයක්. 
එදා ඇමෙරිකාව ප්‍රමුඛ මහබලවතුන්ගේ සම්පූර්ණ අනුග්‍රහය ලත් පහ්ලවී රාජාණ්ඩුව සම්පූර්ණයෙන්ම බිඳවැටුණා. වසර 2500ක් තිස්සේ ඉරානය [පර්සියාව] පාලනය කළේ රජ පෙළපත් විසින්. 
මහජන විපලවයක් මගින් කලාපයේ ප්‍රබලම රාජාණ්ඩුව මහජන පෙලපාලවලින් ජයගනු ලැබුවේ එදිනයි.
ඉමාම් ආයතුල්ලාහ් කොමෙයිනි ඉරාන ජනයාගේ හිත දිනාගත් නිහතමානී ධර්මවේදියෙක්. රාජාණ්ඩුවේ මර්දනකාරී, මහජන විරෝධී ප්‍රතිපත්ති සහ ව්‍යාපෘතීන්ට විරුද්ධව ඔහු හඬ නැගුවා. ඉරානයේ ජනතාව ඔහු සමග අත්වැල් බැඳගත්තා. 
විප්ලවය ජයගැනීමට පහළොස් වසරකට ඉහත දීම ඉමාම් කොමෙයිනි අත් අඩංගුවට ගෙන රටෙන් පිටුවහල් කරනු ලැබුවා. ඉරාකයේ නජාෆ් නුවර දේවධර්ම ආයතනවල ඉස්ලාමීය දර්ශනය, නීති ශාස්ත්‍රය වැනි පාඩම් උගන්වමින් විශාල ශිෂ්‍ය පිරිසකට ධර්ම ශික්ෂණය ඔහු විසින් ලබා දුන්නා. ඉරානයේ පැවති මර්දනය ගැන විටින් විට ප්‍රකාශ නිකුත් කළා. මහජනයා මෙම ඉමාම්වරයාගේ නායකත්වය යටතේ කළ සටනේ, පරිත්‍යාගයේ ප්‍රතිපලයක් ලෙස විප්ලවය ජයගත්තා.
එම ජයග්‍රහණය ඔවුන්ගෙන් උදුරා ගැනීමට ලෝක මහා බලවතුන් සහ කලාපයේ ප්‍රතිගාමී රාජාණ්ඩු සහ හමුදා පාලන මගින් ඇති කරන ලද සියලුම බාධා ඔවුන් ජයගත්තා. කලාපයේ රාජාණ්ඩු සහ මිලිටරි පාලන සියල්ල විප්ලවයට බියවුණේ මෙම රැල්ල තමන්ගේ ද ඉරණම විසඳනු ඇතැයි යන සිතුවිල්ලෙන්. වසර අටක යුද්ධය, ආර්ථික සම්භාධක, විවධ තහංචි, මාධ්‍ය මඩගැසීම්, ආගමික කොන්කිරීම් සියල්ල අභිබවා ඉරාන ජනයා 40 වසර සමරන්නේ විප්ලව ජයග්‍රණයට වඩා මාහැඟි ජයග්‍රාහී ලීලාවෙනි.
ලෝකයේ සහ කලාපයේ බලවතුන්ට මෙම දශක හතර තුල විප්ලවීය ඉරානය දනගැස්සීමට හැකිවුණේ නෑ. ඒ වෙනුවට අද ඉරානය ලෝකය දියුණු තාක්ෂණ අත්පත් කරගත් සර්ව ස්වාධීන රටක් ලෙස අභිමානයෙන් නැගී සිටිනවා.
ඉමාම් කොම්යිනි නැවත ඉරානයට සම්ප්‍රාප්ත වූ පෙබරවාරි පළවෙනිදා සිට දවස් දහයකින්, එනම් 11 වැනිදා විප්ලවය සම්පූර්ණයෙන්ම ජයගත්තා. එම දවස් දහය පුරාම ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවයේ ජයග්‍රහණය සමරන උත්සව ලෝකය පුරාම පවත්වනු ලබනවා.
ශ්‍රී ලංකාවේත් ඉරාන සංස්කෘතික සංදර්ශන, ප්‍රදර්ශන, ච්ත්‍රපටි උළෙල වැනි වැඩසටහන් සාර්ථක ලෙස සංවිධානය කර තිබුනා.
ඉරානයේ ජනයාටත් ජන නායකයින්ටත් මෙම ජයග්‍රහණය වෙනුවෙන් ශුභ පතමු.
අල්ලාහු අක්බර්. කොමෙයිනි රහ්බර්
[අල්ලාහ්මයි ශ්‍රේෂ්ටයා. කොමෙයිනිමයි නායකයා]