Tuesday, February 12, 2019

40 වසරක ජයග්‍රාහී ගමන ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවය



ඉරාන ඉස්ලාමීය විප්ලවයේ 40 වැනි සංවත්සරය සැමරීම සඳහා, වසර 2019 පෙබරවාරි මස 11 වැනි දින, ඉරානය පුරාම කෝටි සංඛ්‍යාත ජනයා වීදි බැස පෙළපාලි ගියා. විප්ලවය ජයග්‍රහණය කළ 1979 සිට වසරක් පාසාම මෙදින ඉරානය පුරාම උත්සවශ්‍රීයෙන් සමරනු ලබනවා. 
සෑම නගරයක්, ගම්මානයක් පාසාම මහාමාර්ග දිගේ පවත්වනු ලබන රැස්වීම්, සැණකිලි, සංදර්ශන සමගින් මෙම දිනය වර්ණවත් වෙනවා.
ඇත්තෙන්ම ඔවුන්ට සමරන්න දෙයක් තිබෙනවා. එය ඔවුන්ට පමණක් නොව, ලෝකයේ ස්වාධීනත්වය අගයන සියලු දෙනාම සමරන්න වටිනා සංවත්සරයක්. 
එදා ඇමෙරිකාව ප්‍රමුඛ මහබලවතුන්ගේ සම්පූර්ණ අනුග්‍රහය ලත් පහ්ලවී රාජාණ්ඩුව සම්පූර්ණයෙන්ම බිඳවැටුණා. වසර 2500ක් තිස්සේ ඉරානය [පර්සියාව] පාලනය කළේ රජ පෙළපත් විසින්. 
මහජන විපලවයක් මගින් කලාපයේ ප්‍රබලම රාජාණ්ඩුව මහජන පෙලපාලවලින් ජයගනු ලැබුවේ එදිනයි.
ඉමාම් ආයතුල්ලාහ් කොමෙයිනි ඉරාන ජනයාගේ හිත දිනාගත් නිහතමානී ධර්මවේදියෙක්. රාජාණ්ඩුවේ මර්දනකාරී, මහජන විරෝධී ප්‍රතිපත්ති සහ ව්‍යාපෘතීන්ට විරුද්ධව ඔහු හඬ නැගුවා. ඉරානයේ ජනතාව ඔහු සමග අත්වැල් බැඳගත්තා. 
විප්ලවය ජයගැනීමට පහළොස් වසරකට ඉහත දීම ඉමාම් කොමෙයිනි අත් අඩංගුවට ගෙන රටෙන් පිටුවහල් කරනු ලැබුවා. ඉරාකයේ නජාෆ් නුවර දේවධර්ම ආයතනවල ඉස්ලාමීය දර්ශනය, නීති ශාස්ත්‍රය වැනි පාඩම් උගන්වමින් විශාල ශිෂ්‍ය පිරිසකට ධර්ම ශික්ෂණය ඔහු විසින් ලබා දුන්නා. ඉරානයේ පැවති මර්දනය ගැන විටින් විට ප්‍රකාශ නිකුත් කළා. මහජනයා මෙම ඉමාම්වරයාගේ නායකත්වය යටතේ කළ සටනේ, පරිත්‍යාගයේ ප්‍රතිපලයක් ලෙස විප්ලවය ජයගත්තා.
එම ජයග්‍රහණය ඔවුන්ගෙන් උදුරා ගැනීමට ලෝක මහා බලවතුන් සහ කලාපයේ ප්‍රතිගාමී රාජාණ්ඩු සහ හමුදා පාලන මගින් ඇති කරන ලද සියලුම බාධා ඔවුන් ජයගත්තා. කලාපයේ රාජාණ්ඩු සහ මිලිටරි පාලන සියල්ල විප්ලවයට බියවුණේ මෙම රැල්ල තමන්ගේ ද ඉරණම විසඳනු ඇතැයි යන සිතුවිල්ලෙන්. වසර අටක යුද්ධය, ආර්ථික සම්භාධක, විවධ තහංචි, මාධ්‍ය මඩගැසීම්, ආගමික කොන්කිරීම් සියල්ල අභිබවා ඉරාන ජනයා 40 වසර සමරන්නේ විප්ලව ජයග්‍රණයට වඩා මාහැඟි ජයග්‍රාහී ලීලාවෙනි.
ලෝකයේ සහ කලාපයේ බලවතුන්ට මෙම දශක හතර තුල විප්ලවීය ඉරානය දනගැස්සීමට හැකිවුණේ නෑ. ඒ වෙනුවට අද ඉරානය ලෝකය දියුණු තාක්ෂණ අත්පත් කරගත් සර්ව ස්වාධීන රටක් ලෙස අභිමානයෙන් නැගී සිටිනවා.
ඉමාම් කොම්යිනි නැවත ඉරානයට සම්ප්‍රාප්ත වූ පෙබරවාරි පළවෙනිදා සිට දවස් දහයකින්, එනම් 11 වැනිදා විප්ලවය සම්පූර්ණයෙන්ම ජයගත්තා. එම දවස් දහය පුරාම ඉරානයේ ඉස්ලාමීය විප්ලවයේ ජයග්‍රහණය සමරන උත්සව ලෝකය පුරාම පවත්වනු ලබනවා.
ශ්‍රී ලංකාවේත් ඉරාන සංස්කෘතික සංදර්ශන, ප්‍රදර්ශන, ච්ත්‍රපටි උළෙල වැනි වැඩසටහන් සාර්ථක ලෙස සංවිධානය කර තිබුනා.
ඉරානයේ ජනයාටත් ජන නායකයින්ටත් මෙම ජයග්‍රහණය වෙනුවෙන් ශුභ පතමු.
අල්ලාහු අක්බර්. කොමෙයිනි රහ්බර්
[අල්ලාහ්මයි ශ්‍රේෂ්ටයා. කොමෙයිනිමයි නායකයා]

Monday, June 4, 2018

பலஸ்தீன் விடுதலைக்கான சர்வதேச 'குத்ஸ்' தினம்








அல்லாஹ் அருள்பாலித்த பூமியும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்பட்டு இற்றைக்கு 51 வருடங்களாகின்றன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக பலஸ்தீன் மாற்றப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 1979 ஆம் ஆண்டில் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹும் இமாம் கொமைனி முன்னெடுத்த இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) சர்வதேச குத்ஸ் (பைத்துல் முக்கதிஸ்) தினம் முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. (அந்தவகையில் இவ்வருட குத்ஸ் தினம் வரும்  8ந் திகதி வெள்ளிக்கிழைம அனுஷ்டிக்கப்படுகிறது).

இந்த சர்வதேச தினத்தைப் பிரகடனப்படுத்திய இமாம் கொமெய்னி 'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாள்' என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும், ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.

என்றாலும் சிலர் குறிப்பிடுவது போன்று குத்ஸ் தினம் என்பது ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்று. அது இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன் மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட இத்தினத்தை அனுஷ்டிக்கின்றனர். குத்ஸ் தினம் அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றது, உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளையும் எடுத்து நோக்கினால் கூட குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விடவும் சுன்னிகளே அதிகமாகப் பங்கு கொள்கின்றனர்.

இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகள் முன்னெடுக்கப்படுவதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றே கோருகின்றனர்.

ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சியோனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், சியோனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதேவேளை சியோனிஸவாதிகள் பல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகின்றனர். குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிலும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாக உள்ளனர். இதன் ஊடாக சியோனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன.

அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், சியோனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, சியோனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை முழுமையாக முன்னெடுத்து சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி ​ெடாலகளைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்துவதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.

வரலாறு

முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகவே திகழ்ந்து வந்தது.

சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்டத்தை ஸலாஹுத்தீன் அல்- அய்யூபி தலைமை தாங்கி முன்னெடுத்தார். அது கி.பி.1187ல் இடம்பெற்றதோடு ஜெருஸலமும், மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அல் அக்ஸாவும் பலஸ்தீனும் சுதந்திரமானது.

என்றாலும் கி.பி.1918ல் நவீன கால பிரித்தானியரும், பிரான்ஸியரும் சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது

என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம் தான், 1947ல் சியோனிஸ இஸ்ரேலின் சட்ட விரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.

சியோனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், அரபு ஆட்சியாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிப்பதற்கான இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தல்களளுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் சியோனிஸவாதிகளுடன் இணைந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உலக முஸ்லிம்களின் புனித தளங்களான மக்காவிலும் மதீனாவிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ, பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்பற்றியோ வாய் திறக்க முடியாதளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது

 ஆனால் சுமார் 39வருடங்களுக்கு முன்னர் இமாம் கொமெய்னியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் சியோனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய நிகழ்ச்சிகள், அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய சியோனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளன அதேநேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. பலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்பு அணியினர் சியோனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இத்தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து விடாமல் எரியச் செய்வது -இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.

Saturday, June 2, 2018

எழுச்சியூட்டும் இமாம் கொமெனியின் தலைமைத்துவம்

எழுச்சியூட்டும்  இமாம் கொமெனியின் தலைமைத்துவம்



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி (ரஹ்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி (ரஹ்)

Imam Khomeini, 
the Great Leader and the Founder of Islamic Republic 

ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 29வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு சில குறிப்புக்கள்

அயிமுகம்:

இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமெய்னி ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும் மர்ஜா எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக் கூடிய ஒரு மேதையாகவும் வாழ்ந்தவர். 

ஈரானில் நிலவிய பஹ்லவி ஆட்சி பீடத்தின் கடைசி ஷா மன்னராக இருந்த மெஹமட் றெஸா பஹ்லவியை ஆட்சியில் இருந்து கவிழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவரும் இவரே ஆவார். 

இந்தப் புரட்சியைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி ஈரானின் பெரும் தலைவரானார். புதிய இஸ்லாமியக் குடியரசில் மிக முக்கிய நிலையில் கருதப்பட்ட இந்தப் பதவியை அவர் தனது வாழ்நாளின் கடைசி வரை வகித்தார்.

பல முஸ்லிம்களுக்கு அவர் ஒரு 'மர்ஜா'வாக (பின்பற்றக் கூடிய தலைவராக) இருந்தார். ஈரானில் அவர் பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக உத்தியோகப்பூர்வமாக இமாம் என்றே அழைக்கப்பட்டார். அரது ஆதரவாளர்கள் இந்த மரபை பின்பற்றினர். 

இமாம் கொமய்னி மிக உயர்ந்த செல்வாக்கு கொண்ட புதுமையான இஸ்லாமிய தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். இந்தத் துறையில் அவரது மிக உன்னதமான படைப்பாக நீதித்துறை கோட்பாடுகள் பற்றி அவர் எழுதிய புதிய தத்துவங்களைக் கொண்ட 'வெலாயத் ஏ பக்கிஹ்' அமைந்துள்ளது.

குடும்பமும் ஆரம்ப காலமும்:

றூஹுல்லாஹ் மூசவி, ஆயத்துல்லாஹ் செய்யித் மொஸ்தபா மூசவி மற்றும் ஹாஜியா ஹகா கானூம் ஆகியோருக்கு பிள்ளையாக ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தெற்காக சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கொமயின் என்ற இடத்தில் பிறந்தார். (இவர் 17 மே 1900 அல்லது 24 செப்டம்பர் 1902ல் பிறந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன). 

இந்தக் குடும்பம் முஹம்மத் நபி அவர்களின் வழித்தோன்றலில் வரும் செய்யித் வம்சத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தை வழி பாட்டனார் செய்யித் அஹமத் மூசவி. அவரின் மூன்றாவது மனைவி ஷகீனாவுக்கு 1856ல் பிறந்தவர்தான் இமாமின் தந்தை மொஸ்தபா. 

இமாம் கொமய்னியின் தாய் வழி பாட்டன் மிர்ஸா அஹமத் மெஜ்தஹேத் ஏ கொன்ஸாரி ஆவார். இவர் ஈரானின் மத்திய பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க சமயத் தலைவாகத் திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் ஷா மன்னர் பரம்பரையால் பிரிட்டிஷ் கம்பனி ஒன்றுக்கு புகையிலை உற்பத்திக்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்த புகையிலை உற்பத்திகளைப் பயன்படுத்துவதை தடை செய்து பகிரங்கமாக மார்க்கத் தீர்ப்பு 'பத்வா' அளித்தவர். இதன் விளைவாக அந்த சலுகையை இரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.

இமாம் கொமய்னி ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவரின் தந்தை கொலை செய்யப்பட்டார். அவருடைய தாயும் அத்தை ஒருவரும் தான் அவரை வளர்த்தனர். பிறகு இமாமுக்கு 15 வயதாக இருக்கும் போது ஒரே ஆண்டில் தாயும் அத்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். 

இமாம் தனது ஆறாவது வயதில் இருந்தே புனித வேத நூலான குர்ஆனை கற்கலானார். ஆரம்ப கல்வியை அவர் வீட்டிலும் உள்ளுர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். 18 வயது வரைக்கும் அவர் தனது மூத்த சகோதரரின் பாதுகாப்பில் இருந்தார். பிறகு எஷ்பஹான் மாநிலத்தில் உள்ள சமயக் கற்கை நிலையத்தில் அவர் மேலதிக கல்வியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவர் அராக்கில் உள்ள சமயப் பாடசாலையையே விரும்பினார். அந்தக் காலத்தில் கல்விப் புலமைக்கு மிகவும் பெயர் போன ஒரு இடமாக அது இருந்தமையே இதற்கு காரணம்.

1921ல் இமாம் அராக்கில் கல்வியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு அராக் சமயப் பாடசாலை கொம் நகரில் உள்ள சமயக் கல்விக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. அராக் மாணவர்கள் அங்கு செல்லுமாறு கேற்கப்பட்டனர். இமாம் அவர்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அங்கு சென்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர் அதே சமயக் கல்விக் கூடத்தில் அவர் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் (ஷரீஆ) இஸ்லாமிய நீதி நிர்வாகம்,மெய்யியல் ஆகிய பாடங்களை பல வருடங்கள் போதித்தார். இந்த விடயங்களில் அவர் பல நூல்களையும் எழுதி உள்ளார்.

கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த காலப்பகுதியில் இமாம் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால் சமயத் தலைவர்கள் தீவிர அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் உறுதியாகக் கொண்டிருந்தார் என்பதையே அவரது கல்விப் போதனைகள், எழுத்துக்கள் மற்றும் உரைகள் என்பன உணர்த்தி நின்றன. இதற்கு ஆதரவாக மூன்று முக்கிய காரணங்களையும் முன்வைக்கலாம். முதலில் இஸ்லாமிய கற்கைகளில் அவருக்கு இருந்த ஆர்வம் பாரம்பரியமான இஸ்லாமிய சட்ட விதிகள், நீதித்துறை மற்றும் கொள்கைகள் என்பனவற்றின் எல்லைகளைத் தாண்டி நின்றதை காண முடிந்தது. அவர் தத்துவஞானத்திலும் நெறிமுறையியலிலும் ஆகக் கூடிய அக்கறை காட்டினார். இரண்டாவதாக அவரின் கற்பித்தல் முறை சமயச் செயல்பாடுகளோடு மட்டும் மட்டுப்படாமல் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டியஅம்சங்களை வலியுறுத்துவதாகவும் காணப்பட்டது. மூன்றாவதாக ஈரானில் 1940களில் பெரும் பரவலாகவும் பகிரங்கமாகவும் பேசப்பட்ட மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராக குரல் கொடுத்த முதலாவது ஈரானின் சமயத் தலைவாகவும் அவர் காணப்பட்டார். அவர் தனது கருததுக்களை முன்வைத்து துறைசார் நூல்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டார். அவர் கொம்மில் இருந்து டெஹ்ரானுக்கு விஜயம் செய்து அன்றைய ஈரான் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவி மடுத்தார்.

இமாம் கொமய்னி 1963ல் மர்ஜா ஆனார். அன்றைய பெரும் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹுசேன் பொருஜேர்தியின் மறைவை அடுத்து அவர் இந்த நிலையை அடைந்தார்.

ஆரம்பகால அரசியல் செயற்பாடு:

1961ல் ஆயத்துல்லாஹ் பொருஜேர்தியின் மரணமும், 1962ல் ஆயத்துல்லாஹ் அபுல் காஸெம் கஷானியின் மரணமம் ஷீஆ ஆன்மிகத் தலைமையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்த காலம் அது. இமாம் கொமய்னிக்கு தலைமைத்துவத்துக்கான கதவுகளை இது திறந்து விட்டது. தனது 60வது வயதில் இமாம் அவர்கள் மிக உன்னதமான ஒரு நிலையை அடைந்திருந்தார்கள். 1920கள் முதலே ஈரானில் பஹ்லவி மன்னரின் சமயச் சார்பற்ற மற்றும் சமயத் தலைவர்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டையே சமயப் பிரிவுத் தலைவர்கள் கொண்டிருந்தனர். 1960களில் சமயத்துக்கு எதிரான மன்னராட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் உச்சத்தில் காணப்பட்டன. இது அன்றைய காலகட்டத்தில் 'வெள்ளைப் புரட்சி' என்று அழைக்கப்பட்டது.

வெள்ளைப் புரட்சிக்கு எதிர்ப்பு:

1962 முதல் தான் இமாம் கொமய்னி அரசியல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கினார். ஷாவின் ஆட்சியால் ஈரானில் பிரகடனம் செய்யப்பட்ட வெள்ளைப் புரட்சி காணிச் சீர்திருத்தம், காடுகளைத் தேசிய மயமாக்கல், அரச நிறுவனங்களை தனியார் நலன்களுக்காக விற்றல், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் தேர்தல் மாற்றம், தொழில்துறையில் இலாபப் பகிர்வு, பாடசாலைகளில் எழுத்தறிவு இன்மைக்கு எதிரான பிரசாரம் என பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது. பாரம்பரிய வாதிகளால் இவற்றுள் பல விடயங்கள் ஆபத்தானவையாகவும் மேலைத்தேச மனோபாவம் கொண்டவையாகவும் நோக்கப்பட்டன. குறிப்பாக சக்தியும் சிறப்பும் மிக்க சமயக் கல்விமான்கள் (உலமாக்கள்) இதை பெரும் அச்சுறுத்தலாகக் கருதினர். இதனால் உலமாக்கள் நாடு முழவதும் அரச எதிர்ப்பு கலவரங்களுக்குத் தூபமிட்டனர். மன்னர் மொஹமட் ரெஸா ஷா பஹ்லவி தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதரவைத் திரட்டும் ஒரு மூலோபாயமாகவே வெள்ளைப் புரட்சியை அவர்கள் பார்த்தனர். ஷா தன்னை ஒரு புரட்சிகர சிந்தனைக் கொண்ட ஒருவராக் வெளிக்காட்டிக் கொள்ளவே தேசியவாதம் நவீனத்துவம் போன்ற சொற்களை ஒரு மாயையாகக் கையாண்டு வருகின்றார் என்று அவர்கள் கருதினர்.

1963ல் வெள்ளைப் புரட்சியின் ஆறு அம்ச மறுசீரமைப்புத் திட்டத்தை ஷா அறிவித்தார். தனது ஆட்சிக்கு தாராளவாத மற்றும் முன்னேற்றவாத முகப்பை அளிக்கும் வகையில் அமெரிக்க செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு பொதியாக இந்தத் திட்டங்கள் காணப்பட்டன. இமாம் கொமய்னி தனது ஏனைய அயத்துல்லாஹ் சகாக்களை கொம் நகருக்கு அழைத்து இந்தத் திட்டத்தின் தீய நோக்கங்கள் பற்றி விரிவான விளக்கமளித்து, ஷாவின் இந்த நயவஞ்சகத் திட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தனது வெள்ளைப் புரட்சித் திட்டத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் மன்னர் ஷா திட்டமிட்டிருந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய விதம் அதை தோல்லிவயுறச் செய்ய வேண்டியதன் அவசியம் என்பன பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

1963 ஜனவரி 22ல் மிகவும் கண்டிப்பான வார்த்தைகளைக் கொண்ட ஒரு பிரகடனத்தை இமாம் கொமய்னி வெளியிட்டார். அதில் அவர் தனது திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இரு தினங்களில் ஷா வின் ஆயுதப் படை அணி ஒன்று கொம் நகர் நோக்கி அனுப்பப்பட்டது. அத்தோடு உலமாக்களை ஒரு தனி வர்க்கமாக வகைப்படுத்தி அவர்களைக் கண்டித்து உரை ஒன்றையும் ஷா நிகழ்த்தினார். ஆனால் இமாம் அசரவில்லை. ஷா வின் அராஜகத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஏனைய எட்டு சிரேஷ்ட கல்விமான்களின் கையொப்பத்தோடு ஷா வின் திட்டங்களைக் கண்டித்து விஞ்ஞாபனம் ஒன்றையும் இமாம் வெளியிட்டார். ஷா, ஈரானின் அரசியல் யாப்பை என்ன என்ன வகையில் மீறி உள்ளார் என அதில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்தோடு ஷா ஆட்சியின் ஊழல் பற்றிய விவரங்களும் அதில் அடங்கி இருந்தன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முழுமையாக சேவகம் புரியும் ஒரு மன்னரே ஷா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய வருடத்தின் (1963 மார்ச் 21) பாரசீக புதுவருடமான நௌரூஸ் புத்தாண்டு நிகழ்வுகளை ஷா வின் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் கைவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

1963 ஜுன் 3ம் திகதி புனித ஆஷுரா தினத்தின் மாலை வேளையில் இமாம் நிகழ்த்திய உரையில் கொடுங்கோல் ஆட்சியாளன் யஸீத்துக்கும் ஷாவுக்கும் இடையிலான சமாந்தரங்களை அவர் மக்களுக்குத் தெளிவு படுத்தினார். ஷா தனது நிலைப்பாடுகளையும் வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மக்களால் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்படும் காலம் வரும் என்று உறுதியான எச்சரிக்கையையும் தனது உரையில் இமாம் விடுத்தார்.

இமாமின் பொதுவான மிக உறுதியான இந்தக் கண்டனங்களை அடுத்து மன்னர் ஷா மிக மோசமான பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவு இமாம் ஷாவின் படைகளால் கைது செய்யப்பட்டார். 1963 ஜுன் 5ல் இமாம் கொமய்னி கைது செய்யப்பட்டார். இதனால் மக்கள் திரண்டெழுந்தனர். இதனால் ஈரான் முழுவதும் பாரிய அளவிலான கலவரங்கள் வெடித்து 400க்கும் அதிகமான உயிர்களைக் காவு கொண்டது. இமாம் எட்டு மாத காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு 1964ல் விடுதலை செய்யப்பட்டார்.

இமாமின் அரசியல் கண்ணோட்டப் பாதையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமயத்தையும் சமய நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஈரானின் ஷீஆ உலமாக்களினால் காலாகாலமாக விடுக்கப்பட்டு வரும் வேண்டுகோள்கள் மற்றும் அறிவுரைகள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் ஈரானிய முடியாட்சியை ஒரு நவீன சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் திட்டங்களை ஷா முன்னெடுத்து வந்தார். இந்த நடைமுறைகளால் ஈரானிய மக்களின் சமய ரீதியான வாழ்வு முறை அச்சுறுத்தலுக்கு ஆளானது. அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமயத் தலைவர்கள் ஆட்சியின் எதிரிகளாகப் பார்க்கப்பட்டனர். இதன் விளைவாக சமயத் தலைவர்களை ஒன்றிணைத்த இமாம் ஈரானின் முடியாட்சிக்கு எதிரான சமய விழுமியங்களுடன் கூடிய ஒரு அரசை அந்த நாட்டில் ஸ்தாபிப்தற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

சரணாகதிக்கு எதிர்ப்பு:

அமெரிக்க இராணுவத்தினருக்கு ஈரானில் முழுமையான இராஜதந்திர விடுபாட்டு உரிமையை வழங்கும் தீர்மானத்தை ஷா அரசு மேற்கொண்டபோது 1964 நவம்பரில் இமாம் அவர்கள் அதை முழுமையாகவும் கண்டிப்பாகவும் எதிர்த்தார். இதை ஒட்டு மொத்த சரணாகதி என வர்ணித்த இமாம் மிகக் கடுமையாக அதை எதிர்த்தார். இதன் விளைவாக 1964 நவம்பரில் இமாம் மீண்டும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அஞ்ஞாதவாச வாழ்வு:

இமாம் கொமய்னி 14 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தார். அதில் பெரும் பகுதியை அவர் ஈராக்கின் நஜாப் நகரில் கழித்தார். 1964 நவம்பர் 4ல் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் முதலில் துருக்கிக்கு சென்றார். அங்கு பர்ஸா நகரில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தை அவர் கழித்தார். 1965 அக்டோபரில் தான் அவர் அங்கிருந்து ஈராக்கின் நஜாப் நகரில் குடியேறினார். 1978ல் ஈராக்கின் அன்றைய உப ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசேனால் அங்கிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரை இமாம் அங்கு தான் வாழ்ந்தார். அங்கிருந்து வெளியேறிய இமாம் பிரான்ஸின் வட மத்திய பகுதியில் உள்ள நேபள் லி சட்டோ என்ற இடத்தில் குடியேறினார்.

இமாம் கொமய்னி ஈரானின் அன்றைய அரசியல் யாப்பை முழுமையாக நிராகரித்தார். அது பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்ட அந்நிய மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே ஆரம்பம் முதல் அவரின் நிலைப்பாடாக இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான நிறுவனங்களை உள்ளடக்கிய, உயர் மட்ட சமயத் தலைமைத்துவ அதிகாங்களைக் கொண்டதாக, முஸ்லிம் சமூகம் ஆன்மிக ரீதியாகவும், உலகியல் பாதுகாப்பைக் கொண்டதாகவும் ஆளப்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.

தன்னுடைய இந்த இஸ்லாமிய அரசு குறித்த சிந்தனைகளை உள்ளடக்கிய தொடர் விரிவுரைகளை 1970களில் அவர் நஜாப்பில் இருக்கும் போதே நிகழ்த்தி வந்தார். பின்னர் இந்த சிந்தனைகள் உள்ளடங்கிய விரிவுரைகளின் தொகுப்பு 'வெலாயத் ஏ பக்கி' எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. ஆட்சி முறை பற்றிய அவரின் மிகச் சிறந்த மிகவும் பிரபலமான கிரந்தமாக அது அமைந்தது.

ஈரானில் இமாம் கொமய்னி தலைமையிலான அதிகாரத்தின் போது இந்த முறைகள் முற்றாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, அதில் அவர் தெரிவித்திருந்த பாதுகாப்பாளர் அல்லது பெருந்தலைவர் என்ற பதவியையும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தனது மரணம் வரை அவரே வகித்தார்.

பிரான்ஸில் இருந்து அவர் நிகழ்த்திய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் என்பன ஷா வை மிக வன்மையாகச் சாடும் வகையில் அமைந்திருந்தன. ஷா ஒரு யூத முகவர் என்றும், அவர் ஒரு அமெரிக்கப் பாம்பு. அதன் தலை மக்களால் கல்லெறிந்து கொய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் அதில் அமைந்திருந்தன். இவை தனது இஸ்லாமிய வலையமைப்புக்குள் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு வெளியே பகிரப்படக் கூடாது என இமாம் விரும்பிய போதிலும் அதையும் மீறி ஈரானிய சந்தைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் கிடைக்கும் வகையில் இந்த உரைகள் அடங்கிய கெஸட்டுக்கள் அமைந்தன. இது மக்கள் மத்தியில் ஷாவின் ஆட்சியின் அதிகாரம் மற்றும் கௌரவம் என்பனவற்றை மேலும் தரம் தாழ்த்தியது. இதனால் ஷாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வேகமாக மங்கத் தொடங்கியதோடு இமாமை நோக்கி பல்வேறு தரப்பட்ட மக்களும் நேசக் கரம் நீட்டத் தொடங்கினர். தமது ஆன்மிகத் தலைவரின் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட உரைகளை மேலும் மேலும் கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கியது.

பெருந் தலைவர் இஸ்லாமியக் குடியரசுக்கு திரும்பி வரல்:

இமாமின் சிந்தனைகளால் உந்தப்பட்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மன்னர் ஷா தனது பரிவாரங்களுடன் 1979 ஜனவரி 16ல் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். வெற்றிவாகையோடு ஷா எதிர்ப்பு சக்திகளின் அழைப்பை ஏற்று இமாம் கொமய்னி 1979 பெப்பரவரி 1ல் நாடு திரும்பினார். இமாமை வரவேற்க சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டதாக சில தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர் இமாமிடம் இது பற்றி எப்படி உணருகின்றீர்கள்? என்று கேட்ட போது, சகலரும் அதிர்ச்சி அடையும் வகையில் எதுவும் இல்லை என்று இமாம் பதில் அளித்தார்.

தாயகம் திரும்பிய முதலாவது தினத்தில் மக்கள் மத்தியில்; உரை நிகழ்த்திய இமாம் ஷாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஷபூர் பக்தியாரின் அரசையும் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசின் பற்களை உடைப்பேன் என்று முழங்கிய இமாம் அமையவுள்ள இஸ்லாமிய அரசின் நன்மைகள் பற்றிய வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கினார். அந்த அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பிரபலமான ஒரு அரசாக இருக்கும் என்றும் கூறினார்.

புதிய அரசை ஸ்தாபிததல்:

பெப்ரவரி 11ல் இமாம் இடைக்கால அரசொன்றை பிரகடனம் செய்தார். 1979 மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அந்த இடைக்கால அரசு மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பினருக்கும் அதில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புதிய அரசின் வடிவமாகவும் அரசியல் யாப்பாகவும் இஸ்லாமியக் குடியரசை ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதுதான் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கேள்வி. முடியாட்சியை நீக்கி இஸ்லாமிய குடியரசு முறையை ஆட்சி அமைப்பதாக ஏற்றுக் கொள்வதாக அந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 98 வீதமானவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசியல் யாப்பின் அங்கீகாரத்துக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டன.  பெருந்தலைவர் பதவிக்கு அப்பால் மக்களால் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நியதியும் அதில் காணப்பட்டது. அந்த ஜனாதிபதி பதவிக்கு பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே போட்டியிடவும் முடியும். 

இமாம் கொமய்னி ஆயுற்கால பெருந் தலைவரானார். அத்தோடு அவரே புரட்சியின் தலைவர் என்றும் உத்தியோகப்பூர்வமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு இஸ்லாம் ஈரானின் புதிய அரசியல் யாப்பின் அடிநாதம் ஆனது. இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அடிப்படை கடமையாகியது.

இமாம் தனது ஆயுள் காலத்தில் இஸ்லாமிய உலகை ஒன்றிணைப்பதற்கான பல வழிமுறைகளையும் காட்டித் தந்துள்ளார். இறைதூதர் மஹம்மது நபி பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் முதல் 17ம் நாள் வரையான வாரத்தை ஐக்கிய வாரமாக பிரகடனம் செய்தார். அதேபோல் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக 'சர்வதேச குத்ஸ்' தினமாகப் பிரகடனம் செய்தார். இன்று உலகம் முழவதும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.

பெர்லின் மதில் உடைக்கப்பட முன்பே 1988 டிசம்பரில் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி மிக்கயல் கொர்பச்சேவுக்கு கம்யூனியஸம் உலகில் இருந்து விரைவில் வீழ்ச்சி அடைந்து விடும் என எதிர்வு கூறி கடிதம் ஒன்றை எழுதியதோடு இஸ்லாத்தைக் கற்று ஆய்வு செய்ய முன்வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தார். கம்யூனிஸம் என்பது விரைவில் உலக அரசியல் சரித்திர நூதனசாலையில் வைக்கப்படும் ஒரு விடயமாகி விடும் என்று இமாம் அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளில் அது நடந்து இன்று அது யதார்த்தமாகி உள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

இமாம் கொமய்னியின் ஆட்சியின் கீழ் சகல துறைகளிலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுலுக்கு வந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஆடை விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளும் பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய முறையில் பாராளுமன்றத்திலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ஷீஆ முஸ்லிம்களும் சுன்னாஹ் முஸ்லிம்களும் ஐக்கியப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இறுதியில் நோய்வாய்ப்பட்ட இமாம் சுமார் 11 தினங்ள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 1989 ஜுன் 3ல் தனது 89வது வயதில் காலமானார். ஈரானிய நகரங்கள் அனைத்தினதும் மத்திய பகுதிகளில் மக்கள் கூடி தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர். பல தினங்கள் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் காணப்பட்டனர். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் ஒரு தலைவரின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆகக் கூடுதலான மக்கள் தொகை இன்று வரை இதுவேயாகும்.

Saturday, May 7, 2016

வஹ்ஹாபிஸம், சவூத் குடும்பம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.: தீமையான முக்கூட்டு










ஆக்கம்: கதரைன் ஷாக்டேம்
(மத்திய கிழக்கத்திய கற்கைகளுக்கான பெய்ரூத் மையத்தின் கூட்டு இயக்குநர்ளூ தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய விசேஷத் தேர்வாய்வாளர்)

'புதிய கிழக்கத்தியக் கண்ணோட்டம்' (NEO) சஞ்சிகையின் 14-06-2015 இதழில்
பிரத்தியேகமாக வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: 'அபூதர்'
ஐ.எஸ்.ஐ.எஸ். வலுக்கட்டாயமாக ஓர் இஸ்லாமிய இயக்கமாக விலை போனாலும், அது வெளிப்படச் செய்;பவை, இன்னும் போதிப்பவை அனைத்தும், இஸ்லாத்திற்கும் அதன் போதனை களுக்கும் எதிரானவையாகவே காணப்படுகின்றன. இந்த பிரிவீடு, உண்மையில் இஸ்லாத்தின் மாபெரும் உட்பிரிவினைக்கும் அப்பால் தாண்டிச் செல்கின்றது. சவூதி அரேபியா உலகத்திற்கு விற்பனை செய்ய மிகுந்த ஆவல் கொண்டிருக்கும் வெற்றுப் புனைகதையின் ஓர் அங்கமாக இந்த இஸ்லாத்தின் உட்பிரிவினை அமைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல நூற்றாண்டு காலமாக, மெய்யாகவே மதரீதியான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டிருக்கின் றனளூ மேலும், முஸ்லிம்கள் உண்மையிலே தத்தம் சிந்தனைப் பிரிவுகளினதும் சட்ட விதிமுறை களினதும்  முறைமை நிலை, சட்டமூலங்களுடனான உடன்பாடு, மதரீதியான மேன்மை போன்ற விஷயங்களில் சண்டை பிடித்திருக்கின்றனர், வாதிட்டிருக்கின்றனர் என்றால், அது 'மனிதர்கள் தவறி விடும் அதே வேளை இஸ்லாம் பரிபூரணமானது' என்ற அறிவோடும் மிக்க தெளிவோடும் அறிஞர்கள் மேற்கொண்ட வினைமுறைகளாகும்.
இஸ்லாத்தில் வேறுபாடுகள், இறைவனின் பாதையில் நன்றாக நடந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வ வேட்கையிலிருந்து வெளி வந்தவையே தவிர, மாறாத மரிக்கச் செய்ய முடியாத, வன்மையான ஓர் உண்மையிலிருந்து மக்களைத் தடம் இல்லாமல் ஆக்குவதற்காக அல்ல.   
  
ஆதமிலிருந்து நூஹ், இப்ராஹீம், இயேசு, யஹ்யா மற்றும் முஹம்மது (அவர்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாவதாக) வரையிலான இறைதூதர்களின் நீண்ட வரிசையைப் பின்னோக்கிப் பார்க்கின்ற போது, இறைவனின் இறுதிக் கட்டளையும், தனது படைப்புகளிடத்தில் இறைவனின் எலலையற்ற பெருங் கருணையும், அமைதிக்கான அவனது அதிகார ஆணையுமான இறை ஏகத்துவத்தில் அவர்கள் அனைவரும் பங்கு கொண்டிருந்தனர். அந்தப் புனிதத் தூதர்கள் நமது வரலாற்றில் பல்வேறு காலப் பகுதிகளிலும், இடங்களிலும் வந்திருந்த போதிலும், அவர்களுடைய தூதின் உள்ளியல்பு, இறைவனின் நாட்டத்தைப் போன்று நிரந்தரமானதாகவும், அசைக்க முடியாத தாகவும் இருந்தது. ஆதமின் கடுங் கழிவிரக்கத்திற்காக அழுது புலம்பும் முதலாவது குரல்களி லிருந்தும் பாவமன்னிப்பிற்கான கோரிக்கைகளிலிருந்தும், முஹம்மது நபியவர்களின் இறுதி மூச்சு வரை, இறைவன் புறத்திருந்து நமக்கான செய்தி (தூது) எப்பொழுதுமே 'கீழ்ப்படிதல்' எனப் பொருள்படும் இஸ்லாமாகவே இருந்தது. உண்மையிற் சொல்லப் போனால், எப்போதும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரேயோர்; இயல்பான சுதந்திரம், எல்லாவற்றையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடத்தில் உடலாலும் ஆத்மாவாலும் சரணடைவதுதான்.
இஸ்லாம், முஹம்மது நபி (அவர் மீது சாந்தி உண்டாவதாக)யிலிருந்து துவங்கவில்லைளூ மாறாக, அது அவருடன், அவரின் மூலமாக மறுபடியும் பிறந்ததுளூ சூரிய அஸ்தமனத்திற்கு முந்திய ஒரு கடைசி அழைப்பாகவும், நாம் பின்பற்றுவதற்கான ஓர் இறுதி அருளாகவும் வழிகாட்டலாகவும் வந்தது -அல்லது இல்லையா?- தீமை முற்றிலும் நிரம்பியிருக்க முடியும் முன்னால் ஒரு கடைசி நம்பிக்கை ஒளிக் கீற்றாகவும், எழுதி வைக்கப்பட்ட நமது விதியின் கடைசி அத்தியாயமாகவும் அது அமைந்தது.
இஸ்லாம் அதன் இறுதி நாளில் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறுதான் அதன் முதல் நாளிலும் இருந்ததுளூ நாம்தான், தெய்வீகத்திற்கு உரிமை கொண்டாடி லேபள் (அடையாளச்சீட்டு) ஒட்டும் நமது தேவைக்காக, அதனை பல பெயர்களில் அழைக்கத் துவங்கினோம். மீண்டும் நாம்தான், மண்ணுலக விருப்ப நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, வழி விலகிச் சென்றிருக்கிறோம்ளூ இரகசியச் சூழ்ச்சிகளிலும், பேராசைச் செயல்களிலும் தீய-தவறான வழிகளைப் பயன்படுத்து வதிலும் இறங்கியிருக்கிறோம்.

வஹ்ஹாபிஸம்;, திட்டமிட்டு கட்டமைக்கப் பெற்ற ஒரு நெறிபிறழ்வு, ஒரு கூறுபாடு, வெறுத்தொதுக்க வேண்டிய ஓர் அருவருப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லைளூ அது, உள்ளிருந்து அரிக்கும் புற்றுநோயைப் போல, இஸ்லாமிய உலகம் முழுதும் பரவி இன்று எல்லா மதங்களையும் அழிப்பதற்கு அச்சுறுத்துகின்றது.
வஹ்ஹாபிஸமும் அதன் படையணிகளான அல்காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., போகோஹராம், மற்றவை எல்லாம், மத நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்துபட வே;ண்டும் என நாடுகின்ற பிற்போக்குத் தனமான ஒரு நாத்திக இயக்கத்தின் வெளிப்பாடுகள்தாம்.
வஹ்ஹாபிஸம் இஸ்லாமன்றுளூ இன்னும், எப்பொழுதுமே இஸ்லாம் வஹ்ஹாhபிஸமாக இருக்க முடியாது. இஸ்லாம், கொலை, கொள்ளை, இரத்தத்தை உறைய வைக்கும் அடாத  காட்டு மிராண்டித்தனம் என்பனவற்றுக்கு எப்பொழுதாகிலும் அங்கீகாரம் கொடுக்கும் எனக் கற்பனை செய்வதே ஒரு பெரும் மடமையாகும். இஸ்லாம், கொடுங்கோன்மை, அநீதி அக்கிரமம், பெரும் பழி, வஞ்சகம், பேரவா, தீவிரவாதம், துறவறம் போன்றவற்றையும், சரிசமநிலை, நல்லதன்மை, நேர்மை, கருணை, அன்பு, இரக்கம் என்பனவற்றைக் கொண்டிராத அனைத்தையுமே எதிர்க்கின்றது.
வஹ்ஹாபிஸம் எதுவாகவும் இருக்க முடியுமென்றால், அது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும்ளூ ஏற்கனவே பலர் அதனை அழைத்ததைப் போன்று - இஸ்லாம் என்பது வஹ்ஹாபிஸமன்று. வஹ்ஹாபிஸம் என்பது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற ஒரு தனிமனிதரின் அரசியல் அபிலாசைகளின் தவறாக வழிநடாத்தப் பெற்ற கூற்றுகளைத் தவிர வேறொன்றும் இல்லைளூ இந்த மனிதர், இஸ்லாத்தின் கட்டுமான அமைப்பை அரித்துப் போடுவதற்கும், அதன் உம்மத்துடைய (சமுதாயம்) ஐக்கியத்தில் வெடிப்புகளை உண்டாக்குவதற்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவராவார்.

வஹ்ஹாபிஸம், தனது மண் மற்றும் மனது தொடர்பான கபளீகரத்தை, இன்று சவூதி அரேபியா என அழைக்கப்படும் ஹிஜாஸில் துவங்கியதனால், அல் சவூத் என்ற ஒரு குடும்பம, இந்த வன்முறையிலான பிற்போக்குத்தனமான சிந்தனைப் பிரிவில், தனக்கு அதிகாரத்தில் உரிமை கோருவதற்கும், அதிகாரத்தைத் தன் கைகளில் வைத்துக் கொள்வதற்கும், மிகப் பெரும் வாய்ப்பு அமைந்து இருக்கின்றது எனக் கண்டு கொண்டது. இந்தத் தீங்கான-படுகேடான கூட்டு, பல நூற்றாண்டுகளாக அரேபியாவின் ஆகாயங்களை இரத்தக் கறை படியச் செய்தும், அதன் நச்சு வாயுகளின் விளைவாக (அருவருப்பான ஆரோக்கியமற்ற செயல்களினால்) அடிவானத்தை இருள் கவ்வச் செய்தும் விட்டது.
வஹ்ஹாபிஸம், இப்போது அடங்காப்பிடாரியான ஓர் அசிங்கத்தைப் பெற்றெடுத்திருக்கின்றதுளூ அதுதான், தன்னைத் தவிர வேறெதையும் சகித்துக் கொள்ளாத அதி தீவிரவாதம். அது, ஸலஃபிகளினதும், வஹ்ஹாபிகளினதும் விஷத்தில் குளித்தும் குடித்தும், அல் சவூதின் பல நூறு கோடி பெட்ரோ டொலர்களினால் விசையேற்றப்பட்டும் நடமாட விடப்பட்டிருக்கும் ஒரு மிருகம்ளூ புதிய ஏகாதிபத்தியவாதிகள், உலகின் அந்த செல்வ வளம் நிறைந்த மூலைகளிலெல்லாம் தாம் இராணுவரீதியாகத் தலையிடுவதை நியாயப்படுத்த, சூழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொள்ளும் ஓர் ஆயுதம். 
ஆனால், அந்த சக்திகள் தம்மை மென்மேலும் ஸ்தாபித்துக் கொள்வதற்கும், மற்றவர்களை அடிமைப் படுத்தி வைப்பதற்கும் உலகெங்கிலும் அச்ச வலைப் பின்னலொன்றை இழைந்து, தாம் தந்திரமாகச் செயல்படுகிறோம் என நினைத்துக் கொண்டனளூ என்ற போதிலும்;, அவர்களின் மூளையில் உதித்த குழந்தையான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் வெறுப்பையும் குரோதத்தையும் கக்கும் அதன் சகோதர அமைப்புகள் மீதான அந்த சக்திகளின் பிடி தளர்ந்து கொண்டு வருகின்றதுளூ ஏனென்றால், அவை அனைத்தும் அணுவாயுதமயமாகி விட்டனளூ மேலும், அவை அவற்றின் தந்தைமார்கள் விலங்கிட்டு வைத்திருந்த சங்கிலிகளுக்குள் இப்பொழுது கட்டுப்பட்டிருக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான கொடூரங்கள், ஸலஃபிஸத்தினதும், வஹ்ஹாபிஸத்தினதும் அதன் மற்ற கொள்கைகளினதும் உள்ளார்ந்த அடிப்படைத்தன்மையான வன்முறையின் தனித்துவ அடையாளமாக அமைந்திருக்கின்றன. இன்னும் சொல்வதென்றால், எல்லா வன்முறைகளினதும் மூலம் அல்லது ஊற்றுக்கண் எது என்பதை உலகம் இப்போது அறிந்திருந்தாலும், அதற்கெதிராக எந்த சக்தியும் பேசத் துணிந்ததில்லைளூ மாறாக, அதன் இலக்காக குறியிடப்பட்டு பாதிப்புக்குள்ளான இஸ்லாத்தை வெறுக்கும் போக்கை உலகம் தேர்ந்தெடுத்துக் கொண்டது. 
வஹ்ஹாபிஸம்தான் சர்வதேசப் பயங்கரவாதத்திற்கான மிகப்பெரும் மூலகாரணம் என ஜூலை 2013ல் ஐரோப்பியப் பாhளுமன்றம் அடையாளப்படுத்திக் காட்டியது. ஆயினும், சவூதி அரேபியா வின் தலைமை முஃப்தி, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை மிக வன்மையாகக் கண்டிக்கின்ற போது, 'தீவிர வாதம், பயங்கரவாதம், வன்முறை என்பன எந்த வகையிலும் இஸ்லாத்தைச் சேர்ந்தவை அல்ல' என வலியுறுத்தி இருக்கின்றார்ளூ அதன் பின்னரும், தலைமை முஃப்தி வஹ்ஹாபிஸத்தின் வரலாற்றைப் பற்றி அல்லது வஹ்ஹாபிஸம் உண்மையில் எதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது பற்றி, மீண்டும்; தெரியாதவராகவும், விளங்காதவராகவும் அக்கறையில்லாதவராகவும் இருக்கின்றார்! 
வஹ்ஹாபிஸம்


18ம் நூற்றாண்டில், முஸ்லிம் சாம்ராஜ்யச் சக்திகள் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த புறப் பிரதேசங்களை இழக்க ஆரம்பித்த போது, இஸ்லாமிய உலகின் பல பகுதிகளிலும் மறுமலர்ச்சி இயக்கங்கள் தலை தூக்கின. இவ்வேளை மேற்கில், அரசாங்கங்கள் நாட்டு நிர்வாகத்திலிருந்து கிறிஸ்தவ தேவாலயத்தை வேறுபடுத்தத் துவங்கியிருந்தன. ஆயினும், மதத்தை ஓரங் கட்டும் இந்த லௌகீகக் கொள்கை ஒரு தீவிரவாதப் புதுமையாக அமைந்திருந்தது. அதே சமயத்தில் ஐரோப்பா திட்டமிட்டுக்; கொண்டிருந்த வர்த்தகப் பொருளாதாரத்தைப் போன்றே இதுவும், புரட்சிகரமானதாகத் திகழ்ந்தது. வேறு எந்த கலாச்சாரமும் மதத்தை, அரசியல் போன்ற உலக ஈடுபாடுகளிலிருந்து வேறான, ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாகக்; கருதியது கிடையாதுளூ எனவே, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், சமூகத்தின் அரசியல் துண்டாடலும் கூட ஒரு மார்க்க(மத) பிரச்சினையாகக் காணப்பட்டது. ஏனென்றால், குர்ஆன் முஸ்லிம்களுக்கு ஒரு புனிதத்தன்மை வாய்ந்த பணித்திட்டத்தை வழங்கியிருந்தது: அதாவது, 'ஒவ்வொருவரும் சரிசமமாகவும் கண்ணியத்துடனும் நடாத்தப்படுகின்ற விதத்தில் அமைந்த ஒரு நீதமான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது'. உம்மத்தின் அரசியல் நலன், எப்பொழுதுமே தனிமுறைப் புனிதத்தன்மை வாய்ந்த ஒரு முக்கியத்துவ விஷயமாகக் கருதப்பட்டது. ஏழைகள் அடக்கியொடுக்கப்பட்டால், சவால்களைச் சமாளிக்க முடியாதவர்கள் சுரண்டப்பட்டால், அல்லது அரச நிறுவனங்கள் ஊழலில் திளைத்திருந்தால், சமூகத்தைத் திரும்பவும் அதன் சரியான தடத்தில் செல்ல வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் முஸ்லிம்கள் மேற்கொள்ள கடமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் தமது இழந்த அதிகாரத்தையும் கௌரவத்தையும் எப்பொழுதாகிலும் திரும்பப் பெற்றுக் கொண்டால், அவர்கள் தமது (இஸ்லாமிய) நம்பிக்கையின் அடிப்படைகளுக்கு மீண்டு வரவேண்டும் என 18ம் நூற்றாண்டு மறுமலர்ச்சியாளர்;கள் நம்பினர்;ளூ இதன் மூலம், அரசியல் அமைப்புக்கு, உலகாயதம் அல்லது இந்த உலக குறிக்கோள்கள் அல்லாமல், இறைவன் தான் மேலதிகாரம் செலுத்துவான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தனர். அத்தகைய விருப்பங்களை அதன் வழியிலிருந்து திருப்புவதற்காகத்தான் வஹ்ஹாபிஸம் வந்தது.

இந்த 'அடிப்படைவாதம்' பற்றி, அது போரில் ஈடுபடுகின்ற ஒன்று என்ற வகையில் இதுவரை எதுவுமில்லைளூ மாறாக, அது சமூகத்தைத் திரும்பவும் ஒளிமயமாக்குவதற்கு ஓர் அடிமட்ட முயற்சிளூ ஜிஹாத் அதில் தொடர்புபடுவதில்லை.
சமூகம் செல்ல வேண்டிய வழியிலிருந்து விலகி;ப் போய்க் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் மாத்திரம், இஸ்லாத்தின் வேருக்கு (அடிப்படைக்கு)த் திரும்பிச் செல்லும் கருத்தோட்டம் உண்மை யில் புகழத்தக்கதாகும். வஹ்ஹாபிஸம், அத்தகைய இலட்சியக் கொள்கைக்குத் தவறான வழியைக் காட்டுவதற்கே வேலை செய்யும்ளூ அது, இஸ்லாத்தின் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த தூண்களை அதன் தலையிலேயே முறுக்குவதைக் கொண்டும், வலிமை கொண்டவர்களுக்குச் சேவகம் செய்வதற்காகவும், பலவீனர்களை அடிமைப்படுத்துவதற்காகவும் வேண்டி இஸ்லாமியச் சட்டங்களையும் அதன் வேத நூல்களின் விளக்கத்தையும் முரண்பட்ட வகையில் வழங்குவதைக் கொண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும். 
இஸ்லாத்தைப் பற்றி வஹ்ஹாபிஸத்தின் கருத்து விளக்கத்தின்படி, பெண்கள் புறப்பொருளாகக் கருதப்படும் பழங்கால நிலைக்கு செல்ல வைக்கப்படுகின்றனர். குர்ஆனின் தட்டுத்தளர்வற்ற பாதுகாப்பின் கீழ் எழுச்சி பெறுவதாய் இஸ்லாம் கண்ட அந்த மகத்தான பெண்மணிகள் பலர், முஸ்லிம் பெண்கள் கவனமாக அவதானித்து, அவர்களைப் போன்றே தாமும் ஆவதற்கு விழைகின்ற, அந்த முன்மாதிரிகளான மர்யம், கதீஜா, ஃபாத்திமா, ஜெய்னப் என்பவர்களை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அவர்களின் வீடுகளிலேயே சங்கிலியால் பிணைத்துப் பூட்டி வைத்திருந்திருப்பார்.
இஸ்லாம் சமூகத்தினுள் பெண்களுக்கு அவர்களுடைய நியாயமான இடத்தை வழங்கிய  வேளை, வஹ்ஹாபிஸம் அவர்களுக்கு எல்லாவற்றைமே வழங்க மறுத்தது. இஸ்லாம் பெண் களுக்கு எதிராக மிக ஆழமான அளவில் இரண்டகமாக நடந்து கொள்கிறது என்ற கூற்றைத் தொடர்ந்து நம்பி ஆதரித்து வரும் உங்களில் பலர், இஸ்லாம் அல்லாமல் அதற்கான ஆண்களின்; விளக்கங்கள்தான் உங்களின் கோபத்திற்குக் காரணமாகும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
இஸ்லாம், இறைவனின் நாட்டத்திற்கு இணங்க பெண்களின் அந்தஸ்தைப் பாதுகாத்துத் தந்தது. இஸ்லாம், பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலாருக்கும் அவர்களின் (மத)நம்பிககையைப் பொறுத்தவரையில், ஒரு சரிசமமான இடத்தை வழங்குகிறதுளூ அவர்களின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் மாத்திரம்தான் அவர்கள் வேறுபடுகின்றனரே தவிர, தகுதியிலன்று.  இஸ்லாம், பெண்களுக்கு வேண்டியனவற்றைக் கொடுக்குமாறும், அவர்களுக்கு பணம் சம்பந்தமான பாதுகாப்பு மற்றும் பௌதிகப் பாதுகாப்பு இரண்டையும் அளிக்குமாறும் ஆண்களைக் கோருகிறது. இஸ்லாத்தின் கீழ், விவாகம் செய்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும், வேலை பார்ப்பதற்கும் பெண்கள் சுதந்திரமுடையவர்கள் ஆவர். இஸ்லாத்தின் கீழ், பெண்களை வாங்கவோ, பண்டமாற்று செய்வதற்கோ, அல்லது அடக்கியொடுக்கவோ முடியாது. இஸ்லாத்தின் கீழ், பெண்கள் மேற்கத்தியப் பெண்டிரில் பெரும்பாலோருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்திற்கு அதிகமாக அனுபவிக்கின்றனர் சமூகம்தான் அந்த உரிமைகளை மறுத்து வருகின்றதே தவிர, இஸ்லாமன்று. குர்ஆனைப் படியுங்கள்ளூ நீங்கள் அதனைக் கண்டு கொள்ளலாம். 
மார்டின் லூதரைப் போன்று இப்னு அப்துல் வஹ்ஹாபும், இஸ்லாத்தின் ஆரம்ப காலப் போதனை களுக்குத் திரும்பிச் செல்லவும், அதன் பின்னர் இடைக்காலத்தில் சேர்க்கப்பட்ட அனைத்தையும் பலவந்தமாக வெளியே தள்ளுவதற்கும் தான் விரும்புவதாக உரிமை கோரினார். அத்தகைய குறிக்கோள்களை அடைவதற்காக, அவர் சூஃபிஸத்தையும் ஷீஆ இஸ்லாத்தையும் எதிர்த்தார்ளூ அவற்றிற்கு 'இஸ்லாத்திற்கு எதிரான புதுமைகள் (பித்அத்)' என பெயர்ச்சீட்டு ஒட்டினார். அதேவேளை, அவையிரண்டும் மதநம்பிககையில் சர்வாதிகாரம் செலுத்துவதை எதிர்;த்தன. அவர், பல நூற்றாண்டுகளாக உலமா(அறிஞர்)களினால் வெளிக் கொணரப்பட்ட புலமை வாய்ந்த குர்ஆன் விளக்கவுரைகளைப் புறந்தளளுமாறும், குர்ஆன் வசனங்களைத் தாமாகவே பொருள் விளங்குமாறும் அல்லது அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அதனை விளங்குமாறும், எல்லா முஸ்லிம்களையும் வற்புறுத்தக் கிளம்பினார்.
இது, இயலபாகவே மத அறிஞர்களைச் சீற்றம் கொள்ள வைத்ததுளூ மேலும், மக்களால் பெரிதும் போற்றப்படுகின்ற இந்த மத ஈடுபாடுகளில் குறுக்கீடு செய்தால், சமூகத்தில் அமைதியின்மை உருவாகுமென நம்ப்pய உள்நாட்டு ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்தது. ஆயினும், முடிவில் இப்னு அப்துல் வஹ்ஹாப், நஜ்தின் ஒரு கோத்திரத் தலைவரான முஹம்மது இப்னு சவூது என்ற ஒரு காப்பாளரைக் கண்டு கொண்டார். இவர் அவருடைய கொள்கைகளை ஏற்றுப் பினபற்ற முன்வந்தார். இப்னு சவூது உடனடியாக ;வஹ்ஹாப்pஸத்தை சட்டத்திற்கு புறம்பான கொள்ளை களுக்கும் மற்றும் நிலப் பகுதிகளின் அபகரிப்புக்குமான தனது இராணுவரீதியான போர் முஸ்தீபு களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டார்ளூ அதே நேரத்தில், இத்தகைய வன்முறைகள் எல்லாம், பெரிய அளவிலான நன்மைகளைக் கொண்டு வருவதற்காகத் தான் நிகழ்த்தப்படு கின்றன என ஒரு காரணத்தை இப்னு சவூது அழுத்திக் கூறினார். இன்றுவரை, அல் சவூது உடைய குடும்பம் அத்தகைய குரூரமான-குருதி வடிகின்ற காலடித் தடங்களைத் தான் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.

இப்னு அப்துல் வஹ்ஹாப் உடைய கொள்கைக்கு வேதநூல்கள் மிக முக்கியமானவையாகத் திகழ்ந்த போதிலும், இஸ்லாத்தைப் பறறிய தனது தனிமுறை கருத்துப் பாங்கு மட்டுந்தான் செல்லுபடியானது என அவர் வலியுறுத்துவதைக் கொண்டு, குர்ஆனின் தூதை மிக வன்மையான முறையில் உருச்சிதைத்தார். 'இறைநெறியில் யாதொரு கட்டாயமோ-நிர்ப்பந்தமோ கிடையாது' (2::256) என குர்ஆன் மிக உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கிறது.    
முஸ்லிம்கள், மாபெரும் இறைதூதர்கள் அனைவரினதும் வேத வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் (3:84) என அது நியதி வகுத்திருக்கிறதுளூ மேலும் அது, மதப் பன்மைத் தன்மையை, இறைவனின் நாட்டத்தில் உள்ளது (5:48) என்று விவரிக்கின்றது. வஹ்ஹாப்pஸம் வலிய வந்து எல்லாவற்றையும் மோதி வீழ்த்தும் வரையில், முஸ்லிம்கள் சக முஸ்லிம் ஒருவரை இறைநம்பிக்கை இல்லாதவர் (காஃபிர்) எனப் பறைசாற்றும் தக்ஃபீரி நடைமுறையைப் பற்றி, பாரம்பரியமாக முன்னெச்சரிக்கையாய் இருந்து வந்திருக்கின்றனர். இந்நேரம் வரையில், ஏனைய மத நம்பிக்கைச் சம்பிரதாயங்களை முனைப்பாக மதிக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்து வந்த சூஃபிஸம்தான், இஸ்லாத்தின் மிகவும் மக்கள் மயமான வடிவமாகக் காணப்பட்டதுளூ இன்னும், சமூகம் மற்றும் மதம் சார்ந்த வாழ்க்கை இரண்டிலும் முக்கியமானதொரு பங்கைக் கொண்டிருந்தது. 'உங்கள் சொந்த மத நம்பிக்கையை, ஏனையவை அனைத்தையையும் நிராகரிக்கும் வகையில், பிரத்தியேகமாகப் பாராட்டாதீர்கள்' என மாபெரும் ஆன்ம ஞானி இப்னு அல் அரபி (இறப்பு 1240) வலியுறுத்தினார். அனைத்தையும் அறிந்தவனும், அனைத்து இடங் களிலும் ஏக காலத்தில் இருப்பவனும் ஆகிய இறைவனை, ஏதாவதொரு மதநம்பிக்கைக் கோட்பாட்டிற்குள் கட்டுப்படுத்தி வைக்க முடியாது'. ஒரு சூஃபியைப் பொறுத்தவரை, தான் 'ஒரு யூதனோ அல்லது ஒரு கிறிஸ்தவனோ அல்லன்ளூ ஏன், ஒரு முஸ்லிம் கூட அல்லன்' எனக் கோருவது சர்வ சாதாரணமானதாகும்ளூ ஏனெனில், உங்களுக்கு ஒருமுறை தெய்வீகத் தரிசனம் கிட்டிவிட்டால், நீங்கள் மனிதன் உருவாக்கிய இந்த வேறுபாடுகளைப் பின்னால் விட்டுவிடுவீர்கள்.
இப்னு அப்துல ;வஹ்ஹாபின் மரணத்திற்குப் பிறகு, வஹ்ஹாப்pஸம் மென்மேலும் வன்முறையான போக்கைக் கொண்டதாக மாறியதுளூ அரசக் கொடுங்கோன்மையின் ஒரு செயற்கருவியாக விளங்கியது. அல் சவூது ஒரு தன்னாட்சி அரசை நிhமாணிக்க நாடியதால், இப்னு சவூதின் மகனும் வாரிசுமான அப்துல் அஸீஸ் இப்னு முஹம்மது, எதிர்த்து நின்ற மக்கள் கூட்டங்களை ஒட்டு; மொத்தமாகப் படுகொலை செய்வதை நியாயப்படுத்துவதற்கு, 'தக்ஃபீர்' சுலோகத்தைப் பயன்படுத்தினார். 1801ல் அவரது இராணுவம், ஷீஆக்களின் புனித நகரமான கர்பலாவை (இன்றைய ஈராக்கில் அமைந்துள்ளது) முற்றாகச் சூறையாடி, இமாம் ஹுஸைனின் சமாதிக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்ததோடு நின்றுவிடாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் உடபட ஆயிரக்கணக்கான ஷீஆக்களை வெட்டிப் படுகொலை செய்ததுளூ 1803ல், அச்சத்திலும் பீதியிலும், புனித மக்கா நகரம் சவூதித் தலைவரிடம் சரணாகதி அடைந்தது. 

புனித மதீனா நகரத்தின் சூறையாடலைப் பற்றி நாம் மிக கொஞ்சமாகவே நினைவில் வைத்திருக்கிறோம்: அல் சவூதின் படையணிகள், பள்ளிவாசல்களையும் பள்ளிக்கூடங்களையும் வீடுகளையும், வாரிக்கொள்ளையிட்டனளூ அல் சவூதின் இராணுவம் நூற்றுக்கணக்கான ஆண்களை யும் பெண்களையும் குழந்தைகளையும், அவர்களின் அலறல்களுக்குச் செவி கொடாதவர்களாக படுகொலை செய்தது. இஸ்லாத்தின் மிகவும் புனிதம் வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்குமாறு இமாம்கள் அவர்களிடம் தாழ்மையுடன் வேண்டிக் கொண்டிருந்த போது, அல் சவூதின் ஆட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து, மதீனாவின் நூலகத்தைத் தீக்கிரை யாக்கினர். இஸ்லாத்திற்கு மிகுந்த வரவேற்பு நல்கிய அதே நகரை, அல் சவூது ஓர் எடுத்துக்காட்டாக்கி இருந்தது. இஸ்லாத்தின் முதலாவது பள்ளிவாசல் எங்கு எழும்பபியதோஅந்த மண்ணை அல் சவூது இரத்தத்தில் தோய்த்து சிவப்பாக்கி இருந்தது. எங்கு. இறுதி; இறை தூதரின் காலடிச் சுவடுகள் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனவோ அங்கு, பேரச்சத்தால் கதறி அலறும் குரல்களைக் கொண்டு, அல் சவூது சூழவுள்ள காற்றை நிரப்பியது. 
ஆனால், அத்தகைய பயங்கரங்கள் வரலாற்று நூல்களிலிருந்து வாகாகத் துடைத்தழிக்கப்பட்டுப் போயின. அத்தகைய குருதி தோய்ந்த, காட்டுமிராண்டித்தனமான வஞசனைகளின் கதைகளெல் லாம், அல் சவூது வரலாற்றைத் திரும்ப எழுதவும,; இறை தூதரவர்களின் வீட்டோடு வழி மரபு கோரவும் எத்தனித்த போது, இந்த குடும்பத்தினரால் முழுமையாக விழுங்கி ஏப்பமிடப்பட்டுப் போயின.
இறுதியாக, 1801ல் உதுமானியர்கள் எகிப்தின் ஆளுநர் முஹம்மது அலீ பாட்ஷாவை வஹ்ஹாபி படைக்குழுக்களை நசுக்குவதற்கும், அவர்களின் தலைநகரை அழிப்பதற்கும் அனுப்பி வைத்தனர். ஆயினும், முதலாவது உலக மாயுத்தத்தின் போது, வஹ்ஹாபிஸம் ஒரு அரசியல் சக்தியாக மீண்டும் பரிணமித்ததுளூ அது போழ்து, சவூதி கோத்திரத் தலைவர் -இன்னொரு அப்துல் அஸீஸ்- தனி நாட்டிற்கு புதியதொரு அழுத்தம் கொடுக்கத் துவங்கி, அவருக்கு விசுவாசமான இக்வான் (;சகோதரத்துவம்) என அழைக்கப்பட்ட காடடரபிகளின் இராணுவத்தைக் கொண்டு, மத்திய கிழக்கில் தனக்காக ஒரு பெரிய அரசாட்சியை முயன்று உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் வேர்கள் இந்த இக்வானில் அமைந்திருப்பதை நாம் காணலாம். கோத்திரப் பழங்குடிக் குழுக்களைத் துண்டு துண்டாக்கி, இஸ்லாத்துடன் ஒவ்வாததாகக் கருதப்பட்ட நாடோடி வாழ்க்கையிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, வஹ்ஹாபி சமயக் குரவர்கள் இந்த காட்டரபிகளைப் பாலைவனப் பசுந்;திடல்களில் குடியமர்த்தினர்ளூ அவர்கள் அங்கு கால்நடைப் பண்ணைத் தொழிலையும் ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் கைவினைத்  தொழில்களையும் கற்றனர்ளூ அத்துடன் கூடவே அவர்கள் வஹ்ஹாபி இஸலாமியப போதனையால் மூளைச்சலவை செய்யப்பட்டனர்ஃ காலங் காலமாக அவர்கள் ஈடுபட்டு வந்த கால்நடைகளைக் கொள்ளையிடும் காஸூ திடீர் தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து வஹ்ஹாபி பாணி ஜிஹாத்களுக்கு மாற்றப் பட்டதால், இந்தக் காட்டரபிப் போராளிகள் மென்மேலும் கட்டுமீறிய மூர்;;;;;;;;;;க்கமும் தீவரவாதமும் உள்ளவர்களாகக்  காணப்பட்டனர்ளூ அவர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் சவூதிகளல்லாத அரபி களை எதிர்;;;;;;;;;ப்படுகின்ற போது, தம் முகங்களை மூடிக் கொண்டும், நபியவர்கள் உபயோகிக்காத ஆயுதங்களை வெறுத்தொதுக்கியதால் ஈட்டிகளையும் வாள்களையும் பயன்படுத்தி போரிட்டுக் கொண்டும் இருந்தனர்ளூ இந்தக் காட்டரபிகள் பழம்பாணி காஸூ திடீர் தாக்குதல்களில்  எப்பொழுதும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை மிக குறைந்த அளவாகக் கட்டுப்படுத்திக் கொண்டதோடு அல்லாமல், போரில் ஈடுபடாதவர்களைத் தாக்குவதிலிருந்து தவிர்ந்தும் கொண்டனர். இக்வான்கள், நடைமுறையில் அவ்வப்போது ஆயுதபாணிகளற்ற ;மதம் மாறிய' கிராமப் புறத்தவர்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்திருக்கின்றனர்ளூ பெண்களையும் குழந்தைகளையும் வாளால் அறுப்பதைப் பற்றி எதுவும் சிந்திக்கவில்லைளூ எல்லா ஆண் கைதிகளின் குரல்வளைகளையும் நடைமுறையில் துளைத்து வந்தனர்.

1915ல் அப்துல் அஸீஸ் ஹிஜாஸையும் (இன்றைய மேற்கு சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனா நகரங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி), பாரசீக வளைகுடாவிலிருந்து நஜ்தின் கிழக்கு எல்லை வரையும், மேலும் வடக்கில் இன்று சிரியா, ஜோர்தான் என அழைக்கப்படும் பிரதேசத்தை யும் தாக்கிக் கைப்பற்றத் திட்டமிட்டார்ளூ ஆனால், 1920ல் அவரது விருப்ப நோக்கங்களைக் மட்டுப் படுத்திக் கொண்டார்ளூ ஏனெனில், ஒரு தேசியம் சார்ந்த நாடு என்ற வகையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் இராஜதந்திர அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் இக்வான்கள், பிரிட்டிஷ் காப்பாட்சியின் கீழிருந்த ஈராக், டிரான்ஸ் ஜோர்தான், குவைத் பிரதேசங் களில் தாக்குதலைத் தொடர்ந்தனர்ளூ அவர்கள் ஜிஹாத்திற்கு வரம்பு விதிக்க முடியாது என வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இக்வான்கள் எல்லா நவீனமயத்தையும் பித்அத் எனக் கருதியதால், உண்மையில் முஹம்மது நபியவர்களின் காலத்தில் அறியப்படாத -தொலைபேசி கள், வாகனங்கள், தந்தி, இசை, புகைபிடித்தல் என்பன- வற்றை அப்துல் அஸீஸ் அனுமதித்த தற்காக, அவரையும் கூட எதிர்த்தனர்ளூ தொடர்ந்த அவர்களின் இந்த கிளர்;;;;ச்சியை  அப்துல் அஸீஸ் 1930ல் அடக்கினார்.
இக்வான்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சவூதி அரசாட்சியின் அதிகாரப்பூர்வ வஹ்ஹாபிஸம், போரிடும் ஜிஹாதைக் கைவிட்டு, மதரீதியாக ஒரு பழைமைவாத இயக்கமாக ஆனது. ஆனாலும்,    இக்வானிய உணர்வும், பிரதேச விரிவாக்கத்திற்கான அதன் கனவும் செத்துப் போய் விடவில்லைளூ இந்தப் பகுதியில் மேற்குலகின் வெளிநாட்டுக் கொள்கைக்கு 1970களில் சவூதி அரசாட்சி மிக முக்கியமானதாக அமைந்ததால், அது புதியதொரு நிலைக்களத்தைச சம்பாதித்துக் கொண்டது.  சவூதிகளின் நாஸரிஸத்திற்கும் (எகிப்தின் இரண்டாவது ஜனாதிபதி ஜமால் அப்தில் நாஸரின் அரபுகள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சோஷலிஸ இலட்சியக் கொள்கை), சோவியத் செல்வாக்கிற்குமான எதிர்ப்பை வொஷிங்டன் வரவேற்றதுளூ 1979ல் ஈரானியப் புரட்சியின் பின்னர், முஸ்லிம் உலகம் முழுவதையும் வஹ்ஹாபி மயப்படுத்துவதன் மூலம், ஷீஆ இஸ்லாத்தை மறுதலிக்கும் சவூதிகளின் திட்டத்திற்கு அது வாய் விட்டுச் சொல்லாமல் மௌன ஆதரவை அளித்தது.
காலனித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக, நாஸரிஸம் சுதந்திரத்தையும் உரிமைப் படுவதற்கும் ஒருமைப்பாடு கொள்வதற்குமான இயல்புக்கு மாற்றமான ஓர் உணர்வையும் தவிர்க்க முடியாத வகையில் வழங்குகின்றது என்ற காரணத்தால், அது சவூதிகள் மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் ஓர் அச்சுறுத்தலாக அமைந்திருந்ததுளூ அதே போன்று, ஈரானிய ஷீஆ ஜனநாயக இயக்கமும் கூட, இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகள் பின்பற்றித் தம்மை ஒளிமிளிரச் செய்ய அனுமதிக்கும் வகையில், அதிக பட்சமான ஓர் இழுப்பு விசையை வழங்கியது.
மேலும் இதனால், பிரச்சார இயந்திரம் சுழல விடப்பட்டு, மேற்கத்திய சக்திகளினதும் அதன் நேச நாடுகளினதும் எதிரியாக ஈரான் தனிப்படக் குறியிட்டுச் காட்டப்பட்டதுளூ சோவியத் ரஷ்யாவுக்கு ஒருங்கே ஈரானும் தீமைகள் அனைத்தினதும் ஊற்றுக் கண்ணாகச் சித்தரித்து அறிமுகப்படுத்தப் பட்டதுளூ அதே நேரத்தில், சவூதி அரேபியா தீவிரவாதத்;தைத் திட்டமிட்டு மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய விடப்;பட்டது.  
அரபுலக எண்ணெய் உற்பத்தியாளர்கள், அமெரிக்கர்கள் இஸ்ரவேலுக்கு இராணுவ ரீதியான ஆதரவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அமெரிக்காவிற்கான விநியோகத்தைத் துண்டித்து விட்ட போது, 1973 வாணிகத் தடையினால் உண்டான எண்ணெய் விலையேற்றம்சவூதி அரசாட்சிக்கு அதன் முழுநிறை மடமை இஸ்லாமிய வடிவத்தை ஏற்றுமதி செய்வதறகுத் தேவைப்படும் எல்லா பெட்ரோ டொலர்களையும் கொடுத்தது.
போரிடும் ஜிஹாதைக் கொண்டு மதநம்பிக்கையைப் பரப்பும் பழைய முறைமைக்குப் பதிலாக, ஒரு கலாச்சார வலுத்தாக்குதல் வழிமுறை கையாளப்பட்டதுளூ சவூதியை மத்தியத் தலமாகக் கொண்டு இயங்கும் உலக முஸ்லிம் லீக், உலகெங்கும் முஸ்லிம்கள் வசிக்கும் எல்லாப் பகுதிகளிலும் அலுவலகங்களைத் திறந்ததுளூ மேலும், சவூதி மதவிவகார அமைச்சு, குர்ஆனின்    வஹ்ஹாபி மொழிபெயர்ப்புகளையும் வஹ்ஹாபிக் கொள்கைப் பாடநூல்களையும், சவூதி தமது  கொள்கைக்கு இசைவானவர்களாகக் கண்ட செய்யித் அபுல் ஆலா மவ்தூதி, செய்யித் குதுப் போன்ற நவீன அறிஞர்களின் எழுத்தாக்கங்களையும் பெருமளவில் அச்சடித்து, மத்திய கிழக்கு, ஆஃபிரிக்கா, இந்தோனேஷியா, அமெரிக்கா, ஐரோப்பா எங்கிலும் விநியோகிக்கச் செய்தது. இவ்வெல்லா இடங்களிலும், சவூதி பாங்கிலான, வஹ்ஹாபிப் பிரச்சாரகர்களைக் கொண்ட பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு நிதி வழங்கியதோடு, ஏழை எளியவாகளுக்கு --நிச்சயமாக ஒரு வஹ்ஹாபிப் பாடத் திட்டததைக் கொண்ட- இலவசக் கல்வியை வழங்குவதற்காக மத்ரஸாக்களை நிறுவியது.
மெதுமெதுவாக இஸ்லாத்தைப் பற்றிய முஸ்லிம்களின் புரிந்து கொள்ளும் ஆற்றல், வஹ்ஹா பிஸத்தினால் மாசுபடுத்தப்பட்டதுளூ மேலும், ஸுன்னி முஸ்லிம்கள் அதன் சொந்த மத பாரம்பரியங்களுக்கு இனிமேலும் ஒத்தியைவு இல்லாமல், சுதந்திரமாகச் சிந்திக்கும்-மிதமான போக்கு கொண்ட-இரக்கக் குணமுள்ளவன்முறை அல்லாத- இஸ்லாத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், வஹ்ஹாபிஸத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும், மூச்சு விடுவதற்கும் ஆரம்பித்தனர்ளூ
அதே வேளை, எகிப்து, பாகிஸ்தான் போன்ற ஏழ்மையான முஸ்லிம் நாடுகளிலிருந்து, தமது குடும்பங்களுக்குப் பினபலமாயிருப்பதற்காக, வேலை தேடி வளைகுடாவிற்கு வந்த இளைஞர்கள், தமது இப்போதைய செழுமை-செல்வநிலையை வஹ்ஹாபிஸத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டு, அந்த கொள்கையை தம்முடன் தமது வீடுகளுக்கு எடுத்து வந்தனர்ளூ அவர்கள், சவூதி பள்ளி வாசல்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறாக அமைக்கப்பட்ட அங்காடி வளாகங்களுக்கும் அருகிலுள்ள புதிய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். சவூதிகள், தமது பெரும் வள்ளல் தனமைக்கு மாற்றீடாக, தமது கொள்கைக்கு ஒத்துப் போகும் தன்மையைக் கோரினர். இதனால், இஸ்லாத்தின் மற்றெல்லா வடிவங்களையும,; அத்துடன் பிற நம்பிககைகளையும் ஒதுக்கித் தள்ளும் வஹ்ஹாபிஸத்தின் தாக்கம், பாகிஸ்தான், ஜோர்தான், சிரியாவில் மாத்திரமல்ல, இங்கிலாந்தினதும் அமெரிக்காவினதும் நகரங்களிலும், பொதுவாக எல்லாவிடங் களிலும் ஆழமாகச் சென்றடைந்திருக்கின்றதுளூ  இஸ்லாத்தின் பாரம்பரிய பன்மைத் தன்மைக்கு முக்கியமாக கெடுதல் விளைவித்திருக்கின்றது.
எனவே, முஸ்லிம்களின் ஒரு முழுச் சந்ததியும், மற்ற நம்பிக்கைகளைப் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தைத் தமக்குத் தரக்கூடிய தான்தோன்றித்தனமான ஒரு வகை இஸ்லாமிய வடிவத்தோடு வளர்;;;;;;;;ந்து வந்திருக்கின்றதுளூ மேலும், சகிப்புத்தன்மையற்ற, மாறுபாடு பொறாத வகையிலேயே, தாம் ஆதரிக்கிற தமது சொந்த பிரிவைப் பற்றி புரிந்திருக்கின்றனர். இது தன்னளவில் கடும் போக்கு இல்லை என்ற போதிலும், இத்தகையதொரு கண்ணோட்டத்தில்தான் தீவிரவாதம் வளர்ந்து பெருக்கக் கூடியதாயிருக்கின்றது. கடந்த காலங்களில், வஹ்ஹாபிகள் புறந் தள்ளிய உலமாக்களின் புலமை வாய்ந்த குர்ஆன் விரிவுரைகள் தாம், வேத நூலின் கடும் போக்கு விளக்கங்களைக் கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருந்தனளூ ஆனால் இன்று, உஸாமா பின் லேடன் போன்ற போதுமான தகுதியில்லாத- தன்னிச்சையான நபர்கள், குர்ஆனின் பெரிதும் மரபு வழுவிய வாசிப்புகளை புது உபயோகத்திற்குக் கொண்டு வரச் சுதந்திரம் பெற்றிருந்தனர். தீவிரவாதம் பரவுவதைத் தடுப்பதற்காக சவூதிகள், 1980களில் அரசாட்சியின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து தமது இளைஞர்களைத் திசை திருப்புவதற்கு முயற்சித்தனர். ஓர் அனைத்துலக இஸ்லாமிய மன உணர்வுக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம் இதனைச் சாதிக்க முனைந்தனர்ளூ ஆயினும், வஹ்ஹாபி உலமாகள் அதனை அங்கீகரிக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். - வஹ்ஹாபிஸத்தின் மூளையில் உதித்த குழந்தை
முன்பு இக்வான்கள் செய்ததைப் போல, இன்று நவீன சவூதி அரசாட்சியின் அதிகாரப்பூர்வ வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஐ.எஸ்.ஐ.எஸ் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் வாள்களும், மூடிய முகங்களும், குரல்வளைகளைத் துளைத்து மரண தண்டனை நிறைவேற்றலும் -இவையெல்லாம் அசல் சகோதரத்துவம் எனப் பொருள்படும் இக்வான்களையே நினைவு கூரச் செய்கின்றது. ஆயினும், ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பல்கள் முற்றும் முழுதாக கடும் பிற்போக்கான ஜிஹாத்வாதிகளைக் கொண்டிருக்க முடியாதுளூ கணிசமான ஒரு எண்ணிக்கையினர், ஈராக்கில் இதுகாறும் உள்ள நிலையால் வன்மம் கொண்டிருப்பவர்கள் -சதாம் ஹுசைனின் ஆட்சி யிலிருந்து வந்த பாதிஸ்ட்களும் அவரது கலைக்கப்பட்ட இராணுவத்தின் முன்னாள் பேர்ர்வீரர்களும் ஆவர்.
வாழ்க்கைத்தொழிலாகக்கொண்ட- பயிற்றப்பெற்ற இராணுவச் சக்திகளுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். ஸின் வலுவான செயல் நிறைவேற்றம், உண்மையில் எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதை இது விளங்க வைக்கும். புதிதாகச் சேர்க்கப்பட்ட ஒரு சில இளைஞர்கள், வஹ்ஹாபிஸத்தினாலோ அல்லது மிகவும் பாரம்பரிய முஸ்லிம் கொள்கைவாதங்களினாலோ தூண்டப்பட்டவாகளாயிருக்கும் சாத்தியக்கூறுகளும் உள்;ளன. 2008ல் எம்.15 உடைய நடையொழுக்க விஞ்ஞான அங்கம், பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: 'பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பவர்களுள் ஒரு பெரும் எண்ணிக் கையினர், மதரீதியான வெறியர்களாக இருப்பது ஒரு புறமிருக்கட்டும், அவர்கள் தமது மத நம்பிக்கையை ஒழுங்கு முறையாகச் செயல்படுத்துவதில்லை. நிறைய பேர் மத அறிவு இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர்ளூ மேலும், அவர்களைக் கத்துக்குட்டிகளென்றே கருத வேண்டியுள்ளது.'
911 தாக்குதல்களிலிருந்து, பயங்கரவாதத்திற்காக குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் களுள் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர், மதத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றாதவர்கள் அல்லது தாமாகவே கற்றுக் கொண்டவர்கள் ஆவர். தவறாக வழி நடாத்தப்பட்ட அல்லது மாறுவேஷம் பூண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் நிச்சயமாக மதரீதியான விழிப்புணர்வை நாடுகின்றவர்களல்லர்ளூ ஓரளவிற்குப் பார்க்கப் போனால், அவர்கள் ஒரு வன்முறைக்காக விலைக்கு விற்கப்பட்டவர்கள்ளூ இது அவர்களின் சொந்த வேதனையையும் கையிழப்பு உணர்வையும் சுட்டிக் காட்டுவதாகும்.
கடந்த மே மாதம், பெர்மிங்ஹோமிலிருந்து (இங்கிலாந்து) சிரியாவிற்குப் புறப்பட்ட ஆர்வங் கொண்ட இரு ஜிஹாத்வாதிகள், இஸ்லாத்தை அமேஸன் மலைவாழ் இனத்தவர்க்குரியது என ஏவியிருக்கின்றனர்ளூ ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், முஸ்லிம் மதப் பற்றாளர்களல்லர் - மனப் பிறழ்வுக்குப் பாத்திரமான பிறப்புகள் மாத்திரமே ஆவர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை முதுமரபு மீட்சிக்காக ((மூதாதையர்களின் பண்புகளை மீளவும் வெளிக் கொண்டு வருவதற்காக)ப் பின்னோக்கிச் செல்லும் ஒன்றாகப் பார்ப்பது தவறானதாகும்ளூ அது, எல்லா வகை யிலும் முழுமையான நவீன இயக்கம் ஒன்றாகும். அது, இக்வானின் (புனித) போர்களிலிருந்து ஊக்கம் பெற்றதாகும். அது, 200 கோடி டொலாகள்; என மதிப்பிடப்படும் சொத்துக்களுடன் கூடிய, திறனுள்ள, சுயமாகவே முதலீடு செய்யும் ஒரு வியாபார நிறுவனமாக ஆகியிருக்கின்றது. அதன் கொள்ளையடித்தல், வங்கிகளிலிருந்து தஙகப் பாளங்களைக் களவாடல், ஆட்கடத்தல், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து வடிகுழாய்கள் மூலம் எண்ணெய் கடத்தல், அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற செயல்களினால், அது உலகிலேயே பெரும் செல்வமுடைய  ஜிஹாத் வாதிகளின் குழுவாக ஆகியிருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் வன்முறைகளைப் பொறுத்த வரை யில், எதுவுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததோ அல்லது அறிவுக்குப் பொருந்தாததோ அன்றுளூ மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டும் காணொளி(வீடியோ)கள், அவற்றைக் காணு பவர்களின் உள்ளங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்கும், அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல் தடுப்பதற்கும், பெருந் திரளான மக்கள் கூட்டத்தினர் மத்தியில் பெருங் குழப்பத்தை உண்டாக்குவதற்கும், மிகக் கவனமாகவும் வியூகத் திட்டமிட்டும் தயாரிக்கப் பட்டுள்ளன.   
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது, பயங்கரமான ஓர் இராணுவம் மட்டுமன்றுளூ ஏகாதிபத்திய குறிக்கோள் களைக் கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கமாகும். மேலும், அது கடைப்பிடிக்கும் முறைமைகள், பெரும் திகிலூட்டுவனவாகவும் இரத்தக் களறியானதாகவும் இருக்கின்றன என்றால், அவை எந்த வகையிலும் ஒரு புதுமையன்று. அவை எல்லாம் கூட, ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த கால உதாரணங் களிலிருந்து எடுத்துக் கொண்டவையாகும் - ஒட்டுமொத்தப் படுகொலைகள், முழுமையாக ஒரு நவீன நடப்புளூ மேற்குலகச் சக்திகள் பற்பல தடவைகள் கைக்கொண்டு வந்துள்ள ஒன்றாகும்.
ஐரோப்பாவில் முதலாவது 'மதமற்ற' (செக்யூலர்) அரசு தோற்றம் பெறுவதற்கு இட்டுச் சென்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது, ஜகோபின்கள் ஏறத்தாழ 17.000 ஆண்கள், பெண்கள், குழந்தை களின் கழுத்துகளைப் பகிரங்கமாகத் துண்டித்தனர்.
சோவியததின்; போல்ஷிவிக்கள்;, கம்போடியாவின் கமர் ரோக்ஹ்;கள், சீனாவின் சிவப்புக் காவலர்கள், எல்லாரும் சமுதாயத்தை ஊழல்களிலிருந்தும் சீர்கேடுகளிலிருற்தும் துப்புரவாக்க, திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். 
1990களில், ஆர்;மேனியா பல நூற்றுக்கணக்கான அஸீரிகளை, திடீர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என்ற வகையில், ஒரு பெரிய அளவில் அறுத்துக் குவித்தது.
இதே போன்று. ஐ.எஸ்.ஐ.எஸ்., அத்தகைய அறுப்பு வேலையைக் கொண்டல்லாது தனது ஒரே யொரு மட்டுப்படுத்தப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட குறிக்கோளை அடைவது சாத்திய மில்லை எனக் கருதி, அதற்காக வன்முறையை உபயோகிக்கிறது. ஆகவே, அரசியல் மற்றும் போர்த் திற முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை அடைவதற்காக  பல்வேறுபட்ட கொலை களைச் செய்வது என்பது, நவீனத்துவத்தின் இருண்ட பக்கத்தை இன்னொரு தோற்றத்தில் எடுத்துக் காட்டுகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., 1925ல் முஸ்தஃபா கமால் அத்தாதுர்க், துருக்கியில் தூக்கி யெறிந்த கிலாஃபத்தை புனர் நிர்மாணம் செய்ய விரும்புகிறது.
கிலாஃபத் என்பது அரசியல்ரீதியாக மரணித்து நீண்ட நாடகளாகி விட்டனளூ ஆனால், அது உம்மத்தின் ஒற்றுமையையும், நபியவர்களுடனான அதன் இணைப்பையும் சங்கிலித் தொடர்பை யும் அடையாளப்படுத்தியதன் காரணமாக, அதன் இழப்பை ஓர் ஆத்மீக கலாச்சார வேதனைச் சம்பவம் என ஸுன்னி முஸ்லிம்கள் துக்கம் அனுஷ்டித்தனர். ஆயினும், ஐ.எஸ்.ஐ.எஸ்;. முன் வைக்கும் கிலாஃபத்திற்கு, சர்வதேசரீதியில் உலமாக்களுக்கு மத்தியில் ஆதரவு இல்லைளூ மேலும், அது முஸ்லிம் உலகம் எங்கிலும் ஏளனப்படுத்தப்படுகின்றது.
அஃது அப்படியிருக்க, நமது உலகில், தேசியம் சார்ந்த நாட்டின் கட்டுப்பாட்டு வரம்புகள், மிக அதிகமான தன்மையில் தெளிவாகி வருகின்றன. மத்திய கிழக்கைப் பொறுத்த வரையில், அதனை விசேஷமாக உண்மை யென்றே கொள்ள வேண்டும்ளூ அங்கு தேசியவாதப் பாரம்பரியம் எதுவும் கிடையாதுளூ மேலும், அங்கு உள்நுழைந்து கைப்பற்றியவர்கள், வரைந்த எல்லைக் கோடுகள் எத்துணை பொருத்தம் இல்லாதவை என்றால், ஓர் உண்மையான தேசிய உணர்வை உருவாக்க அதனால் அறவே முடியாமற் போயிற்று. இங்கு கூட, ஐ.எஸ்.ஐ.எஸ்., சாதாரணமாக கடந்து சென்ற ஒரு யுகத்திறகுப் பின்நோக்கித் திரும்பச் செல்லாமல், தனிப் போக்காக ஒரு நவீன அமைப்பைத் தெளிவுபட எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறது.                    
தொழிற் புரட்சிக்கு ஒரு வகையில் உதவியாக இருக்கும் வி;தத்தில், ஐரோப்பாவில் பழைமைக் கட்டுப்பாடுகளற்ற ஜனநாயக, தேசியம் சார்ந்த நாடு வடிவமைக்கப்பட்டது. அரசியல் விழிப்புணர் வின் இலக்குகளை நிர்ணயித்த அது, இனிமேலும் உயரிய வேணவாவாக மட்டும் இருக்க முடியாதுளூ மாறாக, அது நடைமுறை அத்தியாவசியமாக ஆகிப் போனது. அது சீர்மையும் முழு நிறை நலமும் கொண்டதன்றுளூ அதனுடைய பலவீனம், எப்பொழுதுமே அது இனவாரிச் சிறுபான்மையினரைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பதுதான். 20ம் நூற்றாண்டின் மிக மோசமான அடடூழியங்களுள் சிலவற்றிற்கு, இந்தத் துறையில் ஏற்பட்ட தோல்வியே காரணமாக அமைந்தது. நவீனமயமாக்கல் வேறு விதமாக வளர்ச்சி கண்ட உலகின் ஏனைய பகுதிகளில், வேறு ஆட்சி அமைப்பு முறைகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். எனவே, பழைமைக் கட்டுப்பாடுகளற்ற தேசிய நாடு என்பது, நவீனத்துவத்தின் தவிர்க்க முடியாத ஒரு பின்விளைவு அன்றுளூ தாக்கி ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்துதல், கைப்பற்றுதல் என்ற காலனித்துவ வழிமுறை களைப் பயன்படுத்தி, ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தச் செய்யப்படும் முயற்சி, இயற்கைக்கு மாறான ஒரு பிறப்பைத் தான் பின்விளைவாகத் தர முடியும்ளூ இன்னும், இந்த குழப்பங்களின் காரணமாகத்தான்; ஐ.எஸ்.ஐ.எஸ். வெளி வந்தது.
ஸுன்னிகள், ஷீஆக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள், யஸ்திகள் என எல்லாருக்கும் எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். போர்ப் பிரகடனஞ் செய்துள்ளது. இறைவனை நம்பாத குற்றவாளி களையும் கொலையாளிகளையும் கொண்ட இந்த பிற்போக்குத்தனமான குழாமிலிருந்து யாருமே தப்ப முடியாது.
கவனிக்கத் தக்க வகையில், இப்பொழுது ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பெயர் குறிப்பிடப்பட்ட இலக்காக சவூதி அரேபியா ஆகியிருக்கின்றதுளூ ஐ.எஸ்.ஐ.எஸ்., அதன் படைப்பாளரைத் தாக்க இப்பொழுது விழைகின்றதுளூ அது, ஏற்றுக் கொள்;ளத் தக்கதான எல்லைக்கு முன் தள்ளிக் கொண்டு செல்ல நாடுகின்றதுளூ எதற்காகத் தெரியுமா? ஒரு மதநம்பிக்கையை அல்லாமல், தூய- புனிதம் கொண்டவையை, அதன் எல்லா வடிவங்களிலும் அதன் எல்லா தோற்றங்களிலும் மறுப்பதில் முனைப்பாயிருக்கும், ஒரு தீவிரவாத நாத்திக (இறைவன் அற்ற) இயக்கத்தைத் தானாகவே மீண்டும் கண்டுபிடித்துக் கொள்வதற்காக!
வஹ்ஹாபிஸம் உங்களைப் பயமுறுத்தாவிட்டாலும், நிச்சயமாக ஐ.எஸ்.ஐ.எஸ்.. உங்களைப் பயமுறுத்த வேண்டும்.
இருக்கலாம்ளூ இருக்கலாம்ளூ ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸைத் தோல்வி காணச் செய்து, அதனை முற்றாக நிர்மூலம் ஆக்குவதற்கும், இவை அனைத்தையும் ஆரம்பித்து வைத்த ஒரு சக்தியான சவூதி அரசாட்சியை மறுதலிப்பதற்கும் நாடுகின்ற அந்த நேச நாடுகளைத் தேர்ந்தெடுப்பது, நல்லதோர் அபிப்பிராயமாக இருக்கக கூடும்.