Showing posts with label ஷிஆ முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label ஷிஆ முஸ்லிம்கள். Show all posts

Thursday, March 10, 2016

வஹ்ஹாபிஸம் என்பது அதிகார வழிபாடு!


 ஆக்கம்: இஸ்ஸத் ஹுஸைன்















இஸ்ஸத் ஹுஸைன்

(05.03.2016 ஐலண்ட் ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: அபூதர்)
வஹ்ஹாபிஸம் என்பது நவீனத்துவத்திற்கு எதிர்வினையாக இஸ்லாத்தை மத்திய காலப் பகுதிக்கு பின்னெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆதி மனித நடத்தைக்கான ஓர் இயக்கம் எனப் பொதுவாக நினைக்கப்படுவது சரியான ஒன்றல்ல என்பதையும், மாறாக அது நவீனத்துவத்தை அனுசரித்து, அந்நோக்கத்திற்குரிய அதனது யுக்தியாக இஸ்லாத்தை அதிகார வழிபாட்டிற்கான சித்தாந்தமாக மாற்றிவிடுவதாகும் என்பதையும் நான் இந்த கட்டுரையில் விவாதிக்க விரும்புகிறேன். இந்த விஷயம் பற்றிய எனது சிந்தனையின் பின்னணியில், நான் பல தசாப்தங்களுக்கு முன்னர் படித்த மொந்தர்லண்ட் உடைய சிறப்புமிக்க நாவல் ஒரு இருக்கின்றது. அதன் கதையம்சம் பின்வருமாறு செல்கிறது: மெய்விளக்கத்தின் பெருமானங்களை இழந்து நிற்கும் உருமாதிரியான நவீன மனிதன், இரண்டு கால்களைக் கொண்டிருக்கின்றான்; அதில் ஒன்று பணத்திற்கான தூண்டுதலாகவும், மற்றொன்று அதிகாரத்திற்கான தூண்டுதலாகவும் காணப்படுகிறது. அந்தப் பயங்கரமான பேர்வழி இவ்விரண்டு கால்களினால் வழியெல்லாம் நிலம் அதிர நடந்து சென்று, பாரிய அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்துகின்றான்;.இத்தகையதொரு பேரழிவை, 1914ல் முதலாவது உலக மா யுத்தததின் ஆரம்பத்திலிருந்து உலகம் கண்டதில்லை.
ஆயினும், எல்லாவற்றிற்கும் முன்னதாக, சில குழப்பங்களை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான், வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடழிப்பதற்கான ஒரு வாதம் சம்பந்தமான எனது கடைசி கட்டுரையில் (27.02.2016 ஐலண்ட் ஆங்கில நாளிதழில் வெளிவந்தது), சவூதி அரேபியா அல்லாமல், ஐ.எஸ். இயக்கம் தானாகவே வஹ்ஹாபிஸத்தின் நடைமுறைகளை அதன் முழுமையான ஆதாரப்பூர்வமான வடிவத்தில் அமுல்படுத்தி வருகிறது என்ற மிகவும் சிக்கலான கேள்விக்கு பதில் காணப்பட வேண்டும் எனக் கூறி முடித்திருந்தேன். மேலும் நான், பாலியல் அடிமைத்துவம் போன்ற ஐ.எஸ். இயக்கத்தைத் தனிப்பட அடையாளப்படுத்திக் காட்டும் நடைமுறைகளுக்கு, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அசலாகப் பிரசாரம் செய்தவற்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எடுத்துக் காட்டுவதனால் மாத்திரம்தான், இந்த கேள்விக்கான தீர்வைக் காண முடியும் என எழுதியிருந்தேன். அவ்வாறில்லை என்றால், ஐ.எஸ். இயக்கத்தை மட்டும்தான் பூமியிலிருந்து முற்றுமுழுதாக பிடுங்கி எறிய வேண்டுமே தவிர வஹ்ஹாபிஸத்தை அன்று. மாறாக, ஐ.எஸ். இயக்கம்தான் வஹ்ஹாபிஸத்தின் முழுவடிவிலான ஆதாரபூர்வ வெளிப்பாடு என்றால், வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட சவூதி அரேபியாவை சர்வதேச சமூகம் வற்புறுத்துவது என்பது, பதிலுரைக்க முடியாத ஒரு விஷயமாக மாறி விடுகிறதென நான் நினைக்கிறேன்.


வஹ்ஹாபிஸம்தான் சர்வதேசப் பயங்கரவாதத்திற்கான மிகப்பெரும் மூலகாரணம் என 2013ல் ஐரோப்பிய யூனியன் உத்தியோகப்பூர்வமாகப் பிரகடனஞ் செய்ததை நினைவுபடுத்திக் கொள்வது இங்கு பொருத்தமானதாகும். இந்தப் பிரகடனம், அறிஞர்களினதும் நிபுணர்களினதும் ஆராய்ச்சிகளின் பின்புலத்தோடு செய்யப்பட்டது என நாம் நிச்சயமாக யூகித்துக் கொள்ளலாம். எனவே, வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட சவூதி அரேபியாவை ஐரோப்பிய யூனியன் வற்புறுத்துவது நியாயமானதேயாகும்.
ஆயினும், ஐரோப்பிய யூனியன் என்ன சொல்கின்றது என்பதற்கு, இலங்கையிலும் பிறநாடுகளிலும் வஹ்ஹாபிஸத்தின் செல்வாக்கினால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம்கள் எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்கப் போவதில்லை. அந்த விஷயத்தில், மரபுவழி இஸ்லாமிய (அஹ்லுஸ் ஸுன்னாஹ்) அறிஞர்கள் என்ன சொல்கின்றனர் என்பதற்குக்கூட அவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. மரபுவழி இஸ்லாமிய அறிஞர்கள் ஏறத்தாழ என்ன சொல்கின்றனர் என்றால், வஹ்ஹாபிகளும் அவர்களின் படியாக்கங்களும் பழிபாதகங்களுக்கு அஞ்சாது தமது கொள்கை கோட்பாடுகளைக் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ சுன்னாஹ்விலோ இருந்து மெயப்பிக்கப் பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றனர். தமது நோக்கங்களுக்குப் பொருந்தி வருகிறதெனக் கண்டால், குர்ஆன் வசனங்களைத் தனித்தனியாக சொல்லின் நேர் அர்த்தம் செய்து, அந்த வசனங்களுக்கு முழுமையான அர்த்தத்தைத் தரக்கூடிய சூழமைவுகளைப் புறக்கணித்து விடுகின்றனர். அவர்கள் மூல வசனங்களுக்கு வேண்டுமென்றே வலிந்து தப்பான புரிதல் கொள்ள வைப்பதில் ஆற்றல் உடையவர்கள். ஆறு அங்கீகரிக்கப் பெற்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல்களில் இடம் பெறாத, மிகவும் சந்தேகமான ஆதாரங்களைக் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் உபயோகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதே மாதிரியான இன்னும் பல இருக்கின்றன. இதன் விளைவாக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அசலாக பிரசாரம் செய்தவற்றில், ஐ.எஸ். இயக்கத்தின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா எனத் தேடிக் கண்டுபிடிப்பது எதிர்பார்க்க முடியாததொரு காரியமாகும். வஹ்ஹாபிகளும் அவர்களின் படியாக்கங்களும் தாம் நம்ப வேண்டியதை நம்புகின்றனர்;. மேலும், குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் அதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடழிப்பதற்கான இலக்கை நோக்கி நகர்வதற்கு மிகச் சிறந்த வியூகம், மும்முனைகளைக் கொண்டதாகும்: முதலாவதாக, வஹ்ஹாபிஸத்தின் உள்மையப் பகுதியிலேயே முட்டாள்தனம்; இடம்பெற்றிருக்கிறது. அந்த உள்மையப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றுமே முட்டாள்தனமானதுதான் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். இரண்டாவதாக, வன்முறையினதும் பயங்கரவாதத்தினதும் உச்சநிலையே வஹ்ஹாபிஸத்தின் உள்ளியல்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். முன்றாவதாக, வஹ்ஹாபிஸம் அதிகாரத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமல்லாத ஒரு கொள்கை என்பதனால், அதன் கீழ் வரும் முஸ்லிம் மக்கள், வெளியிலிருந்து இயக்கப்பட்டு அதிகாரத்தை வழிபடுவர்களாக மாற்றப்படுகின்றனர் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அத்துடன், வஹ்ஹாபிஸத்தின் பரம்பலுக்கு அதன் துவக்கத்திலிருந்து இன்று ஐ.எஸ். இயக்கம் வரை, சில மேற்கத்திய சக்திகள் பின்னணியில் இருப்பதை எடுத்துக் காண்பிக்க முடிந்தால், அதுவும் உதவியாயிருக்கும். 
வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியே - மனிதப் புனிதர்களை வழிபடுவது மற்றும் பல தெய்வக் கொள்கை பற்றிய போலிக் குற்றச்சாட்டே - முட்டாள்தனமானது என நான் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். இதனைத் தொடர்ந்து வருவது என்னவென்றால், 1801ல் 5000 அப்பாவி ஆண்கள்; பெண்கள்; குழந்தைகளின் படுகொலையுடன் நடத்தப்பட்ட கர்பலா சூறையாடல் போன்ற நிகழ்வுகள்தான்; இவையும். இவை, முட்டாள்தனமானவை, அறிவுணர்ச்சி துண்டிக்கப் பெற்ற பேதைமை கொண்டவை, கொடூர மிருகத்தன்மை வாய்ந்தவை, மனிதத்தன்மைக்குக் கீழ்நிலைப்பட்ட மடமைக்கு உரித்தானவை இன்னுஞ் சொல்லப் போனால், இவைதாம் வஹ்ஹாபிஸத்தினதும் அதன் எல்லா படியாக்கங்களினதும் உள்மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இப்போது நான், உச்சநிலை வன்முறையும், பயங்கரவாதமும்தான் வஹ்ஹாபிஸத்தின் உள்ளியல்பே என்ற கருத்தை நிரூபிக்க நாடுகிறேன்.


முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், ஒரு விபச்சாரியைக் கல்லெறிந்து கொல்வதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். தற்பொழுது, வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களுள் முன்னணியில் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவரான நடானா டி லோங்பாஸ் என்பவரின் கருத்துப்படி, 'அந்தப் பெண் ஐயத்திற்கிடமின்றி மூளைக் குழப்பம் உள்ளவளாக: திரும்பத் திரும்ப விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்னும் அதனைப் பற்றி பகிரங்கமாகப் பேசி வந்ததாலும், இதனை இப்னு அப்துல் வஹ்ஹாப் மிகுந்த தயக்கத்துடனேயே செய்திருக்கிறார்.' இப்னு அப்துல் வஹ்ஹாபின் குற்றத்திற்குப் பாதுகாப்பு செய்வதற்காக, இந்த நவீன பெண்மணி மிக நீண்ட வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்; ஆயினும் அவர், விபச்சாரத்திற்கான தண்டனையாக 80 கசையடிகளுக்கு மேலதிகமாக எதனையும் குர்ஆனே விதிக்கவில்லை என்ற பதிலுரைக்க முடியாத வாதத்தை இப்னு அப்துல் வஹ்ஹாப் பயன்படுத்தவில்லை என்பதையும், மேலும், ஒரு குர்ஆனிய சட்ட விதிமுறையை மிகவும் சந்தேகமான ஆதாரங்களைக் கொண்ட ஒரு ஹதீஸ் ஒதுக்கித் தள்ளுவதை அனுமதிக்க முடியாது எனபதையும் குறிப்பிடத் தவறியிருக்கின்றார்;. நபியவர்களின் மரணத்திலிருந்து தொடர்ந்த நீண்ட பல நூற்றாண்டுகளில், விபச்சாரத்திற்காகக் கல்லெறிந்து கொல்வது மிக மிக அரிதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற வாதத்தையும் இப்னு அப்துல் வஹ்ஹாப் பயன்படுத்தத் தவறி விட்டார் என்பதையும் நடானா குறிப்பிடவில்லை. தான் ஷரீஆவை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுவதாகப் பெருமை பாராட்டிக் கொண்ட உதுமானிய சாம்ராஜ்யத்தின் பல நூற்றாண்டு கால ஆட்சியிலும் கூட, விபச்சாரத்திற்காகக் கல்லெறிந்து கொல்வது ஒரேயொரு முறைதான் நிகழ்ந்துள்ளது என நான் நம்புகிறேன்.
கொடுமைப்படுத்தும் விருப்பத்துடனான மிருகத்தன்மை, இப்னு அப்துல் வஹ்ஹாப் உடைய தனிமனிதப் பண்பியல்புகளுள் ஒரு பகுதியாக விளங்கியது என்பதை இந்த வரலாற்றுக் கீற்று விபரிக்கினறது. இக்கட்டுரையில் முன்னதாக நான் குறிப்பிட்டவாறு, வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களின்  உள்மையப்பகுதியில் அமைந்திருக்கும் இரட்டை நிலைபாட்டையும் நான் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன்;.
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரையில், அது வஹ்ஹாபிஸத்தின் துவக்கத்திலிருந்தே உடன் இருந்து வந்திருக்கிறது. பயங்கரவாதம் அதன் உள்ளியல்பில், போரில் ஈடுபடாத அப்பாவிகளை வகைதொகையற்று கொன்று குவிப்பதையும் உள்ளடக்கி இருக்கின்றது. வீரத்தியாகிகளின் மரணத்தைத் தழுவிக் கொண்ட, கலீஃபா உமர் உடைய சகோதரரின்; கல்லறையின் மீது நடாத்தப் பெற்ற முதலாவது வஹ்ஹாபி பயங்கரவாதத் தாக்குதலுக்கு இப்னு அப்துல் வஹ்ஹாப் தாமே தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த நஜ்த் கிராமப் புறங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இப்னு அப்துல் வஹ்ஹாப், தமது விருப்பத்துக்கு உகந்த ஆயுதமான கோடாரியுடன் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்னு அப்துல் வஹ்ஹாப் தொடங்கிவைத்த பயங்கரவாத மரபு, 1801ல் கர்பலா படுகொலைப் படலத்தில் முதலாவதாக முழுமையாக மலர்ச்சியுற்று, இன்றைய தினம் வரை அது தொடர்ந்து வருகிறது. வஹ்ஹாபிஸத்தைப் பற்றி அசுத்தங்களும் நோய்கிருமிகளும் அகற்றப் பெற்ற ஒரு தோற்றத்தை வெளிப்பட வைக்க சவூதிகள் முயன்று வருகின்றனர்;. அவர்களின் கூற்றுப்படி, அதன் காரணமாக ஏற்படும் பயங்கரவாதச் செயல்கள்; சாதாரணமான வழுவல்கள் அல்லது பக்க விளைவுகள்தான் எனப்படுகிறது. அப்படியிருக்க, உண்மை என்னவென்றால், வஹ்ஹாபிஸம் எப்பொழுதுமே அதனைப் பின்பற்றுவோரை வெறியூட்டி பயங்கரவாதத்திற்கு அழைத்துச் செல்வதையே நாம் காண்கிறோம்;. இது விவகாரத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்;. சவூதி அரேபியா வஹ்ஹாபிஸத்திற்கு தான் தலைமை தாங்கியிருப்பதை உதறித் தள்ளிவிடச் செய்வதற்காக, அதனை சர்வதேச சமூகம் வற்புறுத்த வேண்டும் என்பதற்கு இது போதுமான காரணமாகும். 
வஹ்ஹாபிஸம் என்பது அதிகாரத்தின் வழிபாட்டிற்கான ஓர் இலட்சியக் கொள்கைவாதம் என்ற கேள்விக்கு நான் இப்போது வருகிறேன். அண்மை நாட்களில் ஒன்றுக்கும் அதிகமான எனது வாசகர்கள், கதரீன் ஷக்டாம் என்பவரின் ஜூன் 2015 கட்டுரையொன்றை எனக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்;. அதில் அந்தப் பெண்மணி பின்வரும் வாதத்தை முன் வைக்கின்றார்: 'வஹ்ஹாபிஸம் என்பது எடுத்தெறிந்து விடக்கூடிய முதுமரபு மீட்சிக்கான இயக்கம் ஒன்றன்று, மாறாக அது, நவீனமயப்படுத்தும் ஒன்றாகும். மேலும், அதனை ஒட்டுமொத்தமாக படுகொலைகளை மேற்கொண்ட ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடலாம்: ஓராயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களின் கழுத்துகளைத் துண்டித்த பிரெஞ்சுப் புரட்சி, ஸ்டாலின், மாவோ, பொல்பொட் போன்றவர்களினால் நிகழ்த்தப் பெற்ற படுகொலைப் படலங்கள் என்பன.' தத்துவ ஞானி ஜோன் கிரே போன்ற மற்றவர்களும் கூட, பாரீஸ் குண்டு வெடிப்பின் பிறகு, இதே வகையிலான வாதத்தை எடுத்து வைக்கின்றனர். 



நான் இந்த கருத்தோட்டத்தை ஆதரிக்கும் வண்ணம், வஹ்ஹாபிஸம் என்பது வேருக்கு (அடிப்படைகளுக்கு)த் திரும்பிவர அழைப்பு விடுக்கும் மத (சமய)ச் சீர்திருத்த மற்றும் மறுமலர்ச்சிக்கான இயக்கங்களுடன் ஒப்பிடப்படக் கூடியது அன்று என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன், லூதரேனிஸம் தேசியவாதத்திற்கும், கெல்வினிஸம் முதலாளித்துவத்திற்கும், இரண்டும் சீர்திருத்தத்திற்கு எதிரான செல்நெறியின் வாயிலாக கத்தோலிக்கத்தின் புத்தூக்கத்திற்கும், மெதடிஸம் மற்றும் பிரிட்டனின் மதப் பிரிவுக் குழுக்கள் சோஷலிஸத்திற்கும் இட்டுச் சென்றன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான பௌத்த, இந்து சீர்திருத்த இயக்கங்களையும், சாதகமானவையாகக் காணலாம். அதே போன்று, ஜமாலுத்தீன் அல் ஆஃப்கானியினால் உணர்வூட்டப் பெற்ற இஸ்லாமிய சீர்திருத்த இயக்கத் தையும் கருதலாம். ஆனால், வஹ்ஹாபிஸத்தில் நேர்மறையானது எதையும் என்னால் காண முடியவில்லை. அதன் பிந்திய வெளிப்பாடான ஐ.எஸ்.இயக்கத்தைப் பொறுத்த வரையில், அது பேரச்சம் தரக் கூடியதும், குருதிக் கறை படிந்ததும், காட்டுமிராண்டித்தனமானதுமான ஒரு பயங்கரமாக காட்சியைத் தருகிறது. வஹ்ஹாபிஸத்தைப் பற்றி அது அதிகார வழிபாட்டிற்கான ஓர் இயக்கம் என்ற வகையில் இன்னும் அதிகமதிகம் சொல்ல வேண்டியுள்ளது. கவிஞர் ஈட்ஸ் உடைய மாபெரும் தீர்க்கதரிசனச் செய்யுளின் இறுதி அடிகளை ஞாபகப்படுத்தி இக்கட்டுரையை நான் முடிக்கிறேன்: 'என்ன இந்த அகோர மிருகம் பெத்லஹெம்மை நோக்கி தலை குனிந்து இழுத்திழுத்துக் கொண்டு நடக்கின்றது....மீண்டுமொரு முறை பிறப்பதற்கு!' ஐ.எஸ்.இயக்கம் என்ற அகோர மிருகம் மக்காவை நோக்கி தலை குனிந்து இழுத்திழுத்துக் கொண்டு நடக்கின்றது....மீண்டுமொரு முறை பிறப்பதற்கு!




கட்டுரையாசிரியரின் மின்னஞ்சல் முகவரி: izethhussain@gmail.com


Sunday, March 29, 2015

இஸ்லாமியப் புரட்சிக்கு வயது 36


இந்தத் தலைப்பில் கனடாவின் கிரஸன்ட் இன்டர்நெஷனல் சஞ்சிகையின் பிப்ரவரி 2015 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் ஜஃபர் பங்காஷ;, சென்ற பிப்ரவரி 11ம் திகதி 36 ஆண்டுகள் நிறைவடைந்த ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, ஏகாதிபத்திய மற்றும் ஸியனிஸ சக்திகளின் இடைவிடாத சதித்திட்டங்கள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு மத்தியிலும் எவ்வாறு 36ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றது என்பது பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையை விவரிக்கிறார். அதற்கு ஈரானிய மக்களின் இஸ்லாத்துடனான இறுகிய பிணைப்பும் அதன் முத்தகீ தலைமைத்துவத்தின் தக்வாவும்தான் காரணம் என அவர் கூறுகிறார்:

'உலகில், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் நிறைந்த மத்திய கிழக்கில், அத்துணை அமைதி குலைவுக்கு மத்தியிலும் ஒரு நாடு தீபச்சுடராகவும் நிலைபெற்றதாகவும் விளங்குகிறது என்றால் அது இஸ்லாமிய ஈரான்தான். மேற்குநாடுகளினால் பல்லாண்டுகளாக சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகள், வெளிஆக்கிரமிப்பு, பெருமளவிலான உள்நாட்டு hநச வேலைகள் என்பனவற்றை எதிர்கொண்டுங் கூட, இன்றும் இந்த இஸ்லாமிய நாடு நீடித்திருக்கின்றது என்பதல்லாமல், நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பது உண்மையில் நமது விஷேச கவனத்திற்குரியதாகும். மற்ற நாடுகளாயிருந்தால் எப்பொழுதோ வீழ்ந்து போயிருக்கும்.

ஈரானின் திடநிலைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என்ன? அதனிடம் பிரம்மாண்டமான எண்ணெய் மற்றும் வாயு வளம் இருப்பதனாற்றான் ஈரான் எல்லாச்சூறாவளியிலும் தாக்கு பிடித்து நிற்கிறது என்பது தவறான அனுமானமாகும். காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்: அது இஸ்லாம்|. ஈரான் தனது மக்களின்   ; வ த ற ; கு ம ,அடக்கியொடுக்கப்பட்டவர்களை கேடிலா ன்முறையில் கவனிப்பதற்குரிய செயலொழுங்கு முறையொன்றை ஸ்தாபிப்பதற்கும் இஸ்லாமிய வழியையே பின்தொடர்ந்து செல்கின்றது. இஸலாமிய ஈரான் முழுநிறைவானதன்று என்பது உண்மைதான். ஆயினும் அது மற்றெல்லா நாடுகளையும் விடச் சிறந்தது எனலாம். சவூதி அரேபியா அல்லது பாகிஸ்தான் போன்றல்லாமல்,  ஈரானின் இஸ்லாத்துடனான பற்றுதலும் ஒட்டுதலும் மேலெழுந்த வாரியான ஒன்றன்று. மாறாக, இஸ்லாமியக் கொள்கை கோட்பாடுகளை அடியொற்றி வாழ்வதற்கான உண்மையான ஈடுபாடு அங்கு காணப்படுகிறது. இதனை அதன் தலைவர்கள் முதல் அடிமட்டத்திலிருப்பவர்கள் வரை, வழிநெடுக கசிந்துசெல்லும் எளிமைப் போக்கிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய ஈரானின் மற்றுமிரு குறிப்பிடத்தக்க அம்சங்கள், வெளி செல்வாக்கு அல்லது தலையீட்டிலிருந்து அதன் முழுமையான சுதந்திரமும், வெளிநாட்டு கடன் இல்லாத தன்மையும் ஆகும். எந்தவொரு அளவுகோலைப் பயன் படுத்தினாலும், இவை முற்றிலும் முதன்மையான சாதனைகளாகும். எந்தவொரு நாடும் சுதந்திரமான திறனாய்வு முடிவு எடுப்பதை, சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற மேற்கத்திய சக்திகள் சகித்துக் கொள்ளாத   அவை, இணங்க மறுக்கும் நாடுகளை வழிக்கு கொண்டுவர, அவற்றின் பிரம்மாண்டமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தும். அவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஈரான் மீது அதனைப் பிரயோகித்தும், படுதோல்வியைத் தழுவிக் கொண்டன. இதேபோன்று, கொள்ளைக்காரர்களும் இரத்தம் உறிஞ்சிகளும் மேலாதிக்கம் செலுத்தும் சர்வதேச நிதியமைப்பு முறைக்குள் ஈரான் அங்கம் வகிக்காததன் காரணமாக, பிறரை ஓட்டாண்டியாக்கி ஒரு சிலரின் கைகளில் செலவத்தை குவியச் செய்யும் முதலாளித்துவ நிதிநிலை ஏய்ப்பிலிருந்து அது றமையுடன் தவிர்ந்து கொண்டது. உண்மையான இஸ்லாமிய அடிப்படைகளைப் பின்பற்றுவது மட்டுமே, மக்கள் இத்தகைய அழுத்தங்களை எதிர்த்து நிற்கச் செய்கின்றது. ஈரான் அத்தகைய மாண்புகளின் கண்கூடான பிரதிபலிப்புÉ ஏனைய முஸ்லிம்கள் தமது பிரிவு மனப்பான்மையுடன் கூடிய அரைக்கண் பார்வையை அகற்றிக்கொண்டல்  ; முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க செயல்வடிவம் அதுவாகும்.'


Wednesday, April 16, 2014

ஓர் உரத்த சிந்தனை: ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?

தென்னாஃபிரிக்காவின் அல்-பலாக்ஹ் பத்திரிகை ஆசிரியர் வினவுகிறார்:

ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?
 

வாழ்க்கையில் வேறெதனையும் உருப்படியாகச் செய்யத் தெரியாத மவ்லவிமார்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களும், இப்போது புதியதொரு விளையாட்டை ஆடத் துவங்கி யிருக்கின்றனர். அது என்னவென்றால், நமது ஷிஆ முஸ்லிம் சகோதரர்களை 'காஃபிர்கள்' என அழைப்பது. அல்லாஹு சுபுஹானஹுத் தஆலா குர்ஆனிலே, நாம் எந்த வொரு முஸ்லிமையும் ஒரு 'காஃபிர்;' என அழைக்கக் கூடாது எனத் தெளிவாக கூறியுள்ளான். (அல்-குர்ஆன் 4:94); நமது உயிரிலும் மேலான ரசூலுலலாஹ் (ஸல்) அவர்கள், சக முஸ்லிம்களை 'காஃபிர்கள்' என அழைப்பதினின்றும் நம்மைத் திட்டவட்டமாகத் தடுத்துள்ளார்கள். ஆயினும், இந்த அற்பத்தனம் கொண்ட, சிறிய உள்ளம் படைத்த புரோகிதர்கள் - முஸ்லிம் உலகின் அறிவுக் குள்ளர்கள், முஸ்லிம் என்றால் யார், யாரில்லை என நிர்ணயிக்கும் மாபெரும் பொறுப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுப்பு என்ற அந்தஸ்திலிருந்து அல்லாஹ்வை கழற்றி எறிந்து விட்டு, அந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கின்றனர். மேலும் அதே நேரம், நமது நபியவர்களின் கண்டிப்பான உத்தரவையும் ஒதுக்கித் தள்ளுவதற்கும் மிதித்துச் செல்வதற்கும் துணிந்திருக்கின்றனர்

வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஏனைய தருணங்களிலும், ஷிஆ முஸ்லிம்களை  'காஃபிர்கள்' எனத் தாக்கி, பிரசங்கங்கள் செய்வதற்கும் (அத்துடன்;-அல்லது) தங்கள் வழமையான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதற்கும் முனைகின்றனர். அவர்களின் அர்-ரஷீத், மஜ்லிஸ், சவுத்துல் இஸ்லாம். இன்ன பிற போன்ற (தென்னாஃபிரிக்காவிலிருந்து வெளிவரும்) பத்திரிகைகளில் ஷிஆக்களை வெளிப்படையாகப் பழித்துரைக்கும் ஒரே மாதிரியான-முழுக்க வெறுப்பை உமிழும் கட்டுரைகள் நிறையவே காணப்படுகின்றன.

இமாம் குமைனி 'ஷிஆ' என அடைமொழியிட்டு கண்டிக்கப்படுகிறார். இமாம் குமைனி சாதித்ததைப் போன்ற எதனையும் இஸ்லாத்திற்காக நமது 'சுன்னி' மவ்லவிகளுள் எவராவது சாதித்திருக்கின்றாரா? இந்த சிறிய உள்ளம் படைத்த, கீழ்த்தரமாக சேற்றை அள்ளி வீசும் நமது புரோகிதர்கள், வாய்ச் சவடால்களில் மட்டுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள்; நமது தீனுல் இஸ்லாத்திற்காக செயல்ரீதியாக எதனையும் செய்ய இயலாதவர்கள். இன்றைய இளைஞர்களும், குர்ஆனையும் நபியவர்களையும் நேசிக்கும் அனைவரும், தர்க்கரீதியான வாதங்களையும் சரியான ஆதாரங்களையும் விரும்புகின்றார்கள் என்பதால், எளிதாக இந்த புரோகிதர்களுடன் சலிப்படைந்திருக்கின்றார்கள்.  

'அஹ்லுல் கிப்லா' (கிப்லாவை முன்னோக்கும் கூட்டத்தினர்)



திருநபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள்-ஃபுகஹாக்கள், (முஸ்லிம்களை 'காஃபிர்கள்என விளிக்கும்) தங்களின் தக்ஃபீர் முன்முடிபு மனப்பான்மையை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தனர்; மேலும் அவர்கள் இறுதியில், 'லா நக்ஃபுர் அஹதன் மின் அஹ்லில் கிப்லா' (அஹ்லுல் கிப்லாவான எவரையும் ஒரு 'காஃபிர்;' என நாம் தீய குறியிட முடியாது; அதாவது, தனது தொழுகையை நிறைவேற்ற எவரொருவர் -ஆணோ பெண்ணோ- கிப்லாவை முன்னோக்கிறாரோ, அவரை ஒரு  'காஃபிர்' என அழைக்க முடியாது) என்று பிரகடனஞ் செய்தார்கள்.

நீண்ட அடர்ந்த தாடிகளைக் கொண்ட  இந்த 'இறையடியார்'களிடத்தில் நாம் கீழ்க்கண்ட கேள்வியை முன்வைக்கலாமா? 'ஷிஆக்கள், ஸலாத் எனும் தங்கள் தொழுகையை நிறைவேற்ற தங்களின் கிப்லாவாக எதனை முன்னோக்கின்றார்கள்? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையையா அல்லது மக்காவிலுள்ள கறுப்பு இறை இல்லத்தையா?'

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஹதீதொன்று புகாரி கிரந்தத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: 'எவரொருவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்'. அதன்படிசுன்னிக்களைப் போன்றே இதே கலிமாவைப் பிரகடனஞ் செய்து ஏற்றுக் கொள்கின்ற ஷிஆக்கள், (இந்த ஹதீதின் பிரகாரம்,) ஜன்னத்தில் பிரவேசிப்பார்களா அல்லது மாட்டார்களா? என்பதை, மார்க்கரீதியாக ஓரக்கண்-கோணல் பார்வை கொண்ட மதகுருமார் நமக்கு சொல்லட்டும்! நமது நபி (ஸல்) அவர்கள், 'ஷிஆக்களைத் தவிர எவரொருவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்' என்று சொல்லவில்லை என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. .

பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்கள்
 
எவரெல்லாம் நமது தூய தீனுல் இஸ்லாத்தின் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்களோ, அத்தகைய முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் அல்லாஹு சுபுஹானஹுத் தஆலாவின் பெயராலும் அவனது அன்புத் தூதர் (ஸல்) பெயராலும் அழைப்பு விடுக்கின்றோம்: 'தங்களை மவ்லானாக்கள், ஷெய்குகள், இமாம்கள் என வீம்பு பேசி ஜாலம் செய்கின்ற இந்த 'மார்க்க

வியாபாரிகளை - பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்களை - நம் மத்தியிலிருந்து அகற்றி விடுவதற்கு துணிந்து செயல்படுங்கள்!

இந்த 'மார்க்க வியாபாரி'களுக்கு தவறுதலாக எந்தளவுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் வழங்குகிறோமோ அல்லது எந்தளவுக்கு அவர்கள் மீது அக்கறை செலுத்துகிறோமோ, அவர்கள் அந்தளவுக்கு நம் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்! துருக்கியின் கமால் அத்தாதுர்க் அந்தக் கால மவ்லவிமார்களுக்கு என்ன செய்தாரோ அதனை நாம் எல்லோரும் செய்வோமாக! அப்போதுதான், முஸ்லிம் சமூகத்தில் நாம் சாந்தியையும் சமாதானத்தையும் காண்போம்; இஸ்லாம் மீண்டும் ஒருமுறை செழித்தோங்கும்!

இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் உலகின் நகைப்பிற்கு உரியதொன்றாய் ஆகிவிட்டது! இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் அவமதிக்கப்படு மொன்றாய் தலை குப்புற வீழ்ந்துவிட்டது!
நமது நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கை செய்து, நமது சக முஸ்லிம்களுடன்எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி- நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டவட்டமான வழிகாட்டுதலை, நமக்கு வழங்கி இருக்கிறார்கள்: பெருமானார் (ஸல்)  கூறினார்கள்: 'மூன்று விஷயங்கள் மார்க்கத்தில் மிகவும் இன்றியமையாதவையாகும்: (1) 'அல்லாஹ்;வைத் தவிர வேறு இறைவனில்லை' என மொழியும் ஒரு மனிதனைக் கொல்வதினின்றும் தவிர்ந்து கொள்ளுங்கள்; (2) அவன்/அவள் எந்த வொரு பாவத்தைச் செய்தாலும் சரியே, அவனை/அவளை ஒரு நிராகரிப்பாளர் எனப் பிரகடனஞ் செய்யாதீர்கள்; (3) அவன்/அவள் உடைய எந்த வொரு செயலுக்காகவும், அவனை/அவளை இஸ்லாத்திலிருந்து தூர விலக்கி வைக்காதீர்கள்.' (அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீத் சுனன் அபூதாவூத் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
(நன்றி: அல்-பலாக்ஹ் பாகம் 25, இல.2 மே-ஜூன் 2000 பக்.3)
(தமிழில்: 'இப்னு புகாரி')