Showing posts with label Ale Saud. Show all posts
Showing posts with label Ale Saud. Show all posts

Friday, August 2, 2013

சர்வதேச 'குத்ஸ்' தினம்

புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.




ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.




குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர். 
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர். 
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன.  ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.  கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின்  நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.    


வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.

 


சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.



ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில்,  அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
 
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.













Wednesday, October 24, 2012

இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள்,இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தி
















இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள், 2012 செப்டம்பர் 13ந் திகதி அன்று,  இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சர்வ வல்லமையும் அனைத்து அறிவும் கொண்ட அல்லாஹ் கூறுகின்றான்: 'அவர்களின் அபிலாசை, தங்கள் வாயினால் ஊதி அல்லாஹ்வின் ஒளியை அணைத்து விடலாம் என்பதுதான்ளூ ஆயினும், நிராகரிப்பாளர்கள் (அதனை) எவ்வளவு வெறுத்த போதிலும், அல்லாஹ் தனது ஒளியை சம்பூரண மாக்குவான்'  (திருக்குர்ஆன் 61:8)

மதிப்பிற்குரிய ஈரான் மக்களே! மகத்தான இஸ்லாமிய உம்மத்தைச் சேர்ந்தவர்களே!
இஸ்லாத்தின் எதிரிகளான இந்த தீயவர்கள், சங்கை வாய்ந்த நபியவர்களை
(இறைவனின் நல்லாசிகள் அவர்கள் மீதும், அவர்களின்; பரிசுத்த
குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!) பழிப்பதன் மூலம், தங்கள் ஆழ்ந்த
வெறுப்பை மீண்டுமொருமுறை வெளிக்காட்டியிருக்கின்றனர். மேலும், இவர்கள் தங்கள் முட்டாள்தனமானதொரு மற்றும் அருவெறுப்பான நடவடிக்கையின் மூலம், இன்று உலகில் இஸ்லாத்தினதும் திருக்குர்ஆனி  னதும் பிரகாசம் அதிகரித்து வருவதைக் கண்டு தீய ஸியனிஸக் குழுக்கள் ஆத்திரமடைந்திருப்பதைக் காண்பித்திருக்கின்றனர். இறை படைப்புகள் அனைத்திலும் மிக சங்கை பொருந்தியவரை இவர்கள் தங்கள் வெறுக்கக்கூடிய அசிங்கத்திற்கு இலக்காகக் கொண்டிருப்பதானது, இந்த மாபெரும் குற்றத்தையும் பாவத்தையும் இழைத்திருப்பவர்களை அகௌரவப்படுத்துவதற்குப் போதுமான காரணமாக அமையும்.

இந்த தீய நடவடிக்கையின் பின்னணியில் அமைந்திருப்பது,  ஸியனிஸம்,
அமெரிக்கா, மற்றும் ஏனைய ஆணவம் கொண்ட அதிகாரச் சக்திகளின் விரோதக் கொள்கைகளாகும். இதன் மூலம், மகிமை பொருந்தியனவாகப் போற்றப்படும் மாண்புகளின் மீது இஸ்லாமிய உலகின் இளந் தலை முறையினர் மரியாதை இழக்கச் செய்வதையும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகள் மழுங்கடிக்கப்படுவதையும் இவர்கள நாடுகின்றனர். இந்த தீய சங்கிலித் தொடரில் முந்தைய இணைப்புகளான, குறிப்பாகச் சொல்வதென்றால், ஸல்மான் ருஷ்தி, டேனிஷ் காhட்டூன் வரைஞர்,
அல்குர்ஆனை எரித்த கிறிஸ்தவ மதகுருமார் போன்றவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்திருந்தால், ஸியனிஸ முதலாளிகளுடன் தொடர்புடைய கம்பெனிகளினால் வெளியிடப்படும் பலவகையான இஸ்லாம் விரோதத் திரைப்படங்களை விநியோகம் செய்யாமலிருந்தால், இன்று இந்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை இவர்கள் செய்திருக்கமாட்டார்கள். இதற்கான முதல் குற்றவாளி ஸியனிஸமும், அமெரிக்க அரசாங்கமும்தான். அமெரிக்க அரசியல்வாதிகள், தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என உண்மைப்பூர்வமாகக் கூறுவார்களாயின், இந்த கோரமான குற்றத்தை இழைத்தவர்;களையும் இவர்களுக்கு நிதி வழங்கி ஆதரித்தவர்களையும்
தகுந்த விதத்தில் தண்டிக்க வேண்டும். ஏனெனில், இவர்களின் செயல்களினால், முஸ்லிம் மக்களின் உள்ளங்கள் கடும் வேதனை அடைந்திருக்கின்றன.

மேலும், உலகெங்கிலுமுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்: இஸ்லாமிய மறுமலர்ச்சி க்கெதிரான எதிரிகளி;ன் இந்த பயனற்ற, களேபரமான நடவடிக்கைகள், இந்த எழுச்சியின் மகத்துவத்திறகும் முக்கியத்துவத்திற்குமான ஓர் அடையாளமாகும். 'மேலும், அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 12:21)

ஸெய்யித் அலி காமனெய்

Wednesday, January 18, 2012

பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

 


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இஸ்ரேல் என்று கூறப்படும் யூதர்கள் கைப்பற்றியுள்ள பகுதியும் சேர்ந்திருந்த பலஸ்தீனத்தில், ஏறத்தாழ நுற்றுக்கு நுறு அரபிகளே வாழ்ந்து வந்ததுடன் சிறு சத வீதமே யூதர்கள் அங்கு இருந்தனர். ஆகையால் அது மிக அமைதியான நாடொன்றாகவே இருந்தது.



பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!







இக்காலகட்டத்தில் யூதர்கள் உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், சோவியட் யூனியனிலும், அமெரிக்காவிலும், வேண்டாத விருந்தாளிகளாக, அந்தந்த நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.


 இதற்குக் காரணம் யூதர்கள் செல்லுமிடமெல்லாம் ஏதாவது சதி செய்பவர்களாகவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்ததே. இவ்வாறு தங்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் இருந்த யூதர்கள், தமது 'சர்வதேச யூதர் சம்மேளனத்தை' 1897 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாஸல் நகரத்தில் ஒன்று கூட்டியபோது, பண்டைய காலத்தில் தாம் வாழ்ந்து வந்த பலஸ்தீனத்தில் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் யூதர்களை குடியேற்றி, பிறகு அங்குள்ள அரபிகளோடு பிரச்சினையை ஏற்படுத்தி, பலஸ்தீனர்களை பலமான சில நாடுகளுடன் சிண்டு முடியச் செய்து, பகைமை ஏற்படுத்தி அந்த குழப்பங்களை பயன்படுத்தி தமக்கென்று ஒரு தனி நாடை பலஸ்தீனத்தில் பிரித்தெடுப்பதற்கு முயற்சி செய்வது என முடிவெடுத்தனர்.


இதே வேளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கில் தம்முடைய ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு அப்பிராந்தியத்தில் ஒரு குழப்ப நிலையை சதாவும் வைத்திருப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிற்கு 1904 ம் ஆண்டு ஒரு மாநாட்டின்போது பிரிட்டன் வந்தது.
மேற்படி இரு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதமான தீர்வொன்று இருப்பதை யூதர்களும் ஆங்கிலேயர்களும் கண்டனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக உலகில் சிதறி வாழும் யூதர்களை சிறுகச் சிறுக பலஸ்தீனத்;தில் குடியேற்றுவது என்று இரு சதிகாரக் கும்பல்களும் முடிவு செய்தன.
இக்காலகட்டத்தில் பலஸ்தீனம், துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தின் போது, 1917 ல் துருக்கி தோற்கடிக்கப்பட்டைத் தொடர்து ஆங்கிலேய-யூதச் சதியின் முதல் கட்டத்தை செயற்படுத்துவதற்கான வசதி அச்சதிகாரர்களுக்குக் கிடைத்தது. பலஸ்தீனமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பலஸ்தீனதத்தின் அமைதியும் பலஸ்தீனர்களுடைய நிம்மிதியும் முற்றாகவே தொலைந்தே போயின. அதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை நிர்வகித்து வந்த பிரிட்டனின் படைகளுடன் இணைந்த யூதர்கள், பலஸ்தீன மக்களுக்கு பல வித கொடுமைகளைச் செய்யலாயினர். பலஸ்தீன வாலிபர்களும் தம்மால் இயன்ற விதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி வந்தனர். ஆனால் ஆயுத பலமோ, வெளி உதவிகளோ இன்றி மேற்கொள்ளப்பட்ட அப்போராட்டங்கள் அவர்களுக்கு சாதகமற்றவைகளாகவே இருந்து வந்தன. ஆனால் யூதர்களின் தாக்குதல்களோ பன்மடங்கு பயங்கரமாகின. 'ஹகானா' 'ஸ்டர்ன் இர்குன்' 'ஸ்வாயீ லியாம்' என்ற பெயர்களில் இயங்கி வந்த யூதப்படைகள் பலஸ்தீன மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களுக்குல்; புகுந்து அங்கிருந்த ஆண்கள், பெண்கள், கற்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மட்டுமன்றி கைக்குழந்தைகளையும் படுகொலை செய்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலமைச்சர்களாக ஆன மெனாகெம் பெகின், யிட்சக் ஷமீர், ஏரியல் nஷரோன் போன்றோரே இக்கொலைப்படைகளின் தலைவர்களாக அன்று இருந்தனர். ஜெரூஸசத்திற்கு அருகில் அமைந்துள்ள டயர் யாசீன் கிராமத்தில் யூத அரக்கர்கள் நடத்திய பேயாட்டத்தின் போது சில மணி நேரங்களில் இரு நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் உலகில் நடைபெற்ற மிருகத்தனமான மனித வேட்டைகள்; வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்;றது. யூதர்கள் அவ்வாறு வெறியாட்டம் நடத்தும் போது, பலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அவற்றைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி யூத அரக்கர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பாதுகாப்பையும் செய்தும் கொடுத்தனர். இக்கால கட்டத்தில், இந்த அக்கிரமங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் சில பலஸ்தீனக் குடும்பங்கள் தங்களுடைய உயிர்களை காத்துக்கொள்ளும் பொருட்டு பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. அவ்வாறு அன்று சென்றவர்கள் அந்நாடுகளில் அகதிகாளக வாழ்ந்து வந்தததுடன், அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் அதிகமானோர் இன்றளவிலும் அகதிகள் அந்தஸ்த்திலேயே அவமானத்துடன் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.





இதற்கிடையில் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களில் அதிகமானோர் அவசர அவரசமாக பலஸ்தீனத்திற்கு வந்து குவியலாயினர். தங்கள் தேசத்தை சூறையாடுவதற்கு யூதர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதியை கண்கூடாக கண்டு வந்தாலும் அதற்கு எதிராக போதுமான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பலஸ்தீன மக்கள் தவித்தனர். யூதர்களும் தங்களுடைய அக்கரமங்களை எந்தத் தடையுமின்றி தொடர்ந்துக் கட்டவிழ்த்து வந்தனர்.


1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி.
நவீன உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரமான மோசடி அன்று தான் நடைபெற்றது. ஆம். அந்நாளில் தான் பலஸ்தீனத்தில் ஒரு பகுதியை 'இஸ்ரவேல்' என்று ஐநா சட்ட விரோதமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த இஸ்ரவேலின் அஸ்திவாரத்தை தோண்டிப்பார்க்கும் எவரும்;, அதில் பெண்களின், வயோதிபர்களின், கற்பிணிகளின், சிசுக்களின் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையே கான்பார்.
ஆனால் அன்று வேறாக்கப்பட்ட இஸ்ரேலிலும் யூதர்களை விட பலஸ்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து இலட்சமாக அத்தருணத்தில் இருந்த இஸ்ரேலின் சனத்தொகையில் சுமார் இருபதுனாயிரம் பலஸ்தீனர்கள் அதிகமாகவே இருந்தனர்.


அது முதல் அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வரசாங்கம் யூதக்கொலைக்காரர்களுக்கு சார்பாகவே செயற்படும் படி யூதர்கள் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக பல துணிகர அக்கிரமங்களை தொடர்வதற்கு யூத வெறியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, சிறு தாக்குதல்கள் தவிர, பலஸ்தீன மக்களை அழிப்பதற்கு யூதர்கள் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அறுபதையும் விட அதிகமாகும். அதைத் தொடர்ந்து 1967 ல் எகிப்தின் கோலான் குன்றுப் பகுதியையும், அதன் பிறகு லெபனானின் தென் திசையில் அமைந்துள்ள காசாப் பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் யூதர்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டனர்.


 பக்கத்து நாடுகளின் பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை கைவிட்டுவிடுவதாலும், நிறந்தர எல்லைகள் இல்லாத உலகின் ஒரே நாடாக யூதர்களின் இப்பேய் ராஜ்ஜியமே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த வெறியாட்டங்களுக்குத் தலைமை தந்தக் கொலைகாரர்களை ஒருவர் பின் ஒருவராக தமது பிரதமர்களாக தேர்நதெடுப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக திகழ்வதிலும் யூதர்கள் தன்னிகரற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
நவீன யுகத்தில் பல நாடுகள் உலக சட்டங்கள், உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் எனப் பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, பன்பாலும் மனித நேய விழுமியங்காளலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ள போதிலும், யூதர்கள் இச்சகல உடன்பாடுகளையும் பொதுவான சட்டங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்.


ஒரு யூதனின் விரலில் உள்ள நகத்துண்டிற்கு ஒரு மில்லியன் அரபிகள் கூட சமமாக மாட்டார்கள் என ஒரு யூதப் பாதிரி பகிரங்கமாக இணவாதத்தை வெளிப்படுத்திவிட்டு, அதற்காக எந்த விமரிசனத்திற்கும் ஆளாகல் இருக்கும் சூழல் உள்ள ஒரே பிரதேசம் உலகில் இந்த இஸ்ரேல் மாத்திரமேயாகும். சியோனிஸம் எனப்படுவது ஒரு பயங்கரமான இணவாதம் என ஐநா அமைப்பே பிரகடனப்படுத்தி இருந்தும், யூதர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலகில் உள்ள நாடுகளில் இது வரை மிக அதிக எண்ணிக்கையிலான ஐநா எச்சரிக்கைகளை பெற்றுள்ள நாடும் இஸ்ரேலேயாகும். ஆனால் ஐநாவின் பின்னணியில் இருந்த வண்ணம் அதை ஆட்டிப்படைப்பதே இந்த யூதர்கள் தான் என்பதால் இதை எல்லாம் பார்த்து இஸ்ரேல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் அவ்வமைப்பின் மீது பல உலக நாடுகள் நம்பிக்கை இழந்து வருகின்றன. தொடரும் இந்த அநியாயங்களை பார்த்தும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத உலக நாடுகளில் வாழும் நல்லோர், அதிர்ச்சியால் உரைந்து போனவர்களாக விக்கித்து நிற்கின்றனர்.
இந்த அநியாயங்களை அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவின் நட்பை இழந்து விட்டால், பிழைப்பு நடத்த முடியாது என நினைக்கும் நாடுகள், இவைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.


இருந்த போதிலும், மெதுவாக வந்தாலும் இறைவனின் நீதி ஒரு நாள் வந்தே தீரும் என்ற மாறாத நியதியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, பலஸ்தீன மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, சோர்வடையாமல் அறை நூற்றாண்டு காலத்ததையும் விட அதிகக் காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆம். நிச்சயம் தர்மம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

Monday, January 16, 2012

முஸ்லிம் உம்மத்தைப் பிளவுபடுத்த முயலும் சவூதிகள்

-அபூதர்;



ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கிலாஃபாஹ்; என்ற இஸ்லாமிய அமைப்பு முல்கிய்யாஹ் எனும் முடியாட்சியாக உருமாற்றப்பட்டதிலிருந்து, சட்ட விரோத ஆட்சியாளர்களின் கைகளில் "பிரிவினைவாதம்" என்பது ஒரு கருவியாக காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இன்று பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்ட விரோத ஆட்சியாளர்கள் தமது அடக்குமுறைக் கொள்கைகளிலிருந்தும் தாம் மேற்கிற்கும் ஸியனிஸ இஸ்ரவேலுக்கும் சேவகம் செய்து வருவதிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்த ஆயுதத்தை

உபயோகிக்கின்றனர்.

இன்றுவரை இத்தகைய விஷமிகளுள் முதன்;மை இடத்தை வகித்தது சவூதி அரேபியா ஆட்சியாகும். அதனைத் தொடர்ந்து குவைத். இப்பொழுது அந்த வரிசையில் சுண்டைக்காய் பஹ்ரைனும் கூட சேர்ந்து கொண்டுள்ளது. ஏனெனில் பல தசாப்தங்களாக மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு உள்ளான அந்நாட்டு மக்கள் அதன் சட்ட விரோத ஆட்சிக்கு அறைகூவல் விடுத்து வருகிறார்கள். சவூதி அரேபியா, ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யொன்றை நிறுவி, ஷீஆக்களுக்கெதிராக தக்ஃபீர் (இறைமறுப்பு) குற்றச் சாட்டுகளுடனான ஃபத்வாக்களை வழக்கமாக வெளியிட்டு வருகிறது. இத்தகைய ஃபத்வாக்களின் மூலம் ஷீஆக்களின் மீது மட்டுமல்லாமல், தமது குறுகலான அதிதீவிரக் கருத்துக்களிலிருந்து
மாறுபடும் எந்தவொரு முஸ்லிமையும் கூட ஒரு 'காஃபிர்' என உடனடியாகப் பெயர் சூட்டுவதற்கோ அல்லது பித்ஆஹ் (நூதன செயல்) மற்றும் ஏனைய 'இஸ்லாமல்லாத' செயல்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சுமத்துவதற்கோ முனைகின்றனர். சவூதிகள் மாத்திரம்தான் 'உண்மை' முஸ்லிம்கள்

என்பதுதான் இதில் பொதிந்திருக்கக்கூடிய செய்தியாகும்.
ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின்  ஆட்சியாளர்கள்
  

தக்ஃபீரி (காஃபிர்) ஃபத்வாக்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் சவூதிகள் முன்னணியிலிருக்கின்றனர். முஸ்லிம் கிழக்கின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைக் கோரி எழுச்சி பெற்றிருக்கும் பஹ்ரைன் மக்கள் 'ஷீஆக் கிளர்ச்சியாளர்கள்' என முத்திரை குத்தப்;பட்டு புறந்தள்ளப்படுகின்றனர்.


பஹ்ரைனின் விவகாரங்களில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தலையிடுவதாக குற்றஞ்சாட்டும் அளவுக்கு சவூதிகள் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சவூதி துருப்புகளும் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கக் கடற்படை யினரும் பஹ்ரைன் எங்கிலும் இரகசியமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது ஈரானைப் பற்றிய பொய்ச் செய்திகளை சவூதிகள் நாராசமாகப் பரப்புவதென்பது நமது விசேஷ கவனத்திற்குரியதாகும்.

ஈரானிற்கு எந்த வகையிலும் நண்பர்களல்லாத மேற்கத்திய அதிகாரிகள் கூட பஹ்ரைன் மக்களின் எழுச்சியில் ஈரானின் ஈடுபாட்டிற்கோ அல்லது தூண்டு தலுக்கோ எந்தவிதமான சான்றுகளையும் தாம் காணவில்லை எனக் கூறியிருக் கும் போது சவூதிகள் ஜி.ஸி.ஸி. எனும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்ஸிலை தெஹ்ரான் மீது
 கணைகளைத் தொடுப்பதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தி

வருகின்றனர்.


President Kennedy and King Faisal


சென்ற ஏப்ரல் 17ந் திகதி ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின் அச்சமடைந்த ஆட்சியாளர்கள் றியாதில் சந்தித்து ஜி.ஸி.ஸி. நாடுகளில் ஈரான் தனது 'தலையீட்டை' நிறுத்த வேண்டுமெனக் கேட்டிருக்கின்ற னர். இந்த கூட்டம், வெகு வேகமாக மோசமடைந்து வரும் யமன் நெருக்கடி யைப் பற்றி பேசுவதற்காக

Toasting King - See any Bidah?

ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் அங்கு கூடிய வெளி நாட்டமைச்சர்கள், ஈரானிற்கெதிராக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கு நேரத்தைத் தேடிக் கொண்டனர். ஆதாரமெதனையும் வழங்காமல், பஹ்ரைன் மக்களின் சட்டப்பூர்வப் போராட்டத்தை நசுக்குவதற்காக அந்நாட்டை தாம் ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைப்பதற்கான ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள சவூதிகளும் அமீரகத்தவர்களும் ஜி.ஸி.ஸி. மூலமாக 'தமது அங்கத்துவ நாடுகளுக்கிடையில் மோதலையும் அழிவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் தீய தன்மையிலான ஈரானிய தலையீட்டையும்  தூண்டுதல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் (ஐ.நா.)பாதுகாப்புக் கவுன்ஸிலும் மேற்கொள்ள வேண்டும்' எனக்

கேட்டுள்ளனர். 
 Jordan, Amman. 24th anniversary of Arab revolt under King Hussein & Lawrence, celebration Sept. 11, 1940. The march past of the Arab Legion

அந்த அறிக்கையில் ஜி.ஸி.ஸி. தனது விவகாரங்களில் எல்லாவிதமான அந்நிய தலையீடுகளையும் ஆணித்தரமாக மறுதலிப்பதாகவும், ஈரானிய ஆட்சியாளர்கள் தமது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விசேஷமாக பெரும்பான்மையான ஷீஆ மக்களைக் கொண்டிருக்கும் பஹ்ரைனை ஆக்கிரமித்து (இதனைப் போன்றே அடக்கியொடுக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படாத கணிசமான ஷீஆ மக்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருகின்றனர்) அங்கு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் களை நடத்தும் தமது வெறிச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாத சவூதிகள் இதனை முஸ்லிம் சமூகத்தின் பிரிவினைக்கான ஒரு விவகாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.


மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கோருவது எவ்வாறு ஒரு  'பிரிவினைவாத'ப் பிரச்சினையாக மாறும்? சவூதிகள் ஹுஸ்னி முபாரக்கை (எகிப்தில்) பதவியிலிருந்து நீக்கியதற்கும் கூட எதிர்ப்பு தெரி வித்திருந்தனர். ஏனெனில் அதன் காரணமாக மக்கள் சவூதி அரசாட்சியில் அதேபோன்று உரிமைகளைக் கோருவார்களாயின் தமது சுயரூபம் வெளிப்பட்டு விடும் என அவர்கள் கருதினர்.


உண்மை இதுதான். முபாரக்கைத் தூக்கியெறி வதில் பிரிவினைவாதமும் சம்பந்தப்பட்டிருந்ததா என்றால் மிகத் தெளிவாக இல்லையென்றே கூறவேண்டும். அவ்வாறென்றால் பஹ்ரைனியர்கள் தமது உரிமைகளையும் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கோரி வருவதை எவ்வாறு அவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக வகைப்படுத்த முடியும்?


 சவூதிகள் தாம் பல பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக உணர் கின்றனர்;;. ஆம் அது உண்மைதான்: அவர்களின் ஆட்சி சட்ட விரோதமான தாகும். மேலும், அவர்களது கொள்கைகள், முஸ்லிம் உம்மத்தின் பெரும் நலன்களுக்கு மிக

மோசமான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன.



சவூதிகளும் உதவிக்கு ஒருவரையொருவர் பற்றிப் பிடித்திருக்கும் பீதி கொண்டுள்ள அவர்களின் ஜி.ஸி.ஸி. பங்காளிகளும் வெறுமனே 'சர்வதேச சமூகத்திற்கும் பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கும்' கோரிக்கை விடுப்பதைக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருக்கும் தமது  ஆட்சிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் திருப்தியடையவில்லை. இந்த கோரிக்கைகள் அதிகமான நேரடி உதவி களைக் கிடைக்கச் செய்யாது என்பது அவர்களுக்குத் தெரியும். மேற்கத்திய ஆதரவு என்பது நட்புரீதியான அரசுகளுக்குக் கூட சில வரம்புகளைக் கொண்டதாகவே இருக்கும். ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கெதிரான தமது வாதத்திறனை ஓங்கி ஒலிக்கச் செய்தாலும் அல்லது தமக்கு இடர் விளை விப்பதாக சவூதிகள் வேறெவரையும் கருதி குற்றஞ் சாட்டினாலும் கூட அமெரிக்கர்களும் அவர்களின் கூட்டாளிகளும் தாம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பெற்ற அனுபவத்தினால் இன்னுமொரு கண்ணி வெடிக்களத்தில் கால் மிதிப்பதற்கு அவசரப்பட மாட்டார்கள்.


A photo which speaks a thousand words.
Ex-President Bush with Prince Bandar Sultan.
 அதிகப்பட்சமாக என்ன நடக்கு மென்றால், மேற்கு நாடுகள் பஹ்ரைன் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்று இந்த நாடுகளில் இடம்பெறும் எந்தவொரு எழுச்சிக்கும் ஆதரவளிக்காமலிருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.
இது அந்த அரசுகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தரக்கூடும். ஆயினும், சவூதிகள் இதனைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டனர். முஸ்லிம் உம்மத்தை பல பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் தமது மிக விருப்பத்திற்குரிய சதி வேலையில் இறங்கி விட்டனர். அவர்கள் தமது அரசவை ஆலிம்களை பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்ய வைத்து, ஆங்காங்கே 'ஸஹாபாக்களைப் பாதுகாக்கும்' கவுன்ஸில்களையும் அமைப்புகளையும் நிறுவுவதற்கு முஸ்லிம் சமூகங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


Shaikh Abdur Rahman Al-Sudais, the Imam of Haram in Makkah,
on a visit Darul Uloom Deoband on 25 March 2011.

 உதாரணமாக முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதப் பிணக்குகளைத் தோற்றுவிக்கும் சவூதி அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை போகும் விதத்தில் அங்குள்ள முஸ்லிம்களைச் சிக்க வைத்துக் கொள்வதற்காக, மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் ஷேய்க் சுதைஸ் என்பவர் அண்மையில் இந்தியா வந்திருந்தார்.


Sheikh Sudais addressing at JIS, India.
 முஸ்லிம்கள், மக்கா-மதீனா ஆகியவற்றுடன் பெரும் பிணைப்பைக் கொண்டிருப்பதால் அங்குள்ள இமாம்கள் மிகுந்த மரியாதையுடன் நோக்கப்படுகின்றனர். அவர்களின் இனிமையாக குர்ஆன் ஓதும் திறனை முஸ்லிம்கள் பலர் மெச்சுகின்றனர். ஆனால் இந்த இமாம்களை இத்தகைய இழிவான கொடிய நடவடிக்கை களுக்குப் பயன்படுத்திக் கொளவதென்பது துக்ககரமானதொன்று மட்டுமன்றி அபாயகரமானதும் கூட. இந்த இமாம்கள், கறைபடிந்த இஸ்லாம் விரோத சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் தம்மைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்ப தென்பது அதே அளவில்
மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.
நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்: ஸஹாபாக்கள் அல்லது உம்மஹாத்துல் மூஃமினீன் (உண்மை விசுவாசிகளின் தாய்கள் என அழைக்கப்படும் அல்லாஹ்வின் இறுதித் திருத்தூதர் அவர்களின் மனைவியர்) மீது அவமரியாதையோ அவதூறோ கற்பிக்கக்கூடாது.



Ronald Regan with King Fahd-Meeting of long lost buddies.
 ஆயினும் சவூதி ஆளும் வர்க்கத்தினரும் அரசவைப் பிரச்சாரகர்களும் இதனைக் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருப்பார்களாயின் அவர்கள் ஏன் அந்தப் பணியைத் தமது நாட்டினுள்ளேயே துவங்கக்கூடாது எனக் கேட்க நாம் கட்டாயப்படுத்தப் படுகிறோம்? ஸஹாபாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கு சவூதிகள் புதுமை யானதோர் உணர்வைக் கொண்டிருக்கின்றனர்;  அவர்கள் பெரும்பாலான இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை அழித்து நாசப்படுத்தி விட்டனர்.

உண்மையில் அவர்கள் மக்கா-மதீனாவின் இரு ஹரம்களின் உள்ளிலும் சுற்றிச் சூழவும் கொங்கிரீட்டாலும் கண்ணாடியினாலும் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டும் தமது கடுமையான-கட்டுக்கடங்காத உலகாயத உந்துதலின் காரணமாக, திருத்தூதர்(ஸல்)அவர்களுடனும் அவர்களின் (தோழர்களான) ஸஹாபாக்

களுடனும் தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள்

உள்ளடங்கலாக, இஸ்லாமிய வரலாற்றின் எல்லா தடயங்களையும்

முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டனர்.

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், திருநபி(ஸல்)அவர்கள் கதீஜா நாயகியுடனான தங்கள் 25ஆண்டுகள் பெருமகிழ்ச்சி கொண்ட மண வாழ்க்கை யை நடத்திய வீடு இன்று ஒரு மலசலக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது! இந்த சவூதி-வஹ்ஹாபிகள் நபியவர்களுக்கும் அவர்களுடைய அன்பு மனைவி மற்றும் குடும்பத்திற்கும் எவ்விதமான மரியாதையை வழங்குகின்றனர் பார்த்தீர்களா? மஸ்ஜிதுன்னபவியில் நபி(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீதமைந்துள்ள பச்சை நிற குவிகை மாடம் கூட நஜ்த் பிரதேசத்திலிருந்து கிளம்பிய இந்த பழங்கால காட்டரபி நாசகாரக் கூட்டத்திடமிருந்து பாதுகாக்கப்பட்டதாகத் தெரிய வில்லை! இந்த பச்சை குவிகை மாடத்தை உடைத்தெறிவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனித உடலை இங்கிருந்து அகற்றுவதற்கும் திட்டமிடப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மாநபி முஹம்மது(ஸல்)அவர்களை சவூதிகள் அவமதிப்பதையும்,  சவூதி குடும்ப ஆட்சியின் கேடுகெட்ட தன்மையையும் நிரூபிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இதனை விட வேறென்ன ஆதாரம்

தேவையிருக்கிறது?
ஷேய்க் சுதைஸ் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்குப் பறந்து சென்று தெளிவான நிரூபணமில்லாத ஒரு கருத்தின் மீது மக்களின் மனோவுணர்ச்சி களை கொந்தளித்து எழவைப்பதற்கு பதிலாக ஏன் சவூத் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிச்சாட்டிய அசுத்தப்படுத்தும் பணிகளுக்கு எதிராக-அவை நம் கண் முன்னால் நன்றாகவே புலப்பட்டுக் கொண்டிருக்கும் போது–தனது உரத்த குரலை எழுப்பக்கூடாது? தனது மாண்புமிகு அந்தஸ்தை பயன்படுத்தக்கூடாது?


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் இமாமுக்கு, முஸ்லிம் கிழக்குப் பிராந்தியத்தில் தங்களின் உரிமைகளுக்காகவும் அந்தஸ் திற்காகவும் போராடி வருகின்ற மக்கள் மீது கொஞ்சங்கூட அனுதாபமில்லை என்ற போதிலும் (அவ்வாறு அனுதாபப்படாமலிருப்பதற்கு எந்தக் காரணமு மில்லை) சவூதிகளின் இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் அழித்தொழிக்கும் கொள்கை மற்றும் செயல்திட்டம் குறித்து இவர் மௌனம் சாதிப்பதற்கு என்ன நியாயத்தைக் கூறப்போகிறார்? லிபியாவின் கத்தாபிக்கு எதிரான சிலுவை யுத்தத்தில் தான் இணைந்து கொண்டது போன்று, சவூதி அரசு ஏன் பாலஸ்தீனில் அடக்கியொடுக்கப்படும் மக்களுக்கு உதவ முன் வரவில்லை? சவூதிகளின் நயவஞ்சகத்தனமும் காஃபிர்களுடனான உறவுகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை மனப்பாங்கும் அளவு கடந்தவையாகும்.

இத்தகைய சங்கை பொருந்திய புனிதத்தலங்களின் இமாம்களாக இருப்பத னால் தமக்குக் கிடைக்கும் பெயரையும் அந்தஸ்தையும் உலமா எனப்படும் இந்த மார்க்க அறிஞர்கள் 'இஸ்லாத்திற்கு எந்த நாசம் ஏற்பட்டாலும் பரவா யில்லை- நபி(ஸல்)அவர்களினதும்; ஸஹாபாக்களினதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்த பங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை' என்ற கொள்கை யோடு தமது சொந்த சட்ட விரோத ஆட்சியைப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும் கறைபடிந்த களங்கப்பட்ட சவூதி அரசாட்சியின் கருவி களாகப் பயன்படுத்தப்படுவதைக் காணக் கவலையாயிருக்கிறது.


மஸ்ஜிதுல் ஹராம் அல்லது மஸ்ஜிதுன்னபவியின் எந்தவொரு இமாமும் கூட சவூதி துருப்புகள் பஹ்ரைனில் மஸ்ஜித்களைத் தகர்த்தழிப்பதைப் பற்றியோ அல்லது புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுட்டெரிப்பதையும் அசிங்கபபடுத்துவதையும் பற்றியோ தன் குரலை எழுப்பியதில்லை என்ற விஷயம் நம் மனதுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. இந்த இமாம்கள் நடைபெறும் சம்பவங் களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதா அல்லது இந்த படுபாதகங்களுக்கு இவர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்ற முடிவுக்கு வருவதா? எந்த வகையில் பார்த்தாலும், அவர்களின் பண்புநலனிற்கும் நடத்தைகளுக்கும் நல்லதொரு பிரதிபலிப்பாக இதனைக் கருதமுடியாது.


பஹ்ரைனிலோ, யமனிலோ, சவூதி அரேபியாவிலோ –முஸ்லிம் கிழக்கின் எந்தப் பிரதேச மக்களின் சட்டப் பூர்வமான அபிலாசைகளுக்கெதிரான தீய பிரச்சார நடவடிக்கைகளில் ஒரு கருவியாகச் செயல்படுவதை விடச் சிறந்த செயலை முஸ்லிம்கள் இத்தகைய உலமாக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆட்டங்களுககான நேரம் முறறுப் பெற்றுவிட்டது. சவூதி அரேபியாவைச் சார்ந்த உலமாக்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்கட்டும். சுய கௌரவத்திற்கும் சுதந்திரத்திற்கும் வேண்டி போராடும் முஸ்லிம் பொது மக்களின் பக்கம் அவர்கள் இருக்கின்றனரா? அல்லது குஃப்ர் (இறைமறுப்பு), நிஃபாக்(நயவஞ்சகம்), ளுல்ம் (அநியாயம்) ஆகியவற்றின் சக்திகளுக்கு ஊழியம் செய்யும் மாசு படிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான (சவூதி) ஆட்சியாளர்களுடன் அவர்கள் இருக்கின்றனரா?

CRESCENT INTERNATIONAL MAY 2011  (புனைப் பெயரில் பத்தி எழுதும் இஸ்லாமிய இயக்கத்தின் மூத்த அறிஞரான இந்த கட்டுரையாளரின் ஏனைய ஆக்கங்களைக் காண கீழ்க்காணும் வலைத்தளத்திற்கு செல்லுங்கள்:
 www.muslimedia.com/archives/abudharr.html

 

Friday, January 13, 2012

எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர்


சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும் - இறுதி பகுதி
-ஸைனப் சீமா-

(About Author : Ms. Cheema has worked for Peace x Peace since 2007 — a D.C.-based non-profit devoted to connecting women over the world for direct personal communication. Previously, she worked for the Aurat Foundation, a non-profit based in Lahore, Pakistan — and devoted to the political, economic and social empowerment of women in Pakistan.

As a second-generation Pakistani-American, Ms. Cheema turned early to literature, communication and cross-cultural understanding while negotiating differences between East and West. Her love of women's literature have attuned Ms. Cheema to the creativity and strength that women tap into when confronting their challenges.)




'சவூதி அரேபியாவில் ஓவியப்பாறைகள்' என்ற எக்காள அறிவிப்பைத் தனது முகப்பட்டையில் தாங்கி சவூதி முடியாட்சியிலிருந்து கலாசார, சமூக சஞ்சிகையின் இதழொன்று வெளி வந்திருக்கின்றது. இது சவூதி அரம்கோ உலக நிறுவனத்தின் ஒரு வெளியீடாகும். அதில் இடம் பெற்றிருந்த பீட்டர் ஹெர்ரிகன் என்பவரால் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் ஒட்டகங்களினதும் பிற மிருகங்களினதும் படங்கள் கிறுக்கலாக வரையப்பட்டிருந்ததோடு அவற்றின் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்; சர்வ தேச சமூகம் நஜ்திலுள்ள புராதனப் பாறையைப் பற்றி ஏன் ஆராயாமல் இருந்துவிட்டது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 'துரதிர்ஷ்டவசமான இந்தப் புறக்கணிப்பு மிக விரைவில் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும்' என ஹெர்ரிகன் ஆர்வத்துடன் முன்னறிவிப்பு செய்திருந்தார். அரம்கோ நிறுவனம் பாலைவனத்திற்கு அடிப்புறத்திலிருந்து அகழ்ந்தெடுக்கும் கருப்புத் தங்கத்திற்கு (எண்ணெய்க்கு) சரிசமனான ஒரு மூல வளமாக இப் பழங்காலப் பாறை கருதப்படுகின்றது.


சவூதி அரேபிய மன்னராட்சியில் 'ஓவியப் பாறை'யை கடினமான முயற்சி களுடன் பத்திரமாகப் பாதுகாப்பதென்பது ஹிஜாஸ் பிரதேச இஸ்லாமிய புவியியல் வரைபடத்தில் காணப்படும் வரலாற்று சின்னங்களான கட்டிடங் களையும் புனித தலங்களையும் இடித்துத் தள்ள மேற்கொள்ளப் பட்டு வரும் வேலைகளுடன் முற்றாக முரண்படுகின்றது. சவூத் குடும்பம் அரேபியாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுடனும் வஹ்ஹாபியக் கொள்கைவாதிகளுடனும் உள்ள அதனது அடிப்படை ரீதியிலான கூட்டைத் தொடர்ந்து இளவரசர்களாகவும் வர்த்தகர்களாகவும் ஒரு சேர விளங்குபவர்கள், இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அடையாளக் கம்பங்களாக இருப்பவற்றுக்கெதிராக எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு ஒரு போரைத் தொடுத்து வருகின்றனர். இந்த சின்னங்களில் யஸீத் இப்னு முஆவியா போன்ற பிற்கால குறைஷி சர்வாதிகாரிகள் கூட கைவைக்கத் துணியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 80 ஆண்டுகளில் - வெறுமனே இது ஒரு சிறு துணுக்குதான் -கிட்டத்தட்ட 300 இஸ்லாமிய வரலாற்றுக் கட்டிடங்கள் டைனமைட் வைத்துத் தகர்க்கப் பட்டிருக்கின்றன. புல்டோஸரைக் கொண்டு இடித்துத் தள்ளப் பட்டிருக்கின்றன் பூமியோடு சரிசமனாக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாத்தின் ஆரம்ப மக்கா காலத்தைய வீடுகளும், ஏனைய தொடர்புடைய கட்டிடங்களும் மன்னர் பரம்பரையின் மாற்றங்களுக்கும் அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கும்இ பல நூற்றாண்டு காலம் தாக்குப் பிடித்து பாதுகாப்பாக நின்று கொண்டிருந்ததானது, முந்தைய முஸ்லிம்களின் பாரம்பரியத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் உயர் பண்புக்கு குறிப்பிடத்தக்க- சிறப்பான சான்றாக விளங்குகின்றது. எவற்றின் மூலம் சிறகடித்து உயரப்பறந்த இஸ்லாம், ஒரு இருப்பை வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டதோ, அந்த நெருங்கிய இணைப்புகளுக்கும் சகோதரத்துவப் பிணைப்புகளுக்கும் அடையாளச் சின்னங்களாக முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மக்கா ஹில்டன் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. மக்காவில் அபூபக்கர் உடைய வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைப் பார்ப்பதா அல்லது வசதி படைத்த முஸ்லிம்கள் தமது இரவுகளை எவ்வாறு இப்போது கழிக்கின்றனர் என்பதைப் பார்ப்பதா –எதைப் பார்ப்பது, இன்று ஹஜ் யாத்திரிகர்களுக்குச் சிறந்ததாக அமையும் என ஆகிவிட்டது?

This is how the Prophet's house [white structure on the right]
 looks at this moment

விளங்கியவை அனைத்தும், இன்று இந்தப் பிரதேசத்தின் வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளின் காரணமாகக் காணாமல் போய்விட்டன. முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு, இன்று மக்காவில் ஹில்டன் ஹோட்டலாகிவிட்டது.  நபி(ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்புடைய மண்ணறை தரைமட்டமாக்கப்பட்டதோடல்லாமல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நபியவர்களின் முதல் மனைவி கதீஜாவின் வீடு, எங்கு நபியவர்களின் குழந்தைகள் பிறந்தனரோ. அது இன்று ஒரு பொது மலசலக் கூடமாக மாறியிருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா பிந்த் குவாலித் உடைய அடக்கஸ்தலம். இப்போது அது ஒரு பொது மலசல கூடமாக மாற்றப்படுவதற்கு முன்னர் எந்த குறீயீடு களுமின்றி காணப்படுகிறது. வலைப்பின்னலின் ஊடாக இணையத்தளங்களில், பெரும்பாலும் ஒவ்வொன்றையுமே ஒளிவு மறைவில்லாமல் காணக்கூடியதாயிருக்கும் இன்றைய ஒரு கால கட்டத்தில் கூட, வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர்கள் சுற்றிவர இருக்கும் பாதுகாப்பு அரண்களையும் தாண்டிச் சென்று பெரும்பாலும் எல்லாரையும் படம் பிடிக்கக் கூடியதாயிருக்கும் இன்றைய நிலையிலும் கூட, இது போன்ற படங்களையோ, சவூதி அரண்மனைகளின் விபரமான பிரதிபிம்பங்களையோ நம்மால் காண முடிவதில்லை?



மூடப்பட்ட கதவுகளின் பின்னால் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் உலக முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த சவூதி ஆட்சியாளர்கள் அத்தனையையும் செய்கின்றனரே, அவர்கள் தமது புரவலர்களான இஸ்லாம்-முஸ்லிம் விரோத அரசுகளுடன் இது சம்பந்தமாக என்னென்ன ஒப்பந்தங்களைச் செய்துள்ளனரோ நமக்கு விளங்கவில்லை??


எஞ்சியிருப்பனவற்றினதும் மீதியிருப்பனவற்றினதும் மூலம் கடந்த கால வரலாற்றைச் சிரமங்களுடன் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கு 'வரலாற்றுக் குப்பைகள்' என்ற சொல் கிண்டலாக உபயோகப் படுத்தப்படுகின்றது.  ஆனால் இந்தப் பதப் பிரயோகம் எவ்வாறு வரலாறே ஓரு குப்பையாக மாற்றப்படுகின்றது என்பதை செவ்வொளி பாய்ச்சி புலப்படுத்துகின்றது.

Jannathul Moala in Mecca has been obliterated without a trace.

தொல் பொருள் ஆராய்ச் சியாளர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தைய கட்டிடங்களில் 20க்கும் குறைவானவையே இன்று ஹிஜாஸில் மீந்திருப்பதாக மதிப்பீடு செய்கின்றனர். ஆம், அதன் அர்த்தம் என்னவென்றால், 90 சத வீதமான இஸ்லாமியத் தலங்கள் இப்போது காணாமல் போய்விட்டன. நினைவுச்சின்னங்கள் மறைந்துவிட்டன. பலஸ்தீனம் முதல் பாகிஸ்தான் தொட்டு துருக்கி வரையிலான முஸ்லிம் நாடுகளின் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பற்றி எரிந்த போதிலும்கூட, ஹிஜாஸின் சமூகத் தோற்றத்தை வஹ்ஹாபிய மயப்படுத்தும் பணிக்கு- இடித்துத் தள்ளுவதை மேற்பார்வைசெய்ய- உள்ளுர் கொள்கை வெறியர்கள் ஒன்று திரட்டப்பட்டிருக்கின்றனர். இந்த இஸ்லாமியத் தலங்களை அழித்தொழிப்பது பயபக்தியின் ஓர் அடையாளமெனச் சுட்டும் விதத்தில் அவர்களின் வாதங்களின் ரசவாத வித்தை மாற்றிக் காட்டுகின்றது.



Jannathul Baqi before the destruction.
 புனிதமெனக் கருதி மரியாதை கொடுக்கப்படும் தலங்களுக்கு முன், வஹ்ஹாபி அல்லாத பார்வையாளர்கள், சிலை வணக்கத்தில் இறங்கிவிடும் சாத்தியக்கூறின் நிழல்தானும் பட அனுமதிக்காமல், அவற்றைப் பொதுக் குளியலறைகளாக மாற்றுவது சாலச்சிறந்தது என வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர்.


அத்தோடு நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் ஞாபகப் படுத்தும் கட்டடங்கள், சரியாகச் சொல்லப்போனால் சீறாவின் புவியியலே, முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. பத்ர் மற்றும் உஹத் போர்க் களங்களுக்கு முஸ்லிம்கள் சென்ற பாதைகள் (வழியில் ஒரு தடயமு மில்லாமல் முற்றாக) சுத்தமாக்கப்பட்டுள்ளன. ஷஹீத் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிஃபின் மண்ணறை அடியொடு மறைந்து போனது. (அகழ் யுத்ததின் போது நபியவர்கள் நின்று வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த பாறையின் மீது கட்டப்பட்ட) ஸல்மான் அல் ஃபார்ஸி, அபூபக்கர், உமர், ஃபாத்திமா, அலீ, பிலால், அல் ஃபாத் ஆகியோரின் பெயரிலான பிரசித்திபெற்ற ஏழு மஸ்ஜிதுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நபியவர்களின் மக்கா வாழ்க்கையில், முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் இடமாகத் திகழ்ந்த -உண்மையில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த முதலாவது இஸ்லாமியப் பள்ளிக்கூடமான- தாருல் அர்கம், இப்போது அடுக்கு மாடிக் கட்டிடமொன்றின் நகரும் படிகள் அமைந்திருக்கும் இடமாக இருக்கின்றது. அபூ குபைஸ் மஸ்ஜிதின் இடிபாடுகளின் மேல்தான் மன்னருடைய அரண்மனை இன்று அமைந்திருக்கிறது.


அடக்கஸ்தலங்கள் வஹ்ஹாபிகளின் கடும் கோபத்திற்கான ஒரு காந்தக் கல்லாக அமைந்திருக்கின்றன. 1806ல் மதீனாவிலுள்ள பகீ அடக்கஸ்தலம் தரைமட்டமாக் கப்பட்டது, எல்லாரும் நன்கறிந்த ஒரு சரித்திரச் சம்பவமாகும். அங்கே இடையிடையே அமைக்கப் பட்டிருந்த மாபெரும் இஸ்லாமியப் பெரியார்களுடைய மண்ணறைகளின் குவிகை மாடங்களும் அடையாளக் குறிகளும் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடம் ஓர் அநாமதேயக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. மற்ற மண்ணறை பூமிகளும் இதே விதமான முடிவைத் தான் சந்தித்தன. இதனால் தமது நற்பெயருக்கு பங்கம் வரும் என்பதைப் பற்றி அவர்கள் சிறிதளவேனும் கவலைப்படவில்லை. மக்காவிலுள்ள மக்பரா அல் முஅலா அடக்கஸ்தலமும் (இங்குதான் கதிஜா நாயகி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்) இதைப்போன்றே இடித்துத் தள்ளப்பட்டது.

இவையெல்லாம் புனித நகரங்களை மீண்டும் பொலிவான தோற்றம் பெறச் செய்யும் மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் உடைய திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான். இத்திட்டத்தை நிறைவேற்று வதற்காகஇ சிறந்த கட்டடக்கலை நிபுணர்களான நோர்மன் ஃபொஸ்டர், தேம்ஸ் பேங்கைச் சார்ந்த பிரபு ஃபொஸ்டர்இ ஸாஹா ஹதீத் போன்றவர்களை மன்னர் பணிக்கமர்த்தியிருக்கிறார். இவர்கள் இந்தப் பகுதியை உடைத்துத் தள்ளி துப்பரவு செய்து, அந்த இடத்தில் எட்டாயிரம் அமெரிக்க டொலருக்கும் அதற்கு மேலும் செலவு செய்யும் சொகுசு ஹஜ் ஏற்பாடுகளுடன் வரும் இன்னுமொரு பத்து லட்சம் யாத்ரீகர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்கள்;. ஓர் இஸ்லாமிய கட்டடக்கலை நிபுணரான சாமி அங்காவி 'நாம் இப்போது மக்காவின் வரலாற்றின் இறுதித் தருணங்கள் சிலவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உள்ளுர்வாசிகளும் இடித்துத் தள்ளும் போர் முஸ்தீபுகளினால் முழமையாகப் பாதிக்கப்படாமலில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீட்டை ஓர் அடுக்குமாடி சில்லறை விற்பனை அங்காடியின் கீழ் காணாமல் போய் விடுவதற்கு அனுமதிக்காமல் மக்காவாசிகள் அதனை ஒரு நூலகமாக மற்றியமைக்க வலியுறுத்தி ஆபத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றினர். இருந்த போதிலும்இ செப்டம்பர் 11க்குப் பின்னர் ஏற்பட்ட எண்ணெய்ச் செல்வச்செழிப்பும் அதன் பயனாகத் தொடர்ந்து வந்த அபிவிருத்தி எதிரொலியும் மீதியுள்ள இத்தகைய தலங்களுக்கும் நேரம் குறிக்கக் கூடியதாக அமைந்துவிட்டது. வானை முட்டும் ஹோட்டல்களிலிருந்தும் ஏனைய வர்த்தகத் தலங்களிலிருந்தும் ஓடி வந்து கோடிக் கணக்கில் கொட்டும் லாபங்கள், சவூதி மூலதனக்காரர்களை – முதலாளிமார்களை – மிக அதிகமாக வசீகரித்துவிட்டன. இதன் காரணமாக, இரு ஹரம்களையும் சுற்றிவர இருக்கும் பகுதிகள், முதல்தரமான நிலச்சொத்துகளாகிவிட்டன. மேலும் மெக்டொனால்ட் போன்ற சர்வதேச தொழிற்சின்னம் கொண்ட நிறுவனங்கள் வந்து கதவைத் தட்டும்போது, அவற்றுக்கு இல்லையென்று ஏன் சொல்லவேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீடு இப்போது வாகனங்கள் நிறுத்திவைக்கும் ஓர் இடமாக்கப்படுவதற்கு குறிக்கப்பட்டிருக் கிறது. தற்போது நகரில் காணப்படும் வாகனங்கள் நிறுத்திவைக்கும் இட வசதிகளினால் அசௌகரித்துக்குள்ளான சவூதி அரச குடும்ப இளவரசர்களின் மெர்ஸிடெஸ் கார்கள், அங்கு நிறுத்திவைக்கப்படலாம் என்பதை உண்மையென்று கொள்ள வேண்டியிருக்கிறது.

அல்குர்ஆனின் வார்த்தைகளை, சமூக-அரசியல் மெய்ப்பாடாக மாற்றம் காணச் செய்த, ஆண்களுடையவும் பெண்களுடையவும் நம் கண்களுக்குத் தெரிகின்ற தெளிவான தடயங்களை- அடையாளங்களை- பெருந்தீயிட்டுக் கொளுத்துவதானது, சவூதி பிரஜைகள் சிலரைக்கூட திகிலடையச் செய்ய வைத்தது. இர்ஃபான் அல் அல்லவி என்பவர், சவூதிகளினால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு தலத்தைப் பற்றியும், அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கட்டடங்களைப் பற்றியும் மிகக் கவனமாகவும் விவரமாகவும் ஆவணப்படுத்தி, 'இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கான நிறுவனம்' என்ற பெயரிலான ஓர் இணையதளத்தில் வெளியிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜிய பத்திரிகைகளில் கூட சவூதிகளை விமரிசனம் செய்து கண்டனந் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த இணையதளம் சவூதி அரசாங்கத்தினால் முடக்கப்பட்டதுடன், அல்லாவி இப்போது வீட்டுக் காவலில் (சிறை) வைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குவதென்னவென்றால், நினைவுச் சின்னங்கள் கல் வடிவிலோ அல்லது தகவல் தொடர்புகளுக்கான ஊடகப் பெருஞ்சாலையிலோ காணப்பட்டாலுங்கூட, அவையும் மிக ஆபத்தானதோர் அரசியல் மூலதனம் எனக் கருதப்பட்டு அனாவசியமான முறையில் குறுக்கீடு செய்யப்பட வேண்டியதாய் அமைந்து விடுகின்றன.



நபி (ஸல்) அவர்களின் நினைவைப் பசுமையாக வைத்திருப்பதோடு தொடர்புடைய ஏனைய தலங்கள் பலவும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளன. ஹிராக் குகை அமைந்துள்ள ஜபலுந் நூரை (ஒளி மலையை) அழித்தொழிப்பதற்கு சவூதி வஹ்ஹாபி ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மலைக்கு விஜயம் செய்யும் ஒருவர் 'நபி (ஸல்) அவர்கள் எம்மை இந்த மலையின் மீது ஏறுவதற்கோஇ இங்கு தொழுவதற்கோ, கற்களைத் தொடுவதற்கோ அனுமதிக்கவில்லை .........' என்ற ஒரு பஃத்வா பளிச்சிடும் விதத்தில் எழுதப்பட்டு ஓர் அடையாளக் கம்பம் நடப்பட்டிருப்பதை அங்கு கண்டுகொள்ளலாம். சுருங்கச் சொல்வதென்றால், முதலாவது அல்குர்ஆன் வசனங்கள் வஹி இறக்கப்பட்ட ஒரு தலத்திற்கு- உலகின் புவியியல் வரைபடத்தை மாற்றியமைப்பதற்காக நிகழ்ந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலை முதன் முதலாக சான்று பகர்ந்த ஓர் இடத்திற்கு- அருகில்கூட நெருங்காமல் தூர விலகி நில்லென இவ்வறிவித்தல் எச்சரிக்கின்றது. இந்தத் தலத்திற்கு இணையானதொன்று இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாற்றில் இருக்குமானால், அது நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமே ஆகும். ஆம்! அதுகூட அழிவுக்குள்ளாகக் குறிக்கப்பட்டுள்ளது!
Ronald Regan - King fahd, white house.
 சவூத் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் வஹ்ஹாபியப் பணியாட்களைப் பற்றியும் பேசுவதுகூட எப்போதுமே மிக ஆபத்தானதொரு விஷயமாயிருப்பது ஏன்? எந்தவோர் அழிவுப் பணியும் புனர் நிர்மாணச் செயல்முறை ஏற்பாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவே அமையும்.நபித்துவ வாழ்க்கையின் அடையாளங்களும் சுவடுகளும்

Bush Snr.-King Fahd, buddies sharing
hearty laugh.
எவற்றைக் கொண்டு நிரப்பப்படவிருக்கின்றன? வஹ்ஹாபிகள் அனைவருமே தமது தீவிரவாதக் கொள்கைளை தமது உள்ளங்களோடு உலோக வரிப்பட்டைகளைக்கொண்டு இணைத்து வைத்திருக்கும் அதே வேளைஇ சவூதி அரச குடும்பத்தினர் அதற்கு சிறிது வித்தியாசமான விஷயங்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கின்றனர். இஸ்லாமிய சரித்திரம் திட்டமிடப்பட்டு பூமியின் தளங்களிலிருந்து தகர்த் தெறியப் படுவதாயிருந்தால் அது ஒரு புதிய வரலாற்றை சுவூத் குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சியை முழுமையாக நியாயப்படுத்தி, கட்டியெழுப் புவதற்கானதொரு முன்னேடியாகவே இருக்க முடியும்!

King Faisal -Nixon,White House
 1989ல் நிவ்யோர்க்கில் நடந்தஇ 'சவூதி அரேபியாவில் கலாச்சாரத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதற்கான' ஒரு மாநாட்டில், சவூதி இராஜதந்திரிகளும் வெளிநாட்டு தூதுவர்களும் வரத்தகர்களும், வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்களையும் கலாச்சார சின்னங்களின் பாதுகாப் பிற்கான நிபுணர்களையும் சந்தித்து அளவளாவினர். சுவூத் குடும்பத்தின் நிறுவன நினைவுகளைப் பதிய வைப்பதில் தாம் பெற்ற வெற்றிகளைக் குறித்து தம்மைத் தாமே புகழ்ந்து பேசிக் கொண்டனர்.
  இதற்கான முனமாதிரியாக காலனித்துவ வில்லியம்ஸ்பேர்க் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவின் காலனித்துவக் காலப்பகுதியின் பழுதடையாத ஒரு ஞாபகச் சின்னமாக, கவர்ச்சி வாய்ந்த வெர்ஜீனியா நகரைப் பாதுகாத்து அமைக்கப்பட்டதாகும்.


Eisenhower-Saud-Nixon
 (இங்கு வரும் உல்லாசப் பயணிகள் கறுப்பர்களின் அடிமைத்துவம், செவ்விந்தியர்களின் ஒட்டுமொத்தமான இனப்படுகொலை போன்ற மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத நினைவுகளைப் பற்றிய எந்த கவலைகளுமின்றி, சுற்றி வளைத்துக் கட்டும் பழங்கால ஆடைகள், கை வினைப் பொருட்கள், காலனித்துவக் கால இசை ஆகியவற்றை அனுபவித்து சந்தோஷமடைகின்றனர்) 'அமெரிக்காவிலுள்ள நீங்கள் உங்கள் நாட்டின் நிர்மாணத்தோடு தனித்துவமிக்க முறையில் தொடர்புடைய இடங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். நாங்களும் நமது நவீன அரசாட்சியை எவ்வாறு மன்னர் அப்துல் அஸீஸ் உருவாக்கினார் என்பதைப் பற்றி சவூதி மக்கள் அறிந்துகொள்வதற்காக, ரியாதிலும் தரிய்யாவிலுமுள்ள தலங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என நிவ்யோர்க்கிலுள்ள சவூதி அரேபியாவின் கொன்ஸல் ஜெனரல் ஸஅத் நாஸர் அந்த மாநாட்டில் சொன்னார்.



King Fahad Bin Abdul Aziz Bin Saud, seated in
a wheel-chair among Royal family members, honors the heirs of
the Companions of King Abdul Aziz with commemorative medals,
January 22, 1999. The event marks the start of a week-long
celebration to commemorate the 100th anniversary of
 the Saudi kingdom. REUTERS.
Only celebrating Meelad Un Nabi is Bidah!!!
 சுருங்கச் சொல்வதென்றால், சவூதி புனர்நிர்மாணத் திட்டப்பணிகள் மக்கா விலோ மதினாவிலோ அல்லது ரியாத்திலும் ஜித்தாவிலும் தரிய்யாவிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடங்கள், சவூத் குடும்பத்தினர் தங்கத்தை வாரிக்கொள்ளும் அதிர்ஷ்டத்தை அடையும் முன்னர்இ கச்சாப் பாலைவனப் புறவிடங்களாகவே இருந்தன. இரு புனித நகரங்களின் நிர்மாணத்திற்காக, தமது கலாச்சார, மார்க்க, அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்ட உதுமானியர்கள் போன்ற முந்தைய ஆட்சியாளர் பரம்பரைகளைப் போலல்லாமல், சவூதிகள் முதல் நாளிலிருந்தே மாற்றுப் புவியியல் ஒன்றை நிர்மாணிக்க வேலை செய்கின்றனர். இது நபித்துவத்தை இரையாக்கி உருவாக்கப்படும் ஒரு மதசார்பற்ற லௌகீகப் புவியியலாகும்.; பல கோடியினரின் அன்பையும் பற்றையும் விசுவாசத்தையும் பிணைப்பையும் ரொக்கப் பணங்களாக மாற்றிஇ மிகுந்த பேராசையுடன் அவற்றை விழுங்குவதற்கு செய்யப்படும் ஓர் ஏற்பாடாகும்.  இங்கு அமெரிக்க டொலர்கள் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது.

எனவேஇ இஸ்லாம் ஹிஜாஸ் பிரதேசம் முழுவதிலும் வண்டல் போல படிந்து நிற்பதை வெறுப்போடு நோக்கும் சவூத் குடும்பம், முன்னர் எந்த முக்கியத்துவமோ பிரபல்யமோ பெற்றிருக்காத, இப்போது பாசாங்கு செய்யும் (காட்டரபிகளின்) ஒரு கோத்திரப் போட்டிக் குழுவினர்தான் என்பதை நபி(ஸல்) அவர்களின் புவியியல் நமக்கு மிகத் தெளிவாக ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்ற போது, நாம் எந்தக் கடந்த காலத்தை தகுதியானதாக ஏற்றுக்கொள்ள முடியும்?


 தேசிய ரீதியிலான நாடுகள் என்ற அமைப்புஇ நவீனமானதொரு கண்டுபிடிப்பாகும்; இஃது ஐரோப்பிய மத்திய பூமியில் வெறுமனே 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றதொன்றாகும். ஆயினும் தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், தனது இருப்பையும் தனது காலனித்துவப்படுத்தப்பட்ட வரலாற்றையும் கடந்த காலங்களின் பின்னணியில் அப்படியிருந்ததாக உருவாக்கி ஆக வேண்டியுள்ளது. நம்பமுடியாத அளவு பெருந் தொகையிலான தமது ஹஜ் வருமானங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இரு ஹரம்களின் பாதுகாவலர்களெனத் தம்மை முஸ்லிம்களின் மத்தியில் சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்த சவூதிகள், காட்டரபிகளான நாடோடிக் கோத்திரங்களின் இஸ்லாத்திற்கு முந்திய வரலாற்றுக் குறிப்புகளையும், தமது பரம்பரை மன்னர் ஆட்சியின் ஸ்தாபகத்தைப் பற்றிய சரித்திரங்களையும் மட்டுமே மக்கள் ஞாபகப்படுத்த வேண்டுமென விரும்பு கின்றனர்.


A lineup of kings from Ibn Saud to Abdullah,
at the national museum in Riyadh.From right to left: 
King Fahad, King Khalid, King Fisal, King Saud, King
Abudlaziz,King Abudallah,.
 
மக்காவினதும் மதீனாவினதும் சூழவுள்ள அடக்கஸ்தலங்களும் மஸ்ஜித்களும் அழிந்து கொண்டிருக்கும்போது ரியாத்திலும் ஜித்தாவிலும் விரிவான முறையில் புதிய கட்டிடங்கள் எழுந்து வருகின்றன. ரியாதிலுள்ள தேசிய பழங்கால அரும்பொருள் காட்சிசாலையில் ஒரு விரிவான இஸ்லாத்திற்கு முந்திய காலப் பகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல் ஊடக (மல்டி மீடியா) சாதனங்கள் நஜ்த் பிரதேச மணல் வெளியிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்ட வரலாற்றுக்கு முந்தியகால 'வரலாற்றுப் பாறை'க்கு இருபக்கங்களிலும் பொருத்தப்படடிருக்கின்றன.



"The Gift of Friendship" exhibit in Riyadh Museum.
The gift U.S. President Franklin Delano Roosevelt to
King Abdul Aziz Ibn Abdul Rahman Al-Saud
 Great Bitter Lake in the Suez Canal on February 14, 1945.
 சவூத் குடும்பத்தின் ஸ்தாபகத் தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'தராத் அல் மலிக் அப்துல் அஸீஸ்' போன்ற பலவேறுவிதமான வளவளப்பான மியூஸியத் தொடர் கட்டடங்கள், மணற் குன்றுகளின் மேல் முளைத்து நிற்கின்றன. பல கோடி டொலர் பெறுமதியான இந்த நினைவுத் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியொப்படைப்பதற்காக, உலகெங்கிலுமிருந்து புகழ் பெற்ற கட்டடக் கலைஞர்களுக்கிடையில் போட்டியொன்றை ரியாத் அபிவிருத்தி அதிகார சபை நடத்தியது.



National Museum of Saudi Arabia. How even an old desert
 oil exploration truck, is displayed.
 போட்டிக்கான குறிக்கோள், 'முழு தேசத்திற்குமான கலாச்சாரக் குவிமையத்தை' கட்டியெழுப்புவதென்றும், 'எல்லா சவூதிகளுக்குமான தொடரான நிலையையும் கண்ணியத்தையும்' உருவாக்குவதென்றும் அறிவிக்கப்பட்டது. அப்துல் அஸீஸ் ஆல சவூதையும் வரலாற்றுக்கு முந்திய மூதாதையர்களையும் நினைவு கூரும், ஒளிரும் உயர் தொழில்நுட்ப சாதனங்களால் சூழப்பட்ட, இந்த பண்டைய கால ஞாபகச் சின்னங்களின் முன்னால், தமது நாட்டுப் பிரஜைகள், விக்கிர ஆராதனை செய்யும் நிலைக்கு ஆளாகிவிடுவார்கள் என்ற அச்சம் சவூத் குடும்பத்தினருக்கு ஏற்படவில்லை என்று அப்பட்டமாக விளங்குகிறது.

King Abdul Aziz International Terminal Haj Airport Dedication Medal.
Does this border on Shirk, for the Ale Saud apologists? 

புனிதம் வாய்ந்த கட்டடங்களும் இடங்களும் மறைந்து போயின என்பது, வெறுமனே கற்களும் சிமெண்டு கலவைகளும் இல்லாமலாகி விட்டன என்ற கருத்தைத் தராது. வரலாற்று நிலப்பரப்பிலும் நினைவுகளின் சமுத்திரத்திலும் நம்மை நாம் நிலைநிறுத்திக் கொள்வதற்கு, நமக்கு உதவுகின்ற 'திசை காட்டும் கருவிகள்' அழிந்து போய்விட்டன என்றே இதனை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் இன்றுவரை உயிர் வாழ்வதற்கு, தங்கள் இரத்தத்தையும் உடைமைகளையும் விலையாகக் கொடுத்த அந்த வரலாற்றுச் சொத்தின் சொந்தக்காரர்களான – மாமனிதர்களின் சுவடுகள் முற்றாகவே இம்மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டதாகவே நாம் இதனைக் கொள்ள வேண்டும். நமது நினைவை ஊட்டப்படுத்தும் முக்கியமான – பௌதீக வடிவிலான சாசனமான - கல்வெட்டுகள் மட்டுமல்ல இன்று மங்கி மறைந்து விட்டன் உண்மையில் நாம் முஸ்லிம்கள் என்ற நிலையில் உயிர் வாழும் உணர்வுகளும் அதன் வலிமையை இழந்துவிட்டன.