Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts

Tuesday, January 15, 2013

ஸ்ரீலங்கா ஏழைப் பணிப் பெண் சஊதியில் சிரச்சேதம்



A Sri Lankan vendor displays the front page of daily newspapers in Colombo on Jan. 10, 2013.

றிஸானா நஃபீக்கின் கலக்கமடைந்த பெற்றோர்
கலக்கமடைந்த அந்தப் பெண்ணின் தாய்

Dubai, Crescent-online;
January 09, 2013



வழக்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டுச் சென்ற விதத்ததிலிருந்தே, ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட நீதிமன்றம் அவள் பக்கத்து நியாயத்தை செவிமடுக்காது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.  

 ஜனவரி 2013
றிஸானாவின் தாயும் சகோதரிகளும்.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஓர் ஏழைப் பணிப் பெண்ணை சஊதி ஆட்சியாளர்கள் சிரச்சேதம் செய்துள்ளனர்; கலக்கமடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியுங்கூட மன்னர் அப்துல்லாஹ்விடம் மன்னிப்பு வழங்கும்படி வேண்டிக் கொண்ட போதிலும் இது நடந்துள்ளது. றிஸானா நஃபீக் மீது, அவளுடைய பராமரிப்பிலிருந்த ஒரு குழந்தையை மூச்சுத் திணறச் செய்ததற்காக மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சஊதி உள் விவகார அமைச்சு அறிவித்தது.

நான்கு மாதங்களே நிறைந்த பச்சிளங் குழந்தையைத் தான் கொல்லவில்லை என அவள் மறுத்துள்ளாள். கொலை செய்ததாகச் சொல்லப்படும் காலப் பகுதியில் ரிஸானா நஃபீக்கின் வயது 17! மேலும், நான்கு மாத சிறு குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்ட போது அவள் அங்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்தன. அவள் மீது நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை சர்வதேசக் குழந்தைகள் உரிமைகள் சட்டத்தை மீறும் செயலென மனித உரிமைக் குழுக்கள் குரல் எழுப்பியுள்ளன.

பச்சிளங் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டும் போது, அக்குழந்தை மூச்சுத் திணறத் துவங்கி பின்னர் அது இறந்து போனது. அல் த்வாத்மி நகரில் வசிக்கும் அந்தக் குழந்தையின் பெற்றோர்.  அவள் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டியுள்ளனர். அதனை அவள் ஆவேசத்துடன் மறுத்துள்ளாள்; இந்தச் சம்பவம் 2005ல் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது. மன்னிப்பு வழங்கும்படி பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில்; அவற்றையெல்லாம் புறக்கணித்து இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளதாக அது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் மட்ட ராஜதந்திர முயற்சிகளுக்கும்; உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எழுப்பப்பட்ட கண்டனக் குரல்களுக்கும் செவி சாய்க்காது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டு ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா அரசும் ஆத்திரமடைந்துள்தாக வெளி விவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆரம்பத்திலிருந்து, நஃபீக் மீது கொலைக் குற்றஞ் சாட்டப்பட்ட போது, அவள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? என்பது பற்றியோ அல்லது குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ அவளுக்கு உரிய முறையில் விளக்கமளிப்பதற்கு எந்தவொரு மொழிபெயர்ப்பாளரும் வழங்கப்படவில்லை. ஸ்ரீலங்காவிலிருந்து புதிதாக வந்த ஒரு பணிப்பெண் என்பதால் அவளால் அரபி மொழியை விளங்க முடியவில்லை. வழக்கறிஞர் ஒருவரின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும்
வழங்கப்படவில்லை. மாறாக, அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறாள். சஊதி அரேபியாவின் சட்ட அமைப்பு முறைமையின் குணவியல்புகளை எடுத்துக் காட்டும் 'கங்காரு' நீதிமன்றங்களில் அவளுக்கு எதிராக இவையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் மறுத்துள்ள அவள்;, தனது எஜமானர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அச்சுறுத்திக்  கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளாள்.

ரிசானாவ ஜெயில்ல போய் சந்­திச்சேன் பிரிஞ்சி வரும்­ போது எப்ப உம்மா என்ன கூட்­டிட்டுப் போவீங்க என்டு கேட்டா!
 


வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஸ்ரீலங்கா பிரஜைகளின் நலன்களில் அக்கறை கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், ஸ்ரீலங்காவின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, சஊதி அரசை 'சர்வாதிகாரிகள்' என வர்ணித்ததோடு இந்த சஊதி ஆட்சியாளர்கள், ஐரோப்பியர்களுக்கோ அல்லது அமெரிக்கர்களுக்கோ இவ்வாறான மரண தண்டனையை ஒருபோதும் நிறைவேற்றமாட்டார்கள்ளூ ஆசியர்;களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் மட்டுமே அதனை நிறைவேற்றுவர் எனவும் கருத்து தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் ஐரோப்பியர்களோ அல்லது அமெரிக்கர்களோ இவ்வாறான குற்றச் செயல்களுக்காகப் பிடிபட்டால், அவர்களின் நாட்டு அரசு சஊதி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதை அடுத்து, ஒரு குறுகிய சிறைத் தண்டனையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மிகக்கொடூரமான தண்டனைகள் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த ஏழை மக்களுக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.


வழக்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டுச் சென்றவிதத்ததிலிருந்தே, ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட நீதிமன்றம் அவள் பக்கத்து நியாயத்தை செவிமடுக்காது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது; அதனால்  மன்னர் அப்துல்லாஹ்விடம் கருணை காட்டி மன்னிப்பு வழங்குமாறு வேண்டப்பட்டது. அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஸ்ரீலங்கா அரசும் -இரு தரப்புகளுமே பல்வேறு தருணங்களில் அதற்காக முறையீடுகள் செய்தனர். ஒரு வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளும் பெரும் எதிர்பார்ப்புடனும் வீட்டில் வறுமையில் வாடும் தனது ஏழ்மையான குடும்பத்திற்கு உதவுவதற்குமாக சஊதி அரேபியா சென்ற தமது மகளின் உயிரைப் பறிக்கும் செயலைக் கைவிடுமாறு கோரும் தமது வேண்டுதலை சஊதி மன்னர் செவிமடுப்பார் என அந்தக் குடும்பம் நம்பியது. அவர்களின் இந்த நம்பிக்கை, அவள் அந்த நட்டுக்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில். கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டதால், ஒரு பயங்கரக் கனவாக மாறிப் போனது.


 
அவள் குழந்தையின் தாயுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்பட்டாலுங் கூட, ஏன் ஒரு  சின்னஞ் சிறு குழந்தையைக் கொலை செய்ய நாட வேண்டும் என்பது விளக்கப்படவேயில்லை. இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு குற்றச்சாட்டாகும். ஏனெனில், வீட்டு வேலைக்காரர்கள், அதிலும் விசேஷமாக ஏழ்மை நிறைந்த மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்தவர்கள், சஊதி அரேபியாவில்  கொத்தடிமையாக நடத்தப்படுகிறார்கள். எவ்வாறு 17 வயதே நிறைந்த ஒருவர் அவளுடைய எஜமானருடன் தர்க்கித்திருக்க முடியும்? அதுவும், அவள் அந்த நாட்டில் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருந்துள்ள நிலையில்? பிழைப்புக்காகப் பெற்றோரைப்பிரிந்து சென்ற அந்த ஏழைச் சிறுமிக்கு பணத்துக்குப் பதிலாகக் கிடைத்தது சிறைத் தண்டனையும் மரண தண்டனையும்தான்.

நஃபீக் உடையது மரண தண்டனை, அந்த நாட்டைப் பொறுத்தவரையில் முதலாவதோ அல்லது அதுதான் இறுதியானதோ அன்று. பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஏழைத் தொழிலாளர்கள், சின்னஞ் சிறு தவறான செயல்களுக்கெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டு வழமையாக மரணத் தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டு வேலைக்காரர்களையும் ஏழைத் தொழிலாளர்களையும்  மோசமாக நடத்தும்  கோரமான பதிவுக் குறிப்புகள்  சஊதிகளைப் பற்றி நிறையவே காணப்படுகின்றன. அடிக்கடி இவ்வாறான மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்ச்சிகள், சிரசேதனங்கள் செய்யப்படும் பொது சதுக்கங்களில் பலரும் பார்க்கும் ஒரு கண்காட்சியாகவே மாறிப் போயினஇவ்வாறு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது, பிற நாடுகளிலிருந்து வந்து மத்திய கிழக்கில்








   பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு பற்றியும், றிஸானா நஃபீக் போன்ற மக்களை வெளி நாடுகளில் வேலை தேடிச் செல்ல வைக்கும் வறுமை நிலையைப் பற்றியும் சர்ச்சையை ஸ்ரீலங்காவில் கிளறி விட்டிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபை Amnesty International மற்றும் மனித உரிமைகள் அவதான அமைப்புகள் Human Rights Watch (HRW)    உட்பட மனித உரிமைகள் குழுக்கள், இந்த விடயத்தை சஊதி அதிகாரிகள் கையாண்ட விதம் குறித்து அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளியிட்டுள்ளன. அதே போன்று, ஸ்ரீலங்காவில் இது விஷயத்தில் அக்கறை காட்டுபவர்களும், அவள் 'குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும் நேரத்தில் நிகழ்ந்த மிகப் பாரதூரமான மொழிபெயர்ப்புப் பிரச்சினைளைச் சுட்டிக் காட்டி அவர்களைச் சாடியுள்ளனர். அவளுக்கு தரப்பட்ட இந்த மரணத் தண்டனையானது, சஊதி அரேபியா கைசாத்திட்டிருக்கும் ஐ.நா.வின் சர்வதேசக் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தத்தை மீறும் செயலென அவர்கள் வாதிடுகின்றனர்.

சிறு வயதில் செய்த குற்றங்களுக்காக மனிதர்கள் மீது மரணத் தண்டனையை நிறைவேற்றும் மூன்று நாடுகளுள் சஊதி அரேபியாவும் ஒன்றாகும்' என மனித உரிமைகள் அவதான அமைப்பின் மூத்த பெண்கள் உரிமைகள் ஆய்வாளர் நிஷா வாரியா கூறுகின்றார்.
வீட்டு பணியாட்;களுக்கு இப்போதை விட போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதற்குரிய, சட்டங்கள் 'அவசரமாக' தேவைப்படுகின்றன என்ற அறிவிப்பு சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் International Labour Organization (ILO)  வெளியிடப்பட்ட அதே நாளில்தான், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியும் வந்திருக்கிறது. அனைத்து இல்லப் பணியாட்களுள்; 10 சதவீதமானோர் மட்டுமே -சுமார் 53 லட்சம் பேர்- ஏனைய தொழிலாளர்களைப் போன்று தொழிற்; சட்டங்களுக்கு உட்பட்டிருக்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

சஊதி அரேபியாவிலோ அல்லது வளைகுடா நாடுகள் ஏதாவதொன்றிலோ உள்ள வீட்டு பணியாட்கள் பெரும்பாலானோர்களுக்கு அத்தகைய பாதுகாவல் கிடையாது என்பது வருந்தத்தக்கதாகும். இந்தப் பணியாட்கள்; அத்தகைய சட்டங்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியமாட்டார்கள். 
 கிரஸன்ட் ஒன்லைன் நெட் இணையத்தளத்திலிருந்து.











Tuesday, January 31, 2012

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்'

 

'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்',கும்மில்

கும்மில் இடம்பெற்ற 'இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்திடையிலான உரையாடல்' மன்றம்
சர்வதேச குழு: வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு எனத் தலைப்பிடப்பட்ட இஸ்லாமும் பௌத்த மதமும் மன்றத்தின் இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 18ம் திகதி, கும் நகரிலுள்ள சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.



இலங்கை, களனி பல்கலைககழக பேராசிரியர் ஞணரத்தன(Gnanaratana), பேராசிரியர் உதித்த கருசிங்க, கலாநிதி ராஜித்த குமாரா ஆகியோர் இவ்வமர்வில் கலந்து கொண்டு மன்றத்தை சிறப்பித்தனர். மற்றும் முஹம்மது ரிஸா தெஹ்ஷஹ்ரி, இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின கல்வி, ஆராய்ச்சி விவகாரத்தின் பொறுப்பாளர், மன்றத்தில் பிற மத ஆராய்ச்சி பிரிவின் பல்கலைக்கழ பேராசிரியர்களான முஹம்மது அலி ரஷ்தமியான், முஹ்மமது ஹூஸைன் முஸப்பரி, முஹம்மது அலி ஷூமாலி, செய்யது ஜவாத் மீரி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.



சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பொறுப்பாளர் முஹம்மட் ரிசா அகாயா இக்னாவுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மன்றத்தின் இரண்டாம் அமர்வு, இஸ்லாத்திற்கும் ஏனைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான உள்ளக உரையாடலை வாய்ப்பளிக்கும் மன்றத்தொடர்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது என்றார்.


இவ்வியக்கம், கல்விமான்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரினால் முன்னெடுக்கப்படுகின்ற அளவிலும் தரத்திலும் சிறந்த ஆய்வுத் தளங்களை எதிர்பார்த்து நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன், சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மன்றம், இலங்கையின் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகங்களின் கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் பலரை, இது தொடர்பான ஈரானிய வகிபாகம் குறித்து கலந்துரையாடும் பொருட்டு அழைத்து வரவேற்றுள்ளது.

இரு பகுதிகளாக இடம்பெற்ற இச்சந்திப்பு, 'வன்முறையையும் மானுட வலியையும் குறைப்பதில் சமயத்தின் பங்கு', மற்றும் 'பூகோள யுகத்தில் உள்ளகத் தொடர்புகளையும் நட்புறவையும் வளர்த்துக் கொள்வதில் சமயத்தின் வகிபாகம்' ஆகிய இரு கருப்பொருள்களில் கலந்துரையாடலை அமைத்துக் கொண்டது.



இச்சந்திப்பானது ஷஹ்ரக்கே பரிதீஸான் நகரில் காணப்படும் பிறமத ஆராய்ச்சி சமய ஆக்கத்துறை பல்கலைக்கழகத்தில் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 9 – பிற்பகல் 18 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.