Showing posts with label Zionists. Show all posts
Showing posts with label Zionists. Show all posts

Thursday, July 11, 2013

உண்மையான எகிப்திய வசந்தம்.



-கலாநிதி எலியஸ் அக்லே

ஜூன் 28 வெள்ளிக் கிழமை ஆரம்பமான, மில்லியன் கணக்கான எகிப்திய பிரஜைகளை (37 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது) உள்ளடக்கிய அதிபர் முஹம்மத் முர்ஸிக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரும் பிரவாகமெடுத்து பிரதான வீதிகளையும் எகிப்திய மாகாணங்களின் முக்கிய நகர சதுக்கங்களையும் நிறைத்து நாட்டையே ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் முர்ஸி பதவி விலக வேண்டும் எனவும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்து ஆவண செய்ய முர்ஸிக்கு 48 மணி நேரக் காலக்கெடுவை இராணுவத்தினர் விதித்தனர். முர்ஸி அதனை உதாசீனம் செய்ததால் அவர் உடனடியாக இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதோடு புதிய அரசியல் யாப்பும் ரத்து செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் நிறுவியுள்ளது.


இந்தப் புரட்சி 2011ல் முன்னைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்க்க வைத்த புரட்சியைவிட வித்தியாசமானது. சீ.ஐ.ஏ. அணுசரனையுடனான 'சுதந்திர இல்ல நிறுவனம்'(Freedom House Organization) எனப்படும் நிறுவனத்தினூடாகவே 2011 புரட்சி திட்டமிடப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதன் 43 உறுப்பினர் அன்று எகிப்திய பொலீஸாரினால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 17 மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக அவர்கள் சாதுர்யமாக இஸ்ரவேலுக்கு நாடுகடத்தப்பட்டு பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்தனர். என்றாலும் 2013 ஜனவரி 4ம் திகதி எகிப்திய நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. கடந்த காலங்களில் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பல லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை இவ்வாறு பதவி கவிழ்த்துள்ளமை கவனிக்கத்தக்கது. எகிப்தில் ஜனாதிபதி முபாரக் முதுமையடைந்து நோயாளியாக இருந்ததோடு அவரது அராஜகக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியும் ஆரம்பமானது. அதேநேரம் அவரது மகன் கமலை அவ்விடத்துக்கு பதிலீடு செய்வதும் கடினமானதொன்றாக இருந்தது.
தற்போதைய புரட்சி பல கோணங்களில் மிக வித்தியாசமானது. இது விரக்தியடைந்த இளம் எகிப்தியர்களினால் திட்டமிடப்பட்டு, ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டது. முதலாவது புரட்சியில் தடைகள் உடைத்தெரியப்பட்டபோது மக்கள் அஞ்சினர். முதலாவது புரட்சியில் பங்கெடுக்க அஞ்சிய இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட மில்லியன் கணக்கான எகிப்தியர் போராளிகளுடன் கைகோர்த்தனர். முதலாவது புரட்சியிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பாடம் கற்ற முன்னணி இளைஞர்கள் தற்போது போராளிகளுக்கான முறையான திட்டங்களுடனும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றைக் கவனத்திலெடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கான தூரநோக்குடனும் களமிறங்கினர். இதுவே அவர்களின் உண்மையான எகிப்திய வசந்தமாகும்.


இந்தப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கியது இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட தமர்ரத் (கிளர்ச்சி) இயக்கமாகும். அவர்கள் முர்ஸியின் வெளியேற்றத்தை நாடி 25 மில்லியன் கையெழுத்தை சேகரித்தனர். முர்ஸி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடத்தின்பின் அதாவது, ஜூன் 3ம் திகதி தேசிய மீட்பு முன்னணி என்ற கட்சியோடு இணைந்து வீதியிலிறங்கி உடனடியான ஜனாதிபதி தேர்தலை முன்வைத்துப் போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு எகிப்திய சமூக அமைப்புகள் வீதிகளிலிறங்கினர். இதில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகரவாசிகள், அலுவலகப் பணியாளர், தொழிற்சங்கங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில்சார் ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள், இல்லத்தரசிகள், சிவில் நிறுவனங்களின் உறுப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பொலிஸ் படை,இராணுவத்தினர் மற்றும் பல்வேறு கூட்டத்தினர் இதில் பங்கேற்றனர். முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் தோளோடு தோள் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல் யாப்பு சபை உறுப்பினர் மற்றும் அமைச்சர்களும் தமது ரஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். மொத்தம் 13,000 நீதிபதிகள் அரசியல் யாப்பை மீறியமைக்காக முர்ஸிமீது வழக்குத் தொடர்ந்தனர். 'நாம் பொது மக்களின் பாதுகாவலரேயன்றி அரசாங்கத்தின் பாதுகாவலரல்ல' எனக் கூறி பொலிஸ் படை அவருக்கெதிராகக் கிளம்பியது. இராணுவமும் தனது முதற்பணி பொது மக்களைப் பாதுகாப்பதே எனக் கூறி மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கும்படி முர்ஸிக்கு 48 மணிநேரக் காலக்கெடு விதித்தனர். முர்ஸி தமது மக்களின் குரலுக்கு மதிப்பளிக்வில்லை.முஹம்மது முர்ஸி 1948, 1954, 1965 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர். எகிப்தில் மிக மோசமாகப் பெருகிவரும் மேற்கத்திய செல்வாக்கையும் ஆக்கிரமிப்பையும் நிராகரித்து அடிப்படை இஸ்லாமிய போதனைகளை எழுச்சியடையச் செய்யும் நோக்கில் 1928ல் ஹஸன் அல் பன்னா அவர்களால் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.

 இவ்வமைப்பு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதப் போராட்டங்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் அன்று எகிப்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 1952ல் கமால் அப்துல் நஸார் தலைமையிலான முடியாட்சிக்கு எதிரான புரட்சியையும் ஆதரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி தமது பாணியிலான ஒரு போலி ஷரீஆ சட்டத்தினடிப்படையிலான ஆட்சியொன்றை அமைக்கத்துடித்த தீவிரவாதிகள் சிலரால் இந்த இயக்கம், கைப்பற்றப்பட்டது. எனவே, சமயப்பற்றற்ற சோவியத் யூனியனுடன் நஸாரின் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதை சாக்காகக் காட்டி நஸாரைஎதிர்க்கத் தலைப்பட்டனர்.


 அவர்கள் நஸாரைக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே 1954ல் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டு பலர் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனாலும் 1981ல் இஸ்ரவேல் சென்று இஸ்ரவேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எகிப்திய அதிபர்அன்வர் சதாத்தைப் படுகொலை செய்வதில் வெற்றி கண்டது. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹொஸ்னி முபாரக் மிகக் கொடூரமான முறையில் சகோதரத்துவ அமைப்பை அடக்கி ஒடுக்கி அனேகரைச் சிறையில் தள்ளியதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார். 2011 ஜனவரி 30ல் கிளர்ச்சிக் கும்பல் ஒன்று வாடி அல் நெட்ரோன் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுவிக்கும்வரை முஹம்மது முர்ஸியும் அவரது சகாக்கள் பலரும் சிறையிலேயே இருந்தனர். 2011 புரட்சிக்குப் பின் சகோதரத்துவ அமைப்புக்கு முர்ஸியைத் தலைவராகக்கொண்ட 'விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி'(Freedom and Justice Party)என்ற அரசியல் கட்சியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.


2011 புரட்சியின் பின் ஏற்பட்ட ஒரு கலவரமான நிலையில், அரசியல் யாப்பு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக முறைமையற்ற ஒரு சூழலில் 2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முஹம்மது முர்ஸியுடன் முபாரக்குடைய ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்தவரும் முன்னைநாள் விமானப் படைத் தளபதியுமான அஹமத் ஷபீக் போட்டியிட்டார். திருப்தியற்ற இரண்டு சுற்று வாக்கெடுப்பின் பின் மிகவும் குறைந்த 2மூ பெரும்பான்மையுடனும் இராணுவ அதிகார சபையின் உதவியுடனும் முர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரவேலுடனான உடன்படிக்கைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்ற நிபந்தனையின்பேரில் சீ.ஐ.ஏ நிதியுதவியுடன் விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி (FJP)வாக்குகளை வாங்கியதாக வாந்திகள் உலாவிய நிலையில் முர்ஸி தனது வெற்றிப் பேருரையின்போது எகிப்து தனது எல்லா சர்வதேச உடன்படிக்கைகளையும் மதித்து நடக்கும் என உறுதி கூறினார். இதில் இஸ்ரவேலுடனான உடனபடிக்கைகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே, சிவில் அரசியல் முறைமையை மீள் அறிமுகம் செய்து தமது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வன்முறை வடிவத்தை சீரமைத்துக்கொள்வதற்கு முர்ஸிக்கு அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் அவராலேயே மண்ணாக்கப்பட்டது. ஐந்து வருடங்களாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு பொறியியலாளரான முர்ஸி ஒரு ஜனாதிபதிக்கு அவசியமான அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் புதிய அரசியல் அரங்கத்தை அவர் தவறாகவே விளங்கியிருந்தார்;. சகோதரத்துவ அமைப்பு மீதான அவரது குருட்டுத்தனமான அபிமானம் அவரது அரசியல் நோக்கை வரையரைக்குட்படுத்தியது. அதாவது, நாட்டு நலனைவிட அவரது இயக்கத்தின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார்.

முர்ஸி 2012 நவம்பரில் எவ்வித சட்ட ஞானமுமின்றி,  வரையரையற்ற சட்டவாக்க அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து, டிஸம்பரில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அதனை மக்கள்மீது திணிக்க முற்பட்டார். முக்கிய அரசாங்கப் பதவிகளுக்காகத் தமது சகோதரத்துவ சகாக்களை நியமிக்கும் வரை அவர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தட்டிக்கழித்ததோடு பாராளுமன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையும் அரசாங்கத்தையும் மதப்பிரிவினைவாதப் போக்கில் மீளக்கட்டமைக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டார்.


முர்ஸி தனது சகோதரத்துவ அமைப்பின் மீது அதிகாரத்தைக் குவித்ததன் காரணமாக எகிப்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பிரஜைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலிருந்து அவர் தூரமாக்கப்பட்டிருந்தார்.இது பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது. லிபியாவின் 2 பில்லியன் அமெரிக்க டாலர், சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் ஒவ்வொரு பில்லியன் அமெரிக்க டாலர், 3.5மூ வட்டியுடனான எகிப்திய திரைசேரி உண்டியல் மீதான 3 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உட்பட கட்டாரின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எதனாலும் எகிப்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. முர்ஸி நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நிலவிய தொடர்ச்சியான பவுனின் மதிப்பிறக்கம், வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு குறைவடைந்தமை,உல்லாசப் பயணத்துறை வருமானம் சுருங்கியமை என்பன எகிப்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வரிச் சலுகைகள், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குப் பதிலாக எகிப்தில் தேசியக் கடன் சுமையையே அதிகரிக்கச் செய்தது. இறுதியில் முர்ஸியின் சகோதரத்துவ அமைப்பால் 'தெய்வ குற்றம்' என வர்ணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்(IMF) கடனுக்குக் கையேந்தும் நிலையே அவருக்கு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் பொருளாதாரப் பிரச்சினை மக்களை வெகுவாக வாட்டி வதைத்தது. அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்தால் மக்கள் நீண்ட கியூ வரிசைகளில்நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதையுமே பெறாது வெறுங்கையோடு வீடு திரும்பினர். எகிப்து கோதுமையை இறக்குமதி செய்யும் பிரதான நாடாக மாறியுள்ளது. எகிப்து தொடர்ந்தும் உலக சந்தையைவிட மிகக் குறைந்த விலையில் இஸ்ரவேலுக்கான வாயு விற்பனையை மேற்கொள்வதால் உள்ளுரில் சமையல் வாயுவுக்கான தட்டுப்பாடு பெருகி வருகின்றது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எவ்வித கல்வித்தகைமையும் பாராது உத்தியோகங்கள் வழங்கப்படுவதால் ஆயிரக் கணக்கான உயர்கல்வித் தகைமை பெற்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உத்தியோகமின்றி அலைந்து திரிகின்றனர். தனது தேர்தல் பரப்புரையின்போது முர்ஸி வாக்களித்த எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதோடு எவ்வித பொருளாதார அல்லது சீர்திருத்த திட்டங்களோ முன்னெடுக்கப்படவுமில்லை.
முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் மதப்பிரிவினைவாதமே மேலோங்கிக் காணப்பட்டது. தேவாலயங்களையும் வீடுகளையும் கொளுத்துவது உட்பட கொப்டிக் கிருஸ்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதோடு மெஸ்பெரோ படுகொலை பேன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவர்களது சட்டரீதியான போராட்டங்களும் தாக்குதல்களுக்குள்ளானது. மேலும் திரையிடாத முஸ்லிம் பெண்களும் அடிக்கடி முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

முர்ஸி தனது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியையே தழுவியுள்ளார். எகிப்திய மக்கள் பலஸ்தீனப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி, இஸ்ரவேலர்களைத் தமது பிராந்திய எதிரிகளாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் இஸ்ரவேலுடனான அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் இஸ்ரவேல் தூதரகத்தை மூடிவிடுமாறும் இஸ்ரவேலுக்கான வாயு ஏற்றுமதியை நிறுத்துமாறும் எல்லாவற்றுக்கும் மேலாக காஸாவுடனான ரபா எல்லையைத் திறந்து தமது ரத்த உறவுகளுக்கு எதிரான இஸ்ரவேலிய இராணுவ, பொருளாதார முற்றுகையைத் தளர்த்த உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் முர்ஸி இதற்கு செவிசாய்க்காது அதற்கு முற்றிலும் மாறான கொள்கைகளையே கடைபிடித்து வந்தார். சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா பலஸ்தீனப் பிரச்சினையை ஒரு பிரதான விவகாரமாக முன்னெடுத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தோர், அதனை ஓரம்கட்டி வெறும் கோஷமாக மட்டும் அதனை மாற்றிவிட்டனர். இஸ்ரவேலிய முற்றுகையை பராமரிப்பதன் மூலம் காஸா மீதான அழுத்தத்தை முர்ஸி அதிகரித்தார். எல்லாவற்றையும்விட அவரது மோசமான செயல் என்னவென்றால் 1.5 மில்லியன் பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான காஸா சுரங்க வழிப்பாதைகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்கியமையாகும்.




 அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலிருந்து கசிந்துள்ள கடிதங்களின்படி முர்ஸி முபாரக்கைவிட மோசமானவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எகிப்திய எல்லையூடாக காஸாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் போன்றவற்றைத் தடைசெய்தல், சினாயில் இஸ்ரவேலிய பாதுகாப்பை அதிகரித்தல், காஸாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இஸ்ரவேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவி செய்தல், சுயஸ் கால்வாய் மூலமாக அமெரிக்க ஊடுகடத்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்காக எகிப்திய வான்வெளியைத் திறந்துவிடல் போன்றவை அமெரிக்க இராணுவ நிதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக முர்ஸி செய்து வரும் துரோகங்களாகும்.
2010 செப்டமபரில் இஸ்ரவேலர்களை இரத்தக் காட்டேரிகள், போர் வெறியர்கள் என்றும் மனிதக் குரங்குகளினதும் பன்றிகளினம் சந்தியினர் என்றும் சாடிய முர்ஸி, 2012 அக்டோபரில் இஸ்ரவேல் ஜனாதிபதி சீமன் பெரஸுக்கு எமுதிய கடிதத்தில்,'எனது அன்புக்குரிய மாபெரும் நண்பா,' என விளித்து 'எமது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் மகிழ்ச்சிகரமான நட்புறவைப் பலப்படுத்திப் பராமரிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடு எகிப்திய மக்களின் கவனத்திலிருந்து ஒருபோதும் தப்பிவிடாது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸாவையும் ஜெரூஸலமையும் விடுவிப்பதற்காக ஜிஹாத் செய்யவேண்டும் எனக் கூறிவரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, கடந்த மாதம் முர்ஸியும் சில தீவிரவாத சலபி அரசியல் மதவாதிகளும் இணைந்து தமது ஜிஹாதை இன்னொரு முஸ்லிம் அரபு நாடான சிரியா மீது திருப்பிவிட்டுள்ளனர். இஸ்ரவேலிய எதிரிகளுடனான நட்புறவைத் துண்டித்து கெய்ரோவில் அவர்களது தூதரகத்தை மூடி பலஸ்தீன விடுதலைக்கு அரைகூவல் விடுவதை விட்டு முர்ஸி தற்போது சிரியாவுடனான நட்புறவைத் துண்டித்து அவர்களது தூதரகத்தை மூடி அவர்களுடன் ஜிஹாத் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். பலஸ்தீனுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிரான எண்ணற்ற குற்றச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதை விடுத்து சிரியாவுக்கு மேலாக விமானத் தடை வலையமொன்றை ஏற்படுத்த வேண்டுமென முர்ஸி ஐ.நா.வைக் கேட்டுள்ளார்.

முர்ஸியின் சாயம்வெளுத்துவிட்டதுளூ முபாரக்கைப் போன்று இவரும் ஒரு அமெரிக்க-ஸியோனிஸ அடிவருடியே! இவரது ஒரு வருட ஆட்சி காலத்தில் எகிப்திய மக்கள், பலமுறை வீதிகளில் இறங்கி சீர்திருத்தங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் எச்சரிக்கையினையும் முர்ஸிக்கு வழங்கினர். அவற்றையெல்லாம் முர்ஸி உதாசீனம் செய்தமையால் இளம் எகிப்தியர் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவையும் புதிய தேர்தலையும் வேண்டி மீண்டும் விதிகளில் இறங்கினர். இதன் மூலம் முர்ஸிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தோல்வியும் மக்களுக்கு வெற்றியும் கிடைத்தது.
மக்கள் முர்ஸிக்கு நாட்டை வழிநடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரத்தைக் கையளித்தனர். ஆனால் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்தமையால் மக்கள் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றனர். இதுவே மக்கள் விருப்புக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத்தின் உயர் நிலையாகும்.
தமிழில்: றஹ்மத் அலி

Thursday, June 6, 2013

சிரிய மோதல்: வன்முறைகளைத் தூண்டும் கர்ளாவி






-கலாநிதி சந்திரா முஸாபிர்

2013 ஜூலை முதலாம் திகதி பிரபல மார்க்க அறிஞர் யூசுப் கர்ளாவி 
வெளி யிட்ட  சில கருத்துகளைக் கேட்டு, வன்முறைகளையும் ரத்தம் சிந்தலையும் வெறுத்தொதுக்கும் எந்த ஒரு மனிதனும் 
அதிர்ச்சியடையாமல் இருந்திருக்க முடியாது. தோஹாவில் 
நடைபெற்ற ஒரு கூட்டத்தில், 
சிரியா சென்று பஸர் அல் அஸாத் அரசாங்கத்துக்கும் அதன் ஆதரவாளர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் என்பவற்றுக்கும் 
எதிராகப் போராடுமாறு அப்பிராந்தியத்திலுள்ள சுன்னி முஸ்லிம்களை 
அவர் உசுப்பிவிட்டுள்ளார். அதனை ஒரு 'ஜிஹாத்' என்றும் அவர் வர்ணித்துள்ளார். ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் சுன்னிகளை விழுங்க பசிவெறியுடன் காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.        ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையே எந்தவித பொதுத் 
தன்மைகளும் கிடையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



சிரிய அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே,
 கேந்திர எல்லைக் கிராமமான கஸைரைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நடைபெறும் உக்கிரமான போருக்கு மத்தியிலேயே கர்ளாவி மேற்கண்ட கருத்து வெளியாகி உள்ளது. லெபனானைத் தளமாகக்கொண்ட ஹிஸ்புல்லாஹ் அரசாங்கப் படைகளுக்கு உதவி வருகின்றது. 
கிளர்ச்சியாளர் பக்கமாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் போராளிகள் போரிடுகின்றனர்.
ஷியாக்களுடன் போரிடுமாறு சுன்னிகளைத் தூண்டுவதானது, 
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்தக் 
கொடூர  யுத்தத்தின் தீவிரத்தன்மையை அதிகரிக்கவே  வழிகோலும். 
மார்க்க அறிஞர்கள் தமது ஒழுக்கரீதியிலான அணுகுமுறையை, ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் பிரயோகிக்க வேண்டும். இரு சாராரையும் உடனடியாக ஒரு யுத்த நிறுத்துக்கு 
வருமாறு வினயமாக வேண்டிக்கொள்வதே அவர்கள் மேற்கொள்ள
வேண்டிய பணியாகும்.

மேலும், சிரியாவில் உள்ள முரண்பாடு வெறும் ஷியா-சுன்னி மோதல் 
அல்ல என்பதை முதலில் கர்ளாவி உணர வேண்டும். பிராந்தியத்தில் மேற்கத்திய அடிவருடிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டி மற்றும் இஸ்ரவேல் போன்ற பெரும்  அரசியல் மேலாதிக்கத்தில் அது 
வேறூன்றி உள்ளது. 2011 மார்ச்சில் அஸாதின் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான அமைதிப் போராட்டமாகவே அது ஆரம்பமானது. 
அஸாத் அதற்கெதிராகக் கடும் போக்கைக் கடைபிடித்தார். இரண்டொரு வாரங்களில், பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்துக்கும் 
கட்டுப்பாட்டுக்கும் சவாலாக இருக்கும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்பவற்றுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருக்கும் அஸாத் 
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்திருக்கும் மேற்கத்திய 
மற்றும் இஸ்வேலிய அதிகார மையத்தின் ஆணைகளை சிரமேற்கொண்ட சில அண்டை நாட்டுக் குழுக்களும் தனிப்பட்ட சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பகுதியினருக்கு ஆயுதங்கள் வினியோகிக்க ஆரம்பித்தனர். உண்மையிலேயே, ஈரான், ஹிஸ்புல்லாஹ் மற்றும் 
அஸாத் அரசாங்கம் என்பனவே வட ஆபிரிக்கா மற்றும் மேற்காசியா 
போன்ற பிரதேசங்களில் தமது மேலாதிக்கத்தை நீடித்துக்கொள்ள, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரவேல் போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகத் துணிந்து 
நின்று எதிர்ப்பைக் காட்டும் அமைப்பு ரீதியிலான ஒரே கூட்டாகும். 2000த்திலும் 2006லும் மிகக் கொடூரமான முறையில் லெபனானில் தமது கட்டுப்பாட்டை நிறுவ இஸ்ரவேல் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கி அவர்ளைத் துரத்தியடித்தது இந்த ஹிஸ்புல்லாஹ்தான் என்பது நினைவு கூரத்தக்கது. ஹிஸ்புல்லாஹ் (இறைவனின் கட்சி) என்ற இக்கட்சியையே
'ஷைத்தானின் கட்சி' என தோஹா கூட்டத்தில் கர்ளாவி வர்ணித்துள்ளார்.
ஏனெனில், இந்த எதிர்ப்பு சக்திகள் ஷீயாவாக இருப்பதாலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள கட்டார், 
சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற மேற்கத்திய அடிவருடிகள் சுன்னிகளாக இருப்பதாலும், அவர்களின் போராட்டத்தை, 
பிராந்தியத்தில் ஷீயா ஆதிக்கத்துக்கான முயற்சி என நிறுவ அரும்பாடுபடுகின்றன.


இதன் விளைவாக, மேற்கத்திய மேலாதிக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்கள், மேற்காசிய, வட ஆபிரிக்க நாடுகளுக்குள்ளே 
தலைகாட்டும் போராட்டங்கள் மற்றும் சிரியாவின் கோலான் 
குன்றுகள் மீதான இஸ்ரவேலின் தொடர்ந்து செல்லும் ஆதிக்கம் 
போன்றவை அவர்கள் அரிதாகக் கண்டுபிடித்துள்ள ஷீயா-சுன்னி பிரச்சினைகள் மூலம் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.  
ஷீயா-சுன்னி வேறுபாடுகள் நீண்ட காலம் நிலவி வந்த ஒன்றாயினும்கூட மேற்கத்திய மேலாதிக்கத்துக்கும் இஸ்ரவேலிய நலன்களுக்கும் சவாலாக எழுந்த 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்தே ஷீயாக்களையும் சுன்னிகளையும் பிரிப்பதற்காக, இந்த வேறுபாடுகள், குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவினால்
பூதாகரமாக்கப்பட்டு பெருமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கர்ளாவியின் கருத்தை நாம் இந்தக் கோணத்தில்தான் நோக்க
 வேண்டும். ஷீயா சுன்னிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை 
எட்டுவதில், கர்ளாவி; ஒரு அணுகூலமான கருத்தைக் கொண்டிருந்த
 ஒரு காலமும் இருந்தது. ஆனால், சில மேற்கு நாடுகள் அரபு வசந்தத்தின்போது, மேற்காசிய வட ஆபிரிக்க விவகாரங்களில் 
மூக்கை நுழைத்தபோது, கர்ளவி  அதனை நியாயப்படுத்தினார். 
லிபியா மீதான நேட்டோ விமானத் தாக்கதலை அங்கீகரித்த ஆரம்பப் பிரமுகர்களில் கர்ளாவி முதன்மையானவராக இருந்தார். 
இதற்குமேலாக, கடந்த வருட நடுப்பகுதியில், 'இன்று இறைதூதர் 
திரும்பி வந்தால் அவர் நேட்டோவுக்கே ஆதரவளிப்பார்' என்றும் 
கருத்து தெரிவித்தார். இதன்காரணமாக, இவர் சில அரபு 
விமரிசகர்களால் 'நேட்டோ முப்தி' என்று கேலியாக அழைக்கப்பட்டார்.

மத அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து அதன் மூலமாக 
மேற்கத்திய மேலாதிக்கத்தை சட்டபூர்வமாக்கிய கர்ளாவியின்
 செயலே, அவரது நிலைப்பாட்டில் மக்கள் நம்பிக்கையிழக்க 
ஏதுவாயிற்று. இதைவிட மோசமான விடயம் என்னவென்றால், 
உலகளாவிய தீய சக்திகள் மற்றும் பிராந்திய அடிவருடிகள் 
என்போரின் நலன்களை நீடிக்கும் நோக்குடன், பாரியளவிலான 
அழிவுக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும், முஸ்லிம்களும் முஸ்லிம்களும் இடையேயான நேரடி மோதலை ஏற்படுத்தும் பிரிவினைவாதத்துக்குத் தூபமிட்டமையாகும். இது, மதபோதகரின்
அங்கியை அணிந்த ஒருவர் தமது மதத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்தமைக்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.

*கலாநிதி சந்திரா முஸாபிர் மலேஷிய, தார்மீக உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் தலைவராவார்.

 தமிழில்: றஹ்மத் அலி   

Tuesday, January 31, 2012

சாவேஸிடம் இருந்து அறபிகள் கற்க வேண்டியவை நிறைய உள்ளன: நஸ்ரல்லாஹ்

 

இன்று அறபு உலகத்தில் ஒப்பற்ற தலைவர் என கருதப்படும் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் கடந்த 2009 ஜனவரி 7ம் திகதி  லெபனானில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து உரையொன்றை நிகழ்த்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவரது முழு உரை இவ்வாறிருந்தது:
 
'அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
 
இஸ்ரேலுடன் இருக்கும் சகல தொடர்புகளையும் துண்டித்தல், காஸாவில் அவர்கள் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் முக்கியமானத மாத்திரம் அல்ல அது முஸ்லிம்காளகிய எமது கடமைகளில் ஒன்றாகும். மேலும் இதுவே அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்கள் மற்றும் மக்கள் செய்யக்கூடிய எளிதான பதிலடியுமாகும்.
 
நேற்று வென்ஸியூலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அங்கிருந்து இஸ்ரேல் தூதுவரை நாடு கடத்தினார். இதை சாவேஸ் பலஸ்தீன மக்களுக்கு அவர் காட்;டும் ஆதரவாகவே செய்து காட்டினாh. இவ்வளவிட்கும் வெனிஸியூலா அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நாடாகும். அதாவது அது ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாகும். இது தான் சாவேஸ! இதை அவர் ஏன் செய்தார்? மனிதாபிமானத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்தார்.; தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதுவர்களுக்கு எதிராக ஒரு வார்த்ததையை கூட கூற தையரியமில்லாமல் இருக்கும் அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்களுக்கு சாவேஸின் இந்த செயல் ஒரு பயங்கர அடியாகும்.
 
இதை நோக்கும் போது இன்று அறபித் தலைவர்கள் சாவேஸிடம் இருந்து கற்க வேண்டியவை பல உள்ளன. பலஸ்தீன மக்களுக்கு எவ்வாறு ஆதரவு காட்டுவது என்பதை பற்றி அவர்கள் சாவேஸை பார்த்துக் கற்க வேண்டும்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
 
இந்த ஸியோனிஸ கொலை காரர்கள் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு பாராட்டுக்கள் தரப்படவதை விடுத்து தக்க தண்டனை தரப்பட வேண்டும். காஸாவில் பல நூறு பெண்களையும், சிறு பிள்ளைகளையும், சிசுக்களையும் கொன்று குவித்ததன் பின் இந்த யூத அரக்காகளுக்கு தொடர்ந்தும் அனுகூலங்கள் தரப்படக்கூடாது. முஸ்லிம் உம்மத்து இந்த அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்தே தீரும் என்பதை நான் உங்களுக்கு உறுதியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இந்தத் தலைவர்கள் என்றும் இஸ்ரேலின் கொடூரச் செயல்களை பொருட்படுத்தாத போக்கையே கையாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலின் செயல்களை இந்த நாடுகளில் உள்ள மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் இந்த அரசாங்கங்கள் தமது மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தருவதும் கட்டாயமாகும். அத்துடன் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் தொடர்ந்தும் பேச்ச வாhத்தைகளை நடத்துவதையும் இவர்கள் நிறுத்தி விட வேண்டும். மேலும் அறபுத் தலைவர்கள் ஹமாஸ் போராளிகள் தமது இலக்கை அடைவதற்கு உதவி செய்வதுடன், இஸ்ரேல் காஸாவிட்கு இட்டுள்ள தடைகளை நீக்கவும், அதன் இராணுவ செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் கட்டாயமாகும்;. எல்லாவற்றிட்கும் மேலாக இஸ்ரேல் காஸா மக்களுக்குத் தினிக்கும் இழிவான கட்டளைகளை ஏற்க வேண்டும் என காஸா மக்களை வற்புறுத்தவதை இந்த அறபித் தலைவர்கள் முற்றாக நிறுத்த வேண்டும்.
 
'நேற்ற எகிப்து அதிகாரியொருவர் ஒரு சுவாரசியமான விடயமொன்றை கூறியிருந்தார். 'ஒரு முடிவொன்றை பெறுவதற்கும் பொருப்புள்ளவர்களாக இனி நடப்பதட்கும் ஹமாஸ் போராளிகளுக்கு 650 உயிர் தியாகிகளும் 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா?' என்று அவர் கேட்டிருந்தார். இது மிக அழகிய வாhத்தைகளாக இருக்கின்றன. ஆனால் இதையே நான் திருப்பி எகிப்து அரசையும் இது போல பேசக்கூடிய அதிகாரிகளையும் கேட்க விரும்புகின்றென். எகிப்திட்கும் அதன் ரபஃh எல்லையை நிரந்தரமாக திறப்பதட்கு 650 உயிர்களும்; 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா? 
 
'இந்த சந்தர்ப்பத்தில் எகிப்து செய்ய வேண்டியதாக இருந்தது தனது ரபஃh எல்லையை திறப்பது மாத்திரமே. எகிப்தை யுத்தப் பிரகடணம் செய்யுமாறு எவரும் கோரவில்லை. எகிப்து அரசிட்குச் சார்பான சில அந்நாட்டு வழக்கறிஞர்கள் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நான் எனது நன்பர்கள் சிலர் மூலம் நேற்று அறிந்தேன்;. ரபஃh எல்லையை எகிப்து திறந்து விடவும் எகிப்து அரசை காஸா விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் எகிப்தின் இராணுவம் அரசிட்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஷுரா தினத்தன்று நான்; கூறிய கூற்றிட்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். என்னுடைய இந்த கூற்று எகிப்து அரசிட்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை தூண்டும் விதத்தில் உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
'என்னுடைய கூற்றின் முக்கிய அம்சம் ரபஃh எல்லையை திறக்க வேண்டும் என்பதே. எவ்வாறிருந்த போதிலும் என்னுடைய பேச்சை பற்றி நான் பெருமிதமே அடைகின்றேன். இதற்காக ஒரு வழக்கை எனக்கு எதிராக தொடுக்கப் படுவதையும் நான் பெருமையாகவே கருதுகின்றேன். குறிப்பாக இந்த அச்சுறுத்தல் காஸா மக்களுக்காக எதையுமே செய்யாத ஒரு அறபிகளது நாட்டில் இருந்து வந்ததை தொட்டு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. அதுவும் லெபனானிலும், ஜபலியாவிலும் பலஸ்தீனத்திலும் பல அட்டூழயங்கள் செய்த, ஏன் எகிப்து இராணுவத்தினருக்கும் எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்ட யூதர்களுக்கு சார்பாக இந்த கூற்றை அவர்கள் கூறியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமே. ஆம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்திட்கு பக்கபலமாக நான் நின்ற குற்றத்திட்காக இவ்வாறு குற்றவாளிக் கூண்டில் ஏறுவது எனக்கு மிகவும் பெருமையான விடயமே. இது தொடர்பாக நான் மரணித்த பிறகும் பெருமை பட்டுக்கொண்டே இருப்பேன்.
 
'ஆனால் ஒரு விடயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன். அதாவது நான் பகைமையை வளர்க்க விரும்புபவன் அல்ல. நாம் எதிரிகள் அல்ல. எமக்கு துணை புரிந்தோருடன் பகைமை எற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. 2006 ஜுலை மாத யுத்தத்தின்போது எமக்கு எதிராக செயற்பட்ட அறபிகளுக்கு எதிராக நாம் பகைமையை எற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அந்த அறபிகளை காஸா மக்களுக்கு எதிராக தூண்ட திட்மிட்ட ஸியோனிஸ சதிகாரர்களின் எதிரிகளாகவே நாம் இருப்பொம்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
இதெ சமயம் மேலும் ஒரு கூற்றையும் நாம் செவியுற்றோம். அது தான் முன்பு அமெரிக்க அரச நிர்வாகத்தில் இருந்த ஒர யூதராகிய ஜோன் போல்டனின் கூற்று. அவர் தனது இணத்தின் செயற்பாடுகளால் வெறுப்புற்றுள்ளார். இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் அசல் நோக்கம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பலஸ்தீனத்தை முற்றாக அழிப்பதே அந்த நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காஸாவையும் மெற்குக் கறையையும் பிரிப்பது பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை வைத்திருப்பதுடன் மேற்குக் கறையை ஜோர்தானுக்கும் காஸாவை எகிப்திட்கும் கொடுப்பதே சிறந்தது என அவர் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
 
இரண்டு நாடுகள் பற்றி நாம் முன்பு கேள்வி பட்டதெல்லாம் வெறும் பேச்சே. இதுவே அமெரிக்கா மற்றும் யூதர்களின் உண்மையான நிலைப்பாடாகும். பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாட்டை முடிவு செய்யும் போது ஒரு நாட்டை நிறுவுவதட்கான தேihயான அளவு நிலப்பரப்பைக் கொண்ட எல்லைகளை தர அவர்கள் விரும்புவதில்லை. பிறகு இரு நாடுகளை ஏற்படுத்த முடியாதெனக் கூறி பலஸ்தீனத்தையே புறக்கனிக்க அவர்கள் முனைகின்றனர்.
 
 
  'இந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க முதலில் தேவைப்படுவது ஒற்றுமையேயாகும். ஹமாஸ், பதாஹ், இஸ்லாமிய ஜிஹாத் என்ற எல்லா பலஸ்தீன இயக்கங்களும் ஒன்று பட வேண்டும். ஏனெனில் ஒரே நோக்கம் எமது இலக்காக அமைய வேண்டியுள்ளது.
 
'எதிரிகள் ஹமாஸையோ பதாஹ்வையோ அழிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்த பலஸ்தீனக் குறிக்கோளையே அழிக்க நினைக்கின்றனர். ஆனால், இன்ஷா அல்லாஹ் அது ஒரு போதும் நடைபெறாது.
 
'என் அன்புக்குரிய சகொதர சகோதரிகளே!
 
'2006 எமது யுத்தம் மற்றும் தற்போதைய காஸா யுத்தம் ஒரு விடயத்தை எமக்குத் தெளிவு படுத்தியுள்ளது. லெபனானில் ஆகட்டும் அல்லது பலஸ்தீனத்தில் ஆகட்டும், எம்மிடம் ஒரு சிறந்த பாதுகாப்பு வியூகம் இருப்பது அவசியம் என்பதே அது.
 
'உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இராணுவங்களில் ஒன்றை கொண்டுள்ள மற்றும் மத்திய கிழக்கிலேயே மிகவும் பலம் வாய்ந்த விமாப் படையை கொண்டுள்ள இஸ்ரேல், சிறு பூமிப் பிரதேசத்தில் இருந்த செயற்படும் சிறிய போராளிகள் அமைப்பொன்றை முற்றாக அழிக்க முடியாமல் பல ஆண்டுகளாக தினறுவதற்குக் காரணம் அந்த போராளிகளதும் அதைச் சார்ந்துள்ள மக்களின் அசைக்க முடியாத மன உறுதியுமேயாகும். ஒரு சமூகத்தின் திடமான நம்பிக்கையும் மன உறுதியும் ஆக்கிரமிப்பதற்கு என்னும் உலகில் உள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த படையையும் தோல்வி அடையச் செய்யும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இந்த நிலை நாம் சரியான பாதையில் தான் நடை போடுகின்றோம் என்ற நம்பிக்கையை எமக்கத் தந்துள்ளது.
 
'சற்று சிந்தித்துப் பாருங்கள் எனதருமை சகொதர சகோதரிகளே! ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையோ வேறு எந்த சர்வதேச அமைப்போ காஸா மக்களுக்கு பாதுகாப்பையும் நியாயத்தையும் பெற்றுத் தரப்பொவதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. அது ஸியோனிஸ அக்கிரமங்களை தட்டிக் கேட்காது என்பதும் தெளிவாகியுள்ளது. சிறு பிள்ளைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படாத இந்த அமைப்புகள், ஒரு போராளிக்ள குழுவின் குறிக்கோள்களுக்கு எவ்வாறு துணை நிற்கப் போகின்றது?
 
'எனதருமை சகோதர சகோதரிகளே! இன்று நடக்கும் விடயங்கள் நாம்; அனைவரும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். லெபனானில் ஒரு பகுதியின் கவனம் உங்கள் மீது இருப்பதை நான் நன்கு அறிவேன். நாம் அனைவருமே இன்று சரித்திரத்தின் ஒரு முக்கிய மையத்தில் இருக்கினறோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸியோனிஸ மற்றும் யூதர்களின் இரகசிய சதிகளின் பிரம்மாண்டத்தையும் அது ஏற்படுத்தப் போகும் தாக்த்தின் தீவிரத்தையும் நாம் அறியமாட்டோம். ஆகையால் நாம் எல்லோரும் சகல விடயங்களைப் பற்றியும் கண்கானிப்புடனும் விழிப்புடனும் இருப்பது அவசியம். ஏனென்றால் எதிரிகள் எதையும் செய்யத் துணியலாம்.
 
'நேற்றும் ஒல்மட் (இஸ்ரேலின் பிரதமர்) கூறியதாக ஒரு விடயம் வெளியாகியுள்ளது. அதாவது மிக விரைவில் ஹமாஸுக்கு எதிராக ஒரு போரும் ஹிஸ்புல்லாஹ்விட்கு எதிராக ஒரு போரும் தொடுக்கப் படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் லெபனானில் தோல்வியை சந்தித்;த ஒல்மட்டுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூற விரும்புகின்றேன். அவரால் ஒரு போதும் ஹமாஸையோ ஹிஸ்புல்லாஹ்வையோ அழிக்க முடியாது.
 
'இது மாத்திரமல்ல. சில நாட்களுக்கு முன்பும், சில வாரங்களுக்கு முன்பும், ஏன் காஸாவின் மீது தாக்கதல் ஆரம்பமாவதட்கு பல மாதங்களுக்கு முன்பும் இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் கேட்டவன்னமே இருக்கின்றொம். சிலர் எம்மை சில நாட்களில் அழித்த விட வேண்டும் என்றும் மேலும் சிலர் எங்களை சில மணி நேரத்தில் அழித்து விட முடியும் என்றும் சவால் விட்ட வன்னம் உள்ளனர். ஆனால் இவர்கள் அறிந்து கொள்ளட்டும், எம்மை அழிப்பதற்கோ குறைந்த பட்சம் பயமுறுத்துவதற்கோ அல்லது பலஹீனப்படுத்துவதற்கோ இவர்களால் முடியவே முடியாது. நாம் எம்முடைய போராட்டத்தை விடப்போவதும் இல்லை. உங்களது வான் படைகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதுமில்லை. உங்கள் பயங்கர ஆயுதங்களைக் கண்டும் நாம் அஞ்சப் போவதுமில்லை. நாங்கள் இங்கு தான் இருப்போம். மேலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்கதலுக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
 
'நீங்கள் எம்முடைய பகுதிகளுக்கு வரத் துணிந்தால், எம்முடைய கிராமங்களுக்கும், வீதிகளுக்கும், வீடுகளுக்கும் வரும் தைரியம் உங்களக்கு இருந்தால் வாருங்கள், வந்து பாருங்கள். அப்போது எம்முடைய எதிர் தாக்ககுதல் 2006 ஜுலை யுத்ததின்போது நீங்கள் எங்களிடம் வாங்கிய அடி மிகச் சாதாரனமானது என்று நீங்கள் என்னுவீர்கள்.
 
'நாம் இங்கு தான் இருக்கின்றொம். மேலும் எம்முடைய ஆயதங்களை நாம் விட்டு விட மாட்டோம். இஸ்ரேல் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் போது எந்த சலசலப்பும் ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசும்போது இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறப்படுகின்றது, ஹிஸ்புல்லாஹ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தைரியம் கூறப்படுகின்றது.
 
'என்னுடைய அருமை சகோதர, சகோதரிகளே!
 
'நாம் நம்பும் இந்த கொள்கைக்காக எமது கடந்த கால மண்ணின் மைந்தர்கள் செய்த உயிர்த் தியாகங்களையும் எற்றுக் கொண்ட துன்பங்களையும் நாமும் ஏற்க என்றும் தயாராகவே உள்ளோம். கடந்த காலங்கள் நாம் செல்லும் திசை சரியானதே என்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சரியானதே என்றும் எமக்கு உணர்த்தியுள்ளது.இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இவ்வாறே சத்தியத்திட்காக உயிர் நீத்தார்கள். சத்தியத்திட்காக போராடும் படி அவர்கள் விடும் அழைப் பை நாம் ஏற்க என்றும் சித்தமாகவே இருக்கின்றொம்.
 
'இஸ்ரேல் எம்முடைய மாத்திரமல்ல, முழு உம்மத்தினதும் எதிரியாகும். எம்மில் சிலர் அவர்களுடன் உறவாடிய போதிலும் யூதர்கள் எங்கள் எதிரிகளே. அதே போன்ற இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்காவுடன் நம்மில் சிலர் நட்பு பாராட்டிய போதும் அமெரிக்காவும் நம்முடைய எதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
'உங்கள் அனைவரது உண்மையான பங்களிப்பிட்காக நான் எனது நன்றியை மிண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிரிகளின் முன் மண்டியிட்டு இழிவடைவதா? அல்லது எமது கண்ணியத்தை பாதுகாத்துக் கொள்ள போராடி உயிர்துரப்பதா?என்ற நிலை வந்தால் நாம் கண்ணியமான வீர மரணத்தையே சற்றும் தயங்காமல் தேர்ந்தெடுப்போம். எம்முடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் எதிரிகள் காண மாட்டார்கள்.
 
'எமது அருமை நபிகள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளான இமாம் ஹுஸைன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மீதும் அவர்களது சந்ததியினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
சிந்தியுங்கள்! அறபிகளின் பேடித்தனத்தையும் நயவஞ்சகப் போக்கையும் வெளிச்சம் காட்ட இதை விட என்ன சான்று தேவை? இதோ இரு முஸ்லிம் அல்லாத சிறு நாடுகளது தலைவர்கள் காஸா மக்களின் துயர் துடைக்க தங்களால் இயன்றதை செய்ய முன் வந்துள்ளார்கள். அவ்விருவரில் ஒருவர் கிறிஸ்தவர் என்பதையும் இந்த அறபித் தலைவர்கள் கவனிப்பார்களாக! பிறரை காபிர் என்றும் முனாபிக் என்றும் நரகவாதி எய்றும் தாராளமாக மார்க்கத் தீர்ப்புக்களை அள்ளி வீசும் இந்த அறபி மன்னர்களினதம் என்னெய் ஷேகுகளினதும் 'ஆஸ்தான' முப்தீக்களும் அல்லாஹ்வுக்காக அல்ல ஊதியத்திற்காக ஊழியம் செய்யும் அங்குள்ள உலமாக்களும் இனி முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகின்றார்கள். அமெரிக்கர்களதும் யூதர்களதும் வைப்பாட்டிகளாக இருக்கும் இந்த ஈனர்கள் இனியாவது உணர்வு பெறுவார்களா?

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!