Wednesday, March 18, 2015

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ


 தாக்குதலின் கீழ் ஷிஈக்கள்









இமாம் முஹம்மத் ஜவாத் ஷிர்ரி







உள்ளடக்கம்
























தாக்குதலின் கீழ் ஷீஈக்கள்
முஹம்மத் ஜவாத் ஷிர்ரி

http://biid.lsa.umich.edu/wp/wp-content/uploads/2011/06/makled-and-chirri-copySM-e1309468646871.jpg

நூலாசிரியர் பற்றி

இமாம் முஹம்மத் ஜவாத் ஷிர்ரி அவர்கள், பிறப்பால் லெபனானியரும், ஈராக்கிலுள்ள நஜாஃப் இஸ்லாமிய கல்வியகத்தின் ஒரு பட்டதாரியும் ஆவார். 25 வயதை அடைவதற்கு முன்பாகவே அவர், இஸ்லாமிய சட்டக்கலை பற்றியும், அதன் அடிப்படையை பற்றியும் எழுதினார். இந்த விடயானத்துடன் தொடர்புறும் இவரது நூல்களில் சிலவே கீழ்வருவனவாகும்:

1. அல் ரியாத் சட்டக்கலையின் அடிப்படையில்
2. அல் தாஹரா [தூய்மை]
3. நோன்பு
4. தொழுகை நூல்
5. இஸ்லாமிய சாசனங்கள்

இவர் நஜாஃபிலிருந்து லெபனானுக்கு திரும்பியபோது, இமாம் ஷிர்ரி அவர்களும், மறக்கமுடியாத ஆளுமையும், பெறுமதி வாய்ந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான ஷெய்க் முஹம்மத் ஜவாத் முஃனிய்யா அவர்களும், தென் லெபனானை சேர்ந்த மக்களை விழிப்புறச்செய்யும் நடவடிக்கை முயற்சியொன்றை தொடுத்ததோடு, லெபனானிய சமூகத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எழுமாறு அவர்களை ஊக்குவித்தனர்.

அக்காலப்பகுதியில், காலஞ்சென்ற இமாம் அப்த் அல் ஹுஸைன் ஷரஃப் அல் தீன் அவர்கள், கிலாஃபத்தை பற்றிய நூலொன்றை எழுதுமாறு நூலாசிரியரை தூண்டினார்கள். இஸ்லாமிய சட்ட யாப்பில் கிலாஃபத் என்றழைக்கட்ட ஒரு நூலை எழுதியதன் மூலம் நூலாசிரியர் நன்மையான இந்த வேண்டுகோளை கண்ணியப்படுத்தினார்.

நஜாஃபில் மிகவும் சிறந்ததொரு வரவேற்புடன் வரவேற்கப்பட்ட இந்த நூல், முன்ததா அல் நஷ்ரின் [ஒரு மார்க்க பாடசாலை] அங்கத்தவர்களை சந்திப்பதற்கும், நூலை கலந்துரையாடுவதற்கும் முனைவு பெறச்செய்ததுபிரபலமான அறிஞரான ஸையித் முஹம்மத் தகீ அல் ஹாகிம் அவர்களே அந்த ஒன்றுகூடலின் பிரதான பேச்சாளராக விளங்கினார்கள். நூல், அதன் சிறிய அளவுக்கு மாறாக, இஸ்லாமிய கலந்துரையாடலில் புதுமையானதோர் தனித்தன்மையுடன் திகழ்வதாக கருதப்பட்டது.

1949ஆம் வருட காலப்பகுதியில் நூலாசிரியர், மிச்சிகன், டெட்ரொய்டில் வாழ்ந்த முஸ்லிம்களிடமிருந்து கிடைத்த அழைப்பொன்றுக்கான பதிலாக ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்தார். ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தடைந்தபோது அவர், தன்னை அசெளகரியமான ஒரு நிலையில், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க பிறப்பு முஸ்லிம்களுடன் தொடர்பாட இயலாதமையை கண்டார், ஏனென்றால் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை.

வழமையான அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவர் ஒருவராக ஆவதற்குரியதை விடவும் அதிக வயதுடையவராக இருந்தாலும், இஸ்லாத்தின் வார்த்தைகளை பரப்புவதற்கான கவலையில் அவர், தன்னை, தனது இருதயத்தையும், ஆன்மாவையும் மொழிக்குள் மூழ்கச்செய்திருந்தார். குறுகியதொரு காலத்துள் அவர், டெட்ரொய்ட் பிரதேச முஸ்லிம்களுக்கு பணியாற்ற நன்றாக போதுமானளவு ஆங்கிலத்தை தனக்கு கற்றிபித்துக்கொண்டார். பிற்பாடு அவர் ஐக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா நெடுகிலும் பிரபல்யம் வாய்ந்த ஒரு பேச்சாளராகவும், இஸ்லாம் பற்றிய ஓர் அறிஞராகவும் மாறினார். மேலதிகமாக, இஸ்லாம் பற்றிய பல்வேறு வகையான நூல்களை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். கீழ்வருவனவை அவற்றுக்கு மத்தியில் விளங்குபவையாகும்:

1. முஸ்லிம் நடைமுறை
2. இஸ்லாமிய விசுவாசம்
3. இஸ்லாம் பற்றிய விசாரணைகள்
4. இமாம் ஹுஸைன், உயித்தியாகிகளது தலைவர்
5. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது சகோதரர் [இமாம் அலீ] [அவர் இந்த நூலை அரபியிலும் எழுதி, அதற்கு அமீர் அல் முஃமினீன் என்று பெயரிட்டார்]






















அறிமுகம்

சர்வ வல்லமை படைத்த அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவனது திருநாமத்தால். அகிலங்களின் இரட்சகனான இறைவனுக்கே எல்லா புகழும் உரியது.

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமைக்கான அதிக தேவையில் முஸ்லிம்கள் இன்று இருப்பதை விடவும் எப்போதுமே இருந்ததில்லை. இஸ்லாத்துக்கு எதிரான சூழ்ச்சித்திட்டங்கள் தற்போதைய காலத்தில் காணப்படுவதை விடவும் மிகவும் தீவிரமாக ஒருபோதுமே காணப்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, மிகவுமே தூய்மையற்ற ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ள பல முஸ்லிம் அரசாங்கங்கள், முஸ்லிம்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றன. ஷீஈ முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களை கூறும், ஏராளமான குற்றச்சாட்டுக்களை வீசியெறியும், அந்த குற்றச்சாட்டுக்களை பற்றி அறிந்திராதவர்களாகவே அவர்கள் காணப்பட்டிருக்க, குறைகளும்வழுக்களும் நிறைந்த நூல்கள் மற்றும் பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கிடையில் விநியோகிக்கப்பட்டன, இன்னும் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இஸ்லாத்தின் பிறப்பை தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலப்பிரிவில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது குடும்பத்தின் அங்கத்தவர்களை பின்பற்றுவோரை அவமரியாதை செய்வதற்காக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எவ்வாறாயினும், கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தீவிரமான, கீழ்த்தரமான நடவடிக்கையின் வடிவத்தை அவை ஒருபோதுமே பெற்றிருக்கவில்லை.

போலியானதும், தரங்கெட்டதுமான இந்த நடவடிக்கை ஈரானில் இஸ்லாமிய குடியரசின் பிறப்புக்கு பின்பே ஆரம்பித்தது. அரபு அரசாங்கங்களில் சில இந்த குடியரசின் பிறப்பை அச்சுறுத்தும் ஓர் அபாயமாக கண்டதாக தோன்றுகிறது. நேர்வழி நின்ற கிலாஃபத்தின் காலப்பகுதியை முஸ்லிம்களுக்கு ஞாபகமூட்டும் இந்த குடியரசு, இஸ்லாத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக கோரிக்கொண்டே, ஆட்சியாளர்களுடைய தாழ்ந்த இச்சைகளை திருப்திப்படுத்துவதற்காக பொதுச்சொத்தை செலவிடும் அரபு அரசாங்கங்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையிலான தெளிவானதொரு வேறுபாட்டையும் தோற்றுவிக்கிறது.

இந்த அரசுகள் இஸ்லாமிய குடியரசின் ஒளியை போரின் மூலம் அணைத்துவிட முயற்சித்தன, ஆனால் அவை வெற்றிபெறவில்லை. ஆகையால், முஸ்லிம் பொது மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் அவை, ஷீஈக்கள் இஸ்லாத்தின் பாதையை விட்டும் வழிகேட்டில் சென்றுவிட்டதாக அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைப்பதை இலக்காக கொண்டு, குற்றச்சாட்டுக்களை இட்டுக்கட்டுவதன் வாயிலாக ஈரானிய முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பிரிவினை நடவடிக்கையில் அவர்களை திருப்பிவிட்டுள்ளனர். அவ்வாறானதொரு நடவடிக்கை வெல்ல வேண்டுமானால், அறியாமையிலும், மூடத்தனத்திலும் மூழ்கிப்போயுள்ள முஸ்லிம்கள் ஷீஈக்களுடன் போரிடுவதை மார்க்க ரீதியாக சட்டபூர்வமானதாக கண்டு, இஸ்லாத்துக்காக வேறு எந்த மக்களை விடவும் அதிகமாகவே தியாகங்களை புரிந்துள்ள ஈரானியர்களுடைய இரத்தத்தை ஓட்டக்கூடும்.

ஷீஈக்கள் மெளனத்துடனும், தமது கண்களை மூடிக்கொண்டு இது ஒரு முடிவுக்கு வந்துவிடும் எனவும், கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பதற்குரிய எந்த விதமான அவசியப்பாடும் ஏற்படாது என்றும் எதிர்பார்த்தவர்களாகவும் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு பல வருடங்களாக முயற்சித்துள்ளனர்.

ஸுன்னி அறிஞர்களில் சிலர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முயலக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஷீஈக்கள் ஆதரிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளை பல ஸுன்னி அறிஞர்கள் அறிந்தே வைத்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஷீஈக்களுடைய கொள்கைகளை பற்றி அவர்கள் அறியாதவர்களாக இருந்திருந்தால், அவற்றுடன் பரிச்சயமாவது மிகவுமே இலகுவாக இருந்திருக்கும். அந்த கோட்பாடுகளை பற்றி ஷீஈ அறிஞர்களால் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்கள் காணப்படுவதோடு, அந்த நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன.

மார்க்க ரீதியான வேறுபாடுகள் கலந்துரையாடப்பட்டு, ஒருவர் மற்றவருடைய கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் பாங்கை அபிவிருத்தி செய்யக்கூடிய ஓர் இஸ்லாமிய மாநாட்டுக்கான அழைப்பை விடுப்பது ஸுன்னி அறிஞர்களுக்கு சாத்தியமானதேயாகும். குர்ஆன் அழைப்பு விடுப்பதும் இதற்காகவேயாகும்:

K/kpd;fNs! /gh]pf; (jPatd;) vtDk; cq;fsplk; xU nra;jpia nfhz;Lte;jhy; - mij jPu tprhhpj;Jf;nfhs;Sq;fs;> (,y;iyNay;) mwpahikapdhy; (Fw;wkw;w) xU r%fj;jhUf;F ePq;fs; jPq;F nra;J tplyhk;> gpd;dh; ePq;fs; nra;jit gw;wp ePq;fNs ifNrjg;gLgth;fshf (ftiyg;gLgth;fshf) MtPh;fs;.
அத்தியாயம் அல் ஹுஜுராத் (49) : வசனம் – 6

இந்த திசையில் நகராத ஸுன்னி அறிஞர்கள், அறியப்பட்டவற்றை பொறுத்தளவில், நயவஞ்சக செயற்பாட்டாளர்களால் பரப்பி விடப்பட்ட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பதற்கு முயற்சிக்காதமை கவலைக்குரியதாகும்.

எமது மெளனம் இந்த நடவடிக்கையை நிறுத்தவில்லை. இது இன்னும் அதை கடுமையாக்கியது. எமது மெளனமே குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைக்குரிய சான்று என்றும், எம்மால் அவர்களுக்கு பதிலளிக்க இயலவில்லை என்பதாகவுமே பலர் நினைத்தனர்.

இவ்வாறே, உண்மையை தெளிவுபடுத்தி, உண்மையை அறிந்துகொள்ள விரும்பும் எல்லா முஸ்லிம்களிடமும் தெரிவித்துவிட வேண்டியது அத்தியாவசியமானதாகியுள்ளது. இந்த முயசியில், நாம் ஸுன்னி சகோதரர்களை, அவர்களில் சிலர் ஷீஈக்களை குற்றஞ்சாட்டியுள்ளதை போன்று, இறைமறுப்பு, வழிகேடு அல்லது வரம்புமீறல் போன்றவற்றால் குற்றஞ்சாட்ட மாட்டோம். எந்த ஒரு முஸ்லிமும் நிற்பதற்கு பொருத்தமேயில்லாத அவ்வாறான ஒரு நிலையில் நாம் எம்மை வைத்துக்கொள்ளவே கூடாது. எல்லாம் வல்லோனை நாம் அவனுடைய தடையில் அடிபணிகிறோம்:

K/kpd;fNs! xU r%fj;jhh; gpwpnjhU r%fj;jhiu ghpfhrk; nra;a Ntz;lhk;. Vnddpy; (ghpfrpf;fg;gLNthh;) - mth;fis tpl Nkyhdth;fshf ,Uf;fyhk;> (mt;thNw) ve;jg;ngz;fSk; kw;w ve;j ngz;fisAk; (ghpfhrk; nra;a Ntz;lhk;) - Vnddpy; ,th;fs; mth;fis tpl Nkyhdth;fshf ,Uf;fyhk;> ,d;Dk; - cq;fspy; xUtUf;nfhUth; gopj;Jf;nfhs;shjPh;fs;. ,d;Dk; (cq;fspy;) xUtiunahUth; (jPa) gl;lg;ngah;fshy; miof;fhjPh;fs;> <khd; nfhz;lgpd; (mt;thW jPa) gl;lg; ngah; #l;LtJ kpff;nfl;ljhFk;> vth;fs; (,tw;wpypUe;J) kPstpy;iyNah - mj;jifath;fs; mepahaf;fhuh;fs; Mthh;fs;.
அத்தியாயம் அல் ஹுஜுராத் (49) : வசனம் – 11

தடை செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை உருவாக்கியோர், அவர்கள் அறிந்தேயிராத, பார்த்தேயிராத மற்றும் அவர்கள் உரையாடியேயிராத மில்லியன் கணக்கான முஸ்லிம்களை குற்றஞ்சாட்டுவதற்கு, மிகவுமே அசாதாரணமானதொரு முறைமையை பயன்படுத்தியமை வாசகருக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வாழ்ந்த மில்லியன் கணக்கான முஸ்லிம்களை, பிறக்கவுள்ள எண்ணற்ற எதிர்கால ஷீஈ தலைமுறையினருடன் சேர்த்தே இலக்காக்கிய அவர்கள் தாக்குதலை தொடுத்தனர். கேள்வியே கேட்காமலும், ஆர்வமுள்ள எந்த நபருக்கும் இலகுவான நுழைவுக்குள்ளாகவே காணப்படும் சத்தியத்தை தேடிப்பார்க்காமலும், சமகால முஸ்லிம்களில் மில்லியன் கணக்கானோரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.










































குர்ஆன் முழுமையற்றதாக உள்ளது என்று ஷிஈ முஸ்லிம்கள் கூறுகின்றனரா?

காலஞ்சென்ற எகிப்திய முஸ்லிம் அறிஞர் முஹம்மத் அபூ ஸஹ்ரா, தன்னுடைய அல் இமாம் அல் ஸாதிக் என்ற நூலில் கூறியுள்ளதாவது, முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி [ஒரு ஹதீஸ் பதிவாளர், மரணம். ஹி. பி. 329], குர்ஆனில் நாம் 6262 வசனங்களை மாத்திரமே ஓதிக்கொண்டிருக்க, நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன் ஏழாயிரம் வசனங்களை கொண்டிருந்ததாக இமாம் ஜஃஃபர் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறியதாகஉஸூல் அல் காஃபிஎன்ற அவருடைய நூலில் பதிவு செய்துள்ளார். மீதமானவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது குடும்பத்தின் அங்கத்தவர்களால் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது...

ஷெய்க் குலைனி அவர்கள் தனது இரட்சகனை நூற்றாண்டுகளுக்கு முன்பே சந்தித்துவிட்ட காரணத்தால் அவரால் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயலாதிருக்க, ஷெய்க் அபூ ஸஹ்ரா ஹதீஸ் பதிவாளர் அல் குலைனிக்கு எதிராக கடுமையானதொரு தீர்ப்பை வெளியிட்டார். அல் குலைனிக்கு எதிரான அபூ ஸஹ்ராவின் கடுமையான தீர்ப்புக்கு மாற்றமாக, அவர் அல் குலைனியை குற்றஞ்சாட்டியவற்றுடன் எல்லா ஷீஈக்களையும் அவர் குற்றஞ்சாட்ட முயலவில்லை.

குர்ஆனின் முழுமையற்ற தன்மை தொடர்பான அல் குலைனியின் அறிவிப்பு, [ஷீஈக்களில் அறுதிப்பெரும்பான்மையினராக திகழும்] இமாமிய ஷீஈக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. குர்ஆன் சேர்க்கையோ, நீக்கமோ அல்லது மாற்றமோ இன்றி சம்பூரணமாகவே உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பேராசிரியர் முஹம்மத் அபூ ஸஹ்ராஇமாம் அல் ஸாதிக்என்ற தன்னுடைய நூலில், ஒரு முன்னணி ஷீஈ அறிஞரான அல் ஸாஃபி அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்கவுரையில் கீழ்வருவனவற்றை கூறியுள்ளதாக எழுதியுள்ளார்:

மற்றுமொரு முன்னணி ஷீஈ அறிஞரான ஷெய்க் அபூ அலீ அல் தபரிஸி அவர்களின் பிரகாரம், ‘குர்ஆனில் எந்த ஒரு வார்த்தையுமே சேர்க்கப்படவில்லை. சேர்க்கப்பட்ட வார்த்தைகள் தொடர்பான எந்த வாதமும் ஷீஈக்களால் ஏகோபித்து நிராகரிக்கப்பட்டுள்ளது. நீக்கத்தை பொறுத்தமட்டில், மாற்றம் அல்லது நீக்கம் காணப்படுவதாக சில ஷீஈக்கள் மற்றும் சில ஸுன்னிகள் கூறியுள்ளனர். எமது அறிஞர்கள் அதை மறுத்துவிட்டனர்.’”


மற்றுமொரு முன்னணி ஷீஈ அறிஞரான ஸையித் அல் முர்த்தழா அவர்கள் கூறியுள்ளதாவது:

“... குர்ஆனின் பரிபூரணத்துவம் பற்றிய எமது நிச்சயத்தன்மை, சுய சான்றாக விளங்கும் நாடுகளின் அல்லது மிகப்பெரிய நிகழ்வுகளின் உள்ளமை பற்றிய எமது நிச்சயத்தன்மையை போன்றதாகும். திருக்குர்ஆனை பதிவு செய்வது மற்றும் பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் எண்ணற்றவை, ஏனென்றால் குர்ஆன் நபித்துவத்தின் ஓர் அற்புதமாகவும், இஸ்லாமிய ஞானம் மற்று மார்க்க சட்ட திட்டங்களின் மூலாதாரமாகவும் விளங்குகிறது. குர்ஆனுடனான அவர்களது அக்கறை, முஸ்லிம் அறிஞர்களை அதன் இலக்கணம், அதன் ஓதல் மற்றும் அதன் வசனங்கள் தொடர்பான உயர் இயலுமையுள்ளவர்களாக்கியது.”


ஒப்பில்லா இந்த அக்கறையுடன், குர்ஆன் சில பகுதிகளில் மாற்றப்பட்டதற்கான அல்லது நீக்கப்பட்டதற்கான சாத்தியப்பாடு கிடையாது. நயவஞ்சக முஸ்லிம் அரசாங்கங்களுக்கான ஒரு சேவையாக முஸ்லிம்களை பிளவுபடுத்த மட்டுமே முயற்சிக்கும் கூலி எழுத்தாளர்களிடம் கீழ்வருவன பற்றி தெரிவிக்கப்பட வேண்டும்:

1. அல் குலைனி ஷீஈக்களுடைய ஓர் இமாம் அல்ல. ஒன்று அல்லது பல மூலங்களூடாக அவரிடம் தெரிவிக்கப்பட்டவற்றை அறிவித்த அவர் ஒரு ஹதீஸ் பதிவாளர் மட்டுமேயாவார். அல் இமாம் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமிருந்து தான் செவியுற்றதாக அவர் கூறவில்லை. சில அறிவிப்பாளர்களூடாக தனக்கு ஒரு ஹதீஸ் கிடைத்ததாக மாத்திரமே அவர் கூறினார். இமாம் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது நாட்களின்போது அவர் வாழவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது குடும்ப அங்கத்தவர்களை சேர்ந்த எந்த ஒரு இமாமையும் அவர் பார்க்கவில்லை.


குர்ஆனின் முழுமையற்ற தன்மை பற்றி ஸுன்னிகளிலிருந்தான அறிவிப்பாளர்களே ஏராளமாக உள்ளனர்

2. குர்ஆனின் முழுமையற்ற தன்மையை அறிவித்த ஒரே அறிஞராக அல் குலைனி மாத்திரம் விளங்கவில்லை. ஸுன்னி அறிஞர்களுடைய கிரந்தங்களில், குர்ஆன் முழுமையற்றதாக உள்ளதென்று கலீஃபா உமர், ஆயிஷா மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது ஒரு தொகை ஸஹாபாக்கள் கூறியதாக அறிவித்த ஏராளமான ஹதீஸ் பதிவாளர்கள் உள்ளனர்.



அல் புஹாரியின் ஸஹீஹ்

அல் புஹாரி தனது (ஆதாரபூர்வமான) ஸஹீஹில், பாகம் எட்டு, பக்கங்கள் 209-210 இல் [ஹதீஸ் எண். 6830], உமர் இப்னு அல் கத்தாப் தன்னுடைய கிலாஃபத்தின் இறுதி ஆண்டில் நிகழ்த்திய ஓர் உரையில் கூறினார் என்று இப்னு அப்பாஸ் அறிவித்ததாக பதிவுசெய்துள்ளதாவது:

நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அவர்களை சத்தியத்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை [ரஜ்கி] குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம்.

இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அவர்கள் கல்லெறி தண்டனையை [ரஜ்கி] நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்கு பிறகு நாங்களும் அந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லைஎன்று கூறி இறைவன் அருளிய கடமை ஒன்றை கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.

மணமுடித்த ஆணோ அல்லது பெண்னோ விபச்சாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்கு கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைவேதத்தில் உள்ளதாகும்.

பிறகு, நாங்கள் ஓதி வந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்:

உங்களுடைய தந்தையரின் தந்தைத்துவத்தை வெறுப்பில் புறக்கணித்துவிட வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய தந்தையரின் தந்தைத்துவம் பற்றி வெட்கப்படுவது உங்கள் பங்குக்குரிய இறை மறுப்பாகும்.””

இதையொத்த அறிவிப்புக்கள் இமாம் அஹ்மத் அவர்கள் மூலம் அவர்களது முஸ்னத்தின் முதலாவது பாகத்தில் [உமருடைய முஸ்னத்தில், ஹதீஸ் அல் ஸகீஃபாவின் தலைப்பின் கீழ், பக்கங்கள் 47 மற்றும் 55 இல்] பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு ஹிஷாம் தன்னுடைய நபியவர்களின் ஸீராவில், பாகம் 2 பக்கம் 658 இல் [இரண்டாவது பதிப்பு, 1955] இதையொத்த விடயங்களை பதிவு செய்துள்ளார்.



முஸ்லிமின் [ஆதாரபூர்வமான] ஸஹீஹ்

முஸ்லிம் தனது ஸஹீஹின் ஏழாவது பாகத்தில் [அல் நவவியின் விளக்கவுரை], அல் ஸகாத் நூலில், இறைவன் வழங்குபவற்றுடன் திருப்தியுடன் இருப்பதன் சிறப்பை பற்றிய மற்றும் அந்த சிறப்பை கொண்டிருப்பதற்கு மக்களை தூண்டுவது பற்றிய, பக்கங்கள் 139-140 இல் [ஹதீஸ் எண். 1894, 1896, 1897], அபுல் அஸ்வத் அவருடைய தந்தை கூறினார் என்று அறிவித்ததாக பதிவுசெய்துள்ளதாவது:

அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் பஸ்ரா [ஈராக்] நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் ஆளனுப்பினார்கள். குர்ஆனை கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூஸா கூறினார்கள்: ‘பஸ்ரா வாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே குர்ஆனை ஓதிவாருங்கள். இல்லாவிட்டால், காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதை போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிடும்.

[நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அவர்களது காலத்தில்] நாங்கள் நீளத்திலும், கடுமையிலும்பராஅத்எனப்படும் [9ஆவது] அத்தியாயத்தை ஒத்த ஓர் அத்தியாயத்தை குர்ஆனிலிருந்து ஓதிவந்தோம், ஆனால் அந்த அத்தியாயத்தை நான் மறந்துவிட்டேன். அந்த அத்தியாயத்திலிருந்து என்னால் கீழ்வரும் வார்த்தைகளை மாத்திரமே ஞாபகபடுத்திக்கொள்ள முடிகிறது:

ஆதமின் மகனுக்கு சொந்தமாக இரண்டு பள்ளத்தாக்குகள் நிரம்ப செல்வம் இருந்தாலும், மூன்றாவது பள்ளத்தாக்கை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை தவிர வேறெதுவும் நிரப்பாது.”

மேலும், [சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என] இறைதுதியில் தொடங்கும் முஸப்பிஹாத்தை ஒத்த மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம், அதையும் நான் மறந்துவிட்டேன். அதிலிருந்து கீழ்வருவன மட்டுமே எனக்கு நினைவில் உள்ளது:

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? [அவ்வாறு செய்யாததை பிறருக்கு சொல்வீர்களாயின்] அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்பட்டு, மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.””

அபூமூஸா குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் குர்ஆனிலிருந்து வந்தவையோ அல்லது அவை குர்ஆனிலுள்ள இறைவனுடைய வார்த்தைகளில் எதையும் ஒத்தவையோ அல்ல என்பது மிகவுமே தெளிவானது. குர்ஆனிலிருந்து இரண்டு ஸூராக்கள் தவறிவிட்டதெனவும், அவற்றில் ஒன்று பராஅத்தை ஒத்தது என்றும் [பராஅத் அத்தியாயம் 130 வசனங்களை கொண்டது] அபூமூஸா கோறுவது ஆச்சரியத்துக்குரியதாகும்.



ஆயிஷா

முஸ்லிம் அல் ரிதஃஆ [பாலூட்டல் பற்றிய] நூலில், பாகம் 10, பக்கம் 29 [ஹதீஸ் எண். 2876] இல், ஆயிஷா கீழ்வருவனவற்றை கூறியதாகவும் பதிவுசெய்துள்ளார்:

நிச்சயத்துடன் அறியப்பட்ட குறிப்பிட்ட பத்து தடவைகள் பாலூட்டல், பாலூட்டிய ஒரு பெண்ணை பாலூடப்பட்ட ஒரு குழந்தையின் தாயாக ஆக்கிவிடும்என்பதே குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. இத்தனை தடவை பாலூட்டல்கள் பெண்ணை குழந்தைக்குஹராம் [தடை]’ ஆக்கிவிடும். பிறகு இந்த வசனம், பெண்ணை குழந்தைக்கு தடைசெய்யப்பட்டவளாக ஆக்கிவிடுவதற்குகுறிப்பிட்ட ஐந்து தடவைகள் பாலூட்டல்மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இந்த வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு, குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அவர்கள் இறந்தார்கள்.”



33ஆவது அத்தியாயம் முழுமையற்றதென உமர் கூறியது

அல் முத்தகி அலீ இப்னு ஹுஸாம் அல் தீன் அவர்கள், இமாம் அஹ்மதுடைய முஸ்னதின் பக்கவாட்டுக்கரையில் அச்சிடப்பட்டமுக்தஸர் கன்ஸ் அல் உம்மால்என்ற தனது நூலில், பாகம் 2, பக்கம் 2, 33ஆவது அத்தியாயத்தை பற்றிய தன்னுடைய ஹதீஸில், ஹுதைஃபா கூறினார் என்று இப்னு மர்தவைஹ் அறிவித்ததாக கூறியுள்ளதாவது:

உமர் என்னிடம் கேட்டார், ‘அல் அஹ்ஸாப் அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் உள்ளடங்கியுள்ளன?’, நான் கூறினேன், ’72 அல்லது 73 வசனங்கள்.’ ‘287 வசனங்களை கொண்ட பசு அத்தியாயத்தை போன்று நீண்டதாகவே அது இருந்தது, மேலும் கல்லெறி தண்டனை பற்றிய வசனமும் அதிலேயே இருந்தது.’ என்று அவர் கூறினார்.


முஸ்தத்ரக் அல் ஸஹீஹைன்

அல் ஹாகிம் அல் நிஸாபூரி அவர்கள்அல் முஸ்தத்ரக்என்ற தனது நூலில், குர்ஆன் மீதான விளக்கவுரை பற்றிய நூலில், பாகம் 2, பக்கம் 224 இல், [நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள் அல் அன்ஸார்களின் தலைவர் என்று அழைத்த] உபை இப்னு கஅப், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள் தன்னிடம் கூறினர் என்று அறிவித்ததை பதிவுசெய்துள்ளார்:

நிச்சயமாக எல்லாம் வல்லோன் உங்களுக்கு முன்னால் குர்ஆனை ஓதுமாறு எனக்கு கட்டளையிட்டுள்ளான், மேலும் அன்னவர்கள் ஓதினர், “வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களிலிருந்தான நிராகரிப்பாளர்கள் சான்றை காணும் வரையில் தமது வழியை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். வேதத்துக்குரியோருக்கும், சிலைவணங்கிகளுக்கும் மத்தியில் மறுப்போர் அவர்களிடம் அத்தாட்சி வரும் வரையில் மாற முடியாது. அல்லாஹ்விடமிருந்தான ஒரு தூதர், தூய்மைப்படுத்தப்பட்ட பக்கங்களை ஓதுகிறார்.. .”

மேலும் அதன் மிகச்சிறந்த பகுதியாவது, “இப்னு ஆதம் ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப செல்வத்தை கேட்டு, அதை நான் அவனுக்கு வழங்கினால், அவன் மற்றுமொரு பள்ளத்தாக்கையும் கேட்பான். மேலும் அதையும் நான் அவனுக்கு வழங்கினால், அவன் மூன்றாவது பள்ளத்தாக்கு ஒன்றையும் கேட்பான். இப்னு ஆதமுடைய வயிற்றை மண்ணை தவிர எதுவுமே நிரப்பாது. பாவமன்னிப்பு இறைஞ்சும் எவருடைய மன்னிப்பையும் இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இறைவனுடைய பார்வையில் யஹூதிய்யா [யூதம்] அல்லது நஸ்ரானிய்யா [கிறிஸ்தவம்] ஆகியவற்றை விடவும் ஹனஃபிய்யாவே [இஸ்லாம்] மார்க்கமாகும். எவரேனும் நன்மையை செய்தால், அவரது நன்மை நிராகரிக்கப்பட மாட்டாது.”

அல் ஹாகிம் கூறினார்:

இது ஓர் ஆதாரபூர்வமான அறிவிப்பானாலும், இரு ஷெய்குமார்களும் [அல் புஹாரி மற்றும் முஸ்லிம்] இதை பதிவு செய்யவில்லை. அல் தஹபியும் [அல் முஸ்தத்ரக் மீதான] தனது விளக்கவுரையில் இதை ஆதாரபூர்வமானதாக கருதியுள்ளார்.”


அல் ஹாகிம் உபை இப்னு கஅப் ஓதி வந்ததாக அறிவித்துள்ளதாவது:

நிராகரித்தோர் தமது இருதயங்களில் அறியாமை கால முத்திரையை பதித்துவிட்டனர்; மேலும் நீங்களும் ஒத்த முத்திரயொன்றை கொண்டிருந்தீர்களேயானால், புனித பள்ளிவாசல் சீர்கெட்டிருக்கும், இன்னும் இறைவன் தன்னுடைய தூதர் மீது தனது ஆதரவின் அமைதியை இறக்கி வைத்தான்.”

இந்த ஓதல் உமருக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் உபையுடன் மிகவும் கோபம் கொண்டார். அவர் தனது பெண் ஒட்டகையை கீலெண்ணெயை கொண்டு பாராமரித்துக்கொண்டிருக்கையில் அவருக்காக ஆளனுப்பினார். ற்னைய ஸஹாபாக்களையும் அனுப்பினார். அவர் ஸைத் இப்னு ஸாபித் உட்பட ஏனைய ஸஹாபாக்களுக்கும் அழைப்பு விடுத்தார். உபை அவரிடம் வந்தார். உமர் வினவினார்: “உங்களில் யாருக்கு அல் ஃபதஹ் [வெற்றி] அத்தியாயத்தை ஓத முடியும்?” ஸைத் இப்னு ஸாபித் நாம் இப்போது ஓதும் முறையில் அத்தியாயத்தை ஓதினார். உமர் உபையிடம் கோபமாக பேசினார். உபை கேட்டார்நான் பேசலாமா?’ உமர் கூறினார்பேசுங்கள்.’ உபை கூறினார்நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது வீட்டுக்குள் நுழையக்கூடியவனாக இருந்தேன், மேலும் நீங்களும், மற்றவர்களும் கதவினருகில் நிற்கையில் அன்னவர்கள் எனக்கு குர்ஆன் ஓதலை கற்பிக்கக்கூடியவர்களாக இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியும்.’

நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) என்னவர்கள் எனக்கு கற்பித்த வழியில் நான் மக்களுக்கு கற்பிப்பதை நீங்கள் விரும்புவீர்களேயானால், நான் அவர்களுக்கு கற்பிப்பேன்; இல்லாவிட்டால், நான் அவர்களுக்கு ஒரு எழுத்தை கூட எப்போதும் கற்பிக்கவே மாட்டேன்.”

உமர் அவரிடம் கூறினார்: “எவ்வாறு ஓதுவது என்பதை மக்களுக்கு தொடர்ந்து கற்பியுங்கள்.”

இரு ஷெய்குமார்களுடைய [அல் புஹாரி மற்றும் முஸ்லிம்] நியமங்களின் பிரகாரம் இது ஆதாரபூர்வமானதென அல் ஹாகிம் கூறினார். எவ்வாறாயினும், அவர்கள் இதை பதிவுசெய்யவில்லை.

அல் தஹபியும் அல் முஸ்தத்ரக், பாகம் 2 பக்கம் 225-226 மீதான தனது விளக்கவுரையில் இதை ஆதாரபூர்வமானதாக கருதியுள்ளார்.


72 வசனங்களை கொண்டிருந்த அல் அஹ்ஸாப் அத்தியாயம், [287 வசனங்களை கொண்டிருக்கும்] அல் பகரா அத்தியாயத்தை போன்றே மிகவும் நீண்டதாக இருந்ததென்று உமர் கூறியதாக ஹிதைஃபா அறிவித்த இப்னு மர்தவைஹுடைய அறிவிப்பையும் மற்றும் [130 வசனங்களை கொண்டிருக்கும்] அல் பராஆ அத்தியாயத்துக்கு சமனான நீளமுடைய ஓர் அத்தியாயம் குர்ஆனிலிருந்து நீக்கப்பட்டதாக கூறும் அபூ மூஸாவுடைய அறிவிப்பையும் நாம் எடுத்தால், அப்போது இந்த அறிவிப்புக்களின் பிரகாரம் குர்ஆனிலுள்ள நீக்கம் ஏறத்தாழ 345 வசனங்களாகும்.

இது உண்மையானால், இந்த அறிவிப்புக்களை பொறுத்த நீக்கத்துக்கும், 600 வசனங்கள் நீக்கப்பட்டதாக வாதிடும் அல் குலைனி கூறியதாக குறிப்பிடப்படும் அறிவிப்புக்கும் இடையிலான வித்தியாசம் என்னவாக இருக்கக்கூடும்?

மேற்கொண்டு, அல் குலைனி குர்ஆன் வசனங்களில் சில நீக்கப்பட்டதாக தனது நூலான அல் காஃபியில் பதிவுசெய்ததாகவே வைத்துக்கொள்வோம். குர்ஆனுடைய முழுமையற்ற தன்மையின் மீதான நம்பிக்கை பற்றி எதற்காக எல்லா ஷீஈக்களும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும்? குலைனி ஷீஈக்களுடைய ஓர் இமாம் அல்லவே, இன்னும் ஷீஈக்கள் அவரை பின்பற்றுபவர்களாக இல்லையே.

அல் குலைனி ஒரு ஹதீஸ் பதிவாளரை விடவும் உயர்ந்தவராக இருக்கவில்லை. அவரை போன்றதோர் அறிஞர் ஒரு தவறுதலை இழைக்கின்றாரேயானால், நாம் எதற்காக அந்த தவறுதலை அவரை பின்பற்றுபவர்களாக கூட விளங்காத மில்லியன் கணக்கான ஷிஈக்களுக்கு சாட்ட வேண்டும்.

அவ்வாறானதொரு குற்றச்சாட்டு அனுமதிக்கப்பட்டிருப்பின், நாம் எதற்காக குர்ஆனுடைய முழுமையற்ற தன்மையின் மீதான நம்பிக்கை பற்றி எல்லா ஸுன்னிகளையும், குர்ஆன் முழுமையற்றதாக விளங்கியதாகவும், இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறியதாக, அல் புஹாரி, முஸ்லிம், இமாம் அஹ்மத் மற்றும் இப்னு மர்தவைஹ் ஆகியோரால் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள உமரை அவர்கள் அனைவருமே பின்பற்றி வரும் காரணத்தால் குற்றஞ்சாட்ட கூடாது?

குர்ஆனுடைய முழுமையற்ற தன்மையை கூறிய காரணத்தால் கலீஃபா உமர், ஆயிஷா, அபூ மூஸா மற்றும் உபை இப்னு கஅப் போன்றவர்கள் இதே விடயம் குறித்து எதற்காக குற்றஞ்சாட்டப்பட கூடாது?

முஸ்லிம்களை குஃப்ர் அல்லது வழிகேடு போன்றவற்றால் குற்றஞ்சாட்டுவது இறைவனுக்கே அடுக்காது. அல்லாஹ்வை தவிர இறைவன் இல்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் பிரகடனம் செய்யும் எவரையும் ஒரு முஸ்லிமாகவே கருதுமாறு குர்ஆன் மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள் மூலமாக நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததை அல் புஹாரி பதிவு செய்துள்ளதாவது:

ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை ஒரு காஃபிர் என்று அழைக்கும்போது, இருவரில் ஒருவர் பாவத்தை சுமக்கின்றார்.”

சேர்க்கை, நீக்கம் அல்லது மாற்றம் எதுவுமே அற்ற ஒட்டுமொத்த குர்ஆனே இப்போது உள்ள குர்ஆன் என்றே நாம் நம்புகிறோம்.

வேத வெளிப்பாட்டுக்கு முற்பட்ட அல்லது வேத வெளிப்பாட்டுக்கு பிந்தைய யுகத்திலிருந்து எந்த விதமான அசத்தியமும் நுழையாத குர்ஆன் இதுவேயாகும். புகழுக்குரிய சர்வ வல்லமையும் மிக்கோனிடமிருந்தான ஒரு வேத வெளிப்பாடே இதுவாகும்.


அல்லாஹ் தானே குர்ஆனை பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான். அவன் கூறினான்



Tuesday, August 19, 2014

'கிலாபத்'தை நிறுவுவது எப்படி?



 
















 -ஜஃபர் பங்காஷ்-

தக்ஃபீரி குழுவின் திடீர் வெடிப்பு. இராக் - ஷாம் இஸ்லாமிய அரசு (
Islamic state of iraq and sham), (சிரியா) ISIS திடீரென வெடிக்கிறது. இப்பின்னணியில் கிலாபத் பிரகடனம் முழங்கியது.






திடீர் வெடிப்பின் ISIS அரசும் கிலாபத் பிரகடனமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஸீராவின் ஒளியில் விளங்கிக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதும் அவசரமுமான தேவையாகும்.
இஸ்லாமிய அரசில் (கிலாபத்) வாழ்வது அல்லது இஸ்லாமிய அரசொன்றினை நிறுவ அயராது உழைப்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும்.. இதனை அறிந்த அர்ப்பணித்த முஸ்லிம்கள் இவ்விடயத்தில் ஒன்றுபடுவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு நாம் நம் கவனத்தை குவிக்க வேண்டிய அம்சம், கிலாபத்தை அடைந்து கொள்ள வேண்டிய படிமுறைகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா, ஸீரா என்பன எல்லா வழிகாட்டல்களுக்கும் அடிப்படியானவை. குர்ஆன் இஸ்லாமிய வாழ்விற்கான பொதுவான அடிப்படை விதிகளை எடுத்துக் கூற சுன்னாவும் ஸீராவும் செயற்பாடு ரீதியான வடிவங்களை விளக்கி நிற்கின்றன.
நபித்துவத்தின் 23 வருட கால பணியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசொன்றினை எவ்வாறு நிறுவுவது என்பதை அழகாக செய்து காட்டியுள்ளார்கள்.
றைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தியாகமிக்க கொள்கைக்காக தங்களை அர்ப்பணம் செய்த ஒரு சிறு குழுவினரும் மக்காவின் ஆரம்ப கால பதின்மூன்று வருட கால வாழ்க்கையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். மக்கத்து பட்டணத்தரசு அவர்களை வதைத்து துன்புறுத்தி சித்திரவதைகள் செய்தது. மக்கத்து பட்டணத்து அரசின் அநீதி அக்கிரம் ஊழல் அடக்குமுறை என்பவற்றிக்கு மாபெரும் சவாலாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டமைதான் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் கொள்கையைக் கொண்ட தோழர்களும் பட்ட வேதனைக்கு அடிப்படைக் காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அவனது அன்புநபிக்கு புலம்பெயர் -ஹிஜ்ரத்- செய்வதற்கு அனுமதி வழங்கினான். மதீனத்து இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பட்டது.
மக்கத்து புலம்பெயர்வு -ஹிஜ்ரத்- தன்னார்வ புலம்பெயர்வல்ல. மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கொலை செய்திட திட்டம் வகுத்தனர். ஆனால் தான் பிறந்த நகரத்திலிருந்து அவர்களை வெளியேறுவதற்கு அல்லாஹ் பாதுகாப்பு வழங்கினான்.
மதீனத்துக்கு மாநபியின் வருகையோடு நேர்மை, நீதி என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. மதீனத்து பட்டணத்தில் வாழ்ந்த எல்லா மக்கள் தொகுதியினரும், முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் யூதர்கள் - மற்றவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ மதீனத்து உடன்படிக்கை மூலம் வழி வகுக்கப்பட்டது.

உரிமைகளும் பொறுப்புக்களும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன. மதீனத்து மண்ணில் வாழ்ந்த பல்வேறு வகையினரான மக்கள் தொகுதியினரை இவ்வுடன்பாட்டுக்கு கீழ் கொண்டு வர எதுவித பலப்பிரயோகமோ, வற்புறுத்தலோ மேற்கொள்ளப்படவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும்.
மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்  அவர்களின் தோழர்களையும் சமாதானமாக நிம்மதியாக வாழவிட்டு வைக்கவில்லை. முஷ்ரிகுகள் இவர்களைப் பின்தொடர்ந்தனர். பல தாக்குதல்களை இவர்கள் மீது மேற்கொண்டனர். முஸ்லிம்கள் சில வேளைகளில் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தனர் சில வேளைகளில் பின்னடைவுகளையும் கண்டனர். ஆனால் இறுதியாக முஸ்லிம்கள் வெற்றிகொண்டனர்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய ஸீராவிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஹி 8ம் ஆண்டு நடைபெற்ற மக்கத்துவிடுதலை. இப்பாடம் தற்போதைய எமது தலைப்புக்கு மிகவும் முக்கியமான விடயமாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்கத்து முஷ்ரிகுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சில விதிகளை அவர்கள் மீறி நடந்து கொண்டனர். ஒரு முஸ்லிமை கொலை செய்ததன் மூலம் அவ்வுடன்பாட்டு விதிகளை மீறினர். மக்காவின் புனித எல்லைகளுக்குள் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.  இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் எதுவித யுத்தமும் செய்யாமல் இரத்தம் சிந்தாமல் மக்காவிற்குள் நுழைந்தார்கள். கஃபதுல்லாஹ்வில் அபயமடைந்தவர்களுக்கும் மக்காவில் வீட்டிலிருந்தவர்களுக்கும் பாதுகாப்பும் உயிர் உரிமையும் உத்தரவாதம் வழங்கப்படுமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பகிரங்க அறிவித்தல் விடுத்தார்கள்.
ஓப்பந்தத்தின் அடிப்படையிலும், தேச வழமைச் சட்டத்தின் அடிப்படையிலும் மக்கத்து முஷ்ரிகுகளை அணியாக நிறுத்தி அவர்களின் குற்றச் செயல்களின் பட்டியலடிப்படையில் சிரச்தேசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்த போதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்; பழிவாங்கல்களுக்கும்  இரத்தம் சிந்துவதற்கும் பதிலாக மன்னிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள். 


ஆனால் இன்று இராக்கில் நடப்பது என்ன?  தங்களைத் தாங்களே ISIS என நாமம் சூட்டிக் கொண்டும் இராக்கில் நடத்தி வரும் பயங்கரவாதம் முற்று முழுதாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்யும் இந்த ISIS இற்கும் அதன் தலைவர்களுக்கும் மனித உயிரின் புனிதத்துவம் புரியவில்லை.
மிகவும் பெறுமதியான எண்ணக் கருக்களான ஜிஹாத், இஸ்லாமிய அரசு என்பனவற்றை கொச்சைப்படுத்தி தப்பர்த்தம் கற்பிக்கின்றனர்.
மனித படுகொலைகள், சரணடைந்த போர் வீரர்களை படுகொலை செய்தல் இந்த ISIS இன் கையெழுத்துக்களின் குறியீடுகளாக மாறிவிடுகின்றன. இவர்கள் தான் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவபாடுபடுவதாக தம்பட்டமடித்து கொள்கின்றனர். கலீமாவை பொறித்த கொடியினை ஏந்திக் கொண்டு அதன் பின் அணிதிரண்டுள்ள வாழ்வில் வெறுப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் இவர்களின் இஸ்லாத்தைப் பற்றிய குறைமதியும், இஸ்லாத்திற்கெதிரான ஆட்சியாளர்களுடனான கூட்டிணைப்பும் அவர்களின் உண்மையான நிகழ்ச்சித் திட்டத்தை அம்பலப்படுத்துகின்றது. இவர்கள் முஸ்லிம் உலகின் அல்லது வெளியே உள்ளவர்களின் -பிசாசுகளின்- கைக்கூலிகளே தவிர வேறு யாருமில்லை.
கொடுங்கோல் முடியரசுகளுடன் கூட்டுச்சேர்வதாலோ கீழத்தேய சியோனிசச் சக்திகளுடன் கூட்டிணைவதாலோ  இஸ்லாமிய கிலாபத்தை நிறுவி விட முடியாது. இது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பாடான நடவடிக்கையாகும்.
சஊதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற ஆட்சியாளர்கள் உண்மையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பினால் அவர்களின் நாடுகளை அந்த நல்ல பணியின் ஆரம்பதலங்களாக- முன்மாதிரியாக அமைத்துக் கொள்ளலாம். நேர்மை, நீதி என்வபற்றிக்கான கூக்குரல் அந்நாட்டில் ஒலிக்கின்ற போது ஊழல்களுக்கு எதிரான ஒரு முற்றுப் புள்ளியாக இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான கோஷம் மாற்றத்தை உண்டாக்கும்.
மட்டமான இஸ்லாமிய அறிவைக் கொண்ட ஒரு முஸ்லிம் கூட குர்ஆன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆதரவு வழங்காத, வழங்கமுடியாத, நியாயப்படுத்தமுடியாத ISIS இன் காட்டுமிராண்டிதனமான கொடுஞ் செயல்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.? இஸ்லாமிய அரசு அப்





பாவி மக்களின் எலும்புக் கூடுகளின் மீது நிறுவப்படுவதல்ல. அவர்களின் இரத்த வெள்ளத்திலே இஸ்லாமிய அரசை ஓட்டி விடவும் முடியாது. இந்த விதியின் கீழேதான் கீழைத்தேயவாதிகளினதும் சியோனிஸ்ட்களினதும் அரசுகள் நிறுவப்படுவதை நாம் வரலாற்று நெடுகிலும் கண்டு வருகின்றோம்.
எனவே இஸ்லாத்தின் முக்கியமான எண்ணக் கருக்களை கடத்திச் செல்வதற்கு வழிபிறழ்ந்த இந்த ISIS கூட்டத்தினருக்கு முஸ்லிம்கள் அனுமதி வழங்க முடியாது. அவர்களுடன் எவ்வித சமரச போக்கையும் கைக்கொள்ள முடியாது.
எனவே ISIS என்ற தீவிரவாத இயக்கம் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அமெரிக்க இஸ்ரவேலின்; கூட்டுக் கலவை. இது இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் இல்லாதொழித்து முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக புறப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கம் நீண்டகாலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. இருப்பினும் இதன் செயற்பாடுகள் இஸ்லாத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை தெளிவாக அடையாளம் காண்பது முஸ்லிமான ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
(தமிழில்: அபூகுமைல்)

Friday, August 8, 2014

ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் நேர்காணலும், கருத்துகளும்.



அல்அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள், எகிப்திய அல்நீல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

ஷீஆக்களைப் பற்றி அல்அஸ்ஹர் என்ன சொல்கிறது? எகிப்தின் அல்நீல் செனலுக்கு அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள் வழங்கிய  நேர்காணலும், ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் கருத்துகளும்.

கேள்வி:     ஷீஆக்களின் நம்பிக்கை தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் உங்கள் பார்வையில் தென்படுகின்றதா?

பதில்:     கிடையாது. இல்லவே இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன், அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பின் பிரகாரம், ஷீஆ மத்ஹப் (சிந்தனைப் பிரிவு) ஆனது, ஏனைய மத்ஹப்களோடு, ஐந்தாவது மத்ஹபாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத்
கேள்வி:    எமது பிள்ளைகள் ஷீஆ இஸ்லாமிய சிந்தனைப் பிரிவை தழுவிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:    அவர்கள் ஷீஆ மத்ஹபைத் தழுவிக் கொள்ளட்டுமே. யாராகிலும் ஒருவர் மாலிகி மத்ஹபை, அல்லது ஹனபி மத்ஹபை விட்டு விலகினால், அவரை நாம் விமர்சிப்பதில்லையே. இந்தப் பிள்ளைகள் நான்கு மத்ஹப்களையும் விட்டு விட்டு ஐந்;தாவது மத்ஹபில் இணைந்து கொள்கின்றார்கள்.

கேள்வி:    ஷீஆக்கள் எமது உறவினர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் பிள்ளைகளை திருமண பந்தத்தின் மூலம் தம்முடன் இணைத்துக் கொள்கின்றார்களே?

பதில்:    இதில் என்ன தவறு? மதங்களுக்கிடையிலான திருமணமே அனுமதிக்கப்பட்டுள்ளதே.

கேள்வி:    ஷீஆக்களிடம் வித்தியாசமான வேறு ஒரு குர்ஆன் உள்ளது எனக் கூறப்படுகின்றதே. இது பற்றி?

பதில்:    இது, வயது முதிர்ந்த பெண்களின் ஆதாரமற்ற மூடநம்பிக்கையும் கட்டுக்கதையும். ஷீஆக்களிடம் இருக்கின்ற குர்ஆனுக்கும் எங்களிடம் உள்ள குர்ஆனுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமுமில்லை. அவர்களின் குர்ஆனில் காணப்படுகின்ற அகர எழுத்துகளுக்கும் எங்கள் குர்ஆனின் அகர எழுத்து வரிசைகளுக்கும் இடையிலேயும் கூட வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி:    ஒரு நாட்டின் (சவூதி அரேபியா) 23 மத போதகர்கள், 'ஷீஆக்கள் காபிர்கள்' என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளார்களே?

பதில்:    முஸ்லிம்களுக்காக ஃபத்வா வழங்கும் அதிகாரபூர்வமான அமைப்பு அல்அஸ்ஹர் மாத்திரமே. மேலே கூறப்பட்ட ஃபத்வா செல்லுபடியற்றது. நம்பகத்தன்மையற்றது.

கேள்வி:    ஷீஆக்களுக்கும் சுன்னாக்களுக்கும் இடையில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரிவினை – வித்தியாசம் என்ன கூறி நிற்கின்றது ஷைக் அவர்களே?

பதில்:    வெளிநாட்டுச் சக்திகளின் கொள்கை வகுப்பாளர்களின் சதியே இது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. அவர்களின் நலன் காக்க ஷீஆ-சுன்னா பிளவினை தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கேள்வி:    எங்களிடம் மிகவும் முக்கியமான கேள்வி ஒன்றுள்ளது. ஷீஆக்கள் கலீபாக்களான அபூபக்கர் (ரழி) மற்றும் உமர் (ரழி) ஆகியோரை ஏற்றுக் கொள்வதில்லையே. அப்படிப்பட்ட ஷீஆக்களை முஸ்லிம்கள் என்று தங்களால் எவ்வாறு கூற முடியும்?

பதில்:    ஆம். ஆம். அந்த கலீபாக்களை ஷீஆக்கள் ஏற்றுக் கொள்தில்லைதான். ஆனால், அபூபக்கரை, உமரை ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய அடிப்படை (உசூலுத்தீன்) இன் ஒரு பகுதியா? அபூபக்கர், உமர் பற்றிய சம்பவம் வரலாற்று ரீதியான ஒரு சம்பவம். (உசூலுத்தீன் எனும்) அடிப்படை நம்பிக்கைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

கேள்வி:    (பதிலைக் கேள்வியுற்ற நிருபர், சற்று ஆச்சரியமடைந்தவராகக் கேட்கிறார்) ஷீஆக்களின் அடிப்படைப் பிரச்சினை – அவர்களின் இமாம் - தற்காலத்திற்குரிய இமாம் (இமாமுல் அஸ்ர்) ஆயிரம் வருடங்கள் கழிந்தும் இன்னும் உயிர் வாழ்கின்றார் எனக் கூறுகின்றனரே?

பதில்:     அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் இது சாத்தியமில்லை? ஆனாலும் நாங்கள் சுன்னாக்கள் என்பதனால் அவர்களைப் போன்று இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று எந்தக் காரணமும் கிடையாது.

கேள்வி:     (இமாம் முஹம்மது தகி அல்ஜவாத் (அலை) (ஷீஆக்களின் ஒன்பதாவது இமாம்) அவர்களைக் குறித்துக் கேட்கப்பட்டது.) அவர்களின் இமாம்களில் ஒருவர், எட்டு வயதுடைய சிறுவராயிற்றே. அவரை, ஷீஆக்கள் தங்களின் இமாமாக நம்பிக்கை கொண்டுள்ளனரே? எட்டு வயதுக் குழந்தை இமாமாக இருப்பதென்பது சாத்தியமா?

பதில்:    தொட்டிலில் உள்ள குழந்தை நபியாக (நபி ஈஸா (அலை) அவர்கள்) வர இயலுமாயின், ஏன் எட்டு வயதுச் சிறுவர் இமாமாக வர முடியாது? இது ஆச்சரியமானதொன்றல்ல. சுன்னாக்களாகிய நாங்கள் இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளா விடினும், இக்கொள்கை அவர்களின் இஸ்லாத்திற்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் முஸ்லிம்களே!.

தமிழில்: அபூகுமைல்

அல் - அக்ஸா, பலஸ்தீன் விவகாரத்தில் இமாம் கொமெய்னியின் பார்வை



இமாம் கொமெய்னியின் (ரஹ்) வின் இருபத்தைந்தாவது
நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (04/06/2014) இக் கட்டுரை பிரசுரமாகின்றது. 

மர்லின் மரிக்கார் 

இஸ்லாமிய மக்கள் புரட்சியின் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசை ஸ்தாபித்தவரே இமாம் கொமெய்னி (ரஹ்) ஆவார். இவர் வபாத்தாகி இற்றைக்கு இருபது வருடங்களாகிவிட்டன.
என்றாலும் அவர் இஸ்லாமிய புரட்சியின் மூலம் இட்ட அடித்தளம் ஆழ, அகலமானது. உறுதியான பலம்மிக்கது. இதன் பயனாக ஈரான் எவரது தயவிலும் தங்கி நிற்காது சுயமாக எழுந்து நிற்கும் நாடாக விளங்குகின்றது.
அதேநேரம் வல்லரசுகளின் அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் தலை சாய்க்காத நாடாக நிமிர்ந்து நிற்கின்றது. என்னதான் அழுத்தங்களும், நெருக்குதல்களும் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது மத்திய கிழக்கில் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் நாடாகவும் திகழுகின்றது ஈரான்.
இதேவேளை இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனை, மற்றும் செயற்பாட்டுத் தாக்கம் இப்போதும் உலகில் பிரதிபலிக்கவே செய்கிறது. அவர் முஸ்லிம்களின் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் பெரிதும் வலியுறுத்தினார். அதுவே முஸ்லிம் உலகின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக அமையும் என்பதையும் அவர் பலமுறை சுட்டிக்காட்டினார்.
 
இதனடிப்படையில் முஸ்லிம்களது ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவென அவர் ஒற்றுமை வாரத்தைப் பிரகடனப்படுத்தினார். இவ்வாரம் இஸ்லாமிய வருடக் கணிப்பில் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் நடுப்பகுதியில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாரத்தில் முஸ்லிம்களது ஒற்றுமையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலான மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன. அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்கள் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருந்தார். அடக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மானசீக ரீதியாக ஆதரவும் நல்கினார்.
அந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்), அல் அக்ஸாவும், பலஸ்தீனமும் யூதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவை முஸ்லிம்களின் பூர்வீக சொத்து என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அது தொடர்பான கருத்துக்களையும் திட்டங்களையும் அவர் முன்வைத்தார். அல் - அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை, அவர் முழு முஸ்லிம்களினதும் பிரச்சினையாகவே பார்த்தார். 

 
ஏனென்றால் அல் அக்ஸா என்பது உலகில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமையான இரண்டாவது பள்ளிவாசல். இது முழு முஸ்லிம்களுக்குமான மூன்றாவது புனித தலம். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகையும் அல்லாஹ்விடத்தில் ஐநூறு தொழுகைகளுக்குச் சமமாகும்.
அதே நேரம் சர்வவல்லமை மிக்க அல்லாஹ்தஆலாவின் இறைத்தூதர்கள் பலரும், இறை விசுவாசிகளும், வாழ் ந்து வழிபட்ட புனித பிரதேசம் இது.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி ஒரே இரவில் ‘இஸ்ரா’ பயணம் மூலம் மக்காவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலமும் அதுவே. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்கான மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த இடமும் அல் - அக்ஸாவேதான்.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் அல்- அக்ஸாவும், பலஸ்தீனமும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய புனித பூமி. இதனையே யூதர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இஸ்ரேலை +(திrதிருக்கிறார்கள். பலஸ்தீனின் பூர்வீக மக்களான முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கியுள்ளார்கள். அவர்களை அடக்கி, ஒடுக்கி வருகின்றார்கள். துன்புறுத்துகின்றார்கள்.
இதனால் தான் இமாம் கொமெய்னி (ரஹ்) ஒரு முறை “அல்- அக்ஸா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினையோ, அல்லது ஒரு நாட்டுக்குரிய பிரச்சினையோ அல்ல. அது தற்கால முஸ்லிம் உலகுடன் மாத்திரம் தொடர்புபடும் பிரச்சினையுமல்ல. மாறாக அது உலகிலுள்ள ஏகத்துவவாதிகளினதும், கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இறை விசுவாசிகளினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முன்னெடுக்கப்படும் அறப் போராட்டத்திலேயே அல் - அக்ஸாவின் மீட்சியும், விடுதலையும் தங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இதே நேரம் “அல்- அக்ஸாவையும், பலஸ்தீனையும் மீட்டெடுப்பது தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் தேசமும் கவனம் செலுத்துவது அவசியம்” என்றும் அவர் பிறிதொரு சமயத்தில் வலியுறுத்தினார்.
இதேவேளை ‘அல்- அக்ஸாவிலிருந்தும், பலஸ்தீன இஸ்லாமிய பூமியிலிருந்தும் இன்ஸா அல்லாஹ் இஸ்ரேலிய யூதர்கள் விரட்டியடிக்கப்படுவர். அப்போது நாமனைவரும் ஒன்றாகச் சென்று அல் அக்ஸாவில் ஒற்றுமையாக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இவ்வாறு அல்- அக்ஸா தொடர்பாகவும், பலஸ்தீன் குறித்தும் நிறையவே கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைத்திருக்கிறார் இமாம் கொமெய்னி (ரஹ்). அவை உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக முஸ்லிம் உலகிலும் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
என்றாலும் அத்தோடு நின்றுவிடாது அல்- அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை உலகிற்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் புரியவைப்பதற்கா கவும், தெளிவுபடுத்துவதற்காகவும் அவர் சர்வதேச குத்ஸ் தினத்தையும் பிரகடனப்படுத்தினார்.
ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையிலான புரட்சி வெற்றி பெற்ற பின் வந்த முதலாவது ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையே சர்வதேச குத்ஸ் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் வருடா வருடம் ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊர்வலங்களும் மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன.
ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவரும் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மாநாடுகளில் உரையாற்றி இருக்கிறார்கள். அவ்வாறு உரையாற்றுவதற்குத் தவறிய ஈரானிய தலைவர் எவருமே இல்லை. அந்தளவுக்கு அல்-அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை உலக மயப்படுத்துவதில் ஈரான் பங்களிப்பு செய்து வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக பலஸ்தீனர்களின் விவகாரம் என்றிருந்த அல் அக்ஸா பலஸ்தீன பிரச்சினை உலக முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் பாரிய பங்களிப்பு செய்துள்ளன என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
 நன்றி: தினகரன்


Wednesday, April 16, 2014

ஓர் உரத்த சிந்தனை: ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?

தென்னாஃபிரிக்காவின் அல்-பலாக்ஹ் பத்திரிகை ஆசிரியர் வினவுகிறார்:

ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?
 

வாழ்க்கையில் வேறெதனையும் உருப்படியாகச் செய்யத் தெரியாத மவ்லவிமார்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களும், இப்போது புதியதொரு விளையாட்டை ஆடத் துவங்கி யிருக்கின்றனர். அது என்னவென்றால், நமது ஷிஆ முஸ்லிம் சகோதரர்களை 'காஃபிர்கள்' என அழைப்பது. அல்லாஹு சுபுஹானஹுத் தஆலா குர்ஆனிலே, நாம் எந்த வொரு முஸ்லிமையும் ஒரு 'காஃபிர்;' என அழைக்கக் கூடாது எனத் தெளிவாக கூறியுள்ளான். (அல்-குர்ஆன் 4:94); நமது உயிரிலும் மேலான ரசூலுலலாஹ் (ஸல்) அவர்கள், சக முஸ்லிம்களை 'காஃபிர்கள்' என அழைப்பதினின்றும் நம்மைத் திட்டவட்டமாகத் தடுத்துள்ளார்கள். ஆயினும், இந்த அற்பத்தனம் கொண்ட, சிறிய உள்ளம் படைத்த புரோகிதர்கள் - முஸ்லிம் உலகின் அறிவுக் குள்ளர்கள், முஸ்லிம் என்றால் யார், யாரில்லை என நிர்ணயிக்கும் மாபெரும் பொறுப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுப்பு என்ற அந்தஸ்திலிருந்து அல்லாஹ்வை கழற்றி எறிந்து விட்டு, அந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கின்றனர். மேலும் அதே நேரம், நமது நபியவர்களின் கண்டிப்பான உத்தரவையும் ஒதுக்கித் தள்ளுவதற்கும் மிதித்துச் செல்வதற்கும் துணிந்திருக்கின்றனர்

வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஏனைய தருணங்களிலும், ஷிஆ முஸ்லிம்களை  'காஃபிர்கள்' எனத் தாக்கி, பிரசங்கங்கள் செய்வதற்கும் (அத்துடன்;-அல்லது) தங்கள் வழமையான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதற்கும் முனைகின்றனர். அவர்களின் அர்-ரஷீத், மஜ்லிஸ், சவுத்துல் இஸ்லாம். இன்ன பிற போன்ற (தென்னாஃபிரிக்காவிலிருந்து வெளிவரும்) பத்திரிகைகளில் ஷிஆக்களை வெளிப்படையாகப் பழித்துரைக்கும் ஒரே மாதிரியான-முழுக்க வெறுப்பை உமிழும் கட்டுரைகள் நிறையவே காணப்படுகின்றன.

இமாம் குமைனி 'ஷிஆ' என அடைமொழியிட்டு கண்டிக்கப்படுகிறார். இமாம் குமைனி சாதித்ததைப் போன்ற எதனையும் இஸ்லாத்திற்காக நமது 'சுன்னி' மவ்லவிகளுள் எவராவது சாதித்திருக்கின்றாரா? இந்த சிறிய உள்ளம் படைத்த, கீழ்த்தரமாக சேற்றை அள்ளி வீசும் நமது புரோகிதர்கள், வாய்ச் சவடால்களில் மட்டுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள்; நமது தீனுல் இஸ்லாத்திற்காக செயல்ரீதியாக எதனையும் செய்ய இயலாதவர்கள். இன்றைய இளைஞர்களும், குர்ஆனையும் நபியவர்களையும் நேசிக்கும் அனைவரும், தர்க்கரீதியான வாதங்களையும் சரியான ஆதாரங்களையும் விரும்புகின்றார்கள் என்பதால், எளிதாக இந்த புரோகிதர்களுடன் சலிப்படைந்திருக்கின்றார்கள்.  

'அஹ்லுல் கிப்லா' (கிப்லாவை முன்னோக்கும் கூட்டத்தினர்)



திருநபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள்-ஃபுகஹாக்கள், (முஸ்லிம்களை 'காஃபிர்கள்என விளிக்கும்) தங்களின் தக்ஃபீர் முன்முடிபு மனப்பான்மையை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தனர்; மேலும் அவர்கள் இறுதியில், 'லா நக்ஃபுர் அஹதன் மின் அஹ்லில் கிப்லா' (அஹ்லுல் கிப்லாவான எவரையும் ஒரு 'காஃபிர்;' என நாம் தீய குறியிட முடியாது; அதாவது, தனது தொழுகையை நிறைவேற்ற எவரொருவர் -ஆணோ பெண்ணோ- கிப்லாவை முன்னோக்கிறாரோ, அவரை ஒரு  'காஃபிர்' என அழைக்க முடியாது) என்று பிரகடனஞ் செய்தார்கள்.

நீண்ட அடர்ந்த தாடிகளைக் கொண்ட  இந்த 'இறையடியார்'களிடத்தில் நாம் கீழ்க்கண்ட கேள்வியை முன்வைக்கலாமா? 'ஷிஆக்கள், ஸலாத் எனும் தங்கள் தொழுகையை நிறைவேற்ற தங்களின் கிப்லாவாக எதனை முன்னோக்கின்றார்கள்? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையையா அல்லது மக்காவிலுள்ள கறுப்பு இறை இல்லத்தையா?'

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஹதீதொன்று புகாரி கிரந்தத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: 'எவரொருவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்'. அதன்படிசுன்னிக்களைப் போன்றே இதே கலிமாவைப் பிரகடனஞ் செய்து ஏற்றுக் கொள்கின்ற ஷிஆக்கள், (இந்த ஹதீதின் பிரகாரம்,) ஜன்னத்தில் பிரவேசிப்பார்களா அல்லது மாட்டார்களா? என்பதை, மார்க்கரீதியாக ஓரக்கண்-கோணல் பார்வை கொண்ட மதகுருமார் நமக்கு சொல்லட்டும்! நமது நபி (ஸல்) அவர்கள், 'ஷிஆக்களைத் தவிர எவரொருவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்' என்று சொல்லவில்லை என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. .

பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்கள்
 
எவரெல்லாம் நமது தூய தீனுல் இஸ்லாத்தின் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்களோ, அத்தகைய முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் அல்லாஹு சுபுஹானஹுத் தஆலாவின் பெயராலும் அவனது அன்புத் தூதர் (ஸல்) பெயராலும் அழைப்பு விடுக்கின்றோம்: 'தங்களை மவ்லானாக்கள், ஷெய்குகள், இமாம்கள் என வீம்பு பேசி ஜாலம் செய்கின்ற இந்த 'மார்க்க

வியாபாரிகளை - பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்களை - நம் மத்தியிலிருந்து அகற்றி விடுவதற்கு துணிந்து செயல்படுங்கள்!

இந்த 'மார்க்க வியாபாரி'களுக்கு தவறுதலாக எந்தளவுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் வழங்குகிறோமோ அல்லது எந்தளவுக்கு அவர்கள் மீது அக்கறை செலுத்துகிறோமோ, அவர்கள் அந்தளவுக்கு நம் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்! துருக்கியின் கமால் அத்தாதுர்க் அந்தக் கால மவ்லவிமார்களுக்கு என்ன செய்தாரோ அதனை நாம் எல்லோரும் செய்வோமாக! அப்போதுதான், முஸ்லிம் சமூகத்தில் நாம் சாந்தியையும் சமாதானத்தையும் காண்போம்; இஸ்லாம் மீண்டும் ஒருமுறை செழித்தோங்கும்!

இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் உலகின் நகைப்பிற்கு உரியதொன்றாய் ஆகிவிட்டது! இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் அவமதிக்கப்படு மொன்றாய் தலை குப்புற வீழ்ந்துவிட்டது!
நமது நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கை செய்து, நமது சக முஸ்லிம்களுடன்எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி- நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டவட்டமான வழிகாட்டுதலை, நமக்கு வழங்கி இருக்கிறார்கள்: பெருமானார் (ஸல்)  கூறினார்கள்: 'மூன்று விஷயங்கள் மார்க்கத்தில் மிகவும் இன்றியமையாதவையாகும்: (1) 'அல்லாஹ்;வைத் தவிர வேறு இறைவனில்லை' என மொழியும் ஒரு மனிதனைக் கொல்வதினின்றும் தவிர்ந்து கொள்ளுங்கள்; (2) அவன்/அவள் எந்த வொரு பாவத்தைச் செய்தாலும் சரியே, அவனை/அவளை ஒரு நிராகரிப்பாளர் எனப் பிரகடனஞ் செய்யாதீர்கள்; (3) அவன்/அவள் உடைய எந்த வொரு செயலுக்காகவும், அவனை/அவளை இஸ்லாத்திலிருந்து தூர விலக்கி வைக்காதீர்கள்.' (அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீத் சுனன் அபூதாவூத் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
(நன்றி: அல்-பலாக்ஹ் பாகம் 25, இல.2 மே-ஜூன் 2000 பக்.3)
(தமிழில்: 'இப்னு புகாரி')

Wednesday, April 2, 2014

சவூத் குடும்பம் ஏன் ஈரானைப் பயப்படுகின்றது-வெறுக்கின்றது?




முதலாவது காரணம் மார்க்க ரீதியிலானது. சவூதி அரேபியாவின் உத்தியோகப்பூர்வ (முறைமைப்பட்ட) மதம் வஹ்ஹாபிஸமாகும். இந்த கடுமுனைப்பான உச்சநிலை திரிபுக் கொள்கையின்படி, ஷீஆ இஸ்லாம் என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒரு மத மாற்றமாகக் காணப்படுகிறது. இஸலாமிய 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'க் கணிக்கப்படுபவர்கள் ஷீஆக்கள் மாத்திரமல்லர். சுன்னிகள் உட்பட, வஹ்ஹாபி அடிப்படை வாதக் கோட்பாட்டிற்கு ஒத்திருக்காதவர்களெனக் கருதப்படும், எல்லா வடிவங்களைக் கொண்ட முஸ்லிம்களும், அத்தோடு கிறிஸ்தவர்களும், ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும்- அனைவரும், அவ்வாறே 'மத நம்பிக்;கை அற்றவர்களாக'வே கணிக்கப்படுகிறார்கள்ளூ மேலும் அவர்கள், ஈவிரக்கமில்லாமல் தாக்கப்படுகின்றார்கள்- மரணத் தறுவாய் அளவுக்குக் கூட. உருக் குலைந்த வஹ்ஹாபி நம்பிக்கையின்படி, ஷீஆ முஸ்லிம்கள் 'மத நம்பிக்;கை அற்றவர்களுள்' மிகவும் மோசமானவர்கள். இதனாற்றான், முக்கியமாக வஹ்ஹாபி கொள்கைவாதத்தினால் உந்தப்பட்ட, சிரிய அரசுக்கு எதிரான ஆயுதக் கோஷ்டிகள் (இவர்கள் தக்ஃபீரிகள் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கப்படுகின்றார்கள்), சிரியா சண்டையில், ஷீஆக்களையும் நெருங்கிய உறவுள்ள அலவிகளையும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளுக்குள் ஆட்படுத்துகின்றனர். வரலாற்றுக் காரணங்களினால் இன்று இந்த பிரதேசத்திலும் உலகிலும், ஈரான்தான் ஷீஆ இஸ்லாத்தின் மத்தியத் தலமாக விளங்குகிறது. இதனால், சவூதிகளின் பகைமைக்கு மத்தியத் தலமாக விளங்கும் தகுதியையும் ஈரான்தான் பெற்றுக் கொள்கிறது. இரண்டாவது காரணம், ஈரானின் இஸலாமியப் புரட்சியைப் பின்னோக்கிச் செல்கின்றது. 1979ல் ஈரானியப் புரட்சி வெற்றி கண்டு, அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருந்த சர்வாதிகாரி முஹம்மத் றிஸா ஷா பஹ்லவி தூக்கி எறியப்பட்ட போது, அந்தக் குழப்பம் பிரதேசத்திலிருந்த எல்லா எதேச்சதிகார ஆட்சியாளர்களையும் பீதி கொள்ளச் செய்தது. ஏனெனில், அடக்குமுறை ஆட்சிகளுக்கெதிராக மற்ற மக்களும் கிளர்ந்தெழுவதற்கான உணாவுரீதியான தாக்கத்தை அந்தப் புரடசி வழங்கியது. இதனாற்றான், சவூதி ஆட்சியாளர்கள் உடனடி பதில் நடவடிக்கையாக 1980 ஆரம்பத்தில் பாரசீக வளைகுடா பாதுகாப்பு உடன்படிக்கையை உருவாக்கினார்கள், இதில் மற்ற முடியாட்சிகளான குவைத், கதர், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பனவும் இடம் பெற்றன.


உண்மையில், ஈரானுடனான சவூதி ஆட்சியாளர்களின் விரோதப் போக்கு, ஈரானியப் புரட்சியின் பின்னர் இன்னும் தீவிரமாகியே காணப்படுகிறது. செயல் மூலம் அதிகளவுக்கு நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கும் ஈரானின் ஜனநாயக தகுதிச் சான்றுகள், தனது எதேச்சதிகாரத்திற்கு உலை வைக்கும் ஓர் அச்சுறுத்தல் என சவூத் குடும்பம் காண்கிறது. பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு வளர்கின்ற அளவுக்கு தங்கள் இருப்பிற்கான ஓர் அச்சுறுத்தல் இருப்பதாக சவூதி ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். மேற் குறிப்பிட்டவாறு, பிரதேசம் எங்குமே ஈரானின் கரம் காணப்படுகிறது எனச் சந்தேகப்படும் பிரிட்டனுக்கான சவூதித் தூதுவரின் கூற்று, (அதே நேரம் அவ்வாறில்லை யென்ற போதிலும்), ஈரான் பற்றி சவூத் குடும்பத்திற்கு இருக்கும் சித்தப் பிரமை கொண்ட மனோ பாவத்தை விளங்க வைக்கிறது. மூன்றாவது காரணம், பெருமளவுக்கு லௌகீகம் சம்பந்தப்பட்டதாகும். ஆயினும், ஒரு வேளை அதுதான் சவூத் குடும்பத்தின் இறுதியான அக்கறை யாயிருக்கலாம்: அஃது, எண்ணெய் மற்றும் வாயு பொருளாதாரம் பற்றிய அதிமுக்கிய பிரச்சினை. ஓபெக்கின் 12 உறுப்பினர் நாடுகளுள் முன்னணியில் இருக்கும் மூன்று உற்பத்தியாளர்கள் சவூதி அரேபியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளாகும். அதிக முக்கியத்துவம் வாய்;ந்தது, ஈரானின் பிரம்மாண்டமான வாயு வளம். இது இன்னும் ஒரு பொருளாதார வளமாகப் பயன்படுத்தப்படவில்லை. இயற்கை வாயு என்பது அடுத்த நூற்றாண்டில் எதிர்காலத்தைய எரிபொருளாக விளங்கப் போகிறது. குழாய்களின் மூலம் எடுத்துச் செல்வதற்கும், கிடைக்கும் சக்தி அளவைப் பொறுத்தவரையிலும், இது அதிக பயன்பாட்டுத் திறன் வாய்ந்த ஓர் ஆற்றல் வளமாகத் திகழ்கிறது. சுற்றுச் சூழலைப் பொறுத்தவரையிலும், இயற்கை வாயு எண்ணெய்யை விட மிகச் சுத்தமான எரிபொருள். இது எரிவதனால் மிக குறைந்த தீங்குகளைக் கொண்ட உபபொருட்களையே தருகிறது. பூமியின் மீது அறியப்பட்ட மிகப் பெரிய அளவிலான இயற்கை வாயு சேமிப்புத் தளம் பார்ஸ் படிநிலம்தான்ளூ இதனை ஈரான்தான் கைவசம் வைத்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது. வர்த்தகத் தடைகள் அகற்றப்படுவதன் வாயிலாக ஈரானின் சர்வதேச உறவுகள் இயல்புநிலையை அடையுமானால், அந்நாடு இப்போதை விடவும் வல்லமை மிக்க உலகளாவிய ஆற்றல் வள நாடாக மாறும் சாத்தியம் உண்டு. குறிப்பிடத்தக்க விதத்தில் வணிகத் திறனுடனான முக்கியத்துவம் என்னவென்றால், (ஓபெக் உறுப்பினர் அல்லாத) ரஷ்யாவுடன் ஈரானும் ஐரோப்பியச் சந்தைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை நிலையைப் பெற்றுக் கொள்ளும்.
அடக்கி வைக்கப்பட முடியாத மனிதத் தேவைகள் காரணமாக மாறாமல் எகிறும் இந்த முன்னேற்றத்தை, தனக்கான ஓர் அவசரமான அச்சுறுத்தலாக சவூத் குடும்பம் காண்கிறது. சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறையவே கிடைக்கின்றதுளூ இயற்கை வாயு மிகக் குறைவாகவே கிட்டுகின்றது. எனவே, ஆற்றல் உற்பத்தி நாடு என்ற வகையில், சவூதியின் வணிகத் துறை முக்கியத் தகைமை தேய்வுறுகின்ற அதே வேளை, ஈரான் அதன் விசாலமான இயற்கை வாயுப் படிவங்களின் காரணமாக மேலும் வளர்ச்சியடையும். .சவூதிக் கண்ணேட்டத்தின் பிரகாரம், எப்படியாவது ஈரான் தனது சாத்தியக் கூறான ஆற்றல் செல்வத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியாமல், எல்லா வழிகளிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபியா கடன் வாங்கிய கால எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் எண்ணெய் சேமிப்பை முடிவில் ஈரானின் வாயுச் செல்வம் விஞ்சி விடும். ஏற்கனவே, சவூதி ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அவர்கள் வேலை வாய்ப்பு அற்று இருப்பதாலும், எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாத ஜனத் தொகை 'டைம் பொம்'மின் மீது உட்கார்ந்து இருக்கிறார்கள். இது வரைக்கும், எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கும் நாட்டின் பொதுநிதிக் கொடுப்பனவுகளைக் கொண்டு அதனை ஈடு கட்டி வருகின்றார்கள். அதுவும் சொற்ப காலத்திற்குள் முற்றுப் பெற்று விடும். சவூதியின் எண்ணெய்ப் பொருளாதாரம் முற்றுப் பெற்று, ஈரான் ஒரு முன்னணி நாடாகத் திகழும் வகையில் இயற்கை வாயுக்களின் புதிய உலகளாவிய ஆற்றல் பொருளாதாரம் காரணமாக அது பின் தள்ளப்பட்டால், என்ன நடக்கும்;? பிரதேசத்தில் ஈரானின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்ளூ இறுகிய நிலையடைந்த சவூதி எதேச்சதிகாரிகளின் அதிகாரத்தின் மீதான பிடி தளர்வடைந்து விடும். அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார தலைவிதி, சவூதியினதும் ஏனைய பாரசீக வளைகுடா அரசாட்சிகளினதும் பெட்ரோ டொலர் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. வங்குரோத்து (திவால்) ஆகி;ப் போன அமெரிக்க டொலர், ஏற்கனவே பெரும்பாலும் சவூதிகளும் அவர்களுடன் தொடர்புடைய ஷெய்க்களும் தங்கள் சரக்குகளை அமெரிக்க நாணயத்தில் விற்று, இலாபத்தை அமெரிக்க நிதிக் கருவூதிலத்திற்கு சேர்ப்பித்து டொலருக்கு முட்டுக் கொடுப்பதால், இதுவரை உயிராதரவு பெற்றிருக்கிறது.
ஈரான் அதன் முழுமையான வாய்ப்பு நிலைக்கு முன்னேறி, எண்ணெய்யிலும் மிக முக்கியமாக இயற்கை வாயுவிலும் வர்த்தகம் மேற் கொண்டால், அது பெரும்பாலும் ஐரோப்பிய யூரோ, ரஷ்ய ரூபிள், ஜப்பானிய யென் அல்லது சீன யுஆன் நாணயங்களிற்றான் இருக்கும். அப்படியானால், அது அமெரிக்க டொலருக்கு பேரழிவு நாளாக அமையும்ளூ நீண்ட நாட்களாக அது வீழ்ந்து விடும் என எதிர்பார்த்தபடி நிச்சயமாக வீழ்ந்தே போகும். முடிவில், ஈரானின் தளைகள் அகற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான சவூத் குடும்பத்தின் ஆழமான கடும் எதிர்ப்பில் வொஷிங்டனும் பங்கு கொள்கிறது. அது மறைபொருளான வஹ்ஹாபி காரணங்களுக்கல்லாமல், அதிமுக்கிய பொருளாதார சுய பாதுகாப்பிற்காகத் தான். எனவேதான், இந்த வாரம் ஃபிரெஞ்ச் வியாபார தூதுகுழு வொன்று கூட்டு வாணிபத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஈரானுக்கு விஜயம் செய்த போது, வொஷிங்டனிடமிருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கலவரப்பட்டு போன அமெரி;க்காவின் உள்துறை செயலாளர் ஜோன் கெர்ரி, ஃபிரான்ஸின் உள்நாட்டமைச்சர் லோரன்ட் ஃபெபியஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தூதுகுழுவிற்கான தனது எதிர்ப்பைத் தெரிவித்ததாக அறிவிக்கப்படுகிறது. டொலரை வீசியெறிந்து விட்டு, ஈரான் ஐரோப்பியாவுடன் சுயாதீனமான வர்த்தகம் மேற் கொள்வதைக் காண அமெரிக்கா கண்டிப்பாக விரும்பவில்லை. சவூதிச் சர்வாதிகாரிகளுக்கும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களுக்கும், ஈரான் ஒரு பொருளாதாரச் சக்தியாகப் பரிணமிப்பதை அனுமதிக்க இயலாது. அது நேரடியாக சவூத் குடும்பத்தை அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அச்சுறுத்துவதாக அமைந்துவிடும்ளூ அது மறுபுறத்தில் வொஷிங்டனை அதன் அடித்தளத்திலேயே ஆட்டங் காண வைத்து விடும். மேற் சொன்ன எல்லா காரணங்களுக்காகவும், சவூதி ஆட்சியாளர்கள் அனைத்திற்கும் மேலாக ஈரானை அஞ்சுகிறார்கள். ஸியனிஸ இஸ்ரவேல் அரசையும், கிழக்கு அல் குத்ஸில் (ஜெருசலத்தில்) அது இஸ்லாமிய புனித ஸ்தலங்களைப் பாழ்படுத்தி நாசம் விளைவிப்பதையும் எதிர்த்து, தங்களை இஸ்லாத்தின் பாதுகாவலர்களென சுயமே பிரகடனப்படுத்திக் கொள்ளும் அல் சவூத் குடும்பத்தினர் ஒரு வார்த்தைதானும் பேசியது கிடையாது. அவர்களுக்கிருக்கும் பயமும் விரோதமும், ஈரானுக்கும், அதன் நேச நாடுகளான சிரியா, பஹ்ரைன் மக்கள், ஈராக், எமன், வேறு பலவற்றுக்கும் எதிராக மறைமுகமான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குத் தான் முனைப்பு கொள்ள வைத்திருக்கிறது. ஈரானை எந்த விதத்திலாவது அடக்கி வைக்க வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும், தடைகளை ஏற்படுத்தி முன்னேறாமற் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்ளூ வொஷிங்டனும் புவியியல் அரசியல் தேவைகளுக்காக சவூதியின் பக்கம் சாய்ந்துள்ளது.
ஆயினும், எதிர்வரும் தசாப்தங்களில், உலகளாவிய ஆற்றல் பொருட்களின் தேவைக்கான கட்டமைப்புத் தகடுகள் கடுமையாக நகர்கின்ற போது, சவூதி ஆட்சியாளர்களும் அவர்களின் அமெரிக்கப் போஷகர்களும், தோல்வியை அரவணைக்கும் பக்கத்திற்றான் தாங்கள் இருப்பதைக் காண்பார்கள். சொல்லப் போனால், மிகச் சரியான வழியில் இது அல் சவூதினதும் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் இறுதி முடிவுக்கு வழி கோலும். அதன் காரணமாக, விரோதமும் தீர்ந்து போகும். பி;ன்குறிப்பு: திரு.கே எனது கட்டுரை பற்;றி ஒரு விமர்சனம் தந்துள்ளார். அதில் அவர், நான் உருவரை செய்துள்ள மூன்று காரணங்களுக்கு மேலதிகமாக நான்காவது அம்சமொன்றை (அதாவது, சட்டப்படியான நிலை குறித்து) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகிறார்: 'ஈரானிய அரசு சட்டப்படியானதாகும்ளூ அதேநேரம், அல் சவூத் சட்டப்படியானதல்ல. இஸலாமியக் குடியரசு ஒரு மக்கள் புரட்சியின் மூலம் அமைந்ததுளூ அங்கு உண்மையான தேர்தல்;கள் நடத்தப்படுகின்றனளூ அது மனிதாபிமான நிலைப்பாடொன்றைக் கொண்டிருக்கிறதுளூ அங்கு உண்மைபூர்வமான இஸ்லாமிய அறிவுப் புலமை காண்ப்படுகிறது. மறுபக்கத்தில், அல் சவூத், பிரிட்டிஷாரின் துணையுடன் பலாத்காரமாக தாம் ஆளும் பகுதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுளூ அது முற்றிலும் எதேச்சதிகாரமானதுளூ மனித சமுதாயத்தின் தீது வெறுப்பை உமிழ்கிறதுளூ மனிதர்களுக்கு தீங்கு இழைக்கின்றதுளூ அது போலி வஹ்ஹாபி 'அறிஞர்களை' தன் வசம் வைத்திருக்கிறது - இவர்கள் ஒரு விஷக் கிருமியை விட முஸ்லி;ம் உம்மத்திற்கு ஆபத்தானவர்கள். ஈரானின் வெற்றியை காண்பதற்கும், எல்லா விதத்திலுமான ஸியனனிஸப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் ஈரான் பெற்று வரும் மதிப்பு மரியாதையை உணர்ந்து கொள்வதற்கும், சட்ட விரோத அல் சவூத் அரசு தயாராயில்லை.' மேலதிகக் கருத்திற்காக நான் அவருக்கு நன்றி மொழிகிறேன். அல் சவூத் ஏன் ஈரானை இத்துணை ஆழமாக மறுதலிக்கிறது, சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது என்பதற்கு தகுந்த வாதங்களை முன் வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார். அவர் கூறிய மாதிரி, சவூதி ஆட்சியின் குறைகளையும், தலை கீழான தனமையையும், அசிங்கத்தையும் காட்டும் கண்ணாடியாக ஈரான் அதன் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. கட்டுரையாளர் ஃபினியன் குன்னிங்காம் (1963ல் பிறந்தவர்) சர்வதேச விவகாரங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இவர் விவசாய ரசாயனத் துறையில் முதுமானி பட்டதாரி. இவர் பத்திரிகைத் துறையில் பிரவேசிக்கும் முன்னர், இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் ரசாயனத்திற்கான அரச சங்கத்தின் விஞ்ஞான இதழ் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மேலும், சுமார் 20 ஆண்டுகள் பெரும் செய்தி ஊடக நிறுவனங்களில் ஓர் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கடமை யாற்றியுள்ளார். அயர்லாந்து பெல்ஃபாஸ்டைச் சேர்ந்த இவர், தற்போது கிழக்கு ஆஃபிரிக்காவில் ஸ்தாபனம் சாராத ஒரு பத்திரிகை யளராக நிலைபெற்றுள்ளார். அங்கிருந்து கொண்டு, இவர் பஹ்ரைனையும் அரபு வசந்தத்தையும் பற்றி, தான் பாரசீக வளைகுடாவில் ஒரு செய்தி நிருபராக இருக்கும் போது கண்ணால் கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலை எழுதி வருகிறார். பஹ்ரைன் முடியாட்சியின் ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை விமர்சித்து எழுதியதால், இவர் 2011 ஜுpனில் பஹ்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பிரஸ் டீவீயில் சர்வதேச அரசியல் பற்றி இப்போது பத்தி எழுதுகிறார். (தமிழில்: இப்னு புகாரி)

Friday, August 2, 2013

சர்வதேச 'குத்ஸ்' தினம்

புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.




ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.




குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர். 
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர். 
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன.  ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.  கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின்  நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.    


வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.

 


சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.



ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில்,  அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
 
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.