Tuesday, June 9, 2015

எகிப்தின் செல்வாக்கும் புகழும் மிக்க இஸ்லாமிய கற்றறிவாளர் ஷெய்க் கஸ்ஸாலியுடன் நடத்திய பேட்டி.

 இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளையும் பகைமைகளையும் ஏற்படுத்த பல சக்திகள் இயங்குகின்றது. ஆனால் துரசிர்டவசமாக முஸ்லிம்கள் மத்தியில் விவேகமுள்ள ஒரு தலைமைத்துவம் இல்லாததின் காரணமாக இன்று முஸ்லிம் உலகம் அதி வேகமாக அதர பாதாளத்தை நோக்கி பயனிதுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் உம்மஹ்வின் மத்தியில் என்றுமே இல்லாத அளவு ஷீயா-சுன்னாஹ் வேற்றுமை இன்று புரையோடிப்போய்  இருக்கின்றது. யஹூதி நசார ஆதிக்க சக்திகளின் அடிமைகளாக இயங்கும் முஸ்லிம் மன்னர்கள் இந்தப்பிரிவினை வாத சக்திகளுக்கு துனை பொய் பல இலச்சக்கணக்கான முஸ்லிம்களை தினமும் கொன்றோளித்தும்  அகதிகளாக்கியும் வருகின்றனர். 

முஸ்லிம் உலகின் அறியாமையை போக்க அண்மையில் இறையடி சேர்ந்த பேரறிஞர் முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஒரு செவ்வியை,  முஸ்லிம்கல் மத்தியில் ஏதேனும் சிந்தனை தெளிவு ஏற்ப்படுத்த இது உதவுமென எதிர்பார்த்து உங்களுடன் பகிர்கின்றோம். 
ஷெய்க் அல் கஸ்ஸாலியுடன் ஒரு பேட்டி
எகிப்தின் செல்வாக்கும் புகழும் மிக்க இஸ்லாமிய கற்றறிவாளர் ஷெய்க் கஸ்ஸாலியுடன்  நடத்திய பேட்டி.
கே: பேரறிஜர் கஸ்ஸாலி அவர்களே! அண்மையில் தெஹ்ரானில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய சிந்தனை மகாநாட்டில் தாங்களும் பங்கு கொண்டீர்கள். அம்மகாநாடு பற்றி தங்களது மதிப்பீடு என்ன?

ப: பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா நிர்ரஹீம். அண்மையில் தெஹ்ரானில் நடைபெற்ற இஸ்லாமிய மகாநாட்டின் பொது பல்வேறுபட்ட பிரச்சினைகள் அளஷி ஆராயப்பட்டன. நானும் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்ப்பித்ததோடு ஏராளமான ஆய்வுகளுக்கும் செவி மடுத்தேன். மகாநாட்டில் எனது கவனத்தை ஈர்ந்த மிக முக்கிய அம்சம் என்னவெனில், மகாநாட்டில் உரை நிகழ்த்திய பொறுப்பு வாய்ந்தவர்கள், அனைவரும் அரசியல் நிர்வாக துறைகளில் பேரிடம் வகிப்பவர்கள் என்பதுவாகும். ஏனெனில் நிர்வாக, அரசியல் பீடங்களில் உயர் பதவி வகிக்கின்றவர்கள்; இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பதிளிருந்தும்; இஸ்லாமிய ஞானத்திளிருந்தும் தம்மை விலக்களித்து வைத்திருக்கின்ற; இஸ்லாத்தின் தூது பற்றி பேச்சில் ; இறங்குவதிலிருந்து தம்மை ஒதிக்கி வைத்து கொள்கின்ற இஸ்லாமிய உலகின் தற்போது பொதுவில் காணப்படுகின்ற நிலைமைக்கு இது முற்றிலும் முரணான ஒன்றாகும். அந்நிலைக்கு மாறாக, ஈரானில் பெரும் பெரும் பதவிகளை வகிப்பவர்கள் எல்லாம் இஸ்லாமிய தஹ்வாவில்  சிறப்புரை செய்தவர்கள் போன்று ஆதர்சங்களை குறிப்பிட்டு , அதற்குரிய பாதையை வாகுதுக்காட்டி இஸ்லாம் பற்றி உரை  நிகழ்த்தினார்கள். மார்க்கநெறிப் பயிற்சிக்கும் அரசியல் நடவடிக்கை கற்கும் இடையிலான இணைப்பு பாலமாக இருக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். இது தவிர்ந்த; இந்த விடயம் தவிர்ந்த ஏனைய எதுவுமே அங்கு இல்லாமல் இருந்தாலும் கூட; இது மட்டுமே பெருமைப்பட போதுமானதாகும்.
கே: ஈரானில் குழப்ப நிலை காணப்படுவதாக உலக அகம்பாவ சக்திகள் பிரசாரம் செய்து வருகின்றன. அத்தகைய ஏதும் குழப்பங்கள் இருப்பதை நீங்கள் அவதானித்தீர்களா?


ப: குழப்பங்களா? நிச்சயமாக இல்லை. ஈரான் இஸ்லாமிய புரட்சி பற்றி அமரிக்காவும் ரஷ்யாவும் அவ்வாறு சொல்வது ஆச்சரியமானாதல்ல. அவர்கள் அத்தோடு நின்று விடவும் மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பது வெறுமனே ஈரான் என்பதுக்காக அன்றி, அங்கு இஸ்லாமிய அரசு நிலை பெற்றிருப்பதனாலாகும். இறந்து போன ஷா;  ஜாஹிளிய்யதினதும், மஜூசிகளினதும் 'வஹி'(ஞானோதயம்) பெற்று ஆட்சி நடாத்திய காளை அவர்கள் தான் அவரது உதவியாளர்களாகவும் எவலாலர்களாகவும் கருமமாற்றினார்கள். ஷா நரகேதிய பின்னர் இஸ்லாமிய ஆட்சி நடாத்துபவர்கள் வந்ததோடு கிறிஸ்தவர்களினதும் நாஸ்திகதினதும் துவேச உணர்வுகள் செயர்ப்படலாயின. எனவே ஈரானின் இஸ்லாமிய அரசை அணைத்து வழிகளிலும் எதிர்க்க துவங்கினர். உண்மையில் போரிடுவது சத்தாமல்ல. அமரிக்காவும், ரஷ்யாவுமே புரட்சிக்கு எதிராக போராடுகின்றன.
  கே: ஈரான் இஸ்லாமிய புரட்சியில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு காணப்படுகிறது என்று சொல்ல முடியுமா?


ப: இங்கு பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி இஸ்லாத்துக்கு சிறப்பளின்கிறது. பெண்கள் வெறுமனே உணர்சிகளை தீர்துக்கொ ள்வாதற்காகப் படைக்கப்பட்டவள், அவள் வீட்டில் அடைபட்டே இருக்க வேண்டும், பரம்பரைகளை உருவாக்கி வளர்ப்பதிலோ பயிற்சி வழங்குவதிலோ அவர்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை  என்பன போன்ற வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய சமூகத்துக்கு நாசம் விளைவித்த வாதங்களை சுமந்திருந்த குருட்டுத்தனமானோரது கருத்துக்களை அப்புறப்படுதியிருக்கிறார்கள்.

இன்னொரு சக்தி இருக்கிறது. அது பெண்களை வீட்டிலிரிருந்து வெளியேற்றி வீதிக்கு அனுப்பியுள்ளது. "அதாவது ஆடையிலிருந்து அவளை வெளியேற்றினார்கள்"; "அவள் இப்பொழுது இயல்பூக்கங்களைத் தூண்டிவிடுகின்ற 'பித்னா'வாக மாறினாள், என்று சொல்வார்களே அந்த நிலைக்கு பெண்களை அது ஆக்கியது.

ஆனால், ஈரானில் கையாளப்பட்டுள்ள வழிமுறை இவ்விரு வழிமுறை யினரையும் விட மிக சிறந்த முறையில் பெண்களது கற்பையும் அவர்களது, மார்க்க, நாகரீக, ஆத்மீக,நடவடிக்கைகளையும் பேணுகிறது என்பதில் ஐயமில்லை. இது மிகவும் சிறந்தது.

பெண்களை வீட்டில் அடைத்து வைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்ற அதே வேளை வீதிக்கு துரத்துகின்றனர் இன்னொரு சாரார். இவர்கள் இரு சாராரும் இஸ்லாம் பற்றி அறியாதவர்கள். பெண்கள் விடயத்தில் இத்தகைய தேக்க நிலையையும், அதி தீவிரப் போக்கையும் நான் தனிப்பட்ட முறையில் எனது நூல்களிநூடாக எதிர்த்து வருகின்றேன்.
 மஸ்ஜிதுகள், கலைக்கூடங்களாகவும், பாசறைகளாகவும், ஜிஹாதின் தளங்களாகவும் மிளிர்ந்து ஆரம்ப காலத்திலிருந்த பெண்களை போன்று ஈரானியப் பெண்களும் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்களுக்கு உள்ள அத்தனை கடமைகளிலும் ஈரானியப் பெண்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர். '....பித்னா' வாக மாறாமல் நன்மையை ஏவி, தீமையை விலக்குவதில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதுவே போதுமானது.உண்மையில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி தொடர்ந்தும் நிலைத்திருப்பதில் அவளது பங்கு மகத்தானது.
  கே: இஸ்லாமிய ஐக்கியத்துக்கு முட்டுக்கட்டையாகவுள்ள காரணிகள் என்னவென்று கருதுகிறீர்கள்?

ப: இஸ்லாமிய உலகில் காணப்படும் தேசியவாத உணர்வு மிக முக்கிய காரணியாகும். நவீன ஐரோப்பிய வரலாற்றிலிருந்தே இவ்வுணர்வு எம்மிடம் வந்துள்ளது. ஆரம்பத்தில் முழு ஐரோப்பாவும் திருச்சபையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலாவது சிலுவை யுத்தம் நடைபெறும் போதிலெல்லாம் முழு ஐரோப்பாவும் ஒரே ராச்சியம் போன்றே காணப்பட்டது.இப்போதிருக்கின்ற நாடுகள் அனைத்தும் மாகாணங்களாகவோ அல்லது மானிலங்களாகவோ  தான் இருந்தன.  19ம் நூற்றாண்டில் இத்தாலிய அரசு உருவாகியது. தொடர்ந்து ஜெர்மனியும், பிரான்சும், ஸ்பெயினும், போர்துகல்லும், இங்கிலாந்தும் படிப்படியாக தோன்றின. முதலாம் உலக மகா யுத்தத்தை தொடர்ந்து யுகோஸ்லாவிய,செகொச்லவேகிய, போன்ற புது தேசங்களும் தோற்றம் பெற்றன. அதன் பிறகும் புதுப்புது தேசியங்கள் உருவாகின.

இஸ்லாமிய உம்மாஹ், பொதுவாக ஒன்றோடொன்று இணைந்தே அமைந்திருந்தது. தற்போது சிறு சிறு ஆட்சிகளாக பிரிந்து இஸ்லாமிய சமூகத்தை துண்டாடுகிறது. இத்தகைய சிறு அரசுகள் ஐரோப்பிய முறையை தழுவியதாகும்.

இந்தப்பழமை வாய்ந்த (இன) உணர்வுதான் புதுத் தோற்றம் பெற்றுள்ளது.

கே: முஸ்லிம்கள் ஐயிக்கியத்தை குலைப்பதில் சியோனிசதுக்கு பங்குண்டு என கருதுகிறீர்களா?


ப: இந்த பிரிவினைக்குப் பின்னணியில் சியோனிஸ்ட்டுகளும் நசாராக்களும் நாஸ்திகர்களும் நிச்சயமாக பங்கு வகிக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் இவர்களது பங்களிப்பு பகிரங்கமாகவும், இன்னும் சில வேளைகளில் மறைமுகமாகவும் காணப்படும், விசேடமாக இத்தகைய நடவடிக்கைகள் பற்றி முஸ்லிம் வரலாற்று ஆசியர்களும் ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய ஐக்கியத்தின் மீதும் பலத்த அடியாக இஸ்ரவேலை நிறுவிய உலக சிலுவை வாதம் அத்தோடு நின்று விடவில்லை. இஸ்லாமிய ஐக்கியத்தை  குலைப்பதற்காக காதியானிசம், பஹாயிசம் போன்ற புது மார்க்கங்களையும், மத சார்பின்மை, பிரீமேசன், ஹெடோனிசம், போன்ற காரனிகலையும் உருவாக்கி விட்டது. இஸ்லாமிய ஐக்கியத்தை துண்டாடுவதே இவற்றின் நோக்கமாகும்.
கே: ஈரானிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் ஜும்மாஹ் தொழுகையின் பங்களிப்பு பற்றிய தங்கள் மதிப்பீடு என்ன? இதற்கும் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயும் இவ்விடயத்தில் ஏதும் வித்தியாசமான பண்புகள் உண்டா?

ப: ஈரானில் நடைபெறும் ஜும்மாஹ் தொழுகை, உண்மையில் தற்காலத்தில் ஹஜ்ஜ் தவிர்ந்த ஒப்புவமையற்ற இஸ்லாமிய மக்கள் கூட்டமாகும். இருபது இலச்சதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே இடத்தில கூடுவது என்பது மிக பெரிய விடயமாகும். இதன் சக்தியை அதிகரிக்க செய்கின்ற இன்னொரு விடயம் என்னவெனில் இந்த கூட்டத்தின் பொது பேச வருபவர், மக்கள் கூட்டத்தை சிறப்பாக அணுகி அதன் பிரச்சினைகட்கு நிவாரணமளிக்கும் பாணியிலும் உம்மத்துக்கு அவசியமானவற்றையும் பேசுவதாகும்.

மக்களை ஒன்று திரட்டுவதல்ல முக்கியம்; அவர்களை ஒன்றிணைத்து அவர்களது இதயங்களில் சத்தியத்தை விதைப்பதே முக்கியமானது. மிகவும் வெற்றி கண்ட ஓர் அனுபவமே இது என்பது எனது நம்பிக்கை.
அல்-அஸ்ஹரிலும், அம்ரிப்னு ஆஸ் மஸ்ஜிதிலும் நான் 'குத்பா' நிகழ்த்தி  வந்தேன். எனது ஜும்மஹ்விக்கு சுமார் 30,000 பேர் கலந்து கொள்வார்கள். எனது பின்னால் நின்று தொழுவோரின் தொகை அதிகமானது என்பதால் இரண்டு மச்ஜிதுகளிளுருந்தும் வெளியேற்றப்பட்டேன். தற்போது ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதியின் பின்னால் நின்று தொழுவோரின், பத்துப் பேர் மாத்திரமே ஷாஹ்வின் ஆட்சி காலத்தில் கூடியிருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது. இது இஸ்லாமியப்  புரட்சி தோன்றி தடைகள் எல்லாம் நீக்கியதன் விளைவாகும். அதற்காக நீங்கள் பாராட்டப்பட வேண்டியயவர்கள். இந்தப்பெரும் ஜனத்திரள் தொடர வேண்டும் என்றும்; வளர்ந்து மார்க்கத்தை முன்வைக்கும் அதன் சக்தியும் வளர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

இறுதியாக இஸ்லாமியப் புரட்சியை நடாத்தி முடிதமைக்காக ஈரானிய முஸ்லிம் மக்களை பாராட்டுகிறேன். இங்கு நடைபெற்ற நிகழ்சிகள் வழமையான பின்னணிகளிலேயே நடை பெற்றன என்று சொல்வதற்கில்லை. பிரான்சில் அஞ்ஞாவாசம் புரிந்த ஒரு தனி மனிதர், அவரது இரச்சகனோடும் மக்களோடும் அவருக்கிருந்த தொடர்புகளின் விலைவாக இதனை சாதித்து முடித்தார் என்று எவரும் சொல்ல முடியாது. நிச்சயமாக இறைவனது விருப்பத்தில் இது ஏற்க்கனவே இருந்திருக்கின்றது. இந்த மாபெரும் வெற்றியை அவருக்கு எழுதி வைத்திருக்கின்றான். அவரது பாதையில் இந்த விதிகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தான். இந்த வெற்றியை பேணி பாது காப்பது உங்கள் (ஈரானிய மக்கள்) மீது எஞ்சியுள்ள கடமையாகும்.

உங்களுக்கு எதிரிகள் அதிகம் என்பதை மறந்து விட வேண்டாம். ஆயிரம் தந்திரங்களோடு, உபாயங்களோடும் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல் படுகிறார்கள். வெற்றி கண்ட இந்த இஸ்லாமிய புரட்சி தொடர்ந்தும் ஸ்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எப்பொழுதும் விழிப்போடு இருங்கள். நீங்கள் அல்லாஹ்வோடு இருக்கும் காலமெல்லாம் அவனும் உங்களுடனேயே இருப்பான் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.  

நன்றி: அல் இஸ்லாம் -ஜனவரி 1989

No comments:

Post a Comment