Friday, January 13, 2012

சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமியப் பாரம்பரிய வரலாற்றுத் தலங்கள்

சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும்

-இக்பால் சித்தீகி-

Iqbal Siddiqui is a British Muslim of Indo-Pakistani origins, born, brought in London, son of Dr Kalim Siddiqui, Founder of Muslim Institute and Muslim Parliament of Great Britain. He is a well known writer, also contributed in establishing the Institute of Contemporary Islamic Thought (ICIT). He also served as a editor of CrescentInternational

(அன்பு வாசகர்களே, சவூதி அரசின் வரலாறு குறித்த நம் பதிவுகளை பார்த்து சில வாசக நெஞ்சங்கள் புனித ஸ்தலங்கள் என்று வரும் குறிப்புகளை ஒட்டி நாம் ஷிர்க்கை ஆதரிப்பதாக தவறாக விளங்கியுள்ளனர். இறைவனால் மன்னிக்கப்பட முடியா மிகப் பெரும் பாவமான ஷிர்க்கை விட்டும் நம்மை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.)

வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதை தடுக்கும் வகையில் அவை அழிக்கப்படுவதையும், மக்கமா நகரம் என்றால் கஃபதுல்லாஹ்வும், ஹிரா குகையும், மதீனா என்றால் நபிகளார், குடும்பத்தார், தோழர்கள் வாழ்ந்த இடங்கள் நினைவுக்கு வர வேண்டுமே ஒழிய உயரமான கட்டிடங்கள் அல்ல என்பதை அனைவரும் ஒத்து கொள்வோம். ஆனால் திட்டமிட்ட முறையில் நமக்கே தெரியாமல் அவை அழிக்கப்படுவதின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் வெளிப்படுத்த வேண்டும் எனும் நன்னோக்கில் இங்கு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது)

முஸ்லிம்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஸ்தலங்களில் இஸ்தான்பூல் நகரமும் ஒன்றாகும்.

இது மொத்தத்தில், உதுமானிய கிலாபத் காலப் பாரம்பரியமும் ஏராளமான பள்ளிவாசல்களும் ஏனைய நினைவுச் சின்னங்களும் இன்னும் அங்கு காணப்படுவதன் காரணத்தால்தான் ஆகும். இவற்றின் வாயிலாக முஸ்லிம்கள், இஸ்லாமியக் கலாசாரத்தின் ஒரு பொற்காலப் பகுதியுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஸ்தலங்களுள் தென் ஸ்பெயினில் உள்ள அந்தலூஸியாவும் உள்ளடங்கும். முஸ்லிம்கள் அந்தப் பகுதியிலிருந்து பலவந்தமாக அகற்றப் பட்டு இன்று ஏறத்தாழ 500 ஆண்டுகளானாலும் அங்கு நடந்த முஸ்லிம் ஆட்சியை ஞாபகப்படுத்தும் அடையாளங்கள் அங்கு இன்னும் காணப்படு கின்றன.


கெய்ரோ, டமஸ்கஸ், பக்தாத், மஷ்ஹத் போன்ற நகரங்கள் இதுபோன்ற காரணங்களுக்காகவே பிரசித்தி பெற்றிருக்கின்றன.


 இத்தகைய நினைவுச் சின்னங்கள், இஸ்லாமிய வரலாற்றுடனும் பெரும் சாதனைகளைச் செய்து, நாம் இப்போது வாழும் உலகை உருவாக்கிய முன்னைய முஸ்லிம் சந்ததிகளுடனும், உண்மையான உறுதியான இணைப்பை ஏற்படுத்தித் தருகின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஆயினும், இஸ்லாமிய வரலாறு முழுவதிலும், முஸ்லிம்கள் மிகப் பெரும் நன்றிக்கடன் கொண்டவர்களாகவும், மாபெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பது எந்தக் காலப்பகுதிக்கு, எந்த மாமனிதர் களுக்கு என்றால், சந்தேகமில்லாமல் அது நபி (ஸல்) அவர்களின் காலப் பகுதியும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வசித்த, வாழ்க்கையைக் கொண்டு நடத்திய இடங்களுமாகத்தான் இருக்கும்.


இன்றும் எதிர்காலத்திலும் அவை விலைமதிப்பற்ற, மாற்றீடு செய்யப்பட முடியாத இடங்களாகப் பாதுகாக்கப்படுவதற்குப் பதிலாகஇ 'இரு புனிதத் தலங்களின் பாதுகாவலன்' எனத் தம்மை உரிமை கொண்டாடிக் கொள்ளும் சவூதி அரேபிய மன்னரகத்தின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அவை அழிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.



இஸ்லாமிய வருடக்கணக்கின்படி, சென்ற ஷவ்வால் மாதம்இ நபி (ஸல்) நகரமான மதீனாவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பகீ எனப்படும் அடக்க ஸ்தலம் ஹிஜ்ரி 1344 ஷவ்வாலில் தகர்க்கப்பட்டதின் 87ம் வருடப் பூர்த்தியாகும். தரைமட்டமாக்கப்பட்ட மண்ணறைகள் (கப்ருகள்), கட்டப்பட்ட கல்லறைகள் என்பனவற்றுள் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் ஆண் குழந்தை இப்ராஹீம், அவர்களின் மகள் ருகைய்யாஇ அவர்களின் பேரர் இமாம் ஹஸன் இப்னு அலி, அவர்களின் வழித்தோன்றல் களான ஷீஆ சிந்தனைப்பிரிவின் இமாம்களான ஜெய்னுல் ஆபிதீன் என அழைக்கப்படும் அலி இப்னு ஹுஸைன், முஹம்மத் அல் பாக்கிர்,  ஜவ்பர் ஸாதிக் ஆகியவர்களுடையவையும் அடங்கும்.


அவை மட்டுமல்ல, மூன்றாம் கலீபாவான உத்மான் இப்னு அஃப்பான் உட்பட ஏராளமான நபித் தோழர்கள்இ பிந்தைய கால இஸ்லாமியப் பிரமுகரான மத்திய ஆசியாவின் செசன்யாவைச் சேர்ந்த இமாம் ஷாமில் போன்றவர்களின் மண்ணறைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. இன்று ஜன்னத்துல் பகீ ஒரு வெற்று நிலப்பரப்பே தவிர வேறொன்றில்லை. அதன் முக்கியத்துவம் குறித்து மதீனாவிற்கு விஜயம் செய்யும் பலருக்குப் புலப்படுவதேயில்லை.


இரு புனித நகரங்களையும் சவூதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜன்னத்துல் பகீ தகர்க்கப்பட்டதானது, முஸ்லிம் உலகம் எங்கினும் எதிர்ப் பலைகளைத் தோற்றுவித்தது.


ஆயினும், சவூதிகளின் ஆட்சிக்காலம் நெடுகிலும் தொடர்ந்த இஸ்லாமிய இடங்களை அழித்தொழிக்கும் வேலைக்கு அது குறியீடாகவே அமைந்தது எனலாம். தரைமட்டமாக்கப்பட்ட ஏனைய தலங்களுள், பாத்திமா ஸஹ்ரா பள்ளிவாசல், இருமினாராக்கள் பள்ளிவாசல், மதீனாவில் அகழி யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்த நான்கு பள்ளிவாசல்கள், மதீனாவில் ஸல்மான் அல் ஃபார்ஸி பள்ளிவாசல், மக்காவில் பழைமை வாய்ந்த அடக்கஸ்தலம் ஜன்னத்துல் முஅல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்ப் உடைய மண்ணறை, (இது 1988ல் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது) மக்காவில் பனூ ஹாஷிம்களின் மண்ணறைகள், உஹதில் ஹம்ஸா (ரழி) மற்றும் உயிர்த் தியாகிகளின் கல்லறைகள் என்பன அடங்கும்.



Cemetery of Jannat al-Mualla in Makkah before it was
 demolished by King al-Saud
 நபி (ஸல்) அவர்களுடன் நேரடியாகத் தொடர்புள்ள ஸ்தலங்களுள் கி.பி. 570ல். முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்ததாக நம்பப் படும் வீடு, நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா நாயகியின் வீடு, (இங்குதான் நபியவர்களின் குழந்தைகள் பலர் பிறந்துள்ளனர்) ஹிஜ்ரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வசித்த மதீனாவிலுள்ள வீடு என்பனவும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது, ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு அவர்கள் அறிவு கற்பித்த தாருல் அர்கத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.


சவூதி அரேபிய ஆட்சியாளர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, அதன் செல்வாக்குக்குட்பட்ட மனிதர்களின் அழிப்பு நடவடிக்கைகளுக்கு, ஏனைய பிர தேசங்களில் (ஈராக்இ சிரியா, பலஸ்தீன்) இருந்த ஸ்தலங்கள் உள்ளாயின. சில தகவல்களின்படி, நபியவர்களினதும் ஸஹாபாக்களினதும் வாழ்க்கைக் காலப்பகுதியைச் சார்ந்த, 90 சதவீதமான அல்லது அதற்கும் அதிகமான வரலாற்றுத் தலங்கள், சவூதி அரசின் நிர்வாகத்திற்கும் கட்டுப்பாடிற்கும் கீழ் இருப்பதாகத் தெரிகிறது.

2007ல் இருந்து, மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் பாதுகாப்பைப் பற்றி வலுவான அச்சங்கள் காணப்பட்டு வருகின்றன. 1926ல் ஜன்னதுல் பகீ அழிக்கப்பட்டபோது, இந்தப் பள்ளிவாசலும் சேதத்துக் குள்ளாகியது. இங்குதான் நபி (ஸல்) அவர்களும் முதலிரண்டு கலீபாக் களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2007ல் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, நபியவர்களின் பள்ளிவாசலை (மஸ்ஜிதுன் னபவி)  இடித்து அடியோடு அழித்துப்போடுவதற்குரிய திட்டமொன்றை வகுத்ததாகவும், அதற்கு தற்போதைய சவூதி அரேபிய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்க் சம்மதித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.  நபி (ஸல்) அவர்களின் மண்ணறையும் பள்ளிவாசலும் அழிக்கப்படுவதென்பது பெரும்பான்மையான முஸ்லிம்களின் கற்பனைக்கும்கூட அப்பாற்பட்டது. ஆயினும், தற்போதைய ஹிஜாஸ்(அரேபிய) ஆட்சியாளர்களின் கீழ் உண்மையில் அது நடாத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

வரலாற்றுச் சின்னங்களுக்கும் பாரம்பரியத்திற்குமுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி விஷேசமாக சவூதிகள், முற்றாக மறந்து போய்விடுகின்றவர்களல்லர் என்பதால், அவர்களின் இந்த நடத்தையைப் பற்றி விளக்குவதற்கு முடியாமலிருக்கிறது. சென்ற ஆண்டு, சவூதி சுற்றுலா மற்றும் பழங்காலச் சின்னங்களுக்கான பொதுக் கமிஷன், நாடெங்கிலுமுள்ள 200 வரலாற்றுத் தலங்களை அவற்றின் பழைய நிலைக்கு செம்மைப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. இவற்றுள், இஸ்லாத்துக்கு முந்தைய கால மதியன் ஸாலிஹ் ஸ்தலம், சவூதி அரச குடும்பத்துடன் தொடர்புடைய திரிய்யாவிலுள்ள ஏனைய கட்டடங்கள் ஆகியவையும் அடங்கும். (நபியவர்களின் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட யூதர்களின் கைபர் கோட்டையும் இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது என்பதும் கவனத்திற்குரியது – ஆசிரியர்)



யூதர்களின் கைபர் கோட்டை
 இஸ்லாமியத் தலங்களைவிட மேற்சொன்னவை மகத்தான பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படுவதானது, உலகின் மூலை முடுக்கிலும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழமாகப் புண்படுத்துவதாயிருக்கின்றது.

இந்த விஷயம் அதற்குரிய விதத்தில் கவனத்திற் கொள்ளப்படாமலிருப்ப தற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றிலொன்றாக, கடந்த சில தசாப்தங்களாக உலகெங்கிலும் பல இஸ்லாமிய அமைப்புகள், சவூதிகளின் ஆதரவில் நடத்தப்படுவதை சந்தேகமில்லாமல் குறிப்பிடலாம். மற்றொன்று, முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற ஏனைய பிரச்சினைகள் மிக ஏராளமாகக் காணப்படுகின்றன. பல நாடுகளில் முஸ்லிம் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்படுவதும்இ பெரும்பாலும் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் இஸ்லாமியச் செயற்பாடுகள் அடக்கியொடுக்கப்படுவதும் எந்த வகையிலும் குறைந்ததல்ல. இவற்றோடு ஒப்பிடும்போது, வாதத்தின் அடிப்படையில், ஒரு கட்டடம் அழித்தொழிக்கப்படுவது முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதப்படலாம். எது எவ்வாறிருந்தபோதிலும், இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சான்றுகளாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சத்தையாவது சவூதிகள் அழித்தொழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது முக்கியமான விஷயமாகும்.

ஏனென்றால், பெரும்பாலும் இத்தகைய நினைவுச் சின்னங்களின் ஊடாகவே, மக்களின் வரலாற்று நினைவுகள் தூண்டப்படுகின்றன – தக்க வைக்கப்படுகின்றன. மேலும், இந்த நினைவுகள் அழிக்கப்படுவதானது, எதிர்காலச் சந்ததியினர் இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்வதறகும் கூட ஆழமான சிக்கலை ஏற்படுத்தும்.

உம்மத்தின் நடுவில் இடம்பெற்று வரும் அரசியல் போராட்டங்களுக்கான முயற்சிகளில், முஸ்லிம்கள் தமது முழுக் கவனத்தையும் குவிக்க வேண்டும் என்பது சரியானதுதான். அதேநேரத்தில், இஸ்லாமிய இயக்கம் ஏனைய துறைகளில் -தளங்களில் செய்யப்படும் பிரயத்தனங்களின் கடுமையான முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடியுமாயிருக்க வேண்டும். வீரம் கொண்ட சில மனிதர்கள் - ஹிஜாஸிலும்கூட அப்படிப்பட்டவர்களுக்குக் குறைவில்லை- சவூதிகளின் அடாவடித்தனமான செயல்களைச் சுட்டிக் காட்டுவதற்கும், அந்தப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதறகும் தம்மாலானவற்றைச் செய்து வருகின்றனர்.

பலஸ்தீன்இ செசன்யா, காஷ்மீர் போன்ற இடங்களிலுள்ள முஜாஹிதீன்களும் அவர்களின் முயற்சிகளும், பிரச்சினைகளும் இஸ்லாத்துக்கான உலகளாவிய போராட்டத்தில் முன்னிலை வகிப்பது போன்று, இவர்களுக்கும் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.

1 comment:

  1. Islaththodu shambaththap patta muthushangal alikkappadum athey welai Ehudikalin Kaibar kottai indrum pathu kaappaaka irukkindrathu. Enney Aachchariyam?

    ReplyDelete