Thursday, January 12, 2012

சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் உண்மை நிலையும்

(முக்கிய குறிப்பு : கனடாவிலிருந்து வெளியாகும் கிரசண்ட் இண்டர்நேஷனல்எனும் இதழில் வெளியான கட்டுரைகளை மொழிபெயர்த்து விரைவில் இலங்கையில் வெளியிடபடவுள்ள புத்தகத்தை பகுதி பகுதியாக நமது தளத்தின் வாசகர்களுக்கு பகிர உள்ளோம். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் வரலாற்றின் இன்னொரு பக்கமும் வாசகர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும் எனும் ஆசையே இதை வெளியிடுவதற்கு காரணம் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் வரலாற்றை உண்மையாக தெரிந்து படிப்பினை பெறக் கூடிய மக்களாக நம்மை மாற்றுவானாக. ஆமின். மூல ஆசிரியர்களுக்கும் மொழி பெயர்த்து நம்மை வெளியிட அனுமதித்தவர்களுக்கும் நமது நன்றிகள்)
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையினால்  இணையத்தள வரலாற்றில் முதன் முதலாக புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பே இணையத்தில் பகுதி பகுதியாக நமது தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளிலுள்ள மக்கள்,எதேச்சதிகாரம்-அடக்கு முறை -அராஜகம்-அநீதி-அக்கிரமம்-சுரண்டல்-மனித உரிமைமீறல்கள்-இன்ன பிறவற்றின் கீழ் பல தசாப்த காலமாக அல்லற்பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள்இத்துணை நாட்களாக தம் உள்ளங்களில் வேதனையோடு அடக்கி வைத்திருந்த உணர்வுகளை இப்பொழுது துணிச்சலுடன் வெளிக்காட்டி வீதிகளில் இறங்கியதன் பிரதிபலிப்புகளை நாம் ஆங்காங்கே கண்டு வருகிறோம். இந்த நாடுகளுள் சிலவற்றில், மக்கள் எதிரியான எதேச்சதிகார ஆட்சியாளர்கள் ஓடிப் போனாலும்,அவர்கள் தமது ‘பினாமி களின் மூலமும்அரசு இயந்திரத்தில் விட்டுச் சென்றிருக்கும் ‘அடிவருடி களின் ஊடாகவும்தொடர்ந்து செல்வாக்கு செலுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். அந்நாடுகளில்அல்லாஹ்வின் உதவியால், மக்கள் சக்திக்கு மகத்தான வெற்றி கிடைத்து,அம்மக்கள் சுதந்திரத்தையும் சுயநிர்ணயத்தையும் மிக விரைவில் உண்மையாகவே துய்க்க வேண்டும் என்பது நமது ஆசையாகும்.  
இந்நாடுகளில் என்ன நடந்ததுஇப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதுஎவ்வாறெல்லாம் அங்கு மக்கள் ஆட்டி வைக்கப்பட்டனர் - அடக்கி ஒடுக்கப் பட்டனர்,எதேச்சதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான எத்தனை பேர் சித்ர வதைக்குள்ளாயினர்;, இரகசியமாக எத்தனை பேர் துவம்சம் செய்யப்பட்டு இந்த பூமியிலிருந்து துடைத்தெறியப்பட்டனர் என்பவை பற்றியஇது காலம் வரை மறைத்து வைக்கப்படடிருந்த பல செய்திகள் ஊடகங்களின் ஊடாக வெளிவரத் துவங்கியிருக்கின்றன. எந்த அக்கறையும் ஆர்வமும் இல்லாதிருந்த நம்மவர்கள் கூடமுஸ்லிம் உலகைப் பற்றி இப்போதுதான் கண் திறந்து பார்க்கவும்காது கொடுத்து கேட்டறியவும் தலைப்பட்டிருக்கின்றனர். 

நமது இரு புனிதத் தலங்களான மக்காவும் மதீனாவும் அமைந்திருக்கும் சவூதி அரேபியாவிலும்மக்களின் புரட்சியை நசுக்குவதற்கு கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. அங்கு  குமுறிக் கொண்டிருக்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்காக சலுகைகளும்நலத்திட்டங்களும் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. சவூதி அரேபிய முடியாட்சி அரசுதனது அரசவை ஆலிம்களைக் கொண்டு ‘அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஹராம்  என மார்க்கத்தீர்ப்பு(?) வழங்கச் செய்திருக்கும் அதே நேரத்தில்,இராணுவத்தைக் கொண்டு அதனை அடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறது. இஸ்லாமியச் சட்டக் கோவைக்கு மாற்றமாகபரம்பரை மன்னர் ஆட்சிமுறையைப் பின்பற்றும் இந்த அரசு,எவ்வாறு உருவானதுஎவரால் அமைக்கப்பட்டதுஎன்ன அடிப்படையில் வளர்ச்சி கண்டதுஇதனால் பலன் பெற்றவர்கள் யார்பாதிக்கப்பட்டவர்கள் யார்,என்னென்ன அழிவு வேலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன- என்னென்ன எதிர்கால அழிவுப் பணிகளுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளன என்பவை பற்றிய விளக்கங்களுடன் அதன் கடந்த கால வரலாற்றையும்;, அதன் இன்றைய உண்மை நிலைமையையும் தமிழில் தந்து மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும். 


இஸ்லாமிய வரலாற்றோடு நம்மைத் தொடர்புபடுத்தும் இணைப்புநமது பாரம்பரியத்தை பசுமையாக நமக்கு ஞாபகப்படுத்தும் அடையாளங்கள்சம்பூரண இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டத்தை இப்புவியில் நிலைநிறுத்திய இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலப் பகுதியும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வசித்தவாழ்க்கையைக் கொண்டு நடத்திய இடங்களுமாகத்தான் இருக்கும்.
அல்குர்ஆனின் வார்த்தைகளைசமூக-அரசியல் மெய்ப்பாடாக மாற்றம் காணச் செய்த ஆண்களுடையவும் பெண்களுடையவும்நம் கண்களுக்குத் தெரிகின்ற தெளிவான தடயங்கள்எவற்றின் மூலம் சிறகடித்து உயரப் பறந்த இஸ்லாம் ஓர் இருப்பை வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டதோஅந்த நெருங்கிய இணைப்புகளுக்கும் சகோதரத்துவப் பிணைப்புகளுக்கும் அடையாளச் சின்னங்களாக விளங்கியவை அனைத்தும், இன்று சவூதி அரேபியாவில்இந்தப் பிரதேசத்தின் வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளின் காரணமாகக் காணாமல் போய்விட்டன
தேசிய ரீதியிலான நாடுகள் என்றதொரு அமைப்புமுறைநவீனமானதொரு கண்டு பிடிப்பாகும். இஃது ஐரோப்பிய மத்திய பூமியில் வெறுமனே 400ஆண்டு களுக்கு முன் தோற்றம் பெற்றதொன்றாகும். (இஃது இஸ்லாமிய ஆட்சி அமைப்புக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பாடானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும்தனது இருப்பையும் தனது வரலாற்றையும் கடந்த காலங்களின் பின்னணியில் உருவாக்கி ஆக வேண்டியுள்ளது. ஆனால்,அதற்காக பாரம்பரிய இஸ்லாமிய வரலாற்றையும் அதனை நினைவு கூரும் வரலாற்றுத் தலங்களையும் இல்லாமலாக்குவதென்பது உலகளாவிய முஸ்லிம் உம்மத்தினால் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத ஒரு பெரும் பாதகமாகும்!
ஓரிறைக் கொள்கையின் ஊற்றுக்கண்ணானதெய்வீக வஹியின் பூமியான அரேபியத் தீபகற்பத்தை கொள்ளைக்கார-கொலைகாரக் காட்டரபிக் கோத்திரமான சுவூத் குடும்பத்தின் பெயரைக் கொண்டு அழைப்பதும்அதன் சொந்தச் சொத்து எனக் கருதி அங்கு அரங்கேறும் அழிச்சாட்டியங்களையும் அநீதிகளையும் கண்டு வாளாவிருப்பதும் ஒரு மானக்கேடான இழிசெயலாகும் என்பதை உலகளாவிய முஸ்லிம்கள் உணர்வதுதான் முஸ்லிம் உலகின் உண்மையான எழுச்சியாக அமையும் என்பது கண்கூடு. 

கனடாவிலிருந்து வெளிவரும் ‘கிரசன்ட் இன்டர்நேஷனல்பத்திரிகையில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட இது தொடர்பான மூன்று கட்டுரைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த தொகுப்பில் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் இதன் மூலம் பயன் பெற அல்லாஹ் அருள்வானாக!

 சவூதி அரேபியாவின் கடந்தகால வரலாறும் அதன் இன்றைய உண்மை  நிலைமையும் எனும் கருப்பொருளில் இப்புத்தகத்தில் இடம் பெறும் கட்டுரைகள் பின்வருமாறு
1.சவூத் பரம்பரையின் ஜாஹிலியத்தான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்
-ஜஃபர் பங்காஷ்-

 
2.சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமியப்பாரம்பரிய வரலாற்றுத்தலங்கள்
-இக்பால் சித்தீகி-
3. எஃகு இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு இன்று சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர்
-ஸைனப் சீமா-

No comments:

Post a Comment