Tuesday, August 19, 2014

'கிலாபத்'தை நிறுவுவது எப்படி?



 
















 -ஜஃபர் பங்காஷ்-

தக்ஃபீரி குழுவின் திடீர் வெடிப்பு. இராக் - ஷாம் இஸ்லாமிய அரசு (
Islamic state of iraq and sham), (சிரியா) ISIS திடீரென வெடிக்கிறது. இப்பின்னணியில் கிலாபத் பிரகடனம் முழங்கியது.






திடீர் வெடிப்பின் ISIS அரசும் கிலாபத் பிரகடனமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஸீராவின் ஒளியில் விளங்கிக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதும் அவசரமுமான தேவையாகும்.
இஸ்லாமிய அரசில் (கிலாபத்) வாழ்வது அல்லது இஸ்லாமிய அரசொன்றினை நிறுவ அயராது உழைப்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும்.. இதனை அறிந்த அர்ப்பணித்த முஸ்லிம்கள் இவ்விடயத்தில் ஒன்றுபடுவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு நாம் நம் கவனத்தை குவிக்க வேண்டிய அம்சம், கிலாபத்தை அடைந்து கொள்ள வேண்டிய படிமுறைகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா, ஸீரா என்பன எல்லா வழிகாட்டல்களுக்கும் அடிப்படியானவை. குர்ஆன் இஸ்லாமிய வாழ்விற்கான பொதுவான அடிப்படை விதிகளை எடுத்துக் கூற சுன்னாவும் ஸீராவும் செயற்பாடு ரீதியான வடிவங்களை விளக்கி நிற்கின்றன.
நபித்துவத்தின் 23 வருட கால பணியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசொன்றினை எவ்வாறு நிறுவுவது என்பதை அழகாக செய்து காட்டியுள்ளார்கள்.
றைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தியாகமிக்க கொள்கைக்காக தங்களை அர்ப்பணம் செய்த ஒரு சிறு குழுவினரும் மக்காவின் ஆரம்ப கால பதின்மூன்று வருட கால வாழ்க்கையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். மக்கத்து பட்டணத்தரசு அவர்களை வதைத்து துன்புறுத்தி சித்திரவதைகள் செய்தது. மக்கத்து பட்டணத்து அரசின் அநீதி அக்கிரம் ஊழல் அடக்குமுறை என்பவற்றிக்கு மாபெரும் சவாலாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டமைதான் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் கொள்கையைக் கொண்ட தோழர்களும் பட்ட வேதனைக்கு அடிப்படைக் காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் அவனது அன்புநபிக்கு புலம்பெயர் -ஹிஜ்ரத்- செய்வதற்கு அனுமதி வழங்கினான். மதீனத்து இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பட்டது.
மக்கத்து புலம்பெயர்வு -ஹிஜ்ரத்- தன்னார்வ புலம்பெயர்வல்ல. மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கொலை செய்திட திட்டம் வகுத்தனர். ஆனால் தான் பிறந்த நகரத்திலிருந்து அவர்களை வெளியேறுவதற்கு அல்லாஹ் பாதுகாப்பு வழங்கினான்.
மதீனத்துக்கு மாநபியின் வருகையோடு நேர்மை, நீதி என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. மதீனத்து பட்டணத்தில் வாழ்ந்த எல்லா மக்கள் தொகுதியினரும், முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் யூதர்கள் - மற்றவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ மதீனத்து உடன்படிக்கை மூலம் வழி வகுக்கப்பட்டது.

உரிமைகளும் பொறுப்புக்களும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன. மதீனத்து மண்ணில் வாழ்ந்த பல்வேறு வகையினரான மக்கள் தொகுதியினரை இவ்வுடன்பாட்டுக்கு கீழ் கொண்டு வர எதுவித பலப்பிரயோகமோ, வற்புறுத்தலோ மேற்கொள்ளப்படவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும்.
மக்கத்து முஷ்ரிகுகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்  அவர்களின் தோழர்களையும் சமாதானமாக நிம்மதியாக வாழவிட்டு வைக்கவில்லை. முஷ்ரிகுகள் இவர்களைப் பின்தொடர்ந்தனர். பல தாக்குதல்களை இவர்கள் மீது மேற்கொண்டனர். முஸ்லிம்கள் சில வேளைகளில் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தனர் சில வேளைகளில் பின்னடைவுகளையும் கண்டனர். ஆனால் இறுதியாக முஸ்லிம்கள் வெற்றிகொண்டனர்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய ஸீராவிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஹி 8ம் ஆண்டு நடைபெற்ற மக்கத்துவிடுதலை. இப்பாடம் தற்போதைய எமது தலைப்புக்கு மிகவும் முக்கியமான விடயமாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்கத்து முஷ்ரிகுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சில விதிகளை அவர்கள் மீறி நடந்து கொண்டனர். ஒரு முஸ்லிமை கொலை செய்ததன் மூலம் அவ்வுடன்பாட்டு விதிகளை மீறினர். மக்காவின் புனித எல்லைகளுக்குள் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.  இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் எதுவித யுத்தமும் செய்யாமல் இரத்தம் சிந்தாமல் மக்காவிற்குள் நுழைந்தார்கள். கஃபதுல்லாஹ்வில் அபயமடைந்தவர்களுக்கும் மக்காவில் வீட்டிலிருந்தவர்களுக்கும் பாதுகாப்பும் உயிர் உரிமையும் உத்தரவாதம் வழங்கப்படுமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பகிரங்க அறிவித்தல் விடுத்தார்கள்.
ஓப்பந்தத்தின் அடிப்படையிலும், தேச வழமைச் சட்டத்தின் அடிப்படையிலும் மக்கத்து முஷ்ரிகுகளை அணியாக நிறுத்தி அவர்களின் குற்றச் செயல்களின் பட்டியலடிப்படையில் சிரச்தேசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்த போதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்; பழிவாங்கல்களுக்கும்  இரத்தம் சிந்துவதற்கும் பதிலாக மன்னிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள். 


ஆனால் இன்று இராக்கில் நடப்பது என்ன?  தங்களைத் தாங்களே ISIS என நாமம் சூட்டிக் கொண்டும் இராக்கில் நடத்தி வரும் பயங்கரவாதம் முற்று முழுதாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்யும் இந்த ISIS இற்கும் அதன் தலைவர்களுக்கும் மனித உயிரின் புனிதத்துவம் புரியவில்லை.
மிகவும் பெறுமதியான எண்ணக் கருக்களான ஜிஹாத், இஸ்லாமிய அரசு என்பனவற்றை கொச்சைப்படுத்தி தப்பர்த்தம் கற்பிக்கின்றனர்.
மனித படுகொலைகள், சரணடைந்த போர் வீரர்களை படுகொலை செய்தல் இந்த ISIS இன் கையெழுத்துக்களின் குறியீடுகளாக மாறிவிடுகின்றன. இவர்கள் தான் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவபாடுபடுவதாக தம்பட்டமடித்து கொள்கின்றனர். கலீமாவை பொறித்த கொடியினை ஏந்திக் கொண்டு அதன் பின் அணிதிரண்டுள்ள வாழ்வில் வெறுப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் இவர்களின் இஸ்லாத்தைப் பற்றிய குறைமதியும், இஸ்லாத்திற்கெதிரான ஆட்சியாளர்களுடனான கூட்டிணைப்பும் அவர்களின் உண்மையான நிகழ்ச்சித் திட்டத்தை அம்பலப்படுத்துகின்றது. இவர்கள் முஸ்லிம் உலகின் அல்லது வெளியே உள்ளவர்களின் -பிசாசுகளின்- கைக்கூலிகளே தவிர வேறு யாருமில்லை.
கொடுங்கோல் முடியரசுகளுடன் கூட்டுச்சேர்வதாலோ கீழத்தேய சியோனிசச் சக்திகளுடன் கூட்டிணைவதாலோ  இஸ்லாமிய கிலாபத்தை நிறுவி விட முடியாது. இது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பாடான நடவடிக்கையாகும்.
சஊதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற ஆட்சியாளர்கள் உண்மையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பினால் அவர்களின் நாடுகளை அந்த நல்ல பணியின் ஆரம்பதலங்களாக- முன்மாதிரியாக அமைத்துக் கொள்ளலாம். நேர்மை, நீதி என்வபற்றிக்கான கூக்குரல் அந்நாட்டில் ஒலிக்கின்ற போது ஊழல்களுக்கு எதிரான ஒரு முற்றுப் புள்ளியாக இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான கோஷம் மாற்றத்தை உண்டாக்கும்.
மட்டமான இஸ்லாமிய அறிவைக் கொண்ட ஒரு முஸ்லிம் கூட குர்ஆன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆதரவு வழங்காத, வழங்கமுடியாத, நியாயப்படுத்தமுடியாத ISIS இன் காட்டுமிராண்டிதனமான கொடுஞ் செயல்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.? இஸ்லாமிய அரசு அப்





பாவி மக்களின் எலும்புக் கூடுகளின் மீது நிறுவப்படுவதல்ல. அவர்களின் இரத்த வெள்ளத்திலே இஸ்லாமிய அரசை ஓட்டி விடவும் முடியாது. இந்த விதியின் கீழேதான் கீழைத்தேயவாதிகளினதும் சியோனிஸ்ட்களினதும் அரசுகள் நிறுவப்படுவதை நாம் வரலாற்று நெடுகிலும் கண்டு வருகின்றோம்.
எனவே இஸ்லாத்தின் முக்கியமான எண்ணக் கருக்களை கடத்திச் செல்வதற்கு வழிபிறழ்ந்த இந்த ISIS கூட்டத்தினருக்கு முஸ்லிம்கள் அனுமதி வழங்க முடியாது. அவர்களுடன் எவ்வித சமரச போக்கையும் கைக்கொள்ள முடியாது.
எனவே ISIS என்ற தீவிரவாத இயக்கம் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அமெரிக்க இஸ்ரவேலின்; கூட்டுக் கலவை. இது இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் இல்லாதொழித்து முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக புறப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கம் நீண்டகாலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. இருப்பினும் இதன் செயற்பாடுகள் இஸ்லாத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை தெளிவாக அடையாளம் காண்பது முஸ்லிமான ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
(தமிழில்: அபூகுமைல்)

Friday, August 8, 2014

ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் நேர்காணலும், கருத்துகளும்.



அல்அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள், எகிப்திய அல்நீல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

ஷீஆக்களைப் பற்றி அல்அஸ்ஹர் என்ன சொல்கிறது? எகிப்தின் அல்நீல் செனலுக்கு அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள் வழங்கிய  நேர்காணலும், ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் கருத்துகளும்.

கேள்வி:     ஷீஆக்களின் நம்பிக்கை தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் உங்கள் பார்வையில் தென்படுகின்றதா?

பதில்:     கிடையாது. இல்லவே இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன், அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பின் பிரகாரம், ஷீஆ மத்ஹப் (சிந்தனைப் பிரிவு) ஆனது, ஏனைய மத்ஹப்களோடு, ஐந்தாவது மத்ஹபாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத்
கேள்வி:    எமது பிள்ளைகள் ஷீஆ இஸ்லாமிய சிந்தனைப் பிரிவை தழுவிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:    அவர்கள் ஷீஆ மத்ஹபைத் தழுவிக் கொள்ளட்டுமே. யாராகிலும் ஒருவர் மாலிகி மத்ஹபை, அல்லது ஹனபி மத்ஹபை விட்டு விலகினால், அவரை நாம் விமர்சிப்பதில்லையே. இந்தப் பிள்ளைகள் நான்கு மத்ஹப்களையும் விட்டு விட்டு ஐந்;தாவது மத்ஹபில் இணைந்து கொள்கின்றார்கள்.

கேள்வி:    ஷீஆக்கள் எமது உறவினர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் பிள்ளைகளை திருமண பந்தத்தின் மூலம் தம்முடன் இணைத்துக் கொள்கின்றார்களே?

பதில்:    இதில் என்ன தவறு? மதங்களுக்கிடையிலான திருமணமே அனுமதிக்கப்பட்டுள்ளதே.

கேள்வி:    ஷீஆக்களிடம் வித்தியாசமான வேறு ஒரு குர்ஆன் உள்ளது எனக் கூறப்படுகின்றதே. இது பற்றி?

பதில்:    இது, வயது முதிர்ந்த பெண்களின் ஆதாரமற்ற மூடநம்பிக்கையும் கட்டுக்கதையும். ஷீஆக்களிடம் இருக்கின்ற குர்ஆனுக்கும் எங்களிடம் உள்ள குர்ஆனுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமுமில்லை. அவர்களின் குர்ஆனில் காணப்படுகின்ற அகர எழுத்துகளுக்கும் எங்கள் குர்ஆனின் அகர எழுத்து வரிசைகளுக்கும் இடையிலேயும் கூட வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி:    ஒரு நாட்டின் (சவூதி அரேபியா) 23 மத போதகர்கள், 'ஷீஆக்கள் காபிர்கள்' என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளார்களே?

பதில்:    முஸ்லிம்களுக்காக ஃபத்வா வழங்கும் அதிகாரபூர்வமான அமைப்பு அல்அஸ்ஹர் மாத்திரமே. மேலே கூறப்பட்ட ஃபத்வா செல்லுபடியற்றது. நம்பகத்தன்மையற்றது.

கேள்வி:    ஷீஆக்களுக்கும் சுன்னாக்களுக்கும் இடையில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரிவினை – வித்தியாசம் என்ன கூறி நிற்கின்றது ஷைக் அவர்களே?

பதில்:    வெளிநாட்டுச் சக்திகளின் கொள்கை வகுப்பாளர்களின் சதியே இது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. அவர்களின் நலன் காக்க ஷீஆ-சுன்னா பிளவினை தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கேள்வி:    எங்களிடம் மிகவும் முக்கியமான கேள்வி ஒன்றுள்ளது. ஷீஆக்கள் கலீபாக்களான அபூபக்கர் (ரழி) மற்றும் உமர் (ரழி) ஆகியோரை ஏற்றுக் கொள்வதில்லையே. அப்படிப்பட்ட ஷீஆக்களை முஸ்லிம்கள் என்று தங்களால் எவ்வாறு கூற முடியும்?

பதில்:    ஆம். ஆம். அந்த கலீபாக்களை ஷீஆக்கள் ஏற்றுக் கொள்தில்லைதான். ஆனால், அபூபக்கரை, உமரை ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய அடிப்படை (உசூலுத்தீன்) இன் ஒரு பகுதியா? அபூபக்கர், உமர் பற்றிய சம்பவம் வரலாற்று ரீதியான ஒரு சம்பவம். (உசூலுத்தீன் எனும்) அடிப்படை நம்பிக்கைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

கேள்வி:    (பதிலைக் கேள்வியுற்ற நிருபர், சற்று ஆச்சரியமடைந்தவராகக் கேட்கிறார்) ஷீஆக்களின் அடிப்படைப் பிரச்சினை – அவர்களின் இமாம் - தற்காலத்திற்குரிய இமாம் (இமாமுல் அஸ்ர்) ஆயிரம் வருடங்கள் கழிந்தும் இன்னும் உயிர் வாழ்கின்றார் எனக் கூறுகின்றனரே?

பதில்:     அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் இது சாத்தியமில்லை? ஆனாலும் நாங்கள் சுன்னாக்கள் என்பதனால் அவர்களைப் போன்று இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று எந்தக் காரணமும் கிடையாது.

கேள்வி:     (இமாம் முஹம்மது தகி அல்ஜவாத் (அலை) (ஷீஆக்களின் ஒன்பதாவது இமாம்) அவர்களைக் குறித்துக் கேட்கப்பட்டது.) அவர்களின் இமாம்களில் ஒருவர், எட்டு வயதுடைய சிறுவராயிற்றே. அவரை, ஷீஆக்கள் தங்களின் இமாமாக நம்பிக்கை கொண்டுள்ளனரே? எட்டு வயதுக் குழந்தை இமாமாக இருப்பதென்பது சாத்தியமா?

பதில்:    தொட்டிலில் உள்ள குழந்தை நபியாக (நபி ஈஸா (அலை) அவர்கள்) வர இயலுமாயின், ஏன் எட்டு வயதுச் சிறுவர் இமாமாக வர முடியாது? இது ஆச்சரியமானதொன்றல்ல. சுன்னாக்களாகிய நாங்கள் இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளா விடினும், இக்கொள்கை அவர்களின் இஸ்லாத்திற்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் முஸ்லிம்களே!.

தமிழில்: அபூகுமைல்

அல் - அக்ஸா, பலஸ்தீன் விவகாரத்தில் இமாம் கொமெய்னியின் பார்வை



இமாம் கொமெய்னியின் (ரஹ்) வின் இருபத்தைந்தாவது
நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (04/06/2014) இக் கட்டுரை பிரசுரமாகின்றது. 

மர்லின் மரிக்கார் 

இஸ்லாமிய மக்கள் புரட்சியின் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசை ஸ்தாபித்தவரே இமாம் கொமெய்னி (ரஹ்) ஆவார். இவர் வபாத்தாகி இற்றைக்கு இருபது வருடங்களாகிவிட்டன.
என்றாலும் அவர் இஸ்லாமிய புரட்சியின் மூலம் இட்ட அடித்தளம் ஆழ, அகலமானது. உறுதியான பலம்மிக்கது. இதன் பயனாக ஈரான் எவரது தயவிலும் தங்கி நிற்காது சுயமாக எழுந்து நிற்கும் நாடாக விளங்குகின்றது.
அதேநேரம் வல்லரசுகளின் அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் தலை சாய்க்காத நாடாக நிமிர்ந்து நிற்கின்றது. என்னதான் அழுத்தங்களும், நெருக்குதல்களும் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது மத்திய கிழக்கில் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் நாடாகவும் திகழுகின்றது ஈரான்.
இதேவேளை இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனை, மற்றும் செயற்பாட்டுத் தாக்கம் இப்போதும் உலகில் பிரதிபலிக்கவே செய்கிறது. அவர் முஸ்லிம்களின் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் பெரிதும் வலியுறுத்தினார். அதுவே முஸ்லிம் உலகின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக அமையும் என்பதையும் அவர் பலமுறை சுட்டிக்காட்டினார்.
 
இதனடிப்படையில் முஸ்லிம்களது ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவென அவர் ஒற்றுமை வாரத்தைப் பிரகடனப்படுத்தினார். இவ்வாரம் இஸ்லாமிய வருடக் கணிப்பில் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் நடுப்பகுதியில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாரத்தில் முஸ்லிம்களது ஒற்றுமையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலான மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன. அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்கள் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருந்தார். அடக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மானசீக ரீதியாக ஆதரவும் நல்கினார்.
அந்த வகையில்தான் இமாம் கொமெய்னி (ரஹ்), அல் அக்ஸாவும், பலஸ்தீனமும் யூதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவை முஸ்லிம்களின் பூர்வீக சொத்து என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அது தொடர்பான கருத்துக்களையும் திட்டங்களையும் அவர் முன்வைத்தார். அல் - அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை, அவர் முழு முஸ்லிம்களினதும் பிரச்சினையாகவே பார்த்தார். 

 
ஏனென்றால் அல் அக்ஸா என்பது உலகில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமையான இரண்டாவது பள்ளிவாசல். இது முழு முஸ்லிம்களுக்குமான மூன்றாவது புனித தலம். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகையும் அல்லாஹ்விடத்தில் ஐநூறு தொழுகைகளுக்குச் சமமாகும்.
அதே நேரம் சர்வவல்லமை மிக்க அல்லாஹ்தஆலாவின் இறைத்தூதர்கள் பலரும், இறை விசுவாசிகளும், வாழ் ந்து வழிபட்ட புனித பிரதேசம் இது.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி ஒரே இரவில் ‘இஸ்ரா’ பயணம் மூலம் மக்காவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலமும் அதுவே. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்கான மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த இடமும் அல் - அக்ஸாவேதான்.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் அல்- அக்ஸாவும், பலஸ்தீனமும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய புனித பூமி. இதனையே யூதர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இஸ்ரேலை +(திrதிருக்கிறார்கள். பலஸ்தீனின் பூர்வீக மக்களான முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கியுள்ளார்கள். அவர்களை அடக்கி, ஒடுக்கி வருகின்றார்கள். துன்புறுத்துகின்றார்கள்.
இதனால் தான் இமாம் கொமெய்னி (ரஹ்) ஒரு முறை “அல்- அக்ஸா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினையோ, அல்லது ஒரு நாட்டுக்குரிய பிரச்சினையோ அல்ல. அது தற்கால முஸ்லிம் உலகுடன் மாத்திரம் தொடர்புபடும் பிரச்சினையுமல்ல. மாறாக அது உலகிலுள்ள ஏகத்துவவாதிகளினதும், கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இறை விசுவாசிகளினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முன்னெடுக்கப்படும் அறப் போராட்டத்திலேயே அல் - அக்ஸாவின் மீட்சியும், விடுதலையும் தங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இதே நேரம் “அல்- அக்ஸாவையும், பலஸ்தீனையும் மீட்டெடுப்பது தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் தேசமும் கவனம் செலுத்துவது அவசியம்” என்றும் அவர் பிறிதொரு சமயத்தில் வலியுறுத்தினார்.
இதேவேளை ‘அல்- அக்ஸாவிலிருந்தும், பலஸ்தீன இஸ்லாமிய பூமியிலிருந்தும் இன்ஸா அல்லாஹ் இஸ்ரேலிய யூதர்கள் விரட்டியடிக்கப்படுவர். அப்போது நாமனைவரும் ஒன்றாகச் சென்று அல் அக்ஸாவில் ஒற்றுமையாக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இவ்வாறு அல்- அக்ஸா தொடர்பாகவும், பலஸ்தீன் குறித்தும் நிறையவே கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைத்திருக்கிறார் இமாம் கொமெய்னி (ரஹ்). அவை உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக முஸ்லிம் உலகிலும் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
என்றாலும் அத்தோடு நின்றுவிடாது அல்- அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை உலகிற்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் புரியவைப்பதற்கா கவும், தெளிவுபடுத்துவதற்காகவும் அவர் சர்வதேச குத்ஸ் தினத்தையும் பிரகடனப்படுத்தினார்.
ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையிலான புரட்சி வெற்றி பெற்ற பின் வந்த முதலாவது ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையே சர்வதேச குத்ஸ் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் வருடா வருடம் ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊர்வலங்களும் மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன.
ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவரும் அல்- அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மாநாடுகளில் உரையாற்றி இருக்கிறார்கள். அவ்வாறு உரையாற்றுவதற்குத் தவறிய ஈரானிய தலைவர் எவருமே இல்லை. அந்தளவுக்கு அல்-அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை உலக மயப்படுத்துவதில் ஈரான் பங்களிப்பு செய்து வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக பலஸ்தீனர்களின் விவகாரம் என்றிருந்த அல் அக்ஸா பலஸ்தீன பிரச்சினை உலக முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் பாரிய பங்களிப்பு செய்துள்ளன என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
 நன்றி: தினகரன்