Friday, January 13, 2012

எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர்


சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் இன்றைய நிலையும் - இறுதி பகுதி
-ஸைனப் சீமா-

(About Author : Ms. Cheema has worked for Peace x Peace since 2007 — a D.C.-based non-profit devoted to connecting women over the world for direct personal communication. Previously, she worked for the Aurat Foundation, a non-profit based in Lahore, Pakistan — and devoted to the political, economic and social empowerment of women in Pakistan.

As a second-generation Pakistani-American, Ms. Cheema turned early to literature, communication and cross-cultural understanding while negotiating differences between East and West. Her love of women's literature have attuned Ms. Cheema to the creativity and strength that women tap into when confronting their challenges.)




'சவூதி அரேபியாவில் ஓவியப்பாறைகள்' என்ற எக்காள அறிவிப்பைத் தனது முகப்பட்டையில் தாங்கி சவூதி முடியாட்சியிலிருந்து கலாசார, சமூக சஞ்சிகையின் இதழொன்று வெளி வந்திருக்கின்றது. இது சவூதி அரம்கோ உலக நிறுவனத்தின் ஒரு வெளியீடாகும். அதில் இடம் பெற்றிருந்த பீட்டர் ஹெர்ரிகன் என்பவரால் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் ஒட்டகங்களினதும் பிற மிருகங்களினதும் படங்கள் கிறுக்கலாக வரையப்பட்டிருந்ததோடு அவற்றின் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்; சர்வ தேச சமூகம் நஜ்திலுள்ள புராதனப் பாறையைப் பற்றி ஏன் ஆராயாமல் இருந்துவிட்டது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 'துரதிர்ஷ்டவசமான இந்தப் புறக்கணிப்பு மிக விரைவில் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும்' என ஹெர்ரிகன் ஆர்வத்துடன் முன்னறிவிப்பு செய்திருந்தார். அரம்கோ நிறுவனம் பாலைவனத்திற்கு அடிப்புறத்திலிருந்து அகழ்ந்தெடுக்கும் கருப்புத் தங்கத்திற்கு (எண்ணெய்க்கு) சரிசமனான ஒரு மூல வளமாக இப் பழங்காலப் பாறை கருதப்படுகின்றது.


சவூதி அரேபிய மன்னராட்சியில் 'ஓவியப் பாறை'யை கடினமான முயற்சி களுடன் பத்திரமாகப் பாதுகாப்பதென்பது ஹிஜாஸ் பிரதேச இஸ்லாமிய புவியியல் வரைபடத்தில் காணப்படும் வரலாற்று சின்னங்களான கட்டிடங் களையும் புனித தலங்களையும் இடித்துத் தள்ள மேற்கொள்ளப் பட்டு வரும் வேலைகளுடன் முற்றாக முரண்படுகின்றது. சவூத் குடும்பம் அரேபியாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுடனும் வஹ்ஹாபியக் கொள்கைவாதிகளுடனும் உள்ள அதனது அடிப்படை ரீதியிலான கூட்டைத் தொடர்ந்து இளவரசர்களாகவும் வர்த்தகர்களாகவும் ஒரு சேர விளங்குபவர்கள், இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அடையாளக் கம்பங்களாக இருப்பவற்றுக்கெதிராக எஃகு, இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு ஒரு போரைத் தொடுத்து வருகின்றனர். இந்த சின்னங்களில் யஸீத் இப்னு முஆவியா போன்ற பிற்கால குறைஷி சர்வாதிகாரிகள் கூட கைவைக்கத் துணியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 80 ஆண்டுகளில் - வெறுமனே இது ஒரு சிறு துணுக்குதான் -கிட்டத்தட்ட 300 இஸ்லாமிய வரலாற்றுக் கட்டிடங்கள் டைனமைட் வைத்துத் தகர்க்கப் பட்டிருக்கின்றன. புல்டோஸரைக் கொண்டு இடித்துத் தள்ளப் பட்டிருக்கின்றன் பூமியோடு சரிசமனாக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாத்தின் ஆரம்ப மக்கா காலத்தைய வீடுகளும், ஏனைய தொடர்புடைய கட்டிடங்களும் மன்னர் பரம்பரையின் மாற்றங்களுக்கும் அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கும்இ பல நூற்றாண்டு காலம் தாக்குப் பிடித்து பாதுகாப்பாக நின்று கொண்டிருந்ததானது, முந்தைய முஸ்லிம்களின் பாரம்பரியத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் உயர் பண்புக்கு குறிப்பிடத்தக்க- சிறப்பான சான்றாக விளங்குகின்றது. எவற்றின் மூலம் சிறகடித்து உயரப்பறந்த இஸ்லாம், ஒரு இருப்பை வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டதோ, அந்த நெருங்கிய இணைப்புகளுக்கும் சகோதரத்துவப் பிணைப்புகளுக்கும் அடையாளச் சின்னங்களாக முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மக்கா ஹில்டன் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. மக்காவில் அபூபக்கர் உடைய வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைப் பார்ப்பதா அல்லது வசதி படைத்த முஸ்லிம்கள் தமது இரவுகளை எவ்வாறு இப்போது கழிக்கின்றனர் என்பதைப் பார்ப்பதா –எதைப் பார்ப்பது, இன்று ஹஜ் யாத்திரிகர்களுக்குச் சிறந்ததாக அமையும் என ஆகிவிட்டது?

This is how the Prophet's house [white structure on the right]
 looks at this moment

விளங்கியவை அனைத்தும், இன்று இந்தப் பிரதேசத்தின் வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளின் காரணமாகக் காணாமல் போய்விட்டன. முதலாவது கலீஃபா அபூபக்கர் அஸ் ஸித்தீக் உடைய வீடு, இன்று மக்காவில் ஹில்டன் ஹோட்டலாகிவிட்டது.  நபி(ஸல்) அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்புடைய மண்ணறை தரைமட்டமாக்கப்பட்டதோடல்லாமல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நபியவர்களின் முதல் மனைவி கதீஜாவின் வீடு, எங்கு நபியவர்களின் குழந்தைகள் பிறந்தனரோ. அது இன்று ஒரு பொது மலசலக் கூடமாக மாறியிருக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா பிந்த் குவாலித் உடைய அடக்கஸ்தலம். இப்போது அது ஒரு பொது மலசல கூடமாக மாற்றப்படுவதற்கு முன்னர் எந்த குறீயீடு களுமின்றி காணப்படுகிறது. வலைப்பின்னலின் ஊடாக இணையத்தளங்களில், பெரும்பாலும் ஒவ்வொன்றையுமே ஒளிவு மறைவில்லாமல் காணக்கூடியதாயிருக்கும் இன்றைய ஒரு கால கட்டத்தில் கூட, வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர்கள் சுற்றிவர இருக்கும் பாதுகாப்பு அரண்களையும் தாண்டிச் சென்று பெரும்பாலும் எல்லாரையும் படம் பிடிக்கக் கூடியதாயிருக்கும் இன்றைய நிலையிலும் கூட, இது போன்ற படங்களையோ, சவூதி அரண்மனைகளின் விபரமான பிரதிபிம்பங்களையோ நம்மால் காண முடிவதில்லை?



மூடப்பட்ட கதவுகளின் பின்னால் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் உலக முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த சவூதி ஆட்சியாளர்கள் அத்தனையையும் செய்கின்றனரே, அவர்கள் தமது புரவலர்களான இஸ்லாம்-முஸ்லிம் விரோத அரசுகளுடன் இது சம்பந்தமாக என்னென்ன ஒப்பந்தங்களைச் செய்துள்ளனரோ நமக்கு விளங்கவில்லை??


எஞ்சியிருப்பனவற்றினதும் மீதியிருப்பனவற்றினதும் மூலம் கடந்த கால வரலாற்றைச் சிரமங்களுடன் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கு 'வரலாற்றுக் குப்பைகள்' என்ற சொல் கிண்டலாக உபயோகப் படுத்தப்படுகின்றது.  ஆனால் இந்தப் பதப் பிரயோகம் எவ்வாறு வரலாறே ஓரு குப்பையாக மாற்றப்படுகின்றது என்பதை செவ்வொளி பாய்ச்சி புலப்படுத்துகின்றது.

Jannathul Moala in Mecca has been obliterated without a trace.

தொல் பொருள் ஆராய்ச் சியாளர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தைய கட்டிடங்களில் 20க்கும் குறைவானவையே இன்று ஹிஜாஸில் மீந்திருப்பதாக மதிப்பீடு செய்கின்றனர். ஆம், அதன் அர்த்தம் என்னவென்றால், 90 சத வீதமான இஸ்லாமியத் தலங்கள் இப்போது காணாமல் போய்விட்டன. நினைவுச்சின்னங்கள் மறைந்துவிட்டன. பலஸ்தீனம் முதல் பாகிஸ்தான் தொட்டு துருக்கி வரையிலான முஸ்லிம் நாடுகளின் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பற்றி எரிந்த போதிலும்கூட, ஹிஜாஸின் சமூகத் தோற்றத்தை வஹ்ஹாபிய மயப்படுத்தும் பணிக்கு- இடித்துத் தள்ளுவதை மேற்பார்வைசெய்ய- உள்ளுர் கொள்கை வெறியர்கள் ஒன்று திரட்டப்பட்டிருக்கின்றனர். இந்த இஸ்லாமியத் தலங்களை அழித்தொழிப்பது பயபக்தியின் ஓர் அடையாளமெனச் சுட்டும் விதத்தில் அவர்களின் வாதங்களின் ரசவாத வித்தை மாற்றிக் காட்டுகின்றது.



Jannathul Baqi before the destruction.
 புனிதமெனக் கருதி மரியாதை கொடுக்கப்படும் தலங்களுக்கு முன், வஹ்ஹாபி அல்லாத பார்வையாளர்கள், சிலை வணக்கத்தில் இறங்கிவிடும் சாத்தியக்கூறின் நிழல்தானும் பட அனுமதிக்காமல், அவற்றைப் பொதுக் குளியலறைகளாக மாற்றுவது சாலச்சிறந்தது என வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர்.


அத்தோடு நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் ஞாபகப் படுத்தும் கட்டடங்கள், சரியாகச் சொல்லப்போனால் சீறாவின் புவியியலே, முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. பத்ர் மற்றும் உஹத் போர்க் களங்களுக்கு முஸ்லிம்கள் சென்ற பாதைகள் (வழியில் ஒரு தடயமு மில்லாமல் முற்றாக) சுத்தமாக்கப்பட்டுள்ளன. ஷஹீத் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிஃபின் மண்ணறை அடியொடு மறைந்து போனது. (அகழ் யுத்ததின் போது நபியவர்கள் நின்று வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த பாறையின் மீது கட்டப்பட்ட) ஸல்மான் அல் ஃபார்ஸி, அபூபக்கர், உமர், ஃபாத்திமா, அலீ, பிலால், அல் ஃபாத் ஆகியோரின் பெயரிலான பிரசித்திபெற்ற ஏழு மஸ்ஜிதுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நபியவர்களின் மக்கா வாழ்க்கையில், முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் இடமாகத் திகழ்ந்த -உண்மையில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த முதலாவது இஸ்லாமியப் பள்ளிக்கூடமான- தாருல் அர்கம், இப்போது அடுக்கு மாடிக் கட்டிடமொன்றின் நகரும் படிகள் அமைந்திருக்கும் இடமாக இருக்கின்றது. அபூ குபைஸ் மஸ்ஜிதின் இடிபாடுகளின் மேல்தான் மன்னருடைய அரண்மனை இன்று அமைந்திருக்கிறது.


அடக்கஸ்தலங்கள் வஹ்ஹாபிகளின் கடும் கோபத்திற்கான ஒரு காந்தக் கல்லாக அமைந்திருக்கின்றன. 1806ல் மதீனாவிலுள்ள பகீ அடக்கஸ்தலம் தரைமட்டமாக் கப்பட்டது, எல்லாரும் நன்கறிந்த ஒரு சரித்திரச் சம்பவமாகும். அங்கே இடையிடையே அமைக்கப் பட்டிருந்த மாபெரும் இஸ்லாமியப் பெரியார்களுடைய மண்ணறைகளின் குவிகை மாடங்களும் அடையாளக் குறிகளும் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடம் ஓர் அநாமதேயக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. மற்ற மண்ணறை பூமிகளும் இதே விதமான முடிவைத் தான் சந்தித்தன. இதனால் தமது நற்பெயருக்கு பங்கம் வரும் என்பதைப் பற்றி அவர்கள் சிறிதளவேனும் கவலைப்படவில்லை. மக்காவிலுள்ள மக்பரா அல் முஅலா அடக்கஸ்தலமும் (இங்குதான் கதிஜா நாயகி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்) இதைப்போன்றே இடித்துத் தள்ளப்பட்டது.

இவையெல்லாம் புனித நகரங்களை மீண்டும் பொலிவான தோற்றம் பெறச் செய்யும் மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் உடைய திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான். இத்திட்டத்தை நிறைவேற்று வதற்காகஇ சிறந்த கட்டடக்கலை நிபுணர்களான நோர்மன் ஃபொஸ்டர், தேம்ஸ் பேங்கைச் சார்ந்த பிரபு ஃபொஸ்டர்இ ஸாஹா ஹதீத் போன்றவர்களை மன்னர் பணிக்கமர்த்தியிருக்கிறார். இவர்கள் இந்தப் பகுதியை உடைத்துத் தள்ளி துப்பரவு செய்து, அந்த இடத்தில் எட்டாயிரம் அமெரிக்க டொலருக்கும் அதற்கு மேலும் செலவு செய்யும் சொகுசு ஹஜ் ஏற்பாடுகளுடன் வரும் இன்னுமொரு பத்து லட்சம் யாத்ரீகர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்கள்;. ஓர் இஸ்லாமிய கட்டடக்கலை நிபுணரான சாமி அங்காவி 'நாம் இப்போது மக்காவின் வரலாற்றின் இறுதித் தருணங்கள் சிலவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உள்ளுர்வாசிகளும் இடித்துத் தள்ளும் போர் முஸ்தீபுகளினால் முழமையாகப் பாதிக்கப்படாமலில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீட்டை ஓர் அடுக்குமாடி சில்லறை விற்பனை அங்காடியின் கீழ் காணாமல் போய் விடுவதற்கு அனுமதிக்காமல் மக்காவாசிகள் அதனை ஒரு நூலகமாக மற்றியமைக்க வலியுறுத்தி ஆபத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றினர். இருந்த போதிலும்இ செப்டம்பர் 11க்குப் பின்னர் ஏற்பட்ட எண்ணெய்ச் செல்வச்செழிப்பும் அதன் பயனாகத் தொடர்ந்து வந்த அபிவிருத்தி எதிரொலியும் மீதியுள்ள இத்தகைய தலங்களுக்கும் நேரம் குறிக்கக் கூடியதாக அமைந்துவிட்டது. வானை முட்டும் ஹோட்டல்களிலிருந்தும் ஏனைய வர்த்தகத் தலங்களிலிருந்தும் ஓடி வந்து கோடிக் கணக்கில் கொட்டும் லாபங்கள், சவூதி மூலதனக்காரர்களை – முதலாளிமார்களை – மிக அதிகமாக வசீகரித்துவிட்டன. இதன் காரணமாக, இரு ஹரம்களையும் சுற்றிவர இருக்கும் பகுதிகள், முதல்தரமான நிலச்சொத்துகளாகிவிட்டன. மேலும் மெக்டொனால்ட் போன்ற சர்வதேச தொழிற்சின்னம் கொண்ட நிறுவனங்கள் வந்து கதவைத் தட்டும்போது, அவற்றுக்கு இல்லையென்று ஏன் சொல்லவேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் பிறந்த வீடு இப்போது வாகனங்கள் நிறுத்திவைக்கும் ஓர் இடமாக்கப்படுவதற்கு குறிக்கப்பட்டிருக் கிறது. தற்போது நகரில் காணப்படும் வாகனங்கள் நிறுத்திவைக்கும் இட வசதிகளினால் அசௌகரித்துக்குள்ளான சவூதி அரச குடும்ப இளவரசர்களின் மெர்ஸிடெஸ் கார்கள், அங்கு நிறுத்திவைக்கப்படலாம் என்பதை உண்மையென்று கொள்ள வேண்டியிருக்கிறது.

அல்குர்ஆனின் வார்த்தைகளை, சமூக-அரசியல் மெய்ப்பாடாக மாற்றம் காணச் செய்த, ஆண்களுடையவும் பெண்களுடையவும் நம் கண்களுக்குத் தெரிகின்ற தெளிவான தடயங்களை- அடையாளங்களை- பெருந்தீயிட்டுக் கொளுத்துவதானது, சவூதி பிரஜைகள் சிலரைக்கூட திகிலடையச் செய்ய வைத்தது. இர்ஃபான் அல் அல்லவி என்பவர், சவூதிகளினால் அழிக்கப்பட்ட ஒவ்வொரு தலத்தைப் பற்றியும், அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கட்டடங்களைப் பற்றியும் மிகக் கவனமாகவும் விவரமாகவும் ஆவணப்படுத்தி, 'இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கான நிறுவனம்' என்ற பெயரிலான ஓர் இணையதளத்தில் வெளியிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜிய பத்திரிகைகளில் கூட சவூதிகளை விமரிசனம் செய்து கண்டனந் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த இணையதளம் சவூதி அரசாங்கத்தினால் முடக்கப்பட்டதுடன், அல்லாவி இப்போது வீட்டுக் காவலில் (சிறை) வைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குவதென்னவென்றால், நினைவுச் சின்னங்கள் கல் வடிவிலோ அல்லது தகவல் தொடர்புகளுக்கான ஊடகப் பெருஞ்சாலையிலோ காணப்பட்டாலுங்கூட, அவையும் மிக ஆபத்தானதோர் அரசியல் மூலதனம் எனக் கருதப்பட்டு அனாவசியமான முறையில் குறுக்கீடு செய்யப்பட வேண்டியதாய் அமைந்து விடுகின்றன.



நபி (ஸல்) அவர்களின் நினைவைப் பசுமையாக வைத்திருப்பதோடு தொடர்புடைய ஏனைய தலங்கள் பலவும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளன. ஹிராக் குகை அமைந்துள்ள ஜபலுந் நூரை (ஒளி மலையை) அழித்தொழிப்பதற்கு சவூதி வஹ்ஹாபி ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மலைக்கு விஜயம் செய்யும் ஒருவர் 'நபி (ஸல்) அவர்கள் எம்மை இந்த மலையின் மீது ஏறுவதற்கோஇ இங்கு தொழுவதற்கோ, கற்களைத் தொடுவதற்கோ அனுமதிக்கவில்லை .........' என்ற ஒரு பஃத்வா பளிச்சிடும் விதத்தில் எழுதப்பட்டு ஓர் அடையாளக் கம்பம் நடப்பட்டிருப்பதை அங்கு கண்டுகொள்ளலாம். சுருங்கச் சொல்வதென்றால், முதலாவது அல்குர்ஆன் வசனங்கள் வஹி இறக்கப்பட்ட ஒரு தலத்திற்கு- உலகின் புவியியல் வரைபடத்தை மாற்றியமைப்பதற்காக நிகழ்ந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலை முதன் முதலாக சான்று பகர்ந்த ஓர் இடத்திற்கு- அருகில்கூட நெருங்காமல் தூர விலகி நில்லென இவ்வறிவித்தல் எச்சரிக்கின்றது. இந்தத் தலத்திற்கு இணையானதொன்று இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாற்றில் இருக்குமானால், அது நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமே ஆகும். ஆம்! அதுகூட அழிவுக்குள்ளாகக் குறிக்கப்பட்டுள்ளது!
Ronald Regan - King fahd, white house.
 சவூத் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் வஹ்ஹாபியப் பணியாட்களைப் பற்றியும் பேசுவதுகூட எப்போதுமே மிக ஆபத்தானதொரு விஷயமாயிருப்பது ஏன்? எந்தவோர் அழிவுப் பணியும் புனர் நிர்மாணச் செயல்முறை ஏற்பாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவே அமையும்.நபித்துவ வாழ்க்கையின் அடையாளங்களும் சுவடுகளும்

Bush Snr.-King Fahd, buddies sharing
hearty laugh.
எவற்றைக் கொண்டு நிரப்பப்படவிருக்கின்றன? வஹ்ஹாபிகள் அனைவருமே தமது தீவிரவாதக் கொள்கைளை தமது உள்ளங்களோடு உலோக வரிப்பட்டைகளைக்கொண்டு இணைத்து வைத்திருக்கும் அதே வேளைஇ சவூதி அரச குடும்பத்தினர் அதற்கு சிறிது வித்தியாசமான விஷயங்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கின்றனர். இஸ்லாமிய சரித்திரம் திட்டமிடப்பட்டு பூமியின் தளங்களிலிருந்து தகர்த் தெறியப் படுவதாயிருந்தால் அது ஒரு புதிய வரலாற்றை சுவூத் குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சியை முழுமையாக நியாயப்படுத்தி, கட்டியெழுப் புவதற்கானதொரு முன்னேடியாகவே இருக்க முடியும்!

King Faisal -Nixon,White House
 1989ல் நிவ்யோர்க்கில் நடந்தஇ 'சவூதி அரேபியாவில் கலாச்சாரத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதற்கான' ஒரு மாநாட்டில், சவூதி இராஜதந்திரிகளும் வெளிநாட்டு தூதுவர்களும் வரத்தகர்களும், வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்களையும் கலாச்சார சின்னங்களின் பாதுகாப் பிற்கான நிபுணர்களையும் சந்தித்து அளவளாவினர். சுவூத் குடும்பத்தின் நிறுவன நினைவுகளைப் பதிய வைப்பதில் தாம் பெற்ற வெற்றிகளைக் குறித்து தம்மைத் தாமே புகழ்ந்து பேசிக் கொண்டனர்.
  இதற்கான முனமாதிரியாக காலனித்துவ வில்லியம்ஸ்பேர்க் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவின் காலனித்துவக் காலப்பகுதியின் பழுதடையாத ஒரு ஞாபகச் சின்னமாக, கவர்ச்சி வாய்ந்த வெர்ஜீனியா நகரைப் பாதுகாத்து அமைக்கப்பட்டதாகும்.


Eisenhower-Saud-Nixon
 (இங்கு வரும் உல்லாசப் பயணிகள் கறுப்பர்களின் அடிமைத்துவம், செவ்விந்தியர்களின் ஒட்டுமொத்தமான இனப்படுகொலை போன்ற மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத நினைவுகளைப் பற்றிய எந்த கவலைகளுமின்றி, சுற்றி வளைத்துக் கட்டும் பழங்கால ஆடைகள், கை வினைப் பொருட்கள், காலனித்துவக் கால இசை ஆகியவற்றை அனுபவித்து சந்தோஷமடைகின்றனர்) 'அமெரிக்காவிலுள்ள நீங்கள் உங்கள் நாட்டின் நிர்மாணத்தோடு தனித்துவமிக்க முறையில் தொடர்புடைய இடங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். நாங்களும் நமது நவீன அரசாட்சியை எவ்வாறு மன்னர் அப்துல் அஸீஸ் உருவாக்கினார் என்பதைப் பற்றி சவூதி மக்கள் அறிந்துகொள்வதற்காக, ரியாதிலும் தரிய்யாவிலுமுள்ள தலங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என நிவ்யோர்க்கிலுள்ள சவூதி அரேபியாவின் கொன்ஸல் ஜெனரல் ஸஅத் நாஸர் அந்த மாநாட்டில் சொன்னார்.



King Fahad Bin Abdul Aziz Bin Saud, seated in
a wheel-chair among Royal family members, honors the heirs of
the Companions of King Abdul Aziz with commemorative medals,
January 22, 1999. The event marks the start of a week-long
celebration to commemorate the 100th anniversary of
 the Saudi kingdom. REUTERS.
Only celebrating Meelad Un Nabi is Bidah!!!
 சுருங்கச் சொல்வதென்றால், சவூதி புனர்நிர்மாணத் திட்டப்பணிகள் மக்கா விலோ மதினாவிலோ அல்லது ரியாத்திலும் ஜித்தாவிலும் தரிய்யாவிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடங்கள், சவூத் குடும்பத்தினர் தங்கத்தை வாரிக்கொள்ளும் அதிர்ஷ்டத்தை அடையும் முன்னர்இ கச்சாப் பாலைவனப் புறவிடங்களாகவே இருந்தன. இரு புனித நகரங்களின் நிர்மாணத்திற்காக, தமது கலாச்சார, மார்க்க, அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்ட உதுமானியர்கள் போன்ற முந்தைய ஆட்சியாளர் பரம்பரைகளைப் போலல்லாமல், சவூதிகள் முதல் நாளிலிருந்தே மாற்றுப் புவியியல் ஒன்றை நிர்மாணிக்க வேலை செய்கின்றனர். இது நபித்துவத்தை இரையாக்கி உருவாக்கப்படும் ஒரு மதசார்பற்ற லௌகீகப் புவியியலாகும்.; பல கோடியினரின் அன்பையும் பற்றையும் விசுவாசத்தையும் பிணைப்பையும் ரொக்கப் பணங்களாக மாற்றிஇ மிகுந்த பேராசையுடன் அவற்றை விழுங்குவதற்கு செய்யப்படும் ஓர் ஏற்பாடாகும்.  இங்கு அமெரிக்க டொலர்கள் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது.

எனவேஇ இஸ்லாம் ஹிஜாஸ் பிரதேசம் முழுவதிலும் வண்டல் போல படிந்து நிற்பதை வெறுப்போடு நோக்கும் சவூத் குடும்பம், முன்னர் எந்த முக்கியத்துவமோ பிரபல்யமோ பெற்றிருக்காத, இப்போது பாசாங்கு செய்யும் (காட்டரபிகளின்) ஒரு கோத்திரப் போட்டிக் குழுவினர்தான் என்பதை நபி(ஸல்) அவர்களின் புவியியல் நமக்கு மிகத் தெளிவாக ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்ற போது, நாம் எந்தக் கடந்த காலத்தை தகுதியானதாக ஏற்றுக்கொள்ள முடியும்?


 தேசிய ரீதியிலான நாடுகள் என்ற அமைப்புஇ நவீனமானதொரு கண்டுபிடிப்பாகும்; இஃது ஐரோப்பிய மத்திய பூமியில் வெறுமனே 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றதொன்றாகும். ஆயினும் தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், தனது இருப்பையும் தனது காலனித்துவப்படுத்தப்பட்ட வரலாற்றையும் கடந்த காலங்களின் பின்னணியில் அப்படியிருந்ததாக உருவாக்கி ஆக வேண்டியுள்ளது. நம்பமுடியாத அளவு பெருந் தொகையிலான தமது ஹஜ் வருமானங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இரு ஹரம்களின் பாதுகாவலர்களெனத் தம்மை முஸ்லிம்களின் மத்தியில் சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்த சவூதிகள், காட்டரபிகளான நாடோடிக் கோத்திரங்களின் இஸ்லாத்திற்கு முந்திய வரலாற்றுக் குறிப்புகளையும், தமது பரம்பரை மன்னர் ஆட்சியின் ஸ்தாபகத்தைப் பற்றிய சரித்திரங்களையும் மட்டுமே மக்கள் ஞாபகப்படுத்த வேண்டுமென விரும்பு கின்றனர்.


A lineup of kings from Ibn Saud to Abdullah,
at the national museum in Riyadh.From right to left: 
King Fahad, King Khalid, King Fisal, King Saud, King
Abudlaziz,King Abudallah,.
 
மக்காவினதும் மதீனாவினதும் சூழவுள்ள அடக்கஸ்தலங்களும் மஸ்ஜித்களும் அழிந்து கொண்டிருக்கும்போது ரியாத்திலும் ஜித்தாவிலும் விரிவான முறையில் புதிய கட்டிடங்கள் எழுந்து வருகின்றன. ரியாதிலுள்ள தேசிய பழங்கால அரும்பொருள் காட்சிசாலையில் ஒரு விரிவான இஸ்லாத்திற்கு முந்திய காலப் பகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல் ஊடக (மல்டி மீடியா) சாதனங்கள் நஜ்த் பிரதேச மணல் வெளியிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்ட வரலாற்றுக்கு முந்தியகால 'வரலாற்றுப் பாறை'க்கு இருபக்கங்களிலும் பொருத்தப்படடிருக்கின்றன.



"The Gift of Friendship" exhibit in Riyadh Museum.
The gift U.S. President Franklin Delano Roosevelt to
King Abdul Aziz Ibn Abdul Rahman Al-Saud
 Great Bitter Lake in the Suez Canal on February 14, 1945.
 சவூத் குடும்பத்தின் ஸ்தாபகத் தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'தராத் அல் மலிக் அப்துல் அஸீஸ்' போன்ற பலவேறுவிதமான வளவளப்பான மியூஸியத் தொடர் கட்டடங்கள், மணற் குன்றுகளின் மேல் முளைத்து நிற்கின்றன. பல கோடி டொலர் பெறுமதியான இந்த நினைவுத் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியொப்படைப்பதற்காக, உலகெங்கிலுமிருந்து புகழ் பெற்ற கட்டடக் கலைஞர்களுக்கிடையில் போட்டியொன்றை ரியாத் அபிவிருத்தி அதிகார சபை நடத்தியது.



National Museum of Saudi Arabia. How even an old desert
 oil exploration truck, is displayed.
 போட்டிக்கான குறிக்கோள், 'முழு தேசத்திற்குமான கலாச்சாரக் குவிமையத்தை' கட்டியெழுப்புவதென்றும், 'எல்லா சவூதிகளுக்குமான தொடரான நிலையையும் கண்ணியத்தையும்' உருவாக்குவதென்றும் அறிவிக்கப்பட்டது. அப்துல் அஸீஸ் ஆல சவூதையும் வரலாற்றுக்கு முந்திய மூதாதையர்களையும் நினைவு கூரும், ஒளிரும் உயர் தொழில்நுட்ப சாதனங்களால் சூழப்பட்ட, இந்த பண்டைய கால ஞாபகச் சின்னங்களின் முன்னால், தமது நாட்டுப் பிரஜைகள், விக்கிர ஆராதனை செய்யும் நிலைக்கு ஆளாகிவிடுவார்கள் என்ற அச்சம் சவூத் குடும்பத்தினருக்கு ஏற்படவில்லை என்று அப்பட்டமாக விளங்குகிறது.

King Abdul Aziz International Terminal Haj Airport Dedication Medal.
Does this border on Shirk, for the Ale Saud apologists? 

புனிதம் வாய்ந்த கட்டடங்களும் இடங்களும் மறைந்து போயின என்பது, வெறுமனே கற்களும் சிமெண்டு கலவைகளும் இல்லாமலாகி விட்டன என்ற கருத்தைத் தராது. வரலாற்று நிலப்பரப்பிலும் நினைவுகளின் சமுத்திரத்திலும் நம்மை நாம் நிலைநிறுத்திக் கொள்வதற்கு, நமக்கு உதவுகின்ற 'திசை காட்டும் கருவிகள்' அழிந்து போய்விட்டன என்றே இதனை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் இன்றுவரை உயிர் வாழ்வதற்கு, தங்கள் இரத்தத்தையும் உடைமைகளையும் விலையாகக் கொடுத்த அந்த வரலாற்றுச் சொத்தின் சொந்தக்காரர்களான – மாமனிதர்களின் சுவடுகள் முற்றாகவே இம்மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டதாகவே நாம் இதனைக் கொள்ள வேண்டும். நமது நினைவை ஊட்டப்படுத்தும் முக்கியமான – பௌதீக வடிவிலான சாசனமான - கல்வெட்டுகள் மட்டுமல்ல இன்று மங்கி மறைந்து விட்டன் உண்மையில் நாம் முஸ்லிம்கள் என்ற நிலையில் உயிர் வாழும் உணர்வுகளும் அதன் வலிமையை இழந்துவிட்டன.

No comments:

Post a Comment