.
புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.
குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர்.
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர்.
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.
குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.
வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.
சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.
ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.
No comments:
Post a Comment