Tuesday, January 31, 2012

அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பதே உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும்

 
மக்கள் தங்களது உரிமைகளைக் கேட்டு நிற்பதும் அதற்காகப் போராடுவதும் அவர்கள் முன்னேறுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளில்  உள்ளதாகும் என ஈரானிய புரட்சியின் அதி உயர் தலைவர் ஆயாத்துல்லாஹ் செய்யித் அலி காமனேயி குறிப்பிட்டார்.
 
தெஹ்ரானுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி ரபாயல் கொரையா தெல்காதோவை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போதே தலைவர் காமனேயி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற போராட்டங்களில் மக்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருப்பதும் அவசியம் என்று  அவர் சுட்டிக்காட்டினார். மேலும் 'லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இவ்வாறான தலைவர்கள் அமைந்திருப்பது அம்மக்களின் அதிர்ஷ்டமே' என்றும் பாராட்டினார்.
 
'எம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக பொங்கி எழுவது சிறந்த ஒரு தன்மையாக இருந்து போதிலும், இன்று பெரும்பான்மை மக்கள் அச்சுறுத்தல்களைக்; கண்டு பின்வாங்குவதையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது' என்றும் தலைவர் கவலை தெரிவித்தார்.
 
தொடர்ந்த பேசிய அவர், தங்களது உரிமைகளுக்காக வீறு கொண்டு பொங்கி எழும் விடயத்தில் ஈரான் முழு உலகிற்கும் முன் உதாரணம் காட்டியுள்ளது என்பதையும் நினைவு படுத்தினார். கொடுங்கோளன் ஷா விடமிருந்து விடுதலை பெற்றதட்குப் பிறகும் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான தீய சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைக்கு எதிராகவும் ஈரான் இடை விடாது போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில வருடங்களுக்கு முன்பு அண்டை நாடாகிய ஈராக்கினால் தமது தேசதிற்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றியும், அதைத் தொடர்ந்து சுமார் ஒன்பது ஆண்டு காலமாக ஈராக்குடன் மேற்கொள்ள நேரிட்ட யுத்தம் பற்றியும் தலைவர் காமனேயி நினைவு கூர்ந்தார்.

எக்குவெடர் நாட்டின் ஜனாதிபதி
ரபாயல் கொரையா தெல்காதோ
  
அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முன்னால் வலைந்து கொடுக்காமல் நிற்கும் பன்பை ஈரானிய மக்கள் தலைவர் இமாம் கொமேனியிடம் இருந்து கற்றதாக அவர் குறிப்பிட்டதோடு, அப் பன்பில் நிலைத்திருப்பதன் காரணமாக ஈரான் இன்று வெற்றி வாகைகள் பல சூடி வருவதையும், சர்வதேச அரங்கில்; ஈரான் ஒரு பலம் வாய்ந்த நாடாக ஏற்கப்பட்டுள்ளதையும் தலைவர் காமனேயி இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
'உண்மையில் இது போன்ற வெற்றிகளை அடைவதற்காக பெரும் விலை ஒன்றைக் கொடுக்க வேண்டி வரும் என்பதிலும் சந்தேகமில்லை. இருந்த போதிலும், அதைத் தொடர்ந்து அம்மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றியும் கண்ணியமும் அவர்கள் கொடுத்த அந்த விலை வீணானதல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.' என்றும் அவர் தைரியப்படுத்தினார்.
 
ஈரான் இஸ்லாமிய புரட்சிக் குடியரசு வீணான மோதல்களை என்றுமே விரும்பியதில்லை  என்றும் சுட்டிக்காட்டிய தலைவர் காமனேயி, இதை எவரும் ஈரான் தன்னுடைய உரிமைகள் பரிக்கப்படும் போது அமைதியாக இருந்துவிடும் என்பதற்கான சமிக்ஞை என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்.
 
இதன் போது கருத்துத் தெரிவித்துப் பேசிய ஜனாதிபதி ரபாயல் தெல்காதோ ஈரானின் மீது கடந்த முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகள் என்று தங்களைக் கூறி வருகின்ற தீய சக்திகள் இட்டு வருகின்ற தடைகளையும் அச்சக்திகளின் தூண்டதலினால் ஈராக் தொடுத்து, ஒன்பது ஆண்டுகள் நீடித்த பாரிய யுத்தத்தின் காரணமாகவும் ஈரான் நலிவடைந்து விடாது சகல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தளவு பாரிய முன்னேற்றங்களை பல துறைககளில் பெற்றிருப்பது தன்;னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய நாடு ஈரனுடன் பல துறைகளி;ல் ஒப்பந்தங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்திருப்பது தொடர்பாக தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அத்துடன் தம் இரு நாடுகளின் தலை நகரங்களில் இரு நாடுகளது தூதுவராலயங்களை  நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தன்னுடைய நாட்டில்  தொழில் திட்டங்களை ஆரம்பிக்க முன்வருமாறு ஈரானிய தொழில் அதிபர்களை கேட்டுக்கொண்டார். குறிப்பாக உல்லாசத் துறை போக்குவரத்து, விவசாயம், மர உற்பத்தி;கள், உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் போன்ற பல துறைகளில் தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எக்குவேட்டரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் சீமெந்து தேவைப்படுவதை தான் ஜனாதிபதி நெஜாத்திற்குத் தெரிவித்த போது, சீமெந்து தொழிற்சாலைகளை எக்குவெடரில் நிறுவுதற்கு தாம் ஈரானிய தொழில் அதிபர்களை ஊக்குவிப்பதாக நெஜாத் வாக்களித்தார் என்றும் ஜனாதிபதி தெல்காதோ தெரிவித்தார். அதே போன்று சுங்க சட்டங்களிலும் சில அனுகூலங்களை எக்குவெடர் விடயத்தில் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் தாம் ஆராயந்து பார்ப்பதாக நெஜாத் வாக்களித்ததையும் தெல்காதோ நன்றியுடன் குறிப்பிட்டார்.
 
இவ்விஜயத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச் சபையின் செயலாளர் நாயகம் சய்யித் ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி சந்தித்தார். அதன் போது பேசிய அவர் ஈரானுடன் தமது நாட்டிட்கு உள்ள உறவை மேம் படுத்த தாம் ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், எக்வெடர் லதின் அமரிக்க பிராந்தியத்தில் முக்கிய ஒரு நாடாக மாற வேண்டுமாயின் தமது நாட்டிட்கு ஐக்கிய அமெரிக்காவின் மூலம் ஏற்படக் கூடிய சகல இடையூறுகளுதம் நீங்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒரு நிலை எற்படுவதற்கு ஈரானைப் போன்ற, அமெரிக்காவின் சவால்களை சமாலிப்;பதில் அனுபவம் உள்ள நாடொன்றின் உறவும் துணையும் தமது நாட்டிட்கு மிகுந்த பயன் தரும் என்றும் தெரிவித்தார். மேலும் எக்வேடர் ஈரானுடன் ஏற்படுத்திக் கொள்ள என்னும் உறவு வெறும் வணிக் அடிப்படையிலானதாக மாத்திரம் இருக்காது என்றும் தெல்காதோ நம்பிக்கை தெரிவித்தார்.
 
பதில் அளித்துப் பேசிய ஜலீலீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை மேம் படுத்திக் கொள்ள ஈரான் என்றும் சித்தமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக எக்வேடருடன் பரஸ்பரம் சகல துறைகளிலும் பங்களிப்புகளை செய்து கொள்ள தெஹெரான் தயாராக இருப்பதாகவும் ஜலீலீ கூறினார்.

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் மட்டச்
 சபையின் செயலாளர் நாயகம் சய்யித்
 ஜலீலீயையும் எக்வேடர் ஜனாதிபதி
சந்தித்தார்.
  
எக்வேடர் ஜனாதிபதி தெல்காதோ இந்த பயனத்தின் போது 'மஜ்லீஸின்' (ஈரானின் பாராளுமன்றம்) சபாநாயகர் அலீ லரிஜானியையும் சந்தித்த பேசினார். அதன் போது கருத்துத் தெரிவித்த லரிஜானீ, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்வதானது ஈரானின் புதிய ராஜ தந்திர வியுகங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள விடயமாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக பொருளாதார மற்றம் கலாசார பரிமாற்றங்கள் விடயங்களில் அதிக கவனத்தை ஈரான் செலுத்த உள்ளதாகவும் அவர் விவரித்தார். எக்வேடர் ஜனாதிபதியின் ஈரான் வருகை இது தொடர்பாக ஈரான் தொடர்ந்து பெற்று வரும் சாதகமான சமிஞ்சைகளில் உள்ளதமாகும் என்றும் சபாநாயகர் மகிழ்ச்சியுடன குறிப்பிட்டார். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவை மேம் படுத்திக் கொள்ள 'மஜ்லிஸீன்'  பூரணு அனுமதி கிடைத்துள்ளதாகவும் லரிஜானி தெரிவித்தார்.
 
இதன் போது ஈரானின் அணு சக்தி திட்டம் பற்றியும் பேசப்பட்டதோடு, ஈரானின் எதிர்கால சந்ததியினரின் நலன் கறுதி இது போன்ற அதியுயர் தொழில் நுட்பங்களை அடைவதற்கு ஈரான் முடிவு செய்ததாக சபாநாயகர் ஜனாதிபதி தெல்காதோவுக்கு தெளிவு படுத்தினார்.
 
பதிலளித்துப் பேசிய எக்வேடர் ஜனாதிபதி, கடந்த பல ஆண்டுகாளக ஈரானுக்கு தரப்பட்ட இடையூறுகளை நோக்கும் போது ஈரான் அவைகளுக்கிடையே பல விஞ்ஞான மற்றம் அதியுயர் தொழில் நுட்பத் துறைகளில் பெற்றுள்ள வெற்றிகளும் நிலை நிறுத்தியுள்ள சாதனைகளும் மிக ஆச்சர்யமானவை என்று பாராட்டினார். மேலும் உலகில் பெருமதியான எதையும் இலகுவாகவோ தியாகங்கள் எதையும் செய்யாமலோ அடைந்து விட முடியாது என்பதற்கு ஈரான் ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெல்காதோ சுட்டிக் காட்டினார். 
 
மேலும், பல சாதனைகளை செய்திட்ட போதிலும் ஈரானியர்கள் மிகவும் பனிவுடனும் அடக்கத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் ஜனாதிபதி தெல்காதோ பாராட்டுத் தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளுக்கு முன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் நாட்டு விடயங்களில் அமெரிக்கா தலையிட்டு பெரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை நினைவு படுத்திய எக்வேடர் ஜனாதிபதி, தற்பொழுது ஈரான் விடயத்திலும் தன்னுடை மூக்கை நுழைக்கும் போக்கை சிறிதும் மாற்றாமல் அமெரிக்கா இடைஞ்சல் தந்த வருவது விடயமாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment