Monday, January 16, 2012

முஸ்லிம் உம்மத்தைப் பிளவுபடுத்த முயலும் சவூதிகள்

-அபூதர்;



ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கிலாஃபாஹ்; என்ற இஸ்லாமிய அமைப்பு முல்கிய்யாஹ் எனும் முடியாட்சியாக உருமாற்றப்பட்டதிலிருந்து, சட்ட விரோத ஆட்சியாளர்களின் கைகளில் "பிரிவினைவாதம்" என்பது ஒரு கருவியாக காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இன்று பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்ட விரோத ஆட்சியாளர்கள் தமது அடக்குமுறைக் கொள்கைகளிலிருந்தும் தாம் மேற்கிற்கும் ஸியனிஸ இஸ்ரவேலுக்கும் சேவகம் செய்து வருவதிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்த ஆயுதத்தை

உபயோகிக்கின்றனர்.

இன்றுவரை இத்தகைய விஷமிகளுள் முதன்;மை இடத்தை வகித்தது சவூதி அரேபியா ஆட்சியாகும். அதனைத் தொடர்ந்து குவைத். இப்பொழுது அந்த வரிசையில் சுண்டைக்காய் பஹ்ரைனும் கூட சேர்ந்து கொண்டுள்ளது. ஏனெனில் பல தசாப்தங்களாக மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு உள்ளான அந்நாட்டு மக்கள் அதன் சட்ட விரோத ஆட்சிக்கு அறைகூவல் விடுத்து வருகிறார்கள். சவூதி அரேபியா, ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யொன்றை நிறுவி, ஷீஆக்களுக்கெதிராக தக்ஃபீர் (இறைமறுப்பு) குற்றச் சாட்டுகளுடனான ஃபத்வாக்களை வழக்கமாக வெளியிட்டு வருகிறது. இத்தகைய ஃபத்வாக்களின் மூலம் ஷீஆக்களின் மீது மட்டுமல்லாமல், தமது குறுகலான அதிதீவிரக் கருத்துக்களிலிருந்து
மாறுபடும் எந்தவொரு முஸ்லிமையும் கூட ஒரு 'காஃபிர்' என உடனடியாகப் பெயர் சூட்டுவதற்கோ அல்லது பித்ஆஹ் (நூதன செயல்) மற்றும் ஏனைய 'இஸ்லாமல்லாத' செயல்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சுமத்துவதற்கோ முனைகின்றனர். சவூதிகள் மாத்திரம்தான் 'உண்மை' முஸ்லிம்கள்

என்பதுதான் இதில் பொதிந்திருக்கக்கூடிய செய்தியாகும்.
ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின்  ஆட்சியாளர்கள்
  

தக்ஃபீரி (காஃபிர்) ஃபத்வாக்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் சவூதிகள் முன்னணியிலிருக்கின்றனர். முஸ்லிம் கிழக்கின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைக் கோரி எழுச்சி பெற்றிருக்கும் பஹ்ரைன் மக்கள் 'ஷீஆக் கிளர்ச்சியாளர்கள்' என முத்திரை குத்தப்;பட்டு புறந்தள்ளப்படுகின்றனர்.


பஹ்ரைனின் விவகாரங்களில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தலையிடுவதாக குற்றஞ்சாட்டும் அளவுக்கு சவூதிகள் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சவூதி துருப்புகளும் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கக் கடற்படை யினரும் பஹ்ரைன் எங்கிலும் இரகசியமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது ஈரானைப் பற்றிய பொய்ச் செய்திகளை சவூதிகள் நாராசமாகப் பரப்புவதென்பது நமது விசேஷ கவனத்திற்குரியதாகும்.

ஈரானிற்கு எந்த வகையிலும் நண்பர்களல்லாத மேற்கத்திய அதிகாரிகள் கூட பஹ்ரைன் மக்களின் எழுச்சியில் ஈரானின் ஈடுபாட்டிற்கோ அல்லது தூண்டு தலுக்கோ எந்தவிதமான சான்றுகளையும் தாம் காணவில்லை எனக் கூறியிருக் கும் போது சவூதிகள் ஜி.ஸி.ஸி. எனும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்ஸிலை தெஹ்ரான் மீது
 கணைகளைத் தொடுப்பதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தி

வருகின்றனர்.


President Kennedy and King Faisal


சென்ற ஏப்ரல் 17ந் திகதி ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின் அச்சமடைந்த ஆட்சியாளர்கள் றியாதில் சந்தித்து ஜி.ஸி.ஸி. நாடுகளில் ஈரான் தனது 'தலையீட்டை' நிறுத்த வேண்டுமெனக் கேட்டிருக்கின்ற னர். இந்த கூட்டம், வெகு வேகமாக மோசமடைந்து வரும் யமன் நெருக்கடி யைப் பற்றி பேசுவதற்காக

Toasting King - See any Bidah?

ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் அங்கு கூடிய வெளி நாட்டமைச்சர்கள், ஈரானிற்கெதிராக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கு நேரத்தைத் தேடிக் கொண்டனர். ஆதாரமெதனையும் வழங்காமல், பஹ்ரைன் மக்களின் சட்டப்பூர்வப் போராட்டத்தை நசுக்குவதற்காக அந்நாட்டை தாம் ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைப்பதற்கான ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள சவூதிகளும் அமீரகத்தவர்களும் ஜி.ஸி.ஸி. மூலமாக 'தமது அங்கத்துவ நாடுகளுக்கிடையில் மோதலையும் அழிவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் தீய தன்மையிலான ஈரானிய தலையீட்டையும்  தூண்டுதல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் (ஐ.நா.)பாதுகாப்புக் கவுன்ஸிலும் மேற்கொள்ள வேண்டும்' எனக்

கேட்டுள்ளனர். 
 Jordan, Amman. 24th anniversary of Arab revolt under King Hussein & Lawrence, celebration Sept. 11, 1940. The march past of the Arab Legion

அந்த அறிக்கையில் ஜி.ஸி.ஸி. தனது விவகாரங்களில் எல்லாவிதமான அந்நிய தலையீடுகளையும் ஆணித்தரமாக மறுதலிப்பதாகவும், ஈரானிய ஆட்சியாளர்கள் தமது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விசேஷமாக பெரும்பான்மையான ஷீஆ மக்களைக் கொண்டிருக்கும் பஹ்ரைனை ஆக்கிரமித்து (இதனைப் போன்றே அடக்கியொடுக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படாத கணிசமான ஷீஆ மக்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருகின்றனர்) அங்கு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் களை நடத்தும் தமது வெறிச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாத சவூதிகள் இதனை முஸ்லிம் சமூகத்தின் பிரிவினைக்கான ஒரு விவகாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.


மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கோருவது எவ்வாறு ஒரு  'பிரிவினைவாத'ப் பிரச்சினையாக மாறும்? சவூதிகள் ஹுஸ்னி முபாரக்கை (எகிப்தில்) பதவியிலிருந்து நீக்கியதற்கும் கூட எதிர்ப்பு தெரி வித்திருந்தனர். ஏனெனில் அதன் காரணமாக மக்கள் சவூதி அரசாட்சியில் அதேபோன்று உரிமைகளைக் கோருவார்களாயின் தமது சுயரூபம் வெளிப்பட்டு விடும் என அவர்கள் கருதினர்.


உண்மை இதுதான். முபாரக்கைத் தூக்கியெறி வதில் பிரிவினைவாதமும் சம்பந்தப்பட்டிருந்ததா என்றால் மிகத் தெளிவாக இல்லையென்றே கூறவேண்டும். அவ்வாறென்றால் பஹ்ரைனியர்கள் தமது உரிமைகளையும் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கோரி வருவதை எவ்வாறு அவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக வகைப்படுத்த முடியும்?


 சவூதிகள் தாம் பல பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக உணர் கின்றனர்;;. ஆம் அது உண்மைதான்: அவர்களின் ஆட்சி சட்ட விரோதமான தாகும். மேலும், அவர்களது கொள்கைகள், முஸ்லிம் உம்மத்தின் பெரும் நலன்களுக்கு மிக

மோசமான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன.



சவூதிகளும் உதவிக்கு ஒருவரையொருவர் பற்றிப் பிடித்திருக்கும் பீதி கொண்டுள்ள அவர்களின் ஜி.ஸி.ஸி. பங்காளிகளும் வெறுமனே 'சர்வதேச சமூகத்திற்கும் பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கும்' கோரிக்கை விடுப்பதைக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருக்கும் தமது  ஆட்சிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் திருப்தியடையவில்லை. இந்த கோரிக்கைகள் அதிகமான நேரடி உதவி களைக் கிடைக்கச் செய்யாது என்பது அவர்களுக்குத் தெரியும். மேற்கத்திய ஆதரவு என்பது நட்புரீதியான அரசுகளுக்குக் கூட சில வரம்புகளைக் கொண்டதாகவே இருக்கும். ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கெதிரான தமது வாதத்திறனை ஓங்கி ஒலிக்கச் செய்தாலும் அல்லது தமக்கு இடர் விளை விப்பதாக சவூதிகள் வேறெவரையும் கருதி குற்றஞ் சாட்டினாலும் கூட அமெரிக்கர்களும் அவர்களின் கூட்டாளிகளும் தாம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பெற்ற அனுபவத்தினால் இன்னுமொரு கண்ணி வெடிக்களத்தில் கால் மிதிப்பதற்கு அவசரப்பட மாட்டார்கள்.


A photo which speaks a thousand words.
Ex-President Bush with Prince Bandar Sultan.
 அதிகப்பட்சமாக என்ன நடக்கு மென்றால், மேற்கு நாடுகள் பஹ்ரைன் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்று இந்த நாடுகளில் இடம்பெறும் எந்தவொரு எழுச்சிக்கும் ஆதரவளிக்காமலிருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.
இது அந்த அரசுகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தரக்கூடும். ஆயினும், சவூதிகள் இதனைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டனர். முஸ்லிம் உம்மத்தை பல பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் தமது மிக விருப்பத்திற்குரிய சதி வேலையில் இறங்கி விட்டனர். அவர்கள் தமது அரசவை ஆலிம்களை பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்ய வைத்து, ஆங்காங்கே 'ஸஹாபாக்களைப் பாதுகாக்கும்' கவுன்ஸில்களையும் அமைப்புகளையும் நிறுவுவதற்கு முஸ்லிம் சமூகங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


Shaikh Abdur Rahman Al-Sudais, the Imam of Haram in Makkah,
on a visit Darul Uloom Deoband on 25 March 2011.

 உதாரணமாக முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதப் பிணக்குகளைத் தோற்றுவிக்கும் சவூதி அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை போகும் விதத்தில் அங்குள்ள முஸ்லிம்களைச் சிக்க வைத்துக் கொள்வதற்காக, மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் ஷேய்க் சுதைஸ் என்பவர் அண்மையில் இந்தியா வந்திருந்தார்.


Sheikh Sudais addressing at JIS, India.
 முஸ்லிம்கள், மக்கா-மதீனா ஆகியவற்றுடன் பெரும் பிணைப்பைக் கொண்டிருப்பதால் அங்குள்ள இமாம்கள் மிகுந்த மரியாதையுடன் நோக்கப்படுகின்றனர். அவர்களின் இனிமையாக குர்ஆன் ஓதும் திறனை முஸ்லிம்கள் பலர் மெச்சுகின்றனர். ஆனால் இந்த இமாம்களை இத்தகைய இழிவான கொடிய நடவடிக்கை களுக்குப் பயன்படுத்திக் கொளவதென்பது துக்ககரமானதொன்று மட்டுமன்றி அபாயகரமானதும் கூட. இந்த இமாம்கள், கறைபடிந்த இஸ்லாம் விரோத சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் தம்மைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்ப தென்பது அதே அளவில்
மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.
நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்: ஸஹாபாக்கள் அல்லது உம்மஹாத்துல் மூஃமினீன் (உண்மை விசுவாசிகளின் தாய்கள் என அழைக்கப்படும் அல்லாஹ்வின் இறுதித் திருத்தூதர் அவர்களின் மனைவியர்) மீது அவமரியாதையோ அவதூறோ கற்பிக்கக்கூடாது.



Ronald Regan with King Fahd-Meeting of long lost buddies.
 ஆயினும் சவூதி ஆளும் வர்க்கத்தினரும் அரசவைப் பிரச்சாரகர்களும் இதனைக் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருப்பார்களாயின் அவர்கள் ஏன் அந்தப் பணியைத் தமது நாட்டினுள்ளேயே துவங்கக்கூடாது எனக் கேட்க நாம் கட்டாயப்படுத்தப் படுகிறோம்? ஸஹாபாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கு சவூதிகள் புதுமை யானதோர் உணர்வைக் கொண்டிருக்கின்றனர்;  அவர்கள் பெரும்பாலான இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை அழித்து நாசப்படுத்தி விட்டனர்.

உண்மையில் அவர்கள் மக்கா-மதீனாவின் இரு ஹரம்களின் உள்ளிலும் சுற்றிச் சூழவும் கொங்கிரீட்டாலும் கண்ணாடியினாலும் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டும் தமது கடுமையான-கட்டுக்கடங்காத உலகாயத உந்துதலின் காரணமாக, திருத்தூதர்(ஸல்)அவர்களுடனும் அவர்களின் (தோழர்களான) ஸஹாபாக்

களுடனும் தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள்

உள்ளடங்கலாக, இஸ்லாமிய வரலாற்றின் எல்லா தடயங்களையும்

முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டனர்.

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், திருநபி(ஸல்)அவர்கள் கதீஜா நாயகியுடனான தங்கள் 25ஆண்டுகள் பெருமகிழ்ச்சி கொண்ட மண வாழ்க்கை யை நடத்திய வீடு இன்று ஒரு மலசலக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது! இந்த சவூதி-வஹ்ஹாபிகள் நபியவர்களுக்கும் அவர்களுடைய அன்பு மனைவி மற்றும் குடும்பத்திற்கும் எவ்விதமான மரியாதையை வழங்குகின்றனர் பார்த்தீர்களா? மஸ்ஜிதுன்னபவியில் நபி(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீதமைந்துள்ள பச்சை நிற குவிகை மாடம் கூட நஜ்த் பிரதேசத்திலிருந்து கிளம்பிய இந்த பழங்கால காட்டரபி நாசகாரக் கூட்டத்திடமிருந்து பாதுகாக்கப்பட்டதாகத் தெரிய வில்லை! இந்த பச்சை குவிகை மாடத்தை உடைத்தெறிவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனித உடலை இங்கிருந்து அகற்றுவதற்கும் திட்டமிடப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மாநபி முஹம்மது(ஸல்)அவர்களை சவூதிகள் அவமதிப்பதையும்,  சவூதி குடும்ப ஆட்சியின் கேடுகெட்ட தன்மையையும் நிரூபிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இதனை விட வேறென்ன ஆதாரம்

தேவையிருக்கிறது?
ஷேய்க் சுதைஸ் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்குப் பறந்து சென்று தெளிவான நிரூபணமில்லாத ஒரு கருத்தின் மீது மக்களின் மனோவுணர்ச்சி களை கொந்தளித்து எழவைப்பதற்கு பதிலாக ஏன் சவூத் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிச்சாட்டிய அசுத்தப்படுத்தும் பணிகளுக்கு எதிராக-அவை நம் கண் முன்னால் நன்றாகவே புலப்பட்டுக் கொண்டிருக்கும் போது–தனது உரத்த குரலை எழுப்பக்கூடாது? தனது மாண்புமிகு அந்தஸ்தை பயன்படுத்தக்கூடாது?


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் இமாமுக்கு, முஸ்லிம் கிழக்குப் பிராந்தியத்தில் தங்களின் உரிமைகளுக்காகவும் அந்தஸ் திற்காகவும் போராடி வருகின்ற மக்கள் மீது கொஞ்சங்கூட அனுதாபமில்லை என்ற போதிலும் (அவ்வாறு அனுதாபப்படாமலிருப்பதற்கு எந்தக் காரணமு மில்லை) சவூதிகளின் இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் அழித்தொழிக்கும் கொள்கை மற்றும் செயல்திட்டம் குறித்து இவர் மௌனம் சாதிப்பதற்கு என்ன நியாயத்தைக் கூறப்போகிறார்? லிபியாவின் கத்தாபிக்கு எதிரான சிலுவை யுத்தத்தில் தான் இணைந்து கொண்டது போன்று, சவூதி அரசு ஏன் பாலஸ்தீனில் அடக்கியொடுக்கப்படும் மக்களுக்கு உதவ முன் வரவில்லை? சவூதிகளின் நயவஞ்சகத்தனமும் காஃபிர்களுடனான உறவுகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை மனப்பாங்கும் அளவு கடந்தவையாகும்.

இத்தகைய சங்கை பொருந்திய புனிதத்தலங்களின் இமாம்களாக இருப்பத னால் தமக்குக் கிடைக்கும் பெயரையும் அந்தஸ்தையும் உலமா எனப்படும் இந்த மார்க்க அறிஞர்கள் 'இஸ்லாத்திற்கு எந்த நாசம் ஏற்பட்டாலும் பரவா யில்லை- நபி(ஸல்)அவர்களினதும்; ஸஹாபாக்களினதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்த பங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை' என்ற கொள்கை யோடு தமது சொந்த சட்ட விரோத ஆட்சியைப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும் கறைபடிந்த களங்கப்பட்ட சவூதி அரசாட்சியின் கருவி களாகப் பயன்படுத்தப்படுவதைக் காணக் கவலையாயிருக்கிறது.


மஸ்ஜிதுல் ஹராம் அல்லது மஸ்ஜிதுன்னபவியின் எந்தவொரு இமாமும் கூட சவூதி துருப்புகள் பஹ்ரைனில் மஸ்ஜித்களைத் தகர்த்தழிப்பதைப் பற்றியோ அல்லது புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுட்டெரிப்பதையும் அசிங்கபபடுத்துவதையும் பற்றியோ தன் குரலை எழுப்பியதில்லை என்ற விஷயம் நம் மனதுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. இந்த இமாம்கள் நடைபெறும் சம்பவங் களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதா அல்லது இந்த படுபாதகங்களுக்கு இவர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்ற முடிவுக்கு வருவதா? எந்த வகையில் பார்த்தாலும், அவர்களின் பண்புநலனிற்கும் நடத்தைகளுக்கும் நல்லதொரு பிரதிபலிப்பாக இதனைக் கருதமுடியாது.


பஹ்ரைனிலோ, யமனிலோ, சவூதி அரேபியாவிலோ –முஸ்லிம் கிழக்கின் எந்தப் பிரதேச மக்களின் சட்டப் பூர்வமான அபிலாசைகளுக்கெதிரான தீய பிரச்சார நடவடிக்கைகளில் ஒரு கருவியாகச் செயல்படுவதை விடச் சிறந்த செயலை முஸ்லிம்கள் இத்தகைய உலமாக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆட்டங்களுககான நேரம் முறறுப் பெற்றுவிட்டது. சவூதி அரேபியாவைச் சார்ந்த உலமாக்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்கட்டும். சுய கௌரவத்திற்கும் சுதந்திரத்திற்கும் வேண்டி போராடும் முஸ்லிம் பொது மக்களின் பக்கம் அவர்கள் இருக்கின்றனரா? அல்லது குஃப்ர் (இறைமறுப்பு), நிஃபாக்(நயவஞ்சகம்), ளுல்ம் (அநியாயம்) ஆகியவற்றின் சக்திகளுக்கு ஊழியம் செய்யும் மாசு படிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான (சவூதி) ஆட்சியாளர்களுடன் அவர்கள் இருக்கின்றனரா?

CRESCENT INTERNATIONAL MAY 2011  (புனைப் பெயரில் பத்தி எழுதும் இஸ்லாமிய இயக்கத்தின் மூத்த அறிஞரான இந்த கட்டுரையாளரின் ஏனைய ஆக்கங்களைக் காண கீழ்க்காணும் வலைத்தளத்திற்கு செல்லுங்கள்:
 www.muslimedia.com/archives/abudharr.html

 

No comments:

Post a Comment