(அன்பு வாசகர்களே அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த பதிவில் பார்த்ததை போல் இத்தொடரில் முதலாவதாக ஜாபர் பங்காஷ் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம். வரலாற்றின் இன்னொரு பக்கமும் வாசகர்கள் முன்னால் வைக்கப்பட வேண்டும் எனும் உந்துதலாலேயே இக்கட்டுரையை வெளியிடுகிறோம்)
சுவூத் பரம்பரையின் ஜாஹிலியத்தான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்.
Zafar Bangash
-ஜாபர் பங்காஷ்-
அரேபியாவின் சுவூத் குடும்பம்இ இஸ்லாத்தின் மீதும் அதன் வரலாற்றுத் தலங்களின் மீதும் இழைத்துள்ள மிகப் பெரிய அளவிலான சேதங்களுக்குப் பிறகும்இ முஸ்லிம்களுள் பலர் அவர்களின் உண்மையான தன்மையென்ன என்பதைப் பற்றியும், அவர்கள் பிரச்சாரம் செய்துவரும் விஷக் கொள்கையைப் பற்றியும், அக்கறை செலுத்த மறந்தவர்களாகக் காணப்படுகின்றனர். ஹரமைன் எனச் சொல்லப்படும் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனித நகர்களின் பரிசுத்தத்தன்மை, அரேபிய தீபகற்பத்தின் இன்றைய ஆட்சியாளர்களின் குடும்பத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்துள்ளதெனக் கருதும் முஸ்லிம்களின் அப்பாவித்தனமான நம்பிக்கையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமிற்கும் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீக்கும் சுற்றுப் பகுதியில் நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் சமீபத்தைய நிகழ்வுகள்தான் என்ற போதிலும், முஸ்லிம்கள் சிலரின் மனங்களில் அவை வியப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் லாஸ் விகாஸ், மற்றும் நியூயோர்க்கின் மறுபிரதிபலிப்புகளாக, மக்காவையும் மதீனாவையும் இந்த பளபளப்பான புதிய கண்ணாடி மற்றும்காங்கிரீட்டிலான கோபுரங்களாக மாறி வருவதை முன்னேற்றத்தின் அடையாளங்களென்று சவூதிப் பிரச்சாரகர்கள் உலகெங்கிலும் ஆர்வத்தோடு மக்கள் முன்னெடுத்து வைக்கின்றனர்.
மக்களினால் மிகவும் குறைவாக விளங்கப்படும் விஷயம், இத்தகைய திட்டங்களினால் ஏற்படும் நஷ்டம் பற்றியதாகும். அது டாலர்களின் கூட்டுத் தொகையில் அல்லாமல், இஸ்லாமிய வரலாற்றுத் தலங்கள் மொத்தமாக அழித்தொழிக்கப்படுவதால் ஏற்படும் நிரந்தமான இழப்பைக் கொண்டு கணக்கு பார்க்கப்பட வேண்டும். இன்னுஞ் சில தசாப்தங்களில்இ இஸ்லாமிய வரலாறுஇ அதன் வரலாற்றுத் தலங்கள் அல்லது அல்லாஹ்வின் தீனைப் பூமியில் நிலை நிறுத்துவதற்காக மாநபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட கடும் பிரயத்தனங்கள் மற்றும் போராட்டங்களுடனான இரு ஹரம்களின் தொடர்பு ஆகிய எவையுமே உண்மையில் பூமியின் மீதிருந்து காணப்படாமலாகிப் போய் விடக் கூடும்.
மக்காஇ மதீனா ஆகிய இரு புனித நகரங்களும் அமைந்திருக்கும் ஹிஜாஸ் பிரதேசத்தில் அல்லாமல், மத்திய அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தின் ஓர் ஒதுக்குப்புற மூலையிலிருந்து தோன்றிய இந்த சுவூத் கோத்திரம்இஎவ்வாறு இரு புனிதத் தலங்களையும், அரேபிய தீபகற்பம் முழவதையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது? இஸ்லாத்தைத்; 'தூய்மைப்படுத்து கிறோம்;' என்ற பெயரின் கீழ் நஜ்திலிருந்து கிளம்பிய இந்த நாடோடி அரபிக் கூட்டத்தினர்இ அதற்காக இழைத்த சதிகளும் கபடச் செயல்களும்இ தந்திரங்களும்இ மோசடிகளும், வர்ணனைக்குள் அடங்காத காட்டுமிராண்டித்தனமான கொடூரச் செயல்களும் பற்றிய வரலாறு மிகவும் இழிவானதாகும். அவர்களின் இந்த குறிக்கோளுக்கும் திட்டத்திற்கும், சென்ற நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி துவக்கம்இ பிரிட்டிஷாரிடமிருந்தும் கூட அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வந்தது.
குல மற்றும் கோத்திர ஆணிவேர்களும் குறுகிய மார்க்கச் சிந்தனைக் கொள்கையும்
ரியாத்திற்கு வடக்கே இருந்த ஒரு பிற்போக்கான கோத்திரப் புறவிடமான தரிய்யாவைச் சேர்ந்த சுவூத் குடும்பம்இபாலைவன நிலப்பரப்பில் சிறு சிறு புள்ளிகளைப் போல் காணப்பட்ட பல கோத்திரங்களுள் ஒன்றாகும். அக் காலங்களில் இருந்த பல கோத்திரங்கள் மற்றும் குலங்களைப் போன்று, இவர்களும் ஏனைய கோத்திரங்களைச் சேர்ந்தவர்களையும், ஹஜ் பயணிகளின் காரவான்களையும் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். சவூதிகள் இன்று ஹஜ் பயணிகளைக் கொள்ளையடிப்பதற்கு மிகவும் புதுமையான வழி முறைகளைக் கையாண்டு வருகின்றனர். எது எவ்வாறிருந்த போதிலும்இ அவர்களின் கொள்ளையடிக்கும் நடைமுறை இன்றும் தொடர்ந்தே வருகின்றது. நாடோடி அரபிகளுக்கு மத்தியில், மக்களைக் கொலை செய்வதும், அவர்களின் பெண்களைக் கவர்ந்து கொள்வதும் சாதாரணமான நடைமுறையாகும். சவூதிகளின் பரம்பரை, பனூ ராஷித், பனூ ஹாஷிம், பனூ காலித் போன்ற பலவற்றை உள்ளடக்கியஇமிகப் பழைமை வாய்ந்த பல கோத்திரங்களுள் ஒன்றாகும். அவர்கள் எல்லாருமே ஆளும் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்காக தங்களுக்குள் போட்டி போட்டனர்.
கி.பி.1744ல் அரேபியத் தீபகற்பத்தின் மீது மட்டுமல்லாமல் முழு முஸ்லிம் உலகின் மீதும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையான நிகழ்வொன்று இடம் பெற்றது. சுயமாகத் தம்மை ஓர் இஸ்லாமியப் பிரச்சாரகராகவும் காழி(நீதிபதியாகவும்) அறிமுகப்படுத்திக் கொண்ட முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (கி.பி.1703-1792) என்பவர், தரிய்யாவுக்கு வந்து, சுவூத் கோத்திரத்தின் தலைவரான முஹம்மது இப்னு சுவூதுடன் கூட்டுறவை, ஓர் ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம் ஏற்படுத்திக் கொண்டார். இது மிக ஆற்றல்வாய்ந்த–வலிமை பொருந்தியதோர் இணைப்பாக அமைந்தது.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் எதனைப் பிரச்சாரம் செய்தார் என்பதை விளங்கிக் கொள்வது முக்கியமானதாகும. அல்லாஹ்வின் ஏகத்துவத்தை - தவ்ஹீதைப் பற்றிய கருத்தோட்டத்தை முன்னெடுத்துச்
 |
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின்'தவ்ஹீத்' பற்றிய நூல்இ சிலசமயங்களில்'தவ்ஹீதைப் பற்றிய மூன்று கட்டுரைகள்' என்ற பெயரிலும் தரப்படுகிறது. 1980களில்இ சவூதி அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 'அறிவை இஸ்லாமியப்படுத்துதல்' காலப் பகுதியில்இ இதுவும் ஏனைய பாட நூல்களும்இ பாலஸ்தீனக் கல்வியாளர் இஸ்மாயீல் அல் ஃபாரூக்கியினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தன. |
செல்வதை அவர் நோக்கமாக கொண்டார். ஓவ்வொரு முஸ்லிமும் தவ்ஹீதில் நம்பிக்கை கொண்டுள்ளான்; ஈமான் எனப்படும் மார்க்க நம்பிக்கை-கடப் பாட்டின் அடிப்படையான தூணாக இது இருக்கிறது. அவர் செய்தது என்ன வென்றால், அவர் ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொரு நடைமுறையையும் ஷிர்க் (அல்லாஹ்வின் இடத்தில் வேறு எவரையும் ஒப்பானவனென்றோ இணையானவனென்றோ கருதுவது) என வெளிப்படையாகக் குற்றஞ் சாட்டினார். அவர் எந்தெந்த காரியங்கள் ஒரு முஸ்லிமைஇ ஒரு காஃபிராகவோ அல்லது முஷ்ரிக்காகவோ மாறச் செய்யும் எனக் குறிப்பிட்டுஇசெயல்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தார். (இதற்கு ஓர் உதாரணத்தைக் காண விரும்புவோர்இ முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபினால் எழுதப்பட்ட 'மஜ்முஆ அத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்து ஹமத் இப்னு அதீக் அல் நஜ்தீயினால் தொகுக்கப்பட்ட 'பயான் அந் நஜா வல் ஃபகாக் மின் முவாலாத் அல் முர்தத்தீன் வ அஹுப் அல் ஷிர்க் -ரிஸாலாஹ் அல் தானியா அஷராஹ்'வைப் பார்க்கலாம்.)
இவ்வாறாக, இறந்து போனவர்களுக்காகப் பிரார்த்திப்பதற்கு அவர்களின் அடக்கத் தலங்களுக்கு செல்லும் முஸ்லிம்கள், ஷிர்க்கைச் செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அதன் காரணமாக கொலை செய்யப்படுவதற்குரிய இலக்குகளாகக் கருதப்பட்டனர். இதனைப் போன்றே, மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களுக்கோ அல்லது ஆன்மீக நிலைகளுக்கோ மரியாதை காட்டிய முஸ்லிம்கள், முஷ்ரிக்குகள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டனர். அவர்களும் கொலை செய்யப்படுவதற்குரிய சட்டப்பூர்வமான இலக்குகளாகக் கணிக்கப்பட்டனர். அல்லாஹ்வின் மகத்தான தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பகீ அடக்கத்தலத்திற்கு விஜயம் செய்து, இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து வந்ததை ஒவ்வாததென, இந்த அறிவு மங்கலான, அதிதீவிர கொள்கை வெறியர்கள் புறந்தள்ளினர். இன்றும் அதனைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களைப் பொறுத்த வரையில், 'ஸஹாபாக்கள் (நபித் தோழர்கள்), தாபியீன்கள் (ஸஹாபாக்களை அடுத்து வந்தவர்கள்), அதனைத் தொடர்ந்து வந்த சந்ததியினர்கள், திருநபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து 1,100 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்கள் ஆகியோர், இஸ்லாத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மாத்திரமே இறுதியாக உண்மையான இஸ்லாத்தைக் கண்டுபிடித்துத் தந்தார். எனவே, இந்த வஹ்ஹாபி கொள்கை ஒன்று மட்டுமே தூய்மையானதும் சரியானயானதுமான கொள்கையாகும்!'
இந்த அசாதாரணமான கொள்கை பொதுவாகவே'வஹ்ஹாபியத்' எனக் குறிப்பிடப்பட்டாலுங் கூட அதுவொரு துரதிர்ஷ்டவசமான பெயர் சீட்டாகும். அவரது தந்தை அப்துல் வஹ்ஹாபும், சகோதரர் சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாபும் நல்ல முஸ்லிம்களாவர். முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாபின் அர்த்தமற்ற உளறல்களையும் இஸ்லாத்தின் குறுகிய விளக்கங்களையும் அவர்களிருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால், சுலைமான் தனது சகோதரரின் மிக மோசமான முற்றிலுங் கடூரமான கருத்துக்களை 'அல் ஸவாய்க் அல் இலாஹிய்யாஹ்' எனும் ஆய்வு நூலில் தவறானவையென எடுத்துக் காட்டியிருக்கிறார். வஹ்ஹாபிகளை அவர்களின் அறிவுக்குப் பொருந்தாத நிலைப்பாடுகளுக்காக சுலைமான் கடிந்து எழுதுகின்ற போது பக்கம் 54-ல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'மக்களின் மார்க்க நம்பிக்கையை, எந்தளவுக்கு அவர்கள் உங்களுடன் உடன்பட்டிருக் கின்றனர் என்பதைக் கொண்டும், அம்மக்களின் மார்க்க அவநம்பிக்கையை, எந்தளவுக்கு அவர்கள் உங்களுடன் உடன்படாமலிருக்கின்றனர் என்பதைக் கொண்டும் மட்டுமே நீங்கள் கணிக்கின்றீர்கள் அல்லது அளவிடுகின்றீர்கள்!'
சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாப் எழுதிய இந்த நூல் இன்று உலகிலுள்ள பல முக்கிய முஸ்லிம் நகரங்களில் கிடைக்கப் பெறுவதில்லை என்பது நமது கவனத்திற்குரிய ஒரு செய்தியாகும். சவூதிகள், தமது கணிசமான செல்வம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அத்தகைய நூல் பிரதிகள் எங்காவது விற்பனைக்கு வந்தவுடனேயே, அவற்றைக் காணாமல் போய் விடச் செய்வதை எப்போதும் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றும் அதனையே செய்து வருகின்றனர். இதற்கு எதிரிடையாக, இஸ்லாத்திற்கான குறுகிய விளக்கங்களை மக்கள் முன்னெடுத்துச் செல்லும் சவூதிகளின் நூற்களை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டு, அவற்றைப் பரவலாகக் கிடைக்கச் செய்தும்இ தமது சம்பளத்தில் வேலை பார்க்கும் ஏஜெண்ட்கள் மற்றும் தாஇக்கள் எனப்படும் பிரச்சாரகர்கள் ஆகியோர் மூலம் இலவசமாக விநியோகம் செய்தும் வருகின்றனர்.
பெரும்பாலான நாடோடி அரபிகளைப் போலவேஇமுஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாபும் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தார். ஆனால், ஏனையவர்களைப் போலல்லாமல், வெறுமனே உணவை அல்லது தண்ணீரைத் தேடிப் போகவில்லை. இவர் அறிவைத் தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கிழக்கை நோக்கி திரிந்து, இவர் பாரசீக வளைகுடாவிற்கு சென்றிருக்கிறார். இவருடைய பிறந்த பூமியான நஜ்தைப் போலல்லாமல், இந்தப் பிரதேசம் வெளியுலகுடன் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக, பல்வேறு இனங்களையும் இடங்களையும் சார்ந்த மக்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சில காலத்திற்கு முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் சூபித்துவத்தில் ஈடுபாடு காட்டினார். ஆயினும் இவர் இறுதியில், இவரோடு தொடர்புபடுத்தப்படும் ஒரு குறுகிய (வஹ்ஹாபி) கொள்கையின் மிகக் கடூரமான விளக்கங்களைச் செயல்படுத்தத் துவங்கினார். பொதுவாகவே, 14ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞரான இமாம் இப்னு தைமிய்யாவின் செல்வாக்கினாற்றான் இவருடைய கருத்தியல் உருப்பெற்றது எனக் கருதப்பட்டாலும், அது தவறானதோர் ஊகமாகும். இந்த வஹ்ஹாபிகள், தமது குறுகலான சிந்தனைக்கு உடன்படக் கூடிய இப்னு தைமிய்யாவின் மார்க்கத் தீர்ப்புகளைப் பயன்படுத்துகின்றனர். அதேவேளை, மற்றவற்றைப் புறக்கணிக்கின்றனர், இவர்கள் தமது தீவிரவாதக் கருத்துக்களுக்குச் சட்டப்பூர்வமான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்காக இப்னு தைமிய்யாவின் பெயரை உபயோகப்படுத்துகின்றனர். மேலும் இவர்கள், தக்லீத்(மார்க்க விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட அறிஞரின் அபிப்பிராயத்தைப் பின்பற்றுவது) கூடாது எனக் கண்டனஞ் செய்யும் அதே நேரத்தில், எல்லா முஸ்லிம்களும் தமது தீவிரவாத விளக்கங்களைப் பின்பற்ற வேண்டுமென்றும், அவ்வாறில்லையென்றால் அவர்கள் காஃபிர்கள் என்பதால்இகொல்லப்பட வேண்டுமென்றும் மிக அழுத்தமாக கூறி வருகின்றனர்.

ரியாதையும் நஜ்த் பிரதேசத்தின் பெருவாரியான பகுதிகளையும் சார்ந்த அறிஞர்கள் பலர்இ முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபுடைய கருத்துக்களை மார்க்கத்திற்கு மாறானவையென்றும் இஸ்லாத்திற்குப் புறம்பானவையென்றும் ஒதுக்கித் தள்ளினர். ரியாதைச்;சேர்ந்த ஆலிம்களினால் வெளிப்படையாகக் கண்டனத்திற்குள்ளானதை அடுத்துஇ இவர் தரிய்யாவுக்கு தனது ஜாகையை மாற்றிக் கொள்ள வேண்டி நேர்ந்தது. இங்கு இவருடைய கருத்துக்களுக்கு காது கொடுப்பதற்கு முஹம்மது இப்னு சுவூத் இருப்பதைக் கண்டு கொண்டார்.
இவர்களிருவரும் ஒரு கூட்டணியைத் தமக்கிடையில் அமைத்தனர். அது முழு உம்மத்திற்குமே ஆபத்து விளைவிப்பதாக அமைந்து விட்டது.
சுவூத் கோத்திரத்தின் தலைவரான முஹம்மது இப்னு சுவூதிற்கு எதிரி கோத்திரங்கள் மற்றும் இனங்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அவர்களை அடக்கியாள்வதற்கான தனது குறிக்கோளையும் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு ஒரு மார்க்க ரீதியான ஊன்றுகோல் தேவைப்பட்டது. அதே வேளைஇபிரச்சாரகர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கு தனது குறுகலான கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதற்கு ஒரு கூட்டமும் வாள்களும் தேவைப்பட்டது. இந்த சுவூத் நாடோடிக் கோத்திரத்தினர், இப்போது ஒரு தீவிரவாதக் கொள்கையை உள்ளீர்த்துக் கொண்டு தரிய்யாவிலிருந்து கி.பி.1745-ல் திடீரென வெளிக்கிளம்பி, வெகு சீக்கிரத்தில் ரியாதைக் கைப்பற்றினர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை எதிர்த்து வந்த, ரியாதிலும் ஏனைய இடங்களிலுமிருந்த இஸ்லாமிய அறிஞர்கள் எவ் வித விசாரணையுமின்றி மரண தண்டனைக்குள்ளாகினர். இவர்களின் அசலான வாழையடி வாழையான கொடூரமும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் விரைவில் நஜ்த் பிரதேசம் முழுவதையும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த சுவூத்-வஹ்ஹாபி கூட்டணிஇ அதன் பின்னர் மேற்கே ஹிஜாஸை நோக்கியும்இ கிழக்கே கர்பலா, கூஃபாஇபக்தாத் ஆகிய நகரங்களை நோக்கியும் பரவிச் செல்லத் தலைப்பட்டது.
கி.பி.1762-ல் முஹம்மது இப்னு சுவூத் மரணமடைந்தார்.அவருடைய மகன் அப்துர்ரஹ்மான் அவரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். ஆயினும், பிரச்சாரகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், இன்னும் 30ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். 1803 மற்றும் 1804-ல், கர்பலாவிலும் கூஃபா விலும் ஆயிரக்கணக்கான ஷீஆக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இமாம் ஹுஸைன் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் பள்ளிவாசலையும் கூட இடித்துத் தள்ளினர். இந்த சுவூத்-வஹ்ஹாபி வெறியர்கள், தமது தீவிரவாதக் கருத்துக் களுக்கு இணக்கமில்லாத- உருச்சிதைந்த- திரிக்கப்பட்ட ஓர் இஸ்லாமியத் தூதைப் பரப்புகிறார்கள் எனக் குற்றஞ் சுமத்தி, பக்தாதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்களைக் கூட கொன்று குவித்தனர். அந்த அறிஞர்களின் குழந்தைகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஏனென்றால்இ அவர்கள் வளர்ந்து தம் பெற்றோர்களைப் போன்று 'மார்க்கத்தை மறுப்பவர்கள்'ஆகி விடுவார்களாம்!
மக்காவிலும் மதீனாவிலும் இதே போன்ற அழிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த சுவூத் - வஹ்ஹாபி வெறியர்களைப் பொறுத்த வரைஇ தமது குறுகலான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு முஸ்லிமும் 'இஸ்லாத்தை மறுப்பவன்' (காஃபிர்) ஆவான்.எனவேஇ அவனைக் கொல்வது நியாயப்பூர்வமானது மட்டுமன்றி கட்டாயக் கடமையுமாகும்.
கி.பி.1802-ல்இ மக்காவிற்கு தென்கிழக்கில் 40 கி.மீ. தூரத்திலிருக்கும் ஒரு நகரான தாயிஃபைத் தாக்கினர். அங்குள்ள மக்கள் அதனை எதிர்த்த போதுஇ இந்த கொள்ளைக்கார-சூறையாடும் கூட்டம்இ தன்னால் கைப்பற்ற முடிந்த ஒவ்வொரு நகரவாசியையும் கொன்றது. தாயிஃப் படுகொலைப் படலம் பற்றிய செய்தி மக்காவையும் மதீனாவையும் சென்றடைந்த போது, அம்மக்கள் இந்தக் காட்டுமிராண்டி முரடர்களுக்கு தம் கதவுகளைத் திறந்து கொடுத்தனர். இதன் மூலம்இ தாயிஃப் வாசிகளுக்கு நிகழ்ந்த விதிப் பலனிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என அவர்கள் நம்பினர். ஆனால், நஜ்தைச் சேர்ந்த இந்த காட்டுமிராண்டிகளை அத்தகைய சைகைகள் கவரவில்லை. மக்காவையும் மதீனாவையும் சேர்ந்த 'காஃபிர்'களுக்கு எதிராக தம் இரத்தத் தாகத்தைத் தணித்துக் கொண்ட பின்னர்இ இவர்களின் கவனம் மார்க்கப் புனிதத்தலங்களின் மீதும், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுத் தலங்களின் மீதும் திரும்பியது. 'ஜன்னத்துல் பகீ' அடக்கஸ்தலம் குறிப்பாக அவர்களின் சீற்றத்திற்கான ஓர் இலக்காக ஆனது.
உதுமானியத் துருக்கியர்கள்இ முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் என்ற வகையில்இ இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். இலகுவாக அடையாளங் காண்பதற்காகஇ நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் நபியவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், இன்னும் உம்மஹாத்துல் முஃமினீன் (விசுவாசி களின் தாய்மார்) எனப்படும் நபியவர்களின் மனைவியர் ஆகியவர்களின் மண்ணறைகளுக்கு மேலால் குவிகை மாடங்களை அவர்கள் கட்டியிருந்தனர். ஆயினும்இ இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினர்இ 'இவை ஷிர்க்கிற்கு இட்டுச்செல்லும்' என கூறிஇஅத்தனையையும் இடித்துத் தள்ளினர். மேலும்இ 'ஜன்னத்துல் பகீ' அடக்கஸ்தலத்தையும் நாசப்படுத்தினர். பகீ அடக்க ஸ்தலத்தையோ அல்லது உஹது யுத்தத்தில் ஷஹீதான வர்களின் கப்றுகளையோ முஸ்லிம்கள் தரிசிப்பதனால் அவர்கள் முஷ்ரிக்குகளாக ஆகும் அபாயம் இருக்கிறதென இவர்கள் கூறினர்!
சுவூத் - வஹ்ஹாபிக் கூட்டத்தினருடனான நடப்புகள்

தாயிஃப்இ மக்காஇ மதீனாப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமியத் தலங்களின் மீதான இந்த சுவூத்- வஹ்ஹாபி கூட்டணியின் நாச வேலைகள்இ அசிங்கமான நடத்தைகள் பற்றிய செய்திகள்இ இஸ்தன்பூலில் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதின் காதுகளுக்கு எட்டிய போதுஇ அவர் மிகுந்த கோபம் கொண்டார். அவர் உடனடியாகஇ எகிப்திலிருந்த தனது இராஜப் பிரதிநிதி முஹம்மது அலிக்குஇ இந்த கொள்ளைக் கோஷ்டி மீது தகுந்த நடவடிக்கை எடுத்துஇ முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காகவும் இஸ்லாமியத் தலங்களை அசிங்கியப்படுத்தியதற்காகவும் இவர்களைத் தணடிக்குமாறு ஆணை பிறப்பித்தார். இதன் பிறகுஇ 1813-ல் மக்காவும் மதீனாவும் இவர்களின் பிடிகளிலிருந்து விடுவிக்கப்பட்டன. ஆனால்இ தரிய்யாவைக் கைப்பற்றுவது மிகவும் கடினமானதாயிருந்தது. முஹம்மது அலியின் மகன் இப்ராஹிம் பாஷாஇ இவர்களை வெற்றி கொண்டுஇ அங்கிருந்து இந்த சுவூத்-வஹ்ஹாபி கூட்டத்தினரைத் துரத்தியடிப்பதற்கு ஆறு ஆண்டுகள் பிடித்தன. இவர்களின் படுபாதகங்களுக்குரிய தண்டனையாகஇ தரிய்யா முற்றாக இடித்து நொறுக்கப் பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இவர்களின் குற்றங்களுக்கு இது போதுமான தண்டனை என இப்ராஹிம் பாஷா கருதியததனால்இ இவர்களைப் பின் தொடர்ந்து செல்லவில்லை. இவ்வாறு இவர்களை விட்டு வைத்ததுஇ பிற்காலச் சந்ததியினருக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது.
அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது இப்னு சுவூத்இமனமொடிந்து போன தனது கோத்திரத்தினரைக் கூட்டிக் கொண்டுஇ வாதி ஹனீஃபாவினூடாக றியாதைச் சென்றடைந்தார். தரிய்யாவிலிருந்து முதன் முதலில் கொந்தளித்துக் கொண்டு கிளம்பிய போது, ஏற்கனவே ஏனைய கோத்திரங்களை வெற்றி கொண்டு, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்திருந்ததன் காரணமாக, றியாதை தமது கட்டுப்பாட்டின் கீழ் நிலை நிறுத்திக் கொள்வதொன்றும் கடினமானதாயிருக்கவில்லை. ஆனால்இதரிய்யாவிலிருந்து துரத்தப்பட்ட பனூ ராஷித்கள், தம்மை அங்கிருந்து வெளியேற்றியதற்கு பழி வாங்க 1891-ல் திரும்பி வந்து தாக்கிய போதுஇ சுவூத் குடும்பத்தினர் தோல்வியை அரவணைத்துக் கொண்டனர். பனூ ராஷித்கள்இ பிற கோத்திரங்களுடனும் குலங் களுடனும் நட்புறவு கொண்டதன் மூலமாக நஜ்த் பிரதேசத்தின் பெரும் பகுதியில் தமது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டனர்.
அப்துல் அஸீஸ் இப்னு சுவூத்
அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது இப்னு சுவூத்இ கிழக்குப் பக்கமாக ஓடிப் போய்இ இன்று குவைத் என அழைக்கப்படும் பிரதேசத்தில் முபாரக் அல் சபாஹ்விடம் அடைக்கலம் தேடினார். அவர் றியாதை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டு தொங்கிய முகத்துடன் தனது கூடாரத்தில் இருந்த அதே சமயம், அவரது பதின்ம வயது மகன்களுள் ஒருவரான அப்துல் அஸீஸ் (அப்துல் அஸீஸ் இப்னு அப்துர் ரஹ்மான் ஆல சுவூத் என அறியப்பட்ட இவர்தான் சவூதி முடியாட்சியின் ஸ்தாபகர் ஆவார்), ஹஜ் பயணிகளின் காரவன்களை திடீர் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிப்பதில் சிறந்து விளங்கினார். அவர் மிக விரைவில் ஈவிரக்கமற்ற கொடூரங்களுக்கும் தந்திரங்கள்-மோசடிகளுக்கும் பிரசித்தி பெற்றவராகக் கருதப்பட்டார். 1902 ஜனவரியில், றியாதில் பனூ ராஷித்களின் மிஸ்மார்க் கோட்டையின் மீது விடியற்காலைக்கு முன்பாகவே திடீர் தாக்குதலொன்றைத் தொடுத்தார். றியாத் ஆளுநர் ஷெய்க் அஜ்லான் கொல்லப்பட்டார். மிகச் சுருக்கமானதொரு சண்டைக்குப் பிறகு, பனூ ராஷித்களின் படைப் பிரிவுகள் சரணடைந்தன. இன்னும் பல சிறு சிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. அவற்றில்,அப்துல் அஸீஸ், 1903-ல் அல் திலாமில் நடந்த சண்டையில் போன்று ஒன்றில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டார் அல்லது .ஏனைய கோத்திரங்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை பனூ ராஷித்களுக்கு துரோக மிழைக்கச் செய்தார். அப்துல் அஸீஸ், இஸ்தன்பூலில் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதிற்குக் கூட தனது விசுவாசத்தைத் தெரிவித்து உறுதிமொழி கொடுத்திருந்தார். ஆயினும்இ சுல்தானுடைய அதிகாரத்தைப் பலவீனப்படுத்த தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார். 1906 ஏப்ரலில், ரவ்தா அல் முஹன்னாவில் ஆல சுவூத்களும் பனூ ராஷிதாக் களும் மோதிக் கொண்டனர். பனூ ராஷித்களின் தலைவர் (இவரும் அப்துல் அஸீஸ் என்றே பெயருடையவர்) கொல்லப்பட்டுப் போனார். இது பனூ ராஷித்களுக்கு ஏற்பட்ட ஓர் இழப்பு மட்டுமல்லாமல்இ பனூ ராஷித்களுக்கு ஆதரவு கொடுத்த உதுமானியர்களுக்கு நிகழ்ந்த ஒரு பெரும் பின்னடைவு மாகும்.
பாலைவனப் பூமியில் கோத்திரங்களுக்கிடையே அடிக்கடி மாறி வரும் விசுவாசங்களைப் பற்றிய மற்றுமொரு வாழ்வு சம்பந்தப்பட்ட உண்மையை அப்துல் அஸீஸ் ஆல சுவூத் நன்கு விளங்கிக் கொண்டார். ஏனென்றால், பெரும்பாலான கோத்திரங்களும் (ஏன், இனங்களும் கூட) சரிசமமான வலிமையையே உண்மையில் பெற்றிருந்ததால் அவர்களை வெளியிலிருந்து வரும் உதவியைக் கொண்டு தோற்கடிப்பதுதான் சாத்தியமான ஒரே வழி யாகத் தென்பட்டது. உதுமானியத் துருக்கியர்கள் தமது ஆளுநர்கள் மூலமாக இந்த நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வந்த அதே வேளைஇ பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் உள் நுழைந்ததன் காரணமாக அவர்களின் அதிகாரம் வீழச்சியடைந்து கொண்டு வந்தது. அப்துல் அஸீஸ் இதனை நன்கு அறிந்திருந்தார். ஏனெனில், பிரிட்டிஷார் ஏற்கனவே சபாஹ் குடும்பத்தை குவைத்தில் (ஆட்சியில்) அமர்த்தியிருந்தனர். உதுமானியர்களுக்கெதிராக தனது சேவையை வழங்கினால் அப்துல் அஸீஸுக்கும் அம்மாதிரியான உதவியைச் செய்யக் கூடும். இருந்த போதிலும்இ பிரிட்டன் அந்நேரத்தில் ஹிஜாஸின் மீதே அதிக அக்கறை கொண்டிருந்தது. பாரசீக வளைகுடாவைப் போன்றல்லாமல் ஹிஜாஸின் மீதான பிரிட்டனின் அக்கறை வெறுமனே வியாபாரரீதியில் மட்டுமன்று. செங்கடல் துறைமுகமான ஜித்தா முக்கியமானதென்பது உண்மைதான். ஆனால்இ அதன் உண்மையான முக்கியத்துவம் அரசியல் ரீதியானதாகும். ஏனென்றால்இ இரு ஹரம்களும் (மக்காவும் மதீனாவும்) ஹிஜாஸ் பிரதேசத்தில்தான் இருக்கின்றன. இவற்றை உதுமானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வென்றெடுக்க வேண்டும்.
பிரிட்டிஷ் சதி நடவடிக்கை
ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கெப்டன் ஆர். எஃப். பேர்ட்டன் (பின்னர் சர் றிசர்ட் பேர்ட்டன்) என்பவர்இஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போர்வையில்இ மக்காவுக்கும் மதீனாவுக்கும் பல முறைகள் சென்று வந்ததைத் தொடர்ந்து, 1850களின் தொடக்கத்தில் இத்தகைய கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்திருந்தார். 1881-ல் ஜித்தாவிலிருந்த பிரிட்டிஷ் கொன்ஸுல் ஜெனரல் ஜொஹ்ராப்இ ஹிஜாஸினதும் ஹஜ்ஜினதும் முக்கியத்துவத்தைப் பற்றி, இதை விட மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருந்தார். அவர் லண்டனுக்கு எழுதிய கடிதத்தில், '(சில மனிதர்கள்) அரசியல் காரணங்களுக்காக ஹஜ்ஜுக்குப் போகின்றனர் என்பதை நான் இணங்க வேண்டியுள்ளது. ஐரோப்பியத் தலையீடின்றி மக்கா சுதந்திரமாயிருப்பதால், கூட்டங்கள் நடத்துவதற்கும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஏற்ற பாதுகாப்பான இடமாக இருக்கிறது. இன்று வரை அங்கு வந்து போகிறவர்களின் மீது நாம் விழிப்புடன் எந்த கண்காணிப்பும் செய்யவில்லை. இவ்வாறாக, நமக்கு எதிரான இணைப்புகளை உருவாக்கும் விதத்தில் மக்காவில் கூட்டங்கள் நடத்தப்படலாம். இவை, நம் மத்தியில் குமுறி வெடிக்கும் வரை, நமக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியா மலிருக்கும்' எனக் குறிப்பிடுகின்றார்.
ஹிஜாஸ் 1840-ல் உதுமானிய அரசின் ஒரு வலாயத் (மாகாணம்) ஆனது. மக்காவிற்கான ஷெரீஃப் (ஆளுநர்-நிர்வாகி)ஐ நியமிக்கும் உரிமை இஸ்தன்பூலிலிருந்த சுல்தானிடமிருந்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வாக்கில்இதுருக்கியர்களின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாகஇ பிரிட்டன் ஷெரீஃப் உடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை வளர்த்து கொண்டது.
பிரிட்டிஷாரின் திட்டங்களைப் பற்றி நன்குணர்ந்து கொண்ட துருக்கியர்கள், மக்காவிலிருந்து வெளி வந்த 'ஹிஜாஸ்'பத்திரிகையில் (இல.1896இ ஸஃபர் 25இ ஹி.1;333-கி.பி.1914இ பக். 1)இந்த சதித் திட்டத்தைச் சுட்டிக் காட்டி, அது 'மிகக் கொடியது'என வர்ணித்து விமர்சனமொன்றை வெளியிட்டனர். பிரிட்டனின் திட்டம் அதனது பல முகவர்(ஏஜெண்ட்)களான டி.ஈ.லோரன்ஸ், கெப்டன் ஷேக்ஸ்பியர், சர் ஹென்றி மெக்மஹோன், சர் பெர்ஸி கொக்ஸ், மற்றும் பலர் ஊடாக, அரேபியத் தலைவர்களுக்கு கட்டுக்கட்டாக பண இலஞ்சம் கொடுத்தும், உதுமானியர்களைத் தோற்கடிப்பதற்கு பிரிட்டனுக்கு அவர்கள் உதவுவார்களாயிருந்தால் அவர்களை அரேபியத் தீபகற்பத்தின் ஆட்சியாளர்களாக்குவதாக வாக்குறுதிகளைச் செய்தும் மிக வேகமாக முன்னேறிச் சென்றது. (ஹாஷிமி கோத்திரத்தைச் சேர்ந்த) ஷெரீஃப் ஹுசைன், அப்துல் அஸீஸ் ஆல சுவூத் போன்ற பலரை, அவர்கள் தமது திட்டத்திற்குத் துணைவர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்களாயிருக்கின்றனர் எனக் கண்டு கொண்டனர். இவர்களனைவரும் பிரிட்டிஷாரின் சம்பளப் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றனர். அரேபியத் தீபகற்பத்தில் துருக்கியத் துருப்புக்களைத் தாக்குவதற்கான துப்பாக்கிகளும் ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் பவுண்ட் பணமும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில்இதற்போது பெரும் வெறுப்புக்கும் அபகீர்த்திக்கும் உள்ளாயிருக்கும் 1917 நவம்பர் பல்ஃபார் பிரகடனத்தின் கீழ்இபாலஸ்தீனில் யூதர்களுக்காக ஒரு தாயகத்தை உருவாக்குவதற்கு பிரிட்டிஷார் உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

இந்த பாமர அரபுத் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மதித்து நடக்கும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு அறவே இருக்கவில்லை. ரஷ்யாவில் ஜார் மன்னன் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து இது வெட்டவெளிச்சமானது. பிரிட்டனும் ஃபிரான்ஸும்இ மத்திய கிழக்கை தத்தம்; செல்வாக்கிற்கு உட்பட்ட நிலப்பகுதி களாகப் பிரித்துக் கொள்வதற்குச் சம்மதித்துஇ தமக்கிடையே செய்திருந்த ஸைக்ஸ்-பிகொட் ஒப்பந்தத்தைப் பற்றிஇ 1917நவம்பரில் போல்ஷேவிக்(எனப்படும் ரஷ்ய கம்யூனிஸ்ட்)கள் எதிர்பாராதவிதமாகத் தெரிந்து கொண்டனர். பல்வேறு கோத்திரத் தலைவர்களுக்குக் கொடுக்கப் பட்ட வாக்குறுதிகளை முற்றாகவே பொருட்படுத்தாதுஇ மத்திய கிழக்கைப் பிரித்துக் கொள்வதற்காக பிரிட்டனின் ; மார்க் ஸைக்ஸும் ஃபிரான்ஸின் ஜோர்ஜ் பிகொட்டும் 1916பிப்ரவரியில் இரகசியமாக உடன்பட்டிருந்தனர்.
முதலாம் உலக மகாயுத்தத்தில், துருக்கி (அவர்களது இராணுவத்தில் ஏற்கனவே பிரிட்டிஷ் ஏஜெண்ட்கள் பலர் ஊடுருவியிருந்தனர். மேலும் துருக்கிய அதிகாரிகள் பலர் ஸியனிஸ அமைப்பான ஃபிரீமேஸனில் இணைந்திருந்தனர்) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷார், தாம் அரேபியத் தலைவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்தனர். இந்தத் துரோகத்தைக் கண்டு ஹுசைன் இப்னு அலீ வெகுண்டார். அரேபியத் தீபகற்பம் முழுவதற்கும் மன்னராக அவர் கனவு கண்டு கொண்டிருந்தார்.
பிரிட்டனுக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையிலான ஸைக்ஸ்-பிகொட் ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலாம் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு உதுமானியர்களின் ஆளுகையின் கீழிருந்த இஸ்லாமியக் கிழக்கிலுள்ள நிலப்பரப்பை ஐந்து பகுதிகளாகப் பிரிக்க நாடினர். இரண்டு பகுதிகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்கும் 'செல்வாக்கிற்கும்' கீழும்இ இரண்டு பகுதிகள் ஃபிரான்ஸின் கட்டுப்பாட்டிற்கும் 'செல்வாக்கிற்கும்'கீழும் புனித பூமி ஒரு சர்வதேசப் பகுதியாகவும் இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இறுதியாக வட ஆப்பிரிக்காவிலும் பிறவிடங்களிலுமிருந்த உதுமானியர்களின் பிரதேசங்கள்இ பிரிட்டனுக்கும் ஃபிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. சவூதி அரேபியா மட்டுமே ஒரு 'சுதந்திரமான' நாடாக மேலெழுந்தது.
அவரைத் திருப்திப்படுத்துவதற்காக பிரிட்டிஷார், அவருடைய மகன்களுள் ஒருவரான அப்துல்லாஹ்வை, (பாலஸ்தீனிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட) டிரான்ஸ் ஜோர்தானின் அமீராக அமர்த்தினர். மேலும், அவருடைய மற்ற மகனான ஃபைஸலை, சிரியாவின் மன்னராக்கினர். பைஸல், வெகு விரைவில் சிரியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட போது, அவரை ஈராக்கின் மன்னராக பதவியில் அமர்த்தினர். (1958-ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் மூலம் ஈராக்கில் முடியாட்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த ஆட்சியாளரும் கொல்லப்பட்டார்.)
இதே நேரத்தில், அப்துல் அஸீஸ் தனது சொந்த இருப்பிடத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்வதற்கு மிகக் கடுமையாகப் பாடுபட்டார். அதுவரை அவருடைய அக்கறையெல்லாம் தமது தாயகமான நஜ்தோடு மட்டும்தான் வரையறுக்கப்பட்டதாக இருந்ததெனத் தெரிகிறது. அத்தோடு, ஹிஜாஸிற்கு உதுமானியர்களினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவர் ஏற்கனவே இருந்தார். அவருக்கு பிரிட்டிஷாரின் ஆதரவும் கூட கிடைத்திருந்தது. இதன் பிறகு, அப்துல் அஸீஸ் வழிவழியாக வந்த தனது தந்திரத்தைப் பயன்படுத்தி, அல் அர்தவிய்யாவைச் சுற்றிலும் வாழ்ந்து வந்த வஹ்ஹாபிகளை (இப்போது அவர்கள் இக்ஹ்வான்கள் என அழைக்கப்படுகின்றனர்) பதப்படுத்துவதற்கு முனைந்தார். இவர், அவர்களை றியாதிற்கு அருகில், விசேஷமாக குடியமர்வதற்கு உற்சாகப்படுத்தினார். இவர், வஹ்ஹாபி கோத்திரங்களான உதைபாஹ், முதையிர், அஜ்மான் போன்றவற்றை அங்கு குடியமர்வதற்கு பிறவிடங்களிலிருந்து கொண்டு வந்தார். அவர்கள், நஜ்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு இவருக்கு உதவிய உடனேயே, ஷரீஆ வை (அவர்களின் குறுகலான விளங்குதலுக்கு இணங்க) அமுல்படுத்துவதாக வாக்குக் கொடுத்தார்.
அப்துல் அஸீஸ், பிரிட்டிஷாருடனும் தனது தொடர்புகளை தொடர்ந்து வைத்து வந்தார். வஹ்ஹாபி இக்ஹ்வான்கள், இதனைப் பற்றி அறிந்திருந்தார்களென்றால், இவரை ஒரு காஃபிர் எனப் பிரகடனஞ் செய்து, கொன்று போட்டிருப்பர். அவர்கள் அதனைக் கண்டு பிடித்த போது, காலம் கடந்து விட்டது. 1928-ல் இருந்து 1931 வரை, அவர்கள் அப்துல் அஸீஸிற்கு எதிராக கிளர்ந்தெழுந்து கலகஞ் செய்தனர். ஆனால், பிரிட்டிஷ் விமானங்களும் துப்பாக்கிகளும், பணமும் இராணுவ ஆலோசனைகளும் இக்ஹ்வான்களின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு அப்துல் அஸீஸுக்கு உதவின. அப்துல் அஸீஸு க்கும் அவரது குடும்பத்திற்கும், அவாகளது ஆரம்ப காலப் போராட்டங்களில் உதவிய- பின்னர் இவர் தனது பிடியை மேலும் நஜ்தின் மீது கெட்டிப் படுத்திக் கொள்வதற்கு இவருக்கு உதவிய- அதே மக்கள், இப்போது துரோகமிழைக்கப்பட்டு, பிரிட்டிஷ் காஃபிர்களின் உதவியுடன் இவரால் கொன்று குவிக்கப்பட்டனர்!
கிலாஃபத்தின் முடிவு
இந்த சமயத்தில் தான் துருக்கியில் ஒரு ஃபிரீமேஸனான முஸ்தஃபா கமால் அதிகாரத்திற்கு வந்தார். அவர் 1922 நவம்பரில் முதலில் சுல்தானிய ஆட்சியை நீக்கினார். அதன் பின்இ 1924 மார்ச் 3-ந் திகதி கிலாஃபத்தையும் அகற்றுவதாக அறிவித்தார். இதன் காரணமாகஇ முஸ்லிம்களின் பெயரளவிலான கடைசி கலீஃபாவான இரண்டாம் அப்துல் மஜீத் நாடு கடத்தப்படும் கட்டாயத்திற்குள்ளானார். ஏறத்தாழ 1,300ஆண்டுகளுக்கு முன்னர்இ மதீனாவில்
1945 பிப்ரவரி 17-ந் திகதி, எகிப்திலுள்ள காரூன் ஏரியில் நடந்த உத்தியோகப்பூர்வ இரவு போசன விருந்தில், மன்னர் அப்துல் அஸீஸ் ஆல சுவூத்இ பிரிட்டிஷ்; பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலுடன் கலந்து கொள்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய அரசுடன் இருந்த கடைசிப் பிணைப்பு –அது எத்துணை பலவீனமானதாயிருந்த போதிலும் சரி- இத்தோடு அறுந்து போனது. அந்த நேரத்தில், டிரான்ஸ் ஜோர்தானில் வாழ்ந்து வந்த ஹுசைன் இப்னு அலீஇ உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னைத் தானே கலீஃபாவாகப் பிரகடனஞ் செய்தார்.
இதன் காரணமாக, தனக்குச் சார்பாக முஸ்லிம்களின் ஆதரவு ஒன்று குவியும் என்றும், அரபுகள் எல்லாரினதும் ஆட்சியாளராக பிரிட்டிஷார் தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும் என அவர் எதிர்பார்த்தார். இந்திய முஸ்லிம்கள், 1922-1924 காலப் பகுதியில், கிலாஃபத் அமைப்பை அழிந்து போகாமல் காப்பாற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்புகளுடன் ஒரு கிலாஃபத் இயக்கத்தை முன்னின்று நடத்தினர். ஆயினும், ஹுசைன் இப்னு அலீயுடைய பிரகடனத்தை முஸ்லிம்கள் வரவேற்கவில்லை. ஏனென்றால், உதுமானியர்களைத் தோற்கடிப்பதற்கு உதவிய, அரபுகளின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டாக அவர் ஏற்கனவே அறியப்பட்டிருந்தார். மறுபுறத்தில், இது கிலாஃபத் முழுமையாக அழிந்து போவதற்கு வழிகோலியது.
எப்போதுமே முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் அப்துல் அஸீஸ், காயை நகர்த்துவதற்கு இது தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு என உணர்ந்து கொண்டார். பரந்து விரிந்த முஸ்லிம் உலகின் பார்வையில், இவர் நன்கு பிரபல்யம் வாய்ந்தவராக இல்லாதிருந்ததால், பிரிட்டிஷாருடனான இவருடைய தொடர்புகளைப் பற்றி பரவலாக அறியப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கா ஷெரீஃபுக்கு எதிராக தன்னால் செயல்பட முடியும் என்றும், முஸ்லிம்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் இவர் நினைத்தார். விசேஷமாக, அரபுகள் எல்லாரினதும் ஆட்சியாளராக ஹுசைன் இப்னு அலீயை அமர்த்த பிரிட்டிஷார் மறுத்து விட்டதன் பிறகு, அவர் தொல்லை தருபவராகக் காணப்பட்டதால், பிரிட்டிஷாருக்கும் இது பொருத்தமானதாகத் தென்பட்டது. மக்காவின் மீதான அப்துல் அஸீஸின் தாக்குதலுக்கு பிரிட்டன் சம்மதித்தது. இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டம் மக்கா மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரேஇ 1923 ஜூலையில் வந்த ஐயாயிரம் ஹஜ் யாத்திரிகர்களைப் படுகொலை செய்தது. மற்றும் 1924 செப்டம்பரில், தாயிஃப் மீது தாக்குதல் நடத்தி, மஸ்ஜித்களில் தஞ்சம் புகுந்த பலர் உட்பட எண்ணிக்கையில் 600க்கும் 900க்கும் இடையிலான தாயிஃப்வாசிகளை ஈவிரக்கமில்லாமல் அறுத்துத் தள்ளியது ஆகிய இரு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. மஸ்ஜித்களின் புனிதத் தன்மை கூட, இவ்வெறியர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முடியாது போனது. இந்த சுவூத்-வஹ்ஹாபி படுபாதகர்கள், முதலில் மஸ்ஜித்களினுள் வைத்து மக்களின் கழுத்தை அறுத்தனர். பின்னர், கட்டடங்களுக்குத் தீயிட்டு அவற்றைக் கொளுத்தினர். இவை எல்லாமே 'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துகிறோம்' என்ற பெயரின் கீழ்தான் மேற்கொள்ளப்பட்டன.
ஹிஜாஸில் சவூதிகளின் அழிவு வேலைகள்
தாயிஃப் படுகொலைப் படலத்தைப் பற்றிய செய்திகள் வந்தடைந்த உடனேயே பீதிக்குள்ளான மக்கள், சுவூத்-வஹ்ஹாபிக் கொலைக் கோஷ்டியினர் வருவதற்கு முன்னரே மக்காவிலிருந்து ஜித்தாவுக்கு வெருண்டோடி, தம் வீடுகளுக்குள்ளே தாழிட்டுக் கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்தனர். சவூதிகள் மக்காவைச் சுற்றிவரச் சூழ்ந்து பலமான தாக்கு தலுக்குள்ளாக்கினர். 1802-ல் சவூதிகள் அங்கு அரங்கேற்றிய படுகொலைப் படலத்தின் மறுபிறவி(?) போல் இது அமைந்தது. ஷெரீஃப் ஹுசைன் கூடஇ இந்த கொலை வெறியர்கள் நகரினுள் நுழைய முன்பே, மக்காவிலிருந்து ஜித்தாவுக்கு ஓடிப் போனார். சவூதிகளின் தாக்குதலை அவர், பிரிட்டிஷாரின் உதவியில்லாமல் எதிர்த்து நிற்க முடியாது. பிரிட்டிஷார் அவரை ஒரு பழைய நீராவிக் கப்பலில் ஏற்றிஇ சைப்பிரஸுக்கு நாடு கடத்தினர்.
 |
1945 பிப்ரவரி 14-ந் திகதிஇ எகிப்திலுள்ள மாபெரும் உவர்ப்பு ஏரியில் அமெரிக்கக் கப்பலான 'குயின்ஸி'யில்இ அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் டி. ரூஸ்வெல்ட் (வலது)இ மன்னர் அப்துல் அஸீஸ் ஆல சுவூதைச் சந்திக்கிறார். மன்னர்இ மொழி பெயர்ப்பாளர் கெர்னல் வில்லியம் ஏ. எட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். |
அப்துல் அஸீஸின் தலைமையிலான இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினர், தமது வழமையான மிருகத்தனத்தையும் அக்கிரமத்தையும், புனிதத் தலங்களின் அழிவு வேலைகளையும் மேற்கொண்டனர். பலர் இஹ்ராம் உடை அணிந்து கொண்டு, எல்லாருக்கும் அபயம் வழங்கும் புனிதம் வாய்ந்த மஸ்ஜிதுல் ஹராமின் எல்லைகளுக்குள் பிரவேசித்தனர். அதே சமயத்தில் அவர்கள், பிரிட்டிஷார் வழங்கிய துப்பாக்கிகளுடன் ஆயுதபாணிகளாகவே உள்ளே நுழைந்தனர். சுவூத்-வஹ்ஹாபிக் கோஷ்டியினரின் மக்களை ஒன்று திரட்டும் கூக்குரல் எப்போதுமே, 'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துகிறோம்' என்பதுதான். ஆயினும், அவர்களோ இஸ்லாத்தின் ஒவ்வொரு விதிமுறையையும் மீறக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஹரம் உடைய புனிதத்தன்மையைப் பாதுகாத்தல்இ ஆயுதம் ஏந்தக்கூடாது, மக்காவில் வாய்த் தாக்கமோ இரத்தஞ் சிந்துவதோ தடுக்கப்பட்டுள்ளது, யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்பன இந்த விதிமுறைகளுள் சிலவாகும். திருநபி (ஸல்) அவர்களின் காலத்தில், இஸ்லாத்தின் பரம விரோதிகளான முஷ்ரிக்குகள் கூட, இந்த விதிமுறைகளுக்கு மதிப்பளித்து வந்தனர். ஆனால்இ தம்மை உண்மை முஸ்லிம்களென உரிமை பாராட்டிக் கொள்ளும் இந்த சவூதிகளோ, அவற்றைப் பகிரங்கமாக அவமதிக்கின்றனர்.
அப்துல் அஸீஸ், தனது கொலைகாரக் கோஷ்டியின் கைகளில் மக்கா வீழ்ந்த போது, தான் ஹிஜாஸினுடைய ஆட்சிக்கோ அல்லது கிலாஃபத்துக்கோ எந்த உரிமையும் கோருவதினின்றும் தவிர்ந்து கொள்வதாக ஓர் உரிமைத் துறப்புப் பிரகடனத்தைச் செய்தார். நஜ்தின் உடைமையுடன் தான் திருப்தியடைவதாக இவர் அழுத்திச் சொன்னார். ஆயினும், 'ஷெரீஃபுடைய கொடுமையிலிருந்து ஹிஜாஸையும் எனது மக்களையும் விடுவிக்க விரும்பியதாக' அறிவித்தார். இஃது அப்பட்டமான ஒரு பொய்யாகும். ஷெரீஃப் ஹுசைன் கொடுமைக்காரராக இருந்திருக்கலாம். அதே நேரத்தில், அவருடைய கொடுமை எந்த வகையிலும் இந்த சுவூத்-வஹ்ஹாபிக் கூட்டத்தினரது கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் முன்னால் நிற்க முடியாது. அது மட்டுமல்ல, அப்துல் அஸீஸ் ஏற்கனவே மதீனாவைத் தாக்குவதற்குத் திட்டம் தீட்டியிருந்தார். அதன் பிரகாரம், 1925 டிசம்பர் 5ந் திகதி மதீனா கைப்பற்றப்பட்டது.
அப்துல் அஸீஸ் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனஞ் செய்தல்
இது நிகழ்ந்து ஒரு சில வாரங்களுக்குள்ளாகவேஇ 1926 ஜனவரியில்இ அப்துல் அஸீஸ் அல் மஸ்ஜிதுல் ஹராமின் இமாமுடன் இணைந்து வந்துஇ தன்னைத் தானே 'ஹிஜாஸின் மன்னராக'ப் பிரகடனஞ் செய்தார். அதன் பிறகும் கூட அவர்இ பொய்இ பித்தலாட்டங்களஇ வஞ்சகம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். ;அல்லாஹ் பரிசுத்த குர்ஆனிலே (3:61)இ பொய்யர்களை வன்மையாகக் கண்டிப்பதுடன்இ அவர்கள் மீது தனது சாபம் இறங்குமென எச்சரிக்கிறான். புனிதத்தலங்களின் பரிபாலனத்தைக் குறித்து தான் திரும்பத் திரும்ப பலமுறை ஆலோசனையை வேண்டியதாகவும்இ ஆயினும் 'வெளிநாட்டு முஸ்லிம்களின் அலட்சியத்தன்மை'யின் காரணமாகவே தன்னைத் தானே மன்னராகப் பிரகடனஞ் செய்யும் கட்டாயத்திற்குள்ளானதாகவும் இவர் அறிவித்தார். அத்தோடுஇ ஜித்தாவைச் சேர்ந்த வர்த்தகர்களும் முக்கியப் பிரமுகர்களும் தன்னை மன்னராகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரி வித்தார்.
'இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும்;' பணிக்குத் தலைமையேற்று நடத்தும் எவருமே இதுவரையில்இ மன்னராட்சி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதுதானா என்ற கேள்விக்கு விளக்கமளிக்க முன்வரவில்லை சுவூத் குடும்பத்தினரும்இ அவர்களின் அரசவை ஆலிம்களும் 'பித்ஆ உற்பத்தி நிலைய'மொன்றைத் திறந்து வைத்துஇ தாம் விரும்பாதவை ஒவ்வொன்றையும் 'குற்றம்' எனச் சொல்லி வருகின்றனர். ஆனாலும்இ தாம் மிகப் பெரிய பித்அத்தைச் செய்த குற்றவாளிகள் என்ற விஷயத்தைச் சாமர்த்தியமாக மறந்து விடுகின்றனர். அவர்களுடைய சம்பளம் பெறும் ஏஜெண்ட்களும் இந்த விஷயத்தைத் தொட்டும் பார்ப்பதில்லை.
இரண்டாம் உலகப் போர் வரை அப்துல் அஸீஸ்இ ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டாகவே செயல்பட்டார். அமெரிக்கா ஓர் உலக வல்லரசாகத் தலையெடுத்ததுடன்இ அப்துல் அஸீஸ் தன்னை அமெரிக்காவின் விசுவாசமுள்ள ஓர் ஊழியனாக- தாசனாக- அடிவருடியாக மாற்றிக் கொண்டார். இந்த உறவு இன்று வரைத் தொடர்ந்து வருகின்றது. சுவூத் குடும்பத்தை ஆட்சியதிகாரத்தில் வைத்திருப்பதற்காகஇ அமெரிக்கர்கள் விரும்புகின்ற எதனையும் -எண்ணெய்இ இராணுவத் தளங்கள்இ ஆயிரக்கணக்கான கோடி டொலர்களில் ரொக்கப் பணம்இ இன்ன பிறவற்றை- கொடுக்கின்றனர். சுவூத் குடும்பம்இ அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களுடன்- எல்லா ஜனாதிபதி களுடனும்இ அவர்களது குடும்பங்களுடனும்- நெருங்கிய தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டிருக்கிறது.
அப்துல் அஸீஸ்இ பற்பல மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்களின் மூலம் ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இன்று சுவூத் குடும்பம்இ சுமார் 40இ000 இளவரசர்களைக் கொண்டதாக விரிவடைந்திருக்கிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிரஇ அவர்களுள் மிகப் பெரும்பாலோர்இ கேடு கெட்ட தீய செயல்களுக்குச் சொந்தக்காரர்களாயிருக்கின்றனர். அவர்கள்இ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள தீமைகள் அனைத்திலும் உண்மையாகவே ஈடுபடுபவர்களாயிருக்கின்றனர். குடிப்பழக்கம்இ விபச்சாரம்இ சூதாட்டம்இ நாட்டின் எண்ணெய்ச் செல்வத்தைத் திருடுவதுஇ இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அடிமைகளாகச் சேவை புரிவது என இத்தீமைகளை அடுக்கிக் கொண்டு போகலாம். அவர்கள் எதற்கும்இ எவருக்கும் உடன்படுவர்இ இணங்குவர் - அல்லாஹ்வைத் தவிர. (அல்லாஹ்விடம் பிழை பொறுக்கக் கோருவோம்!)
உத்தியோகப்பூர்வமாகஇ அல்குர்ஆன் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமாகப் பிரகடனஞ் செய்யப்பட்டுள்ளது. ஆனால்இ அரசு அமைப்பு பரம்பரை ஆட்சியைத் தொடர்கிறது. ஒரு மன்னர் இறந்து விட்டால்இ வரிசையிலுள்ள அவரது அடுத்த சகோதரர் அரசுரிமைக்கு வாரிசுதாரர் ஆகிறார். இந்த இடத்தில்இ ஒவ்வொருவருக்கும் கேட்க மனதில் தோன்றுகின்ற கேள்விகள் இவைதான்: சவூதி முடியாட்சியின் அமைப்புச் சட்டம்இ அல்குர்ஆனாக இருக்குமானால்இ இந்த அரச வாரிசுரிமைக்கோ அல்லது இஸ்லாத்தில் பிரதி நிதித்துவத்திற்கான சட்டப்பூர்வ முறைமை பரம்பரை மன்னர் ஆட்சிமுறைதான் எனவோஇ எந்த அல்குர்ஆன் வசனம் அனுமதி வழங்கியிருக்கிறது? அல்லாஹ் வின் திருத்தூதர்(ஸல்) அவர்களோஇ அவர்களைப் பின்தொடர்ந்த அல் கிலாஃபாஹ் அல் ராஷிதா என்ற நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களோஇ தங்களை மன்னர்கள் எனப் பிரகடனஞ் செய்திருக்கின்றார்களா? அவ்வாறில்லை யென்றால்இ சவூதிகள் தமது பரம்பரை மன்னர் ஆட்சி முறையைஇ எந்த அடிப்படையில் மக்கள் மீது சுமத்தியிருக்கிறனர்?
சவூதியின் முரண்பாடுகள்
சித்தாந்தரீதியாக சவூதி முடியாட்சிஇ ஷரீஆ எனும் இஸ்லாமியச் சட்டக் கோவையின்படிதான் ஆளப்படுகின்றதுஇ ஆனால்இ எல்லாவிதமான தீமைகளுக்கும் உறைவிடமாகத் திகழும் பல்வேறு அரண்மனைகளின் நான்கு சுவர்களுக்குள் இந்த சட்டங்கள் பொருந்துவதில்லை. ஷரீஆவை அமுல் படுத்தும் போர்வையின் கீழ், சாதாரண மக்களின் மீது - விசேஷமாக, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த எளிய, ஏழ்மையான வேலைக்காரர்கள் மற்றும் பணியாட்கள் மீது- கற்பனைக்குள்ளடங்காத மிகக் கீழ்த்தரமான கொடுமைகள், சவூதிகளினால் இழைக்கப்படுகின்றன. றியாதில் பொது மக்களின் முன்னிலையில், மரண தண்டனைக்குள்ளானவர்களின் தலைகள் சீவியெறியப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவங்களாகும். மக்களின் மனங்களில் பயத்தை யும் பயங்கரத்தையும் அதிகரிப்பதற்காக, இம்மாதிரி நிகழ்வுகள் ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெறுகின்றன. ஒரு சில கிராம்கள் ஹிரொய்ன் போதைப்பொருளை வைத்திருந்ததாகவோ, வரவழைத்ததற்காகவோ குற்றவாளி களாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இவர்கள், பெரும்பாலும் ஏழைத் தொழிலாளர்கள் ஆவர்.
'
அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல நூறு கோடி டொலர்கள் பணத்தைத் திருடி, அவற்றை நாட்டுக்கு வெளியே கடத்திச் செல்கின்றனர். மதுபானவகைகளை நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வருகின்றனர். நாட்டின் கிழக்குப் பகுதியிலிருக்கும் மாஃபியாக் குழுக்களிடமிருந்தான போதைப் பொருட்களின் வியாபாரத்தை நிர்வகிக்கின்றனர். தமது மிருக இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகஇ உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஏழை இளம் பெண்களை இழிவான வகையில் நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். ஆயினும், இவர்களை சட்டம் ஒரு போதுமே தொட்டுப் பார்த்ததில்லை. ஷரீஆ சரிசமமாக அமுல்படுத்தப்படுமென்றால், பெரும்பாலான சவூதி இளவரசர்கள் தனது ஒரு ஜோடிக் கைகளைக் கொண்டிருக்கமாட்டான். மேலும், விபச்சாரத்திற்கான தண்டனை நேர்மையாகவும் சீராகவும் நிலைநாட்டப்படுமென்றால், இந்த சவூதி அரசக் குடும்பப் படுபாதகர்களுக்கு உரிய நீதியை வழங்குவதற்கு சவூதி அரேபியாவில் போதுமான கற்கள் இல்லாமலிருக்கும்.
சவூதிகள், குறைந்தபட்சம் 8,700 கோடி அமெரிக்க டொலர்களை, கடந்த இரண்டு தசாப்த காலப் பகுதியில் வெளிநாடுகளில் 'வஹ்ஹாபியத்'தைப் பரப்புவதற்காகச் செலவு செய்துள்ளனர். சென்ற இரண்டு ஆண்டுகளில் இந்த நிதிச் செலவு அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிதிச் செலவில் பெருந் தொகை, மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், 'வஹ்ஹாபியத்'தைப் பிரச்சாரம் செய்யும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும் நடத்திச் செல்வதற்குமான செலவினங்களாகும். இமாம்களின் பயிற்சி, மக்கள் தொடர்பு ஊடகங்கள், வெளியீட்டகங்கள், பாடநூற்கள் மற்றும் ஏனைய நூற்களின் விநியோகம், (இஸ்லாமிய அறிஞர்களின் நியமனம் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு பரிவர்த்தனையாக) பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் ஆகியவற்றுக்கும் கூட இந்நிதி உதவுகின்றது. சவூதி அரேபியாவிலும் பாரசீக வளைகுடாவிலும் வசிக்கும் சவூதிகள் அல்லாத பல லட்சக்கணக்கானோர், வஹ்ஹாபியத்தால் வசீகரிக்கப்பட்டு, தாம் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று, வஹ்ஹாபியத்தின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. சவூதியில் பணி புரியும் முஸ்லிமல்லாதார்களைச் சென்றடைவதற்கு, சவூதி முடியாட்சியின் இஸ்லாமிய விவகார, வக்ஃப், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சின் கீழ் இயங்கும் பல முகவர் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
சவூதி அரேபியாவிலுள்ள முஸ்லிம்களுக்குக் கூட, அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு வஹ்ஹாபியக் கொள்கை மறுக்கிறது. 1744-ல் சாதாரணப் பிரச்சாரகரான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபினால் வடிவமைக்கப்பட்ட விதத்தில்இ சவூதி; அரசு, முதவ்வி அல்லது முதவ்வியூன் எனப்படும் பயங்கரமான 'செயல்பாட்டுக் காவலர்'களை நியமித்திருக்கிறது. எல்லாரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்றார்களா என இவர்கள் கண்காணிப்பர். மார்க்கப் பொலிஸ்காரர்களான இந்த முதவ்வியூன் இப்பொழுது, 'நன்மையை ஏவிஇ தீமையைத் தடுக்கும் பணி'யைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் 03-11-2002 அன்று, ஒரு பாடசாலையின் உறங்கு விடுதியில் தீப் பற்றிக் கொண்ட போது, 15 பெண் பிள்ளைகளை தீயில் கருகி இறந்து போகச் செய்தனர். எரியும் கட்டடத்திலிருந்து தப்பிப்பதற்கு பெண் பிள்ளைகள் பலர் முயற்சித்தனர். ஆயினும், அப்பெண் பிள்ளைகள் உரிய ஆடைகளை அணிநதிருக்காததைக் கண்ட முதவ்வியூன் சிலர், அவர்களைத் தடியால் அடித்து கொழுந்து விட்டெரியும் நெருப்புக்குள் திரும்பவும் செல்ல வைத்தனர். கொடூர உள்ளம் கொண்ட இந்த முதவ்வியூன்கள், தீயை அணைக்க வந்த தீயணைப்புப் படை வீரர்களைக் கூட அருகில் நெருங்க விடவில்லை!
2006 மே மாதத்தில், முதவ்வியூன்களின் அதிகாரம் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது. ஆயினும், அவர்களின் அடக்குதலும் ஒடுக்குதலும் தொடர்ந்தே வருகின்றது. 06-06-2006 அன்று, 70 வயதான ஒரு வயோதிகப் பெண்மணி சிறைக்கு அனுப்பப்பட்டார். அதற்கான காரணம், ஓர் ஆண் கடைக்காரர் மட்டுமே இருந்த ஒரு கடைக்கு அவர் சென்றார் என்பதுதான். இந்த மூத்தஇ வலுவிழந்த பெண்மணி, 'கல்வத்' எனப்படும் 'ஓர் ஆணுடன் மிக நெருக்கமாக இருந்தார்' என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே முதவ்வியூ னால் கைது செய்யப்பட்டிருக்கிறார்!
நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து நிலைபாடாயிருந்து வந்த தேசியச் சின்னங்களை அழித்தொழிப்பதில் இந்த முதவ்வியூன்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவை தரிசிப்பதற்குரிய இடங்களாகி விடும் என்ற ஒரு காரணம் காட்டப் பட்டது. 1988-ல் நபி(ஸல்)அவர்களின் தாயார் ஆமினா பின்த் வஹ்புடைய மண்ணறை அழிக்கப்பட்டது. நபி(ஸல்)அவர்களின் முதல் மனைவி கதீஜா நாயகியின் வீடு இருந்த இடத்தில் இப்போது பொது மலசலக் கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இறுதி நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்த கட்டடங்களுள் வெறும் 20 மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன.
இத்தகைய மிகக் கீழ்த்தரமான நடத்தைகளையுடைய மனிதர்களின் கைகளில் இரு ஹரம் ஷரீஃபுகளும் விட்டு வைக்கப்பட வேண்டுமா என முஸ்லிம்கள் மிகுந்த அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். இரு ஹரம்கள், முஸ்லிம் உம்மத்தின் பொதுப் பாரம்பரிய உடைமையா அல்லது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் படுபாதகமான குற்றங்களை இழைத்த குற்றவாளிகளான இந்த சவூதி; கொலைகாரக் கூட்டத்தின் உடைமையா?
நமது பிரார்த்தனைகள் ஏன் அல்லாஹ்வினால் பதிலளிக்கப்படுவதில்லை என்பதைப் பற்றியும் ஆற அமர நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய மனிதர்கள், இஸ்லாத்தின் மிகப் புனிதத் தலங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நாம் அனுமதித்திருப்பதன் காரணமாகவே, நமது சமுதாயம் (முஸ்லிம் உம்மத்) எண்ணற்ற இன்னல்களையும் இடுக்கண்களையும் சந்தித்து வருகிறது.
இரு ஹரம்களான மக்காவும் மதீனாவும், ஈவிரக்கமற்ற, இந்த கொலைகார, கொள்ளைக்கார, கொடிய, ஒழுக்கங் கெட்ட கோஷ்டியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படாத பட்சத்தில், அல்லாஹ் சுபுஹானஹுத் தஆலாவின் பெருங் கருணையும் பேரருளும் நமது வாழ்வை வந்தடையாது. எனவே, நாம் இவ்விஷயம் பற்றி ஆழமாக ஆராய்ந்து, நமது சிந்தனையில் சிறந்ததொரு முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
(இத்துடன் ஜாபர் பங்காஷ் எழுதிய 'சுவூத் பரம்பரையின் ஜாஹிலிய்யதான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்' எனும் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.)
(Zafar Bangash is a noted Islamic movement journalist and commentator and a leader of the Muslim community in Toronto, Canada, and a strong advocate of Muslim unity.