ஐக்கிய நாடுகள் அமைப்பிட்கான ஈரானிய பிரதிநிதி ஸெய்யிது முஹம்மத் ரிஸா ஸஜ்ஜாதி |
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் சர்வதேச அரசியல் விவகாரங்கள் பிரிவின் இயக்குனராகவும் செயலாற்றும் ஸஜ்ஜாதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத் தொடர் ஒன்று சமீபத்தில் அங்க ஒன்று கூடியது. அமைப்பின் பாதுகாப்புச் சபை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்காக அதன் அங்கத்தவர்கள் ஒன்று கூடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈரானிய பிரதிநிதி, அமைப்பின்; ஒழிவு மறைவு அற்ற தன்மை, அதனுடைய செயற்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கும் தன்மை போன்ற விடயங்களில் பாரிய மாற்றங்கள் செய்வதை இனியும் புறக்கணிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இதே கருத்தை அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பொதிலும் இதற்காக சில கண்துடைப்புகளைத் தவிர காத்திரமான எந்த முடிவையும் ஐ. நா. அமைப்பு மேற்கொள்ளாததையும் சுட்டிக் காட்டிய ஸஜ்ஜாதி, இது பெரும் துரதிஷ்டமாகும் என்றும் கவலை தெரிவித்ததார்.
மேலும் கருத்து தெரிவித்த ஸஜ்ஜாதி, சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் உலக ஐக்கியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் சில பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை இவ்வமைப்பின் பாரபட்சமான போக்கையும் அதன் செயல் திறனற்ற தன்மையையுமே பறைசாற்றுகின்றன என்று குறிப்பிட்டார். குறிப்பாக சியோனிஸ அநியாயக்காரர்கள் மூலம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் தொடர் அநீதிகளையும் அக்கிரமங்களையும் தட்டிக் கேட்காமல் அவ்வக்கிரமங்களுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொண்டு வருவதானது, உலக சமாதானத்திற்கு மாத்திரமன்றி இவ்வமைப்பின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான UNRWA அமைப்பும் யூத கொலைகாரர்களின் செயற்பாடுகளை 'கொடூரமானது' என்றும் 'மனிதாபிமானம் அற்றது' என்றும் வர்ணித்து இருப்பதையும், அவைகளை வன்மையாக கண்டித்துள்ளதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். இருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்போ இது விடையமாக எந்த வித காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காமல் அசஅந்தப் போக்கையே மேற்கொள்வதாகவும் ஈரானிய பிரதிநிதி குற்றம் சாட்டினார். அது மற்றும் அல்லாது நியாமான முறையில் செயற்பட எத்தனிக்கும் ECOSAC மற்றம் IAEA போன்ற அதன் அங்கத்துவ அமைப்புகளின் செயற்பாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடையூறு விளைவித்த சந்தர்பங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னுடைய நியாயமான தேவைகளுக்காகவும் சமாதான நோக்கத்துடனும் மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சியை பற்றிய விபரங்களை பல முறை அமைப்பிடம் எடுத்துக் கூறியும், அதற்கு எதிராக நியாயமற்ற முறையில்; பலத்தை உபயோகித்து அமைப்பின் சில அங்கத்தவர்களின் உள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்க அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது சட்ட விரோதமாக சில நாடுகள் அதிகாரம் செலுத்த முற்பட்டு வந்தமைக்கு சிறந்த ஒரு உதாரணம் ஆகும் என்றும் ஸஜ்ஜாதி குறிப்பிடார்.
தொடர்ந்து பேசிய அவர் இது போன்ற செயற்பாடுகளாவன இவ்வுயரிய அமைப்பை தாபித்ததன் உண்மை நோக்கங்கள் புதைபட்டுப் போகச் செய்யக் கூடிய விடயங்களாகும் என்று கவலை தெரிவித்ததார்.
ஈரானின் அணுத்திட்டம் முற்றிலும் சட்ட ரீதியானது என்பதை முழு உலகமும் ஏற்றிருக்கும் இந்த நிலையில், மேலும் அது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு பிரிவிற்கும் உட்படாத ஒரு விஞ்ஞான ஆய்வு நடவடிக்கையாக இருக்கும் நிலையிலும், அதை உலக பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் போல் காட்டி அந் நாட்டின் மீது யுத்த நடவடிக்கை எடுக்கும் படி சில அங்கத்தவர்கள் அமைப்பை வற்புறுத்தி வருவதையும் அவர் வன்மையாக கண்டித்தார்.
இது போன்ற செயற்பாடுகளினால் அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளுக்கு இடையே ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்ணியத்தையும் நம்பிக்கையையும் இழந்து அது ஒரு நகைப்பிற்கிடமான நிறுவனமாக தாழ்ந்து வருவதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். மேலும், கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகள் நியாயமாக நோக்கும் போது உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் கருத்தை பிரதிபளிக்க வேண்டியதாக இருக்க, குறைந்த பட்சம் அது அமைப்பின் அங்கத்தவர்களின் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபளிப்பதாகக் கூடி இருப்பது இல்லை என்றும் ஈரானிய பிரதிநிதி சுட்டிக் காட்டினார்.
இவைகளை நோக்கும் போது உலக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளே இருக்கும் இவ்வாறான பூசல்களையும் சிக்கல்களையும் குறைபாடுகளையும் தீர்ப்பது அவசியமாகும் என்றும் ஸஜ்ஜாதி கூறினார். மேலும், அங்கத்துவம் தரப்படாமல் இருக்கும் பல முஸ்லிம் நாடுகளுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்குவது பற்றி தீவிரமாக ஆராய்வதுடன் இவைகளை சாத்தியமாக்குவற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிர்வாக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதை இனியும் பிற்படுத்தக் கூடாது என்று ஈரானிய பிரதிநிதி வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment