பெண்களை ஒரு வகை இழிவானப் பிறவிகளாக ஒதுக்கித் தள்ளும் போக்கை நாம் சரித்திரம் முழுவதும் காணலாம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன் சில அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததை அவதானிகல்லாம். பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தின் கோட்டைகள் என புகழப்பட்டு வந்த எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களின் பாத சேவைக்கு மாத்திரம் தகுதியானவர்களாகவே கணிக்கப்பட்டனர்.
சுருங்கக்கூறின் பண்டைய கிரேக்க அறிஞசர்களாலும் பெண்கள் சுலபத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய, மிகவும் பலஹீனமான சிந்தனைச் சக்தி உள்ள, சதாவும் ஆண்களால் கண்கானித்து வரவேண்டிய ஒரு பரிதாபத்திற்குரிய பிரிவினராகவே கருதப்பட்டனனர்.
பெண்கள் என்பதற்கு இரண்டு விதமான வரைவிளக்கனங்களே அன்று இருந்தது. ஒன்று 'மனைவி' என்ற சட்ட அந்தஸ்த்து கொடுக்கப்டடவள். அவளது பயன் ஆணுக்கு சிற்றின்பத்தை தருவதும் சட்ட ரீதியான பிள்ளைகளை அவனுக்குப் பெற்றுத் தருவதுமேயாகும். பெண்களுக்குத் தரப்பட்ட இரண்டாவது நிலை 'மனைவியல்லாத' வெறுமனே ஆண்கள் பலருக்கு இன்பமளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும், வேலைகளை செய்வதற்காகவும், ஆண்களுடைய பணிவிடைகளுக்குப் உபயோகிக்கும், உள்ளமோ உணர்ச்சியோ இல்லாத பிண்டம் என்ற நிலையாகும்.
பண்டைய உரோமர்கள் பெண் எனப்படுபவள் சிறு பிள்ளைகளை போன்று அறிவு வளர்ச்சி அதிகம் பெறாதவள் என்றே நம்பினர். அவர்களது சொந்தக் குடும்பங்களில் கூட அவர்களுக்கு சொத்துரிமையோ வேறு வகையான உரிமைகளோ இல்லாத பரிதாப நிலையிலேயே அவர்கள் இருந்து வந்தனர். பெண் எனப்படுபவள் அவளை மனந்து ஆண் அல்லது அவளை உரிமை கொண்டுள்ள ஆண் நினைத்தால் எதையும் செய்யக்கூடிய, கேட்பாரற்ற ஒரு வகை ஜீவனாகவே கணிக்கப்பட்டு வந்தாள். மனைவியை, மகளை அல்லது தனது சகோதரியை மற்றொருவருக்கு தனக்குச் சொந்தமான அடிமையை விற்பது போன்று விற்பனை செய்து விடக்கூடிய அதிகாரமும் பண்டைய ரோமர்களுக்கு இருந்தது. ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் தந்தைக்குப் பின் அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனுக்குச் சொந்தமாகும் ஒரு சொத்தைப் போன்றே கணிக்கப்பட்டனர்.
இதை விட மோசமான நிலை பண்டைய எகிப்தில் பெண்களுக்கு இருந்தது. ஒருவன் இறந்து விட்டால் அவனது சொத்துக்களுடன் அவனுடைய மனைவியரையும் சேர்;த்தே கல்லறையில் வைத்து மூடி விடுவது அல்லது புதைத்து விடுவது அவர்களது சம்பிரதாயமாக இருந்து வந்தது.
இவ்வாறு பெண்களை மரணமடையும் அவர்களது கணவர்களுடன் சிதையில் இட்டு உயிரோடு எரித்து விடவேண்டும் என்ற நியதி ஹிந்து மதத்தில் இன்றும் இருப்பது மற்றுமன்றி அதை பலவந்தமாக நடைமுறைப்படுத்தப்படும் செய்திகள் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இன்றும் வந்தவண்ணம் இருப்பதை நாம் நன்கு அறிவோம். மனிதனாக பிறந்த எவரும் ஏற்காத இவ்வாறான கொடூரமான அனுஷ்டாணங்களை சட்டவிரோதமானது என எச்சரித்துள்ள நிலமையிலும் இவைகள் இன்றைய செய்மதி யுகத்திலும் தொடரும் நிலை, பண்டைய காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையை எங்களுக்குத் தெளிவாகவே உணர்த்துகின்றன.
பிரிட்டனில் கூட மணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டங்கள் 19 நூற்றாண்டிட்குப் பிறகே இயற்றபட்டதுடன் இந்த ஞானோதயம் வெள்யையர்களுக்கே தோன்றியது இஸ்லாம் உலகில் உதித்துச் சுமார் 13 நூற்றாண்டுகளுக்குப் பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் நிலைப்பாடு
ஒரு வீட்டில் பெண் குழந்தையொன்று பிறப்பது இறைவனின் அருளின் அடையாளமென நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர் மீது இறைவனின் கிருபையின் விஷேடமான பார்லை என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இறைவனின் தூதரவர்கள் அடிக்கடி தன் பெண் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவார்கள். தன்னுடைய பெண் மக்களுக்கு ஒரு தந்தை காட்டும் பரிவானது அவரை இறைவனிடத்தல் நெறுங்கச் செய்யும் செயல்களில் மிக மேலான செயல் என்றும் அவர்கள் சிலாகித்தார்கள்.
பெண்கள் எனப்படுபவர்கள் இறைவனால் ஆண்களுக்கு அருளப்படும் ஒரு விலை மதிபற்ற பொக்கிஷம் என்றும் இறைவனின் அருள் என்றுமே இஸ்லாம் வர்ணிக்கின்றது. மேலும் ஒருவனுடைய பெண் பிள்ளைகளின் திருப்தி அவனை சுவனபதிக்கே இட்டுச் செல்லும் சக்தியுள்ளவை என்றும் இஸ்லாம் கூறுகின்றது. மேலும் ஒருவன் தன்னுடைய தாயின் முகத்தை அன்புடன் நோக்குவது அவனுடைய பாவங்களை மண்ணிக்கப்படுவதற்குப் போதுமான ஒரு நற்செயல் என இஸ்லாம் மெச்சுகின்றது.
பெண்கள் தொடர்பான பல தீய பழக்க வழக்கங்களை இஸ்லாம் ஒழித்ததொடு பெண்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அதில் முதன்மையானதாகும். அதே போன்று பெண்களும் கல்வி கற்க வேண்டும் என அதை வற்புறுத்தும் ஒரே மதமும் இஸ்லாமேயாகும். நபிகள் (ஸல்) அவர்களின் பல்லாயிரக்கணக்கான ஹதீஸ் அறிவித்தல்களை பெண்கள் அறிவித்திருக்கும் நிலை இந்த உண்மைக்குப் போதுமான சான்றாகும். நபியவர்களின் அருமை மகளான பாதிமா (அலை) மற்றும் மனைவியர் களில் பலர் அறிவித்த பல ஹதீஸ்கள் இன்றும் போற்றப்பட்டு வருவதை நாம் இஸ்லாமிய உலகில் காணலாம். இவைகளை இஸ்லாமிய ஷரீயாச் சட்டங்களை இயற்றவதற்குப் போதுமான ஆதாரங்களாகவும் இஸ்லாமிய அறிஞர்கள்; ஏற்கின்றனர்.
ஒரு திருமணமான பெண் சம்பாதிக்கும் பணத்தில் அவளது கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையெனக் கூறும் இஸ்லாம், அதை குடும்பச் செலவிற்காக தர வேண்டுமெனக கணவன் ஒரு போதும் வற்புறுத்த முடியாது என்றே வலியுறுத்துகின்றது. குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பு ஆணையே சாரும் என்றும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. பெற்றோர் வழியால் ஒரு பெண்ணுக்குச் சொந்தமாகும் சொத்துக்கள் தொடர்பான சட்டமும் இது போன்றதே. நபிகள் (ஸல்) அன்னவர்கள் மணந்த கதீஜா (அலை) மக்காவிலேயே இருந்த மிகப்பெரும் செல்வந்தப் பெண்மனியாக இருந்தும் அவரது அநுமதியுடனேயே அவரது சொத்துக்களை நபிகள் (ஸல்) அவர்கள் பராமரித்து வந்தார்கள்.
பெண்கள் விடயத்தில் இஸ்லாம் இட்டுள்ள சட்டங்கள் இவை மாத்திரமல்ல. ஒரு பெண்ணை மணப்பவன் அப்பெண் தனது பிறந்த வீட்டில் எந்தெந்த வசதிகளை அனுபவித்து வந்;தாளோ, அத்தனை வசதிகளையும் தனக்குத் தரவேண்டும் என அவள் நிபந்தனை விதிக்கும் பட்சத்தில் அவ்வனைத்து சௌகரியங்களையும் அம்மனைவிக்கு செய்து தருவது கணவனின் கட்டாயக் கடமையாகும். பிள்ளைகளை வளர்ப்பது, உணவு தயாரிப்பது, ஆடைகளை துவைப்பது போன்ற எந்த வீட்டு வேலைகளையும் செய்ய முடியாது என்றோ அல்லது அதற்கு வேலைக்காரர்களை அமர்த்த வேண்டும் என்றோ அப்பெண் கூறினால் அவை அனைத்தையும் செய்து தர வேண்டியதும் கணவனின் கடமையாகும். ஆனால் தற்கால முஸ்லிம் பெண்கள் தங்களது கணவன்களின் மீதுள்ள கிருபையால் இவ்வாறெல்லாம் அவர்களை சிறமம்படுத்தாது 'போனால் போகட்டும்' என்று இவ்வத்துனைக் காரியங்களையும் தாமே இலவசமாக செய்து தருகின்றனர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
இஸ்லாமிய சட்டங்கள் பெண்கள் விடயத்தில் இவ்வாறே உள்ளன. இஸ்லாம் சாதாரணப் பெண்களுக்கு அளிக்கும் இந்த அந்தஸ்த்துக்களும் சௌகரியங்களும் நாம் முன்பு குறிப்பிட்ட பண்டைய எகிப்திய, உரோம மற்றும் கிரேக்கக் காலத்து அரசிகளும் அரசிளங்குமரிகளும் மட்டுமே அனுபவித்து வந்த சுகபோகங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்று வாழ்ந்த பெண்கள் மட்டுமல்ல ஆண் பெண் சமத்துவம் பேசும் இந்த நவீன யுகத்தில் அமெரிக்கா ஐரோப்பாவில் வாழும் ஏனைய பெண்கள் கூட கனவிலும் நினைத்துப்பாக்க முடியாத வசதிகளே இவை.
ஆனால் இஸ்லாத்தில் உள்ள இது போன்ற ஒப்பற்ற பல விடயங்கயுளும் உண்மைகளும் மறைக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் இந்த மேலான வாழ்வு வழிமுறையைப்பற்றி தவரானதொரு சித்திரத்தையே இஸ்லாத்தின் எதிரிகள் உலகிற்கு காட்ட முயன்று வருகின்றனர்.
திருமணச் சட்டங்கள் தொடர்பாகவும் இஸ்லாம் பெண்களுக்கு பூரணச் சுதந்திரத்தை அளித்துள்ளது. ஒரு கணவனை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அவள் தனது பெற்றோர்களதும் உறவினர்களதும் முடிவை மதித்து ஏற்கும் வழக்கத்தை நாம் நமது நட்டில் காண்கின்றோம். பெண் பிள்ளைகள் வீடுகளை விட்டு அதிகம் வெளியே செல்லாத அமைப்புள்ள எம் போன்ற நாடுகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு இதுவே சிறந்த லழிமுறையுமாகும். இருந்த போதிலும் பெற்றோர் தெரிவு செய்யும் மணவாளனை திருமணம் செய்தே ஆக வேண்டுமென இஸ்லாத்தில் எந்த கட்டாயமும் இல்லை. அவள் விரும்பாவிட்டால் அதை தெரிவிப்பதற்கு ஒரு பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்றே இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறு மணப்பெண்ணின் விருப்பத்திற்கு மாற்றமாக செய்யப்பட்ட திருமணத்தை 'செல்லாதது' என்றே ஷரீயா கூறுகின்து.
இதே போன்ற தமது வாக்கை பயன்படுத்தும் உரிமையையும் இஸ்வாம் பெண்களுக்கத் தந்துள்ளது.
இவையல்லவா பெண்களுக்குத் தரப்பட வேண்டிய உண்மையான சுதந்திரங்கள்? இவையல்லவா அவர்களும் விரும்பக்கூடிய சமூக அந்தஸ்த்து?
இவைகளை விட்டு விட்டு அவர்களுக்கு சமத்துவம் தருகின்றோம் சுதர்திரம் தருகின்றோம் என்று கூறிக்கொண்டு அவர்களை அரைநிர்வானப்படுத்து காட்சிப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும் மாற்றுவiதையே இன்றை உலகு சுதந்திரங்களாக அவர்களுக்குக் காட்டி வருகின்றது.
எவர் மறைக்கவும் தடுக்கவும் முயன்றாலும் கதிரசவனின் ஒளியைப் போன்றே உண்மையும் வெளிப்பட்டே தீரும். இஸ்லாம் என்பதோ உண்மைகளில் மிகவும் மேலான உண்மையாகும். அது சற்று தாமதித்தேனும் வந்தே தீரும். சத்தியத்தின் தன்மை அதுவே!
No comments:
Post a Comment