ஆக்கம்: கதரைன்
ஷாக்டேம்
(மத்திய
கிழக்கத்திய கற்கைகளுக்கான பெய்ரூத் மையத்தின் கூட்டு இயக்குநர்ளூ தீவிரவாத
இயக்கங்களைப் பற்றிய விசேஷத் தேர்வாய்வாளர்)
'புதிய
கிழக்கத்தியக் கண்ணோட்டம்' (NEO) சஞ்சிகையின் 14-06-2015 இதழில்
பிரத்தியேகமாக
வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: 'அபூதர்'
ஐ.எஸ்.ஐ.எஸ்.
வலுக்கட்டாயமாக ஓர் இஸ்லாமிய இயக்கமாக விலை போனாலும், அது வெளிப்படச் செய்;பவை, இன்னும் போதிப்பவை அனைத்தும், இஸ்லாத்திற்கும்
அதன் போதனை களுக்கும் எதிரானவையாகவே காணப்படுகின்றன. இந்த பிரிவீடு, உண்மையில் இஸ்லாத்தின் மாபெரும்
உட்பிரிவினைக்கும் அப்பால் தாண்டிச் செல்கின்றது. சவூதி அரேபியா உலகத்திற்கு
விற்பனை செய்ய மிகுந்த ஆவல் கொண்டிருக்கும் வெற்றுப் புனைகதையின் ஓர் அங்கமாக இந்த
இஸ்லாத்தின் உட்பிரிவினை அமைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல நூற்றாண்டு
காலமாக, மெய்யாகவே
மதரீதியான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டிருக்கின் றனளூ மேலும், முஸ்லிம்கள் உண்மையிலே தத்தம் சிந்தனைப்
பிரிவுகளினதும் சட்ட விதிமுறை களினதும்
முறைமை நிலை, சட்டமூலங்களுடனான
உடன்பாடு, மதரீதியான மேன்மை
போன்ற விஷயங்களில் சண்டை பிடித்திருக்கின்றனர், வாதிட்டிருக்கின்றனர் என்றால், அது 'மனிதர்கள் தவறி விடும் அதே வேளை இஸ்லாம் பரிபூரணமானது' என்ற அறிவோடும் மிக்க தெளிவோடும் அறிஞர்கள்
மேற்கொண்ட வினைமுறைகளாகும்.
இஸ்லாத்தில்
வேறுபாடுகள், இறைவனின்
பாதையில் நன்றாக நடந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வ வேட்கையிலிருந்து வெளி வந்தவையே
தவிர, மாறாத மரிக்கச் செய்ய
முடியாத, வன்மையான ஓர்
உண்மையிலிருந்து மக்களைத் தடம் இல்லாமல் ஆக்குவதற்காக அல்ல.
ஆதமிலிருந்து
நூஹ், இப்ராஹீம், இயேசு, யஹ்யா மற்றும் முஹம்மது (அவர்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாவதாக) வரையிலான
இறைதூதர்களின் நீண்ட வரிசையைப் பின்னோக்கிப் பார்க்கின்ற போது, இறைவனின் இறுதிக் கட்டளையும், தனது படைப்புகளிடத்தில் இறைவனின் எலலையற்ற
பெருங் கருணையும், அமைதிக்கான அவனது
அதிகார ஆணையுமான இறை ஏகத்துவத்தில் அவர்கள் அனைவரும் பங்கு கொண்டிருந்தனர். அந்தப்
புனிதத் தூதர்கள் நமது வரலாற்றில் பல்வேறு காலப் பகுதிகளிலும், இடங்களிலும் வந்திருந்த போதிலும், அவர்களுடைய தூதின் உள்ளியல்பு, இறைவனின் நாட்டத்தைப் போன்று நிரந்தரமானதாகவும்,
அசைக்க முடியாத தாகவும்
இருந்தது. ஆதமின் கடுங் கழிவிரக்கத்திற்காக அழுது புலம்பும் முதலாவது குரல்களி
லிருந்தும் பாவமன்னிப்பிற்கான கோரிக்கைகளிலிருந்தும், முஹம்மது நபியவர்களின் இறுதி மூச்சு வரை,
இறைவன் புறத்திருந்து
நமக்கான செய்தி (தூது) எப்பொழுதுமே 'கீழ்ப்படிதல்' எனப் பொருள்படும்
இஸ்லாமாகவே இருந்தது. உண்மையிற் சொல்லப் போனால், எப்போதும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
ஒரேயோர்; இயல்பான
சுதந்திரம், எல்லாவற்றையும்
படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடத்தில் உடலாலும் ஆத்மாவாலும் சரணடைவதுதான்.
இஸ்லாம், முஹம்மது நபி (அவர் மீது சாந்தி
உண்டாவதாக)யிலிருந்து துவங்கவில்லைளூ மாறாக, அது அவருடன், அவரின் மூலமாக மறுபடியும் பிறந்ததுளூ சூரிய
அஸ்தமனத்திற்கு முந்திய ஒரு கடைசி அழைப்பாகவும், நாம் பின்பற்றுவதற்கான ஓர் இறுதி அருளாகவும்
வழிகாட்டலாகவும் வந்தது -அல்லது இல்லையா?- தீமை முற்றிலும் நிரம்பியிருக்க முடியும் முன்னால் ஒரு கடைசி நம்பிக்கை ஒளிக்
கீற்றாகவும், எழுதி
வைக்கப்பட்ட நமது விதியின் கடைசி அத்தியாயமாகவும் அது அமைந்தது.
இஸ்லாம் அதன்
இறுதி நாளில் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறுதான் அதன்
முதல் நாளிலும் இருந்ததுளூ நாம்தான், தெய்வீகத்திற்கு உரிமை கொண்டாடி லேபள் (அடையாளச்சீட்டு) ஒட்டும் நமது
தேவைக்காக, அதனை பல
பெயர்களில் அழைக்கத் துவங்கினோம். மீண்டும் நாம்தான், மண்ணுலக விருப்ப நோக்கங்களை அடைந்து
கொள்வதற்காக, வழி விலகிச்
சென்றிருக்கிறோம்ளூ இரகசியச் சூழ்ச்சிகளிலும், பேராசைச் செயல்களிலும் தீய-தவறான வழிகளைப்
பயன்படுத்து வதிலும் இறங்கியிருக்கிறோம்.
வஹ்ஹாபிஸம்;,
திட்டமிட்டு கட்டமைக்கப்
பெற்ற ஒரு நெறிபிறழ்வு, ஒரு கூறுபாடு,
வெறுத்தொதுக்க வேண்டிய
ஓர் அருவருப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லைளூ அது, உள்ளிருந்து அரிக்கும் புற்றுநோயைப் போல,
இஸ்லாமிய உலகம் முழுதும்
பரவி இன்று எல்லா மதங்களையும் அழிப்பதற்கு அச்சுறுத்துகின்றது.
வஹ்ஹாபிஸமும்
அதன் படையணிகளான அல்காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
போகோஹராம், மற்றவை எல்லாம், மத நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்துபட வே;ண்டும் என நாடுகின்ற பிற்போக்குத் தனமான ஒரு
நாத்திக இயக்கத்தின் வெளிப்பாடுகள்தாம்.
வஹ்ஹாபிஸம்
இஸ்லாமன்றுளூ இன்னும், எப்பொழுதுமே
இஸ்லாம் வஹ்ஹாhபிஸமாக இருக்க
முடியாது. இஸ்லாம், கொலை, கொள்ளை, இரத்தத்தை உறைய வைக்கும் அடாத காட்டு மிராண்டித்தனம் என்பனவற்றுக்கு
எப்பொழுதாகிலும் அங்கீகாரம் கொடுக்கும் எனக் கற்பனை செய்வதே ஒரு பெரும்
மடமையாகும். இஸ்லாம், கொடுங்கோன்மை,
அநீதி அக்கிரமம், பெரும் பழி, வஞ்சகம், பேரவா, தீவிரவாதம், துறவறம்
போன்றவற்றையும், சரிசமநிலை,
நல்லதன்மை, நேர்மை, கருணை, அன்பு, இரக்கம்
என்பனவற்றைக் கொண்டிராத அனைத்தையுமே எதிர்க்கின்றது.
வஹ்ஹாபிஸம்
எதுவாகவும் இருக்க முடியுமென்றால், அது
இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும்ளூ ஏற்கனவே பலர் அதனை
அழைத்ததைப் போன்று - இஸ்லாம் என்பது வஹ்ஹாபிஸமன்று. வஹ்ஹாபிஸம் என்பது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற ஒரு
தனிமனிதரின் அரசியல் அபிலாசைகளின் தவறாக வழிநடாத்தப் பெற்ற கூற்றுகளைத் தவிர
வேறொன்றும் இல்லைளூ இந்த மனிதர், இஸ்லாத்தின்
கட்டுமான அமைப்பை அரித்துப் போடுவதற்கும், அதன் உம்மத்துடைய (சமுதாயம்) ஐக்கியத்தில் வெடிப்புகளை உண்டாக்குவதற்கும்,
பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்தினால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவராவார்.
வஹ்ஹாபிஸம்,
தனது மண் மற்றும் மனது தொடர்பான
கபளீகரத்தை, இன்று சவூதி
அரேபியா என அழைக்கப்படும் ஹிஜாஸில் துவங்கியதனால், அல் சவூத் என்ற ஒரு குடும்பம, இந்த வன்முறையிலான – பிற்போக்குத்தனமான சிந்தனைப் பிரிவில், தனக்கு அதிகாரத்தில் உரிமை கோருவதற்கும்,
அதிகாரத்தைத் தன் கைகளில்
வைத்துக் கொள்வதற்கும், மிகப் பெரும்
வாய்ப்பு அமைந்து இருக்கின்றது எனக் கண்டு கொண்டது. இந்தத் தீங்கான-படுகேடான
கூட்டு, பல
நூற்றாண்டுகளாக அரேபியாவின் ஆகாயங்களை இரத்தக் கறை படியச் செய்தும், அதன் நச்சு வாயுகளின் விளைவாக (அருவருப்பான
ஆரோக்கியமற்ற செயல்களினால்) அடிவானத்தை இருள் கவ்வச் செய்தும் விட்டது.
வஹ்ஹாபிஸம்,
இப்போது
அடங்காப்பிடாரியான ஓர் அசிங்கத்தைப் பெற்றெடுத்திருக்கின்றதுளூ அதுதான், தன்னைத் தவிர வேறெதையும் சகித்துக் கொள்ளாத அதி
தீவிரவாதம். அது, ஸலஃபிகளினதும்,
வஹ்ஹாபிகளினதும்
விஷத்தில் குளித்தும் குடித்தும், அல் சவூதின் பல
நூறு கோடி பெட்ரோ டொலர்களினால் விசையேற்றப்பட்டும் நடமாட விடப்பட்டிருக்கும் ஒரு
மிருகம்ளூ புதிய ஏகாதிபத்தியவாதிகள், உலகின் அந்த செல்வ வளம் நிறைந்த மூலைகளிலெல்லாம் தாம் இராணுவரீதியாகத்
தலையிடுவதை நியாயப்படுத்த, சூழ்ச்சியுடன்
பயன்படுத்திக் கொள்ளும் ஓர் ஆயுதம்.
ஆனால், அந்த சக்திகள் தம்மை மென்மேலும் ஸ்தாபித்துக்
கொள்வதற்கும், மற்றவர்களை
அடிமைப் படுத்தி வைப்பதற்கும் உலகெங்கிலும் அச்ச வலைப் பின்னலொன்றை இழைந்து,
தாம் தந்திரமாகச்
செயல்படுகிறோம் என நினைத்துக் கொண்டனளூ என்ற போதிலும்;, அவர்களின் மூளையில் உதித்த குழந்தையான
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் வெறுப்பையும் குரோதத்தையும் கக்கும் அதன் சகோதர அமைப்புகள்
மீதான அந்த சக்திகளின் பிடி தளர்ந்து கொண்டு வருகின்றதுளூ ஏனென்றால், அவை அனைத்தும் அணுவாயுதமயமாகி விட்டனளூ மேலும்,
அவை அவற்றின்
தந்தைமார்கள் விலங்கிட்டு வைத்திருந்த சங்கிலிகளுக்குள் இப்பொழுது
கட்டுப்பட்டிருக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின்
அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான
கொடூரங்கள், ஸலஃபிஸத்தினதும்,
வஹ்ஹாபிஸத்தினதும் அதன்
மற்ற கொள்கைகளினதும் உள்ளார்ந்த அடிப்படைத்தன்மையான வன்முறையின் தனித்துவ
அடையாளமாக அமைந்திருக்கின்றன. இன்னும் சொல்வதென்றால், எல்லா வன்முறைகளினதும் மூலம் அல்லது ஊற்றுக்கண்
எது என்பதை உலகம் இப்போது அறிந்திருந்தாலும், அதற்கெதிராக எந்த சக்தியும் பேசத்
துணிந்ததில்லைளூ மாறாக, அதன் இலக்காக
குறியிடப்பட்டு பாதிப்புக்குள்ளான இஸ்லாத்தை வெறுக்கும் போக்கை உலகம்
தேர்ந்தெடுத்துக் கொண்டது.
வஹ்ஹாபிஸம்தான்
சர்வதேசப் பயங்கரவாதத்திற்கான மிகப்பெரும் மூலகாரணம் என ஜூலை 2013ல் ஐரோப்பியப் பாhளுமன்றம் அடையாளப்படுத்திக் காட்டியது. ஆயினும்,
சவூதி அரேபியா வின் தலைமை
முஃப்தி, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை
மிக வன்மையாகக் கண்டிக்கின்ற போது, 'தீவிர வாதம், பயங்கரவாதம்,
வன்முறை என்பன எந்த
வகையிலும் இஸ்லாத்தைச் சேர்ந்தவை அல்ல' என வலியுறுத்தி இருக்கின்றார்ளூ அதன் பின்னரும், தலைமை முஃப்தி வஹ்ஹாபிஸத்தின் வரலாற்றைப் பற்றி
அல்லது வஹ்ஹாபிஸம் உண்மையில் எதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது பற்றி, மீண்டும்; தெரியாதவராகவும், விளங்காதவராகவும் அக்கறையில்லாதவராகவும்
இருக்கின்றார்!
18ம் நூற்றாண்டில்,
முஸ்லிம் சாம்ராஜ்யச்
சக்திகள் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த புறப் பிரதேசங்களை இழக்க ஆரம்பித்த போது,
இஸ்லாமிய உலகின் பல
பகுதிகளிலும் மறுமலர்ச்சி இயக்கங்கள் தலை தூக்கின. இவ்வேளை மேற்கில், அரசாங்கங்கள் நாட்டு நிர்வாகத்திலிருந்து
கிறிஸ்தவ தேவாலயத்தை வேறுபடுத்தத் துவங்கியிருந்தன. ஆயினும், மதத்தை ஓரங் கட்டும் இந்த லௌகீகக் கொள்கை ஒரு
தீவிரவாதப் புதுமையாக அமைந்திருந்தது. அதே சமயத்தில் ஐரோப்பா திட்டமிட்டுக்;
கொண்டிருந்த வர்த்தகப்
பொருளாதாரத்தைப் போன்றே இதுவும், புரட்சிகரமானதாகத்
திகழ்ந்தது. வேறு எந்த கலாச்சாரமும் மதத்தை, அரசியல் போன்ற உலக ஈடுபாடுகளிலிருந்து வேறான,
ஒரு தனிப்பட்ட
நடவடிக்கையாகக்; கருதியது
கிடையாதுளூ எனவே, முஸ்லிம்களைப்
பொறுத்தவரையில், சமூகத்தின்
அரசியல் துண்டாடலும் கூட ஒரு மார்க்க(மத) பிரச்சினையாகக் காணப்பட்டது. ஏனென்றால்,
குர்ஆன் முஸ்லிம்களுக்கு
ஒரு புனிதத்தன்மை வாய்ந்த பணித்திட்டத்தை வழங்கியிருந்தது: அதாவது, 'ஒவ்வொருவரும் சரிசமமாகவும் கண்ணியத்துடனும்
நடாத்தப்படுகின்ற விதத்தில் அமைந்த ஒரு நீதமான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது'.
உம்மத்தின் அரசியல் நலன்,
எப்பொழுதுமே தனிமுறைப்
புனிதத்தன்மை வாய்ந்த ஒரு முக்கியத்துவ விஷயமாகக் கருதப்பட்டது. ஏழைகள்
அடக்கியொடுக்கப்பட்டால், சவால்களைச்
சமாளிக்க முடியாதவர்கள் சுரண்டப்பட்டால், அல்லது அரச நிறுவனங்கள் ஊழலில் திளைத்திருந்தால், சமூகத்தைத் திரும்பவும் அதன் சரியான தடத்தில்
செல்ல வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் முஸ்லிம்கள் மேற்கொள்ள கடமைப்படுத்தப்
பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் தமது
இழந்த அதிகாரத்தையும் கௌரவத்தையும் எப்பொழுதாகிலும் திரும்பப் பெற்றுக் கொண்டால்,
அவர்கள் தமது (இஸ்லாமிய)
நம்பிக்கையின் அடிப்படைகளுக்கு மீண்டு வரவேண்டும் என 18ம் நூற்றாண்டு மறுமலர்ச்சியாளர்;கள் நம்பினர்;ளூ இதன் மூலம், அரசியல் அமைப்புக்கு, உலகாயதம் அல்லது இந்த உலக குறிக்கோள்கள்
அல்லாமல், இறைவன் தான்
மேலதிகாரம் செலுத்துவான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள்
நினைத்தனர். அத்தகைய விருப்பங்களை அதன் வழியிலிருந்து திருப்புவதற்காகத்தான்
வஹ்ஹாபிஸம் வந்தது.
இந்த 'அடிப்படைவாதம்' பற்றி, அது போரில் ஈடுபடுகின்ற ஒன்று என்ற வகையில் இதுவரை எதுவுமில்லைளூ மாறாக,
அது சமூகத்தைத்
திரும்பவும் ஒளிமயமாக்குவதற்கு ஓர் அடிமட்ட முயற்சிளூ ஜிஹாத் அதில்
தொடர்புபடுவதில்லை.
சமூகம் செல்ல
வேண்டிய வழியிலிருந்து விலகி;ப் போய்க்
கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் மாத்திரம், இஸ்லாத்தின் வேருக்கு (அடிப்படைக்கு)த்
திரும்பிச் செல்லும் கருத்தோட்டம் உண்மை யில் புகழத்தக்கதாகும். வஹ்ஹாபிஸம்,
அத்தகைய இலட்சியக்
கொள்கைக்குத் தவறான வழியைக் காட்டுவதற்கே வேலை செய்யும்ளூ அது, இஸ்லாத்தின் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த
தூண்களை அதன் தலையிலேயே முறுக்குவதைக் கொண்டும், வலிமை கொண்டவர்களுக்குச் சேவகம்
செய்வதற்காகவும், பலவீனர்களை
அடிமைப்படுத்துவதற்காகவும் வேண்டி இஸ்லாமியச் சட்டங்களையும் அதன் வேத நூல்களின்
விளக்கத்தையும் முரண்பட்ட வகையில் வழங்குவதைக் கொண்டும் இந்தத் திட்டத்தை
நிறைவேற்றும்.
இஸ்லாத்தைப்
பற்றி வஹ்ஹாபிஸத்தின் கருத்து விளக்கத்தின்படி, பெண்கள் புறப்பொருளாகக் கருதப்படும் பழங்கால
நிலைக்கு செல்ல வைக்கப்படுகின்றனர். குர்ஆனின் தட்டுத்தளர்வற்ற பாதுகாப்பின் கீழ்
எழுச்சி பெறுவதாய் இஸ்லாம் கண்ட அந்த மகத்தான பெண்மணிகள் பலர், முஸ்லிம் பெண்கள் கவனமாக அவதானித்து, அவர்களைப் போன்றே தாமும் ஆவதற்கு விழைகின்ற,
அந்த முன்மாதிரிகளான
மர்யம், கதீஜா, ஃபாத்திமா, ஜெய்னப் என்பவர்களை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அவர்களின் வீடுகளிலேயே சங்கிலியால் பிணைத்துப்
பூட்டி வைத்திருந்திருப்பார்.
இஸ்லாம்
சமூகத்தினுள் பெண்களுக்கு அவர்களுடைய நியாயமான இடத்தை வழங்கிய வேளை, வஹ்ஹாபிஸம் அவர்களுக்கு எல்லாவற்றைமே வழங்க மறுத்தது. இஸ்லாம் பெண் களுக்கு
எதிராக மிக ஆழமான அளவில் இரண்டகமாக நடந்து கொள்கிறது என்ற கூற்றைத் தொடர்ந்து
நம்பி ஆதரித்து வரும் உங்களில் பலர், இஸ்லாம் அல்லாமல் அதற்கான ஆண்களின்; விளக்கங்கள்தான் உங்களின் கோபத்திற்குக் காரணமாகும் என்பதை நினைவிற் கொள்ள
வேண்டும்.
இஸ்லாம், இறைவனின் நாட்டத்திற்கு இணங்க பெண்களின்
அந்தஸ்தைப் பாதுகாத்துத் தந்தது. இஸ்லாம், பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலாருக்கும் அவர்களின் (மத)நம்பிககையைப்
பொறுத்தவரையில், ஒரு சரிசமமான
இடத்தை வழங்குகிறதுளூ அவர்களின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் மாத்திரம்தான்
அவர்கள் வேறுபடுகின்றனரே தவிர, தகுதியிலன்று. இஸ்லாம், பெண்களுக்கு வேண்டியனவற்றைக் கொடுக்குமாறும்,
அவர்களுக்கு பணம்
சம்பந்தமான பாதுகாப்பு மற்றும் பௌதிகப் பாதுகாப்பு இரண்டையும் அளிக்குமாறும்
ஆண்களைக் கோருகிறது. இஸ்லாத்தின் கீழ், விவாகம் செய்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்,
வேலை பார்ப்பதற்கும்
பெண்கள் சுதந்திரமுடையவர்கள் ஆவர். இஸ்லாத்தின் கீழ், பெண்களை வாங்கவோ, பண்டமாற்று செய்வதற்கோ, அல்லது அடக்கியொடுக்கவோ முடியாது. இஸ்லாத்தின்
கீழ், பெண்கள் மேற்கத்தியப்
பெண்டிரில் பெரும்பாலோருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்திற்கு அதிகமாக
அனுபவிக்கின்றனர் சமூகம்தான் அந்த உரிமைகளை மறுத்து வருகின்றதே தவிர, இஸ்லாமன்று. குர்ஆனைப் படியுங்கள்ளூ நீங்கள்
அதனைக் கண்டு கொள்ளலாம்.
மார்டின் லூதரைப்
போன்று இப்னு அப்துல் வஹ்ஹாபும், இஸ்லாத்தின்
ஆரம்ப காலப் போதனை களுக்குத் திரும்பிச் செல்லவும், அதன் பின்னர் இடைக்காலத்தில் சேர்க்கப்பட்ட
அனைத்தையும் பலவந்தமாக வெளியே தள்ளுவதற்கும் தான் விரும்புவதாக உரிமை கோரினார்.
அத்தகைய குறிக்கோள்களை அடைவதற்காக, அவர்
சூஃபிஸத்தையும் ஷீஆ இஸ்லாத்தையும் எதிர்த்தார்ளூ அவற்றிற்கு 'இஸ்லாத்திற்கு எதிரான புதுமைகள் (பித்அத்)'
என பெயர்ச்சீட்டு
ஒட்டினார். அதேவேளை, அவையிரண்டும்
மதநம்பிககையில் சர்வாதிகாரம் செலுத்துவதை எதிர்;த்தன. அவர், பல நூற்றாண்டுகளாக உலமா(அறிஞர்)களினால் வெளிக்
கொணரப்பட்ட புலமை வாய்ந்த குர்ஆன் விளக்கவுரைகளைப் புறந்தளளுமாறும், குர்ஆன் வசனங்களைத் தாமாகவே பொருள்
விளங்குமாறும் அல்லது அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அதனை விளங்குமாறும், எல்லா முஸ்லிம்களையும் வற்புறுத்தக்
கிளம்பினார்.
இது, இயலபாகவே மத அறிஞர்களைச் சீற்றம் கொள்ள
வைத்ததுளூ மேலும், மக்களால்
பெரிதும் போற்றப்படுகின்ற இந்த மத ஈடுபாடுகளில் குறுக்கீடு செய்தால், சமூகத்தில் அமைதியின்மை உருவாகுமென நம்ப்pய உள்நாட்டு ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்தது.
ஆயினும், முடிவில் இப்னு
அப்துல் வஹ்ஹாப், நஜ்தின் ஒரு
கோத்திரத் தலைவரான முஹம்மது இப்னு சவூது என்ற ஒரு காப்பாளரைக் கண்டு கொண்டார்.
இவர் அவருடைய கொள்கைகளை ஏற்றுப் பினபற்ற முன்வந்தார். இப்னு சவூது உடனடியாக ;வஹ்ஹாப்pஸத்தை சட்டத்திற்கு புறம்பான கொள்ளை களுக்கும்
மற்றும் நிலப் பகுதிகளின் அபகரிப்புக்குமான தனது இராணுவரீதியான போர் முஸ்தீபு
களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டார்ளூ அதே நேரத்தில், இத்தகைய வன்முறைகள் எல்லாம், பெரிய அளவிலான நன்மைகளைக் கொண்டு வருவதற்காகத்
தான் நிகழ்த்தப்படு கின்றன என ஒரு காரணத்தை இப்னு சவூது அழுத்திக் கூறினார்.
இன்றுவரை, அல் சவூது உடைய
குடும்பம் அத்தகைய குரூரமான-குருதி வடிகின்ற காலடித் தடங்களைத் தான் பின்
தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.
இப்னு அப்துல்
வஹ்ஹாப் உடைய கொள்கைக்கு வேதநூல்கள் மிக முக்கியமானவையாகத் திகழ்ந்த போதிலும்,
இஸ்லாத்தைப் பறறிய தனது
தனிமுறை கருத்துப் பாங்கு மட்டுந்தான் செல்லுபடியானது என அவர் வலியுறுத்துவதைக்
கொண்டு, குர்ஆனின் தூதை
மிக வன்மையான முறையில் உருச்சிதைத்தார். 'இறைநெறியில் யாதொரு கட்டாயமோ-நிர்ப்பந்தமோ கிடையாது' (2::256) என குர்ஆன் மிக உறுதியாகக் கூறிக்
கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள்,
மாபெரும் இறைதூதர்கள்
அனைவரினதும் வேத வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் (3:84) என அது நியதி வகுத்திருக்கிறதுளூ மேலும் அது,
மதப் பன்மைத் தன்மையை,
இறைவனின் நாட்டத்தில்
உள்ளது (5:48) என்று
விவரிக்கின்றது. வஹ்ஹாப்pஸம் வலிய வந்து
எல்லாவற்றையும் மோதி வீழ்த்தும் வரையில், முஸ்லிம்கள் சக முஸ்லிம் ஒருவரை இறைநம்பிக்கை இல்லாதவர் (காஃபிர்) எனப்
பறைசாற்றும் தக்ஃபீரி நடைமுறையைப் பற்றி, பாரம்பரியமாக முன்னெச்சரிக்கையாய் இருந்து வந்திருக்கின்றனர். இந்நேரம்
வரையில், ஏனைய மத
நம்பிக்கைச் சம்பிரதாயங்களை முனைப்பாக மதிக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்து வந்த
சூஃபிஸம்தான், இஸ்லாத்தின்
மிகவும் மக்கள் மயமான வடிவமாகக் காணப்பட்டதுளூ இன்னும், சமூகம் மற்றும் மதம் சார்ந்த வாழ்க்கை
இரண்டிலும் முக்கியமானதொரு பங்கைக் கொண்டிருந்தது. 'உங்கள் சொந்த மத நம்பிக்கையை, ஏனையவை அனைத்தையையும் நிராகரிக்கும் வகையில்,
பிரத்தியேகமாகப்
பாராட்டாதீர்கள்' என மாபெரும் ஆன்ம
ஞானி இப்னு அல் அரபி (இறப்பு 1240) வலியுறுத்தினார்.
அனைத்தையும் அறிந்தவனும், அனைத்து இடங்
களிலும் ஏக காலத்தில் இருப்பவனும் ஆகிய இறைவனை, ஏதாவதொரு மதநம்பிக்கைக் கோட்பாட்டிற்குள்
கட்டுப்படுத்தி வைக்க முடியாது'. ஒரு சூஃபியைப்
பொறுத்தவரை, தான் 'ஒரு யூதனோ அல்லது ஒரு கிறிஸ்தவனோ அல்லன்ளூ ஏன்,
ஒரு முஸ்லிம் கூட அல்லன்'
எனக் கோருவது சர்வ
சாதாரணமானதாகும்ளூ ஏனெனில், உங்களுக்கு
ஒருமுறை தெய்வீகத் தரிசனம் கிட்டிவிட்டால், நீங்கள் மனிதன் உருவாக்கிய இந்த வேறுபாடுகளைப்
பின்னால் விட்டுவிடுவீர்கள்.
இப்னு அப்துல ;வஹ்ஹாபின் மரணத்திற்குப் பிறகு, வஹ்ஹாப்pஸம் மென்மேலும் வன்முறையான போக்கைக் கொண்டதாக
மாறியதுளூ அரசக் கொடுங்கோன்மையின் ஒரு செயற்கருவியாக விளங்கியது. அல் சவூது ஒரு
தன்னாட்சி அரசை நிhமாணிக்க
நாடியதால், இப்னு சவூதின்
மகனும் வாரிசுமான அப்துல் அஸீஸ் இப்னு முஹம்மது, எதிர்த்து நின்ற மக்கள் கூட்டங்களை ஒட்டு;
மொத்தமாகப் படுகொலை
செய்வதை நியாயப்படுத்துவதற்கு, 'தக்ஃபீர்'
சுலோகத்தைப்
பயன்படுத்தினார். 1801ல் அவரது
இராணுவம், ஷீஆக்களின் புனித
நகரமான கர்பலாவை (இன்றைய ஈராக்கில் அமைந்துள்ளது) முற்றாகச் சூறையாடி, இமாம் ஹுஸைனின் சமாதிக் கல்லறையில்
வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்ததோடு நின்றுவிடாமல்,
பெண்கள் மற்றும்
குழந்தைகள் உடபட ஆயிரக்கணக்கான ஷீஆக்களை வெட்டிப் படுகொலை செய்ததுளூ 1803ல், அச்சத்திலும் பீதியிலும், புனித மக்கா
நகரம் சவூதித் தலைவரிடம் சரணாகதி அடைந்தது.
புனித மதீனா
நகரத்தின் சூறையாடலைப் பற்றி நாம் மிக கொஞ்சமாகவே நினைவில் வைத்திருக்கிறோம்: அல்
சவூதின் படையணிகள், பள்ளிவாசல்களையும்
பள்ளிக்கூடங்களையும் வீடுகளையும், வாரிக்கொள்ளையிட்டனளூ
அல் சவூதின் இராணுவம் நூற்றுக்கணக்கான ஆண்களை யும் பெண்களையும் குழந்தைகளையும்,
அவர்களின் அலறல்களுக்குச்
செவி கொடாதவர்களாக படுகொலை செய்தது. இஸ்லாத்தின் மிகவும் புனிதம் வாய்ந்த நினைவுச்
சின்னங்களைப் பாதுகாக்குமாறு இமாம்கள் அவர்களிடம் தாழ்மையுடன் வேண்டிக்
கொண்டிருந்த போது, அல் சவூதின்
ஆட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து, மதீனாவின்
நூலகத்தைத் தீக்கிரை யாக்கினர். இஸ்லாத்திற்கு மிகுந்த வரவேற்பு நல்கிய அதே நகரை,
அல் சவூது ஓர்
எடுத்துக்காட்டாக்கி இருந்தது. இஸ்லாத்தின் முதலாவது பள்ளிவாசல் எங்கு எழும்பபியதோ, அந்த மண்ணை அல்
சவூது இரத்தத்தில் தோய்த்து சிவப்பாக்கி இருந்தது. எங்கு. இறுதி; இறை தூதரின் காலடிச் சுவடுகள் இன்றும்
எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனவோ அங்கு, பேரச்சத்தால் கதறி அலறும் குரல்களைக் கொண்டு, அல் சவூது சூழவுள்ள காற்றை நிரப்பியது.
ஆனால், அத்தகைய பயங்கரங்கள் வரலாற்று நூல்களிலிருந்து
வாகாகத் துடைத்தழிக்கப்பட்டுப் போயின. அத்தகைய குருதி தோய்ந்த, காட்டுமிராண்டித்தனமான வஞசனைகளின் கதைகளெல்
லாம், அல் சவூது வரலாற்றைத்
திரும்ப எழுதவும,; இறை தூதரவர்களின்
வீட்டோடு வழி மரபு கோரவும் எத்தனித்த போது, இந்த குடும்பத்தினரால் முழுமையாக விழுங்கி
ஏப்பமிடப்பட்டுப் போயின.
இறுதியாக,
1801ல் உதுமானியர்கள்
எகிப்தின் ஆளுநர் முஹம்மது அலீ பாட்ஷாவை வஹ்ஹாபி படைக்குழுக்களை நசுக்குவதற்கும்,
அவர்களின் தலைநகரை
அழிப்பதற்கும் அனுப்பி வைத்தனர். ஆயினும், முதலாவது உலக மாயுத்தத்தின் போது, வஹ்ஹாபிஸம் ஒரு அரசியல் சக்தியாக மீண்டும் பரிணமித்ததுளூ அது போழ்து, சவூதி கோத்திரத் தலைவர் -இன்னொரு அப்துல்
அஸீஸ்- தனி நாட்டிற்கு புதியதொரு அழுத்தம் கொடுக்கத் துவங்கி, அவருக்கு விசுவாசமான இக்வான் (;சகோதரத்துவம்) என அழைக்கப்பட்ட காடடரபிகளின்
இராணுவத்தைக் கொண்டு, மத்திய கிழக்கில்
தனக்காக ஒரு பெரிய அரசாட்சியை முயன்று உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின்
வேர்கள் இந்த இக்வானில் அமைந்திருப்பதை நாம் காணலாம். கோத்திரப் பழங்குடிக்
குழுக்களைத் துண்டு துண்டாக்கி, இஸ்லாத்துடன்
ஒவ்வாததாகக் கருதப்பட்ட நாடோடி வாழ்க்கையிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக,
வஹ்ஹாபி சமயக் குரவர்கள்
இந்த காட்டரபிகளைப் பாலைவனப் பசுந்;திடல்களில்
குடியமர்த்தினர்ளூ அவர்கள் அங்கு கால்நடைப் பண்ணைத் தொழிலையும் ஒரே இடத்தில்
உட்கார்ந்து செய்யும் கைவினைத்
தொழில்களையும் கற்றனர்ளூ அத்துடன் கூடவே அவர்கள் வஹ்ஹாபி இஸலாமியப
போதனையால் மூளைச்சலவை செய்யப்பட்டனர்ஃ காலங் காலமாக அவர்கள் ஈடுபட்டு வந்த
கால்நடைகளைக் கொள்ளையிடும் காஸூ திடீர் தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து வஹ்ஹாபி
பாணி ஜிஹாத்களுக்கு மாற்றப் பட்டதால், இந்தக் காட்டரபிப் போராளிகள் மென்மேலும் கட்டுமீறிய மூர்;;;;;;;;;;க்கமும் தீவரவாதமும் உள்ளவர்களாகக் காணப்பட்டனர்ளூ அவர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் சவூதிகளல்லாத அரபி களை
எதிர்;;;;;;;;;ப்படுகின்ற போது,
தம் முகங்களை மூடிக்
கொண்டும், நபியவர்கள்
உபயோகிக்காத ஆயுதங்களை வெறுத்தொதுக்கியதால் ஈட்டிகளையும் வாள்களையும் பயன்படுத்தி
போரிட்டுக் கொண்டும் இருந்தனர்ளூ இந்தக் காட்டரபிகள் பழம்பாணி காஸூ திடீர்
தாக்குதல்களில் எப்பொழுதும் உயிரிழப்பு
மற்றும் சேதங்களை மிக குறைந்த அளவாகக் கட்டுப்படுத்திக் கொண்டதோடு அல்லாமல்,
போரில் ஈடுபடாதவர்களைத்
தாக்குவதிலிருந்து தவிர்ந்தும் கொண்டனர். இக்வான்கள், நடைமுறையில் அவ்வப்போது ஆயுதபாணிகளற்ற ;மதம் மாறிய' கிராமப் புறத்தவர்களை ஆயிரக்கணக்கில் படுகொலை
செய்திருக்கின்றனர்ளூ பெண்களையும் குழந்தைகளையும் வாளால் அறுப்பதைப் பற்றி எதுவும்
சிந்திக்கவில்லைளூ எல்லா ஆண் கைதிகளின் குரல்வளைகளையும் நடைமுறையில் துளைத்து
வந்தனர்.
1915ல் அப்துல் அஸீஸ்
ஹிஜாஸையும் (இன்றைய மேற்கு சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனா நகரங்களை
உள்ளடக்கிய ஒரு பகுதி), பாரசீக
வளைகுடாவிலிருந்து நஜ்தின் கிழக்கு எல்லை வரையும், மேலும் வடக்கில் இன்று சிரியா, ஜோர்தான் என அழைக்கப்படும் பிரதேசத்தை யும்
தாக்கிக் கைப்பற்றத் திட்டமிட்டார்ளூ ஆனால், 1920ல் அவரது விருப்ப நோக்கங்களைக் மட்டுப்
படுத்திக் கொண்டார்ளூ ஏனெனில், ஒரு தேசியம்
சார்ந்த நாடு என்ற வகையில், பிரிட்டன்
மற்றும் அமெரிக்காவுடன் இராஜதந்திர அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
ஆயினும் இக்வான்கள், பிரிட்டிஷ்
காப்பாட்சியின் கீழிருந்த ஈராக், டிரான்ஸ்
ஜோர்தான், குவைத் பிரதேசங்
களில் தாக்குதலைத் தொடர்ந்தனர்ளூ அவர்கள் ஜிஹாத்திற்கு வரம்பு விதிக்க முடியாது என
வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இக்வான்கள் எல்லா நவீனமயத்தையும் பித்அத் எனக்
கருதியதால், உண்மையில்
முஹம்மது நபியவர்களின் காலத்தில் அறியப்படாத -தொலைபேசி கள், வாகனங்கள், தந்தி, இசை, புகைபிடித்தல்
என்பன- வற்றை அப்துல் அஸீஸ் அனுமதித்த தற்காக, அவரையும் கூட எதிர்த்தனர்ளூ தொடர்ந்த அவர்களின்
இந்த கிளர்;;;;ச்சியை அப்துல் அஸீஸ் 1930ல் அடக்கினார்.
இக்வான்கள்
தோற்கடிக்கப்பட்ட பின்னர், சவூதி
அரசாட்சியின் அதிகாரப்பூர்வ வஹ்ஹாபிஸம், போரிடும் ஜிஹாதைக் கைவிட்டு, மதரீதியாக ஒரு
பழைமைவாத இயக்கமாக ஆனது. ஆனாலும்,
இக்வானிய உணர்வும்,
பிரதேச
விரிவாக்கத்திற்கான அதன் கனவும் செத்துப் போய் விடவில்லைளூ இந்தப் பகுதியில்
மேற்குலகின் வெளிநாட்டுக் கொள்கைக்கு 1970களில் சவூதி அரசாட்சி மிக முக்கியமானதாக அமைந்ததால், அது புதியதொரு நிலைக்களத்தைச சம்பாதித்துக்
கொண்டது. சவூதிகளின் நாஸரிஸத்திற்கும்
(எகிப்தின் இரண்டாவது ஜனாதிபதி ஜமால் அப்தில் நாஸரின் அரபுகள் அனைவரையும்
ஒன்றிணைக்கும் சோஷலிஸ இலட்சியக் கொள்கை), சோவியத் செல்வாக்கிற்குமான எதிர்ப்பை வொஷிங்டன் வரவேற்றதுளூ 1979ல் ஈரானியப் புரட்சியின் பின்னர், முஸ்லிம் உலகம் முழுவதையும் வஹ்ஹாபி
மயப்படுத்துவதன் மூலம், ஷீஆ இஸ்லாத்தை
மறுதலிக்கும் சவூதிகளின் திட்டத்திற்கு அது வாய் விட்டுச் சொல்லாமல் மௌன ஆதரவை
அளித்தது.
காலனித்துவம்
மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக, நாஸரிஸம் சுதந்திரத்தையும் உரிமைப் படுவதற்கும் ஒருமைப்பாடு கொள்வதற்குமான இயல்புக்கு
மாற்றமான ஓர் உணர்வையும் தவிர்க்க முடியாத வகையில் வழங்குகின்றது என்ற காரணத்தால்,
அது சவூதிகள் மற்றும்
அமெரிக்கா இரண்டிற்கும் ஓர் அச்சுறுத்தலாக அமைந்திருந்ததுளூ அதே போன்று, ஈரானிய ஷீஆ ஜனநாயக இயக்கமும் கூட, இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகள் பின்பற்றித்
தம்மை ஒளிமிளிரச் செய்ய அனுமதிக்கும் வகையில், அதிக பட்சமான ஓர் இழுப்பு விசையை வழங்கியது.
மேலும் இதனால்,
பிரச்சார இயந்திரம் சுழல
விடப்பட்டு, மேற்கத்திய
சக்திகளினதும் அதன் நேச நாடுகளினதும் எதிரியாக ஈரான் தனிப்படக் குறியிட்டுச்
காட்டப்பட்டதுளூ சோவியத் ரஷ்யாவுக்கு ஒருங்கே ஈரானும் தீமைகள் அனைத்தினதும்
ஊற்றுக் கண்ணாகச் சித்தரித்து அறிமுகப்படுத்தப் பட்டதுளூ அதே நேரத்தில், சவூதி அரேபியா தீவிரவாதத்;தைத் திட்டமிட்டு மிகப் பெரிய அளவில் உற்பத்தி
செய்ய விடப்;பட்டது.
அரபுலக எண்ணெய்
உற்பத்தியாளர்கள், அமெரிக்கர்கள் இஸ்ரவேலுக்கு
இராணுவ ரீதியான ஆதரவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக
அமெரிக்காவிற்கான விநியோகத்தைத் துண்டித்து விட்ட போது, 1973 வாணிகத் தடையினால் உண்டான எண்ணெய் விலையேற்றம், சவூதி
அரசாட்சிக்கு அதன் முழுநிறை மடமை இஸ்லாமிய வடிவத்தை ஏற்றுமதி செய்வதறகுத்
தேவைப்படும் எல்லா பெட்ரோ டொலர்களையும் கொடுத்தது.
போரிடும்
ஜிஹாதைக் கொண்டு மதநம்பிக்கையைப் பரப்பும் பழைய முறைமைக்குப் பதிலாக, ஒரு கலாச்சார வலுத்தாக்குதல் வழிமுறை
கையாளப்பட்டதுளூ சவூதியை மத்தியத் தலமாகக் கொண்டு இயங்கும் உலக முஸ்லிம் லீக்,
உலகெங்கும் முஸ்லிம்கள்
வசிக்கும் எல்லாப் பகுதிகளிலும் அலுவலகங்களைத் திறந்ததுளூ மேலும், சவூதி மதவிவகார அமைச்சு, குர்ஆனின்
வஹ்ஹாபி மொழிபெயர்ப்புகளையும் வஹ்ஹாபிக் கொள்கைப் பாடநூல்களையும், சவூதி தமது
கொள்கைக்கு இசைவானவர்களாகக் கண்ட செய்யித் அபுல் ஆலா மவ்தூதி, செய்யித் குதுப் போன்ற நவீன அறிஞர்களின்
எழுத்தாக்கங்களையும் பெருமளவில் அச்சடித்து, மத்திய கிழக்கு, ஆஃபிரிக்கா, இந்தோனேஷியா, அமெரிக்கா, ஐரோப்பா எங்கிலும் விநியோகிக்கச் செய்தது.
இவ்வெல்லா இடங்களிலும், சவூதி பாங்கிலான,
வஹ்ஹாபிப்
பிரச்சாரகர்களைக் கொண்ட பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு நிதி வழங்கியதோடு, ஏழை எளியவாகளுக்கு --நிச்சயமாக ஒரு வஹ்ஹாபிப்
பாடத் திட்டததைக் கொண்ட- இலவசக் கல்வியை வழங்குவதற்காக மத்ரஸாக்களை நிறுவியது.
மெதுமெதுவாக
இஸ்லாத்தைப் பற்றிய முஸ்லிம்களின் புரிந்து கொள்ளும் ஆற்றல், வஹ்ஹா பிஸத்தினால் மாசுபடுத்தப்பட்டதுளூ மேலும்,
ஸுன்னி முஸ்லிம்கள் அதன்
சொந்த மத பாரம்பரியங்களுக்கு இனிமேலும் ஒத்தியைவு இல்லாமல், சுதந்திரமாகச் சிந்திக்கும்-மிதமான போக்கு
கொண்ட-இரக்கக் குணமுள்ள–வன்முறை அல்லாத-
இஸ்லாத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், வஹ்ஹாபிஸத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும்,
மூச்சு விடுவதற்கும்
ஆரம்பித்தனர்ளூ
அதே வேளை,
எகிப்து, பாகிஸ்தான் போன்ற ஏழ்மையான முஸ்லிம்
நாடுகளிலிருந்து, தமது
குடும்பங்களுக்குப் பினபலமாயிருப்பதற்காக, வேலை தேடி வளைகுடாவிற்கு வந்த இளைஞர்கள், தமது இப்போதைய செழுமை-செல்வநிலையை
வஹ்ஹாபிஸத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டு, அந்த கொள்கையை தம்முடன் தமது வீடுகளுக்கு எடுத்து வந்தனர்ளூ அவர்கள், சவூதி பள்ளி வாசல்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறாக அமைக்கப்பட்ட அங்காடி வளாகங்களுக்கும்
அருகிலுள்ள புதிய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். சவூதிகள், தமது பெரும் வள்ளல் தனமைக்கு மாற்றீடாக,
தமது கொள்கைக்கு ஒத்துப்
போகும் தன்மையைக் கோரினர். இதனால், இஸ்லாத்தின்
மற்றெல்லா வடிவங்களையும,; அத்துடன் பிற
நம்பிககைகளையும் ஒதுக்கித் தள்ளும் வஹ்ஹாபிஸத்தின் தாக்கம், பாகிஸ்தான், ஜோர்தான், சிரியாவில் மாத்திரமல்ல, இங்கிலாந்தினதும் அமெரிக்காவினதும்
நகரங்களிலும், பொதுவாக
எல்லாவிடங் களிலும் ஆழமாகச் சென்றடைந்திருக்கின்றதுளூ இஸ்லாத்தின் பாரம்பரிய பன்மைத் தன்மைக்கு
முக்கியமாக கெடுதல் விளைவித்திருக்கின்றது.
எனவே, முஸ்லிம்களின் ஒரு முழுச் சந்ததியும், மற்ற நம்பிக்கைகளைப் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தைத்
தமக்குத் தரக்கூடிய தான்தோன்றித்தனமான ஒரு வகை இஸ்லாமிய வடிவத்தோடு வளர்;;;;;;;;ந்து வந்திருக்கின்றதுளூ மேலும், சகிப்புத்தன்மையற்ற, மாறுபாடு பொறாத வகையிலேயே, தாம் ஆதரிக்கிற தமது சொந்த பிரிவைப் பற்றி
புரிந்திருக்கின்றனர். இது தன்னளவில் கடும் போக்கு இல்லை என்ற போதிலும், இத்தகையதொரு கண்ணோட்டத்தில்தான் தீவிரவாதம்
வளர்ந்து பெருக்கக் கூடியதாயிருக்கின்றது. கடந்த காலங்களில், வஹ்ஹாபிகள் புறந் தள்ளிய உலமாக்களின் புலமை
வாய்ந்த குர்ஆன் விரிவுரைகள் தாம், வேத நூலின் கடும்
போக்கு விளக்கங்களைக் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்தனளூ ஆனால் இன்று, உஸாமா பின் லேடன் போன்ற போதுமான தகுதியில்லாத- தன்னிச்சையான நபர்கள், குர்ஆனின் பெரிதும் மரபு வழுவிய வாசிப்புகளை
புது உபயோகத்திற்குக் கொண்டு வரச் சுதந்திரம் பெற்றிருந்தனர். தீவிரவாதம்
பரவுவதைத் தடுப்பதற்காக சவூதிகள், 1980களில் அரசாட்சியின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து தமது இளைஞர்களைத் திசை
திருப்புவதற்கு முயற்சித்தனர். ஓர் அனைத்துலக இஸ்லாமிய மன உணர்வுக்கு ஊக்கம்
கொடுப்பதன் மூலம் இதனைச் சாதிக்க முனைந்தனர்ளூ ஆயினும், வஹ்ஹாபி உலமாகள் அதனை அங்கீகரிக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். -
வஹ்ஹாபிஸத்தின் மூளையில் உதித்த குழந்தை
முன்பு
இக்வான்கள் செய்ததைப் போல, இன்று நவீன சவூதி
அரசாட்சியின் அதிகாரப்பூர்வ வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஐ.எஸ்.ஐ.எஸ்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் வாள்களும், மூடிய முகங்களும், குரல்வளைகளைத் துளைத்து மரண தண்டனை
நிறைவேற்றலும் -இவையெல்லாம் அசல் சகோதரத்துவம் எனப் பொருள்படும் இக்வான்களையே
நினைவு கூரச் செய்கின்றது. ஆயினும், ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பல்கள் முற்றும் முழுதாக கடும் பிற்போக்கான ஜிஹாத்வாதிகளைக்
கொண்டிருக்க முடியாதுளூ கணிசமான ஒரு எண்ணிக்கையினர், ஈராக்கில் இதுகாறும் உள்ள நிலையால் வன்மம்
கொண்டிருப்பவர்கள் -சதாம் ஹுசைனின் ஆட்சி யிலிருந்து வந்த பாதிஸ்ட்களும் அவரது
கலைக்கப்பட்ட இராணுவத்தின் முன்னாள் பேர்ர்வீரர்களும் ஆவர்.
வாழ்க்கைத்தொழிலாகக்கொண்ட-
பயிற்றப்பெற்ற இராணுவச் சக்திகளுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். ஸின் வலுவான செயல்
நிறைவேற்றம், உண்மையில்
எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதை இது விளங்க வைக்கும். புதிதாகச் சேர்க்கப்பட்ட ஒரு
சில இளைஞர்கள், வஹ்ஹாபிஸத்தினாலோ
அல்லது மிகவும் பாரம்பரிய முஸ்லிம் கொள்கைவாதங்களினாலோ தூண்டப்பட்டவாகளாயிருக்கும்
சாத்தியக்கூறுகளும் உள்;ளன. 2008ல் எம்.15 உடைய நடையொழுக்க விஞ்ஞான அங்கம், பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: 'பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பவர்களுள் ஒரு
பெரும் எண்ணிக் கையினர், மதரீதியான
வெறியர்களாக இருப்பது ஒரு புறமிருக்கட்டும், அவர்கள் தமது மத நம்பிக்கையை ஒழுங்கு முறையாகச்
செயல்படுத்துவதில்லை. நிறைய பேர் மத அறிவு இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர்ளூ
மேலும், அவர்களைக்
கத்துக்குட்டிகளென்றே கருத வேண்டியுள்ளது.'
9ஃ11 தாக்குதல்களிலிருந்து, பயங்கரவாதத்திற்காக குற்றவாளிகள் எனத்
தீர்ப்பளிக்கப்பட்டவர் களுள் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர், மதத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றாதவர்கள் அல்லது
தாமாகவே கற்றுக் கொண்டவர்கள் ஆவர். தவறாக வழி நடாத்தப்பட்ட அல்லது மாறுவேஷம் பூண்ட
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் நிச்சயமாக மதரீதியான விழிப்புணர்வை நாடுகின்றவர்களல்லர்ளூ
ஓரளவிற்குப் பார்க்கப் போனால், அவர்கள் ஒரு
வன்முறைக்காக விலைக்கு விற்கப்பட்டவர்கள்ளூ இது அவர்களின் சொந்த வேதனையையும்
கையிழப்பு உணர்வையும் சுட்டிக் காட்டுவதாகும்.
கடந்த மே மாதம்,
பெர்மிங்ஹோமிலிருந்து
(இங்கிலாந்து) சிரியாவிற்குப் புறப்பட்ட ஆர்வங் கொண்ட இரு ஜிஹாத்வாதிகள், இஸ்லாத்தை அமேஸன் மலைவாழ் இனத்தவர்க்குரியது என
ஏவியிருக்கின்றனர்ளூ ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், முஸ்லிம் மதப் பற்றாளர்களல்லர் - மனப்
பிறழ்வுக்குப் பாத்திரமான பிறப்புகள் மாத்திரமே ஆவர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸை
முதுமரபு மீட்சிக்காக ((மூதாதையர்களின் பண்புகளை மீளவும் வெளிக் கொண்டு
வருவதற்காக)ப் பின்னோக்கிச் செல்லும் ஒன்றாகப் பார்ப்பது தவறானதாகும்ளூ அது,
எல்லா வகை யிலும்
முழுமையான நவீன இயக்கம் ஒன்றாகும். அது, இக்வானின் (புனித) போர்களிலிருந்து ஊக்கம் பெற்றதாகும். அது, 200 கோடி டொலாகள்; என மதிப்பிடப்படும் சொத்துக்களுடன் கூடிய,
திறனுள்ள, சுயமாகவே முதலீடு செய்யும் ஒரு வியாபார நிறுவனமாக
ஆகியிருக்கின்றது. அதன் கொள்ளையடித்தல், வங்கிகளிலிருந்து தஙகப் பாளங்களைக் களவாடல், ஆட்கடத்தல், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து
வடிகுழாய்கள் மூலம் எண்ணெய் கடத்தல், அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற செயல்களினால், அது உலகிலேயே பெரும் செல்வமுடைய ஜிஹாத் வாதிகளின் குழுவாக ஆகியிருக்கின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் வன்முறைகளைப் பொறுத்த வரை யில், எதுவுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததோ அல்லது
அறிவுக்குப் பொருந்தாததோ அன்றுளூ மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டும்
காணொளி(வீடியோ)கள், அவற்றைக் காணு
பவர்களின் உள்ளங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்கும், அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல்
தடுப்பதற்கும், பெருந் திரளான
மக்கள் கூட்டத்தினர் மத்தியில் பெருங் குழப்பத்தை உண்டாக்குவதற்கும், மிகக் கவனமாகவும் வியூகத் திட்டமிட்டும்
தயாரிக்கப் பட்டுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது,
பயங்கரமான ஓர் இராணுவம்
மட்டுமன்றுளூ ஏகாதிபத்திய குறிக்கோள் களைக் கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கமாகும்.
மேலும், அது
கடைப்பிடிக்கும் முறைமைகள், பெரும்
திகிலூட்டுவனவாகவும் இரத்தக் களறியானதாகவும் இருக்கின்றன என்றால், அவை எந்த வகையிலும் ஒரு புதுமையன்று. அவை எல்லாம்
கூட, ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த கால
உதாரணங் களிலிருந்து எடுத்துக் கொண்டவையாகும் - ஒட்டுமொத்தப் படுகொலைகள், முழுமையாக ஒரு நவீன நடப்புளூ மேற்குலகச்
சக்திகள் பற்பல தடவைகள் கைக்கொண்டு வந்துள்ள ஒன்றாகும்.
ஐரோப்பாவில்
முதலாவது 'மதமற்ற' (செக்யூலர்) அரசு தோற்றம் பெறுவதற்கு இட்டுச்
சென்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது, ஜகோபின்கள் ஏறத்தாழ 17.000 ஆண்கள், பெண்கள், குழந்தை களின் கழுத்துகளைப் பகிரங்கமாகத்
துண்டித்தனர்.
சோவியததின்;
போல்ஷிவிக்கள்;, கம்போடியாவின் கமர் ரோக்ஹ்;கள், சீனாவின் சிவப்புக் காவலர்கள், எல்லாரும் சமுதாயத்தை
ஊழல்களிலிருந்தும் சீர்கேடுகளிலிருற்தும் துப்புரவாக்க, திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட
பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
1990களில், ஆர்;மேனியா பல நூற்றுக்கணக்கான அஸீரிகளை, திடீர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என்ற வகையில், ஒரு பெரிய அளவில் அறுத்துக் குவித்தது.
இதே போன்று.
ஐ.எஸ்.ஐ.எஸ்., அத்தகைய அறுப்பு
வேலையைக் கொண்டல்லாது தனது ஒரே யொரு மட்டுப்படுத்தப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட குறிக்கோளை அடைவது
சாத்திய மில்லை எனக் கருதி, அதற்காக
வன்முறையை உபயோகிக்கிறது. ஆகவே, அரசியல் மற்றும்
போர்த் திற முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை அடைவதற்காக பல்வேறுபட்ட கொலை களைச் செய்வது என்பது,
நவீனத்துவத்தின் இருண்ட
பக்கத்தை இன்னொரு தோற்றத்தில் எடுத்துக் காட்டுகின்றது.
எல்லாவற்றிற்கும்
மேலாக, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
1925ல் முஸ்தஃபா கமால்
அத்தாதுர்க், துருக்கியில்
தூக்கி யெறிந்த கிலாஃபத்தை புனர் நிர்மாணம் செய்ய விரும்புகிறது.
கிலாஃபத் என்பது
அரசியல்ரீதியாக மரணித்து நீண்ட நாடகளாகி விட்டனளூ ஆனால், அது உம்மத்தின் ஒற்றுமையையும், நபியவர்களுடனான அதன் இணைப்பையும் சங்கிலித்
தொடர்பை யும் அடையாளப்படுத்தியதன் காரணமாக, அதன் இழப்பை ஓர் ஆத்மீக கலாச்சார வேதனைச்
சம்பவம் என ஸுன்னி முஸ்லிம்கள் துக்கம் அனுஷ்டித்தனர். ஆயினும், ஐ.எஸ்.ஐ.எஸ்;. முன் வைக்கும் கிலாஃபத்திற்கு, சர்வதேசரீதியில் உலமாக்களுக்கு மத்தியில் ஆதரவு
இல்லைளூ மேலும், அது முஸ்லிம்
உலகம் எங்கிலும் ஏளனப்படுத்தப்படுகின்றது.
அஃது அப்படியிருக்க,
நமது உலகில், தேசியம் சார்ந்த நாட்டின் கட்டுப்பாட்டு
வரம்புகள், மிக அதிகமான
தன்மையில் தெளிவாகி வருகின்றன. மத்திய கிழக்கைப் பொறுத்த வரையில், அதனை விசேஷமாக உண்மை யென்றே கொள்ள வேண்டும்ளூ
அங்கு தேசியவாதப் பாரம்பரியம் எதுவும் கிடையாதுளூ மேலும், அங்கு உள்நுழைந்து கைப்பற்றியவர்கள், வரைந்த எல்லைக் கோடுகள் எத்துணை பொருத்தம்
இல்லாதவை என்றால், ஓர் உண்மையான
தேசிய உணர்வை உருவாக்க அதனால் அறவே முடியாமற் போயிற்று. இங்கு கூட, ஐ.எஸ்.ஐ.எஸ்., சாதாரணமாக கடந்து சென்ற ஒரு யுகத்திறகுப்
பின்நோக்கித் திரும்பச் செல்லாமல், தனிப் போக்காக
ஒரு நவீன அமைப்பைத் தெளிவுபட எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறது.
தொழிற்
புரட்சிக்கு ஒரு வகையில் உதவியாக இருக்கும் வி;தத்தில், ஐரோப்பாவில் பழைமைக் கட்டுப்பாடுகளற்ற ஜனநாயக,
தேசியம் சார்ந்த நாடு
வடிவமைக்கப்பட்டது. அரசியல் விழிப்புணர் வின் இலக்குகளை நிர்ணயித்த அது, இனிமேலும் உயரிய வேணவாவாக மட்டும் இருக்க
முடியாதுளூ மாறாக, அது நடைமுறை
அத்தியாவசியமாக ஆகிப் போனது. அது சீர்மையும் முழு நிறை நலமும் கொண்டதன்றுளூ
அதனுடைய பலவீனம், எப்பொழுதுமே அது
இனவாரிச் சிறுபான்மையினரைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பதுதான். 20ம் நூற்றாண்டின் மிக மோசமான அடடூழியங்களுள்
சிலவற்றிற்கு, இந்தத் துறையில்
ஏற்பட்ட தோல்வியே காரணமாக அமைந்தது. நவீனமயமாக்கல் வேறு விதமாக வளர்ச்சி கண்ட
உலகின் ஏனைய பகுதிகளில், வேறு ஆட்சி
அமைப்பு முறைகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். எனவே, பழைமைக் கட்டுப்பாடுகளற்ற தேசிய நாடு என்பது,
நவீனத்துவத்தின் தவிர்க்க
முடியாத ஒரு பின்விளைவு அன்றுளூ தாக்கி ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்துதல், கைப்பற்றுதல் என்ற காலனித்துவ வழிமுறை களைப்
பயன்படுத்தி, ஈராக்கில்
ஜனநாயகத்தை ஏற்படுத்தச் செய்யப்படும் முயற்சி, இயற்கைக்கு மாறான ஒரு பிறப்பைத் தான்
பின்விளைவாகத் தர முடியும்ளூ இன்னும், இந்த குழப்பங்களின் காரணமாகத்தான்; ஐ.எஸ்.ஐ.எஸ். வெளி வந்தது.
ஸுன்னிகள்,
ஷீஆக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள், யஸ்திகள் என எல்லாருக்கும் எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ்.
போர்ப் பிரகடனஞ் செய்துள்ளது. இறைவனை நம்பாத குற்றவாளி களையும் கொலையாளிகளையும்
கொண்ட இந்த பிற்போக்குத்தனமான குழாமிலிருந்து யாருமே தப்ப முடியாது.
கவனிக்கத் தக்க
வகையில், இப்பொழுது
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பெயர் குறிப்பிடப்பட்ட இலக்காக சவூதி அரேபியா
ஆகியிருக்கின்றதுளூ ஐ.எஸ்.ஐ.எஸ்., அதன்
படைப்பாளரைத் தாக்க இப்பொழுது விழைகின்றதுளூ அது, ஏற்றுக் கொள்;ளத் தக்கதான எல்லைக்கு முன் தள்ளிக் கொண்டு
செல்ல நாடுகின்றதுளூ எதற்காகத் தெரியுமா? ஒரு மதநம்பிக்கையை அல்லாமல், தூய- புனிதம்
கொண்டவையை, அதன் எல்லா
வடிவங்களிலும் அதன் எல்லா தோற்றங்களிலும் மறுப்பதில் முனைப்பாயிருக்கும், ஒரு தீவிரவாத நாத்திக (இறைவன் அற்ற)
இயக்கத்தைத் தானாகவே மீண்டும் கண்டுபிடித்துக் கொள்வதற்காக!
வஹ்ஹாபிஸம்
உங்களைப் பயமுறுத்தாவிட்டாலும், நிச்சயமாக
ஐ.எஸ்.ஐ.எஸ்.. உங்களைப் பயமுறுத்த வேண்டும்.
இருக்கலாம்ளூ
இருக்கலாம்ளூ ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸைத் தோல்வி காணச் செய்து, அதனை முற்றாக நிர்மூலம் ஆக்குவதற்கும், இவை அனைத்தையும் ஆரம்பித்து வைத்த ஒரு சக்தியான
சவூதி அரசாட்சியை மறுதலிப்பதற்கும் நாடுகின்ற அந்த நேச நாடுகளைத் தேர்ந்தெடுப்பது,
நல்லதோர் அபிப்பிராயமாக
இருக்கக கூடும்.