Wednesday, October 24, 2012

இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள்,இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தி
















இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள், 2012 செப்டம்பர் 13ந் திகதி அன்று,  இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சர்வ வல்லமையும் அனைத்து அறிவும் கொண்ட அல்லாஹ் கூறுகின்றான்: 'அவர்களின் அபிலாசை, தங்கள் வாயினால் ஊதி அல்லாஹ்வின் ஒளியை அணைத்து விடலாம் என்பதுதான்ளூ ஆயினும், நிராகரிப்பாளர்கள் (அதனை) எவ்வளவு வெறுத்த போதிலும், அல்லாஹ் தனது ஒளியை சம்பூரண மாக்குவான்'  (திருக்குர்ஆன் 61:8)

மதிப்பிற்குரிய ஈரான் மக்களே! மகத்தான இஸ்லாமிய உம்மத்தைச் சேர்ந்தவர்களே!
இஸ்லாத்தின் எதிரிகளான இந்த தீயவர்கள், சங்கை வாய்ந்த நபியவர்களை
(இறைவனின் நல்லாசிகள் அவர்கள் மீதும், அவர்களின்; பரிசுத்த
குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!) பழிப்பதன் மூலம், தங்கள் ஆழ்ந்த
வெறுப்பை மீண்டுமொருமுறை வெளிக்காட்டியிருக்கின்றனர். மேலும், இவர்கள் தங்கள் முட்டாள்தனமானதொரு மற்றும் அருவெறுப்பான நடவடிக்கையின் மூலம், இன்று உலகில் இஸ்லாத்தினதும் திருக்குர்ஆனி  னதும் பிரகாசம் அதிகரித்து வருவதைக் கண்டு தீய ஸியனிஸக் குழுக்கள் ஆத்திரமடைந்திருப்பதைக் காண்பித்திருக்கின்றனர். இறை படைப்புகள் அனைத்திலும் மிக சங்கை பொருந்தியவரை இவர்கள் தங்கள் வெறுக்கக்கூடிய அசிங்கத்திற்கு இலக்காகக் கொண்டிருப்பதானது, இந்த மாபெரும் குற்றத்தையும் பாவத்தையும் இழைத்திருப்பவர்களை அகௌரவப்படுத்துவதற்குப் போதுமான காரணமாக அமையும்.

இந்த தீய நடவடிக்கையின் பின்னணியில் அமைந்திருப்பது,  ஸியனிஸம்,
அமெரிக்கா, மற்றும் ஏனைய ஆணவம் கொண்ட அதிகாரச் சக்திகளின் விரோதக் கொள்கைகளாகும். இதன் மூலம், மகிமை பொருந்தியனவாகப் போற்றப்படும் மாண்புகளின் மீது இஸ்லாமிய உலகின் இளந் தலை முறையினர் மரியாதை இழக்கச் செய்வதையும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகள் மழுங்கடிக்கப்படுவதையும் இவர்கள நாடுகின்றனர். இந்த தீய சங்கிலித் தொடரில் முந்தைய இணைப்புகளான, குறிப்பாகச் சொல்வதென்றால், ஸல்மான் ருஷ்தி, டேனிஷ் காhட்டூன் வரைஞர்,
அல்குர்ஆனை எரித்த கிறிஸ்தவ மதகுருமார் போன்றவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்திருந்தால், ஸியனிஸ முதலாளிகளுடன் தொடர்புடைய கம்பெனிகளினால் வெளியிடப்படும் பலவகையான இஸ்லாம் விரோதத் திரைப்படங்களை விநியோகம் செய்யாமலிருந்தால், இன்று இந்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை இவர்கள் செய்திருக்கமாட்டார்கள். இதற்கான முதல் குற்றவாளி ஸியனிஸமும், அமெரிக்க அரசாங்கமும்தான். அமெரிக்க அரசியல்வாதிகள், தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என உண்மைப்பூர்வமாகக் கூறுவார்களாயின், இந்த கோரமான குற்றத்தை இழைத்தவர்;களையும் இவர்களுக்கு நிதி வழங்கி ஆதரித்தவர்களையும்
தகுந்த விதத்தில் தண்டிக்க வேண்டும். ஏனெனில், இவர்களின் செயல்களினால், முஸ்லிம் மக்களின் உள்ளங்கள் கடும் வேதனை அடைந்திருக்கின்றன.

மேலும், உலகெங்கிலுமுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்: இஸ்லாமிய மறுமலர்ச்சி க்கெதிரான எதிரிகளி;ன் இந்த பயனற்ற, களேபரமான நடவடிக்கைகள், இந்த எழுச்சியின் மகத்துவத்திறகும் முக்கியத்துவத்திற்குமான ஓர் அடையாளமாகும். 'மேலும், அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 12:21)

ஸெய்யித் அலி காமனெய்

No comments:

Post a Comment