![]() |
A Sri Lankan vendor displays the front page of daily newspapers in Colombo on Jan. 10, 2013. |
![]() |
றிஸானா நஃபீக்கின் கலக்கமடைந்த பெற்றோர் |
![]() |
கலக்கமடைந்த அந்தப் பெண்ணின் தாய் |
January 09, 2013
வழக்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டுச் சென்ற விதத்ததிலிருந்தே, ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட நீதிமன்றம் அவள் பக்கத்து நியாயத்தை செவிமடுக்காது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
ஜனவரி 2013
![]() |
றிஸானாவின் தாயும் சகோதரிகளும். |

.jpg)
நான்கு மாதங்களே நிறைந்த பச்சிளங் குழந்தையைத் தான் கொல்லவில்லை என அவள் மறுத்துள்ளாள். கொலை செய்ததாகச் சொல்லப்படும் காலப் பகுதியில் ரிஸானா நஃபீக்கின் வயது 17! மேலும், நான்கு மாத சிறு குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்ட போது அவள் அங்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்தன. அவள் மீது நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை சர்வதேசக் குழந்தைகள் உரிமைகள் சட்டத்தை மீறும் செயலென மனித உரிமைக் குழுக்கள் குரல் எழுப்பியுள்ளன.
பச்சிளங் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டும் போது, அக்குழந்தை மூச்சுத் திணறத் துவங்கி பின்னர் அது இறந்து போனது. அல் த்வாத்மி நகரில் வசிக்கும் அந்தக் குழந்தையின் பெற்றோர். அவள் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டியுள்ளனர். அதனை அவள் ஆவேசத்துடன் மறுத்துள்ளாள்; இந்தச் சம்பவம் 2005ல் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது. மன்னிப்பு வழங்கும்படி பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில்; அவற்றையெல்லாம் புறக்கணித்து இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளதாக அது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் மட்ட ராஜதந்திர முயற்சிகளுக்கும்; உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எழுப்பப்பட்ட கண்டனக் குரல்களுக்கும் செவி சாய்க்காது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டு ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா அரசும் ஆத்திரமடைந்துள்தாக வெளி விவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.


.jpg)
வழங்கப்படவில்லை. மாறாக, அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறாள். சஊதி அரேபியாவின் சட்ட அமைப்பு முறைமையின் குணவியல்புகளை எடுத்துக் காட்டும் 'கங்காரு' நீதிமன்றங்களில் அவளுக்கு எதிராக இவையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் மறுத்துள்ள அவள்;, தனது எஜமானர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அச்சுறுத்திக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளாள்.
![]() |
ரிசானாவ ஜெயில்ல போய் சந்திச்சேன் பிரிஞ்சி வரும் போது எப்ப உம்மா என்ன கூட்டிட்டுப் போவீங்க என்டு கேட்டா! |
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஸ்ரீலங்கா பிரஜைகளின் நலன்களில் அக்கறை கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், ஸ்ரீலங்காவின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, சஊதி அரசை 'சர்வாதிகாரிகள்' என வர்ணித்ததோடு இந்த சஊதி ஆட்சியாளர்கள், ஐரோப்பியர்களுக்கோ அல்லது அமெரிக்கர்களுக்கோ இவ்வாறான மரண தண்டனையை ஒருபோதும் நிறைவேற்றமாட்டார்கள்ளூ ஆசியர்;களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் மட்டுமே அதனை நிறைவேற்றுவர் எனவும் கருத்து தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் ஐரோப்பியர்களோ அல்லது அமெரிக்கர்களோ இவ்வாறான குற்றச் செயல்களுக்காகப் பிடிபட்டால், அவர்களின் நாட்டு அரசு சஊதி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதை அடுத்து, ஒரு குறுகிய சிறைத் தண்டனையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மிகக்கொடூரமான தண்டனைகள் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த ஏழை மக்களுக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

வழக்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டுச் சென்றவிதத்ததிலிருந்தே, ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட நீதிமன்றம் அவள் பக்கத்து நியாயத்தை செவிமடுக்காது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது; அதனால் மன்னர் அப்துல்லாஹ்விடம் கருணை காட்டி மன்னிப்பு வழங்குமாறு வேண்டப்பட்டது. அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஸ்ரீலங்கா அரசும் -இரு தரப்புகளுமே பல்வேறு தருணங்களில் அதற்காக முறையீடுகள் செய்தனர். ஒரு வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளும் பெரும் எதிர்பார்ப்புடனும் வீட்டில் வறுமையில் வாடும் தனது ஏழ்மையான குடும்பத்திற்கு உதவுவதற்குமாக சஊதி அரேபியா சென்ற தமது மகளின் உயிரைப் பறிக்கும் செயலைக் கைவிடுமாறு கோரும் தமது வேண்டுதலை சஊதி மன்னர் செவிமடுப்பார் என அந்தக் குடும்பம் நம்பியது. அவர்களின் இந்த நம்பிக்கை, அவள் அந்த நட்டுக்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில். கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டதால், ஒரு பயங்கரக் கனவாக மாறிப் போனது.

அவள் குழந்தையின் தாயுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்பட்டாலுங் கூட, ஏன் ஒரு சின்னஞ் சிறு குழந்தையைக் கொலை செய்ய நாட வேண்டும் என்பது விளக்கப்படவேயில்லை. இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு குற்றச்சாட்டாகும். ஏனெனில், வீட்டு வேலைக்காரர்கள், அதிலும் விசேஷமாக ஏழ்மை நிறைந்த மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்தவர்கள், சஊதி அரேபியாவில் கொத்தடிமையாக நடத்தப்படுகிறார்கள். எவ்வாறு 17 வயதே நிறைந்த ஒருவர் அவளுடைய எஜமானருடன் தர்க்கித்திருக்க முடியும்? அதுவும், அவள் அந்த நாட்டில் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருந்துள்ள நிலையில்? பிழைப்புக்காகப் பெற்றோரைப்பிரிந்து சென்ற அந்த ஏழைச் சிறுமிக்கு பணத்துக்குப் பதிலாகக் கிடைத்தது சிறைத் தண்டனையும் மரண தண்டனையும்தான்.

நஃபீக் உடையது மரண தண்டனை, அந்த நாட்டைப் பொறுத்தவரையில் முதலாவதோ அல்லது அதுதான் இறுதியானதோ அன்று. பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஏழைத் தொழிலாளர்கள், சின்னஞ் சிறு தவறான செயல்களுக்கெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டு வழமையாக மரணத் தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டு வேலைக்காரர்களையும் ஏழைத் தொழிலாளர்களையும் மோசமாக நடத்தும் கோரமான பதிவுக் குறிப்புகள் சஊதிகளைப் பற்றி நிறையவே காணப்படுகின்றன. அடிக்கடி இவ்வாறான மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்ச்சிகள், சிரசேதனங்கள் செய்யப்படும் பொது சதுக்கங்களில் பலரும் பார்க்கும் ஒரு கண்காட்சியாகவே மாறிப் போயினஇவ்வாறு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது, பிற நாடுகளிலிருந்து வந்து மத்திய கிழக்கில்

பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு பற்றியும், றிஸானா நஃபீக் போன்ற மக்களை வெளி நாடுகளில் வேலை தேடிச் செல்ல வைக்கும் வறுமை நிலையைப் பற்றியும் சர்ச்சையை ஸ்ரீலங்காவில் கிளறி விட்டிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபை Amnesty International மற்றும் மனித உரிமைகள் அவதான அமைப்புகள் Human Rights Watch (HRW) உட்பட மனித உரிமைகள் குழுக்கள், இந்த விடயத்தை சஊதி அதிகாரிகள் கையாண்ட விதம் குறித்து அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளியிட்டுள்ளன. அதே போன்று, ஸ்ரீலங்காவில் இது விஷயத்தில் அக்கறை காட்டுபவர்களும், அவள் 'குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும் நேரத்தில் நிகழ்ந்த மிகப் பாரதூரமான மொழிபெயர்ப்புப் பிரச்சினைளைச் சுட்டிக் காட்டி அவர்களைச் சாடியுள்ளனர். அவளுக்கு தரப்பட்ட இந்த மரணத் தண்டனையானது, சஊதி அரேபியா கைசாத்திட்டிருக்கும் ஐ.நா.வின் சர்வதேசக் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தத்தை மீறும் செயலென அவர்கள் வாதிடுகின்றனர்.

வீட்டு பணியாட்;களுக்கு இப்போதை விட போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதற்குரிய, சட்டங்கள் 'அவசரமாக' தேவைப்படுகின்றன என்ற அறிவிப்பு சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் International Labour Organization (ILO) வெளியிடப்பட்ட அதே நாளில்தான், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியும் வந்திருக்கிறது. அனைத்து இல்லப் பணியாட்களுள்; 10 சதவீதமானோர் மட்டுமே -சுமார் 53 லட்சம் பேர்- ஏனைய தொழிலாளர்களைப் போன்று தொழிற்; சட்டங்களுக்கு உட்பட்டிருக்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
சஊதி அரேபியாவிலோ அல்லது வளைகுடா நாடுகள் ஏதாவதொன்றிலோ உள்ள வீட்டு பணியாட்கள் பெரும்பாலானோர்களுக்கு அத்தகைய பாதுகாவல் கிடையாது என்பது வருந்தத்தக்கதாகும். இந்தப் பணியாட்கள்; அத்தகைய சட்டங்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியமாட்டார்கள்.
கிரஸன்ட் ஒன்லைன் நெட் இணையத்தளத்திலிருந்து.
No comments:
Post a Comment