Thursday, June 6, 2013

சிரிய மோதல்: வன்முறைகளைத் தூண்டும் கர்ளாவி






-கலாநிதி சந்திரா முஸாபிர்

2013 ஜூலை முதலாம் திகதி பிரபல மார்க்க அறிஞர் யூசுப் கர்ளாவி 
வெளி யிட்ட  சில கருத்துகளைக் கேட்டுவன்முறைகளையும் ரத்தம் சிந்தலையும் வெறுத்தொதுக்கும் எந்த ஒரு மனிதனும் 
அதிர்ச்சியடையாமல் இருந்திருக்க முடியாதுதோஹாவில் 
நடைபெற்ற ஒரு கூட்டத்தில்
சிரியா சென்று பஸர் அல் அஸாத் அரசாங்கத்துக்கும் அதன் ஆதரவாளர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் என்பவற்றுக்கும் 
எதிராகப் போராடுமாறு அப்பிராந்தியத்திலுள்ள சுன்னி முஸ்லிம்களை 
அவர் உசுப்பிவிட்டுள்ளார்அதனை ஒரு 'ஜிஹாத்என்றும் அவர் வர்ணித்துள்ளார்ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் சுன்னிகளை விழுங்க பசிவெறியுடன் காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.        ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையே எந்தவித பொதுத் 
தன்மைகளும் கிடையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



சிரிய அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே,
 கேந்திர எல்லைக் கிராமமான கஸைரைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நடைபெறும் உக்கிரமான போருக்கு மத்தியிலேயே கர்ளாவி மேற்கண்ட கருத்து வெளியாகி உள்ளதுலெபனானைத் தளமாகக்கொண்ட ஹிஸ்புல்லாஹ் அரசாங்கப் படைகளுக்கு உதவி வருகின்றது
கிளர்ச்சியாளர் பக்கமாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் போராளிகள் போரிடுகின்றனர்.
ஷியாக்களுடன் போரிடுமாறு சுன்னிகளைத் தூண்டுவதானது
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்தக் 
கொடூர  யுத்தத்தின் தீவிரத்தன்மையை அதிகரிக்கவே  வழிகோலும்
மார்க்க அறிஞர்கள் தமது ஒழுக்கரீதியிலான அணுகுமுறையைஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் பிரயோகிக்க வேண்டும்இரு சாராரையும் உடனடியாக ஒரு யுத்த நிறுத்துக்கு 
வருமாறு வினயமாக வேண்டிக்கொள்வதே அவர்கள் மேற்கொள்ள
வேண்டிய பணியாகும்.

மேலும்சிரியாவில் உள்ள முரண்பாடு வெறும் ஷியா-சுன்னி மோதல் 
அல்ல என்பதை முதலில் கர்ளாவி உணர வேண்டும்பிராந்தியத்தில் மேற்கத்திய அடிவருடிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டி மற்றும் இஸ்ரவேல் போன்ற பெரும்  அரசியல் மேலாதிக்கத்தில் அது 
வேறூன்றி உள்ளது. 2011 மார்ச்சில் அஸாதின் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான அமைதிப் போராட்டமாகவே அது ஆரம்பமானது
அஸாத் அதற்கெதிராகக் கடும் போக்கைக் கடைபிடித்தார்இரண்டொரு வாரங்களில்பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்துக்கும் 
கட்டுப்பாட்டுக்கும் சவாலாக இருக்கும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்பவற்றுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருக்கும் அஸாத் 
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்திருக்கும் மேற்கத்திய 
மற்றும் இஸ்வேலிய அதிகார மையத்தின் ஆணைகளை சிரமேற்கொண்ட சில அண்டை நாட்டுக் குழுக்களும் தனிப்பட்ட சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பகுதியினருக்கு ஆயுதங்கள் வினியோகிக்க ஆரம்பித்தனர்உண்மையிலேயேஈரான்ஹிஸ்புல்லாஹ் மற்றும் 
அஸாத் அரசாங்கம் என்பனவே வட ஆபிரிக்கா மற்றும் மேற்காசியா 
போன்ற பிரதேசங்களில் தமது மேலாதிக்கத்தை நீடித்துக்கொள்ளஅமெரிக்காபிரிட்டன்பிரான்ஸ் மற்றும் இஸ்ரவேல் போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகத் துணிந்து 
நின்று எதிர்ப்பைக் காட்டும் அமைப்பு ரீதியிலான ஒரே கூட்டாகும். 2000த்திலும் 2006லும் மிகக் கொடூரமான முறையில் லெபனானில் தமது கட்டுப்பாட்டை நிறுவ இஸ்ரவேல் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கி அவர்ளைத் துரத்தியடித்தது இந்த ஹிஸ்புல்லாஹ்தான் என்பது நினைவு கூரத்தக்கதுஹிஸ்புல்லாஹ் (இறைவனின் கட்சிஎன்ற இக்கட்சியையே
'ஷைத்தானின் கட்சிஎன தோஹா கூட்டத்தில் கர்ளாவி வர்ணித்துள்ளார்.
ஏனெனில்இந்த எதிர்ப்பு சக்திகள் ஷீயாவாக இருப்பதாலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள கட்டார்
சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற மேற்கத்திய அடிவருடிகள் சுன்னிகளாக இருப்பதாலும்அவர்களின் போராட்டத்தை
பிராந்தியத்தில் ஷீயா ஆதிக்கத்துக்கான முயற்சி என நிறுவ அரும்பாடுபடுகின்றன.


இதன் விளைவாகமேற்கத்திய மேலாதிக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்கள்மேற்காசியவட ஆபிரிக்க நாடுகளுக்குள்ளே 
தலைகாட்டும் போராட்டங்கள் மற்றும் சிரியாவின் கோலான் 
குன்றுகள் மீதான இஸ்ரவேலின் தொடர்ந்து செல்லும் ஆதிக்கம் 
போன்றவை அவர்கள் அரிதாகக் கண்டுபிடித்துள்ள ஷீயா-சுன்னி பிரச்சினைகள் மூலம் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.  
ஷீயா-சுன்னி வேறுபாடுகள் நீண்ட காலம் நிலவி வந்த ஒன்றாயினும்கூட மேற்கத்திய மேலாதிக்கத்துக்கும் இஸ்ரவேலிய நலன்களுக்கும் சவாலாக எழுந்த 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்தே ஷீயாக்களையும் சுன்னிகளையும் பிரிப்பதற்காகஇந்த வேறுபாடுகள்குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவினால்
பூதாகரமாக்கப்பட்டு பெருமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கர்ளாவியின் கருத்தை நாம் இந்தக் கோணத்தில்தான் நோக்க
 வேண்டும்ஷீயா சுன்னிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை 
எட்டுவதில்கர்ளாவிஒரு அணுகூலமான கருத்தைக் கொண்டிருந்த
 ஒரு காலமும் இருந்ததுஆனால்சில மேற்கு நாடுகள் அரபு வசந்தத்தின்போதுமேற்காசிய வட ஆபிரிக்க விவகாரங்களில் 
மூக்கை நுழைத்தபோதுகர்ளவி  அதனை நியாயப்படுத்தினார்
லிபியா மீதான நேட்டோ விமானத் தாக்கதலை அங்கீகரித்த ஆரம்பப் பிரமுகர்களில் கர்ளாவி முதன்மையானவராக இருந்தார்
இதற்குமேலாககடந்த வருட நடுப்பகுதியில், 'இன்று இறைதூதர் 
திரும்பி வந்தால் அவர் நேட்டோவுக்கே ஆதரவளிப்பார்என்றும் 
கருத்து தெரிவித்தார்இதன்காரணமாகஇவர் சில அரபு 
விமரிசகர்களால் 'நேட்டோ முப்திஎன்று கேலியாக அழைக்கப்பட்டார்.

மத அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து அதன் மூலமாக 
மேற்கத்திய மேலாதிக்கத்தை சட்டபூர்வமாக்கிய கர்ளாவியின்
 செயலேஅவரது நிலைப்பாட்டில் மக்கள் நம்பிக்கையிழக்க 
ஏதுவாயிற்றுஇதைவிட மோசமான விடயம் என்னவென்றால்
உலகளாவிய தீய சக்திகள் மற்றும் பிராந்திய அடிவருடிகள் 
என்போரின் நலன்களை நீடிக்கும் நோக்குடன்பாரியளவிலான 
அழிவுக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும்முஸ்லிம்களும் முஸ்லிம்களும் இடையேயான நேரடி மோதலை ஏற்படுத்தும் பிரிவினைவாதத்துக்குத் தூபமிட்டமையாகும்இதுமதபோதகரின்
அங்கியை அணிந்த ஒருவர் தமது மதத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்தமைக்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.

*கலாநிதி சந்திரா முஸாபிர் மலேஷியதார்மீக உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் தலைவராவார்.

 தமிழில்றஹ்மத் அலி