Friday, August 2, 2013

சர்வதேச 'குத்ஸ்' தினம்

புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்;பட்டு ஸியனிஸவாதிகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி 46 வருடங்களாகின்றன. இன்று அது, எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் துர்ப்பாக்கிய பலஸ்தீனர்களின் மீது ஸியனிஸ ஆக்கிரமிப்பாளர்களினால் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக படிப்படியாக மாற்றப்பட்டிருக்கின்றது.




ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹுpம் இமாம் குமைனியினால் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச குத்ஸ் தினம,; ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. (இந்த வருடம் ஆகஸ்ட் 02ந் தேதி இது வருகின்றது.) அவர் இவ்வாறு பிரகடனஞ் செய்தார்ளூ'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாளாகும்'. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின்; ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.




குத்ஸ் தினம் என்பது, அப்படியொன்றும் ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்றுளூ கண்டிபபாக இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன், மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட அதில் பங்கு கொள்கின்றனர். குத்ஸ் தினத்தை அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றதுளூ உலகளாவிய வகையில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைப் பகுத்துப் பார்ப்பது சரியென்று இருக்குமானால், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விட சுன்னிகளே அதிகமாக பங்கு கொள்கின்றனர். 
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள்;, அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கோருகிறார்கள். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் ஸியனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல நம்புகிறார்கள். புழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், ஸியனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர். 
புல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஸியனிஸவாதிகள், குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களுள்ளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுள்ளும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாகக் காணப்படுகின்றனர் என்பதால், ஸியனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன. அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக புல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், ஸியனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன.  ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன.  கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனளூ சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, ஸியனிஸவாதிகளின்  நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை, முழு உண்மையை, வேறெதுவுமில்லாமல் உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர் அமைப்பைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்து வதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.    


வரலாறு: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்ளூ அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகத் திகழ்ந்தது.

 


சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்;டத்தில் இறங்குவதற்கு எந்தவோர் அராபிய ஆட்சியாளருக்கும் துணிவோ அந்தஸ்தோ இருக்கவில்லை. ஒரு குர்தியரான ஸலாஹுத்தீன் அல்-அய்யூபியினால்தான் கி.பி.1187ல் சிலுவைக்காரர்களுக்கு எதிராகப் படை யெடுத்து சென்று, அவர்களை ஜெருஸலத்திலிருந்து துரத்துவதற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கும் முடிந்தது. கி.பி.1918ல் நவீன கால பிரிட்டிஷ்-ஃபிரான்ஸிய சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம்தான், 1947ல் ஸியனிஸ இஸ்ரேலின் சட்டவிரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுpன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.



ஸியனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில்,  அரபு ஆட்சி யாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிபு;பதற்கான எந்தவோர் இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தலுக்கும்; மற்றும் நியாயப்பாட்டுக்கும் எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் ஸியனிஸவாதிகளுடன் ஜோடி சேர்ந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்க வேலை செய்கின்றன. சவூதிகள் மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரு புனிதத் தலங்களையும் எந்தளவுக்கு இஸ்லாத்தோடு சம்பந்தம் இல்லாத தாக மாற்றிவிட்டனர் என்றால், அங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ அல்லது பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்; பற்றியோ வாய் திறப்பதற்கு தடுக்கப்பட்டுள்ளதுளூ அங்கு, அடக்குமுறைக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவது என்ன, தங்கள் சுண்டு விரல்களைக் கூட அசைக்காமல், வெறுமனே மார்க்கச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மட்டுமே திளைத்திருக்க வேண்டும் என முஸ்லிம்களுக்குக் கூறப்படுகிறது.
 
சுமார் 34வருடங்களுக்கு முன்னர் இமாம் குமைனியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் மக்தஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் ஸியனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இன்னும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், சட்டவிரோத அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய ஸியனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளனளூ அதே நேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. புலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிhப்பு அணியினர் ஸியனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தத் தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து போக விடாமல் எரியச் செய்வது - இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும்ளூ இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.













Thursday, July 11, 2013

உண்மையான எகிப்திய வசந்தம்.



-கலாநிதி எலியஸ் அக்லே

ஜூன் 28 வெள்ளிக் கிழமை ஆரம்பமான, மில்லியன் கணக்கான எகிப்திய பிரஜைகளை (37 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது) உள்ளடக்கிய அதிபர் முஹம்மத் முர்ஸிக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரும் பிரவாகமெடுத்து பிரதான வீதிகளையும் எகிப்திய மாகாணங்களின் முக்கிய நகர சதுக்கங்களையும் நிறைத்து நாட்டையே ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் முர்ஸி பதவி விலக வேண்டும் எனவும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்து ஆவண செய்ய முர்ஸிக்கு 48 மணி நேரக் காலக்கெடுவை இராணுவத்தினர் விதித்தனர். முர்ஸி அதனை உதாசீனம் செய்ததால் அவர் உடனடியாக இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதோடு புதிய அரசியல் யாப்பும் ரத்து செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் நிறுவியுள்ளது.


இந்தப் புரட்சி 2011ல் முன்னைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்க்க வைத்த புரட்சியைவிட வித்தியாசமானது. சீ.ஐ.ஏ. அணுசரனையுடனான 'சுதந்திர இல்ல நிறுவனம்'(Freedom House Organization) எனப்படும் நிறுவனத்தினூடாகவே 2011 புரட்சி திட்டமிடப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதன் 43 உறுப்பினர் அன்று எகிப்திய பொலீஸாரினால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 17 மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக அவர்கள் சாதுர்யமாக இஸ்ரவேலுக்கு நாடுகடத்தப்பட்டு பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்தனர். என்றாலும் 2013 ஜனவரி 4ம் திகதி எகிப்திய நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. கடந்த காலங்களில் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பல லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை இவ்வாறு பதவி கவிழ்த்துள்ளமை கவனிக்கத்தக்கது. எகிப்தில் ஜனாதிபதி முபாரக் முதுமையடைந்து நோயாளியாக இருந்ததோடு அவரது அராஜகக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியும் ஆரம்பமானது. அதேநேரம் அவரது மகன் கமலை அவ்விடத்துக்கு பதிலீடு செய்வதும் கடினமானதொன்றாக இருந்தது.
தற்போதைய புரட்சி பல கோணங்களில் மிக வித்தியாசமானது. இது விரக்தியடைந்த இளம் எகிப்தியர்களினால் திட்டமிடப்பட்டு, ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டது. முதலாவது புரட்சியில் தடைகள் உடைத்தெரியப்பட்டபோது மக்கள் அஞ்சினர். முதலாவது புரட்சியில் பங்கெடுக்க அஞ்சிய இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட மில்லியன் கணக்கான எகிப்தியர் போராளிகளுடன் கைகோர்த்தனர். முதலாவது புரட்சியிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பாடம் கற்ற முன்னணி இளைஞர்கள் தற்போது போராளிகளுக்கான முறையான திட்டங்களுடனும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றைக் கவனத்திலெடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கான தூரநோக்குடனும் களமிறங்கினர். இதுவே அவர்களின் உண்மையான எகிப்திய வசந்தமாகும்.


இந்தப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கியது இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட தமர்ரத் (கிளர்ச்சி) இயக்கமாகும். அவர்கள் முர்ஸியின் வெளியேற்றத்தை நாடி 25 மில்லியன் கையெழுத்தை சேகரித்தனர். முர்ஸி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடத்தின்பின் அதாவது, ஜூன் 3ம் திகதி தேசிய மீட்பு முன்னணி என்ற கட்சியோடு இணைந்து வீதியிலிறங்கி உடனடியான ஜனாதிபதி தேர்தலை முன்வைத்துப் போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு எகிப்திய சமூக அமைப்புகள் வீதிகளிலிறங்கினர். இதில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகரவாசிகள், அலுவலகப் பணியாளர், தொழிற்சங்கங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில்சார் ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள், இல்லத்தரசிகள், சிவில் நிறுவனங்களின் உறுப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பொலிஸ் படை,இராணுவத்தினர் மற்றும் பல்வேறு கூட்டத்தினர் இதில் பங்கேற்றனர். முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் தோளோடு தோள் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல் யாப்பு சபை உறுப்பினர் மற்றும் அமைச்சர்களும் தமது ரஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். மொத்தம் 13,000 நீதிபதிகள் அரசியல் யாப்பை மீறியமைக்காக முர்ஸிமீது வழக்குத் தொடர்ந்தனர். 'நாம் பொது மக்களின் பாதுகாவலரேயன்றி அரசாங்கத்தின் பாதுகாவலரல்ல' எனக் கூறி பொலிஸ் படை அவருக்கெதிராகக் கிளம்பியது. இராணுவமும் தனது முதற்பணி பொது மக்களைப் பாதுகாப்பதே எனக் கூறி மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கும்படி முர்ஸிக்கு 48 மணிநேரக் காலக்கெடு விதித்தனர். முர்ஸி தமது மக்களின் குரலுக்கு மதிப்பளிக்வில்லை.முஹம்மது முர்ஸி 1948, 1954, 1965 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர். எகிப்தில் மிக மோசமாகப் பெருகிவரும் மேற்கத்திய செல்வாக்கையும் ஆக்கிரமிப்பையும் நிராகரித்து அடிப்படை இஸ்லாமிய போதனைகளை எழுச்சியடையச் செய்யும் நோக்கில் 1928ல் ஹஸன் அல் பன்னா அவர்களால் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.

 இவ்வமைப்பு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதப் போராட்டங்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் அன்று எகிப்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 1952ல் கமால் அப்துல் நஸார் தலைமையிலான முடியாட்சிக்கு எதிரான புரட்சியையும் ஆதரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி தமது பாணியிலான ஒரு போலி ஷரீஆ சட்டத்தினடிப்படையிலான ஆட்சியொன்றை அமைக்கத்துடித்த தீவிரவாதிகள் சிலரால் இந்த இயக்கம், கைப்பற்றப்பட்டது. எனவே, சமயப்பற்றற்ற சோவியத் யூனியனுடன் நஸாரின் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதை சாக்காகக் காட்டி நஸாரைஎதிர்க்கத் தலைப்பட்டனர்.


 அவர்கள் நஸாரைக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே 1954ல் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டு பலர் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனாலும் 1981ல் இஸ்ரவேல் சென்று இஸ்ரவேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எகிப்திய அதிபர்அன்வர் சதாத்தைப் படுகொலை செய்வதில் வெற்றி கண்டது. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹொஸ்னி முபாரக் மிகக் கொடூரமான முறையில் சகோதரத்துவ அமைப்பை அடக்கி ஒடுக்கி அனேகரைச் சிறையில் தள்ளியதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார். 2011 ஜனவரி 30ல் கிளர்ச்சிக் கும்பல் ஒன்று வாடி அல் நெட்ரோன் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுவிக்கும்வரை முஹம்மது முர்ஸியும் அவரது சகாக்கள் பலரும் சிறையிலேயே இருந்தனர். 2011 புரட்சிக்குப் பின் சகோதரத்துவ அமைப்புக்கு முர்ஸியைத் தலைவராகக்கொண்ட 'விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி'(Freedom and Justice Party)என்ற அரசியல் கட்சியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.


2011 புரட்சியின் பின் ஏற்பட்ட ஒரு கலவரமான நிலையில், அரசியல் யாப்பு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக முறைமையற்ற ஒரு சூழலில் 2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முஹம்மது முர்ஸியுடன் முபாரக்குடைய ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்தவரும் முன்னைநாள் விமானப் படைத் தளபதியுமான அஹமத் ஷபீக் போட்டியிட்டார். திருப்தியற்ற இரண்டு சுற்று வாக்கெடுப்பின் பின் மிகவும் குறைந்த 2மூ பெரும்பான்மையுடனும் இராணுவ அதிகார சபையின் உதவியுடனும் முர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரவேலுடனான உடன்படிக்கைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்ற நிபந்தனையின்பேரில் சீ.ஐ.ஏ நிதியுதவியுடன் விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி (FJP)வாக்குகளை வாங்கியதாக வாந்திகள் உலாவிய நிலையில் முர்ஸி தனது வெற்றிப் பேருரையின்போது எகிப்து தனது எல்லா சர்வதேச உடன்படிக்கைகளையும் மதித்து நடக்கும் என உறுதி கூறினார். இதில் இஸ்ரவேலுடனான உடனபடிக்கைகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே, சிவில் அரசியல் முறைமையை மீள் அறிமுகம் செய்து தமது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வன்முறை வடிவத்தை சீரமைத்துக்கொள்வதற்கு முர்ஸிக்கு அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் அவராலேயே மண்ணாக்கப்பட்டது. ஐந்து வருடங்களாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு பொறியியலாளரான முர்ஸி ஒரு ஜனாதிபதிக்கு அவசியமான அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் புதிய அரசியல் அரங்கத்தை அவர் தவறாகவே விளங்கியிருந்தார்;. சகோதரத்துவ அமைப்பு மீதான அவரது குருட்டுத்தனமான அபிமானம் அவரது அரசியல் நோக்கை வரையரைக்குட்படுத்தியது. அதாவது, நாட்டு நலனைவிட அவரது இயக்கத்தின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார்.

முர்ஸி 2012 நவம்பரில் எவ்வித சட்ட ஞானமுமின்றி,  வரையரையற்ற சட்டவாக்க அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து, டிஸம்பரில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அதனை மக்கள்மீது திணிக்க முற்பட்டார். முக்கிய அரசாங்கப் பதவிகளுக்காகத் தமது சகோதரத்துவ சகாக்களை நியமிக்கும் வரை அவர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தட்டிக்கழித்ததோடு பாராளுமன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையும் அரசாங்கத்தையும் மதப்பிரிவினைவாதப் போக்கில் மீளக்கட்டமைக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டார்.


முர்ஸி தனது சகோதரத்துவ அமைப்பின் மீது அதிகாரத்தைக் குவித்ததன் காரணமாக எகிப்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பிரஜைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலிருந்து அவர் தூரமாக்கப்பட்டிருந்தார்.இது பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது. லிபியாவின் 2 பில்லியன் அமெரிக்க டாலர், சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் ஒவ்வொரு பில்லியன் அமெரிக்க டாலர், 3.5மூ வட்டியுடனான எகிப்திய திரைசேரி உண்டியல் மீதான 3 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உட்பட கட்டாரின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எதனாலும் எகிப்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. முர்ஸி நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நிலவிய தொடர்ச்சியான பவுனின் மதிப்பிறக்கம், வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு குறைவடைந்தமை,உல்லாசப் பயணத்துறை வருமானம் சுருங்கியமை என்பன எகிப்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வரிச் சலுகைகள், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குப் பதிலாக எகிப்தில் தேசியக் கடன் சுமையையே அதிகரிக்கச் செய்தது. இறுதியில் முர்ஸியின் சகோதரத்துவ அமைப்பால் 'தெய்வ குற்றம்' என வர்ணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்(IMF) கடனுக்குக் கையேந்தும் நிலையே அவருக்கு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் பொருளாதாரப் பிரச்சினை மக்களை வெகுவாக வாட்டி வதைத்தது. அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்தால் மக்கள் நீண்ட கியூ வரிசைகளில்நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதையுமே பெறாது வெறுங்கையோடு வீடு திரும்பினர். எகிப்து கோதுமையை இறக்குமதி செய்யும் பிரதான நாடாக மாறியுள்ளது. எகிப்து தொடர்ந்தும் உலக சந்தையைவிட மிகக் குறைந்த விலையில் இஸ்ரவேலுக்கான வாயு விற்பனையை மேற்கொள்வதால் உள்ளுரில் சமையல் வாயுவுக்கான தட்டுப்பாடு பெருகி வருகின்றது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எவ்வித கல்வித்தகைமையும் பாராது உத்தியோகங்கள் வழங்கப்படுவதால் ஆயிரக் கணக்கான உயர்கல்வித் தகைமை பெற்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உத்தியோகமின்றி அலைந்து திரிகின்றனர். தனது தேர்தல் பரப்புரையின்போது முர்ஸி வாக்களித்த எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதோடு எவ்வித பொருளாதார அல்லது சீர்திருத்த திட்டங்களோ முன்னெடுக்கப்படவுமில்லை.
முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் மதப்பிரிவினைவாதமே மேலோங்கிக் காணப்பட்டது. தேவாலயங்களையும் வீடுகளையும் கொளுத்துவது உட்பட கொப்டிக் கிருஸ்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதோடு மெஸ்பெரோ படுகொலை பேன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவர்களது சட்டரீதியான போராட்டங்களும் தாக்குதல்களுக்குள்ளானது. மேலும் திரையிடாத முஸ்லிம் பெண்களும் அடிக்கடி முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

முர்ஸி தனது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியையே தழுவியுள்ளார். எகிப்திய மக்கள் பலஸ்தீனப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி, இஸ்ரவேலர்களைத் தமது பிராந்திய எதிரிகளாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் இஸ்ரவேலுடனான அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் இஸ்ரவேல் தூதரகத்தை மூடிவிடுமாறும் இஸ்ரவேலுக்கான வாயு ஏற்றுமதியை நிறுத்துமாறும் எல்லாவற்றுக்கும் மேலாக காஸாவுடனான ரபா எல்லையைத் திறந்து தமது ரத்த உறவுகளுக்கு எதிரான இஸ்ரவேலிய இராணுவ, பொருளாதார முற்றுகையைத் தளர்த்த உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் முர்ஸி இதற்கு செவிசாய்க்காது அதற்கு முற்றிலும் மாறான கொள்கைகளையே கடைபிடித்து வந்தார். சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா பலஸ்தீனப் பிரச்சினையை ஒரு பிரதான விவகாரமாக முன்னெடுத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தோர், அதனை ஓரம்கட்டி வெறும் கோஷமாக மட்டும் அதனை மாற்றிவிட்டனர். இஸ்ரவேலிய முற்றுகையை பராமரிப்பதன் மூலம் காஸா மீதான அழுத்தத்தை முர்ஸி அதிகரித்தார். எல்லாவற்றையும்விட அவரது மோசமான செயல் என்னவென்றால் 1.5 மில்லியன் பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான காஸா சுரங்க வழிப்பாதைகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்கியமையாகும்.




 அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலிருந்து கசிந்துள்ள கடிதங்களின்படி முர்ஸி முபாரக்கைவிட மோசமானவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எகிப்திய எல்லையூடாக காஸாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் போன்றவற்றைத் தடைசெய்தல், சினாயில் இஸ்ரவேலிய பாதுகாப்பை அதிகரித்தல், காஸாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இஸ்ரவேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவி செய்தல், சுயஸ் கால்வாய் மூலமாக அமெரிக்க ஊடுகடத்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்காக எகிப்திய வான்வெளியைத் திறந்துவிடல் போன்றவை அமெரிக்க இராணுவ நிதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக முர்ஸி செய்து வரும் துரோகங்களாகும்.
2010 செப்டமபரில் இஸ்ரவேலர்களை இரத்தக் காட்டேரிகள், போர் வெறியர்கள் என்றும் மனிதக் குரங்குகளினதும் பன்றிகளினம் சந்தியினர் என்றும் சாடிய முர்ஸி, 2012 அக்டோபரில் இஸ்ரவேல் ஜனாதிபதி சீமன் பெரஸுக்கு எமுதிய கடிதத்தில்,'எனது அன்புக்குரிய மாபெரும் நண்பா,' என விளித்து 'எமது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் மகிழ்ச்சிகரமான நட்புறவைப் பலப்படுத்திப் பராமரிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடு எகிப்திய மக்களின் கவனத்திலிருந்து ஒருபோதும் தப்பிவிடாது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸாவையும் ஜெரூஸலமையும் விடுவிப்பதற்காக ஜிஹாத் செய்யவேண்டும் எனக் கூறிவரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, கடந்த மாதம் முர்ஸியும் சில தீவிரவாத சலபி அரசியல் மதவாதிகளும் இணைந்து தமது ஜிஹாதை இன்னொரு முஸ்லிம் அரபு நாடான சிரியா மீது திருப்பிவிட்டுள்ளனர். இஸ்ரவேலிய எதிரிகளுடனான நட்புறவைத் துண்டித்து கெய்ரோவில் அவர்களது தூதரகத்தை மூடி பலஸ்தீன விடுதலைக்கு அரைகூவல் விடுவதை விட்டு முர்ஸி தற்போது சிரியாவுடனான நட்புறவைத் துண்டித்து அவர்களது தூதரகத்தை மூடி அவர்களுடன் ஜிஹாத் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். பலஸ்தீனுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிரான எண்ணற்ற குற்றச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதை விடுத்து சிரியாவுக்கு மேலாக விமானத் தடை வலையமொன்றை ஏற்படுத்த வேண்டுமென முர்ஸி ஐ.நா.வைக் கேட்டுள்ளார்.

முர்ஸியின் சாயம்வெளுத்துவிட்டதுளூ முபாரக்கைப் போன்று இவரும் ஒரு அமெரிக்க-ஸியோனிஸ அடிவருடியே! இவரது ஒரு வருட ஆட்சி காலத்தில் எகிப்திய மக்கள், பலமுறை வீதிகளில் இறங்கி சீர்திருத்தங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் எச்சரிக்கையினையும் முர்ஸிக்கு வழங்கினர். அவற்றையெல்லாம் முர்ஸி உதாசீனம் செய்தமையால் இளம் எகிப்தியர் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவையும் புதிய தேர்தலையும் வேண்டி மீண்டும் விதிகளில் இறங்கினர். இதன் மூலம் முர்ஸிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தோல்வியும் மக்களுக்கு வெற்றியும் கிடைத்தது.
மக்கள் முர்ஸிக்கு நாட்டை வழிநடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரத்தைக் கையளித்தனர். ஆனால் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்தமையால் மக்கள் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றனர். இதுவே மக்கள் விருப்புக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத்தின் உயர் நிலையாகும்.
தமிழில்: றஹ்மத் அலி

Thursday, June 6, 2013

சிரிய மோதல்: வன்முறைகளைத் தூண்டும் கர்ளாவி






-கலாநிதி சந்திரா முஸாபிர்

2013 ஜூலை முதலாம் திகதி பிரபல மார்க்க அறிஞர் யூசுப் கர்ளாவி 
வெளி யிட்ட  சில கருத்துகளைக் கேட்டுவன்முறைகளையும் ரத்தம் சிந்தலையும் வெறுத்தொதுக்கும் எந்த ஒரு மனிதனும் 
அதிர்ச்சியடையாமல் இருந்திருக்க முடியாதுதோஹாவில் 
நடைபெற்ற ஒரு கூட்டத்தில்
சிரியா சென்று பஸர் அல் அஸாத் அரசாங்கத்துக்கும் அதன் ஆதரவாளர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் என்பவற்றுக்கும் 
எதிராகப் போராடுமாறு அப்பிராந்தியத்திலுள்ள சுன்னி முஸ்லிம்களை 
அவர் உசுப்பிவிட்டுள்ளார்அதனை ஒரு 'ஜிஹாத்என்றும் அவர் வர்ணித்துள்ளார்ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் சுன்னிகளை விழுங்க பசிவெறியுடன் காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.        ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையே எந்தவித பொதுத் 
தன்மைகளும் கிடையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



சிரிய அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்குமிடையே,
 கேந்திர எல்லைக் கிராமமான கஸைரைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நடைபெறும் உக்கிரமான போருக்கு மத்தியிலேயே கர்ளாவி மேற்கண்ட கருத்து வெளியாகி உள்ளதுலெபனானைத் தளமாகக்கொண்ட ஹிஸ்புல்லாஹ் அரசாங்கப் படைகளுக்கு உதவி வருகின்றது
கிளர்ச்சியாளர் பக்கமாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் போராளிகள் போரிடுகின்றனர்.
ஷியாக்களுடன் போரிடுமாறு சுன்னிகளைத் தூண்டுவதானது
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்தக் 
கொடூர  யுத்தத்தின் தீவிரத்தன்மையை அதிகரிக்கவே  வழிகோலும்
மார்க்க அறிஞர்கள் தமது ஒழுக்கரீதியிலான அணுகுமுறையைஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் பிரயோகிக்க வேண்டும்இரு சாராரையும் உடனடியாக ஒரு யுத்த நிறுத்துக்கு 
வருமாறு வினயமாக வேண்டிக்கொள்வதே அவர்கள் மேற்கொள்ள
வேண்டிய பணியாகும்.

மேலும்சிரியாவில் உள்ள முரண்பாடு வெறும் ஷியா-சுன்னி மோதல் 
அல்ல என்பதை முதலில் கர்ளாவி உணர வேண்டும்பிராந்தியத்தில் மேற்கத்திய அடிவருடிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டி மற்றும் இஸ்ரவேல் போன்ற பெரும்  அரசியல் மேலாதிக்கத்தில் அது 
வேறூன்றி உள்ளது. 2011 மார்ச்சில் அஸாதின் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான அமைதிப் போராட்டமாகவே அது ஆரம்பமானது
அஸாத் அதற்கெதிராகக் கடும் போக்கைக் கடைபிடித்தார்இரண்டொரு வாரங்களில்பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்துக்கும் 
கட்டுப்பாட்டுக்கும் சவாலாக இருக்கும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்பவற்றுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருக்கும் அஸாத் 
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்திருக்கும் மேற்கத்திய 
மற்றும் இஸ்வேலிய அதிகார மையத்தின் ஆணைகளை சிரமேற்கொண்ட சில அண்டை நாட்டுக் குழுக்களும் தனிப்பட்ட சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பகுதியினருக்கு ஆயுதங்கள் வினியோகிக்க ஆரம்பித்தனர்உண்மையிலேயேஈரான்ஹிஸ்புல்லாஹ் மற்றும் 
அஸாத் அரசாங்கம் என்பனவே வட ஆபிரிக்கா மற்றும் மேற்காசியா 
போன்ற பிரதேசங்களில் தமது மேலாதிக்கத்தை நீடித்துக்கொள்ளஅமெரிக்காபிரிட்டன்பிரான்ஸ் மற்றும் இஸ்ரவேல் போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகத் துணிந்து 
நின்று எதிர்ப்பைக் காட்டும் அமைப்பு ரீதியிலான ஒரே கூட்டாகும். 2000த்திலும் 2006லும் மிகக் கொடூரமான முறையில் லெபனானில் தமது கட்டுப்பாட்டை நிறுவ இஸ்ரவேல் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கி அவர்ளைத் துரத்தியடித்தது இந்த ஹிஸ்புல்லாஹ்தான் என்பது நினைவு கூரத்தக்கதுஹிஸ்புல்லாஹ் (இறைவனின் கட்சிஎன்ற இக்கட்சியையே
'ஷைத்தானின் கட்சிஎன தோஹா கூட்டத்தில் கர்ளாவி வர்ணித்துள்ளார்.
ஏனெனில்இந்த எதிர்ப்பு சக்திகள் ஷீயாவாக இருப்பதாலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள கட்டார்
சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற மேற்கத்திய அடிவருடிகள் சுன்னிகளாக இருப்பதாலும்அவர்களின் போராட்டத்தை
பிராந்தியத்தில் ஷீயா ஆதிக்கத்துக்கான முயற்சி என நிறுவ அரும்பாடுபடுகின்றன.


இதன் விளைவாகமேற்கத்திய மேலாதிக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்கள்மேற்காசியவட ஆபிரிக்க நாடுகளுக்குள்ளே 
தலைகாட்டும் போராட்டங்கள் மற்றும் சிரியாவின் கோலான் 
குன்றுகள் மீதான இஸ்ரவேலின் தொடர்ந்து செல்லும் ஆதிக்கம் 
போன்றவை அவர்கள் அரிதாகக் கண்டுபிடித்துள்ள ஷீயா-சுன்னி பிரச்சினைகள் மூலம் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.  
ஷீயா-சுன்னி வேறுபாடுகள் நீண்ட காலம் நிலவி வந்த ஒன்றாயினும்கூட மேற்கத்திய மேலாதிக்கத்துக்கும் இஸ்ரவேலிய நலன்களுக்கும் சவாலாக எழுந்த 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்தே ஷீயாக்களையும் சுன்னிகளையும் பிரிப்பதற்காகஇந்த வேறுபாடுகள்குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவினால்
பூதாகரமாக்கப்பட்டு பெருமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கர்ளாவியின் கருத்தை நாம் இந்தக் கோணத்தில்தான் நோக்க
 வேண்டும்ஷீயா சுன்னிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை 
எட்டுவதில்கர்ளாவிஒரு அணுகூலமான கருத்தைக் கொண்டிருந்த
 ஒரு காலமும் இருந்ததுஆனால்சில மேற்கு நாடுகள் அரபு வசந்தத்தின்போதுமேற்காசிய வட ஆபிரிக்க விவகாரங்களில் 
மூக்கை நுழைத்தபோதுகர்ளவி  அதனை நியாயப்படுத்தினார்
லிபியா மீதான நேட்டோ விமானத் தாக்கதலை அங்கீகரித்த ஆரம்பப் பிரமுகர்களில் கர்ளாவி முதன்மையானவராக இருந்தார்
இதற்குமேலாககடந்த வருட நடுப்பகுதியில், 'இன்று இறைதூதர் 
திரும்பி வந்தால் அவர் நேட்டோவுக்கே ஆதரவளிப்பார்என்றும் 
கருத்து தெரிவித்தார்இதன்காரணமாகஇவர் சில அரபு 
விமரிசகர்களால் 'நேட்டோ முப்திஎன்று கேலியாக அழைக்கப்பட்டார்.

மத அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து அதன் மூலமாக 
மேற்கத்திய மேலாதிக்கத்தை சட்டபூர்வமாக்கிய கர்ளாவியின்
 செயலேஅவரது நிலைப்பாட்டில் மக்கள் நம்பிக்கையிழக்க 
ஏதுவாயிற்றுஇதைவிட மோசமான விடயம் என்னவென்றால்
உலகளாவிய தீய சக்திகள் மற்றும் பிராந்திய அடிவருடிகள் 
என்போரின் நலன்களை நீடிக்கும் நோக்குடன்பாரியளவிலான 
அழிவுக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும்முஸ்லிம்களும் முஸ்லிம்களும் இடையேயான நேரடி மோதலை ஏற்படுத்தும் பிரிவினைவாதத்துக்குத் தூபமிட்டமையாகும்இதுமதபோதகரின்
அங்கியை அணிந்த ஒருவர் தமது மதத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்தமைக்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.

*கலாநிதி சந்திரா முஸாபிர் மலேஷியதார்மீக உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் தலைவராவார்.

 தமிழில்றஹ்மத் அலி