Wednesday, October 24, 2012

இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள்,இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தி
















இஸ்லாமியப் புரட்சியின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெய் அவாகள், 2012 செப்டம்பர் 13ந் திகதி அன்று,  இஸ்லாத்தின் திருநபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கற்பிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து வெளியிட்ட செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சர்வ வல்லமையும் அனைத்து அறிவும் கொண்ட அல்லாஹ் கூறுகின்றான்: 'அவர்களின் அபிலாசை, தங்கள் வாயினால் ஊதி அல்லாஹ்வின் ஒளியை அணைத்து விடலாம் என்பதுதான்ளூ ஆயினும், நிராகரிப்பாளர்கள் (அதனை) எவ்வளவு வெறுத்த போதிலும், அல்லாஹ் தனது ஒளியை சம்பூரண மாக்குவான்'  (திருக்குர்ஆன் 61:8)

மதிப்பிற்குரிய ஈரான் மக்களே! மகத்தான இஸ்லாமிய உம்மத்தைச் சேர்ந்தவர்களே!
இஸ்லாத்தின் எதிரிகளான இந்த தீயவர்கள், சங்கை வாய்ந்த நபியவர்களை
(இறைவனின் நல்லாசிகள் அவர்கள் மீதும், அவர்களின்; பரிசுத்த
குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!) பழிப்பதன் மூலம், தங்கள் ஆழ்ந்த
வெறுப்பை மீண்டுமொருமுறை வெளிக்காட்டியிருக்கின்றனர். மேலும், இவர்கள் தங்கள் முட்டாள்தனமானதொரு மற்றும் அருவெறுப்பான நடவடிக்கையின் மூலம், இன்று உலகில் இஸ்லாத்தினதும் திருக்குர்ஆனி  னதும் பிரகாசம் அதிகரித்து வருவதைக் கண்டு தீய ஸியனிஸக் குழுக்கள் ஆத்திரமடைந்திருப்பதைக் காண்பித்திருக்கின்றனர். இறை படைப்புகள் அனைத்திலும் மிக சங்கை பொருந்தியவரை இவர்கள் தங்கள் வெறுக்கக்கூடிய அசிங்கத்திற்கு இலக்காகக் கொண்டிருப்பதானது, இந்த மாபெரும் குற்றத்தையும் பாவத்தையும் இழைத்திருப்பவர்களை அகௌரவப்படுத்துவதற்குப் போதுமான காரணமாக அமையும்.

இந்த தீய நடவடிக்கையின் பின்னணியில் அமைந்திருப்பது,  ஸியனிஸம்,
அமெரிக்கா, மற்றும் ஏனைய ஆணவம் கொண்ட அதிகாரச் சக்திகளின் விரோதக் கொள்கைகளாகும். இதன் மூலம், மகிமை பொருந்தியனவாகப் போற்றப்படும் மாண்புகளின் மீது இஸ்லாமிய உலகின் இளந் தலை முறையினர் மரியாதை இழக்கச் செய்வதையும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகள் மழுங்கடிக்கப்படுவதையும் இவர்கள நாடுகின்றனர். இந்த தீய சங்கிலித் தொடரில் முந்தைய இணைப்புகளான, குறிப்பாகச் சொல்வதென்றால், ஸல்மான் ருஷ்தி, டேனிஷ் காhட்டூன் வரைஞர்,
அல்குர்ஆனை எரித்த கிறிஸ்தவ மதகுருமார் போன்றவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்திருந்தால், ஸியனிஸ முதலாளிகளுடன் தொடர்புடைய கம்பெனிகளினால் வெளியிடப்படும் பலவகையான இஸ்லாம் விரோதத் திரைப்படங்களை விநியோகம் செய்யாமலிருந்தால், இன்று இந்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை இவர்கள் செய்திருக்கமாட்டார்கள். இதற்கான முதல் குற்றவாளி ஸியனிஸமும், அமெரிக்க அரசாங்கமும்தான். அமெரிக்க அரசியல்வாதிகள், தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என உண்மைப்பூர்வமாகக் கூறுவார்களாயின், இந்த கோரமான குற்றத்தை இழைத்தவர்;களையும் இவர்களுக்கு நிதி வழங்கி ஆதரித்தவர்களையும்
தகுந்த விதத்தில் தண்டிக்க வேண்டும். ஏனெனில், இவர்களின் செயல்களினால், முஸ்லிம் மக்களின் உள்ளங்கள் கடும் வேதனை அடைந்திருக்கின்றன.

மேலும், உலகெங்கிலுமுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்: இஸ்லாமிய மறுமலர்ச்சி க்கெதிரான எதிரிகளி;ன் இந்த பயனற்ற, களேபரமான நடவடிக்கைகள், இந்த எழுச்சியின் மகத்துவத்திறகும் முக்கியத்துவத்திற்குமான ஓர் அடையாளமாகும். 'மேலும், அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 12:21)

ஸெய்யித் அலி காமனெய்

Friday, October 19, 2012

தெஹ்ரானில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் 16வதுஅணி சேரா இயக்கத்தின்சர்வதேச உச்சி மாநாடு


 



ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெயி அவர்கள், சென்ற 2012 ஓகஸ்ட் 30ம் திகதி தெஹ்ரானில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் 16வது உச்சி மாநாட்டில் நிகழ்த்திய துவக்கவுரையின் முழு உள்ளடக்கம் இங்கு தரப்படுகிறது:








-ஈரான் தலைவர் ஆயத்துல்லாஹ் காமனெயி-


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

எல்லாப் புகழும் ஈருலக நாயனான அல்லாஹ்வுக்கு உரியதாகும்ளூ மேலும், சாந்தியும் நல்லாசிகளும், மகத்தானவரும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தூய்மை வாய்ந்த சந்ததியினர் மீதும்,  அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மீதும், எல்லா தீர்க்கதரிசிகள், இறைத் தூதுவர்கள் மீதும் உண்டாவதாக!
 
நான் மதிப்பிற்குரிய விருந்தாளிகளான உங்களை - அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் தலைவர்களையும் தூது குழுக்களையும், இம்மாபெரும் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய அனைவரையும் வரவேற்கிறேன்.

அணி சேரா இயக்கத்திற்கு புத்துயிர் வழங்குவதற்கான ஒன்றுகூடல்

இறைவனின் வழிகாட்டலுடனும் உதவியுடனும், உலகின் இன்றைய நிலைமைகளையும் தேவைகளையும் கருத்திற் கொண்டு, ஓர் இயக்கத்திற்கு புத்துயிரையும் உந்துசக்தியையும் அளிப்பதற்கு நாம் இங்கு ஒன்று குழுமியிருக்கிறோம். இந்த இயக்கம், ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அறிவு நுட்பமும் துணிவும் கொண்ட- கவலையும் பொறுப்புணர்வுமுள்ள- அவர்களின் காலத்தினது சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் நன்கறிந்த- அரசியல் தலைவர்கள் ஒரு சிலரினால் ஸ்தாபிக்கப்பட்டது.

தொலைவிலும் அருகிலுமுள்ள பல்வேறு பூகோளப் பகுதிகளிலிருந்து, பல்வேறு    கொள்கைவாத -கலாச்சார-வரலாற்றுக் குணாம்சங்களைக் கொண்ட பல்வேறு தேசியங்களையும் இனங்களையும் சார்ந்த நமது விருந்தாளிகள் இங்கு ஒன்று குழுமியிருக்கிறார்கள். ஆயினும், இந்த இயக்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஹ்மது சுகர்னோ 1955ம் ஆண்டு பிரசித்தி பெற்ற பாண்டுங் மாநாட்டில் சொன்னது போல, அணி சேரா இயக்கத்தை அமைப்ப தற்கான அடிப்படைக் காரணம், பூகோளரீதியான அல்லது இன-மதரீதியான ஒற்றுமை அன்றுளூ மாறாக, அது தேவைகளுக்கான ஒற்றுமையாகும். அந்த காலக்கட்டத்தில், அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகளை, தங்களை அதிகாரம் செலுத்தும் மமதை கொண்ட- மன நிறைவடையாத பொறிவலைகளின் பின்னலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, தங்களுக்கிடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் தேவையிருந்தது. இன்றுங் கூட, ஆதிக்கச் சக்திகளின் சாதனங்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாலும் பரவலாகியிருப்பதாலும் அந்தத் தேவை இருந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாத்தின் ஒளியில் சர்வதேச மனித இயற் பண்பின் தனித்துவம் வாய்ந்த ஆற்றல்

இன்னோர் உண்மையையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மனிதர்கள் தங்களுக்கிடையிலான இன-மொழி-கலாச்சார வேறுபாடுகளுக்கு மத்தியிலும், ஒரே விதமான இயற்கைத் தன்மையைக் கொண்டிருப்பதால், அவர்கள் தூய்மை, நீதி நியாயம், அன்பு, இரக்கச் சிந்தனை, ஒத்துழைப்பு போன்ற பண்புநலன்களை நோக்கிச் செல்ல வேண்டும் என இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. தவறான உணர்வுகளிலிருந்தும் நோக்கங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்தி தடம் அமைத்துக் கொள்ள முடியுமானால், இந்த சர்வதேச மனித இயற் பண்புதான், மனித ஆத்மாக்களுக்கு ஓரிறைக் கொள்கை மற்றும்; மனித அறிவைக் கடந்த- மிகச்சிறந்த- அதிமேம்பட்ட இறைவனின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வழி காட்டுகிறது.

ஒளிமயமான இந்தப் பேருண்மை எத்தகைய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டதெனில், சுதந்திரமும் பெருமிதமும் கொண்ட சமூகங்களின் அடித்தளத்தை அதனால் நிறுவ முடியும் என்பது மட்டுமல்லாமல், அதே வேளை முன்னேற்றத்தையும் நீதியையும் துய்க்கச் செய்யவும் முடியும். மனித குலத்தின் அனைத்து லௌகீக- உலகாயத முயற்சிகளுக்கும் ஆன்மீகத்தின் ஒளியை அதனால் காட்ட முடியும். மேலும், தெய்வீக மதங்களினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கும் மறுவுலகச் சுவர்க்கத்திற்கு முன்பதாகவே, மனிதப் பிறவிகளுக்கு இவ்வுலகிலேயே ஒரு சுவர்க்கத்தை உருவாக்க முடியும். இந்த பொதுவான பிரபஞ்ச உண்மைதான், வெளிப்படையான அமைப்பு முறை கள், சரித்திரப் பின்னணி, பூகோள இட அமைவு போன்றவற்றைப் பொறுத்த வரையில் எத்தகைய ஒத்த தன்மை யையும் கொண்டிராத நாடுகளுக்கு மத்தியில், சகோதரப்பூர்வமான ஒத்துழைப்பின் அடித்தளங்களை அமைத்துக் கொடுக்க முடியும்.

இத்தகையதோர் அடித்தளத்தின் மீது எப்போது சர்வதேச ஒத்துழைப்பு அமையப் பெறுகின்றதோ, அப்போது அரசாங்கங்கள் தங்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை, பீதி மற்றும்; பயமுறுத்தல்கள், அல்லது பேராசை மற்றும் ஒரு பக்கச் சார்பான நலன்கள், அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்யும் மற்றும் இலஞ்ச லாவண்யங்களுக்கு விலை போகும் தனிநபர்களின் மத்தியஸ்தங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அல்லாமல், நன்மை பயக்கின்ற ஆரோக்கியமான மற்றும் பகிர்ந்து கொள்கின்ற நலன்களின், இன்னும் சொல்லப் போனால், மிக முக்கியமாக மனித சமுதாயத்தின் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்ப முடியும். இவ்விதமாக அரசாங்கங்கள,; விழிப்படைந்த தங்கள் மனச்சாட்சிகளையும் உள்ளுணர்வுகளையும் வலிநீக்கி, தங்கள் மக்களின் உள்ளங்களை அமைதியடையச் செய்ய முடியும்.

தகுதி மாண்புகளின் மீது அமைந்த இந்த ஒழுங்குமுறை, ஆதிக்க ஒடுக்குதல்களின் மீது அமைந்த ஒழுங்குமுறைக்கு நேர் எதிரானதாகும். பின்னைய ஒழுங்குமுறையைத்தான் அண்மைய நூற்றாண்டுகளில் மேற்கத்திய ஆதிக்கச் சக்திகளும், இன்று ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற- எவரையும் சட்டை செய்யாமல் சண்டித்தனமாக வலிந்து மூர்க்கத்தனமாகத் தாக்குகின்ற அமெரிக்க அரசும், தலைமை தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டும் விஸ்தரித்துக் கொண்டும் இருக்கின்றன. 

அணி சேரா இயக்கத்தின் பிரதான மாண்புகளின் உயிர்த் துடிப்பு

அன்பிற்குரிய விருந்தினர்களே! இன்று ஏறத்தாழ ஆறு தசாப்தங்கள் கழிந்த பின்னருங் கூட, அணி சேரா இயக்கத்தின் பிரதான மாண்புகள் உயிர்த் துடிப்புடனும் உறுதியுடனும் நிலையாக இருந்து வருகின்றன. அவை: காலனித்துவ எதிர்ப்பு, அரசியல் பொருளாதார கலாச்சாரச் சுதந்திரம், எந்தவொரு வல்லரசு அணியுடனும் கூட்டுச் சேராமை, மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் சீர்படுத்தல் என்பன வாகும்;. இம்மாண்புகளை அடைவதற்கு இன்றைய உலகின் உண்மை நிலை இன்னும் வெகு தூரம் பிரயாணப்பட வேண்டியுள்ளது. ஆன போதிலும், களத்தில் காணப்படும் மெய்ப்பாடுகளை மாற்றி அமைத்து, இம்மாண்புகளை அடைவதற்கான கூட்டுரீதியான விருப்பமும் பரந்த புரிந்துணர்வுடனான பிரயத்தனங்களும், ஏராளமான அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், எதிர்காலத்தில் நம்பிக்கை தரக் கூடியனவாகவும் பலனளிக்கக் கூடியனவாகவும் காணப்படுகின்றன.

நாம் கடந்து வந்த அண்மைக்காலத்தில், பனிப்போர் யுகக் கொள்கைகளும் அதனைத் தொடர்ந்து வந்த ஒரேயொரு வல்லரசு ஆதிபத்தியக் கொள்கைகளும் தோல்வி கண்டதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து பாடம் படித்துக் கொண்ட உலகம், புதியதொரு சர்வதேச ஒழுங்கமைப்பை நோக்கி மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அணி சேரா இயக்கம் புதியதொரு பங்களிப்பை வழங்க முடியும்ளூ வழங்க வேண்டும். இந்த  புதிய ஒழுங்கமைப்பு, எல்லா நாடுகளும் கலந்து கொள்வதாகவும் எல்லா நாடுகளுக்கும் சரிசமமான உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில், இந்த  புதிய ஒழுங்கு முறையை இன்றைய யுகத்தில் நிலை நிறுத்துவதற்கு, நமது ஒருமைப்பாடு ஐயத்துக்கிடமின்றி மிக அவசியமானதொன்றாகும்.

அதிர்ஷ்டவசமாக, உலகளாவிய அபிவிருத்திகளின் கண்ணோட்டம் ஒரு பன்முக அமைப்புமுறைக்கு கட்டியங் கூறுவதாகக் காணப்படுகிறது. இந்த அமைப்புமுறையில் பாரம்பரிய ஆதிக்கச் சக்திகளின் இடத்தை, பல்வேறு பொருளாதார சமூக கலாச்சார அரசியல் மூலங்களிலிருந்து உருவான நாடுகளின் குழுக்களும் கலாச்சாரங்களும் நாகரிகங்களும் நிரப்புவதாயிருக்கும். சென்ற மூன்று தசாப்தங்களாக நாம் பிரத்தியட்சமாக சந்தித்து வந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், மிகத் தெட்டத் தெளிவாகவே பாரம்பரிய ஆதிக்கச் சக்திகள் வீழ்ச்சியடையும் அதே நேரத்தில், புதிய சக்திகள் தோற்றம் பெறுவதை நமக்கு காண்பிப்பதாக அமைந்திருந்தன. இந்த படிப்படியான மாற்றம், அணிசேரா நாடுகளுக்கு உலக அரங்கில் மிக முக்கியமானதும் பெறுமதி வாய்ந்ததுமான ஒரு பாகத்தை வகிப்பதற்கும், உண்மையில் எல்லாரும் பங்கு கொள்ளும் நீதியான ஒரு உலகளாவிய நிர்வாகத்திற்கான களத்தைத் தயார்படுத்துவதற்குமான வாய்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. பலதரப்பட்ட கண்ணோட்டங்களும் சூழ்நிலைச் சார்புகளும் நமக்கு மத்தியில் காணப்பட்ட போதிலும், இந்த இயக்கத்தின் அங்கத்துவ நாடுகளான நாம், நீண்ட காலமாக நமது ஒருமைப்பாட்டையும் பிணைப்பையும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகுதி மாண்புகளின் கட்டமைப்பிற்குள் பழுதுபடாமல் காப்பாற்றி வந்திருக்கிறோம். சொல்லப் போனால், இதுவொன்றும் சாதாரணமான- சிறியதொரு சாதனையன்று. இந்தப் பிணைப்பினால் நீதியும் நியாயமும் கொண்ட, கருணையும் மனிதாபிமானமும் உள்ள ஓர் அமைப்பு முறைக்கு மாறுவதற்கான களத்தை ஆயத்தப்படுத்த முடியும்.

இன்றைய உலக நிலவரங்கள் உணர்த்தும் உண்மைகள்

இன்றைய உலக நிலவரங்கள், அணிசேரா இயக்கத்திற்கு பின்னெப்போதும் தலைதூக்காத ஓர் அரிய சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றன. ஒரு சில மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகார நாட்டத்தினால் நிர்வகிக்கப் படும் கட்டுப்பாட்டு அறையாக முழு உலகமும் விளங்கக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும். சர்வதேச விவகாரங்களை நிர்வகிப்பதற்கு எல்லாரும் பங்கு கொள்கின்ற ஓர் உலகளாவிய மற்றும் ஜனநாயக அமைப்பு முறையை நிர்மாணிக்க முடியுமாயிருக்க வேண்டும். முரட்டுத் தனமாக நடந்து பிறரை வம்புக்கிழுத்து வதை செய் கின்ற- சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற ஒரு சில நாடுகளின் அத்துமீறல்களின் விளைவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கும் எல்லா நாடுகளுக்கும் இத்தகையதொரு தேவை நிச்சயமாக இருந்து கொண்டிருக்கிறது.


ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை என்பது, அறிவுக்குப் பொருந்தாத- அநீதியான- முற்றிலும் ஜனநாயகத்திற்கு மாற்ற மான அமைப்பு முறையையும் செயல் முறைமையையும் கொண்டிருக்கிறது. இது காலங் கடந்து போன- வழக் கொழிந்து போன- மிகவும் புராதனப் பாணியிலான- சர்வாதிகாரத்தின் ஒரு சீர்கெட்ட வடிவமாகும். இந்தத் தகுதியற்ற தவறான முறைமையை அமெரிக்காவும் அதன் தீய கூட்டாளிகளும் துஷ்பிரயோகம் செய்து, பிறரை வம்புக்கிழுக்கும் தங்கள் பாதகத்தை மறைத்து, அதனை உயர்ந்த கோட்பாடாகக் காட்டி, உலகின் மீது சுமத்தி வருகின்றனர். அவர்கள் 'மனித உரிமைகள்' என்ற பெயரில் மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கின்றனர். அவர்கள் 'ஜனநாயகம்' என்ற பெயரில் மற்ற நாடுகளில் இராணுவ ரீதியாகத் தலையிடுகின்றனர். அவர்கள் 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம்' என்ற பெயரில் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் பாதுகாப்பற்ற மக்களை, தங்கள் குண்டுகளையும் ஆயுதங்களையும் கொண்டு குறி வைத்துத் தாக்கி துவம்சம் செய்கின்றனர். அவர்களின் பார்வையில், மனித சமுதாயம் முதல்தர, இரண்டாம்தர மற்றும் மூன்றாம்தர பிரஜை களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

மனித உயிர் என்பது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் மலிவானதாகவும், அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் அது பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பாதுகாப்பு முக்கிய மானதாகவும், அதே வேளை ஏனைய மனித சமுதாயத்தின் பாதுகாப்பு முக்கியமற்றதாகவும் கருதப்படுகின்றது. சித்திரவதை களும் படுகொலைகளும் அமெரிக்காவினாலும் ஸியனிஸவாதிகளினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் மேற்கொள்ளப்படு மானால், அவற்றை அனுமதிக்கப்பட்டனவாகக் கருதி கண்டுங் காணாததைப் போன்று இருந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இரகசிய சிறைக்கூடங்களை வைத்திருப்பதும், அவற்றில் பாதுகாப்பற்ற பலா,; தங்களுக்கு சட்டரீதியான பிரதிநிதிகளை அமர்த்த முடியாமலும் ஒரு சட்ட விசாரணை மன்றின் முன் சமாப்;பிக்கப்படாமலும், மிகவும் கொடூரமாகவும் ஆழ்ந்த வெறுப்புக்குரிய விதத்திலும் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் மனதை உறுத்தவில்லை.

நன்மையும் தீமையும் முற்றிலும் ஒருதலைப்பட்சமாகவும் அவர்களுக்குத் தகுந்ததாகவும் வரையறுத்துக் கூறப்படுகின்றது. அவர்கள் தங்கள் நலன்களை, 'சர்வதேசச் சமூகம்' என்ற பெயரில் உலக நாடுகளின் மீது திணித்து வருகின்றனர். அவர்கள் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற- தங்கள் சட்டவிரோதக் கோரிக்கைகளை, 'சர்வதேசச் சட்டம்' என்ற பெயரில் முன் வைக்கின்றனர். அவர்கள் தங்களின் தனிப்பட்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்தி, தங்கள் பொய்களையும் பித்தலாட்டஙகளையும் உண்மைகளாகவும், தங்கள் நேர்மையின்மையையும் வஞ்சகத்தையும் நல் லெண்ணமாகவும், தங்கள் அநீதிகளையும் கொடுமைகளையும் நீதியை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளாகவும் மூடி மறைத்துச் சித்தரித்துக் காட்ட முனைகின்றனர். இதற்கு மாற்றமாக, அவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் எல்லா உண்மைக் கூற்றுகளையும் பொய்கள் எனச் சின்னமிடுகின்றனர்ளூ எந்தவொரு சட்டப்பூர்வமான கோரிக்கைக்கும் கயமையான  தெனப் பெயர் சீட்டு ஒட்டத் துணிகின்றனர்.

தீமை பயக்கக்கூடிய இந்த நிலவரம் மாற வேண்டும்

நண்பர்களே! குற்றங்குறைகளுள்ள- தீமை பயக்கக்கூடிய இந்த நிலவரம் தொடரமுடியாது. இந்தப் பிழையான சர்வதேச அமைப்பு முறையால் எல்லாருமே சோர்வடைந்து போய்விட்டனர். அமெரிக்காவின் செல்வ வள மற்றும் அரசியல் அதிகார மையங்களுக்கு எதிரான அமெரிக்க மக்களின் '99 சதவீத இயக்க'மும், மேற்கு ஐரோப்பிய மக்களின் தங்கள் அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான பரவலான கண்டன ஆர்ப்பாட்டங்களும், மக்கள் இந்த நிலவரம் குறித்து பொறுமையிழந்து வருகின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அறிவுக்குப் பொருந்தாத இந்த நிலவரத்திற்கான நிவாரணம் காண்பது அத்தியாவசியமான தொன்றாகும். அணிசேரா இயக்க உறுப்பு நாடுகளின் உறுதியான- தர்க்கரீதியான- ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் பிணைப்புகள், இதற்கானதொரு தீர்;வையடைவதற்கு முக்கியப் பங்காற்ற முடியும்.

மதிப்பிற்குரியவர்களே! சர்வதேச அமைதி- சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பன. இன்றைய உலகில் மிக ஆபத்தான பிரச்சினைகளாகத் திகழ்கின்றனளூ பேரழிவுக்கான நாசகார ஆயுதங்களை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்பது, மிகவும் அவசரமும் அவசியமுமான ஓர் இன்றியமையாத தேவை மட்டுமன்றி, முழு உலகத்தின் ஒரு தேட்டமுமாகும். இன்றைய உலகில், பாதுகாப்பு என்பது எல்லாராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஓர் அத்தியாவசியத் தேவையாகும்ளூ இதில் பாகுபாட்டிற்கு இடமில்லை. தங்கள் படைக்கலப் பண்டகசாலையில் மனித இனத்தை அழித்தொழிக்கும் தங்கள் ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர் களுக்கு, 'பூகோளப் பாதுகாப்பின் காவலர்கள்' எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு எந்த உரிமை யும் இல்லை. சந்தேகமில்லாமல், இஃது அவர்களுக்கே எந்தப் பாதுகாப்பையும் வழங்காது. மிகப் பெரிய அணு வாயுதக் கிடங்குகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கு, இந்த அபாயகரமான ஆயுதங்களைத் தங்கள் இராணுவக் கோட்பாடுகளிலிருந்து அகற்றிக் கொள்வதற்கு உளப்பூர்வமான- உண்மையான எண்ணம் எதுவும் கிடையாது என்பது துரதிர்ஷ்டவசமானதொன்றாகும். இந்நாடுகள், இத்தகைய ஆயுதங்களை பயமுறுத்தல்களை விரட்டி யடிக்கும் ஒரு சாதனமாகவும், அரசியல் அதிகாரம் மற்றும் சர்வதேச மட்டத்தில் தங்கள் அந்தஸ்தை நிர்ணயிக்கும் முக்கியமானதொரு தகுதியாகவும் இன்னும் கருதி வருகின்றன. இந்த எண்ணக்கரு முழுமையாக ஒதுக்கித் தள்ளப்படவும் உறுதியாகப் புறக்கணிக்கப்படவும் வேண்டியதொன்றாகும்.

அணுவாயுதங்களினால் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அல்லது அரசியல் அதிகாரத்தைக் கெட்டிப்படுத்தவோ முடியாது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை பாதுகாப்பிற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் -இரண்டிற்குமே- ஓர் அச்சுறுத்தலாகும் இத்தகைய ஆயுதங்களை வைத்துக் கொண்டிருப்பதானது சோவியத் யூனியன் போன்றதோர் ஆட்சியைக் கூடக் காப்பாற்ற முடியாமல் போனது என்பதை 1990ல் இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காண்பிக்கின்றன. மேலும், இன்று சில நாடுகள், தங்களிடம் அணு குண்டுகளை வைத்துக் கொண்டி ருக்கும் போதிலும் கூட, மிகவும் அபாயகரமான அளவுக்கு பாதுகாப்பின்மை அலைகளால் சூழப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

'அணுவாயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற மத்திய கிழக்கு'

அணுக்கரு, இரசாயனம் மற்றும் அவற்றையொத்த ஆயுதங்களை உபயோகிப்பது, மன்னிக்க முடியாத ஒரு மாபெரும் குற்றச் செயல் என ஈரான் இஸ்லாமியக் குடியரசு கருதுகிறது. 'அணுவாயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற மத்திய கிழக்கு' என்ற எண்ணத்தை நாம் முன்மொழிந்திருக்கின்றோம்ளூ இந்தக் கருத்துக்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம். இதனால், அணுச் சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்துவதற்கும், அணு உலை எரிபொருளை உற்பத்தி செய்வதற்குமான எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம் என அர்த்தப்படாது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், அணுச் சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்து வதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள ஓர் உரிமையாகும். இந்த உரிமையை நடை முறைப்படுத்துவதற்கு பிறரைச் சார்ந்திராமல், தங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், இந்த பயனுள்ள ஆற்றல் மூலத்தை பல்வேறுபட்ட இன்றியமையாப் பயன்பாடுகளில் உபயோகப்படுத்த அனைவருக்கும் முடியுமாயிருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் சில, தாங்களே அணுவாயுதங்களை வைத்திருந்து, இந்த சட்ட விரோதச் செயலினால் குற்றவாளிகளாக நிற்கும் போது, அணு உலை எரிபொருளை உற்பத்தியையும் ஏகபோக உரிமை  யாக்கிக் கொள்ள விரும்புகின்றன. ஒரு சர்வதேசப் பெயர் சீட்டைத் தாங்கியிருக்கும் மையங்களில், ஆயினும் உண்மையில், ஒரு சில மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டினுள், அணு உலை எரிபொருள் உற்பத்தியையும் விற்பனையையும் ஏகபோக உரிமையாக நிரந்தரமாக ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, கள்ளத்தனமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  

மிகப் பெரிய அளவில் அபாயகரமான அணு ஆயுதங்களையும் பேரழிவுக்கான ஏனைய நாசகார ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பதுடன். அதனைப் பயன்படுத்திய குற்றத்திற்கு ஆளான ஒரே நாடான அமெரிக்காவின் அரசு, இன்று அணு ஆயுதங்களின் பரவலுக்கு எதிராக கொடி பிடிக்க ஆவல் கொண்டுள்ளது என்பதுதான், நமது யுகத்தின் மிகவும் கசப்பானதோர் உண்மையாகும். அமெரிக்காவும் அதன் மேற்கத்தியக் கூட்டாளிகளும், (பலஸ்தீனை அபகரித்த) ஸியனிஸ ஆட்சியாளர்களுக்கு அணு ஆயுதங்களை வழங்கி, உணர்வலைகள் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இந்தப் பிரதேசத்தில், பெரிய அளவிலான ஓர் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கின்றன. இருந்த போதிலும், அணுச் சக்தி சமாதான வழிகளில் சுதந்திரமான நாடுகளினால் உபயோகப்படுத்தப்படுவதை இதே ஏமாற்றுக் குழுவினால் சகித்துக் கொள்ள இயலவில்லை. மேலும் இந்தக் குழு, கதிரியக்க மருந்தாக்கத்திற்கும் ஏனைய சமாதான வழிகளிலும்; மனிதாபிமான நோக்கங் களுக்கும் பயன்;படுத்துவதற்காக அணு உலை எரிபொருளை உற்பத்தி செய்வதைக் கூட தனது முழு பலத்துடன் எதிர்க் கின்றதுளூ அணுவாயுதங்களைத் தயாரிக்கலாம் என்ற அச்சமிருக்கின்றது என ஒரு காரணத்தைக் கூறுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசைப் பொறுத்த வரை, அவர்கள் பொய் சொல்கின்றனர் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், ஆன்மீகத்தின் மிகச் சிறிய அளவிலான தடங்களைக் கூடப் பெற்றிராத- முழுமையாக உலகாயதத்தை இலக்காகக் கொண்ட- அவர்களின் அரசியலில் பொய்கள் அனுமதிக்கப்பட்டவையாகும். 21ம் நூற்றாண்டில், அணு சம்பந்தமான அச்சுறுத்தலைச் செய்து அதனைப் பற்றி வெட்கப்படாத ஒருவன், எவ்வாறு பொய் சொல்வதைப் பற்றி வெட்கப்படப் போகிறான்?

'அணுச்சக்தி எல்லாருக்கும் உரியதுளூ அணுவாயுதங்கள் எவருக்கும் தேவையில்லை'.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு, அணுவாயுதங்களின் பின்னால் ஒருபோதும் சென்றது கிடையாதுளூ மேலும் அது, அதன் மக்கள் அணுச்சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்துவதற்கிருக்கும் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்பதை நான் வலியுறுத்துகிறேன். எங்கள் குறிக்கோள் இதுதான்: 'அணுச்சக்தி எல்லாருக்கும் உரியதுளூ அணுவாயுதங்கள் எவருக்கும் தேவையில்லை'. நாங்கள் இந்த இரண்டு விதிகளுள் ஒவ்வொன்றைக் குறித்தும் ஊன்றி அழுத்தமாகக் கூறுகிறோம். மேலும்,  அணு பரவல் தடை ஒப்பந்தத்தின் கட்டமைப்பில், அணுச்சக்தியை உற்பத்தி செய்யும் ஒரு சில மேற்கத்திய நாடுகளின் ஏகபோகத்தைத் தொடர விடாமல் முறித்துப் போடுவதில்தான், அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகள் உட்பட சுதந்திரமான எல்லா நாடுகளின் நலன்களும் தங்கியிருக்கின்றன

அமெரிக்காவினாலும் அதன்; கூட்டாளிகளினாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வம்புக்கிழுத்து வதை செய்கின்ற போக்கிற்கும் ஒன்றையொன்று சார்ந்த அழுத்தங்களுக்கும் எதிராக, ஈரான் இஸ்லாமியக் குடியரசு மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் வெற்றிகரமான அனுபவத்தைக் கொண்டு, ஒன்றுபட்ட- தீர்க்கமான உறுதியுடன் கூடிய ஒரு தேசத்தின் துணிந்து எதிர்த்து நிற்கும் தன்மையின் மூலம், எல்லா குரோத-விரோதங்களையும் பகைமை-பயமுறுத்தல்களையும் தோல்வியுறச் செய்யலாம் எனவும் அதன் உயர்ந்த இலட்சியங்களை நோக்கிச் செல்லும் மகிமை பொருந்திய பாட்டையைத் திறந்து விடலாம் எனவும் அது திடமாக நம்புகிறது. நமது நாடு சென்ற இரண்டு தசாப்தங்களில் அடைந்த பரந்த விரிந்த அளவிலான முன்னேற்றங்கள் அனைவருமே கண் முன்னால் காணும் நிதர்சனமான உண்மைகளாகும். உத்தியோகப்பூர்வ சர்வதேசப் பார்வையாளர்கள் இதனை தொடர்ந்து பலமுறை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவையனைத்தும், அமெரிக்காவுடனும் ஸியனிஸவாதிகளுடனும் இணைந்து, வலையமைப்புகள் அமுல்செய்த தடைகள், பொருளாதார அழுத்தங்கள், பிரச்சார நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு உட்பட்ட நிலையில் நிகழ்ந்தவையாகும். இத்தடைகள் எங்களை முடக்கிப் போட்டு விடும்- செயலிழக்கச் செய்து விடும் என அறிவற்ற ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எங்களை முடக்கிப் போடவில்லை என்பது மட்டுமல்லாமல், எங்களை முடக்கிப் போடவும் செய்யாதுளூ மாறாக, எங்கள் காலடிச் சுவடுகளை நிலைப்படுத்தியுள்ளனளூ எங்கள் மனோதிடத்தை மேன்மைப்படுத்தியுள்ளனளூ எங்கள் ஆய்வுகளைப் பற்றியும், எங்கள் மக்களினது உடன்பிறந்த- இயல்பான ஆற்றல்கள்- திறமைகள் பற்றியுமான எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளனளூ இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு தெய்வீக உதவி கிடைக்கப் பெற்றதை நாங்கள் தொடர்ந்து பலமுறை எங்கள் கண்களினால் கண்டிருக்கிறோம்.

பலஸ்தீன் பிரச்சினை மனித சமூகங்களின் அதிமுக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று 
மதிப்பிற்குரிய விருந்தாளிகளே! மிக முக்கியமானதொரு பிரச்சினையைப் பற்றிப் பேசுவது அவசியமானது என நான் எண்ணுகிறேன். இது எங்கள் நிலப்பகுதியைச் சார்ந்ததாக இருந்த போதிலும், இதன் பரிமாணங்கள் தாண்டிச் சென்று, பல தசாப்தங்களாக உலகளாவிய கொள்கைகள் பலவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பிரச்சினைதான் மன வேதனை மிகுந்த பலஸ்தீன் பிரச்சினையாகும். இவ்விஷயத்தைப் பற்றிய சுருக்கம் என்னவெனில், 1940களில், மிக மோசமானதொரு மேற்கத்திய சதியின் காரணமாக, இங்கிலாந்தின் வழிகாட்டுதலின் கீழ், ஆயுதங்களையும் கொலைகளையும் ஏமாற்று வேலைகளையும் பயன்படுத்தி, மிகத் தெளிவானதொரு வரலாற்று அடையாளத்தைக் கொண்டு 'பலஸ்தீன்' என அழைக்கப்பட்ட ஒரு சுதந்திரமான நாடு அதன் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு, பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய ஒரு மக்கள் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில், நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த பாதுகாப்பற்ற அப்பாவி மக்களைப் படுகொலை செய்து, மேலும் அம்மக்களை தங்கள் வீடுகளிலிருந்தும் தாய்நாட்டிலிருந்தும் சூழவிருக்கும் பிற எல்லைப்புற நாடுகளுக்குத் துரத்தியடிப்பதன் மூலம் நிகழ்த்தப்பட்டது. இந்த மிகப்பெரும் அபகரிப்பு-ஆக்கிரமிப்பு, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இதே மாதிரியான குற்றச் செயல்களின் காரணமாக, இன்றைய தினம் வரை தொடர்கின்றது. இது மனித சமூகங்களின் அதிமுக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாகும். 

ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஸியனிஸ ஆட்சியின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், இந்த காலப் பகுதியில் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யாமல் தவிர்ந்து கொண்டதில்லை. மக்களை கொன்று குவிப்பதுளூ அவர்களின் வீடுகளை யும் பண்ணைகளையும் நிர்மூலமாக்குவதுளூ ஆண்களையும் பெண்களையும், ஏன் அவாகளின் குழந்தைகளையும் சிறை பிடிப்பது -சித்திரவதை செய்வதுளூ ஸியனிஸ ஆட்சியினர் விலக்கப்பட்ட(ஹராமான)தை விழுங்கும் தங்கள் வயிறுகளில் ஜீரணிப்பதற்காக, அந்த தேசத்தவர்களை இழிவுபடுத்துவது மற்றும் தாழ்வு படுத்துவதுளூ எனத் துவங்கி, பலஸ்தீனிலும் அயல் நாடுகளிலும் அகதிகளாக முகாம்களில் இலட்சக்கணக்கில் வசிப்போரை, அந்த அகதி முகாம்களிலேயே தாக்குவதென இப்பட்டியல் நீளுகிறது. ஸப்ரா-ஷடில்லா, காஹ்னா, டேர் யாஸீன் போன்ற அகதி முகாம்களின் பெயர்கள், எங்கள் நிலப்பகுதியின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் இரத்தத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

65 வருடங்களுக்குப் பின்னருங் கூட, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் மிஞசியிருக்கின்ற பலஸ்தீனர்களின் மீது  மிருகத்தனமான அந்த ஸியனிஸ நரிகள், அதே விதமான குற்றச் செயல்களைத்தான் கட்டவிழ்த்து விட்டிருக் கின்றன. இப்போது அவர்கள் ;ஒன்றன் பின் ஒன்றாக புதுப்புது குற்றச் செயல்களை இழைத்து, இப்பகுதியில் புதிய நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றனர். படுகொலைகள், படுகாயங்கள், தங்களின் தாய்நாட்டையும் தங்களின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கும், தங்களின் வீடுகளும் பண்ணைகளும் அழிக்கப்பட்டதை எதிர்த்து கண்டனந் தெரிவிப்பதற்குமாக எழுச்சி கொள்ளும் இளைஞர்களை கைது செய்வது பற்றிய அறிக்கைகள் வராத நாளில்லை. தசாப்தங்களாக மிகுந்த நாசங்களை விளைவிக்கும் யுத்தங்கள், மனிதக் கொலைகள், அரபுப்பிரதேசங்களின் ஆக்கிரமிப்பு, எனபன மூலம் படுகொலைப் படலங்களையும் மோதல் களையும் உருவாக்கியும் குற்றங்களை ஈவிரக்கமில்லாமல் செய்தும் வருகின்ற ஸியனிஸ ஆட்சி, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பலஸ்தீன் மக்கiளுக்குப் 'பயங்கரவாதிகள்' எனப் பெயர் சூட்டுகின்றது! ஸியனிஸவாதிகளுக்குச் சொந்தமான ஊடக வலையமைப்புகளும். பல மேற்கத்திய மற்றும் பணத்துக்காக வேலை செய்யும் ஊடகங்களும், அறநெறி மாண்பு களையும் பத்திரிக்கைத் துறை நேர்மையையும் மீறிச் சென்று, இந்த மாபெரும் பொய்யைத் திரும்பவும் எழுதியும் வெளி யிட்டும் வருகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றுகிறோம் என உரிமை பாராட்டும் அரசியல் தலைவர்கள், இந்த எல்லாக் குற்றச் செயல்களைக் கண்டும் தங்கள் கண்களை இறுக்க மூடிக் கொள்கின்றனர். அத்தோடு நில்லாமல், இவர்கள் வெட்கங் கெட்ட விதமாக தைரியமாக அந்த படுபாதக ஆட்சியை ஆதரிக்கின்றனர்ளூ அந்த ஆட்சிக்கு சார்பாக வக்காலத்து வாங்கவும் துணிகின்றனர்!  

பலஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே சொந்தமானதுளூ அதன் ஆக்கிரமிப்பு ஒரு பெரும் அநீதி

பலஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே சொந்தமானது என்பதும், அதனைக் கைப்பற்றி அங்கு தன் ஆக்கிரமிப்பைத் தொடர்வது ஒரு பெரும்- சகித்துக் கொள்ள முடியாத அநீதி என்பதும,; உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அது தலையாய ஓர் அச்சுறுத்தல் என்பதும்தான் எங்கள் நிலைப்பாடாகும். மேற்கத்தியவாதிகளாலும் அவர்களின்; கூட்டாளிகளினாலும் 'பலஸ்தீன் பிரச்சினையின் தீர்;வு'க்காகக் கூறப்பட்டும் பின்பற்றப்பட்டும் வரப்படுகின்ற எல்லா ஆலோசனைகளும் தவறானவை மட்டுமல்ல, தோல்வியடைந்தும் விட்டன என்பதோடு, எதிர் காலத்திலும் அவை அவவாறே அமைந்திருக்கும். நாங்கள் நீதமான- முற்றிலும் ஜனநாயகரீதியிலான தீர்வொன் றைச் சமர்ப்பிக்கிறோம். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் உட்பட எல்லாப் பலஸ்தீனர்களும்- பலஸ்தீனின் தற்போதைய பிரஜைகளும் மற்ற நாடுகளில் குடியேறுவதற்காக பலாத்காரமாக அனுப்பப்பட்டவர்கள் ஆயினும் பலஸ்தீன் அடையாள அட்டையைத் தம்முடன் வைத்திருப்பவர்களும், -மிகக் கவனமாகக் கண்காணிக்கப்பட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு வெகு ஜன வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்கள் நாட்டிற்கான அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பல்லாண்டுகளாக தங்கள் நாட்டிற்கு வெளியே அல்லற்படும் பலஸ்தீனர்கள் அனைவரும் நாட்டிற்குத் திருமபி வந்து, அந்த வாக்கெடுப்பில் பங்கு கொள்வதுடன், அதன் பின்னர் ஓர் அரசியல் அமைப்புச் சட்ட சாசனத்தை வரைவதற்கும் தேர்தல்களை நடத்துவதற்கும் உதவ வேண்டும். அமைதியும் சமாதானமும் அதன் பின்னர்தான் ஏற்படும்.

எப்போதுமே ஸியனிஸ ஆட்சிக்குச் சார்பாகவும் அதற்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்க அரசியல்வாதி களுக்கு, இப்போது நான் கருணையுடனான சிறு ஆலோசனையொன்றைக் கூற விரும்புகிறேன். இதுவரையில், இந்த ஆட்சி உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணியிருக்கின்றது: அந்தப் பகுதி மக்களிடத்தில் உங்களை வெறுப்பதற்குரிய ஒரு தோற்றத்தை அது சமர்ப்பித்திருக்கின்றதுளூ ஆக்கிரமிப்பாளர்களான ஸியனிஸவாதி களின் குற்றச் செயல்களுக்கு நீங்களும் ஓர் உடந்தை என்ற வகையில் உங்களின் தோற்றம் அமைந்திருக் கின்றது. இச்செயல்களின் பொருள்ரீதியான மற்றும் தார்மீகரீதியான செலவுகளுக்காக அமெரிக்க அரசும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள பங்கு எக்கச் சக்கமானதாகும். இந்நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் செலவுத் தொகை பெரும் சுமையாக அமையலாம். ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஒரு வெகு ஜன வாக்கெடுப்பிற்கான முன் மொழிவைப் பற்றி சிந்தியுங்கள்ளூ துணிவானதொரு முடிவை எடுத்து, உங்களை தற்போதைய இக்கட்டான நிலவரத்திலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். ஐயத்திற்கிடமின்றி, இந்த நிலப்பரப்பின் மக்களும், உலகெங்கு முள்ள சுதந்திரச் சிந்தனையாளர்களும் இதனை வரவேற்பார்கள். 

புதியதோர் உலகை உருவாக்குவதில் அணிசேரா இயக்கத்தின் பிரதானமானதொரு பங்கு

மதிப்பிற்குரிய விருந்தாளிகளே! இப்போது நான் ஆரம்பமாகச் சொன்ன விஷயத்திற்கு திரும்பி வர விரும்புகிறேன். உலக ளாவிய நிலவரங்கள் உணர்வுகளைத் தளும்பச் செய்திருக்கின்றன. உலகம் மிகவும் முக்கியமானதொரு கால கட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. புதியதோர் ஒழுங்கமைப்பு தோற்றம் பெறும் என னதிர்பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட உலக சமூகத்தின் மூன்றில் இரண்டு பகுதியினரைக் கொண்டிருக்கும் அணி சேரா இயக்கம், அத்தகைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் பிரதானமானதொரு பங்கு வகிக்க முடியும். இந்த மகத்தான மாநாடு தெஹ்ரானில் நடத்தப்படுவதுவே ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட வேண்டும். நமது வளங்களையும் ஆற்றல்களையும் ஒன்று குவித்ததன் மூலம், இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களான நாம், உலகை பாதுகாப்பின்மை, போர், ஆதிக்கச் சக்திகளின் பிடி ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ;நமது பயணத்தில் புதியதொரு வரலாற்றுப்பூர்வமான- நிலையான பங்கை வழங்க முடியும்.    

இந்த இலட்சிய இலக்கை, நம் ஒவ்வொருவர்க்கும் இடையிலான பரந்த-விசாலமான-ஒட்டுமொத்தமான ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். நமக்கு மத்தியில், மிகுந்த செல்வ வளங் கொண்ட நாடுகள் மிகச் சிலவே. சில நாடுகளே சர்வதேச செல்வாக்கு உள்ளனவாகத் திகழ்கின்றன. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, பொருளாதார மற்றும் ஊடகத் துறை ஒத்துழைப்பின் வாயிலாகவும், நம்மைச் சீர்படுத்தி முன்னேற்றம் காண்பதற்கு உதவியாயிருந்த நமது அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்வதன் வாயிலாகவும், முற்றாக அடைந்து கொள்ள முடியும். நமது மனோதிடத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது குறிக்கோள்களுக்கு நாம் விசுவாசமாயிருக்க வேண்டும். முரட்டுத்தனமாக நடந்து நம்மை வம்புக்கிழுக்கின்ற சக்திகள் நம்மை உறுத்துப் பார்க்கின்ற போது, நாம் பயப்படக் கூடாது. அவர்கள் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்தால், நாம் சந்தோஷமடையக் கூடாது. இறைவனின் விருப்பத்தையும் படைப்பு விதிகளையும் நமது  துணையாக எடுத்துக் கொள்ள வேண்டும்;. இரு தசாப்தங்களுக்கு முன்னர் கம்யூனிஸ முகாமுக்கு நிகழ்ந்ததிலிருந்து நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் 'மேற்கத்திய சுதந்திர ஜனநாயகம்' என அழைக்கப்படும் கொள்கைகளின் தோல்வியிலிருந்தும் நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இதன் அடையாளங்களை ஐரோப்பிய நாடுகளின் மற்றும் அமெரிக்காவின் வீதிகளிலும், இந்நாடுகளின் தீர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளிலும் அனைவருமே காணலாம். இன்னும் இறுதியாக, இந்த நிலப் பகுதியில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய விழிப்புணர்வையும், அமெரிக்காவில் தொங்கி நின்ற- ஸியனிஸ ஆட்சியின் கூட்டாளியான- வட ஆபிரிக்காவின் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்ததையும் ஒரு பெரும் வாய்ப்பாக நாம் கருத வேண்டும். உலகம் முழுவதற்குமான ஆட்சி நிர்வாகத்தில், அணி சேரா இயக்கத்தின் 'அரசியல் உருவாக்க ஆற்றலை' செம்மையும் செழுமையும்படுத்த நம்மால் உதவ முடியும். இந்த ஆட்சி நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதையும், அதன் முகாமைத்துவக் கருவிகளுக்கு உரிய தரவுகள் வழங்குவதை யும் நோக்காகக் கொண்டு, குறிப்பிடத்தக்க ஆவணமொன்றை நம்மால் தயார்படுத்த முடியும். பலன் நல்கும் பொருளாதாரக் கூட்டுறவிற்கு நாம் திட்டமிட முடியும். நமக்கு மத்தியிலான கலாச்சார உறவுகளின் வடிவங்களையும் தராதரங்களையும் வரையறுத்தக் கொள்ள முடியும். சந்தேகமின்றி, இந்த நிறுவனத்திற்காக செயலூக்கமும் செயல்திறனும் கொண்ட செயலகமொன்றை ஸ்தாபிப்பது, இந்த குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு மிகப்பெரும்-அர்த்தமுள்ள உதவியாக அமையும்

உங்களுக்கு நன்றி.

Monday, August 27, 2012

பகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்

பகுதி நேர முஸ்லிம்

-கவிக்கோ அப்துல்ரஹ்மான்

====================

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWvO-n9e3sh-JQfZzinEzwQ3xvz9YhOVhosQewyueLyXHOMaArCL6PWUe6jSvb0JV_2jp6DxmjApWwgemiKwaKQi91DWNAs3cpwn0Rq3B1H1_PYl6VZ8MV90e1mLeFV6yx0pNsBYONDs5X/s320/north-pole-moon2.jpg

 

 சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-AkCspK6J6H_aE0eLkyd8UstkZeTYrCLQ9_yWo_jpd9eRIIgTr_iabWRMUSQ7eUXuNFClBjUB6f0Kqu6AAS0R1SyQBMlbrPlYtYN9SPBJpRnLDG0WwBtbHcEdEJSJnsunsWPrNs_wvTBP/s320/Asad+processon.JPG

ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
டக்ஆஃப்வார்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdeGPM4OqgdjVDkVLgBK0grruY8RH5cUBaKvFTkwSWctrvn6JOEtjkZvE-nG8R8Rw-bCqGIA_mi_taO5LKORb89wC6hCVl75gsn9Ueiamst_hEc3QnH_wLMiaorqe-W66ACUn7SIi4nBhyphenhyphen/s320/image.jpg

நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEHx6NpjhQ2iH873klLT5UOaJ14fzhtoieQt9kRWGMtj_a9lWTDy_GnRhIngDneNbJbC38y2KYg1z2jHA4DYS3TR-9845WRdxsy9StgHOdIS0AZt9WqHXNQeJ2Agl-17SB2fVnN8H8vM0v/s320/islamic-jihad-commander1.jpg

உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
பயங்கரவாதிஎன்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

முஸ்லிம்என்ற
லேபிள்மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
ஜிஹாத்என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU-RIRCY1brjOzDm4QsWPOGihdqiXlQyjJ5R5UaexszBtH6_YSGMXkGEpADMxRvw_jCujHC950aXIcMd7xchSWu1LcjeZG61MmgdOF_DbDK5rxGArElj-zHr406Snhom8o5V7_s8WHAHNH/s320/TwinTowers.jpg

முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikAd9g9nL3J5-A7TOulP7BCYysSVrsWF_DlrXZRZy-ZbMznqTGNOa89__qBC4yF7saU76sxu6dUJ81-_0BYAu-ZLj1ka0nLoy-iyEnXY47sHf4dbnjqrjKZJOdt53kYqnqmikA7T6ALLsg/s320/horror_of_iraqi_invasion_6.jpg

மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
தக்வாவை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinpIZPJFhv1xUqWSPUub1UrWrIenM-JuXsEHqIqMoaaVs2UcnZ900hjvzn8kyQn5Ps8dFRt8qL8tS1-VGRRPxvpWxiC15hX6JiXw_7AVi-PHqFb2Thn7ETQ_-9fq-dRwP7u3dR8g-AT68n/s320/58581237420643Prayer.jpg

தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்குக மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
நஜீஸ்ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEpj0sJWBOX9_OsF2y58IsaGx933ACh4O-a8og6UE8SwrNTPdHI4d5YH_if0HFoO15XNVp19X-2kX3u9qeN-Y3Lvx0a5uu7X-zVm9-p6jxt6Fc1pNyRUsjfazO0-9B9F-2C_qupcnEeLRe/s320/r123101-2-26.jpg

அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா...?

நன்றி: சமவுரிமை மாத இதழில் கவிக்கோ அப்துல்ரஹ்மான்

Thursday, May 3, 2012

தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்


இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.
 
முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள்.
 
அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன. தங்கள் தங்கள் அணிகளை ஒவ்வொருவரும் வளர்ப்பதால் சர்வதேச அளவில் முஸ்லிம்களை ஒன்றினைக்க யாரும் முனைப்போடு முற்படவில்லை. இதை யாரும் இன்றளவும் உரத்து ஒலிக்கவில்லை.
 
அல்குர்ஆனோடு ஐக்கியமாவதே உண்மை ஒற்றுமை! மாறாக வேண்டும்போது கூடுவதும் வேண்டாதபோது கலைவதும் உண்மை ஒற்றுமையல்ல. இதை குர்ஆன் ஹதீஸ் வழி நிற்போர் மற்றவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்களும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். 
 
இஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.
 
தவ்ஹீத் குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்று மாயத்தோற்றம் தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பர தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாய முழுமைக்கும் எல்லாக் காலங்களிலும் பொதுவுடமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக அழுத்தமாக கோடிட்டு காட்ட விழைகிறோம்.
 
தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக்காட்ட இட்டுக்கொள்ளும் பிரிவுப்பெயருமல்ல. சீரிய சிந்தைனயாளர்கள் கூட தங்களை மற்றவர்களிடமிருந்து தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றே இனம் பிரித்து காட்டினார்கள்.
 
தங்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தார்களிடமிருந்து பிரித்துக்காட்ட தவ்ஹீத ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக்கொண்டார்கள். அதில் பெருமை பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று இவர்கள் பங்கிற்கு இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவை தோற்றுவித்து விட்டார்கள்.
 
பத்து நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் என்றோ அதைவிட கூடுதலாகவோ கூட்டம் கூடியவுடன் குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ இயக்கங்கள் காணவோ அமைப்புகள் ஏற்படுத்தவோ தவ்ஹீத் கொள்கை அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்; ஒன்றுபடுத்தவும் வேண்டும் என்ற உன்னத உயர் இலட்சியத்திற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடையே ஓரிறைக் கொள்கை.
 
பல தெய்வ வழிகேடுகளை வழிபாடாகவும், ஒழுக்க கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதை பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்கள், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக்கொண்டும் அனைத்து அநாகரிங்களையும் நன்மைகளாகவும் புண்ணியங்களாகவும் விலங்கினும் கீழாய் ஒழுங்கீனங்களில் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை!
 
இவ்வற்புதம் இறுதி வேதம் யாருக்கருளப்பட்டதோ அந்த இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் 23 ஆண்டுகளில் அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் நிகழ்வு ஏறத்தாழ கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்தப் பேருண்மை இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிக கஷ்டமாயிருக்கிறது ஏன்?
 
பிரிந்து வாழ்வதிலும், பிளவு படுவதிலும் இன்புறும் இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது.
 
தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறுமுன் அல்லது நிறைவுற்றதும் பிரிந்துவிடுவதும் ஒற்றுமையாகுமா? இஸ்லாலிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.
 
பிரிவுகளும் பிளவுபட்ட குரூப்பிஸ போக்குகளும் எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் ஒற்றுமாயாகாது.
 
எனவே அன்புச் சகோதர சகோதரிகள் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் சிந்தித்து பிரிவினை அணி, குழு மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் மலர ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
 
அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.
A.N.K
- kauser salaudeen kauser

Tuesday, January 31, 2012

சாவேஸிடம் இருந்து அறபிகள் கற்க வேண்டியவை நிறைய உள்ளன: நஸ்ரல்லாஹ்

 

இன்று அறபு உலகத்தில் ஒப்பற்ற தலைவர் என கருதப்படும் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் கடந்த 2009 ஜனவரி 7ம் திகதி  லெபனானில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து உரையொன்றை நிகழ்த்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவரது முழு உரை இவ்வாறிருந்தது:
 
'அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
 
இஸ்ரேலுடன் இருக்கும் சகல தொடர்புகளையும் துண்டித்தல், காஸாவில் அவர்கள் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் முக்கியமானத மாத்திரம் அல்ல அது முஸ்லிம்காளகிய எமது கடமைகளில் ஒன்றாகும். மேலும் இதுவே அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்கள் மற்றும் மக்கள் செய்யக்கூடிய எளிதான பதிலடியுமாகும்.
 
நேற்று வென்ஸியூலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அங்கிருந்து இஸ்ரேல் தூதுவரை நாடு கடத்தினார். இதை சாவேஸ் பலஸ்தீன மக்களுக்கு அவர் காட்;டும் ஆதரவாகவே செய்து காட்டினாh. இவ்வளவிட்கும் வெனிஸியூலா அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நாடாகும். அதாவது அது ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாகும். இது தான் சாவேஸ! இதை அவர் ஏன் செய்தார்? மனிதாபிமானத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்தார்.; தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதுவர்களுக்கு எதிராக ஒரு வார்த்ததையை கூட கூற தையரியமில்லாமல் இருக்கும் அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்களுக்கு சாவேஸின் இந்த செயல் ஒரு பயங்கர அடியாகும்.
 
இதை நோக்கும் போது இன்று அறபித் தலைவர்கள் சாவேஸிடம் இருந்து கற்க வேண்டியவை பல உள்ளன. பலஸ்தீன மக்களுக்கு எவ்வாறு ஆதரவு காட்டுவது என்பதை பற்றி அவர்கள் சாவேஸை பார்த்துக் கற்க வேண்டும்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
 
இந்த ஸியோனிஸ கொலை காரர்கள் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு பாராட்டுக்கள் தரப்படவதை விடுத்து தக்க தண்டனை தரப்பட வேண்டும். காஸாவில் பல நூறு பெண்களையும், சிறு பிள்ளைகளையும், சிசுக்களையும் கொன்று குவித்ததன் பின் இந்த யூத அரக்காகளுக்கு தொடர்ந்தும் அனுகூலங்கள் தரப்படக்கூடாது. முஸ்லிம் உம்மத்து இந்த அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்தே தீரும் என்பதை நான் உங்களுக்கு உறுதியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இந்தத் தலைவர்கள் என்றும் இஸ்ரேலின் கொடூரச் செயல்களை பொருட்படுத்தாத போக்கையே கையாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலின் செயல்களை இந்த நாடுகளில் உள்ள மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் இந்த அரசாங்கங்கள் தமது மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தருவதும் கட்டாயமாகும். அத்துடன் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் தொடர்ந்தும் பேச்ச வாhத்தைகளை நடத்துவதையும் இவர்கள் நிறுத்தி விட வேண்டும். மேலும் அறபுத் தலைவர்கள் ஹமாஸ் போராளிகள் தமது இலக்கை அடைவதற்கு உதவி செய்வதுடன், இஸ்ரேல் காஸாவிட்கு இட்டுள்ள தடைகளை நீக்கவும், அதன் இராணுவ செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் கட்டாயமாகும்;. எல்லாவற்றிட்கும் மேலாக இஸ்ரேல் காஸா மக்களுக்குத் தினிக்கும் இழிவான கட்டளைகளை ஏற்க வேண்டும் என காஸா மக்களை வற்புறுத்தவதை இந்த அறபித் தலைவர்கள் முற்றாக நிறுத்த வேண்டும்.
 
'நேற்ற எகிப்து அதிகாரியொருவர் ஒரு சுவாரசியமான விடயமொன்றை கூறியிருந்தார். 'ஒரு முடிவொன்றை பெறுவதற்கும் பொருப்புள்ளவர்களாக இனி நடப்பதட்கும் ஹமாஸ் போராளிகளுக்கு 650 உயிர் தியாகிகளும் 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா?' என்று அவர் கேட்டிருந்தார். இது மிக அழகிய வாhத்தைகளாக இருக்கின்றன. ஆனால் இதையே நான் திருப்பி எகிப்து அரசையும் இது போல பேசக்கூடிய அதிகாரிகளையும் கேட்க விரும்புகின்றென். எகிப்திட்கும் அதன் ரபஃh எல்லையை நிரந்தரமாக திறப்பதட்கு 650 உயிர்களும்; 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா? 
 
'இந்த சந்தர்ப்பத்தில் எகிப்து செய்ய வேண்டியதாக இருந்தது தனது ரபஃh எல்லையை திறப்பது மாத்திரமே. எகிப்தை யுத்தப் பிரகடணம் செய்யுமாறு எவரும் கோரவில்லை. எகிப்து அரசிட்குச் சார்பான சில அந்நாட்டு வழக்கறிஞர்கள் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நான் எனது நன்பர்கள் சிலர் மூலம் நேற்று அறிந்தேன்;. ரபஃh எல்லையை எகிப்து திறந்து விடவும் எகிப்து அரசை காஸா விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் எகிப்தின் இராணுவம் அரசிட்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஷுரா தினத்தன்று நான்; கூறிய கூற்றிட்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். என்னுடைய இந்த கூற்று எகிப்து அரசிட்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை தூண்டும் விதத்தில் உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
'என்னுடைய கூற்றின் முக்கிய அம்சம் ரபஃh எல்லையை திறக்க வேண்டும் என்பதே. எவ்வாறிருந்த போதிலும் என்னுடைய பேச்சை பற்றி நான் பெருமிதமே அடைகின்றேன். இதற்காக ஒரு வழக்கை எனக்கு எதிராக தொடுக்கப் படுவதையும் நான் பெருமையாகவே கருதுகின்றேன். குறிப்பாக இந்த அச்சுறுத்தல் காஸா மக்களுக்காக எதையுமே செய்யாத ஒரு அறபிகளது நாட்டில் இருந்து வந்ததை தொட்டு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. அதுவும் லெபனானிலும், ஜபலியாவிலும் பலஸ்தீனத்திலும் பல அட்டூழயங்கள் செய்த, ஏன் எகிப்து இராணுவத்தினருக்கும் எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்ட யூதர்களுக்கு சார்பாக இந்த கூற்றை அவர்கள் கூறியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமே. ஆம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்திட்கு பக்கபலமாக நான் நின்ற குற்றத்திட்காக இவ்வாறு குற்றவாளிக் கூண்டில் ஏறுவது எனக்கு மிகவும் பெருமையான விடயமே. இது தொடர்பாக நான் மரணித்த பிறகும் பெருமை பட்டுக்கொண்டே இருப்பேன்.
 
'ஆனால் ஒரு விடயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன். அதாவது நான் பகைமையை வளர்க்க விரும்புபவன் அல்ல. நாம் எதிரிகள் அல்ல. எமக்கு துணை புரிந்தோருடன் பகைமை எற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. 2006 ஜுலை மாத யுத்தத்தின்போது எமக்கு எதிராக செயற்பட்ட அறபிகளுக்கு எதிராக நாம் பகைமையை எற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அந்த அறபிகளை காஸா மக்களுக்கு எதிராக தூண்ட திட்மிட்ட ஸியோனிஸ சதிகாரர்களின் எதிரிகளாகவே நாம் இருப்பொம்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
இதெ சமயம் மேலும் ஒரு கூற்றையும் நாம் செவியுற்றோம். அது தான் முன்பு அமெரிக்க அரச நிர்வாகத்தில் இருந்த ஒர யூதராகிய ஜோன் போல்டனின் கூற்று. அவர் தனது இணத்தின் செயற்பாடுகளால் வெறுப்புற்றுள்ளார். இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் அசல் நோக்கம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பலஸ்தீனத்தை முற்றாக அழிப்பதே அந்த நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காஸாவையும் மெற்குக் கறையையும் பிரிப்பது பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை வைத்திருப்பதுடன் மேற்குக் கறையை ஜோர்தானுக்கும் காஸாவை எகிப்திட்கும் கொடுப்பதே சிறந்தது என அவர் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
 
இரண்டு நாடுகள் பற்றி நாம் முன்பு கேள்வி பட்டதெல்லாம் வெறும் பேச்சே. இதுவே அமெரிக்கா மற்றும் யூதர்களின் உண்மையான நிலைப்பாடாகும். பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாட்டை முடிவு செய்யும் போது ஒரு நாட்டை நிறுவுவதட்கான தேihயான அளவு நிலப்பரப்பைக் கொண்ட எல்லைகளை தர அவர்கள் விரும்புவதில்லை. பிறகு இரு நாடுகளை ஏற்படுத்த முடியாதெனக் கூறி பலஸ்தீனத்தையே புறக்கனிக்க அவர்கள் முனைகின்றனர்.
 
 
  'இந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க முதலில் தேவைப்படுவது ஒற்றுமையேயாகும். ஹமாஸ், பதாஹ், இஸ்லாமிய ஜிஹாத் என்ற எல்லா பலஸ்தீன இயக்கங்களும் ஒன்று பட வேண்டும். ஏனெனில் ஒரே நோக்கம் எமது இலக்காக அமைய வேண்டியுள்ளது.
 
'எதிரிகள் ஹமாஸையோ பதாஹ்வையோ அழிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்த பலஸ்தீனக் குறிக்கோளையே அழிக்க நினைக்கின்றனர். ஆனால், இன்ஷா அல்லாஹ் அது ஒரு போதும் நடைபெறாது.
 
'என் அன்புக்குரிய சகொதர சகோதரிகளே!
 
'2006 எமது யுத்தம் மற்றும் தற்போதைய காஸா யுத்தம் ஒரு விடயத்தை எமக்குத் தெளிவு படுத்தியுள்ளது. லெபனானில் ஆகட்டும் அல்லது பலஸ்தீனத்தில் ஆகட்டும், எம்மிடம் ஒரு சிறந்த பாதுகாப்பு வியூகம் இருப்பது அவசியம் என்பதே அது.
 
'உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இராணுவங்களில் ஒன்றை கொண்டுள்ள மற்றும் மத்திய கிழக்கிலேயே மிகவும் பலம் வாய்ந்த விமாப் படையை கொண்டுள்ள இஸ்ரேல், சிறு பூமிப் பிரதேசத்தில் இருந்த செயற்படும் சிறிய போராளிகள் அமைப்பொன்றை முற்றாக அழிக்க முடியாமல் பல ஆண்டுகளாக தினறுவதற்குக் காரணம் அந்த போராளிகளதும் அதைச் சார்ந்துள்ள மக்களின் அசைக்க முடியாத மன உறுதியுமேயாகும். ஒரு சமூகத்தின் திடமான நம்பிக்கையும் மன உறுதியும் ஆக்கிரமிப்பதற்கு என்னும் உலகில் உள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த படையையும் தோல்வி அடையச் செய்யும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இந்த நிலை நாம் சரியான பாதையில் தான் நடை போடுகின்றோம் என்ற நம்பிக்கையை எமக்கத் தந்துள்ளது.
 
'சற்று சிந்தித்துப் பாருங்கள் எனதருமை சகொதர சகோதரிகளே! ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையோ வேறு எந்த சர்வதேச அமைப்போ காஸா மக்களுக்கு பாதுகாப்பையும் நியாயத்தையும் பெற்றுத் தரப்பொவதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. அது ஸியோனிஸ அக்கிரமங்களை தட்டிக் கேட்காது என்பதும் தெளிவாகியுள்ளது. சிறு பிள்ளைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படாத இந்த அமைப்புகள், ஒரு போராளிக்ள குழுவின் குறிக்கோள்களுக்கு எவ்வாறு துணை நிற்கப் போகின்றது?
 
'எனதருமை சகோதர சகோதரிகளே! இன்று நடக்கும் விடயங்கள் நாம்; அனைவரும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். லெபனானில் ஒரு பகுதியின் கவனம் உங்கள் மீது இருப்பதை நான் நன்கு அறிவேன். நாம் அனைவருமே இன்று சரித்திரத்தின் ஒரு முக்கிய மையத்தில் இருக்கினறோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸியோனிஸ மற்றும் யூதர்களின் இரகசிய சதிகளின் பிரம்மாண்டத்தையும் அது ஏற்படுத்தப் போகும் தாக்த்தின் தீவிரத்தையும் நாம் அறியமாட்டோம். ஆகையால் நாம் எல்லோரும் சகல விடயங்களைப் பற்றியும் கண்கானிப்புடனும் விழிப்புடனும் இருப்பது அவசியம். ஏனென்றால் எதிரிகள் எதையும் செய்யத் துணியலாம்.
 
'நேற்றும் ஒல்மட் (இஸ்ரேலின் பிரதமர்) கூறியதாக ஒரு விடயம் வெளியாகியுள்ளது. அதாவது மிக விரைவில் ஹமாஸுக்கு எதிராக ஒரு போரும் ஹிஸ்புல்லாஹ்விட்கு எதிராக ஒரு போரும் தொடுக்கப் படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் லெபனானில் தோல்வியை சந்தித்;த ஒல்மட்டுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூற விரும்புகின்றேன். அவரால் ஒரு போதும் ஹமாஸையோ ஹிஸ்புல்லாஹ்வையோ அழிக்க முடியாது.
 
'இது மாத்திரமல்ல. சில நாட்களுக்கு முன்பும், சில வாரங்களுக்கு முன்பும், ஏன் காஸாவின் மீது தாக்கதல் ஆரம்பமாவதட்கு பல மாதங்களுக்கு முன்பும் இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் கேட்டவன்னமே இருக்கின்றொம். சிலர் எம்மை சில நாட்களில் அழித்த விட வேண்டும் என்றும் மேலும் சிலர் எங்களை சில மணி நேரத்தில் அழித்து விட முடியும் என்றும் சவால் விட்ட வன்னம் உள்ளனர். ஆனால் இவர்கள் அறிந்து கொள்ளட்டும், எம்மை அழிப்பதற்கோ குறைந்த பட்சம் பயமுறுத்துவதற்கோ அல்லது பலஹீனப்படுத்துவதற்கோ இவர்களால் முடியவே முடியாது. நாம் எம்முடைய போராட்டத்தை விடப்போவதும் இல்லை. உங்களது வான் படைகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதுமில்லை. உங்கள் பயங்கர ஆயுதங்களைக் கண்டும் நாம் அஞ்சப் போவதுமில்லை. நாங்கள் இங்கு தான் இருப்போம். மேலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்கதலுக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
 
'நீங்கள் எம்முடைய பகுதிகளுக்கு வரத் துணிந்தால், எம்முடைய கிராமங்களுக்கும், வீதிகளுக்கும், வீடுகளுக்கும் வரும் தைரியம் உங்களக்கு இருந்தால் வாருங்கள், வந்து பாருங்கள். அப்போது எம்முடைய எதிர் தாக்ககுதல் 2006 ஜுலை யுத்ததின்போது நீங்கள் எங்களிடம் வாங்கிய அடி மிகச் சாதாரனமானது என்று நீங்கள் என்னுவீர்கள்.
 
'நாம் இங்கு தான் இருக்கின்றொம். மேலும் எம்முடைய ஆயதங்களை நாம் விட்டு விட மாட்டோம். இஸ்ரேல் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் போது எந்த சலசலப்பும் ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசும்போது இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறப்படுகின்றது, ஹிஸ்புல்லாஹ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தைரியம் கூறப்படுகின்றது.
 
'என்னுடைய அருமை சகோதர, சகோதரிகளே!
 
'நாம் நம்பும் இந்த கொள்கைக்காக எமது கடந்த கால மண்ணின் மைந்தர்கள் செய்த உயிர்த் தியாகங்களையும் எற்றுக் கொண்ட துன்பங்களையும் நாமும் ஏற்க என்றும் தயாராகவே உள்ளோம். கடந்த காலங்கள் நாம் செல்லும் திசை சரியானதே என்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சரியானதே என்றும் எமக்கு உணர்த்தியுள்ளது.இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இவ்வாறே சத்தியத்திட்காக உயிர் நீத்தார்கள். சத்தியத்திட்காக போராடும் படி அவர்கள் விடும் அழைப் பை நாம் ஏற்க என்றும் சித்தமாகவே இருக்கின்றொம்.
 
'இஸ்ரேல் எம்முடைய மாத்திரமல்ல, முழு உம்மத்தினதும் எதிரியாகும். எம்மில் சிலர் அவர்களுடன் உறவாடிய போதிலும் யூதர்கள் எங்கள் எதிரிகளே. அதே போன்ற இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்காவுடன் நம்மில் சிலர் நட்பு பாராட்டிய போதும் அமெரிக்காவும் நம்முடைய எதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
'உங்கள் அனைவரது உண்மையான பங்களிப்பிட்காக நான் எனது நன்றியை மிண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிரிகளின் முன் மண்டியிட்டு இழிவடைவதா? அல்லது எமது கண்ணியத்தை பாதுகாத்துக் கொள்ள போராடி உயிர்துரப்பதா?என்ற நிலை வந்தால் நாம் கண்ணியமான வீர மரணத்தையே சற்றும் தயங்காமல் தேர்ந்தெடுப்போம். எம்முடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் எதிரிகள் காண மாட்டார்கள்.
 
'எமது அருமை நபிகள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளான இமாம் ஹுஸைன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மீதும் அவர்களது சந்ததியினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
சிந்தியுங்கள்! அறபிகளின் பேடித்தனத்தையும் நயவஞ்சகப் போக்கையும் வெளிச்சம் காட்ட இதை விட என்ன சான்று தேவை? இதோ இரு முஸ்லிம் அல்லாத சிறு நாடுகளது தலைவர்கள் காஸா மக்களின் துயர் துடைக்க தங்களால் இயன்றதை செய்ய முன் வந்துள்ளார்கள். அவ்விருவரில் ஒருவர் கிறிஸ்தவர் என்பதையும் இந்த அறபித் தலைவர்கள் கவனிப்பார்களாக! பிறரை காபிர் என்றும் முனாபிக் என்றும் நரகவாதி எய்றும் தாராளமாக மார்க்கத் தீர்ப்புக்களை அள்ளி வீசும் இந்த அறபி மன்னர்களினதம் என்னெய் ஷேகுகளினதும் 'ஆஸ்தான' முப்தீக்களும் அல்லாஹ்வுக்காக அல்ல ஊதியத்திற்காக ஊழியம் செய்யும் அங்குள்ள உலமாக்களும் இனி முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகின்றார்கள். அமெரிக்கர்களதும் யூதர்களதும் வைப்பாட்டிகளாக இருக்கும் இந்த ஈனர்கள் இனியாவது உணர்வு பெறுவார்களா?

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!