Sunday, March 29, 2015

இஸ்லாமியப் புரட்சிக்கு வயது 36


இந்தத் தலைப்பில் கனடாவின் கிரஸன்ட் இன்டர்நெஷனல் சஞ்சிகையின் பிப்ரவரி 2015 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் ஜஃபர் பங்காஷ;, சென்ற பிப்ரவரி 11ம் திகதி 36 ஆண்டுகள் நிறைவடைந்த ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, ஏகாதிபத்திய மற்றும் ஸியனிஸ சக்திகளின் இடைவிடாத சதித்திட்டங்கள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு மத்தியிலும் எவ்வாறு 36ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றது என்பது பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையை விவரிக்கிறார். அதற்கு ஈரானிய மக்களின் இஸ்லாத்துடனான இறுகிய பிணைப்பும் அதன் முத்தகீ தலைமைத்துவத்தின் தக்வாவும்தான் காரணம் என அவர் கூறுகிறார்:

'உலகில், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் நிறைந்த மத்திய கிழக்கில், அத்துணை அமைதி குலைவுக்கு மத்தியிலும் ஒரு நாடு தீபச்சுடராகவும் நிலைபெற்றதாகவும் விளங்குகிறது என்றால் அது இஸ்லாமிய ஈரான்தான். மேற்குநாடுகளினால் பல்லாண்டுகளாக சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகள், வெளிஆக்கிரமிப்பு, பெருமளவிலான உள்நாட்டு hநச வேலைகள் என்பனவற்றை எதிர்கொண்டுங் கூட, இன்றும் இந்த இஸ்லாமிய நாடு நீடித்திருக்கின்றது என்பதல்லாமல், நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பது உண்மையில் நமது விஷேச கவனத்திற்குரியதாகும். மற்ற நாடுகளாயிருந்தால் எப்பொழுதோ வீழ்ந்து போயிருக்கும்.

ஈரானின் திடநிலைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என்ன? அதனிடம் பிரம்மாண்டமான எண்ணெய் மற்றும் வாயு வளம் இருப்பதனாற்றான் ஈரான் எல்லாச்சூறாவளியிலும் தாக்கு பிடித்து நிற்கிறது என்பது தவறான அனுமானமாகும். காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்: அது இஸ்லாம்|. ஈரான் தனது மக்களின்   ; வ த ற ; கு ம ,அடக்கியொடுக்கப்பட்டவர்களை கேடிலா ன்முறையில் கவனிப்பதற்குரிய செயலொழுங்கு முறையொன்றை ஸ்தாபிப்பதற்கும் இஸ்லாமிய வழியையே பின்தொடர்ந்து செல்கின்றது. இஸலாமிய ஈரான் முழுநிறைவானதன்று என்பது உண்மைதான். ஆயினும் அது மற்றெல்லா நாடுகளையும் விடச் சிறந்தது எனலாம். சவூதி அரேபியா அல்லது பாகிஸ்தான் போன்றல்லாமல்,  ஈரானின் இஸ்லாத்துடனான பற்றுதலும் ஒட்டுதலும் மேலெழுந்த வாரியான ஒன்றன்று. மாறாக, இஸ்லாமியக் கொள்கை கோட்பாடுகளை அடியொற்றி வாழ்வதற்கான உண்மையான ஈடுபாடு அங்கு காணப்படுகிறது. இதனை அதன் தலைவர்கள் முதல் அடிமட்டத்திலிருப்பவர்கள் வரை, வழிநெடுக கசிந்துசெல்லும் எளிமைப் போக்கிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய ஈரானின் மற்றுமிரு குறிப்பிடத்தக்க அம்சங்கள், வெளி செல்வாக்கு அல்லது தலையீட்டிலிருந்து அதன் முழுமையான சுதந்திரமும், வெளிநாட்டு கடன் இல்லாத தன்மையும் ஆகும். எந்தவொரு அளவுகோலைப் பயன் படுத்தினாலும், இவை முற்றிலும் முதன்மையான சாதனைகளாகும். எந்தவொரு நாடும் சுதந்திரமான திறனாய்வு முடிவு எடுப்பதை, சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற மேற்கத்திய சக்திகள் சகித்துக் கொள்ளாத   அவை, இணங்க மறுக்கும் நாடுகளை வழிக்கு கொண்டுவர, அவற்றின் பிரம்மாண்டமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தும். அவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஈரான் மீது அதனைப் பிரயோகித்தும், படுதோல்வியைத் தழுவிக் கொண்டன. இதேபோன்று, கொள்ளைக்காரர்களும் இரத்தம் உறிஞ்சிகளும் மேலாதிக்கம் செலுத்தும் சர்வதேச நிதியமைப்பு முறைக்குள் ஈரான் அங்கம் வகிக்காததன் காரணமாக, பிறரை ஓட்டாண்டியாக்கி ஒரு சிலரின் கைகளில் செலவத்தை குவியச் செய்யும் முதலாளித்துவ நிதிநிலை ஏய்ப்பிலிருந்து அது றமையுடன் தவிர்ந்து கொண்டது. உண்மையான இஸ்லாமிய அடிப்படைகளைப் பின்பற்றுவது மட்டுமே, மக்கள் இத்தகைய அழுத்தங்களை எதிர்த்து நிற்கச் செய்கின்றது. ஈரான் அத்தகைய மாண்புகளின் கண்கூடான பிரதிபலிப்புÉ ஏனைய முஸ்லிம்கள் தமது பிரிவு மனப்பான்மையுடன் கூடிய அரைக்கண் பார்வையை அகற்றிக்கொண்டல்  ; முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க செயல்வடிவம் அதுவாகும்.'


Friday, March 27, 2015

'தக்ஃபீரிஸம் என்பது உலகில் மிகப்பெரும் அபாயகரமான ஓர் இயக்கம்'


தீவிரவாத மற்றும் தக்ஃபீரி அமைப்புகள் பற்றிய சர்வதேச மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காமெனெய் ஆற்றிய உரை.



உலகெங்கிலுமிருந்து வந்திருந்த 83 நாடுகளைச் சார்ந்த 600க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்ட 'தீவிரவாத மற்றும் தக்ஃபீரி அமைப்புகள் பற்றிய சர்வதேச மாநாடு' ஒன்று அண்மையில் ஈரானின் கும் நகரில் சென்ற நவம்பர் 24, 25ம் திகதிகளில் நடைபெற்றது. மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காமெனெய் உரை நிகழ்த்திய போது, 'தக்ஃபீரிஸம் என்பது இஸ்லாமிய உலகில் மிகத் தீங்கு விளைவிக்கக் கூடிய, பெரும் அபாயகரமான ஓர் இயக்கமாகும். இந்த முன்னெடுப்பு புதியதொன்றன்று.  அதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. எனினும், இப்போது சில ஆண்டுகளாக அது ஆணவப் போக்கிலான சதித் திட்டங்களைக் கொண்டும், சில பிரதேச அரசுகளின் பணத்தைக் கொண்டும், இன்னும் அமெரிக்கா இங்கிலாந்து ஸியனிஸ ஆட்சி போன்ற காலனித்துவ நாடுகளின் உளவுச் சேவைகளின் சூழ்ச்சிகளைக் கொண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிட்டார். 
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு துவங்கி, இறைவனைப் புகழ்ந்து, அவனது தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) மீதும், தூய்மை வாய்ந்த அஹ்லுல்பைத் மீதும்தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய அவர், உலகின் பல பாகங்களில் இருந்தும், இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளிலிருந்தும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த அறிஞர்  பெருமக்களை வரவேற்று, அவர்களின் செயற்றிறன் வாய்ந்த- பெறுமதிமிக்க பங்களிப்பிற்காக நன்றி மொழிந்தார்.
மேலும் அவர், கும் நகரைச் சார்ந்த பெரும் உலமாக்களுக்கும் அறிஞர்களுக்கும்;, குறிப்பாக இம்மாநாட்டிற்கான கருத்தை முன் வைத்ததுடன், அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஆயத்துல்லாஹ் மகாரிம் ஷிராஸி மற்றும் ஆயத்துல்லாஹ் ஜாஃபர் ஸுப்ஹானி ஆகியோருக்கும் நன்றி நவின்றார். இருநாள் மாநாட்டில் உரையாற்றியவர்களின் பேச்சுகளின் சாராம்சத்தையும், சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடக்கத்தையும் பற்றி தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். அவருடைய உரையின் சுருக்கம் வருமாறு:


தக்ஃபீரி முன்னெடுப்புகளை ஒருங்கிணைந்த வகையில் எதிர்ப்பதை இம்மாநாடு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இந்த தீய விருட்சத்தின் ஒரு கிளையான ஐ.எஸ்.அமைப்பு, இன்று மக்களையும் சொத்துக்களையும் நிர்மூலமாக்குவதையும் அப்பாவி;களின் இரத்தத்தை ஓட்டுவதையும் உள்ளடக்கிய அழிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இஸ்லாமிய உலகில், தக்ஃபீரிஸத்தினால் இழைக்கப்படும் குற்றச்செயல்களில் இது ஒரு பகுதி மட்டுமேயாகும். இதனை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
என் இதய ஆழத்திலிருந்து மிகுந்த மன வருத்தத்துடன் சொல்கிறேன். இஸ்லாமிய உலகில், ஆணவச் சக்திகள் உருவாக்கியுள்ள பிரச்சினைகளின் பக்கம் நமது கவனத்தைக் குவிக்க வேண்டும். ஸியனிஸ ஆட்சியின் சதித் திட்டங்களையும் புனித குத்ஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதற்கும் நமது எல்லா சக்திகளையும் ஒன்று குவிக்க வேண்டும். இது முழு இஸ்லாமிய உலகையும் உணர்வு பெறுவதற்கும் உத்வேகம் கொள்வதற்கும் வைக்க வேண்டும். தக்ஃபீரிஸம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளினால் இஸ்லாமிய உலகிற்காகத் தயார் செய்யப்பட்ட ஒரு பொருளாகவும் பிரச்சினையாகவும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதனை நாம் கண்டிப்பாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு உலமாக்கள் மீதும் அறிஞர்கள் மீதும் செயல்தீரர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாகும். அதே நேரத்தில், முக்கியப் பிரச்சினையானது ஸியனிஸ ஆட்சி என்பதையும்; முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா என்பதையும்; நாம் மறந்து விடக் கூடாது.


தக்ஃபீரி முன்னெடுப்புகளும் அதனை ஆதரிக்கும் அதற்கு தோள் கொடுக்கும் அரசுகளும், ஆணவச் சக்திகளினதும் ஸியனிஸத்தினதும் இலக்குகளின் திசைகளிற்றான் முழுமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. சிற்சில அடையாளங்கள் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துகின்றன. தக்ஃபீரி முன்னெடுப்புகள் வெளியே இஸ்லாமியப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாலும், உண்மையாக செயல்வடிவில் இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆணவ அரசியல் ஆதிக்கச் சக்திகளுக்கு சேவகம் செய்பவையாகவே இருக்கின்றன. இதனை நாம் புறந் தள்ள முடியாது. இந்த அடையாளங்களுள் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.


முதலாவது அடையாளம் என்னவென்றால், தக்ஃபீரி முன்னெடுப்பானது, இஸ்லாமிய எழுச்சி இயக்கத்தை அதன் பாதையிலிருந்து விலகிச் செல்ல வைத்து விட்டது. இஸ்லாமிய எழுச்சி இயக்கம், அமெரிக்காவிற்கும், ஆணவச் சக்திகளுக்கும், அந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவினால் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களுக்கும் எதிரானதாகும். அந்த இயக்கம், வட ஆஃபிரிக்காவின் பல்வேறு நாட்டு மக்களினது உந்துதலினால் உருவானதாகும். தக்ஃபீரி முன்னெடுப்பு, அதன் சரியான திசையை மாற்றி, முஸ்லிம்களுக்கிடையிலான ஒரு யுத்தமாக, சமூகத்தினுள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் படுகொலை செய்ய வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் போர் செய்வதென்றால், அதற்கான முன்னணித் தளம் பாலஸ்தீனின் எல்லைப்புறம்தான். ஆனால், தக்ஃபீரி முன்னெடுப்பு களத்திற்கு வந்து, அதன் முன்னணி நிலையை பக்தாதின் வீதிகளாகவும் சிரியா-டமஸ்கஸின் ஜாமிஆ மஸ்ஜிதாகவும் பாகிஸ்தானின் வீதிகளாகவும் சிரியாவின் நகரங்களாகவும் மாற்றி அமைத்திருக்கிறது.


இன்றைய லிபியா, சிரியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமையை சற்று கண்ணோட்டமிடுங்கள். முஸ்லிம்களின் துப்பாக்கிகளும் வாள்களும் யாருக்கெதிராக உபயோகிக்கப் படுகின்றன என்று பாருங்கள். இந்த பலம் அனைத்தும் ஸியனிஸ ஆட்சிக்கெதிராகப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் தம்; குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் யார் மீது பிரயோகிக்கின்றனர்? இவை யெல்லாம் தக்ஃபீரிகளின் மறக்கமுடியாத மன்னிக்கமுடியாத வரலாற்றுக் குற்றங்களாகும். 

இன்னுமோர் அடையாளமாக, ஸியனிஸ ஆட்சி முஸ்லிம்களுக்கெதிரான போரைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வகையில், தக்ஃபீரி முன்னெடுப்புகளை ஆதரிப்பவர்கள் அதனோடு சமரசம் செய்து கொள்வதைக் குறிப்பிடலாம். அவர்கள் அதற்கெதிராக முகஞ் சுழிப்பது கூடக் கிடையாது. மறுபுறத்தில், அவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கும் அரசுகளுக்கும் எல்லாவிதமான தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். அவற்றிற்கெதிராக அனைத்து சூழ்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றுமோர் அடையாளம், ஈராக், சிரியா, லிபியா, லெபனான், இன்ன பிற போன்ற இஸ்லாமிய நாடுகளில் தக்ஃபீரி முன்னெடுப்பு நடத்திய துரோகத்தனமான வேலைகளாகும். இதன் காரணமாக, இந்நாடுகளின் விலைமதிப்பற்ற உள் கட்டமைப்புகள் சர்வ நாசத்தைத் தழுவிக் கொண்டுள்ளன. எததனையெத்தனை வீதிகள், பாதைகள், பெருஞ் சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள், சுரங்கங்கள், விமான நிலையங்கள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், தோட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பாருங்கள்! இந்நாடுகள் தமது பழைய நிலையை அடைவதற்கு எவ்வளவு பணம் செலவாகும், எவ்வளவு காலம் செல்லும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்னுமொரு முக்கிய அடையாளம், தக்ஃபீரி முன்னெடுப்பானது உலகில் இஸ்லாத்தின் மதிப்பைப் பங்கப் படுத்தி விட்டதாகும். அது ஓர் அசிங்கமான தோற்றத்தை இஸ்லாத்திற்கு வழங்கி விட்டது. மனிதர்களை எந்தவொரு குற்றமுஞ் சாட்டாமல், தக்ஃபீரிகள் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்யும் கோரக் காட்சிகளை தொலைக்காட்சிச் சேவைகளில் உலகிலுள்ள ஒவ்வொருவரும் கண்டனர். ஆனால்,அல்லாஹ் கூறுகின்றான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில், எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ- உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ, அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதி யுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்து வோரை நேசிக்கின்றான். அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார் களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ, மேலும் உங்களை  வெளியேற்றுவதில் ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ, அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான். அவர் களுடன் எவரேனும் நட்பு கொண்டால், அவர்களே கொடுமையாளர்கள். (அல்குர்ஆன் 60:8-9)
இவர்கள் இதற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்- செயல்படுகின்றனர். தமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களையும், அப்பாவி முஸ்லிமல்லாதாரையும் இவர்கள் கொன்றிருக்கின்றனர். முழு உலகமும் இதன் படங்களைக் கண்டது. இச்செயல்களை இவர்கள்  இஸ்லாத்தின் பெயரால் செய்திருக்கின்றனர். இஸ்லாம் என்பது அன்புக்கும் கருணைக்கும் இரக்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் நீதிநியாயத்திற்கும் உரியது. ஆனால் இவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய விதத்தைப் பார்த்தீர்;களா? இதனை விட பாரிய குற்றம் வேறு எதுவாயிருக்க முடியும்? இதனை விட தீமை பயக்கக் கூடிய ஃபித்னா வேறு எதுவாயிருக்க முடியும்? இதனைச் செய்தது தக்ஃபீரிகள்தான்!

மற்றுமோர் அடையாளம், இஸ்லாத்தின் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் அச்சுகளிலிருந்து இவர்கள் நீங்கி விட்டனர். காஸா தன்னந்தனியாக 50 நாட்கள் போராடியது. எதிரிகளின் தாக்குதலை 50 நாட்கள் எதிர்த்து நின்றது. இஸ்லாமிய அரசுகளுள் ஒன்றும் காஸாவுக்கு உதவ முன்வரவில்லை. எண்ணெய் வருமானங் களும் அமெரிக்க டொலர்களும் உதவவில்லை. மாறாக, அவை ஸியனிஸ ஆட்சியின் அடாவடித்தனங் களுக்கும் அட்டூழியங்களுக்கும் உறுதுணையாயிருந்தன.
இன்னுமோர் அடையாளம் (ஒரு பாவம் என்றுஞ் சொல்லலாம்), தக்ஃபீரி முன்னெடுப்பானது இஸ்லாமிய உலகம் பூராவிலும் காணப்படும் முஸ்லிம் இளைஞர்களின் ஆர்வத்தையும் துணிவையும் திசை மாறச் செய்ததாகும். இன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் செல்வாக்கினால் ஒரு விதமான ஆர்வமும் துணிவும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இஸ்லாத்தின் பெரும் இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்லத் தயாராயிருக்கின்றனர். ஆனால், தக்ஃபீரிகள் இவர்களின் ஆர்வத்தையும் துணிவையும் திசை திருப்பி விட்டிருக்கின்றனர். முஸ்லிம்;களின் தலைகளைக் கொய்வ தற்கும், பெண்கள், பிள்ளைகள், சிசுக்கள் ஆகியோரை ஈவிரக்கம் இல்லாமல் அறுத்துக் கொலை செய்வ தற்கும், இவர்கள் விபரமறியாத அறிவற்ற இளைஞர்களை தம் பக்கம் ஈர்த்துள்ளது மிகப் பயங்கர மானதாகும்.

இந்த அடையாளங்களையும் ஆதாரங்களையும் நாம் எளிதில் புறக்கணிக்கவோ மறக்கவோ இயலாது. இவையனைத்தும் தக்ஃபீரி அமைப்புகள், இஸ்லாத்தின் எதிரிகளான அமெரிக்கா இங்கிலாந்து ஸியனிஸ ஆட்சி ஆகிய ஆணவச் சக்திகளுக்குச் சேவகம் செய்வதை எடுத்துக் காட்டுகின்றது. நிச்சயமாக இன்னும் பல அடையாளங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன. நாங்கள் அறிய வந்தது என்னவெனில், அமெரிக்கா வின் சரக்குப் போக்குவரத்து விமானமொன்று, ஐ.எஸ்.குழுவினருக்குத் தேவையான ஆயுதங்களை நிலத்தில் விழச் செய்திருக்கின்றது அல்லது கீழே இறக்கி விட்டிருக்கிறதுளூ அக்குழுவினருக்கு உதவுவதற்காக இதனைச் செய்திருக்கிறது. 'இது ஒரு தவறுதலால் நடந்திருக்கலாம்' என நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஆனால் அவர்கள் அவ்வாறு 5 முறை தொடர்ந்து செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு தவறை அவர்கள் 5 தடவை தொடர்ந்து செய்தார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்!

இவையெல்லாம் ஐ.எஸ்.க்கு எதிரான ஒரு கூட்டணியை அமைத்ததன் பின் நடந்திருக்கிறது. இஃது, அப்பட்டமானதொரு பொய்யாகும். இந்தக் கூட்டணிக்கு வேறு சில தீய நோக்கங்கள் இருக்கின்றன. இந்த ஃபித்னாவை உயிர்ப்போடு வைக்க வேண்டும், இரு பக்கங்களையும் ஒன்றோடொன்று மோத வைத்து முஸ்லிம்களுக்கிடையே உள்நாட்டுச் சண்டையைத் தொடரச் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோளாகும். உண்மையில், இவர்களினால் இதனைச் செய்ய முடியாது.

நமக்கு செயல்படுத்த வேண்டிய சில மகத்தான கடமைகள் இருக்கின்றன. கண்ணியமிக்க கனவான் களாகிய நீங்கள் சில பரிகாரங்களையும் பொறுப்புகளையும் இந்த இரு நாட்கள் ஒன்றுகூடலில் சுட்டிக் காட்டினீர்கள். புறக்கணிக்கப்படமுடியாத இரண்டு-மூன்று பணிகளை நானும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது பணி, தக்ஃபீரி முன்னெடுப்பை வேரோடு கெல்லி எறியும் நோக்கத்தோடு, இஸ்லாத்தின் எல்லா சிந்தனைப் பிரிவுகளைச் சேர்ந்த உலமாக்களினால் ஓர் அறிவுரீதியான, தர்க்கப்பூர்வமான, எல்லாவற்றை யும் உள்ளடக்கிய ஓர் இயக்கம் உருவாக்கப்படுவதாகும். இந்த இயக்கமானது, ஒரு சில பிரிவுகளினால் மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாயிருக்க வேண்டும். 

ஸலஃபுஸ் ஸாலிஹீன் எனும் நேர்வழியில் நடந்த முன்னோர்களைத் தாம் பின்பற்றுவதாகக் கூறி தக்ஃபீரி கள், போலிச் சுலோகங்களோடு கோதாவில் நுழைந்தனர். இவர்கள் செய்யக் கூடிய செயல்களும், மேற் கொள்ளும் நடவடிக்கைகளும், அந்த நேர்வழி; நடந்த முன்னோர்களின் கோபத்தையும் விரோதத்தையும் கொண்டவை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இதனை, சமயம்-சிந்தனாவாதம்-பகுத்தறிவு என்பவற்றின் மொழியில் நாம் மக்கள் முன் வைக்க வேண்டும்.

நீங்கள் நமது இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த வழிபிறழ்ந்த சிந்தனைகளினால் பாதிப்படைந்த சில மக்கள் இருக்கின்றனர். பரிதாபத்திற்குரிய இம்மனிதர்கள், தாம் நல்ல செயல்களைச் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், பின்வரும் திருக்குர்ஆன் புனித வசனங்களின் பிரதிபலிப்புகள் ஆவர்: (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர் களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால் அவர்களோ, தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தனர். இதனால் அவர் களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகி விட்டன. (அல்குர்ஆன் 18:104-105)

அல்லாஹ்வின் வழியில் போரிடுவதாக இவர்கள் வீணாகக் கற்பனை செய்கிறார்கள். இத்தகையவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனிடம் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர் களுக்கும் பெரியார்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்து விட்டனர். எங்கள் இறைவனே! இவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுப்பாயாக! மேலும் இவர் களைக் கடுமையாகச் சபிப்பாயாக! (அல்குர்ஆன் 33:67-68). இவர்கள்தான் அத்தகைய மனிதர்களாவர்.

டமஸ்கஸின் பள்ளிவாசலில் மாபெரும் இஸ்லாமிய அறிஞரொருவரைக் கொலை செய்தவர்களும் இவர்கள் மத்தியில் இருக்கின்றனர். குண்டு வெடிப்புகளை நிகழத்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனான் போன்ற நாடுகளின் பல்வேறு நகரங்களில் அப்பாவி மக்களை இரத்தஞ் சிந்தச் செய்தவர்களும் இவர்களில் இருக்கின்றனர். இவர்கள்தான் இறைவனிடம் இதனைக் கூறுவார்கள்.

இன்னோரிடத்தில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்: ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. (அல்குர்ஆன் 7:38) தலைவர்களும் அவர்களைப் பின்தொடர்பவர்களும் தண்டிக்கப்படுவர்: சந்தேகமின்றி இது உண்மையானதும் சரியானதுமாகும். நரகவாசிகளில் ஒருவர் மற்றவர்க்கிடையில் பொருத்தமானதுமாகும். (அல்குர்ஆன் 38:64) இவர்களுள் ஒருவர் மற்றவருடன் சண்டையிடுவர்.

எனவே நாம் இவர்களைக் காப்பாற்ற வேண்டும். இளைஞர்களைப் படுகுழியில் விழாமல் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு உலமாக்களின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், உலமாக்கள்தான் புத்திஜீவிகளோடும் சாதாரண மக்களோடும் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆவர். எனவே, அவர்கள் இதனைச் செய்ய முன்வர வேண்டும். மகிமைமிக்க அல்லாஹ் தீhப்பு நாளன்று, 'நீங்கள் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்பான். அதற்கு பதில் கூறுவதற்காக இப்போதே செயல்பட வேண்டும்.

இரண்டாவது பணி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ஆணவக் கொள்கைகளினால் உலகில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும். இஃது உண்மையில் அவசரமானதொரு தேவையாகும். உலகில் வாழும் ஒவ்வொருவரும் அமெரிக்கா தூவும் விஷ வித்துக்களின் பங்களிப்பைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸியனிஸ ஆட்சி ஆகியவற்றின் உளவுத் துறை ஸ்தாபனங்கள் என்னென்ன கீழறுப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும். சதித் திட்டங்கள் ஆணவச் சக்திகளினால் பின்னப்பட்டு, தக்ஃபீரி அமைப்புகள் அவற்றிடமிருந்து பூரண ஆதரவையும் பணத்தையும் பெற்று செயல்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சதித் திட்டங்கள் ஆணவச் சக்திகளினாலேயே வகுக்கப்படுகின்ற அதேவேளை பிரதேசத்திலுள்ள அவற்றின் கைப்பொம்மை ஆட்சிகளிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்கின் றனர். இதன் விளைவாக, பரிதாபத்திற்குரிய வகையில் தக்ஃபீரி அமைப்புகளில் இணையும் இளைஞர்கள் நாசமாக்கப்படுகின்றனர். இவர்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பெரும் பிரச்சினைகளை உருவாக்குபவர் களாகி விடுகின்றனர்.

மூன்றாவது பணி, பாலஸ்தீன் பிரச்சினையில் அக்கறை கொள்வதாகும். பாலஸ்தீன், புனித பைத்துல் முகத்தஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளி பற்றிய பிரச்சினை ஓரங் கட்டப்படக் கூடாது. அவர்கள் இதனைத் தான் விரும்புகின்றனர். இஸ்லாமிய உலகம், பாலஸ்தீன் பிரச்சினையைப் புறந் தள்ளிவிட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஸியனிஸ்டுகளின் அமைச்சரவை அண்மையில் பாலஸ்தீன் ஒரு யூத நாடு என அறிவித்தது. இதற்கு அவர்கள் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அதனைப் பகிரங்க மாக அறிவிக்கின்றனர். இஸ்லாமிய உலகத்தினதும், பாமர மக்களினதும், முஸ்லிம் நாடுகளினதும் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, புனித பைத்துல் முகத்தஸ் மற்றும் அல்அக்ஸா பள்ளிவாசலைக் கைப்பற்றியதன் பின்னர், பாலஸ்தீனர்களை முடிந்த அளவு பலவீனப்படுத்தியதன் பின்னர், இப்போது அதனைப் பிரகடனப்படுத்துகின்றனர். நாம் இதில் அக்கறை செலுத்த வேண்டும். எல்லா மக்களும், குறிப்பாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்கள் அரசாங்கங்களிடத்தில் பாலஸ்தீன் பிரச்சினை பற்றி அக்கறை கொள்ளும்படி கேட்க வேண்டும். இது முக்கியமானதும் மிகப் பெரிய பொறுப்பு மாகும்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசில் அரசும் மக்களும் இந்த நம்பிக்கையில் பங்கு கொள்கின்றார்கள். ஆரம்பத் திலிருந்தே இஸ்லாமிய அரசும், நமது மகத்தான இமாமும், பாலஸ்தீனிற்கான ஆதரவை அறிவிப்பு செய்து இருப்பதுடன், இன்றும் அந்த கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அதேபோன்று, ஸியனிஸ ஆட்சிக்கான எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள். இன்று வரை அந்த கொள்கை தொடர்ந்;து வருகின்றது. இப்போது 35 ஆண்டுகளாகின்றனளூ அதிலிருந்து நாம் விலகிச் செல்லவில்லை;. நமது மக்களும் கூட தங்களின் முழுமையான ஆர்வத்தோடு அதனை ஆதரித்து வருகின்றார்கள்.

சில சமயங்களில், இந்த வகையில் தங்களது கோரிக்கைகள் வழங்கப்படாத போது, பல இளைஞர்கள் எனக்கு கடிதம் எழுதுகின்றார்கள். 'ஸியனிஸ ஆட்சிக்கெதிராக முன்வரிசையில் இணைந்து போரிடுவதற்கு எங்களை அனுமதியுங்கள்' என வற்புறுத்தும் விதத்தில் வேண்டுகின்றார்கள். ஸியனிஸ்டுகளுக்கெதிராகப் போராட நமது மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். ஈரான் இஸ்லாமியக் குடியரசு அதனை நிரூபித்தும் காட்டியிருக்கின்றது.

அல்லாஹ்வுடைய அருளினாலும் உதவியினாலும், நாம் பிரிவுகளுக்கிடையிலான முரண்பாட்டின்; தடையைத் தாண்டி விட்டோம். ஷீஆ குழுவினரான லெபனானின் ஹிஸ்புல்லாஹ்விற்கு நாம் உதவினோம். அதே விதத்தில் நாம் சுன்னிகளான ஹமாஸுக்கும் இஸ்லாமிய ஜிஹாதுக்கும் உதவினோம். நாம் அதனைத் தொடர்ந்து செய்து வருவோம். நாம் இந்தப் பிரிவுகளின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டு கிடக்கவில்லை. ஷீஆ, சுன்னி, ஹனஃபி, ஹம்பலி, ஷாஃபிஈ, ஸைதி என்ற பிரிவினர்க்;கிடையில் நாம் பாகுபாடு காட்ட வில்லை. எல்லா பாலஸ்தீன் பகுதிகளும் ஆயுதபாணியாக வேண்டும் என்பதுதான் நமது இலட்சியமாகும்.

நமது முக்கிய குறிக்கோளை முன்னிறுத்தி நாம் உதவி வழங்கினோம். காஸாவிலுள்ள நமது பாலஸ்தீன் சகோதரர்களின் புஷ்டிகளை வலிமைப்படுத்த எம்மால் முடிந்தது. அல்லாஹ்வின் பேரருளினால் நாம் அதனைத் தொடருவோம். இன்னொன்றும் கண்டிப்பாக நடக்க வேண்டும் என நான் அறிவிக்கிறேன்.  காஸாவைப் போன்று மேற்கு கரையும் ஆயுதபாணியாக வேண்டும்ளூ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.




அன்புச் சகோதரர்களே! உங்களுக்கு நான் சொல்கிறேன்ளூ அமெரிக்காவின் மேல் மினுக்கம் உங்களைத் தடுத்து நிறுத்தக் கூடாது. எதிரி பலவீனமடைந்து விட்டான். இஸ்லாத்தின் எதிரியான ஆணவச் சக்திகள், கடந்த 100-150 ஆண்டு காலப் பகுதியில் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுஇப்போது வலிமை குன்றி விட்ட தாகவே காணப்படுகின்றன. ஐரோப்பாவிலுள்ள காலனித்துவ அரசாங்கங்களைப் பாருங்கள்!அவை பல்வேறு பொருளாதார, அரசியல், பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இன்று அவற்றின் அரசுகள் பல பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றன. அமெரிக்காவின் நிலை மற்றவற்றை விட மோசமானது. அஃது, ஒழுக்கவீழ்ச்சி, அரசியல்மோதல்கள், பயங்கரமான நிதி-பொருளாதாரச் சிக்கல்கள் என்பனவற்றுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. அதனது வல்லரசு அந்தஸ்திற்கு பங்கமும், ஆபத்தும் வரக்கூடிய விதத்தில், இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் நிகழ்வுகளை அது சந்தித்து வருகிறது.

அத்துடன், கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது, ஸியனிஸ அரசும் பலவீனமடைந்து விட்டது. 'நைல் முதல் யூப்ரடீஸ் வரை' என்ற சுலோகங்களை முழங்கி, முழுப் பிரதேசத்தையும் தங்களுக்குச் சொந்த மாக்கிக் கொள்ள அவர்கள் முயன்றனர். ஆயினும், காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களின் சுரங்கப் பாதை களை 50 நாட்கள் போராடியும் கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் 50 நாட்களாக அனைத்து சக்தி களையும் பயன்படுத்தி, பூமிக்கடியில் அமைக்கப்பட்ட சுரங்க வழிகளை நாசப்படுத்த, அழிக்க, கைப்பற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும் தோல்வியடைந்து விட்டனர். எவ்வாறு நிலைமை மாற்றமடைந்தது என்பதைப் பாருங்கள்! முழு அரபு பூமியையும் கையகப்படுத்தத் திட்டமிட்ட இந்த பயங்கரவாத ஆக்கிர மிப்பு அரசு, இப்போது எத்துணை பலவீனப்பட்டு விட்டது என்பதைப் பாருங்கள்!

எதிரிகளின் பிரச்சினைகள பலவாகும். இஸ்லாத்தின் எதிரிகள், ஈராக்கிலும்;, சிரியாவிலும், லெபனானிலும் விரக்தி கண்டிருக்கின்றனர். அவர்கள், பல்வேறு பகுதிகளிலும் தமது இலக்குகளை அடைய முடியாமல் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர். ஈரான் இஸ்லாமியக் குடியரசை அணுவாற்றல் பிரச்சினையில் எதிர் கொண்டு, தங்கள் காலடியில் விழ வைப்பதற்காக அமெரிக்காவும், ஐரோப்பாவிலுள்ள காலனித்துவ நாடுகளும் ஒன்று சேர்ந்து, தமது எல்லா சக்திகளையும் உபயோகித்தனர் என்பதை நீங்கள் கண்டீர்கள்! ஆனாலும் அவர்கள் தோல்வி கண்டு விட்டனர். தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவிக் கொள்வர்.

இதுதான் மறு தரப்பினரின் பலவீனமாகும். ஆனால் அல்லாஹ்வின் பேரருளால் நாளுக்கு நாள் நீங்கள் வலிமை பெறுவீர்கள்! எதிர்காலம் உங்களுக்குச் சொந்தமானதாகும். இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை! (அல்குர்ஆன் 12:20-22)
அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வின் பெருங் கருணையும் நல்லாசிகளும் உங்கள் மீது பொழிவதாக!

(தமிழில்: இப்னு புகாரி)