بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
தாக்குதலின் கீழ் ஷிஈக்கள்
இமாம் முஹம்மத் ஜவாத் ஷிர்ரி
உள்ளடக்கம்
தாக்குதலின் கீழ்
ஷீஈக்கள்
முஹம்மத் ஜவாத் ஷிர்ரி
நூலாசிரியர் பற்றி
இமாம் முஹம்மத்
ஜவாத் ஷிர்ரி அவர்கள், பிறப்பால்
லெபனானியரும், ஈராக்கிலுள்ள நஜாஃப் இஸ்லாமிய கல்வியகத்தின் ஒரு பட்டதாரியும் ஆவார். 25 வயதை அடைவதற்கு
முன்பாகவே அவர், இஸ்லாமிய
சட்டக்கலை பற்றியும், அதன் அடிப்படையை பற்றியும் எழுதினார். இந்த விடயானத்துடன் தொடர்புறும் இவரது நூல்களில் சிலவே கீழ்வருவனவாகும்:
1. அல் ரியாத் சட்டக்கலையின் அடிப்படையில்
2. அல் தாஹரா [தூய்மை]
3. நோன்பு
4. தொழுகை நூல்
5. இஸ்லாமிய சாசனங்கள்
இவர் நஜாஃபிலிருந்து
லெபனானுக்கு திரும்பியபோது, இமாம் ஷிர்ரி அவர்களும், மறக்கமுடியாத ஆளுமையும், பெறுமதி வாய்ந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான ஷெய்க் முஹம்மத் ஜவாத் முஃனிய்யா அவர்களும், தென் லெபனானை சேர்ந்த மக்களை விழிப்புறச்செய்யும் நடவடிக்கை முயற்சியொன்றை தொடுத்ததோடு, லெபனானிய சமூகத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எழுமாறு அவர்களை ஊக்குவித்தனர்.
அக்காலப்பகுதியில், காலஞ்சென்ற
இமாம் அப்த் அல் ஹுஸைன் ஷரஃப் அல் தீன் அவர்கள், கிலாஃபத்தை
பற்றிய நூலொன்றை எழுதுமாறு நூலாசிரியரை தூண்டினார்கள். இஸ்லாமிய சட்ட யாப்பில் கிலாஃபத் என்றழைக்கட்ட ஒரு நூலை எழுதியதன் மூலம் நூலாசிரியர் நன்மையான இந்த வேண்டுகோளை கண்ணியப்படுத்தினார்.
நஜாஃபில் மிகவும்
சிறந்ததொரு வரவேற்புடன் வரவேற்கப்பட்ட இந்த நூல், முன்ததா
அல் நஷ்ரின் [ஒரு மார்க்க பாடசாலை] அங்கத்தவர்களை
சந்திப்பதற்கும், நூலை கலந்துரையாடுவதற்கும் முனைவு பெறச்செய்தது.
பிரபலமான அறிஞரான ஸையித் முஹம்மத் தகீ அல் ஹாகிம் அவர்களே அந்த ஒன்றுகூடலின் பிரதான பேச்சாளராக விளங்கினார்கள். நூல், அதன் சிறிய அளவுக்கு மாறாக, இஸ்லாமிய
கலந்துரையாடலில் புதுமையானதோர் தனித்தன்மையுடன் திகழ்வதாக கருதப்பட்டது.
1949ஆம் வருட காலப்பகுதியில் நூலாசிரியர், மிச்சிகன், டெட்ரொய்டில் வாழ்ந்த முஸ்லிம்களிடமிருந்து கிடைத்த அழைப்பொன்றுக்கான பதிலாக ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்தார். ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தடைந்தபோது அவர், தன்னை அசெளகரியமான ஒரு நிலையில், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க பிறப்பு முஸ்லிம்களுடன் தொடர்பாட இயலாதமையை கண்டார், ஏனென்றால்
அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை.
வழமையான அமெரிக்க
பாடசாலையொன்றில் மாணவர் ஒருவராக ஆவதற்குரியதை விடவும் அதிக வயதுடையவராக இருந்தாலும், இஸ்லாத்தின் வார்த்தைகளை பரப்புவதற்கான கவலையில் அவர், தன்னை, தனது இருதயத்தையும், ஆன்மாவையும் மொழிக்குள் மூழ்கச்செய்திருந்தார். குறுகியதொரு காலத்துள் அவர், டெட்ரொய்ட்
பிரதேச முஸ்லிம்களுக்கு பணியாற்ற நன்றாக போதுமானளவு ஆங்கிலத்தை தனக்கு கற்றிபித்துக்கொண்டார். பிற்பாடு அவர் ஐக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா நெடுகிலும் பிரபல்யம் வாய்ந்த ஒரு பேச்சாளராகவும், இஸ்லாம் பற்றிய ஓர் அறிஞராகவும் மாறினார். மேலதிகமாக, இஸ்லாம் பற்றிய பல்வேறு வகையான நூல்களை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். கீழ்வருவனவை அவற்றுக்கு மத்தியில் விளங்குபவையாகும்:
1. முஸ்லிம் நடைமுறை
2. இஸ்லாமிய விசுவாசம்
3. இஸ்லாம் பற்றிய விசாரணைகள்
4. இமாம் ஹுஸைன், உயித்தியாகிகளது
தலைவர்
5. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
சகோதரர் [இமாம் அலீ] [அவர் இந்த நூலை அரபியிலும் எழுதி, அதற்கு அமீர் அல் முஃமினீன் என்று பெயரிட்டார்]
அறிமுகம்
சர்வ வல்லமை படைத்த அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவனது திருநாமத்தால். அகிலங்களின் இரட்சகனான இறைவனுக்கே எல்லா புகழும் உரியது.
பரஸ்பர புரிந்துணர்வு
மற்றும் ஒற்றுமைக்கான அதிக தேவையில் முஸ்லிம்கள் இன்று இருப்பதை விடவும் எப்போதுமே இருந்ததில்லை. இஸ்லாத்துக்கு எதிரான சூழ்ச்சித்திட்டங்கள் தற்போதைய காலத்தில் காணப்படுவதை விடவும் மிகவும் தீவிரமாக ஒருபோதுமே காணப்படவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, மிகவுமே
தூய்மையற்ற ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ள பல முஸ்லிம் அரசாங்கங்கள், முஸ்லிம்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றன. ஷீஈ முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களை கூறும், ஏராளமான
குற்றச்சாட்டுக்களை வீசியெறியும், அந்த குற்றச்சாட்டுக்களை பற்றி அறிந்திராதவர்களாகவே அவர்கள் காணப்பட்டிருக்க, குறைகளும் – வழுக்களும் நிறைந்த நூல்கள் மற்றும் பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கிடையில் விநியோகிக்கப்பட்டன, இன்னும் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இஸ்லாத்தின் பிறப்பை
தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலப்பிரிவில், நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
குடும்பத்தின் அங்கத்தவர்களை பின்பற்றுவோரை அவமரியாதை செய்வதற்காக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எவ்வாறாயினும், கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தீவிரமான, கீழ்த்தரமான நடவடிக்கையின் வடிவத்தை அவை ஒருபோதுமே பெற்றிருக்கவில்லை.
போலியானதும், தரங்கெட்டதுமான
இந்த நடவடிக்கை ஈரானில் இஸ்லாமிய குடியரசின் பிறப்புக்கு பின்பே ஆரம்பித்தது. அரபு அரசாங்கங்களில் சில இந்த குடியரசின் பிறப்பை அச்சுறுத்தும் ஓர் அபாயமாக கண்டதாக தோன்றுகிறது. நேர்வழி நின்ற கிலாஃபத்தின் காலப்பகுதியை முஸ்லிம்களுக்கு ஞாபகமூட்டும் இந்த குடியரசு, இஸ்லாத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக கோரிக்கொண்டே, ஆட்சியாளர்களுடைய தாழ்ந்த இச்சைகளை திருப்திப்படுத்துவதற்காக பொதுச்சொத்தை செலவிடும் அரபு அரசாங்கங்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையிலான தெளிவானதொரு வேறுபாட்டையும் தோற்றுவிக்கிறது.
இந்த அரசுகள்
இஸ்லாமிய குடியரசின் ஒளியை போரின் மூலம் அணைத்துவிட முயற்சித்தன, ஆனால் அவை வெற்றிபெறவில்லை. ஆகையால், முஸ்லிம்
பொது மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் அவை, ஷீஈக்கள்
இஸ்லாத்தின் பாதையை விட்டும் வழிகேட்டில் சென்றுவிட்டதாக அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைப்பதை இலக்காக கொண்டு, குற்றச்சாட்டுக்களை
இட்டுக்கட்டுவதன் வாயிலாக ஈரானிய முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பிரிவினை நடவடிக்கையில் அவர்களை திருப்பிவிட்டுள்ளனர். அவ்வாறானதொரு நடவடிக்கை வெல்ல வேண்டுமானால், அறியாமையிலும், மூடத்தனத்திலும் மூழ்கிப்போயுள்ள முஸ்லிம்கள் ஷீஈக்களுடன் போரிடுவதை மார்க்க ரீதியாக சட்டபூர்வமானதாக கண்டு, இஸ்லாத்துக்காக
வேறு எந்த மக்களை விடவும் அதிகமாகவே தியாகங்களை புரிந்துள்ள ஈரானியர்களுடைய இரத்தத்தை ஓட்டக்கூடும்.
ஷீஈக்கள் மெளனத்துடனும், தமது கண்களை மூடிக்கொண்டு இது ஒரு முடிவுக்கு வந்துவிடும் எனவும், கீழ்த்தரமான
குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பதற்குரிய எந்த விதமான அவசியப்பாடும் ஏற்படாது என்றும் எதிர்பார்த்தவர்களாகவும் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு பல வருடங்களாக முயற்சித்துள்ளனர்.
ஸுன்னி அறிஞர்களில்
சிலர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முயலக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஷீஈக்கள் ஆதரிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளை பல ஸுன்னி அறிஞர்கள் அறிந்தே வைத்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஷீஈக்களுடைய கொள்கைகளை பற்றி அவர்கள் அறியாதவர்களாக இருந்திருந்தால், அவற்றுடன் பரிச்சயமாவது மிகவுமே இலகுவாக இருந்திருக்கும். அந்த கோட்பாடுகளை பற்றி ஷீஈ அறிஞர்களால் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்கள் காணப்படுவதோடு, அந்த நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன.
மார்க்க ரீதியான
வேறுபாடுகள் கலந்துரையாடப்பட்டு, ஒருவர் மற்றவருடைய கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் பாங்கை அபிவிருத்தி செய்யக்கூடிய ஓர் இஸ்லாமிய மாநாட்டுக்கான அழைப்பை விடுப்பது ஸுன்னி அறிஞர்களுக்கு சாத்தியமானதேயாகும். குர்ஆன் அழைப்பு விடுப்பதும் இதற்காகவேயாகும்:
“K/kpd;fNs! /gh]pf; (jPatd;) vtDk;
cq;fsplk; xU nra;jpia nfhz;Lte;jhy; - mij jPu tprhhpj;Jf;nfhs;Sq;fs;> (,y;iyNay;)
mwpahikapdhy; (Fw;wkw;w) xU r%fj;jhUf;F ePq;fs; jPq;F nra;J tplyhk;> gpd;dh;
ePq;fs; nra;jit gw;wp ePq;fNs ifNrjg;gLgth;fshf (ftiyg;gLgth;fshf) MtPh;fs;.”
அத்தியாயம் அல் ஹுஜுராத் (49) : வசனம் – 6
இந்த திசையில்
நகராத ஸுன்னி அறிஞர்கள், அறியப்பட்டவற்றை பொறுத்தளவில், நயவஞ்சக செயற்பாட்டாளர்களால் பரப்பி விடப்பட்ட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பதற்கு முயற்சிக்காதமை கவலைக்குரியதாகும்.
எமது மெளனம் இந்த நடவடிக்கையை நிறுத்தவில்லை. இது இன்னும் அதை கடுமையாக்கியது. எமது மெளனமே குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைக்குரிய சான்று என்றும், எம்மால்
அவர்களுக்கு பதிலளிக்க இயலவில்லை என்பதாகவுமே பலர் நினைத்தனர்.
இவ்வாறே,
உண்மையை தெளிவுபடுத்தி, உண்மையை அறிந்துகொள்ள விரும்பும் எல்லா முஸ்லிம்களிடமும் தெரிவித்துவிட வேண்டியது அத்தியாவசியமானதாகியுள்ளது. இந்த முயசியில், நாம் ஸுன்னி சகோதரர்களை, அவர்களில் சிலர் ஷீஈக்களை குற்றஞ்சாட்டியுள்ளதை போன்று, இறைமறுப்பு, வழிகேடு அல்லது வரம்புமீறல் போன்றவற்றால் குற்றஞ்சாட்ட மாட்டோம். எந்த ஒரு முஸ்லிமும் நிற்பதற்கு பொருத்தமேயில்லாத அவ்வாறான ஒரு நிலையில் நாம் எம்மை வைத்துக்கொள்ளவே கூடாது. எல்லாம்
வல்லோனை நாம் அவனுடைய தடையில் அடிபணிகிறோம்:
“K/kpd;fNs! xU r%fj;jhh; gpwpnjhU
r%fj;jhiu ghpfhrk; nra;a Ntz;lhk;. Vnddpy; (ghpfrpf;fg;gLNthh;) - mth;fis tpl Nkyhdth;fshf
,Uf;fyhk;> (mt;thNw) ve;jg;ngz;fSk; kw;w ve;j ngz;fisAk; (ghpfhrk; nra;a Ntz;lhk;)
- Vnddpy; ,th;fs; mth;fis tpl Nkyhdth;fshf ,Uf;fyhk;> ,d;Dk; - cq;fspy;
xUtUf;nfhUth; gopj;Jf;nfhs;shjPh;fs;. ,d;Dk; (cq;fspy;) xUtiunahUth; (jPa) gl;lg;ngah;fshy;
miof;fhjPh;fs;> <khd; nfhz;lgpd; (mt;thW jPa) gl;lg; ngah; #l;LtJ kpff;nfl;ljhFk;>
vth;fs; (,tw;wpypUe;J) kPstpy;iyNah - mj;jifath;fs; mepahaf;fhuh;fs; Mthh;fs;.”
அத்தியாயம் அல் ஹுஜுராத் (49) : வசனம் – 11
தடை செய்யப்பட்ட
இந்த குற்றச்சாட்டுக்களை உருவாக்கியோர், அவர்கள் அறிந்தேயிராத, பார்த்தேயிராத மற்றும் அவர்கள் உரையாடியேயிராத மில்லியன் கணக்கான முஸ்லிம்களை குற்றஞ்சாட்டுவதற்கு, மிகவுமே அசாதாரணமானதொரு முறைமையை பயன்படுத்தியமை வாசகருக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வாழ்ந்த மில்லியன் கணக்கான முஸ்லிம்களை, பிறக்கவுள்ள எண்ணற்ற எதிர்கால ஷீஈ தலைமுறையினருடன் சேர்த்தே இலக்காக்கிய அவர்கள் தாக்குதலை தொடுத்தனர். கேள்வியே கேட்காமலும், ஆர்வமுள்ள எந்த நபருக்கும் இலகுவான நுழைவுக்குள்ளாகவே காணப்படும் சத்தியத்தை தேடிப்பார்க்காமலும், சமகால முஸ்லிம்களில் மில்லியன் கணக்கானோரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
குர்ஆன் முழுமையற்றதாக உள்ளது என்று ஷிஈ முஸ்லிம்கள் கூறுகின்றனரா?
காலஞ்சென்ற எகிப்திய
முஸ்லிம் அறிஞர் முஹம்மத் அபூ ஸஹ்ரா, தன்னுடைய
அல் இமாம் அல் ஸாதிக் என்ற நூலில் கூறியுள்ளதாவது, முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி [ஒரு ஹதீஸ் பதிவாளர், மரணம். ஹி. பி. 329], குர்ஆனில் நாம் 6262
வசனங்களை மாத்திரமே ஓதிக்கொண்டிருக்க, நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு
அருளப்பட்ட குர்ஆன் ஏழாயிரம் வசனங்களை கொண்டிருந்ததாக இமாம் ஜஃஃபர் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறியதாக “உஸூல் அல் காஃபி” என்ற அவருடைய நூலில் பதிவு செய்துள்ளார். மீதமானவை நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
குடும்பத்தின் அங்கத்தவர்களால் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது...
ஷெய்க் குலைனி அவர்கள் தனது இரட்சகனை நூற்றாண்டுகளுக்கு முன்பே சந்தித்துவிட்ட காரணத்தால் அவரால் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயலாதிருக்க, ஷெய்க் அபூ ஸஹ்ரா ஹதீஸ் பதிவாளர் அல் குலைனிக்கு எதிராக கடுமையானதொரு தீர்ப்பை வெளியிட்டார். அல் குலைனிக்கு எதிரான அபூ ஸஹ்ராவின் கடுமையான தீர்ப்புக்கு மாற்றமாக, அவர் அல் குலைனியை குற்றஞ்சாட்டியவற்றுடன் எல்லா ஷீஈக்களையும் அவர் குற்றஞ்சாட்ட முயலவில்லை.
குர்ஆனின் முழுமையற்ற
தன்மை தொடர்பான அல் குலைனியின் அறிவிப்பு, [ஷீஈக்களில் அறுதிப்பெரும்பான்மையினராக திகழும்] இமாமிய ஷீஈக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. குர்ஆன் சேர்க்கையோ, நீக்கமோ அல்லது மாற்றமோ இன்றி சம்பூரணமாகவே உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பேராசிரியர் முஹம்மத்
அபூ ஸஹ்ரா “இமாம் அல் ஸாதிக்” என்ற தன்னுடைய நூலில், ஒரு முன்னணி ஷீஈ அறிஞரான அல் ஸாஃபி அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்கவுரையில் கீழ்வருவனவற்றை கூறியுள்ளதாக எழுதியுள்ளார்:
“மற்றுமொரு முன்னணி ஷீஈ அறிஞரான ஷெய்க் அபூ அலீ அல் தபரிஸி அவர்களின் பிரகாரம், ‘குர்ஆனில் எந்த ஒரு வார்த்தையுமே சேர்க்கப்படவில்லை. சேர்க்கப்பட்ட வார்த்தைகள் தொடர்பான எந்த வாதமும் ஷீஈக்களால் ஏகோபித்து நிராகரிக்கப்பட்டுள்ளது. நீக்கத்தை பொறுத்தமட்டில், மாற்றம் அல்லது நீக்கம் காணப்படுவதாக சில ஷீஈக்கள் மற்றும் சில ஸுன்னிகள் கூறியுள்ளனர். எமது அறிஞர்கள் அதை மறுத்துவிட்டனர்.’”
மற்றுமொரு முன்னணி
ஷீஈ அறிஞரான ஸையித் அல் முர்த்தழா அவர்கள் கூறியுள்ளதாவது:
“... குர்ஆனின் பரிபூரணத்துவம் பற்றிய எமது நிச்சயத்தன்மை, சுய சான்றாக விளங்கும் நாடுகளின் அல்லது மிகப்பெரிய நிகழ்வுகளின் உள்ளமை பற்றிய எமது நிச்சயத்தன்மையை போன்றதாகும். திருக்குர்ஆனை பதிவு செய்வது மற்றும் பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் எண்ணற்றவை, ஏனென்றால் குர்ஆன் நபித்துவத்தின் ஓர் அற்புதமாகவும், இஸ்லாமிய ஞானம் மற்று மார்க்க சட்ட திட்டங்களின் மூலாதாரமாகவும் விளங்குகிறது. குர்ஆனுடனான அவர்களது அக்கறை, முஸ்லிம்
அறிஞர்களை அதன் இலக்கணம், அதன் ஓதல் மற்றும் அதன் வசனங்கள் தொடர்பான உயர் இயலுமையுள்ளவர்களாக்கியது.”
ஒப்பில்லா இந்த அக்கறையுடன், குர்ஆன் சில பகுதிகளில் மாற்றப்பட்டதற்கான அல்லது நீக்கப்பட்டதற்கான சாத்தியப்பாடு கிடையாது. நயவஞ்சக முஸ்லிம் அரசாங்கங்களுக்கான ஒரு சேவையாக முஸ்லிம்களை பிளவுபடுத்த மட்டுமே முயற்சிக்கும் கூலி எழுத்தாளர்களிடம் கீழ்வருவன பற்றி தெரிவிக்கப்பட வேண்டும்:
1. அல் குலைனி ஷீஈக்களுடைய ஓர் இமாம் அல்ல. ஒன்று அல்லது பல மூலங்களூடாக அவரிடம் தெரிவிக்கப்பட்டவற்றை அறிவித்த அவர் ஒரு ஹதீஸ் பதிவாளர் மட்டுமேயாவார். அல் இமாம் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமிருந்து தான் செவியுற்றதாக அவர் கூறவில்லை. சில அறிவிப்பாளர்களூடாக தனக்கு ஒரு ஹதீஸ் கிடைத்ததாக மாத்திரமே அவர் கூறினார். இமாம் அல் ஸாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது நாட்களின்போது அவர் வாழவில்லை. நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
குடும்ப அங்கத்தவர்களை சேர்ந்த எந்த ஒரு இமாமையும் அவர் பார்க்கவில்லை.
குர்ஆனின் முழுமையற்ற தன்மை பற்றி ஸுன்னிகளிலிருந்தான அறிவிப்பாளர்களே ஏராளமாக உள்ளனர்
2. குர்ஆனின் முழுமையற்ற
தன்மையை அறிவித்த ஒரே அறிஞராக அல் குலைனி மாத்திரம் விளங்கவில்லை. ஸுன்னி அறிஞர்களுடைய கிரந்தங்களில், குர்ஆன் முழுமையற்றதாக உள்ளதென்று கலீஃபா உமர், ஆயிஷா மற்றும் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
ஒரு தொகை ஸஹாபாக்கள் கூறியதாக அறிவித்த ஏராளமான ஹதீஸ் பதிவாளர்கள் உள்ளனர்.
அல் புஹாரியின் ஸஹீஹ்
அல் புஹாரி தனது (ஆதாரபூர்வமான) ஸஹீஹில், பாகம் எட்டு, பக்கங்கள்
209-210 இல் [ஹதீஸ் எண். 6830], உமர் இப்னு அல் கத்தாப் தன்னுடைய கிலாஃபத்தின் இறுதி ஆண்டில் நிகழ்த்திய ஓர் உரையில் கூறினார் என்று இப்னு அப்பாஸ் அறிவித்ததாக பதிவுசெய்துள்ளதாவது:
“நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அவர்களை
சத்தியத்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு
குர்ஆன் வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை [ரஜ்கி] குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம்.
இறைதூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அவர்கள்
கல்லெறி தண்டனையை [ரஜ்கி] நிறைவேற்றியுள்ளார்கள்.
அவர்களுக்கு பிறகு நாங்களும் அந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி இறைவன் அருளிய கடமை ஒன்றை கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.
மணமுடித்த ஆணோ அல்லது பெண்னோ விபச்சாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்கு கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைவேதத்தில் உள்ளதாகும்.
பிறகு, நாங்கள்
ஓதி வந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்:
“உங்களுடைய தந்தையரின் தந்தைத்துவத்தை வெறுப்பில் புறக்கணித்துவிட வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய தந்தையரின் தந்தைத்துவம் பற்றி வெட்கப்படுவது உங்கள் பங்குக்குரிய இறை மறுப்பாகும்.””
இதையொத்த அறிவிப்புக்கள்
இமாம் அஹ்மத் அவர்கள் மூலம் அவர்களது முஸ்னத்தின் முதலாவது பாகத்தில் [உமருடைய முஸ்னத்தில், ஹதீஸ் அல் ஸகீஃபாவின் தலைப்பின் கீழ், பக்கங்கள் 47 மற்றும் 55 இல்]
பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு ஹிஷாம் தன்னுடைய நபியவர்களின் ஸீராவில், பாகம் 2 பக்கம்
658 இல் [இரண்டாவது பதிப்பு, 1955] இதையொத்த விடயங்களை
பதிவு செய்துள்ளார்.
முஸ்லிமின் [ஆதாரபூர்வமான] ஸஹீஹ்
முஸ்லிம் தனது ஸஹீஹின் ஏழாவது பாகத்தில் [அல் நவவியின் விளக்கவுரை], அல் ஸகாத் நூலில், இறைவன் வழங்குபவற்றுடன் திருப்தியுடன் இருப்பதன் சிறப்பை பற்றிய மற்றும் அந்த சிறப்பை கொண்டிருப்பதற்கு மக்களை தூண்டுவது பற்றிய, பக்கங்கள்
139-140 இல் [ஹதீஸ் எண். 1894, 1896, 1897], அபுல் அஸ்வத் அவருடைய தந்தை கூறினார் என்று அறிவித்ததாக பதிவுசெய்துள்ளதாவது:
“அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் பஸ்ரா [ஈராக்] நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் ஆளனுப்பினார்கள்.
குர்ஆனை கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூஸா கூறினார்கள்: ‘பஸ்ரா வாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே குர்ஆனை ஓதிவாருங்கள். இல்லாவிட்டால், காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதை போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிடும்.
[நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அவர்களது
காலத்தில்] நாங்கள் நீளத்திலும், கடுமையிலும் ‘பராஅத்’ எனப்படும் [9ஆவது] அத்தியாயத்தை
ஒத்த ஓர் அத்தியாயத்தை குர்ஆனிலிருந்து ஓதிவந்தோம், ஆனால் அந்த அத்தியாயத்தை நான் மறந்துவிட்டேன். அந்த அத்தியாயத்திலிருந்து என்னால் கீழ்வரும் வார்த்தைகளை மாத்திரமே ஞாபகபடுத்திக்கொள்ள முடிகிறது:
“ஆதமின் மகனுக்கு சொந்தமாக இரண்டு பள்ளத்தாக்குகள் நிரம்ப செல்வம் இருந்தாலும், மூன்றாவது பள்ளத்தாக்கை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை தவிர வேறெதுவும் நிரப்பாது.”
மேலும், [சப்பஹ,
யுசப்பிஹு, சப்பிஹ் என] இறைதுதியில்
தொடங்கும் முஸப்பிஹாத்தை ஒத்த மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம், அதையும் நான் மறந்துவிட்டேன். அதிலிருந்து கீழ்வருவன மட்டுமே எனக்கு நினைவில் உள்ளது:
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? [அவ்வாறு செய்யாததை பிறருக்கு சொல்வீர்களாயின்] அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்பட்டு, மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.””
அபூமூஸா குறிப்பிட்ட
இந்த வார்த்தைகள் குர்ஆனிலிருந்து வந்தவையோ அல்லது அவை குர்ஆனிலுள்ள இறைவனுடைய வார்த்தைகளில் எதையும் ஒத்தவையோ அல்ல என்பது மிகவுமே தெளிவானது. குர்ஆனிலிருந்து இரண்டு ஸூராக்கள் தவறிவிட்டதெனவும், அவற்றில் ஒன்று பராஅத்தை ஒத்தது என்றும் [பராஅத் அத்தியாயம் 130 வசனங்களை கொண்டது] அபூமூஸா
கோறுவது ஆச்சரியத்துக்குரியதாகும்.
ஆயிஷா
முஸ்லிம் அல் ரிதஃஆ [பாலூட்டல்
பற்றிய] நூலில், பாகம் 10, பக்கம் 29 [ஹதீஸ் எண்.
2876] இல், ஆயிஷா கீழ்வருவனவற்றை கூறியதாகவும் பதிவுசெய்துள்ளார்:
“நிச்சயத்துடன் அறியப்பட்ட குறிப்பிட்ட பத்து தடவைகள் பாலூட்டல், பாலூட்டிய ஒரு பெண்ணை பாலூடப்பட்ட ஒரு குழந்தையின் தாயாக ஆக்கிவிடும்” என்பதே குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. இத்தனை தடவை பாலூட்டல்கள் பெண்ணை குழந்தைக்கு ‘ஹராம் [தடை]’ ஆக்கிவிடும். பிறகு இந்த வசனம், பெண்ணை குழந்தைக்கு தடைசெய்யப்பட்டவளாக ஆக்கிவிடுவதற்கு ‘குறிப்பிட்ட ஐந்து தடவைகள் பாலூட்டல்’ மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இந்த வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு, குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அவர்கள்
இறந்தார்கள்.”
33ஆவது அத்தியாயம் முழுமையற்றதென உமர் கூறியது
அல் முத்தகி
அலீ இப்னு ஹுஸாம் அல் தீன் அவர்கள், இமாம் அஹ்மதுடைய முஸ்னதின் பக்கவாட்டுக்கரையில் அச்சிடப்பட்ட “முக்தஸர் கன்ஸ் அல் உம்மால்” என்ற தனது நூலில், பாகம் 2, பக்கம் 2, 33ஆவது அத்தியாயத்தை
பற்றிய தன்னுடைய ஹதீஸில், ஹுதைஃபா
கூறினார் என்று இப்னு மர்தவைஹ் அறிவித்ததாக கூறியுள்ளதாவது:
“உமர் என்னிடம் கேட்டார், ‘அல் அஹ்ஸாப் அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் உள்ளடங்கியுள்ளன?’, நான் கூறினேன், ’72 அல்லது 73 வசனங்கள்.’
‘287 வசனங்களை கொண்ட பசு அத்தியாயத்தை போன்று நீண்டதாகவே அது இருந்தது, மேலும் கல்லெறி தண்டனை பற்றிய வசனமும் அதிலேயே இருந்தது.’ என்று அவர் கூறினார்.
முஸ்தத்ரக் அல் ஸஹீஹைன்
அல் ஹாகிம் அல் நிஸாபூரி அவர்கள் “அல் முஸ்தத்ரக்” என்ற தனது நூலில், குர்ஆன்
மீதான விளக்கவுரை பற்றிய நூலில், பாகம் 2, பக்கம் 224 இல்,
[நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள்
அல் அன்ஸார்களின் தலைவர் என்று அழைத்த] உபை இப்னு கஅப், அல்லாஹ்வின்
தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள்
தன்னிடம் கூறினர் என்று அறிவித்ததை பதிவுசெய்துள்ளார்:
“நிச்சயமாக எல்லாம் வல்லோன் உங்களுக்கு முன்னால் குர்ஆனை ஓதுமாறு எனக்கு கட்டளையிட்டுள்ளான், மேலும் அன்னவர்கள் ஓதினர், “வேதம் வழங்கப்பட்டவர்கள்
மற்றும் இணைவைப்பாளர்களிலிருந்தான நிராகரிப்பாளர்கள் சான்றை காணும் வரையில் தமது வழியை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். வேதத்துக்குரியோருக்கும், சிலைவணங்கிகளுக்கும் மத்தியில் மறுப்போர் அவர்களிடம் அத்தாட்சி வரும் வரையில் மாற முடியாது. அல்லாஹ்விடமிருந்தான ஒரு தூதர், தூய்மைப்படுத்தப்பட்ட பக்கங்களை
ஓதுகிறார்.. .”
மேலும் அதன் மிகச்சிறந்த பகுதியாவது, “இப்னு ஆதம் ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப செல்வத்தை கேட்டு, அதை நான் அவனுக்கு வழங்கினால், அவன் மற்றுமொரு பள்ளத்தாக்கையும் கேட்பான். மேலும் அதையும் நான் அவனுக்கு வழங்கினால், அவன் மூன்றாவது பள்ளத்தாக்கு ஒன்றையும் கேட்பான். இப்னு ஆதமுடைய வயிற்றை மண்ணை தவிர எதுவுமே நிரப்பாது. பாவமன்னிப்பு இறைஞ்சும் எவருடைய மன்னிப்பையும் இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இறைவனுடைய பார்வையில் யஹூதிய்யா [யூதம்] அல்லது நஸ்ரானிய்யா [கிறிஸ்தவம்] ஆகியவற்றை விடவும் ஹனஃபிய்யாவே [இஸ்லாம்] மார்க்கமாகும். எவரேனும் நன்மையை செய்தால், அவரது நன்மை நிராகரிக்கப்பட மாட்டாது.”
அல் ஹாகிம் கூறினார்:
“இது ஓர் ஆதாரபூர்வமான அறிவிப்பானாலும், இரு ஷெய்குமார்களும் [அல் புஹாரி மற்றும் முஸ்லிம்] இதை பதிவு செய்யவில்லை. அல் தஹபியும் [அல் முஸ்தத்ரக் மீதான] தனது விளக்கவுரையில் இதை ஆதாரபூர்வமானதாக கருதியுள்ளார்.”
அல் ஹாகிம் உபை இப்னு கஅப் ஓதி வந்ததாக அறிவித்துள்ளதாவது:
“நிராகரித்தோர் தமது இருதயங்களில் அறியாமை கால முத்திரையை பதித்துவிட்டனர்; மேலும் நீங்களும் ஒத்த முத்திரயொன்றை கொண்டிருந்தீர்களேயானால், புனித பள்ளிவாசல் சீர்கெட்டிருக்கும், இன்னும் இறைவன் தன்னுடைய தூதர் மீது தனது ஆதரவின் அமைதியை இறக்கி வைத்தான்.”
இந்த ஓதல் உமருக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் உபையுடன் மிகவும் கோபம் கொண்டார். அவர் தனது பெண் ஒட்டகையை கீலெண்ணெயை கொண்டு பாராமரித்துக்கொண்டிருக்கையில் அவருக்காக ஆளனுப்பினார். ற்னைய ஸஹாபாக்களையும் அனுப்பினார். அவர் ஸைத் இப்னு ஸாபித் உட்பட ஏனைய ஸஹாபாக்களுக்கும் அழைப்பு விடுத்தார். உபை அவரிடம் வந்தார். உமர் வினவினார்: “உங்களில் யாருக்கு அல் ஃபதஹ் [வெற்றி] அத்தியாயத்தை ஓத முடியும்?” ஸைத் இப்னு ஸாபித் நாம் இப்போது ஓதும் முறையில் அத்தியாயத்தை ஓதினார். உமர் உபையிடம் கோபமாக பேசினார். உபை கேட்டார் ‘நான் பேசலாமா?’ உமர் கூறினார் ‘பேசுங்கள்.’ உபை கூறினார் ‘நான் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்களது
வீட்டுக்குள் நுழையக்கூடியவனாக இருந்தேன், மேலும் நீங்களும், மற்றவர்களும் கதவினருகில் நிற்கையில் அன்னவர்கள் எனக்கு குர்ஆன் ஓதலை கற்பிக்கக்கூடியவர்களாக இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியும்.’
“நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) என்னவர்கள்
எனக்கு கற்பித்த வழியில் நான் மக்களுக்கு கற்பிப்பதை நீங்கள் விரும்புவீர்களேயானால், நான் அவர்களுக்கு கற்பிப்பேன்; இல்லாவிட்டால், நான் அவர்களுக்கு ஒரு எழுத்தை கூட எப்போதும் கற்பிக்கவே மாட்டேன்.”
உமர் அவரிடம்
கூறினார்: “எவ்வாறு ஓதுவது என்பதை மக்களுக்கு தொடர்ந்து கற்பியுங்கள்.”
இரு ஷெய்குமார்களுடைய
[அல் புஹாரி மற்றும் முஸ்லிம்] நியமங்களின் பிரகாரம் இது ஆதாரபூர்வமானதென அல் ஹாகிம் கூறினார். எவ்வாறாயினும், அவர்கள் இதை பதிவுசெய்யவில்லை.
அல் தஹபியும்
அல் முஸ்தத்ரக், பாகம் 2 பக்கம்
225-226 மீதான தனது விளக்கவுரையில் இதை ஆதாரபூர்வமானதாக கருதியுள்ளார்.
72 வசனங்களை கொண்டிருந்த
அல் அஹ்ஸாப் அத்தியாயம், [287 வசனங்களை கொண்டிருக்கும்] அல் பகரா அத்தியாயத்தை போன்றே மிகவும் நீண்டதாக இருந்ததென்று உமர் கூறியதாக ஹிதைஃபா அறிவித்த இப்னு மர்தவைஹுடைய அறிவிப்பையும் மற்றும் [130 வசனங்களை கொண்டிருக்கும்] அல் பராஆ அத்தியாயத்துக்கு சமனான நீளமுடைய ஓர் அத்தியாயம் குர்ஆனிலிருந்து நீக்கப்பட்டதாக கூறும் அபூ மூஸாவுடைய அறிவிப்பையும் நாம் எடுத்தால், அப்போது இந்த அறிவிப்புக்களின் பிரகாரம் குர்ஆனிலுள்ள நீக்கம் ஏறத்தாழ 345 வசனங்களாகும்.
இது உண்மையானால், இந்த அறிவிப்புக்களை பொறுத்த நீக்கத்துக்கும், 600 வசனங்கள் நீக்கப்பட்டதாக வாதிடும் அல் குலைனி கூறியதாக குறிப்பிடப்படும் அறிவிப்புக்கும் இடையிலான வித்தியாசம் என்னவாக இருக்கக்கூடும்?
மேற்கொண்டு, அல் குலைனி குர்ஆன் வசனங்களில் சில நீக்கப்பட்டதாக தனது நூலான அல் காஃபியில் பதிவுசெய்ததாகவே வைத்துக்கொள்வோம். குர்ஆனுடைய முழுமையற்ற தன்மையின் மீதான நம்பிக்கை பற்றி எதற்காக எல்லா ஷீஈக்களும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும்? குலைனி ஷீஈக்களுடைய ஓர் இமாம் அல்லவே, இன்னும்
ஷீஈக்கள் அவரை பின்பற்றுபவர்களாக இல்லையே.
அல் குலைனி ஒரு ஹதீஸ் பதிவாளரை விடவும் உயர்ந்தவராக இருக்கவில்லை. அவரை போன்றதோர் அறிஞர் ஒரு தவறுதலை இழைக்கின்றாரேயானால், நாம் எதற்காக அந்த தவறுதலை அவரை பின்பற்றுபவர்களாக கூட விளங்காத மில்லியன் கணக்கான ஷிஈக்களுக்கு சாட்ட வேண்டும்.
அவ்வாறானதொரு குற்றச்சாட்டு
அனுமதிக்கப்பட்டிருப்பின், நாம் எதற்காக குர்ஆனுடைய முழுமையற்ற தன்மையின் மீதான நம்பிக்கை பற்றி எல்லா ஸுன்னிகளையும், குர்ஆன் முழுமையற்றதாக விளங்கியதாகவும், இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறியதாக, அல் புஹாரி, முஸ்லிம், இமாம் அஹ்மத் மற்றும் இப்னு மர்தவைஹ் ஆகியோரால் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள உமரை அவர்கள் அனைவருமே பின்பற்றி வரும் காரணத்தால் குற்றஞ்சாட்ட கூடாது?
குர்ஆனுடைய முழுமையற்ற
தன்மையை கூறிய காரணத்தால் கலீஃபா உமர், ஆயிஷா, அபூ மூஸா மற்றும் உபை இப்னு கஅப் போன்றவர்கள் இதே விடயம் குறித்து எதற்காக குற்றஞ்சாட்டப்பட கூடாது?
முஸ்லிம்களை குஃப்ர்
அல்லது வழிகேடு போன்றவற்றால் குற்றஞ்சாட்டுவது இறைவனுக்கே அடுக்காது. அல்லாஹ்வை தவிர இறைவன் இல்லை என்றும், முஹம்மத்
அல்லாஹ்வின் தூதராவார் என்றும் பிரகடனம் செய்யும் எவரையும் ஒரு முஸ்லிமாகவே கருதுமாறு குர்ஆன் மற்றும் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள்
மூலமாக நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வ ஆலிஹி வஸல்லம்) அன்னவர்கள்
கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததை அல் புஹாரி பதிவு செய்துள்ளதாவது:
“ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை ஒரு காஃபிர் என்று அழைக்கும்போது, இருவரில் ஒருவர் பாவத்தை சுமக்கின்றார்.”
சேர்க்கை,
நீக்கம் அல்லது மாற்றம் எதுவுமே அற்ற ஒட்டுமொத்த குர்ஆனே இப்போது உள்ள குர்ஆன் என்றே நாம் நம்புகிறோம்.
வேத வெளிப்பாட்டுக்கு
முற்பட்ட அல்லது வேத வெளிப்பாட்டுக்கு பிந்தைய யுகத்திலிருந்து எந்த விதமான அசத்தியமும் நுழையாத குர்ஆன் இதுவேயாகும். புகழுக்குரிய சர்வ வல்லமையும் மிக்கோனிடமிருந்தான ஒரு வேத வெளிப்பாடே இதுவாகும்.
அல்லாஹ் தானே குர்ஆனை பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான். அவன் கூறினான்,
No comments:
Post a Comment